"எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான், பாடினவன் பாட்டைக் கெடுத்தான்" என்பது சொலவடை. பாமரன் ப்ளஸ் இரண்டு புள்ளிகளில் தொடங்கி, பாலா பிளஸ் டூ புள்ளிகளாக பரிணமித்து வானம்பாடிகளா பதிவைக் கெடுக்காம ஏதோ எழுதிட்டிருக்கேன்னு இருந்தேன். இந்தக் கலகலப்ரியா நாம எழுத வந்த வரலாற்றை எழுதுங்கன்னு இழுத்து விட்டுச்சு. அதனோட விளைவு....
படிக்கிற காலத்துல அது பள்ளியின் குறையா? அல்லது என் கவனக் குறைவா தெரியவில்லை. எழுத்துப் போட்டி, பேச்சுப் போட்டி என்று எதுவும் நடந்ததாகக் கவனமில்லை. சொல்லிக் கொடுத்தவற்றை கிளிபோல் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதுடன் சரி. ஐந்தாம் வகுப்பு வரை கற்பலகையில்தான் பரீட்சையே. ஆறாவதில் பேனாவைக் கையால் தொடும் பாக்கியம் கிடைத்தது. அது வரை ஒரு நோட்டுப் புத்தகமும், பென்சிலும் கையெழுத்துப் பழகத் துணையிருந்தன.
கட்டுரையும், இலக்கணமும் ஒன்பதாவது வகுப்பில் திடீரெனத் திணிக்கப்பட்டது. திருவள்ளுவரும், புத்தரும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்று தமிழாசான் எழுதிய புத்தகம் பற்றி விவாதித்தது ஒன்றே கிளிப்பிள்ளை பாடம் தவிர்ந்த ஒரு புது முயற்சி. பதினோராம் வகுப்பில் 'போட்டி' நம் பள்ளிக்கும் அறிமுகம் ஆனபோது, பாரதியார் கவிதையை குழந்தை மாதிரி ஒப்பித்து, கிடைத்த பரிசை வாங்கச் செல்ல வழி தெரியாத காரணத்தால் பேசாதிருந்து விட்டேன்.
ஐந்தாவது படிக்கையில் தினமணிக்கதிர் வாயிலாக என் தந்தை மகற்காற்றிய பேருதவி.. மஞ்சரி, கல்கி, கலைமகள், அமுத சுரபி, ஆனந்த விகடன் என்று விரிந்த.. அந்த உலகமே பள்ளி தவிர்த்த என் வாழ்க்கையானது. அதனூடாக கல்கி, கோ.வி. மணிசேகரன், சாண்டில்யன், அகிலன், ஸ்ரீ வேணுகோபாலன் ஆகியோர் எழுத்துக்களின் அறிமுகம் கிடைத்தது.
கி.ரா, ஜெயகாந்தன், தேவன் ஆகியோரைப் படிக்கையில் இயல்பாக உணர்ந்தேன். கண்ணதாசன் கவிதைகளும், வாலி, வைரமுத்து, பாரதி ஆகியோரின் கவிதைகளும் மெதுவே எழுதினால் என்ன என்ற ஆசையைத் தூண்டி விட்டது. இலக்கணம் சற்றுப் பயமுறுத்தியது.
ப்ரியாவின் அறிமுகமும், எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பற்றிய விவாதமும், அவளின் எழுத்துக்களும், இவளைப் போல் நாமும் முயன்றால் என்ன என்ற ஒரு மனோதைரியத்துடன் மனதில் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தின.
எழுதிப் பார்க்கலாம் என்று எழுதிய கவிதையை படித்துப் பாராட்டி அவள் ஊக்குவித்ததில் நானும் கிறுக்கினேன். நன்றாக இருப்பதை பாராட்டும் அதே தருணம் குறையென்று கூறாமல், நளினமாக ஒரு வார்த்தை மாற்றினால் என்று ஆலோசனை கூறும்போது அது மிக அழகாய் மாறிவிடுவது என்னைச் செம்மைப் படுத்திக் கொள்ள பெரிதும் உதவியது.
செய்திகளின் தாக்கத்தில் புழுங்கி, பதிவுலகம் பக்கம் வந்தபோது என் மன அழுத்தத்தைப் போக்க இது ஒரு வாய்ப்பு என்ற எண்ணம்தான், என் எழுத்தின் உடனடி உந்துகோலாக இருந்தது. என் மனதில் உள்ளவற்றை அப்படியே எழுதும் பதிவர்களுக்கு, பின்னூட்டம் இடுவதில் ஆரம்பித்தது என் எழுத்துப் பயணம். "தலையா போய் விடும்" என்று, இலக்கணப் பிழைகள் பற்றியெல்லாம் கவலைப் படாது, மன அழுத்தத்தின் வடிகாலாய் மொட்டு விட ஆரம்பித்ததே, இப்போது பூத்துக் கொண்டிருக்கும் என் வலைப்பூ.
கவிதை, சொந்தக் கதை, பார்த்த கதை, பாராத கதை எல்லாவற்றுக்குமிடையே.. "நறுக்குன்னு நாலு வார்த்தை" என் அழுத்தத்தின் வெளிப்பாடாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது..
பாராட்டுதல், பிழை எடுத்துக் கூறல் என்று பழமைபேசியின் பங்களிப்பும், ஆரம்பம் முதலே ஊக்குவிக்கும் ராஜ நடராஜன், ராகவன் போன்ற அன்புள்ளங்களும் என் எழுத்தின் தூண்டுகோல்கள்.
இந்த தொடர்பதிவுக்கான அழைப்பை ஏற்று நீங்க எழுத வந்த கதையும் எழுதுங்களேன்.
இந்த தொடர்பதிவுக்கான அழைப்பை ஏற்று நீங்க எழுத வந்த கதையும் எழுதுங்களேன்.
30 comments:
//கவிதை, சொந்தக் கதை, பார்த்த கதை, பாராத கதை எல்லாவற்றுக்குமிடையே.. "நறுக்குன்னு நாலு வார்த்தை" என் அழுத்தத்தின் வெளிப்பாடாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது..//
தங்கள் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தலைவா! உங்கள் வலைப் பூவை வாசிக்க ஆரம்பித்தப் பிறகுதான் எனக்கும் மறுபடியும் கவிதைகள் எழுத ஆர்வம் பிறந்தது..,
சூர்யா ௧ண்ணன்
/தங்கள் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தலைவா! /
நன்றி சூர்யா.
//ப்ரியாவின் அறிமுகமும், எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பற்றிய விவாதமும், அவளின் எழுத்துக்களும், இவளைப் போல் நாமும் முயன்றால் என்ன என்ற ஒரு மனோதைரியத்துடன் மனதில் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தின.//
பயந்தாங்குளியான என்னைப் பார்த்து தைரியம் வந்திச்சா.. பலே..!
//எழுதிப் பார்க்கலாம் என்று எழுதிய கவிதையை படித்துப் பாராட்டி அவள் ஊக்குவித்ததில் நானும் கிறுக்கினேன். நன்றாக இருப்பதை பாராட்டும் அதே தருணம் குறையென்று கூறாமல், நளினமாக ஒரு வார்த்தை மாற்றினால் என்று ஆலோசனை கூறும்போது அது மிக அழகாய் மாறிவிடுவது என்னைச் செம்மைப் படுத்திக் கொள்ள பெரிதும் உதவியது.//
ஓஹோ.. தகவலுக்கு நன்றி.. ஆனாலும் இது கொஞ்சம் டூ மச் சார்..
//கிடைத்த பரிசை வாங்கச் செல்ல வழி தெரியாத காரணத்தால் பேசாதிருந்து விட்டேன்.//
ஹா...ஹா....இதுதானே வேண்டாங்கறது...கைகாலெல்லாம் நடுங்கியிருக்கும், அப்படிதானே...
ஆமாம் கரும்பலகையா? அல்லது கற்பலகையா?... பொருள் பொருந்துகிறது... ஆயினும் எங்கோ உதைக்கிறதே...
தொடருங்கள் உங்களின் வலைப்பூ பயணத்தினை...தொடர்ந்து வருகிறோம்..துரத்திக்கொண்டே....
கலகலப்ரியா
/பயந்தாங்குளியான என்னைப் பார்த்து தைரியம் வந்திச்சா.. பலே..!/
லகலகா உனக்கே இது ஓவரா தெரியல. எழுத படிக்க எப்போம்மா பயந்த நீ.
/ஓஹோ.. தகவலுக்கு நன்றி.. ஆனாலும் இது கொஞ்சம் டூ மச் சார்../
ஒரு வார்த்த மாத்தறதா டூ மச். :))
க.பாலாஜி
/ஹா...ஹா....இதுதானே வேண்டாங்கறது...கைகாலெல்லாம் நடுங்கியிருக்கும், அப்படிதானே.../
இல்ல. அது மைலாப்பூர்ல பி.எஸ். ஹைஸ்கூல். நேரடியா பஸ் இல்லை. ஸ்கூல்ல நீயே போன்னுட்டாங்க. போட்டிக்கு ஆசிரியர் கூட வந்தாரு. வழி தெரியாம போக பயம்.
/ஆமாம் கரும்பலகையா? அல்லது கற்பலகையா?... பொருள் பொருந்துகிறது... ஆயினும் எங்கோ உதைக்கிறதே.../
கருமபலகை வாத்தி எழுதுறது. நம்மளது கல்லு ஸ்லேட். அதான் கற்பலகை இஃகி இஃகி.
/தொடருங்கள் உங்களின் வலைப்பூ பயணத்தினை...தொடர்ந்து வருகிறோம்..துரத்திக்கொண்டே..../
நன்றி.துரத்திக்கொண்டா?அவ்வ்வ்வ்வ்
நீங்கள் எழுத வந்த வரலாறு ரசித்தேன்.
அண்ணே வணக்கம். நலம். நலமறிய அவா. நானெல்லாம் எழுதறேன்னு சொன்னாலே... வேண்டாமண்ணே... எதோ பின்னூட்டம் போட்டு ஓட்டிகிட்டு இருக்கிற ஆளுங்கண்ணே..
நீங்களும், அக்கா கலகலப்ரியாவும் கூப்பிட்டுவிட்டீங்க... எழுத முயற்ச்சிக்கின்றேன்.
// படிக்கிற காலத்துல அது பள்ளியின் குறையா? அல்லது என் கவனக் குறைவா தெரியவில்லை. எழுத்துப் போட்டி, பேச்சுப் போட்டி என்று எதுவும் நடந்ததாகக் கவனமில்லை. //
அந்த காலத்தில் எல்லாம் அப்படித்தான் இருக்கும் என்று பெரியவர் ஒருவர் சொல்லக் கேள்விப் பட்டு இருக்கேங்க... நாங்கெல்லாம் சின்னப்பசங்க.. அந்த காலத்துப் பள்ளிக்கூடம் பற்றி தெரியாதுங்கோ..
// ப்ரியாவின் அறிமுகமும், எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பற்றிய விவாதமும், அவளின் எழுத்துக்களும், இவளைப் போல் நாமும் முயன்றால் என்ன என்ற ஒரு மனோதைரியத்துடன் மனதில் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தின. //
நன்றி அக்கா கலகலப்ரியா.
// ராகவன் போன்ற அன்புள்ளங்களும் என் எழுத்தின் தூண்டுகோல்கள். //
ஹையா... ஜாலி... இந்த மொக்கையனை கூட ஒருத்தர் அன்புள்ளம் என்று சொல்லிட்டாருப்பா...
அண்ணன் பாலா வாழ்க.
அண்ணன் பாலா வாழ்க.
அண்ணன் பாலா வாழ்க.
அண்ணன் பாலா வாழ்க.
அண்ணன் பாலா வாழ்க.
அண்ணன் பாலா வாழ்க.
அண்ணன் பாலா வாழ்க.
அண்ணன் பாலா வாழ்க.
பாலாண்ணே, அப்ப இருந்த உங்க வலைப்பூவும், இப்ப இருக்குற அழகும் என்ன? எழுத்து நடை என்ன?? கலக்குங்க....
அய்யய்யோ... பாலாண்ண சூப்பரா வாரலாறு எழுதிட்டாரே.... !!!
நமக்கு புவியியலே வாஸ்து படி அமைய மாட்டேங்குது... ம்ம்ம். பிரியா சொன்ன மாதிரி வரலாறு எப்பப் போய் எழுதுறது
//"தலையா போய் விடும்" என்று,//
தலைக்கு எப்ப கவலப்பட்டிருக்கிறோம்.... அதில இருந்த முடிக்குத் தானே கவலைப்பட்டோம்
//மன அழுத்தத்தின் வடிகாலாய் மொட்டு விட ஆரம்பித்ததே, இப்போது பூத்துக் கொண்டிருக்கும் என் வலைப்பூ.//
நியாயமான வரிகள்...
உங்கள் நறுக் மற்றும் நகைக்க வைக்கும் எழுத்திற்கு பரம ரசிகன் நான்..
வலைப்பூ சாராத என் நண்பர்களையும் உங்கள் வலைப்பூவை வாசிக்கச் சொல்லி வற்புறுத்துகிறேன்
வாழ்த்துகள் பாலா
தொடருங்கள்
ஜெஸ்வந்தி
/நீங்கள் எழுத வந்த வரலாறு ரசித்தேன்./
நன்றிங்க சகோதரி
இராகவன் நைஜிரியா
/நீங்களும், அக்கா கலகலப்ரியாவும் கூப்பிட்டுவிட்டீங்க... எழுத முயற்ச்சிக்கின்றேன்./
ஒரு பதிவு இடுகைக்கு ஒரு பின்னூட்டம் பதம்னு வெச்சிண்டா உங்கள அடிச்சிக்க ஆளு இருக்கா சார். அசத்துவீங்க தெரியும். காத்திருக்கோம்.
இராகவன் நைஜிரியா
/அந்த காலத்தில் எல்லாம் அப்படித்தான் இருக்கும் என்று பெரியவர் ஒருவர் சொல்லக் கேள்விப் பட்டு இருக்கேங்க... நாங்கெல்லாம் சின்னப்பசங்க.. அந்த காலத்துப் பள்ளிக்கூடம் பற்றி தெரியாதுங்கோ../
மாட்னீங்க. சொல்றேங்கோ.
இராகவன் நைஜிரியா
/நன்றி அக்கா கலகலப்ரியா./
:))
இராகவன் நைஜிரியா
/ஹையா... ஜாலி... இந்த மொக்கையனை கூட ஒருத்தர் அன்புள்ளம் என்று சொல்லிட்டாருப்பா...
அண்ணன் பாலா வாழ்க. /
ஒரு பக்கம் பாசப் பறவைகள் எழுதிக்கிட்டே இப்படி பின்னூட்டம் போட்டா எப்புடி?
பழமைபேசி
/பாலாண்ணே, அப்ப இருந்த உங்க வலைப்பூவும், இப்ப இருக்குற அழகும் என்ன? எழுத்து நடை என்ன?? கலக்குங்க..../
நன்றிங்க பழமை.
கதிர் - ஈரோடு
/நமக்கு புவியியலே வாஸ்து படி அமைய மாட்டேங்குது... ம்ம்ம். பிரியா சொன்ன மாதிரி வரலாறு எப்பப் போய் எழுதுறது/
வாஸ்துவ மாத்துங்க. எழுதுங்க.
//திருவள்ளுவரும், புத்தரும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்று தமிழாசான் எழுதிய புத்தகம் பற்றி விவாதித்தது ஒன்றே கிளிப்பிள்ளை பாடம் தவிர்ந்த ஒரு புது முயற்சி//
எனக்கெல்லாம் கன்னித்தீவுல சிந்துபாத் பாடம் தவிர்ந்த புது முயற்சி:)
கதிர் - ஈரோடு
/தலைக்கு எப்ப கவலப்பட்டிருக்கிறோம்.... அதில இருந்த முடிக்குத் தானே கவலைப்பட்டோம்/
ஹெ ஹெ நாம அதுக்கு கவலையே படல. அது குடும்ப சொத்து.
கதிர் - ஈரோடு
/உங்கள் நறுக் மற்றும் நகைக்க வைக்கும் எழுத்திற்கு பரம ரசிகன் நான்..
வலைப்பூ சாராத என் நண்பர்களையும் உங்கள் வலைப்பூவை வாசிக்கச் சொல்லி வற்புறுத்துகிறேன்
வாழ்த்துகள் பாலா
தொடருங்கள்/
நன்றி கதிர்
ராஜ நடராஜன்
/எனக்கெல்லாம் கன்னித்தீவுல சிந்துபாத் பாடம் தவிர்ந்த புது முயற்சி:)/
:)). வாங்க சார்
நல்ல பதிவு அண்ணே
Suresh Kumar
/நல்ல பதிவு அண்ணே/
நன்றி சுரேஷ்
:)))))))
SUBBU
/:)))))))/
எம்பொழப்பு சிரிப்பாப் போச்சில்லா சுப்பு. அவ்வ்வ்வ்:))
//எம்பொழப்பு சிரிப்பாப் போச்சில்லா சுப்பு. அவ்வ்வ்வ்:))//
அப்படி இல்லீங்க, நீங்க வந்த கதை நல்லா இருந்தது :))
SUBBU
/அப்படி இல்லீங்க, நீங்க வந்த கதை நல்லா இருந்தது :))/
ஹி ஹி
Post a Comment