Friday, September 4, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.1

கடந்த கால கசப்புகளை மறக்க வேண்டும் என மகிந்த‌ தெரிவிப்பு

விஷத்த குடுத்து கொன்னுபோட்டு கசப்ப மறந்துடுங்கவா? ஏன் ஆட்டம் கண்டு போச்சோ?
_______________________________________________________________

திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட சிறை; கருணாவுக்கு அமைச்சர் பதவியா?: ஊடக அமைச்சரிடம் ஊடகவியலாளர் கேள்வி..

எட்டப்பனுக்கு பதவி. கட்டபொம்மனுக்கு தூக்கு. இதுதான் உங்க தமிழர் கலாச்சாரம்னு நக்கலடிப்பான். ஏன்யா?
_______________________________________________________________
ஜனாதிபதி படுகொலை சதித்திட்டங்கள் தொடர்கின்றன – மேர்வின் சில்வா

தொழிலமைச்சருக்கு ஏன்டா இந்த கவலை. கொலை பண்றதே தொழில். அதையும் ராணுவத்தான் புடுங்கிட்டான். உனக்கென்ன தொழிலிருக்க போவுது. நீ அடி ஜால்ரா.
_______________________________________________________________
உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் மஹிந்த ராஜபக்ஷ– வெனிசுலா ஜனாதிபதி

ஆமாம்டா. எல்லாரும் முன்னுதாரணமா கொண்டு ஜனங்கள போட்டுத் தள்ளிடுங்க. அவன் அவன் நாடு அவனவனுக்கு சொந்தம். அப்புறம் உங்களுக்குள்ள அடிச்சிட்டு சாவலாம்.
_______________________________________________________________
புலிகளை தடுத்து வைத்து மக்களை விடுதலை செய்ய வேண்டும் - ரணில்

அதத்தான் இப்போ பண்ணிட்டிருக்கேன். மக்களெல்லாம் மண்ணுக்குள்ளன்னு சொல்லவா போறான்.
_______________________________________________________________
யுத்தத்தில் ஊனமுற்ற படைவீரர்களை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் - கோதபாய ராஜபக்ஷ

இல்லன்னா அவனவனும் வாய தொறந்துடுவானே. அடிச்ச காசெல்லாம் இதுக்கே போகும்.
_______________________________________________________________
உலகப் புலனாய்வு அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டிற்குள் ஊடுருவியுள்ளனர் – திவயின

ஆஹா ஆஹா. வெறி புடிச்சி அத்தன வெள்ளச்சாமியவும் கம்பிக்குள்ள போடமாட்டானா? அப்பவாவது சுரணை வராதா?
_______________________________________________________________
சமாதான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பான் கீ மூன் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு.

இவரெப்போ கோரினாரு? மறந்து போய் சண்ட நடக்கிறப்போ எடுத்த கூடுதல் நகல அனுப்பிட்டாரோ?
_______________________________________________________________
நீர்மூழ்கிகளுக்கான சுரங்கப் பாதையைக் கட்டியமைக்க ஜப்பான் விபுணர்கள் குழு புலிகளுக்கு உதவியது: கொழும்பு நாளேடு

ஜப்பான் காரன் இனிமே நிவாரணம் இல்லன்னுட்டான் போல.
_______________________________________________________________
இடம்பெயர்ந்தோர் தொடர்பில் மனித உரிமைகள் அமைச்சருடன், பான் கீ மூன் பேச்சுவார்த்தை

இப்புடியெல்லாம் கசிய விட்டா நான் என்னதான்டா பண்ணுவேன்? பார்த்துக்குங்கன்னு அழுதாரோ?
_______________________________________________________________
"சனல் 4" காணொளி தொடர்பாக எந்த விசாரணைக்கும் அரசு தயார்: ஊடக அமைச்சர் யாப்பா அறிவிப்பு

ஏறிபோச்சுடா டேய். சவுண்டுட்டா அடங்கிடுவானுங்கன்னு நல்லா கரம்பேறிப் போச்சு.
_______________________________________________________________
இலங்கை ராணுவத்தின் கொடூரச்செயல்:அமெரிக்கா கண்டனம்

இந்த மாசத்துக் கண்டனம் தெரிவிச்சாச்சு. அவங்கவங்க வேலைய பார்க்கலாம். நெக்ஸ்ட்.
_______________________________________________________________
அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை பிள்ளையான் வெளியிடக் கூடாது – அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்

போட்டுக் கொடுக்க புலி இல்லன்னு நாயே நாயை தின்ன பார்க்குது.
_______________________________________________________________
யுனிசெவ் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளரை நாடுகடத்துமாறு சிறீலங்கா அரசாங்கம் உத்தரவு

உன்ன நாடு கடத்த ஒருத்தனுக்கும் தருவிசில்லாம போச்சே.
_______________________________________________________________
புலிகளுடனான இறுதி யுத்தத்த போர்க் காட்சிகளைக் கொண்ட அனைத்து ஒளிப்பதிவு நாடாக்களும் அரசின் கட்டுப்பாட்டுள்

எங்கப்பன் குதிருக்குள்ள இல்லீங்கோவ். இப்பவாவது முழிச்சிக்கங்கடா. இறையாண்மை மசிராண்மைல்லாம் கடாசிட்டு மனுசனா இருக்கப் பாருங்கடா.
_______________________________________________________________
இலங்கைக்கு திறமையான புலனாய்வு வலைப்பின்னல் தேவையாம்.

ஒட்டப்பாலத்தக் கேளும்மா. புல்லு புடுங்க ஆளனுப்பினேன்னு அனுப்புவான்.
_______________________________________________________________
இலங்கையில் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்த பூரணமான ஆதரவளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது

எங்கூர்க்காரனுவ தனி ஈழத்துக்கு ஆதரவு குடுத்தத விட கேவலமா இருக்கே. செய்யாத வேலைக்கு ஆதரவு இல்லன்னுதான் கெடப்புல போட்டானோ. போங்கடா நீங்களும் உங்க ஆதரவும்.
_______________________________________________________________
ஐநாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறும் இலங்கை

இவன் பவுசுதான் தெரியுதில்ல. என்னா கழட்டிட போறான்.
_______________________________________________________________
தமிழர் பகுதியில் முழு அமைதி நிலவுகிறது: திருச்சியில் இலங்கை அமைச்சர் பேட்டி

ஆமாம்டா. சுடுகாடு அமைதியாத் தானே இருக்கும்.
_______________________________________________________________
பிறந்த நாள் பரிசு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஜெ. மனு

நல்லாக் கேட்டுக்குங்கப்பு. வழக்கிலிருந்துதான். பரிசிலிருந்தில்ல.
_______________________________________________________________
நள்ளிரவில் கிரிவலம் வந்த நடிகை சினேகா:படம்

வாங்கி நடு வீட்டில வெச்சி வலம் வரலாம். எல்லாம் விடிஞ்சிடும்.
_______________________________________________________________
எஸ்.வி.சேகருக்கு கொலை மிரட்டல் கடிதம்

சேகரு. நீ அவ்ளோ ஃபேமஸா?
_______________________________________________________________
பனையூர் கொலை வழக்கில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஜெ.

யார்ப்பா அங்க. நாளைக்கு பேப்பர்ல மூணாவது பக்கத்த அப்படியே விடுங்க. முதல் பக்கத்துல வெள்ளை அறிக்கை மூணாவது பக்கம் பார்க்கனு போட்டா சரி.
_______________________________________________________________

24 comments:

ஈரோடு கதிர் said...

//ஆமாம்டா. சுடுகாடு அமைதியாத் தானே இருக்கும்.//

இது 'நச்'

//சேகரு. நீ அவ்ளோ ஃபேமஸா?//

இது காமடியோ காமடி போங்க

vasu balaji said...

நன்றிங்க கதிர்.

அ. நம்பி said...

//தமிழர் பகுதியில் முழு அமைதி நிலவுகிறது: திருச்சியில் இலங்கை அமைச்சர் பேட்டி

ஆமாம்டா. சுடுகாடு அமைதியாத் தானே இருக்கும்.//

மிக நன்று.

க.பாலாசி said...

//தமிழர் பகுதியில் முழு அமைதி நிலவுகிறது: திருச்சியில் இலங்கை அமைச்சர் பேட்டி
ஆமாம்டா. சுடுகாடு அமைதியாத் தானே இருக்கும்.//

சரியான செருப்படி....

பழமைபேசி said...

V 2.1 இதான் கலக்கல்.... பாலாண்ணே, உங்களுக்கும் யாரோ வெனை வெச்சிட்டாங்க போல இருக்கு....

vasu balaji said...

பழமைபேசி

/V 2.1 இதான் கலக்கல்.... பாலாண்ணே, உங்களுக்கும் யாரோ வெனை வெச்சிட்டாங்க போல இருக்கு..../

நன்றி பழமை. என்னாச்சி..அவ்வ்வ். சொல்லுங்க ப்ளீஸ்

vasu balaji said...

க.பாலாஜி
/சரியான செருப்படி..../

நன்றி

vasu balaji said...

அ. நம்பி

/மிக நன்று./

நன்றிங்க அய்யா.

Unknown said...

///"சனல் 4" காணொளி தொடர்பாக எந்த விசாரணைக்கும் அரசு தயார்: ஊடக அமைச்சர் யாப்பா அறிவிப்பு

ஏறிபோச்சுடா டேய். சவுண்டுட்டா அடங்கிடுவானுங்கன்னு நல்லா கரம்பேறிப் போச்சு.///
இந்தா இப்பவே விசாரணைய வச்சுக்கலாம்னு யாராவது வந்தாத் தெரியும் பாலா இவங்கட யோக்கியதை..(அப்பிடி யாருமே வரமாட்டான் என்பது வேற விசயம்.

Back with a Bang என்று அடிக்கடி எழுதுவாங்க... அது இதுதானா பாலா!!! V 2.1 கலக்கல்... பாலா Back with a Bang

vasu balaji said...

Kiruthikan Kumarasamy

/இந்தா இப்பவே விசாரணைய வச்சுக்கலாம்னு யாராவது வந்தாத் தெரியும் பாலா இவங்கட யோக்கியதை..(அப்பிடி யாருமே வரமாட்டான் என்பது வேற விசயம்./

ஊடகங்களின் வாயிலாக உண்மை வெளிவந்தால்தான் உண்டு. வரும்.

/Back with a Bang என்று அடிக்கடி எழுதுவாங்க... அது இதுதானா பாலா!!! V 2.1 கலக்கல்... பாலா Back with a Bang/

நன்றி கீத்!

Unknown said...

தாக்குங்க தலைவரே....

vasu balaji said...

லவ்டேல் மேடி

/தாக்குங்க தலைவரே..../

வாங்க வாங்க மேடி! நிச்சயதார்த்தம் நல்லா நடந்துச்சா?

யூர்கன் க்ருகியர் said...

//ஜனாதிபதி படுகொலை சதித்திட்டங்கள் தொடர்கின்றன – மேர்வின் சில்வா
//

உண்மையாய் பார்த்தால் "ஜனாதிபதியின் படுகொலை சதித்திட்டங்கள் தொடர்கின்றன" என்று சொல்லி இருக்க வேண்டும் ....

யூர்கன் க்ருகியர் said...

//இலங்கைக்கு திறமையான புலனாய்வு வலைப்பின்னல் தேவையாம்.//

RAW உடனான அக்ரீமென்ட் ஐ இன்னும் ரினிவல் பண்ணலையா ..... ?

யூர்கன் க்ருகியர் said...

//உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் மஹிந்த ராஜபக்ஷ//

ஒரு உதாரணம் கூட இல்லையே டா !!

யூர்கன் க்ருகியர் said...

//சமாதான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பான் கீ மூன் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு.
/

"நான் அறிக்கை விடற மாதிரி விடுவேன் .அதெல்லாம் சும்மா .நீ ஒன்னும் கண்டுக்காத ! " அப்படிண்ணு பேசி வச்சிக்கிட்டு பக்கியும் மங்கியும் பொலிடிக்ஸ் ஆட்டம் ஆடறானுங்க ...

யூர்கன் க்ருகியர் said...

//நள்ளிரவில் கிரிவலம் வந்த நடிகை சினேகா //
தயாரிப்பாளரை வலம் வந்தாலாவது உருப்படி ஆயிருக்கும்

பழமைபேசி said...

//பழமைபேசி

/V 2.1 இதான் கலக்கல்.... பாலாண்ணே, உங்களுக்கும் யாரோ வெனை வெச்சிட்டாங்க போல இருக்கு..../

நன்றி பழமை. என்னாச்சி..அவ்வ்வ். சொல்லுங்க ப்ளீஸ்//

இல்லண்ணே, பொட்டி தட்டிகள்தான் பல versionகளோட அல்லாடிட்டு இருப்போம்... அந்த காத்து உங்களையும் பிடிச்சிருக்குன்னு சொல்ல வந்தேன்....

Thamizhan said...

கலக்கல் அண்ணே ...

vasu balaji said...

யூர்கன் க்ருகியர்
/உண்மையாய் பார்த்தால் "ஜனாதிபதியின் படுகொலை சதித்திட்டங்கள் தொடர்கின்றன" என்று சொல்லி இருக்க வேண்டும் ..../

பிரமாதம்.
/RAW உடனான அக்ரீமென்ட் ஐ இன்னும் ரினிவல் பண்ணலையா ..... ?/

விடியோ பார்த்து பயந்துட்டாங்களோ?

/ஒரு உதாரணம் கூட இல்லையே டா !!/

ஹிட்லரை சாமியாராக்கிட்டானே. அதச் சொல்றானோ?

/பக்கியும் மங்கியும் பொலிடிக்ஸ் ஆட்டம் ஆடறானுங்க .../

அதாஞ்செரி.

vasu balaji said...

/பழமைபேசி

/இல்லண்ணே, பொட்டி தட்டிகள்தான் பல versionகளோட அல்லாடிட்டு இருப்போம்... அந்த காத்து உங்களையும் பிடிச்சிருக்குன்னு சொல்ல வந்தேன்..../

அதான் நினைச்சேன். ஆனா இதும் நானே தேடிக்கிட்ட வினை. நானும் அங்கீகாரமில்லாத பொட்டிதட்டிதான்.

vasu balaji said...

Thamizhan

/கலக்கல் அண்ணே .../

நன்றி.

கிரி said...

//உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் மஹிந்த ராஜபக்ஷ– வெனிசுலா ஜனாதிபதி//

நிசமாவா சொல்றாரு !!!!

//இவரெப்போ கோரினாரு? மறந்து போய் சண்ட நடக்கிறப்போ எடுத்த கூடுதல் நகல அனுப்பிட்டாரோ?//

ஹா ஹா ஹா டாப்பு

//இந்த மாசத்துக் கண்டனம் தெரிவிச்சாச்சு. அவங்கவங்க வேலைய பார்க்கலாம். நெக்ஸ்ட்//

சூப்பரு!

சார் நீங்க version 2.1 என்றதும் ..மாற்றம் எதுவும் செய்து இருப்பீர்களோ என்று எதிர்பார்த்தேன்..

சார் உங்கள் தளத்துல வைரஸ் என்று சொல்கிறது..க்ரோம்

vasu balaji said...

கிரி

/சார் நீங்க version 2.1 என்றதும் ..மாற்றம் எதுவும் செய்து இருப்பீர்களோ என்று எதிர்பார்த்தேன்..

சார் உங்கள் தளத்துல வைரஸ் என்று சொல்கிறது..க்ரோம்/

வாங்க கிரி. தெரியலை கிரி. ஃபுல் ஸ்கேன், ஆன்லைன் ஸ்கேன் எல்லாம் பரம சுத்தம்னு சொல்றது.