Sunday, September 6, 2009

தொலைந்து போனவர்கள் - 3

உலகத்துலயே மொத மொத ஹேன்ட்பேக் மாட்டின பரம்பரை நாங்கன்னு கோவை சரளாம்மணி ரவுசுடுமே. அவங்கதான் தொலைந்தவர்கள் வரிசையில இன்னைக்கு. ஆறாம்புல இருந்து பதினொண்ணாம்பு வரைக்கும் 6 வருசம் இவங்கள படிச்சிருக்கிறேன். ஒரு மத்திய அரசு அலுவலகத்தின் உள்ளே கதவுக்கும் வெளியே கதவுக்கும் இடைப்பட்ட நடைபாதைதான் இவங்க குடியிருப்பு.

வரிசையா நிக்கிற தூங்குமூஞ்சி மரத்து கீழ மொத்தமா எத்தன குடின்னே தெரியாம ஒரு முப்பது நாற்பது பேரு குஞ்சும் குளுவானுமா இருப்பாங்க. வெயில்காலம் பரவால்ல. நல்ல நிழல். மழைன்னா பாவம் ஒட்டு போட்ட பிளாஸ்டிக் ஷீட் ஆபீஸ் மதிலுக்கு ஒரு ஓரம் வரிசையா செங்கல் வெச்சி மத்த ஓரம்னு சரிவா கட்டி உள்ள நடுங்கிகிட்டு இருக்கிறத பார்க்க பாவமா இருக்கும். காலை பள்ளிக்கூடம் போகையில், இவர்கள் அதற்கும் முன்னரே கிளம்பி வீடு வீடாக வாங்கிக் கொண்டு வந்த சாப்பாட்டை வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

அப்புறம் எங்கு போவார்களோ தெரியாது. ஒன்னு ரெண்டு வயசானவங்க மட்டும் கடை போடுவாங்க. மணி மாலை, நரிக்கொம்பு, மருந்து, வேர்கள்னு கலந்தாங்கட்டியா. அதெல்லாம் எழுதப்போனா அஞ்சாறு இடுகை தேரும். அந்தக் காலக் கட்டத்தில் ஏனோ இவர்களில் ஆண்களில் பல பேர் திருட்டுத் தொழிலும் பெண்கள் ஏமாற்றுவதுமாக இருந்தார்கள். கடைகளில் கொஞ்சம் கூட்டமிருக்கும் நேரம் ஒதுங்கி இருந்து, கூட்டம் கொஞ்சம் குறைய 10ரூ தாளை நீட்டி சில்லறை கேட்பார்கள். இல்லை என்றாலும் குடு சாமி, குடு சாமி என்று அழிச்சாட்டியமாய் நிற்பார்கள்.

தொல்லை தாளாமலோ பாவமென்றோ சில்லறை கொடுத்தால் போச்சு. அங்கேயே நின்று, கூட்டம் சேரவும் மிச்சம் கொடு போகணுமென்று ஆரம்பிக்கும். 10 ரூ சில்லரை கொடுத்தாச்சில்ல போ என்றால், ஐய்யோ 50 ரூ கொடுத்தேன் 100ரூ கொடுத்தேன். மிச்சம் தரலை. கல்லால பாருன்னு கத்தும். வியாபரத்தைப் பார்ப்பதா? இவளோடு மல்லுக் கட்டுவதா? பெரும்பாலும் கொடுத்து விடுவார்கள்.

மருந்துக் கடைகளில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து ஒரே ஜுரம், இருமல் மருந்து குடு என்று நிற்பார்கள். கடைக் காரர்கள் அடிக்காத குறையாக விரட்டுவார்கள். நான் சும்மாவா கேட்டேன். காசு தரேன். மருந்து குடு. சாமி நீயே சொல்லு என்றெலாம் வம்படியாய் நிற்பார்கள். நியாயம் தானே என்றுதான் தோன்றும். அப்புறம் என்ன நடக்கும் தெரியுமா? பாதி நொவால்ஜின், அரை இருமல் மருந்து கொண்டு வந்து சரியா போச்சு. காசு குடு என்று கூட்ட நேரத்தில் ஆரம்பிக்கும். தமாசுக்கு சொல்லைங்க. அடாவடி அடிச்சி அசிங்கமா கத்தினா ஒழியுது சனியன்னு குடுத்துடுவாங்க. இல்லன்னா போய் மொத்த கும்பலையும் கூட்டி வந்து வியாபாரத்தைக் கெடுக்கும்.

ஒரு முறை சாப்பாடு கேட்டு வந்த ஒரு சிறுவனை நாய் கடித்து விட்டது. கெண்டைக்காலில் பிடுங்கியதால் ரத்தம் கொட்டுகிறது. சைக்கிள் கடை வைத்திருந்த அண்ணன் தூக்கி வண்டியில் உட்கார வைத்து ஆசுபத்திரிக்கு கூட்டிப் போனார்கள். கொஞ்ச நேரத்தில் ஒரு கும்பலே திரண்டு வந்துவிட்டது. ஏன் ஊசி போட்டாய். இன்னும் மிச்ச ஊசி போட காசு கொடு என்று. மனுசனுக்கு கோவம் வருமா வராதா? விறகு கட்டையை தூக்கிக் கொண்டு அடிக்கப் போய்விட்டார். எகிறின இரண்டு இளந்தாரிகளுக்கு அடியும் விழுந்தது.

காசு பேறாது எனத் தெரிந்தவுடன் ஒரு அம்மணி மட்டும் அழுது கொண்டு வந்தது. சாமி, காசு வேணாம், எந்த நாய் கடித்தது . அந்த நாய்க்கு தினம் யாராவது சோறு போடுவாங்க இல்ல. அவங்க யாரு சொல்லு சாமின்னு அழுது. அங்க போய் ஏதாவது அடாவடி பண்ணுவாய். ஓடுன்னு விரட்டினா, இல்ல பண்ண மாட்டேன். இங்கிலீசு மருந்து எல்லாம் வேணாம். சுடுகாட்டுக்கு கூட்டிட்டு போய் பிணம் எரியிற புகையை நாய் கடித்தவன் மேல் படுறா மாதிரி வீசி, அப்புறம் அந்த நாய்க்கு யார் அடிக்கடியோ தினசரியோ சாப்பாடு குடுப்பார்களோ அவங்க வீட்டில் தண்ணீர் வாங்கி கொடுத்தா போதும். சரியாயிடும் சாமி. சொல்லு சொல்லுன்னு அழுது. சொன்னப்புறம் அப்படியே கூட்டிக் கொண்டு வந்து தண்ணீர் வாங்கி முகம் கழுவி குடிக்க விட்டு கூட்டிப் போனது.

நரம்புச் சிலந்தி என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். எங்கள் தெருவில் ஒரு ஆளுக்கு புடிச்சது சனியன். ஒரு கால் மட்டும் வீங்கிப் போய் அசைய முடியாமல் கிடந்தார்.
சாப்பாடு கேட்டு வந்த ஒரு கிழவர், சாமி நரம்பு சிலந்தி சாமி. நான் எடுக்கிறேன் சாமி என்று வரவும் பதறிப் போய்ட்டாங்க. ரொம்பவும் தைரியம் சொல்லி ஒரு கனிந்த வாழைப்பழம் வாங்கி வரச் சொல்லி கட்டி விட்டு, அப்படியே இருக்கணும். கட்டு நெகிழக்கூடாது. 2 நாள் போகட்டும் என்று சொல்லி விட்டு போனார். அடுத்த நாள் வந்து பார்த்துக் கொண்டு, 3ம் நாள் வந்து, கற்பூரம் கொண்டு வரச் சொல்லி சாமி கும்பிட்டு, ஒரு பச்சை தென்னோலை கேட்டு அதன் ஈர்க்கை ஒரு அடிக்கு உடைத்துக் கொண்டார். கட்டை அவிழ்த்து, வாழைப்பழம் நன்றாக அழுகிப் போய் இருந்தது. அந்தக் குச்சியாலேயே வழித்து விடவும், மெதுவே புழு எட்டிப் பார்த்தது.

ரொம்ப நளினமாக புழுவின் அடியில் நெருட அது சுத்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் வெளீயில் வந்தது. இப்படியெ அதுவாக வெளி வருவதும் அந்த அளவு இவர் குச்சியைத் திருகி சுத்துவதுமாக ரொம்பப் பொறுமையாக நடத்திக் கொண்டிருந்தார். வெகுநேரம் கழித்து அதன் மற்ற முனையும் தானே வந்து விடவும், ரத்தமும் சீழுமாய் வழிய அப்படியே விட்டு, கற்பூரம் கற்பூரம் என்று அலறி, அதைக் கொளுத்தி, அதன் தணலில் சும்மா சொல்லக் கூடாது, ஒரு நூல்கண்டு அளவிற்கு சுற்றிய புழுவை கருக்கி, போதாதற்கு மண்ணெண்ணெய் ஊற்றி, சாம்பலாக்கி, கழுவி விட்டு அப்புறம் தான் காயத்தைக் கவனித்தார்.

இப்போ எதுக்கு இவங்கள தொலைஞ்சிட்டாங்கன்னு தேடுறங்கரீங்களா. அந்த வங்கொடுமைய ஏன் கேக்குறீங்க. பித்தளையில ஒரு முள்ளிடுக்கி வெச்சிருப்பாங்க. ஊசி மாதிரி ஒண்ணு, இடுக்கி மாதிரி இருக்கிறதுக்குள்ள இருக்கும். அது கூடவே ஒரு கம்பியில சின்ன குழியோட கரண்டி மாதிரி இருக்கும். காதில சேர்ர அழுக்கெடுக்க, கட்டை விரல் இடுக்கில மண்ணு சேர்ந்து உயிர் போகுமே, அதுக்கெல்லாம் அத விட சிறந்தது ஒண்ணில்ல. எல்லா வீட்டுலயும் இருக்கும். நம்ம தாத்தால்லாம் அரைஞாண் கயித்தில கட்டி வச்சிருப்பாங்க. அது அவங்க கிட்டதானாம் கிடைக்கும். கிட்ட தட்ட 25 வருசத்துக்கு மேல தேடுறேன். கிடைக்கலை.

12 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அடாவடி அடிச்சி அசிங்கமா கத்தினா ஒழியுது சனியன்னு குடுத்துடுவாங்க. //

இப்படியெல்லாம் செய்யறாங்களா என்ன?

அப்பாவி முரு said...

ஆகா, அருமையான தொகுப்பு. சுவாரசியமான எழுத்து நடை....

:))

ஆனால்,

உங்களுக்கு முள்வாங்கி வேணுங்கிறதுக்காக, அவங்க அப்படியே ஊர்சுத்தி திரிஞ்சே வாழணுமா???

:(((

ஈரோடு கதிர் said...

//முள்ளிடுக்கி//
செம டெக்னிக் வெஃபன்-ங்க
சுருக் சுருக் னு வலிக்கிற முள்ள
கப்புனு புடிச்சு வெளியே இழுக்கிற திறமையே தனிதான்..

//காதில சேர்ர அழுக்கெடுக்க,//

நாமதான் காதுல சேர்ர அழுக்க எடுக்கிறதில்லியே..
அதுனாலதான் குண்டு போட்டாலும், முதுகுல சுட்டாலும் நமக்கு அவ்வளவா காது கேக்குறதில்ல...

இராகவன் நைஜிரியா said...

அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதுங்க. இன்று அவர்கள் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறிட்டாங்க. ஒரு கட்டுக்கோப்பான குடும்பமாக வாழ்வது அவர்கள் வாழ்க்கை. அது முக்கியம். ஒரு சிலர் தான் நீங்க குறிப்பிட்ட மாதிரியான அடாவடியில் இறங்குவர். அதானாலேயே அவர்கள் அனைவருக்கும் கெட்ட பெயர். (இது என்னுடைய அவதானிப்பு மட்டும்தாங்க).

vasu balaji said...

SUREஷ் (பழனியிலிருந்து)
/இப்படியெல்லாம் செய்யறாங்களா என்ன?/

செஞ்சிட்டிருந்தாங்க.

vasu balaji said...

அப்பாவி முரு

/ஆகா, அருமையான தொகுப்பு. சுவாரசியமான எழுத்து நடை....

:))//

நன்றிங்க முரு.

/உங்களுக்கு முள்வாங்கி வேணுங்கிறதுக்காக, அவங்க அப்படியே ஊர்சுத்தி திரிஞ்சே வாழணுமா???

:(((//

அய்யோ இல்லைங்க. அது வித்துண்டிருந்தவங்களைக் காணோம். எங்க கேட்டாலும் அவங்க கிட்டதான் கிடைக்கும்னு சொல்லுவாங்க.

vasu balaji said...

கதிர் - ஈரோடு

/செம டெக்னிக் வெஃபன்-ங்க
சுருக் சுருக் னு வலிக்கிற முள்ள
கப்புனு புடிச்சு வெளியே இழுக்கிற திறமையே தனிதான்../

ஆமாங்க கதிர்.
/நாமதான் காதுல சேர்ர அழுக்க எடுக்கிறதில்லியே..
அதுனாலதான் குண்டு போட்டாலும், முதுகுல சுட்டாலும் நமக்கு அவ்வளவா காது கேக்குறதில்ல.../

இது இது.சரியான பஞ்ச்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா

/அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதுங்க. இன்று அவர்கள் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறிட்டாங்க. ஒரு கட்டுக்கோப்பான குடும்பமாக வாழ்வது அவர்கள் வாழ்க்கை. அது முக்கியம். ஒரு சிலர் தான் நீங்க குறிப்பிட்ட மாதிரியான அடாவடியில் இறங்குவர். அதானாலேயே அவர்கள் அனைவருக்கும் கெட்ட பெயர். (இது என்னுடைய அவதானிப்பு மட்டும்தாங்க)./

சந்தோஷமா இருக்குங்க கேக்க.

பெருங்காயம் said...

உங்கள் வலைப்பூவை திறக்கும் போது கீழ்கண்டவாறு வார்னிங்க மேசஜ; வருகிறது. சரி செய்யவும்.
Warning: Visiting this site may harm your computer!
The website at paamaranpakkangal.blogspot.com contains elements from the site priyamudan-prabu.blogspot.com, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.

vasu balaji said...

நன்றி விஜய். தயவு செய்து இப்போது ஒரு முறை பார்த்து சொல்ல முடியுமா. மிக்க நன்றி.

பெருங்காயம் said...

இப்ப சரியா இருக்கு சார்.

vasu balaji said...

விஜய்
/இப்ப சரியா இருக்கு சார்./

ரொம்ப நன்றி விஜய்