திரு நர்சிம் அவர்கள் கிரிக்கட் பற்றிய தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார். (இப்பதான் ஓஞ்சது! ஆரம்பிச்சிட்டான்னு யாரோ முனகுறது கேக்குது!) . சின்ன வயதில் பள்ளியில் அறிமுகமான கிரிக்கட், வீதியில் பழகின கிரிக்கட், ராஜ்குமார் என்ற நண்பனைச் சார்ந்தது. காரணம் அவனிடம் மட்டுமே கிரிக்கட் பேட், டென்னிஸ் பால் இருந்தது. மேலதிகமாக அவன் வீட்டில் மட்டுமே வால்வ் ரேடியோவும் இருந்தது. புரியாத ஆங்கிலம்,மற்றும் பஹூத் சுந்தர் ஷாட் கமெண்டரியை விட ரன்களும், விக்கட்டுகளும் வெற்றி தோல்வியும் மட்டுமே முக்கியமானது.
அவன் சொல்லும் கிரிக்கட் தொகுப்பைக் கேட்காவிட்டால் அவன் விக்கட் போன பிறகு பேட்டும் பாலும் கிடைக்காது என்பதால், அவனுடைய கிரிக்கட் ஹீரோக்களே எங்களுக்கும் ஹீரோக்கள் என்ற ஆதிக்கத்துக்கும் அடிமையானோம். ஆனாலும், கண்டிராத ஒரு விளையாட்டின் வீரர்களின் பெயர்கள், அவர்களின் சிறப்பு (அது என்னவென்றே தெரியாமல்) குறித்த ஓர் இண்டர்நேஷனல் நாலட்ஜூக்கு வித்திட்டவன் அவன்.
விளையாடக் கிடைத்த பள்ளி மைதானம் (ரயில்வேயில் கட்டப்படாமல் காலியாக விட்டிருந்த பள்ளியின் அருகாமையில் இருந்த இடம்) பல டீம்களால் கைப்பற்றப்படும். முளையடித்த முருங்கை ஸ்டம்புகள் கூட்டத்துக்கு ஏற்ப விக்கட் நீளத்தைக் குறைக்கும். யாரோ அடித்த பந்தை மற்ற டீம் ஆள் பிடிப்பதால் உண்டாகும் மோதல்களும், காயங்களும் வெகு சுவாரசியம்.
ஆட்டத்தை விட வெகுவாக ரசித்த விடயம், ஒன்று உண்டென்றால் நாலுகால் ரசிகர்கள். சூழ இருந்தவை ரயில்வே குவார்ட்டர்ஸ்கள். அதிலும் எஞ்சின் ட்ரைவர்களும், வொர்க்ஷாப் சூப்பர்வைசர்களும் ஆங்கிலோ இந்தியர்கள் என்பதால் பெரும்பாலும் நாய் வளர்ப்பவர்கள். ஆடுபவர்களில் அவர்கள் வாரிசுகளும் இருப்பார்கள் என்பதால் இந்த ரசிகர்களை தடுக்க முடியாது.
சமயத்தில் இவர்களும் ஆட்டத்தில் பங்கேற்பதுதான் பெரிய கூத்து. பவுண்டரிக்கு (அப்படி என்று ஒன்று இருந்தால்தானே?) போக வேண்டிய பந்தைக் கவ்விக் கொண்டு ஓடுவதும், பந்தைத் தடுக்க ஓடுபவனை துரத்துவதும் அதனைத் துரத்தும் அதன் எஜமானனும் என்று சிரித்து மாளாது.
நேரிலும் பாராமல், டிவியும் இல்லாத காலத்தில் சக்கரை தெரியாதா தித்திக்குமே மாதிரி அறிந்தவைதான் கூகிள், லெக்ஸ்பின், ஆஃப்ஸ்பின், ஃபுல் டாஸ், பவுன்சர், எட்ஜ் எல்லாம். ஆனால் இந்தக் காலத்து சிறுவர்களுக்கு கிடைக்காத ஒரு அனுபவம், செண்ட்ரல் ஸ்டேஷனில் டிவி வரிசையாக வைக்கப்பட்டு, ட்ரெயின் புறப்படும் நேரம் வந்து சேரும் நேரம் போடாத தருணங்களில் ஒளிபரப்பப்பட்ட உலக கோப்பை மற்றும் ஒர்ல்ட் சீரீஸ் கப் லைவ் மேட்சுகளில் முதல் முறையாக பார்த்த அனுபவம்.
உலகின் மிகச்சிறந்த கமெண்டேட்டர்களான போர்ட்டர்கள், கூலிக்கும் போகாமல் மேட்ச் பார்த்த படி சென்னை பாஷை கெட்ட வார்த்தையில் செய்த வருணனைகள், ஓரளவு ஸ்பின் என்றால் என்ன, கட் ஷாட் என்பது என்ன, ஸ்கொயர்லெக், மிட் ஆஃப், மிட் ஆன் என்பவை போன்ற விவரணைகளை அறியச் செய்தன.
ஆனாலும் எனக்குப் பிடித்த கிரிக்கட்டரின் சாதனையைச் சொல்லாமல் விட முடியாது. ஆடியது லெதர்பாலில் ஒரு பந்து. கண்ணை மூடிக்கொண்டு விளாசியதில் சரியாக மட்டையின் நடுவில் பட்டு மைதானம் தாண்டி பறந்தது. கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்க, பெரிய அலுமினிய டேக்ஸாவில் பயறு விற்றுத் திரும்பிய வியாபாரியின் காலி (நல்ல காலம்) பாத்திரத்தைத் தாக்கி விழுத்தி சொட்டையாக்க, அவன் அதுதான் சாக்கு என புது டேக்ஸாவுக்கு ஆட்டையப் போடப் பார்த்தான். கும்பலாக மிரட்டி, பேட் பிடியால் சொட்டை நிமிர்த்திக் கொடுத்த ஒரே பேட்ஸ்மேன். அதற்குள் இருட்டிவிட இதுவரை 6 நாட் அவுட்டில் இருக்கும் வானம்பாடிகள்.ஹெ ஹெ.
சரி சரி. கிரிக்கட் பத்தி சொல்ல வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.
1. பிடித்த கிரிக்கட் வீரர்கள்: சோபர்ஸ், க்ளைவ் லாயிட், கவாஸ்கர், அஸாருதீன்
2. பிடிக்காத கிரிக்கட் வீரர்:காம்ப்ளி
3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர்: ஆண்டி ராபர்ட்ஸ்,கார்னர்,போதம், இம்ரான் கான்

4. பிடிக்காத வேகப் பந்து வீச்சாளர்: யாருமில்லை (ஏன் பிடிக்கலைன்னா சொல்ல தெரிய வாணாமா?)
5. பிடித்த சுழல் பந்து வீச்சாளர்: சந்திரசேகர், பிரசன்னா, ஷேன் வார்ன்
6. பிடிக்காத சுழல் பந்து வீச்சாளர்: யாருமில்லை (அதே ரீசன் தான்)
7. பிடித்த வலது கைத் துடுப்பாட்ட வீரர்: கவாஸ்கர்
8. பிடிக்காத வலது கைத் துடுப்பாட்டக் காரர்: யாருமில்லை
9. பிடித்த இடது கைத் துடுப்பாட்ட வீரர்: காரி சோபர்ஸ், லாயிட்
10. பிடிக்காத இடது கைத் துடுப்பாட்ட வீரர்: தெரியலை.
11. பிடித்த தடுப்பாளர்: ஜாண்டி ரோட்ஸ்
12. வர்ணனையாளர்: ராமமூர்த்தி
13. அம்பயர்: டிக்கி பேர்ட்
அம்புட்டுதான். யாரையாவது கூப்பிட்டால் ஸ்டம்பால் அடிவிழும் என்பதால்.
சுபம்.
12. வர்ணனையாளர்: ராமமூர்த்தி
13. அம்பயர்: டிக்கி பேர்ட்
அம்புட்டுதான். யாரையாவது கூப்பிட்டால் ஸ்டம்பால் அடிவிழும் என்பதால்.
சுபம்.
45 comments:
//யாரையாவது கூப்பிட்டால் ஸ்டம்பால் அடிவிழும் என்பதால்.
சுபம்//
:))
present ayya...
கிரிக்கெட்டில் எப்போதுமே விருப்பம் கிடையாது.மன்னிக்கவும்.
பாய்ந்து வரும் பந்தை எதிர்த்து மட்டையால் அடிக்க வேண்டும் அல்லது பிடிக்க வேண்டும்(கேட்ச்) அல்லது தடுக்க வேண்டும் அல்லது
அதன் பின்னால் ஓட வேண்டும். இது எல்லாம் உடல் வளத்துக்கு தீங்கானது என்று மருத்துவர் சொல்லியிருப்பதால் வெறும் புக் கிரிக்கெட்டோடு நிறுத்திவிட்டேன்.
/அம்புட்டுதான். யாரையாவது கூப்பிட்டால் ஸ்டம்பால் அடிவிழும் என்பதால்.
சுபம்.//
உண்மையான வார்த்தைகள் .
அந்தக் கால ஆட்களைப் படிக்கும் பொழுது நன்றாக இருக்கிறது. காணொளிகள் நன்று. ராபர்ட்ஸ் பந்து வீசும் பொழுது எத்தனை பேர் நிற்கிறார் வலது புறத்தில் :)
எல்லாம் ஒரு காலம்..
இன்னும் கிரிக்கெட் தொடர்ந்து கிட்டு இருக்கா? நீங்க கொடுத்துள்ள முன்னுரை அருமை.
கிரிக்கெட்டா..!!!! கிரவுண்ட் காலியா இருக்கும்போதே நெனச்சேன்... வெயில வீணாக்கியிருக்கமாட்டீங்கன்னு...
எல்லாருமே பேரன் பேத்தி எடுத்தவங்களால்ல இருக்காங்க....
அம்புட்டுதான். யாரையாவது கூப்பிட்டால் ஸ்டம்பால் அடிவிழும் என்பதால்.
சுபம்.//
நீங்க ரெம்ப நல்லவரு அண்ணே
குட் ஷாட் !
கிரிக்கெட்ல மட்டும் இந்த மாதிரி விருப்ப ஆட்டக்காரர்களை ஒண்ணு ரெண்டுன்னு கட்டுப் படுத்திச் சொல்றது ரொம்பக் கஷ்டம்... விருப்ப லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.
ஆப் பதிவு..,
நான் இப்ப காய்வலி படிச்சிட்டு வாரேன்.தொடருக்கு மட்டும் இந்த விலக்கு.
ஷேன் வார்னையும் காம்ப்ளியையும் தவிர மத்த எல்லாரும் நான் பொறக்குறதுக்கு முன்னாடியே ரிட்டயர்ட் ஆகிட்டாங்க. :))
ஆரோ கபில்தேவ் ரசிகர் போலருக்கு.. மைனஸ் ஓட்டு போட்டுட்டுப் போயிருக்காரு.. :))
"கிரிக்கட் (தொடராப் பதிவு)"//
ஓஹோ இப்படி வேற ஒன்னு இருக்கா??
அருமை சார்..:))
எச்க்யூஸ் me.. எந்த நூற்றாண்டு சார்..நீங்க.. ரொம்ப பழசா இருக்கே...
திரு நர்சிம்.. ஆரம்பமே ஓவரா இருக்கே...நீங்க என்ன ரொம்ப சின்னவரா..
நல்ல பதிவு... மிகவும் ரசித்தேன்...
:-)))
சார் வீடியோ எல்லாம் சூப்பரு....
வினோத்காம்ளி உங்களுக்கு பிடிக்காததால தான் சீக்கிரம் துரத்திட்டாங்களோ....
நன்றி..அற்புதப் பதிவு.
கிரிக்கெட் க்ளிப்பிங்ஸ் அருமை..ஒருவரைக் கூட பிடிக்காது என சொல்லவில்லையே பாலாசார் ..அவ்வளவு பிடிக்குமா கிரிக்கெட்டை.. பதிவு அருமை
இந்த இடுகை கிரிக்கெட் மீதான உங்களின் தற்போதைய பார்வையையும் வெளிப்படுத்துவதாகவே நான் உணர்கிறேன்.
@@ நன்றி சுபாங்கன்
@@ நன்றி சார்
@@ அதுக்கெதுக்கு ஸ்ரீ மன்னிப்பெல்லாம்:). நன்றி
@@ :)). நன்றி விசா
@@ நன்றி நண்டு
ச.செந்தில்வேலன் said...
அந்தக் கால ஆட்களைப் படிக்கும் பொழுது நன்றாக இருக்கிறது. காணொளிகள் நன்று. ராபர்ட்ஸ் பந்து வீசும் பொழுது எத்தனை பேர் நிற்கிறார் வலது புறத்தில் :)
எல்லாம் ஒரு காலம்..//
நன்றி செந்தில். அடிக்க முடியாதுன்னு எவ்வளவு கான்ஃபிடன்ஸ் இருக்கணும்:)
Chitra said...
இன்னும் கிரிக்கெட் தொடர்ந்து கிட்டு இருக்கா? நீங்க கொடுத்துள்ள முன்னுரை அருமை.//
நன்றிங்க சித்ரா:))
க.பாலாசி said...
கிரிக்கெட்டா..!!!! கிரவுண்ட் காலியா இருக்கும்போதே நெனச்சேன்... வெயில வீணாக்கியிருக்கமாட்டீங்கன்னு...
எல்லாருமே பேரன் பேத்தி எடுத்தவங்களால்ல இருக்காங்க....//
ம்கும். இந்த லொல்லுக்கு ஒன்னும் குறைச்சலில்ல.
நசரேயன் said...
அம்புட்டுதான். யாரையாவது கூப்பிட்டால் ஸ்டம்பால் அடிவிழும் என்பதால்.
சுபம்.//
நீங்க ரெம்ப நல்லவரு அண்ணே//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ட்ட்ட்ட்ட்டச் பண்ணிட்டீங்க அண்ணாச்சி:))
மணிஜீ...... said...
குட் ஷாட் !/
:)) நன்றி மணிஜி
ஸ்ரீராம். said...
கிரிக்கெட்ல மட்டும் இந்த மாதிரி விருப்ப ஆட்டக்காரர்களை ஒண்ணு ரெண்டுன்னு கட்டுப் படுத்திச் சொல்றது ரொம்பக் கஷ்டம்... விருப்ப லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்./
வாஸ்தவம்:)
SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஆப் பதிவு..,/
வாங்க டாக்டர்:))
ராஜ நடராஜன் said...
நான் இப்ப காய்வலி படிச்சிட்டு வாரேன்.தொடருக்கு மட்டும் இந்த விலக்கு./
சரிங்ணா:))
முகிலன் said...
ஷேன் வார்னையும் காம்ப்ளியையும் தவிர மத்த எல்லாரும் நான் பொறக்குறதுக்கு முன்னாடியே ரிட்டயர்ட் ஆகிட்டாங்க. :))//
அத விட 1985ல உங்களுக்கு கிரிக்கட் இண்ட்ரஸ்ட் வர முன்னாடியேன்னா சரியா இருக்கும்:)
முகிலன் said...
ஆரோ கபில்தேவ் ரசிகர் போலருக்கு.. மைனஸ் ஓட்டு போட்டுட்டுப் போயிருக்காரு.. :))/
ம்கும். உங்களுக்கும்தான் வஞ்சனயில்லாம போட்டு போயிருக்குறாரு அன்பன் வண்ணன்:))
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
"கிரிக்கட் (தொடராப் பதிவு)"//
ஓஹோ இப்படி வேற ஒன்னு இருக்கா??/
ஹி ஹி. யாராவது ஆரம்பிக்கணுமாயில்லையா. நன்றி ஷங்கர்
D.R.Ashok said...
எச்க்யூஸ் me.. எந்த நூற்றாண்டு சார்..நீங்க.. ரொம்ப பழசா இருக்கே...
திரு நர்சிம்.. ஆரம்பமே ஓவரா இருக்கே...நீங்க என்ன ரொம்ப சின்னவரா..
நல்ல பதிவு... மிகவும் ரசித்தேன்...//
இந்த லொல்லுதானே:)). நன்றி அசோக்.
Kanchana Radhakrishnan said...
:-)))//
:)))
Sangkavi said...
சார் வீடியோ எல்லாம் சூப்பரு....
வினோத்காம்ளி உங்களுக்கு பிடிக்காததால தான் சீக்கிரம் துரத்திட்டாங்களோ....//
அய்யோ! இதென்ன வம்பு:))
நர்சிம் said...
நன்றி..அற்புதப் பதிவு./
நன்றி நர்சிம்.
thenammailakshmanan said...
கிரிக்கெட் க்ளிப்பிங்ஸ் அருமை..ஒருவரைக் கூட பிடிக்காது என சொல்லவில்லையே பாலாசார் ..அவ்வளவு பிடிக்குமா கிரிக்கெட்டை.. பதிவு அருமை/
கொஞ்ச வருஷம் இந்த பைத்தியம் இருந்திச்சி:))
ஜீயெஸ்கே said...
இந்த இடுகை கிரிக்கெட் மீதான உங்களின் தற்போதைய பார்வையையும் வெளிப்படுத்துவதாகவே நான் உணர்கிறேன்./
சரிதான்:)
நாங்கெல்லாம் கிரிக்கெட்டில இறங்கினா அவளவுதான் !
மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !
தலைவரே கலக்கலான பதிவு.
காற்றுள்ள போதே தூற்றிகொள் என்பதற்கிணங்க சமயோகித புத்திண்ணா உங்களுக்கு.கிரிக்கெட் பத்தி தெரியும் ரசிப்பேன் ஆனா உள்ள புகுந்து அலசி ஆராயும் ஆர்வம் இல்லை. எனக்கு எப்பவுமே பார்வையாளனா இருக்கிறதை விடவும் ஆட்டகாரனா இருக்கிறது தான் பிடிக்கும் (ப்ளாக் என்கிற ஆடுகளத்தில் எழுத்து என்னும் மட்டை கொண்டு சிக்ஸர் பல விளாசும் வாசு பாலாஜி நீவிர் வாழ்க பல்லாண்டு! வாழ்க நின் கொடை! வாழ்க நின் கொற்றம்! வாழ்க நின் புகழ்! என்றும் வாழிய வாழியவே) பிகு: அப்படியே உங்கள் சிரசின் மீது மகுடம் இருப்பதாக நினைத்தபடியே படிக்கவும்.
10 டீம் ஒரே கிரெளண்டில் விளையாடும் போது, வேற டீம் அடித்த பந்தை மற்ற டீம் துரத்தும் தமாசு நன்றாக இருக்கும். ரயிலடியே கிரிக்கெட் விளையாட சிறந்த இடம்.
Post a Comment