அலை அலையாய் ஜெல் போட்டு வாரினாற்போல் ஹேர் ஸ்டைல். மடிப்புக் கலையாத உடைகள். நேர்த்தியாக டக் செய்து கண்ணியமாக இருப்பார். நுனி நாக்கில் சரளமான ஆங்கிலம். கொஞ்சம் ஃப்ரெஞ்ச், ஜெர்மன்,ஹிந்தி பேசுவார். படித்தது ஒன்பதாம் வகுப்பு. தந்தையார் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தவர். நல்ல உத்தியோகம். ஒரு பெண்ணும் பையனும் உண்டு.
அலுவலகத்தில் வேலை மட்டும் செய்யமாட்டார். முந்தைய இடுகையில் பையன் அடிக்க வந்தான் என்று அழுதவரை நினைவிருக்கும். அவரின் கீழ் பணி புரிந்தபோது ஒரு நாள் அவரை, அலுவலகத்தில் ஓட ஓட விரட்டி அடித்தவன். காரணம், தினமும் கையெழுத்துப் போட்டுவிட்டு வேலை செய்யாமல், சீட்டிலும் இல்லாமல் இருப்பதற்கான காரணம் கேட்ட சார்ஜ் மெமோ.
மதியம் 4 மணிக்கு மேல், கண்ணெல்லாம் சிவந்து, தள்ளாடி, அலுவலக வளாகத்தில் விழுந்து கிடப்பார். யாராவது தெரிந்தவர்கள் பாவம் பார்த்து ரிக்ஷாவில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள். அடுத்த நாள் காலை பார்க்கும்போது அவரா இவர் எனத் தோன்றும். தினமும் குடிக்க காசு வேண்டுமே?
சிம்பிள்! செண்ட்ரல் ஸ்டேஷனுக்குள் வளைய வருவார். யாராவது வெளிநாட்டவர்கள் இருப்பார்கள். மெதுவே போய் பேச்சுக் கொடுத்து, டிக்கட் வாங்கும் முறை, அதற்கான கன்செஷன் என்று ஏதோ கதை சொல்லி, அதற்கு அலுவலகம் வாருங்கள், ஒரு விண்ணப்பம் நிரப்பிக் கொடுத்து, பாஸ்போர்ட் காண்பித்தால் குறிப்பெழுதிக் கொடுப்பார்கள். 5 டாலர் கட்டணம், அல்லது 10 டாலர் கட்டணம் என்று ஏதோ சொல்லி அழைத்து வருவார்.
உருவத்தையும், பண்பான சரளமான பேச்சையும் கேட்டால் வெள்ளையனில் மட்டும் கேனையன் இல்லாமலா போய் விடுவான்? அலுவலகமோ கோவில் மாதிரி 4 வெளி வாசல், எண்ணற்ற உள்வாசல் கொண்டது. வெளிநாட்டுப் பயணிகள் என்று ஒரு போர்ட் போட்டு தகவலுக்காக ஒரு சோஃபா இருக்கும். அங்கே அமர்த்தி, வெள்ளைத் தாளில் தானே எழுதி, கையெழுத்து வாங்கி, பாஸ்போர்ட் மற்றும் ஐந்தோ பத்தோ டாலருடன், இதோ வருகிறேன் என்று கூறி ஒரு புறம் நுழைந்து மறுபுறம் போய்விடுவார்.
மணிக்கணக்கில் காத்திருந்து, மிரண்டு போய் விசாரித்தால் அப்படி எதுவுமில்லை என்பது தெரியவரும். பணம் போனால் பரவாயில்லை பாஸ்போர்ட் கதி என்ன என்று கலங்கி நிற்பவர்களுக்கு ஆறுதலாக, வழி கூறி, பக்கத்திலிருக்கும் போஸ்டல் சார்ட்டிங் ஆஃபீஸில் போய் கேளுங்கள். அங்கு போஸ்ட் பாக்ஸில் போட்டுவிட்டு போயிருப்பான். யாரும் வராவிட்டால் அவர்கள் எம்பஸியில் சேர்த்துவிடுவார்கள் என்று அனுப்புவார்கள்.
அடித்த பணத்தை ஹவாலா பார்டிகளிடம் மாற்றி நண்பர்களோடு குடித்து கும்மாளமடித்துவிட்டு வந்து விழுந்திருப்பார். ஒரு முறை விடுமுறை நாளில் முந்தைய நாள் வேட்டையில் குடித்தது போதாமல், அலுவலகத்தில் பழைய பேப்பர்கள் கட்டி வைத்திருந்தது கவனம் வர, நண்பரின் டாக்ஸியில் இன்னோரு கூட்டுக்காரனோடு வந்து குப்பை மூட்டைகளை ஏற்றியிருக்கிறார்.
செக்யூரிட்டி வந்து கேட்ட போது, தன்னுடைய அலுவலக அடையாள அட்டை, தன் அலுவலக குப்பைகள் எனக்காட்டி, அதற்காக நியமிக்கப் பட்ட அலுவலகத்தில் அதைப் போட எடுத்துச் செல்வதாக கூறியிருக்கிறார். போதாதகாலம், அன்று அந்த அலுவலகத்துக்கும் விடுமுறை என்பது மறந்துவிட்டிருந்தது. டாக்ஸியை சீஸ் செய்து, இவர்மேல் கேஸ் போட்டு இவரும் சஸ்பெண்ட் ஆனார்.
அசரவில்லை மனுஷன். முழு நேர ஃப்ராடும், முழு நேரக்குடியுமாக அலப்பறை செய்து கொண்டு, கேஸ் நாளில் பவ்யமாக அய்யா, நாங்கள் கடத்தியதாக சொன்ன பொருளின் மதிப்பீடு 150ரூ. பூந்தமல்லியில் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு வரும் வழியில், முந்திய நாள் விட்டுப்போன பையை எடுக்கப் போனபோது பொய்கேஸ் போட்டுவிட்டார்கள். டாக்ஸியில் மீட்டர் பாருங்கள். டாக்ஸி வாடகை 250க்கும் மேல் ஆகியிருந்தது. 150ரூ மதிப்புள்ள குப்பைக்கா 250ரூ செலவு செய்து டாக்ஸியில் வருவோம் என்று போட்ட போட்டில் வடை போச்சே ஆனது செக்யூரிட்டி.
காலம் இப்படியேவா போய்விடும்? ஏதோ ஒரு கேசில் மாட்டி வேலை போய், மனைவி குழந்தைகளையும் விட்டுப் போய்விட்டதாக ஒரு நாள் போதையில் அழுது புலம்பினார். ஒரு முறை கையில் காசிருந்த ஒரு நாளில் போதையில் குழந்தைகளை செங்கல்பட்டில் ஏதோ ஒரு அநாதை ஆசிரமத்தில் விட்டு கையிலிருந்த காசை கொடுத்துவிட்டு சென்னை திரும்பி விட்டாராம்.
போதை இறங்கிவிட அடுத்த வண்டியில் போய் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு காசையும் சண்டை போட்டு வாங்கிக் கொண்டு வந்து குழந்தைகளை ஸ்டேஷனில் நிராதரவாய் விட்டு விழுந்து கிடந்ததாக அவர் நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார்.
சில வருடங்கள் கழித்து அலுவலக கேண்டீனில் காலை உணவு, மதிய உணவு அருந்துபவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க யாரோ ஒருவரிடம் போய், ரொம்ப பசிக்குது. அந்த மிச்சம் நான் சாப்பிடவா என்று கேட்பார். காசு கொடுத்தால், அவரிடம் நான் பிச்சை எடுக்கவில்லை, நட்பு உரிமையில்தான் கேட்டேன் என்று சண்டைக்கு போவார். அப்புறம் எங்கோ காணாமலே போனார்.
60 comments:
குடி மனிதர்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதற்கு அவர் ஒரு நல்ல உதாரணம்....
:-(
:-(
நான் அளவு மீறிக் குடிச்சி, ஒரு நாள் அவமானப்பட்டேன்... அதுல இருந்து...நஹி!
கேரக்ட்டர்களை செதுக்குகிறீர்கள் பாலா சார்!
நானும் பார்த்திருக்கிறேன்.பெரிய குடும்பத்தில் பிறந்த ஒருவரை இதே மாதிரி.
குடிக்க பயமுறுத்தும் மனிதர்கள்! :-)
குடி குடியை கெடுக்கும்
அப்பிடி என்ன அதுல இருக்கோ தெரியவில்லை
நான் பணியாற்றிய துறையிலும் நல்ல திறமையுள்ள சிலர் குடிப் பழக்கத்துக்கு ஆளாகி தன்னையும் கெடுத்துக்கொண்டு குடும்பத்தினரையும் நிர்க்கதியில் விட்டுச் சென்றதைப் பார்த்து பலமுறை கண் கலங்கியிருக்கிறேன். எனக்கிருந்த செல்வாக்கில் என்னால் முடிந்த வரையில் அவர்களின் குடும்பத்தினருக்கு சேர வேண்டிய சேர வேண்டிய தொகைகளை பெற்றளித்திட பெரிதும் உதவியிருக்கிறேன். இப் பதிவை படிப்பவர்களில் குடிப் பழக்கம் உள்ளவர்கள் யாராவது இருந்தால் அவர்களை நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்று தான். தயவு செய்து இந்த சனியனை விட்டொழியுங்கள்!
ரேகா ராகவன்.
என்ன சார் இது...
உங்க ப்ரொபைல் போட்டோமாதிரி எங்களை ஆக்கிட்டீங்களே....
எப்படி இப்படி எல்லாம் காலத்தை ஓட்டுகிறார்கள்?
அவர் பாவமா? அவரோடு பழகுகிறவர்கள் பாவமா?
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சார்..! குடி...... குடியைக் கெடுக்கும் என்பதெல்லாம் சாதாரண வார்த்தைத் தொடர்...! அதை விடக் கொடியது...!
பாலாண்ணா தலைப்பு மற்றும் பதிவு அசத்தல்..
குடி குடியை கெடுக்கும்
நல்லாருக்கு
இப்படி கூடவா இருப்பாங்க !!
அதிர்ச்சியாய் இருக்கிறது .... ..
பறவைகள் பலவிதம் என்பது மாதிரி மனிதர்களில் பலவிதம்.
குடிப் பழக்கம் அவரை எவ்வளவு பாதித்து இருக்கின்றது... கொடுமையடா சாமி
கேரக்டர்களை கண் முன்னே உலவ விடுகிறீர்கள்.
உண்மைதான் பாலா சார் சுயமரியாதையையே கெடுத்துவிடும்
நல்ல இடுகை அண்ணே
நல்லா எழுதி இருக்கீங்க Bala
நானும் இது போல் சில பேரை பார்த்து இருக்கேன் சார்...
//ஒரு முறை கையில் காசிருந்த ஒரு நாளில் போதையில் குழந்தைகளை செங்கல்பட்டில் ஏதோ ஒரு அநாதை ஆசிரமத்தில் விட்டு கையிலிருந்த காசை கொடுத்துவிட்டு சென்னை திரும்பி விட்டாராம்.
போதை இறங்கிவிட அடுத்த வண்டியில் போய் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு காசையும் சண்டை போட்டு வாங்கிக் கொண்டு வந்து குழந்தைகளை ஸ்டேஷனில் நிராதரவாய் விட்டு விழுந்து கிடந்ததாக அவர் நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார்.//
என்ன கொடுமை...?
மாஜிஸ்ரேட் பையனா இருந்தாலும் மப்பு ஏறினா இப்படித்தான் போல..
//உருவத்தையும், பண்பான சரளமான பேச்சையும் கேட்டால் வெள்ளையனில் மட்டும் கேனையன் இல்லாமலா போய் விடுவான்?//
இதான் நடக்குது எல்லா இடங்களிலும்..
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..
இப்படியும் சி(ப)ல மனிதர்கள்....
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு..
குடியால் வாழ்க்கையை இழந்த பலரைப் பார்த்திருக்கிறேன் - நெருங்கிய சொந்தங்கள் சில உட்பட..
//அடுத்த நாள் காலை பார்க்கும்போது அவரா இவர் எனத் தோன்றும். //
ஃபுல் கட்டு கட்டுகிற குடிகாரங்க எல்லோருமே அடுத்த நாள் காலையில இப்படித்தான் தெரிவானுங்கோ...
மப்பு ஏறி பிலாட் ஆகிறவரைக்கும் கூட இருக்கிறவன ஊறுகாய் ஆக்குவானுங்க பாருங்க.... யப்பா சாமி....
கடைசி மூன்று பாராக்களும் படிக்கும் போது, மனதை பிசைந்தது. இந்த அளவுக்கு ....... அவரது மூளையையும் இதயத்தையும் அடகு வைத்து விட்டாரே.....
மனிதரில் எத்தனை நிறங்கள் !!
டெக்னிக்கல் குடிகாரருன்னு சொல்லுங்க... ஆனாலும் அவரோட குழந்தைங்கள நெனைக்குறப்ப.... ப்ச்ச்...என்னத்த சொல்ல....நாசமாப்போவ...
குடிக்க மட்டும் மூளை வேலை செய்கிறது...பாருங்க, அதயெல்லாம் என்னசெய்ய.... பாவம் குடும்பம்.
மிக அழகான ஓட்டத்தில் சொன்னீர்கள்.
இப்படியும் ஒருவரா.......அதிர்ச்சியாக இருக்கிறது.
/ அகல்விளக்கு said...
குடி மனிதர்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதற்கு அவர் ஒரு நல்ல உதாரணம்....
:-(/
நன்றி ராஜா!
/ இயற்கை said...
:-(/
:(
/பழமைபேசி said...
நான் அளவு மீறிக் குடிச்சி, ஒரு நாள் அவமானப்பட்டேன்... அதுல இருந்து...நஹி!//
அய்யோ!.
பா.ராஜாராம் said...
கேரக்ட்டர்களை செதுக்குகிறீர்கள் பாலா சார்!
நானும் பார்த்திருக்கிறேன்.பெரிய குடும்பத்தில் பிறந்த ஒருவரை இதே மாதிரி.
குடிக்க பயமுறுத்தும் மனிதர்கள்! :-)//
நன்றிங்க பா.ரா.
அக்பர் said...
குடி குடியை கெடுக்கும்//
ஆமாங்க.அதையும் தாண்டி!
padma said...
அப்பிடி என்ன அதுல இருக்கோ தெரியவில்லை//
அது தெரியாமத்தானே இப்படி:(
KALYANARAMAN RAGHAVAN said...
நான் பணியாற்றிய துறையிலும் நல்ல திறமையுள்ள சிலர் குடிப் பழக்கத்துக்கு ஆளாகி தன்னையும் கெடுத்துக்கொண்டு குடும்பத்தினரையும் நிர்க்கதியில் விட்டுச் சென்றதைப் பார்த்து பலமுறை கண் கலங்கியிருக்கிறேன். எனக்கிருந்த செல்வாக்கில் என்னால் முடிந்த வரையில் அவர்களின் குடும்பத்தினருக்கு சேர வேண்டிய சேர வேண்டிய தொகைகளை பெற்றளித்திட பெரிதும் உதவியிருக்கிறேன். இப் பதிவை படிப்பவர்களில் குடிப் பழக்கம் உள்ளவர்கள் யாராவது இருந்தால் அவர்களை நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்று தான். தயவு செய்து இந்த சனியனை விட்டொழியுங்கள்!
ரேகா ராகவன்.//
அதான் சார். இவர் மாதிரி ஆட்கள் இறந்த பிறகு அந்தக் குடும்பத்துக்கு வரம் மாதிரியில்ல ஆகிப்போகும் நிலமை.
கும்க்கி said...
என்ன சார் இது...
உங்க ப்ரொபைல் போட்டோமாதிரி எங்களை ஆக்கிட்டீங்களே....//
வாங்க கும்க்கி. முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
ஸ்ரீராம். said...
எப்படி இப்படி எல்லாம் காலத்தை ஓட்டுகிறார்கள்?
அவர் பாவமா? அவரோடு பழகுகிறவர்கள் பாவமா?//
என்ன சொல்றது சார்:(
கலகலப்ரியா said...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சார்..! குடி...... குடியைக் கெடுக்கும் என்பதெல்லாம் சாதாரண வார்த்தைத் தொடர்...! அதை விடக் கொடியது...!//
நன்றிம்மா. சரியாச் சொன்ன!
ஜெரி ஈசானந்தா. said...
பாலாண்ணா தலைப்பு மற்றும் பதிவு அசத்தல்..//
நன்றிங்க ஜெரி.
தியாவின் பேனா said...
குடி குடியை கெடுக்கும்
நல்லாருக்கு//
நன்றி தியா
யூர்கன் க்ருகியர் said...
இப்படி கூடவா இருப்பாங்க !!
அதிர்ச்சியாய் இருக்கிறது .... ..//
ஆமாம் யூர்கன். எத்தனை வாய்ப்பு கிடைத்தது தெரியுமா. திருந்த:(
இராகவன் நைஜிரியா said...
பறவைகள் பலவிதம் என்பது மாதிரி மனிதர்களில் பலவிதம்.
குடிப் பழக்கம் அவரை எவ்வளவு பாதித்து இருக்கின்றது... கொடுமையடா சாமி//
இல்லைண்ணே. குடிக்கிறவங்க அதிகம் இருக்காங்க. இது அதையும் மீறிய திமிர்:(
Cable Sankar said...
கேரக்டர்களை கண் முன்னே உலவ விடுகிறீர்கள்.//
நன்றி சங்கர்ஜி
thenammailakshmanan said...
உண்மைதான் பாலா சார் சுயமரியாதையையே கெடுத்துவிடும்//
ஆமாங்க:(
நசரேயன் said...
நல்ல இடுகை அண்ணே//
நன்றிங்கண்ணே:)
T.V.ராதாகிருஷ்ணன் said...
நல்லா எழுதி இருக்கீங்க Bala//
நன்றி டி.வி.ஆர் சார்:)
ஜெட்லி said...
நானும் இது போல் சில பேரை பார்த்து இருக்கேன் சார்...//
ஆமாங்க.
ஈ ரா said...
//ஒரு முறை கையில் காசிருந்த ஒரு நாளில் போதையில் குழந்தைகளை செங்கல்பட்டில் ஏதோ ஒரு அநாதை ஆசிரமத்தில் விட்டு கையிலிருந்த காசை கொடுத்துவிட்டு சென்னை திரும்பி விட்டாராம்.
போதை இறங்கிவிட அடுத்த வண்டியில் போய் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு காசையும் சண்டை போட்டு வாங்கிக் கொண்டு வந்து குழந்தைகளை ஸ்டேஷனில் நிராதரவாய் விட்டு விழுந்து கிடந்ததாக அவர் நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார்.//
என்ன கொடுமை...?
மாஜிஸ்ரேட் பையனா இருந்தாலும் மப்பு ஏறினா இப்படித்தான் போல..
//உருவத்தையும், பண்பான சரளமான பேச்சையும் கேட்டால் வெள்ளையனில் மட்டும் கேனையன் இல்லாமலா போய் விடுவான்?//
இதான் நடக்குது எல்லா இடங்களிலும்..
நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..//
ஆமாங்க ஈ.ரா. நன்றிங்க
புலவன் புலிகேசி said...
இப்படியும் சி(ப)ல மனிதர்கள்...//
ம்ம்.
முகிலன் said...
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு..
குடியால் வாழ்க்கையை இழந்த பலரைப் பார்த்திருக்கிறேன் - நெருங்கிய சொந்தங்கள் சில உட்பட..//
அந்த அளவுலதான் வருது பிரச்சனை. எதுன்னு தெரியாம.
ஈரோடு கதிர் said...
//அடுத்த நாள் காலை பார்க்கும்போது அவரா இவர் எனத் தோன்றும். //
ஃபுல் கட்டு கட்டுகிற குடிகாரங்க எல்லோருமே அடுத்த நாள் காலையில இப்படித்தான் தெரிவானுங்கோ...
மப்பு ஏறி பிலாட் ஆகிறவரைக்கும் கூட இருக்கிறவன ஊறுகாய் ஆக்குவானுங்க பாருங்க.... யப்பா சாமி....//
:)). அந்தக் கொடுமை வேற!
Chitra said...
கடைசி மூன்று பாராக்களும் படிக்கும் போது, மனதை பிசைந்தது. இந்த அளவுக்கு ....... அவரது மூளையையும் இதயத்தையும் அடகு வைத்து விட்டாரே.....//
:(.
தண்டோரா ...... said...
மனிதரில் எத்தனை நிறங்கள் !!//
வாங்க மணிஜி:)
க.பாலாசி said...
டெக்னிக்கல் குடிகாரருன்னு சொல்லுங்க... ஆனாலும் அவரோட குழந்தைங்கள நெனைக்குறப்ப.... ப்ச்ச்...என்னத்த சொல்ல....நாசமாப்போவ...//
ம்ம். என்னாச்சுங்க அதுங்கன்னு தெரியலை:(
சி. கருணாகரசு said...
குடிக்க மட்டும் மூளை வேலை செய்கிறது...பாருங்க, அதயெல்லாம் என்னசெய்ய.... பாவம் குடும்பம்.
மிக அழகான ஓட்டத்தில் சொன்னீர்கள்.//
நன்றிங்க.:)
சைவகொத்துப்பரோட்டா said...
இப்படியும் ஒருவரா.......அதிர்ச்சியாக இருக்கிறது.//
ஆமாங்க.
நண்பரே . மிகவும் அருமையான பதிவு . குடிப்பவர்களுக்கு ஆணி அடித்தாற்போல் இருக்கும் . வாழ்த்துக்கள் !
இது போன்றவர்களை நானும் பார்த்திருக்கிறேன். :( குடி மூழ்கடித்த திறமையாளர்கள்..
வாழ்க டாஸ்மாக் நிதி. ஒழிக தமிழர் குடி. இப்படிக்கு கருணா நிதி.
கேரக்டரோடு எங்களை பயணம் செய்ய வைத்துவிட்டீர்கள். கடைசி பாரா, படிக்க முடியவில்லை. ஏன் !!.. ம்ம்ம்
Post a Comment