பத்து வயதில்
வீதியிலிருந்து எடுத்து வந்த
நாய்க்குட்டியை
அருவெறுத்து விரட்டி
கடன் வாங்கி
ஐந்நூறு ரூபாய்க்கு பாமரேனியன்
வாங்கிக் கொடுத்த அப்பா..
பத்து வருடம் கழிந்தும்
என் காதல் வெறுத்து
கடன் வாங்கி கட்டி வைக்க
அவசரமாய் மாப்பிள்ளை தேடுகிறார்..
அப்பாக்கள் எப்போதும் மாறுவதேயில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சயன்ஸ் பிடிக்கவில்லை
சங்கீதம் படிக்க விருப்பமென்றேன்
கடற்கரையில் துண்டு விரித்து
பிழைக்கவா?
கணிணி படி என்றார் அப்பா!
படித்துப் பின் வேலை
கிடைத்துப் பின்
கழித்துக் கட்டிய ஓர் நாளில்
கவலை மறக்க கடற்கரை சென்றேன்
ஆர்மோனியம் வாசிப்பவன்
துண்டு நிறைய காசு
அப்பாக்கள் எப்போதும் மாறுவதேயில்லை.
56 comments:
கவிதைகள் அற்புதம்.
நல்லா இருக்கு சார்... யதார்த்தம்..
அருமையான கவிதை..
சில பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதே இல்லை.
அருமை....
நீங்க சொன்னதா அல்லது உங்களுக்குச் சொன்னதா?? இஃகிஃகி!!
ஒன்னு ’நை’ இல்ல ’நா’ மாறுவதே இல்ல சார்...:))
அண்ணே என்ன கவுஜையிலே இறங்கிட்டீங்க
நல்லாருக்கு பாலா சார்.
முதல் கவிதையிலேயே தூள் கிளப்பிட்டீங்க......
முதல் மிக அருமை ஐயா...இரண்டும் யதார்த்தம்...
அப்பாக்கள் செய்வது நல்லதுக்குதான் என்றாலும்....மனசுன்னு ஒண்ணு இருக்கே..நம் அப்பா நம் மனதைப் பார்ப்பதில்லை. நாம் நம் பிள்ளைகளின் மனதை...
உங்க பையன் டைரியில இருந்து சுட்டுப் போட்டதா??
ஆகா நான் அப்போதே சொன்னேன். அப்பக்கள் எப்பவும் இப்படித்தான் எண்டு.
ம்ம் 2வது கவிதையை கண்டிக்கிறேன். படிப்பு என்பது உழைப்பு என்பதற்காகவா?? ஆனாலும் பிள்ளையின் ஆசைகளுக்கு அட்வைஸ் மட்டும் சொல்லியிருக்கலாம். நானும் கவலைப்பட்ட விடயம் நன்றி அப்பா.
இது உணர்ச்சிக்கவிதையதக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது நீங்கள் படிக்கிறீர்கள் போல....
ஃஃஃஃ
என் தந்தை கீறிய
பேனாக்களின் காயங்களால்
என் அம்மா எழுதிய
பிள்ளைக்கவிதை
நான்
அம்மா அப்பா பிள்ளை.....
என் ஒவ்வொரு உயரத்திலும்
என்னோடு இருந்து
தோள்கொடுப்பவன்
வாழ்க்கைப் பயணத்தில்
நீயும்
என் தந்தையே....
உறவுகளின்
நீளம் பார்க்கிறேன்
வானம் பாடி....
சூப்பர் தலைவரே.. முக்கியமா கவிதை ஈஸியா புரியுது :D
யதார்த்தம்..
ஆனா அப்பா நல்லதுக்கு தான் சொன்னார்ன்னு அப்பா /அம்மா ஆனதும் தெரியும் .
ரியலிஸ்டிக்..
எப்படிதான் இவ்வளவு சூப்பரா எழுதறாங்களோ தெரியல..
பாராட்ட வார்த்தையே இல்ல போங்க சார் !
மன்னிக்கவும் பாலா சார்..,
கவிதை எனப்படவில்லை.
சார் கலக்கல்....
கவிதை அருமை.
//பழமைபேசி Says:
March 3, 2010 1:22 AM
நீங்க சொன்னதா அல்லது உங்களுக்குச் சொன்னதா?? இஃகிஃகி!!//
மாப்பு... கொஞ்ச நாளாவே ஒரு மார்க்கமாத்தான் இருக்கீக!!!
//அப்பாக்கள் எப்போதும் மாறுவதேயில்லை//
ஆமாங்க
பீ கேர் ஃபுல்
(நான் என்னையச் சொன்னேன்)
:)
வீதி நாய்க்குட்டி, காதல் ரெண்டும் ஒண்ணாவே இருக்குல்ல... அதானாலத்தான் மாறமா இருந்திருப்பார்...
ஆர்மோனியம் வாசிக்கறவனுக்குத்தான தெரியும், அந்த காசுக்குப்படுற கஷ்டம்..
"என் காதல் வெறுத்து
கடன் வாங்கி கட்டி வைக்க
அவசரமாய் மாப்பிள்ளை தேடுகிறார்..
அப்பாக்கள் எப்போதும் மாறுவதேயில்லை"
அப்பாக்கள் எப்பவுமே இப்படித்தான் குழந்தைகள் நல்லா இருக்கனும்னு நினைச்சு அதுக்காகவே வாழ்கின்ற நிகழ்கால தெய்வங்கள் என்ன சில நேரம் அதீத அன்பால் நம்மை சோத்திது விடுவார்கள் தெய்வம் பக்தனை சோதிப்பது போல
என்றும் அன்புடன்
ஞானசேகர்
அப்பா அப்பாதான்.
அட, போட வைக்கிறது, இரண்டும்.
2-ம் அருமை..
இலகுவாக புரியும் கவிதைகள்தான்
எனக்கும் பிடித்தவை
அப்பாக்கள் மாறுவதேயில்லை. சரிதான்.
எல்லா அப்பாக்களும் அப்படி இல்லைன்னு நெனைக்கிறேன்.
நீங்க எப்படி?
//ROMEO Says:
March 3, 2010 7:48 AM
சூப்பர் தலைவரே.. முக்கியமா கவிதை ஈஸியா புரியுது :D//
எனக்கும்....சேம்....
அம்மாக்களும் குறைந்தவர்கள் இல்லை
மாறாத அப்பாக்கள்....
படிக்க ரொம்ப நெகிழ்வா இருக்கு...
எல்லா பெற்றோர்களும் பிள்ளைகளை, அவர்தம் விருப்பங்களை சில சமயமே நிறைவேற்றுகின்றனர்...
“தல” என்னா திடீர்னு கவுஜ??
அருமையான கவிதைகள். முதல் கவிதை மிகவும் யதார்தமாக உள்ளது
@@ நன்றிங்க இராமசாமி
@@ நன்றிம்மா
@@ நன்றிங்க ஸ்டார்ஜன்
@@ நன்றி ராஜா
@@ நன்றி பழமை. (ரெண்டுமில்லை)
@@ நன்றி ம்கும் தூக்க கலக்கத்துல மைனஸ் ஒன்னு ப்ளஸ் ஒன்னா:))
@@ தலைவர கவர் பண்ணதான்:))
@@ நன்றிங்க பா.ரா.
நன்றிங்க சித்ரா
@@ நன்றி புலிகேசி
@@ நன்றி ஸ்ரீராம்
@@ இது வேறயா:))
@@ நன்றி ரமேஸ்
@@நன்றி ரோமியோ
@@நன்றி டி.வி.ஆர். சார்
@@நன்றிங்க பத்மா! எல்லா நேரமும் ரெண்டும் சரியில்லை:)
@@நன்றி தலைவரே
@@ஆஹா. நன்றி யூர்கன்
@@நன்றி ப்ரதாப்
@நன்றி வாசுஜி
@@நன்றி கதிர்
@@அதான பார்த்தேன். அப்துல்லாவாவது மிரட்றதாவது:)
@@நன்றி பாலாசி தாத்தா:))
@நன்றி ஜீயெஸ்ஸார்
@@நன்றிங்க அக்பர்
@நன்றிங்க சைவம்:)
@@நன்றிங்க சிவாஜி
@@நன்றிங்க சிவசங்கர். முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
@@நன்றி சத்ரியன்:) பசங்கதான் சொல்லணும்
@@நன்றிங்க மங்கை முதல் வரவுக்கும் பின்னூட்டங்களுக்கும்
@@வாங்க கோபி. நன்றிங்க. ஏதோ ச்ச்ச்சும்மா ஒரு ட்ரை
@@நன்றி பைஜு
//சயன்ஸ் பிடிக்கவில்லை
சங்கீதம் படிக்க விருப்பமென்றேன்
கடற்கரையில் துண்டு விரித்து
பிழைக்கவா?
கணிணி படி என்றார் அப்பா!//
படிக்கும்போது அப்பாவின் ஞாபகம் வந்தாலும் தோன்றுகிறது, அவர் சொன்னது சரிதான்
இரண்டும் மிக அருமை.
நீங்க எப்படி?
ஹல்லோ எங்க போச்சு ஒங்க புதிய பதிவு?
இது உங்க பொண்ணு உங்களை நினைச்சு எழுதுனதோ :))
ஆகா அற்புதம்!
பின்குறிப்பு : இங்கே இடம்பெற்றுள்ள கவிதைகள் எங்கள் வானம்பாடி பாலா அண்ணனை குறிப்பிடுவன அல்ல! சரிதானே அண்ணே!
Subankan said...
// படிக்கும்போது அப்பாவின் ஞாபகம் வந்தாலும் தோன்றுகிறது, அவர் சொன்னது சரிதான்//
கவிதை சரியாகாதவன் பார்வையில் அல்லவா சுபாங்கன்:))
Venki said...
இரண்டும் மிக அருமை.//
நன்றி!
நீங்க எப்படி?//
வரும்போது சொல்கிறேனே!:)
padma said...
ஹல்லோ எங்க போச்சு ஒங்க புதிய பதிவு?//
முடக்கிட்டேன்:))
இப்படிக்கு நிஜாம்.., said...
ஆகா அற்புதம்!
பின்குறிப்பு : இங்கே இடம்பெற்றுள்ள கவிதைகள் எங்கள் வானம்பாடி பாலா அண்ணனை குறிப்பிடுவன அல்ல! சரிதானே அண்ணே!//
சரியாச் சொன்னீங்க நிஜாம். இது சுயசரிதையா என்ன:))
இந்த கவிதையை நான் வழிமொழிகிறேன்......
அப்பாக்கள் சொல்வதுதான் என்றைக்கும் சரியாக இருக்கும் பாலா சார்
கவிதைகள் ஜதார்த்தமாய் இருக்கின்றன. சுவைத்தேன்.
பாமரேனியன் மாப்பிள்ளை...ஆகா..
நல்லா இருக்கு
நல்லாயிருக்கு.
Post a Comment