Friday, March 26, 2010

கலாய்க்கப்போவது யாரு லாஸ்ட்

ஓஜாரே ஒஜா. ரே..ரே..ஓஜா.

பொன்னாத்தா; வெல்கம் பேக் டு கலாய்க்கப் போவது யாரு. நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்ம செறப்பு விருந்தினர கொஞ்சம் கலாய்க்கலாம். என்ன சார்? நிகழ்ச்சிய பத்தி என்ன நினைக்கிறீங்க?

அதுசரி: wot da bloody hell. யாருங்க தயாரிப்பாளர்? இப்படி சூட்டுல பொறிச்ச மீன் மாதிரி உக்கார வச்சிருக்கீங்க. அட்லீஸ்ட் ஒரு கோல்ட் பீராவது தரணும்னு தெரியாது?

பொன்னாத்தா: கருப்பு சாம்பார் ஒரு க்ளாஸ் குடிக்கிறீங்களா ராசா?

அதுசரி: அதுக்கு நான் விஷமே குடிச்சிப்பேன்.

பொன்னாத்தா:அது சரி அதுசரி. வரும்போதே பார்த்தேன். அந்த ஜோல்னா பை. வந்தும் அத இறக்கி வைக்காம அப்புடியே வெச்சிருக்கீங்களே. அதுக்குள்ள என்ன இருக்கு?

அதுசரி:  :O)))

பொன்னாத்தா: யோவ்! கேட்டா பதில் சொல்லுமைய்யா. சின்னப்புள்ள மாதிரி பீப்பீ ஊதிக்கிட்டு.

அதுசரி: அது சொல்ல முடியாது. தாளம் எப்படி சொல்லுதோ அப்படி. நீங்க இந்த எழவ முடியுங்க மேடம். இப்பவே என் ஷூ கழல ஆரம்பிக்குது:))

பொன்னாத்தா: அடுத்ததாக கலாய்க்க போறவரு அமெரிக்கால ஆணிபுடுங்க போனாலும், மதுரையில மல்லாட்ட வறுத்தவரு, பாண்டியரு..தினேஷ்..

ஓஜாரே ஓஜா..ரே..ரே..ஓஜா..

பொன்னாத்தா: வாங்க தினேஷ். இன்னைக்கு என்ன கான்ஸெப்ட் பண்ணப்போறீங்க.

தினேஷ்: மிரள மிரள பார்த்தபடி வந்து வந்து..தங்கமணிகாமெடிங்க.

பொன்னாத்தா: என்னது? தங்கமணி காமெடியா?

தினேஷ்: ஏங்க ஏங்க கத்துறீங்க. ஆமாங்க.

பொன்னாத்தா: சரி அசத்துங்க தினேஷ்.

தினேஷ்: முந்தின எபிசோட்ல தங்கமணி ரெயின்செக்ல ஒரு போன் பார்த்தாங்கன்னு சொன்னென்லங்க. அப்புறம் அத பத்தி பேச்சே இல்ல. நானும் மறந்துட்டான்னு எடுத்த வெச்ச கேஷ ஷேர்மார்கட்ல போட்டுட்டு கமுக்கமா இருந்தன். ஒரு நாள் ஆஃபீஸ்ல வழக்கத்த விட அதிகமா ஆணிபுடுங்க வேண்டியிருந்திச்சி.

(வா.பா:ம்கும். பிரபா கூட தொடர் இடுகை பத்தி சாட் பண்ணிட்டு அலம்பல பாரு)

தினேஷ்: அவர குறுக்க பேசாம இருக்க சொல்லுங்க மேடம்.

பொன்னாத்தா: அல்லோ! அப்புறம் புடிச்சிட்டிருக்க ஒன்னுமிருக்காது.

வா.பா: நீங்க அளங்க ராசா.

தினேஷ்: வீடு போய் கராஜ்ல கார் பார்க் பண்ணும் போதே உருளைக்கிழங்கு பொரியல் வாசன தூக்குச்சு. ஒரே ஓட்டமா வீட்டுக்கு ஓடினா கிச்சன்ல தங்கமணி சாம்பார் வெங்காயம் உரிச்சிக்கிட்டிருந்தாங்க. கண்ணுல தண்ணி ஆறா ஊத்துது. எனக்கு புடிக்குமேன்னு எவ்வளவு கஷ்டம்னு உருகிட்டேன். அருமையான சாம்பார் வெங்காயம் சாம்பார்

அதுசரி: கருப்பா இருந்திச்சா? :O))))

பொன்னாத்தா: யோவ்!

தினேஷ்: உருளைக்கிழங்கு பொறியல், சிப்ஸ். வளைச்சி வளைச்சி கட்டிட்டு, பதிவு படிக்கலாம்னு பி.சி.ல உக்காந்தங்க. தங்கமணி வந்தாங்க. என்னங்க வேலை அதிகமா இன்னைக்கின்னாங்க. க்க்க்க்க்கொஞ்சம்..லைட்டான்னேன் உசாரா. இல்ல. கழுத்து புடிச்சா மாதிரி விரைப்பா வெச்சிருக்கீங்களேன்னாங்க.

சத்தியமா எனக்கு அப்புடி இல்லவே இல்ல. தங்கமணி சொன்னப்புறம் இல்லைன்னு சொல்ல முடியுங்களா? அட! ஆமாம்னேன். மெதுவா ஏங்க அந்த ரெயின்செக் கவனமிருக்கான்னாங்க.

சாப்புட்ட சாம்பார் சாதம் மெதுவா கலக்க ஆரம்பிச்சது. இருக்கு சொல்லும்மா. வாங்கிடலாமான்னேன்.

இல்லைங்க. அதுக்கு பதில் அந்த ரெயின்செக் உங்களுக்கு ட்ரேன்ஸ்ஃபர் பண்ணிடுரேன்னாங்க.

எனக்கு புரியாம, என்னம்மா சொல்றீங்கன்னேன்.

இல்லைங்க. ஃபோனுக்கு எதுக்கு காசு வேஸ்ட்.குடுகுடுப்பை வேற அது தண்டமுங்கறாரு. அதுக்கு பதில் அந்த வேல்யூக்கு நீங்க ரெய்ன்செக் ஆஃபர் பண்ணுங்கன்னாங்க.

நம்ம ஊருன்னா அது புடவையாகவோ, சினிமாவாகவோ, வெளிய டின்னராகவோ உருமாறுமே. இங்க அதுக்கு சான்ஸ் இல்லையேன்னு கலக்கம் அதிகமாச்சி.

அவங்களே சொன்னாங்க. இல்லங்க! எனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா ரெயின்செக்னு சொல்லுவேனாம். நீங்க பண்ணுவீங்களாம். நீங்களே கணக்கு வச்சிக்கோங்க. அந்த வேல்யூ கழியற வரைக்கும் பண்ணா போதும்னாங்க.

அப்பாடா. ஷேர் ஊத்திக்கினா கூட பதில் சொல்ல வேணாம்னு சரின்னுட்டேன். நான் தூங்கப்போறேன். நீங்க முகிலன் கூட விளையாடிட்டு தூங்க வச்சிடுறீங்களான்னாங்க. இருங்கம்மா. ப்ளாக் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வரேன்னேன். ரெய்ன்செக்னு போய்ட்டாங்க.

இப்போ ஐ.பி.எல் மேச் பாக்குறப்போ ஒரு காஃபின்னா கூட ரெயின்செக்னு சொல்றாமாதிரியே பழகிப்போச்சுங்க. நானே போய் போட்டுக்குறேன்.

அதவிட கொடுமைங்க. அந்த வாண்டு முகிலனுக்கு தெரிஞ்சி போச்சு ட்ரிக். ஆஃபிசுக்கு ஃபோன் பண்ணி, டாட்...கக்கா வருது ரெயின்செக்னு ஃபோன வெச்சிட்டான். அடிச்சி புடிச்சி ஓடிவரதா போச்சி.

பொன்னாத்தா: அடப்பாவமே. கணக்கு எழுதலையா தினேஷ்

தினேஷ்: எழுதி நீட்டும்போதெல்லாம் குறுக்கால கோடு கிழிச்சி 0/100னு போட்டு குடுத்துடுறாங்க. 

பொன்னாத்தா: வா.பா. சார், கேபிள்ஜி நீங்க என்ன சொல்றீங்க. பெர்ஃபார்மன்ஸ் எப்புடி இருந்திச்சி?

வா.பா. கேபிள் (ஒரே குரலில்): ரெயின்செக்

பொன்னாத்தா: செறப்பு! நீங்க சொல்லுங்கன்னா ஜோல்னாப் பைக்குள்ள என்னத்தையா பார்க்குறீரு.

அதுசரி: சொல்றது என்ன இருக்கு. இந்த பாண்டியருங்க இப்புடித்தான். சோழன் குடுமி இப்புடி சும்மா ஆடுமா? எப்புடீஈஈஈ

ஓஜாரே ஓஜா..ரே..ரே ஓஜா..

வணக்கம் வந்தனம் அடுத்தா நாம நிகழ்ச்சியின் கடைசி பார்ட்டுக்கு வந்திருக்கோம். அடுத்ததா கலாய்க்க வரவர் யாருன்னு பார்க்கலாம். அட நம்ம கதிர் ஈரோடு. வாங்க கதிர். நீங்க என்ன பண்ணி அசத்த போறிங்க.

கதிர்:ம்கும். அசந்து போய் வந்திருக்கேன். அசத்தவேற செய்யணுமாக்கு. நானும் அதே தங்கமணி கான்ஸப்ட்தான்.

பொன்னாத்தா: அட! ரொம்ப தைரியமா சொல்றீங்க?

கதிர்: நாமதான் வீட்டுல டிஷ் கேபிள் எல்லாம் கட்பண்ணிட்டமுள்ள. ஹி ஹி..

பொன்னாத்தா: சரி சரி அசத்துங்க.

கதிர்: சாதாரணமா எல்லா ஊட்டுலயும் தங்கமணி கோவமா இருந்தா பேசமாட்டாங்க. ஆனா சட்டி சாமான்லாம் சொட்டயாவும். ரங்கமணிங்க உசாராய்டுவாங்க. நம்ம தங்கமணி சத்தமே போடமாட்டாங்க.

தலவலிக்குதும்மா காஃபி ப்ளீஸ்னா, பதிலே வராது. கொஞ்சம் மெதுவா காஃபி கேட்டனம்மான்னா கண்ணாலயே கதவு பக்கம் பாக்குமுங்க. மெதுவா எழுந்து போய் பார்த்தா, பால் தீந்து போச்சி. வாங்கிட்டு வந்தா காஃபின்னு எழுதி ஒட்டியிருக்கும். பல நேரங்கள்ள இந்த மவுனத்தால கண்ணு கலங்கிடும்.

பொன்னாத்தா: ஆஹா. இப்பதான் புரியுது கசியும் மௌனம்னா என்னான்னு. ரைட்டு:))

கதிர்: அட சும்மாருங்காத்தா. ஒரு நாள் ராத்திரி வேலையிருந்திச்சி. லேட்டாதான் தூங்கப் போனேன். எவ்வளவு லேட்டானாலும் காலையில 8 மணிக்கெல்லாம் ஆபீஸ்.

வா.பா: பின்ன! ஊட்டுல உக்காந்து காலைல எட்டுமணிக்கு தமிழ்மணம், தமிழிஷ்னு குத்திட்டு பின்னூட்டம் போடமுடியுமாக்கு

கதிர்: அட நீங்க வேறங்ணா. குளிக்கலாம்னு பாத்ரூம்ல போனனுங். விக்ஸ் மாத்திர சைசுக்கு சோப்பு இருந்திச்சி. முசுக்குன்னு ஏம்மா சோப்பு இல்லன்னு சொல்லத் தெரியாதான்னேன். ம்யூட் போட்றுச்சுங்க. விறுவிறுன்னு போய் சட்ட பாக்கட்டுல இருந்து ஒரு கடுதாசி, பேண்ட் பாக்கட்டுல மூனு, லேப்டாப் கவர்ல அஞ்சு, பர்ஸ்ல ரெண்டு, கதவு பின்னாடி, கார் ஸ்டீரிங்க்லன்னு ஒரு வண்டி குப்பைய சேர்த்து போட்டு மொகத்த ஒரு வெட்டு வெட்டி டிவி பொட்டிய பார்த்துச்சி.

மெதுவா ஒன்னொன்னா பார்த்தா, ஏங்க சோப்பு வாங்கணும்னு எழுதி வச்சிருக்கு. நம்ம கெரகம் அது கைக்கு சிக்கல. சரி டி.வி.பொட்டியாண்ட என்னான்னு பார்த்தா எனக்கு தலவலிக்குது. வெளிய சாப்டுக்குங்கன்னு எழுதியிருக்கு. உள்குத்து புரியாம தெம்பா போனா கடையெல்லாம் சாத்தியிருக்கு. அப்புறம்தான் கவனம் வந்திச்சி. டிவியில நாளைக்கு பந்த்னு செய்தி கேட்டது.

என்னா குசும்பு பாருங்க. சாப்பாட்டுக்காக கொங்குமன்னன் மானமிழப்பதான்னு வீம்பா உக்காந்து தண்ணிய குடிச்சிட்டு 6 மணிக்கு எப்புடியும் கடைய தொறந்துடுவாங்க. ஒரு கட்டு கட்டிக்கலாம்னு இருந்தேன். சரி கடைய தொறந்து சமைக்க வேணாமா. எட்டு மணிக்கா சாப்டுக்கலாம்னு, வேலையில முழுகிட்டேன். மணி பார்த்தா 11.

இனி இவ்வளவுதான்னு வீட்டுக்கு போய் பாப்பாக்கு வெச்சிருந்த பிஸ்கட்ட ஆட்டய போடலாம்னு பார்த்தா அது தூங்காம டிவி பாக்கலாமாங்குது. பசிமயக்கத்துல அப்புடியே தூங்கிப் போய், காலையில எழுந்து குளிச்சிட்டு (சோப்பு வாங்கி வச்சிட்டாங்க), சமயகட்டுல பார்க்குறேன்.

இட்டிலி சட்டில இருந்து இட்டிலிய எறக்குனாங்க. அந்த புகை நடுவில அவங்க, கையில இட்டிலி புகைய புகைய வேணும்னே வெறுப்பேத்த ஸ்லோ மோஷன்ல வந்தாலும் எனக்கு பாரதிராஜா படத்துல கனவு சீன் கவனம் வந்துச்சு. ஒரு ஈடு இட்டிலியும் பறக்க பறக்க தின்னுட்டு ஓடியாந்து எழுதுனது தான் அந்தக் கவிதை. சாயந்திரம் போய் இது உனக்குதான் டெடிகேட் பண்ணேன்னு சொல்லி ம்யூட் எடுத்து வுட்டம்ள..

கூட்டத்தில் இருந்து பாலாசி: ஏண்ணே! இப்புடி ஏதோ பண்ணி ராச்சோத்துக்கு சிங்கியடிச்சதாலதான் 11 மணிக்கு மேல கவிதை எழுதுனீங்களோ..

(அரங்கம் முழுதும் வெடிச்சிரிப்பு)

பொன்னாத்தா: (சிரிப்படக்க முடியாமால் ஏய் நீ சொல்லேன். ஏய் நீ சொல்லென்னு வா.பாக்கும் கேபிளுக்கும் கை நீட்டுது. அவங்களும் கண்ணீர் வழிய சிரித்தபடி முடியாதுன்னு கையாட்டுறாங்க). கிக்கீக்கீ.. செறப்பு.. கிக்கீ.. அம்மா..கீக்கீ..முடியலா..நீராச்சும்..

அதுசரி: (எழுந்து வந்து பைக்குள் கைவிட்டு ஒரு எவர்சில்வர் தட்டு எடுத்து பரிசளிக்கிறார்). இன்றைய நிகழ்ச்சியில் ஒரு சோகத்தையும் காமெடியாக்கிய கதிருக்கு அன்புப் பரிசு. ஒரு ஒருத்தரும் பெர்ஃபார்ம் பண்ணப்புறம் இந்த தட்டப் பார்த்தேன். வேதாளம் உதட்ட பிதுக்கிச்சி. கதிரோட பெர்ஃபார்மன்ஸ் முடிஞ்சதும் பார்த்தா எவர்சில்வர் தட்டுல ஆவி கசிஞ்சிருச்சி.  இன்றைய கலக்கப் போவது யாரு ஹீரோ கதிர் ஈரோடு..

ஓஜாரே ஓஜா...ரே...ரே ஓஜா...


48 comments:

Ramesh said...

நான் தான் பெஸ்ட்

Chitra said...

இன்றைய நிகழ்ச்சியில் ஒரு சோகத்தையும் காமெடியாக்கிய கதிருக்கு அன்புப் பரிசு.

..ha,ha,ha,ha,ha....

பத்மா said...

கலக்கிட்டு போனது யாரு வானம்பாடிகள் தான் .ஒஜாரே ஒஜா .

பிரபாகர் said...

கதிர்!

இன்னிக்கு மாட்டினது நீங்களா! வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

பிரபாகர் said...

தினேஷ்,

இனிமே ஜாக்கிரதையா இருக்கோனும் சாமி, அசந்தா டரியலக்கிடறாங்க!

பிரபாகர்.

பிரபாகர் said...

அய்யா,

அசத்தல், கலக்கல்...

கலாய்த்தது அய்யா நீங்கள், கலாய்க்கப்பட்டது பாவப்பட்ட நாங்கள்...

மூன்று எபிஸோடும் அருமை....

பிரபாகர்.

settaikkaran said...

இது நம்பர் ஒன் நிகழ்ச்சிதான்! சந்தேகமில்லை! கலக்கல்!:-)))

Anonymous said...

முன்னுக்கு வந்த ரமேசுக்கு வெண்கல கிண்ணம் ஒன்ன்டு குடுங்க




இந்த ப்ரோகரம் உங்க வீட்டு டி.வி லய போகுது

T.V.ராதாகிருஷ்ணன் said...

ha..ha..haa

Paleo God said...

அடேங்கப்பா ...
:))

விக்ஸ் மிட்டாய் சோப்பு - டாப்பு சார்.:)

நேசமித்ரன் said...

கொஞ்ச நேரம் சிரிச்சேன் வாய்விட்டு

நன்றி வ. பா சார்

க.பாலாசி said...

ஆகா.. இன்னைக்கு கும்முறதுக்கு நேரமில்லையே... ரைட்டு நாளைக்கு வர்ரேன்...

க.பாலாசி said...

//பொன்னாத்தா: கருப்பு சாம்பார் ஒரு க்ளாஸ் குடிக்கிறீங்களா ராசா?//

எனக்கு.. எனக்கு...

க.பாலாசி said...

//பொன்னாத்தா: யோவ்! கேட்டா பதில் சொல்லுமைய்யா. சின்னப்புள்ள மாதிரி பீப்பீ ஊதிக்கிட்டு.//

அடியாத்தீ...... இந்தம்மா வெவகாரமா பேசும்போலருக்கே....

க.பாலாசி said...

//பொன்னாத்தா: அடுத்ததாக கலாய்க்க போறவரு அமெரிக்கால ஆணிபுடுங்க போனாலும், மதுரையில மல்லாட்ட வறுத்தவரு, பாண்டியரு..தினேஷ்..//

நேத்தியே எனக்குத்தெரியும்... இன்னைக்கு இவருக்குதான்னு... மாட்டினீங்களா!!!!!

க.பாலாசி said...

//கதிர்:ம்கும். அசந்து போய் வந்திருக்கேன். அசத்தவேற செய்யணுமாக்கு. நானும் அதே தங்கமணி கான்ஸப்ட்தான்.//

அதானே... எங்கடா எங்க சிங்கத்த காணமேன்னு பாத்தேன்.... வாங்க ராசா...வாங்க....

Unknown said...

//அதுசரி: அது சொல்ல முடியாது. தாளம் எப்படி சொல்லுதோ அப்படி. நீங்க இந்த எழவ முடியுங்க மேடம். இப்பவே என் ஷூ கழல ஆரம்பிக்குது:))//

தாளம் என்ன சொல்லும்? குவாட்டரடிச்சிட்டுக் குப்புறக் கெடக்கும்.

Unknown said...

//: அடுத்ததாக கலாய்க்க போறவரு அமெரிக்கால ஆணிபுடுங்க போனாலும், மதுரையில மல்லாட்ட வறுத்தவரு, பாண்டியரு..தினேஷ்..//

மதுரையிலக்கு மேட்சா மல்லாட்டைன்னு போட்டாலும் மதுரையில அதை மல்லாட்டைன்னு சொல்லமாட்டாங்களே?

Unknown said...

//தினேஷ்: மிரள மிரள பார்த்தபடி வந்து வந்து..தங்கமணிகாமெடிங்க.

பொன்னாத்தா: என்னது? தங்கமணி காமெடியா?

தினேஷ்: ஏங்க ஏங்க கத்துறீங்க. ஆமாங்க.
//

ரொம்ப பயந்தவரா இருப்பாரு போலயே இந்த தினேஷு

Unknown said...

//தினேஷ்: முந்தின எபிசோட்ல தங்கமணி ரெயின்செக்ல ஒரு போன் பார்த்தாங்கன்னு சொன்னென்லங்க. அப்புறம் அத பத்தி பேச்சே இல்ல. நானும் மறந்துட்டான்னு எடுத்த வெச்ச கேஷ ஷேர்மார்கட்ல போட்டுட்டு கமுக்கமா இருந்தன்.//

அடப்பாவி.. இந்த பொம்பளையாளுங்களுக்கு நியாபகசக்தி யானைய விட சாஸ்தின்னு தெரியாதாய்யா உனக்கு??

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மூன்று வாரமா தொடர்ந்து அசத்தீட்டு.. சாரி.. கலக்கீட்டு இருக்கற நம்ம வானம்பாடிகள் ஐயாவிற்கு வாழ்த்துகள்.. ஹோஜாரே ஹோஜா...

ஈரோடு கதிர் said...

இன்னிக்கு என்ன டேமேஜ் பண்ணியிருக்கிறதா... வெளிநாட்டு உளவுத்துறைல சொன்னாங்க

இன்னும் படிக்கல..

ங்கொய்யாலே
வந்து கவனிச்சுக்குறேன்

ஈரோடு கதிர் said...

யெப்பா சாமி..

எப்படீங்கண்ணா...

ஊட்டுக்குள்ளே கூடயே இருந்தா மாதிரி இத்தன மேட்டரப் போட்டு டரியலாக்குரீங்க!!!

Sanjai Gandhi said...

அசத்தறிங்க சார்.. பொன்னாத்தாவுக்கு சொர்ணாக்கான்னு பேர் வச்சிருந்தா கரெக்டா இருந்திருக்கும் :)

சிநேகிதன் அக்பர் said...

அசத்துறீங்க சார்.

Radhakrishnan said...

:)

கலகலப்ரியா said...

ஒரு வழியா ப்ரோக்ராம் முடிஞ்சது... ஸ்ஸ்ஸபா...

துபாய் ராஜா said...

சார், என்ன அதுக்குள்ள முடிச்சிட்டிங்க. பார்ட் 2 சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்.

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
ஒரு வழியா ப்ரோக்ராம் முடிஞ்சது... ஸ்ஸ்ஸபா..//

அதுக்குத்தான் காசு வாங்கீட்டீங்களே...
அப்புறம் என்ன சலிப்பு வேண்டிக்கிடக்கு..

கலகலப்ரியா said...

|| ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
ஒரு வழியா ப்ரோக்ராம் முடிஞ்சது... ஸ்ஸ்ஸபா..//

அதுக்குத்தான் காசு வாங்கீட்டீங்களே...
அப்புறம் என்ன சலிப்பு வேண்டிக்கிடக்கு..||

ம்க்கும்... கொடுத்த செக்கு திரும்பிடிச்சு..... இதெல்லாம் ஒரு பொழப்ஸ்..

Thamira said...

கலக்கல் தொடர். :-))

நாடோடி said...

க‌ல‌க்க‌லான‌ முடிவு.... சிரிப்பு தாங்க‌ முடிய‌லை..

ஸ்ரீராம். said...

கலக்கினவங்களுக்கும், கலக்கப் பட்டவங்களுக்கும் வாழ்த்துக்கள்...

Anonymous said...

பொன்னாத்தா: ஆஹா. இப்பதான் புரியுது கசியும் மௌனம்னா என்னான்னு. ரைட்டு:))

எனக்கும் இப்பத் தான் புரியுது இப்படி கசியும் மெளனம் தானா கதிர்....

Anonymous said...

இட்டிலி சட்டில இருந்து இட்டிலிய எறக்குனாங்க. அந்த புகை நடுவில அவங்க, கையில இட்டிலி புகைய புகைய வேணும்னே வெறுப்பேத்த ஸ்லோ மோஷன்ல வந்தாலும் எனக்கு பாரதிராஜா படத்துல கனவு சீன் கவனம் வந்துச்சு. ஒரு ஈடு இட்டிலியும் பறக்க பறக்க தின்னுட்டு ஓடியாந்து எழுதுனது தான் அந்தக் கவிதை. சாயந்திரம் போய் இது உனக்குதான் டெடிகேட் பண்ணேன்னு சொல்லி ம்யூட் எடுத்து வுட்டம்ள..

ஒஹ் இப்படி இறக்கின இட்லியில் வந்த ஆவியில் பொங்கிய காதல் கவிதையா.... நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா..இருங்க உங்க எல்லா கவிதையில் இருக்கிற பிண்ணனியையும் ஒரு தனிக்குழு அமைத்து ஆராயச் செய்யறோம்..

Anonymous said...

கூட்டத்தில் இருந்து பாலாசி: ஏண்ணே! இப்புடி ஏதோ பண்ணி ராச்சோத்துக்கு சிங்கியடிச்சதாலதான் 11 மணிக்கு மேல கவிதை எழுதுனீங்களோ..

கதிர் இப்படி பட்ட கஷ்டங்களுக்கும் இடையில் நீங்க பதிவெழுதுவது பாராட்டபட வேண்டிய விஷயம் விரைவில் உங்களுக்கு ஒரு பாராட்டு கூட்டம் நடத்தறோம் இந்த அன்பளிப்பு தட்டோடு வந்துடுங்க...

Anonymous said...

அதுசரி: (எழுந்து வந்து பைக்குள் கைவிட்டு ஒரு எவர்சில்வர் தட்டு எடுத்து பரிசளிக்கிறார்). இன்றைய நிகழ்ச்சியில் ஒரு சோகத்தையும் காமெடியாக்கிய கதிருக்கு அன்புப் பரிசு.

ம்ம்ம்ம் ஒரு வெள்ளித்தட்டாக் கொடுத்திருந்தால் கஷ்டக்காலத்தில் உதவியிருக்கும்...

எம்.எம்.அப்துல்லா said...

:))))))))))

பனித்துளி சங்கர் said...

எப்பிடி இப்பிடி எல்லாம்,,,,,,,,?????
கலக்கலான பதிவு ..பகிர்வுக்கு நன்றி!!!

*இயற்கை ராஜி* said...

:-))))))))))))))))

ராஜ நடராஜன் said...

நல்லாத்தானே போய்கிட்டிருக்கு.தொடரட்டும்.

vasu balaji said...

@@நன்றி றமேஸ்
@@நன்றி சித்ரா
@@நன்றி பத்மா
@@நன்றி பிரபா
@@வாங்க சேட்டைக்காரன் நன்றி முதல் வரவுக்கும் ஊக்கத்துக்கும்
@@வாங்க சிவசங்கர். நன்றி முதல் வரவுக்கு. :)).றமேஸ் பாவம்.

vasu balaji said...

@நன்றி டி.வி.ஆர்.சார்
@நன்றி ஷங்கர்.
@நன்றிங்க நேசமித்திரன்
@ஆஹா. வாம்மா பாலாசி
@நன்றி முகிலன்
@நன்றிங்க செந்தில்.
@நன்றிங்க கதிர்:))
@நன்றிங்க பிரதமரே. சொர்ணாக்காவா:((அவ்வ்வ்வ்வ்வ்

vasu balaji said...

@@நன்றிங்க அக்பர்
@@நன்றிங்க வி.ஆர்.
@ம்கும். என்னாம்மா சலிப்பு பொன்னாத்தா:))
@@நன்றிங்க ராஜா
@@நன்றிங்க ஆதி
@@நன்றி நாடோடி
@@நன்றிங்க ஸ்ரீராம்
@@நன்றிங்க தமிழரசி
@@நன்றி அப்துல்லா:))
@@நன்றி பனித்துளி
@@நன்றிங்க ராஜி
@@நன்றிண்ணா:))

நிஜாம் கான் said...

அண்ணே! அடுத்து "கலாய்க்கப் போவது யாரு சீசன் 2"வா.. கலாய்ங்க கலாய்ங்க. நான் தான் டூ லேட்....:)))))

அது சரி(18185106603874041862) said...

//
பொன்னாத்தா:அது சரி அதுசரி. வரும்போதே பார்த்தேன். அந்த ஜோல்னா பை. வந்தும் அத இறக்கி வைக்காம அப்புடியே வெச்சிருக்கீங்களே. அதுக்குள்ள என்ன இருக்கு?
//

அலோவ் சாரே...அந்த பைக்குள்ள வச்சிருந்த பாட்டிலை காணோம்...கண்டு பிடிச்சி குடுத்தா உங்களுக்கு கட்டிங் தார்றேன்...:)))

Jerry Eshananda said...

எப்புடிப்பு இப்பிடி.

ரோஸ்விக் said...

உண்மைகளை இப்புடி சபையில போட்டு ஒடைங்கைய்யா :-))))