படைப்பு பல நேரம் தன் படைப்பில் சிலரைத் தான் ஆடிப்பார்க்கவென்றே படைக்கும் போலும். வாழ்க்கை முழுதும் சோதனை மட்டுமே என்று பிறந்தவர்களில் பலர் பலியானாலும், ஒரு சிலர் பார்க்கலாம் ஒரு கை என்று அதையும் மீறி வாழ்ந்து காட்டுகையில் பிரமிப்பாய் இருக்கும். அப்படி ஒருவள்தான் அலமேலு.
அலமேலுவுக்கு திருமணமாகி சித்தியாய் புக்ககம் வந்தபோது அவளின் வயது பதின்மூன்று. திருமணமான அடுத்த நொடியில் எட்டு, ஐந்து மற்றும் 3 வயது குழந்தைக்குத் தாயானாள். அவளுடைய அவரின் மூத்த மகள் (15 வயது) திருமணமாகிச் சென்றுவிட்டதால், மற்ற குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள இந்தக் குழந்தை மணமுடிக்கப்பட்டது. எட்டு வயது பெண்ணும் 13 வயது சித்தியும் நட்பாக இருக்க வேண்டிய வயதில் சித்தியும் மகளுமாய் விதித்தது.
அதோடு விட்டால் விதிக்குதான் என்ன மதிப்பு? அவளுக்கும் குழந்தைகள் பிறந்தது. ஒன்றல்ல இரண்டல்ல. பன்னிரண்டு. எல்லாம் ஆண். வளர்ந்து, அதிலும் இரண்டு வேலைக்கும் போன காலத்தில் ஒன்றொன்றாய் பல நோவுகளுக்கு பலி கொடுத்த பிறகும் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் என்ன பிடிப்பிருக்க முடியும்.
அத்தனையும் தாங்கிய அவளுக்கு இறந்த குழந்தைகளின் வயசெல்லாம் சேர்த்து கணவனுக்கு கொடுத்தது இயற்கை. இந்தக் குழந்தையெல்லாம் வளர்த்தவளுக்கு இன்னுமொரு குழந்தையா கஷ்டமென்று நினைத்தது போல் கணவனைக் குருடாகவும் ஆக்கி, கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் படுத்த படுக்கையாக்கியும் விட்டது. தொன்னூற்றியெட்டு வயதில் கணவனும் போய்விட வந்துக் கொண்டிருந்த பென்ஷன் காணாமல் போனது.
13 வயதில் திருமணமானவளை திருமண அத்தாட்சி கேட்டால் என்ன செய்வாள்? எப்படியோ அரசு உதவித் தொகையிலும், மூத்தார் பிள்ளைகள் அனுப்பும் சொற்பக் காசிலும் தனியே வாழ்வது விதிக்கப்பட்டதாயிற்று. ஆனாலும் வாழ்வாங்கு வாழ்ந்தாள் அவள்.
அவல்காரத் தெரு, தென்னமரத் தெரு, குயத் தெரு, மண்டித் தெரு எங்கு அவளோடு போனாலும் சாமி ஊர்வலம்தான். கச்சலான உருவத்துடன், அவள் எடைக்குப் பாதியில் 16முழம் புடவை மடிசாரணிந்து பொக்கைவாய் சிரிப்போடு வீதியிறங்கினால் போதும் மகராசி. எங்க சித்தி? எப்படி இருக்க? ஆளைக் காணோம்? மறந்துட்டல்ல சித்தியென்று கை பிடித்துக் கொள்ளுவார்கள்.
நின்று நின்று குசலம் விசாரித்து, அவர்களிடம் வாசு புள்ள! என் பேரன் என்று அறிமுகப் படுத்தியபோது அவளின் பெருமை புரியாத வயது. வேலூர் மார்கட் அருகில் போய்க் கொண்டிருக்க டங் டங் என்று மணியடித்தபடி ஒரு ரிக்ஷா, கெய்வீ ஓரம் போவென்ற குரல், என்ன நடந்ததென்றே புரிவதற்குள், கட் பனியன் சித்தியின் கைக்குள் பிடி பட்டிருக்க, பாதி ரிக்ஷாவிலும் பாதி தரையிலுமாக தொங்கிக் கொண்டிருந்தான் ரிக்ஷா ஓட்டி!
மடித்த மஞ்சள் பை அக்குளுக்குள் வைத்தபடி அந்தக் கையை ஒரு இடுப்பிலும், மறுகையில் ரிக்ஷாக்காரனையும் பிடித்தவாறு, பொக்கை வாயைக் கடித்த படி, எப்டி எப்டி, கெய்வியா என்றவளை அய்யோ சித்தி, உடு சித்தி! நீன்னு தெரியாம சொல்லிட்டேன் என்றவனுக்கு விழுந்தது ரெண்டு அறை. அத்தனையும் வாங்கிக் கொண்டு, குந்து சித்தி உட்டுட்டு போறன். எங்க போற என்றான் அவன். அவள்தான் சித்தி!
படிப்பதில் கொள்ளைப் பிரியம். புத்தகம் வாங்க எங்கே போவாள்? தினத்தந்தி வாங்க 96 வயதில் சாகும் வரை தானே கடைக்குப் போனவள் அவள். எதிரில் இருந்த பேப்பர் கடைக்குப் போனாளாம். ஏம்பா? ஒரு குமுதம் வித்தா உனக்கு என்ன கமிஷன் கிடைக்கும்? நாலணா கிடைக்குமா? குமுதம், கல்கண்டு, ராணி, தேவி, கலைமகள், கல்கி, அமுதசுரபி, மஞ்சரி, தினமணிக்கதிர் என்னல்லாம் உண்டோ கொடு. ஒரு புக்குக்கு நாலணா தரேன். முனை மடங்கியிருந்தா முழுக்காசு தரேன். அரையே அரைமணி நேரம் போதும் என்று டீல் போட்டு படித்தவள்.
எப்படி எப்படியோ விடா முயற்சியுடன் போராடி, இருந்த ஆதாரங்களைக் குடைந்து தனி மனுஷியாய், கோர்டில் ஆர்டர் வாங்கி தான் இளையதாரம் என நிரூபித்து குடும்ப பென்ஷன் வாங்குவதற்குள் 19 ஆண்டுகள் ஓடிவிட்டிருந்தன. பென்ஷன் என்றால் கோபம் வரும் அவளுக்கு. சம்பளம் என்பாள். மாதம் கடைசிநாள் சம்பளம் வாங்கியே ஆகவேண்டும்.
அங்கேயும் அலப்பரை தாளாது.
பாட்டிம்மா! அடுத்தமாசம் சர்டிபிகேட் தரணும் பாட்டிம்மா?
எதுக்குப்பா?
நீ கலியாணம் பண்ணலை. விடோதான்னு கெஜட்டட் ஆபீசர் சர்டிபிகேட் வேணும் பாட்டிம்மா?
எந்த பேமானிய்யா ரூல் போட்டான். 92 வயசுல கலியாணம் பண்ணலைன்னு சர்டிஃபிகேட் கேக்க? இந்த சம்பளத்துக்குன்னாலும் பிச்சக்காரன் கூட கட்டமாட்டானேய்யா? என்று ஆரம்பித்தாலே போதும். போஸ்ட்மாஸ்டர் வந்துவிடுவார். பாட்டி! அவரு புதுசு. தெரியாம கேட்டுட்டாரு. நீ சம்பளம் வாங்கிட்டு போ என்று முதலில் கொடுத்தனுப்புவார்.
காலை எழுந்ததும் இருக்கும் ஒற்றைப் பல்லை பேஸ்ட் போட்டு ஓட்டி ஓட்டித் தேய்ப்பாள். குட்மார்னிங் சொல்லும் ஸ்டைலில் எலிசபத் ராணி பிச்சை வாங்க வேண்டும். காஃபி சாப்பிட்டு, மஞ்சள் பை இடுக்கிக் கொண்டு போய் தினத்தந்தியும் ஹிந்துவும் வாங்கி வருவாள். கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் என்று அரைமணி நேரம் போகும்.
அய்ய. குளிக்காம என்ன இது என்றால், குளிச்சப்புறம் சொல்ல உசிர் இருக்குமோ தெரியாது. இருக்கும் போதே நாலு ஸ்லோகம் சொன்னா என்ன போச்சு? முருகன் ரிஜக்ட் பண்ணிடுவானா? போய்யா என்று சிரிப்பாள்.
அவளுக்குப் பிடித்த முருகனின் சஷ்டி ஒரு நாளில் எழுந்தாள், பேப்பர் வாங்கினாள், ஸ்லோகம் சொன்னாள், தலைக்குக் குளித்தாள் (போகி பண்டிகை அன்று). தலை உலர்த்திக் கொண்டிருந்தவள், மார்ல என்னமோ பண்ணுதுடா. கூப்பிட்டுட்டான் போல முருகன். ஆசுபத்திரி மண்ணாங்கட்டின்னு காச கரியாக்காதே. இன்னும் விதிச்சிருந்தா எழுந்துக்குவேன். இல்லைன்னா குட்பை என்றாள்.
ஆசுபத்திரி போய், அழைப்புத்தான் எனத்தெரிந்து ஏதும் செய்யமாட்டாமல் அட்மிட் செய்து, சருகுபோல் படுத்திருந்தவளைப் பார்க்கையில் பீஷ்மர் மாதிரி தோன்றியது. எப்போது மூச்சு நின்றதோ? இதழோரம் ஒரு சிரிப்பு நாந்தானே ஜெயிச்சேன் என்பதுபோல்.

89 comments:
படித்து பின்னூட்டமிடுகிறேன்... முதல் நானா என பார்த்து...
பிரபாகர்.
//முனை மடங்கியிருந்தா முழுக்காசு தரேன். அரையே அரைமணி நேரம் போதும் என்று டீல் போட்டு படித்தவள்.
//
எனக்கு இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு...
நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்....
பேப்பர் கடைக்காரன் உதைக்காமல் இருந்தால் சரி!!
சூப்பர்ர்!!
அலமேலு பாட்டி போல் பல கேரக்டர்க்கள் இருக்காங்கய்யா!
பக்கத்து வீட்டில் லட்சுமியம்மாள் என ஒரு அம்மா, பாட்டி வயசுதான். அம்மா என கூப்பிடுவேன். சினிமாவே வாழ்வில் பார்த்தது கிடையாது. எவ்வளவு பேர் கட்டாயப்படுத்தினாலும் கொள்கையை மாற்றிக்கொள்ள வில்லை.
என் அப்பத்தா, பேத்திக்கு பேத்தியெடுத்திருக்கிறார். பேத்திக்கு பேத்தியே 10 வயசு... எல்லாம் சிறு வயசு கல்யாணங்கள்!
கேரக்டர் - அலமேலு - அலம்பல், முடிவு - பச்....
பிரபாகர்.
அருமையான நடை.பாராட்டுகள்.
நல்ல கேரக்டர். உங்கள் விவரணையைப் படிக்கும்போதே அந்த அலமேலுப் பாட்டியை கண்முன்னால் நிறுத்திக் கொள்ள முடிகிறது.
அலமேலு பாட்டியுடன் பயணித்தது போல் இருந்தது.
\\எந்த பேமானிய்யா ரூல் போட்டான். 92 வயசுல கலியாணம் பண்ணலைன்னு சர்டிஃபிகேட் கேக்க? இந்த சம்பளத்துக்குன்னாலும் பிச்சக்காரன் கூட கட்டமாட்டானேய்யா?\\
இது சூப்பர் சார்....:-)))))
கதை நல்லாருக்கு சார்...
வாசிக்கும் போது, அலமேலு பாட்டியின் மேல் ஒரு பாசத்தை ஏற்படுத்தி, அவர்கள் இப்பொழுது இல்லை என்று சொல்லி - நெகிழ வைத்து..............mmmm.....
namma alamelu 'Party' paththiyaa... vanthu padikkaren...
//குளிச்சப்புறம் சொல்ல உசிர் இருக்குமோ தெரியாது. இருக்கும் போதே நாலு ஸ்லோகம் சொன்னா என்ன போச்சு?//
இதுதான் டாப்பு
இப்படி... வெகு யதார்த்தமாய் இருப்பது வரம்
ஹ்ம்ம் படிக்க இப்படிதான் அலைந்தார்கள் என் பாட்டியையும் சேர்த்து .இப்போது மனிதர்களுக்கு பெரும்பாலும் கேரக்டரே இல்லையே .எப்படி இவர்கள் கேரக்ட்டர் ஆவார்கள்?நல்ல ஒரு இடுகை
என்னா மனுஷிங்க.... படிக்கரச்சயே மனசுல ஒரு தெம்ப குடுக்குதுல்ல.... எந்தெருவுலையும் ரெண்டுபேரு இருக்காங்க....குத்துக்கல்லாட்டம்....
உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது...
கடையுறீங்க பாலா சார்.
தத்துருவமான மனித சிற்ப்பங்கள், மிதந்து,மிதந்து மேல் எழும்புது..
அற்புதம்.
ரொம்ப சுவாரஸ்யமா படிச்சேன்...ஏதோ நெருங்கிய ஒருவரைப் பற்றி படித்தது போல இருந்தது..ரொம்ப நல்லாயிருக்கு.
அண்ணே! பின்ன படிச்சிட்டு வர்ரேன்.
நல்லா இருக்குண்ணே.
பீஷ்மரா ..? இந்தக் கடைசி வரியில் அவர் அம்புப் படுக்கையில் இருந்தது ஞாபகம் வந்து இவர் வாழ்வும் கூட அப்படித்தானே எனக் கண் கலங்க வைத்து விட்டது பாலா சார்.. அருமை .. மனசுக்குப் பிடிச்சுதோ இல்லையோ நிறைவான வாழ்க்கைதான்..
மனசு நெருடல்.சொல்லிய விதம் அலமேலு பாட்டி அப்படியே கண்முன்னாடி நிற்கிற மாதிரி இருக்குது.
'நறுக்' நேரத்திலேயே சொன்னேன்.அலமேலு பாட்டி-இப்பவும் சொல்கிறேன்.புத்தகம் போடுங்க.பதிப்பகத்து காசு தேவைன்னா தேத்திடலாம்!
வாழ்க்கையின் எத்தனையோ தத்துவங்களும், கோட்பாடுகளும் இதுபோன்ற மனிதர்கள் முன் தவிடு பொடியாகி பறந்து விடிகிறது..!!
கூவிக்கொண்டிருக்கும் அறிவுஜீவிகளின் அம்புகளில் பீஷ்மருக்கு வலித்திருக்குமோ என்னமோ, இவர்கள் போன்றவர்கள் ஜஸ்ட் லைக் தட் தட்டிவிட்டு போயிருப்பார்கள்... !!
அருமை சார்.
ரொம்ப நாள் கழிச்சு, இந்த இடுகைக்கு என்ன பின்னூட்டம் போடுவது எனத் தெரியாமல் ... ஓட்டுப் போட்டுவிட்டு, 10 தடவை இடுகையை மட்டும் திரும்ப திரும்ப படிச்சுகிட்டு இருந்தேன்.
மனசில் பாட்டி நிறைஞ்சு நிற்கின்றார்கள்.
//
ஏம்பா? ஒரு குமுதம் வித்தா உனக்கு என்ன கமிஷன் கிடைக்கும்? நாலணா கிடைக்குமா? குமுதம், கல்கண்டு, ராணி, தேவி, கலைமகள், கல்கி, அமுதசுரபி, மஞ்சரி, தினமணிக்கதிர் என்னல்லாம் உண்டோ கொடு. ஒரு புக்குக்கு நாலணா தரேன். முனை மடங்கியிருந்தா முழுக்காசு தரேன். அரையே அரைமணி நேரம் போதும் என்று டீல் போட்டு படித்தவள்.
//
இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு :)))
என்ன நடை சார் இது ?
அம்மாடி...
ஒரு மாதிரி நிச்சலனமா இருந்தது கொஞ்ச நேரம்...!
வைதீரணி என்னும் வெண்ணீராற்றை மிக எளிதாக கடந்திருப்பார்கள் பாட்டி
அண்ணே... நெஞ்சை நெகிழவைத்த கதைண்ணே...
//புத்தகம் போடுங்க.பதிப்பகத்து காசு தேவைன்னா தேத்திடலாம்!//
ராஜ நடராஜன் சார் சொல்ற மாதிரி புத்தகம் போடுங்க...
சும்மா பட்டய கிளப்பீரலாம்...
சோகம் கலந்த முடிவு... அருமையாக எழுதியுள்ளீர்கள். வேறென்ன சொல்வதென்று புரியவில்லை.
செதுக்குங்க சார்...
அருமையான நடை
நல்லா இருக்குங்க பாட்டி கதை.பாட்டிகளின் கதைகள் எல்லாம் பாடங்கள் தான் படிக்கிறவங்களுக்கு.
எழுதிய விதம் பிடித்திருந்தது சார்.
//முனை மடங்கியிருந்தா முழுக்காசு தரேன். அரையே அரைமணி நேரம் போதும் என்று டீல் போட்டு படித்தவள்.//
இதுதான்டா டீல்.
வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்வது என்பது இதுதான்.
அருமையான நடை. எப்பிடிங்க இப்பிடில்லாம் எழுதறிங்க?
ஹேட்ஸ் ஆஃப் டூ யூ.
அடடே.. நல்லா இருக்கு
அருமையா எழுதி இருக்கீங்க சார்... ஆனாலும் அலமேலு இன்னும் நன்றாகப் பேசி இருக்கலாம்....
//அவல்காரத் தெரு, தென்னமரத் தெரு, குயத் தெரு, மண்டித் தெரு//
படிக்கும்போதே வேலூரா இருக்குமோன்னு நினெச்சேன், வேலூரேதான் !!
********************************
ஆனாலும் அநியாயத்துக்கு சூப்பராக எழுதுகிறீர்கள் சார் .. :)
என்ன பின்னூட்டம் போடலாம்????
ஜெட்லி said...
எனக்கு இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு...
நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்....
பேப்பர் கடைக்காரன் உதைக்காமல் இருந்தால் சரி!!//
எல்லாரும் டீல் போட்ட அவனெங்க டீல் போட:))
Mrs.Menagasathia said...
சூப்பர்ர்!!//
நன்றிங்க
பிரபாகர் said...
அலமேலு பாட்டி போல் பல கேரக்டர்க்கள் இருக்காங்கய்யா!
பக்கத்து வீட்டில் லட்சுமியம்மாள் என ஒரு அம்மா, பாட்டி வயசுதான். அம்மா என கூப்பிடுவேன். சினிமாவே வாழ்வில் பார்த்தது கிடையாது. எவ்வளவு பேர் கட்டாயப்படுத்தினாலும் கொள்கையை மாற்றிக்கொள்ள வில்லை.
என் அப்பத்தா, பேத்திக்கு பேத்தியெடுத்திருக்கிறார். பேத்திக்கு பேத்தியே 10 வயசு... எல்லாம் சிறு வயசு கல்யாணங்கள்!
கேரக்டர் - அலமேலு - அலம்பல், முடிவு - பச்....//
நன்றி பிரபாகர்
ஸ்ரீ said...
அருமையான நடை.பாராட்டுகள்.//
நன்றி ஸ்ரீ!
முகிலன் said...
நல்ல கேரக்டர். உங்கள் விவரணையைப் படிக்கும்போதே அந்த அலமேலுப் பாட்டியை கண்முன்னால் நிறுத்திக் கொள்ள முடிகிறது.//
நன்றி முகிலன்
சைவகொத்துப்பரோட்டா said...
அலமேலு பாட்டியுடன் பயணித்தது போல் இருந்தது.//
நன்றிங்க:))
Han!F R!fay said...
// இது சூப்பர் சார்....:-)))))
கதை நல்லாருக்கு சார்...//
இந்த கதை நல்லாருக்கே:))
Chitra said...
வாசிக்கும் போது, அலமேலு பாட்டியின் மேல் ஒரு பாசத்தை ஏற்படுத்தி, அவர்கள் இப்பொழுது இல்லை என்று சொல்லி - நெகிழ வைத்து..............mmmm.....//
நன்றிங்க சித்ரா:)
கலகலப்ரியா said...
namma alamelu 'Party' paththiyaa... vanthu padikkaren...//
ஆமாம். :)
ஈரோடு கதிர் said...
// இதுதான் டாப்பு
இப்படி... வெகு யதார்த்தமாய் இருப்பது வரம்//
ம்ம். ஆமாம் கதிர்.
padma said...
ஹ்ம்ம் படிக்க இப்படிதான் அலைந்தார்கள் என் பாட்டியையும் சேர்த்து .இப்போது மனிதர்களுக்கு பெரும்பாலும் கேரக்டரே இல்லையே .எப்படி இவர்கள் கேரக்ட்டர் ஆவார்கள்?நல்ல ஒரு இடுகை//
நன்றிங்க.
க.பாலாசி said...
என்னா மனுஷிங்க.... படிக்கரச்சயே மனசுல ஒரு தெம்ப குடுக்குதுல்ல.... எந்தெருவுலையும் ரெண்டுபேரு இருக்காங்க....குத்துக்கல்லாட்டம்....//
ஆமாம் பாலாசி. பெரிய இழப்பு இது:(
Sangkavi said...
உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது...//
நன்றிங்க சங்கவி
பா.ராஜாராம் said...
கடையுறீங்க பாலா சார்.
தத்துருவமான மனித சிற்ப்பங்கள், மிதந்து,மிதந்து மேல் எழும்புது..//
நன்றிங்க பா.ரா.
இராமசாமி கண்ணண் said...
அற்புதம்.//
நன்றிங்க
ஸ்ரீராம். said...
ரொம்ப சுவாரஸ்யமா படிச்சேன்...ஏதோ நெருங்கிய ஒருவரைப் பற்றி படித்தது போல இருந்தது..ரொம்ப நல்லாயிருக்கு.//
நன்றி ஸ்ரீராம்:)
இப்படிக்கு நிஜாம்.., said...
அண்ணே! பின்ன படிச்சிட்டு வர்ரேன்.//
எங்க வரக்காணோமே:))
ஜெரி ஈசானந்தா. said...
நல்லா இருக்குண்ணே.//
நன்றிங்க ஜெர்ரி
thenammailakshmanan said...
பீஷ்மரா ..? இந்தக் கடைசி வரியில் அவர் அம்புப் படுக்கையில் இருந்தது ஞாபகம் வந்து இவர் வாழ்வும் கூட அப்படித்தானே எனக் கண் கலங்க வைத்து விட்டது பாலா சார்.. அருமை .. மனசுக்குப் பிடிச்சுதோ இல்லையோ நிறைவான வாழ்க்கைதான்..//
ஆமாங்க. குறை சொல்லிக் கேட்டதேயில்லை
ராஜ நடராஜன் said...
மனசு நெருடல்.சொல்லிய விதம் அலமேலு பாட்டி அப்படியே கண்முன்னாடி நிற்கிற மாதிரி இருக்குது.//
நன்றி சார்.
'நறுக்' நேரத்திலேயே சொன்னேன்.அலமேலு பாட்டி-இப்பவும் சொல்கிறேன்.புத்தகம் போடுங்க.பதிப்பகத்து காசு தேவைன்னா தேத்திடலாம்!//
:). இன்னும் எழுதிப் பழகணுமேண்ணா
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
வாழ்க்கையின் எத்தனையோ தத்துவங்களும், கோட்பாடுகளும் இதுபோன்ற மனிதர்கள் முன் தவிடு பொடியாகி பறந்து விடிகிறது..!!
கூவிக்கொண்டிருக்கும் அறிவுஜீவிகளின் அம்புகளில் பீஷ்மருக்கு வலித்திருக்குமோ என்னமோ, இவர்கள் போன்றவர்கள் ஜஸ்ட் லைக் தட் தட்டிவிட்டு போயிருப்பார்கள்... !!
அருமை சார்.//
ஆமாம் ஷங்கர்:)
இராகவன் நைஜிரியா said...
ரொம்ப நாள் கழிச்சு, இந்த இடுகைக்கு என்ன பின்னூட்டம் போடுவது எனத் தெரியாமல் ... ஓட்டுப் போட்டுவிட்டு, 10 தடவை இடுகையை மட்டும் திரும்ப திரும்ப படிச்சுகிட்டு இருந்தேன்.
மனசில் பாட்டி நிறைஞ்சு நிற்கின்றார்கள்.//
இது போதுமேண்ணா. நிறைவாயிருக்கு:)
அது சரி said...
இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு :)))//
ஜாவா காஃபி டீல் எனக்கு கட்டுப்படியாகலை:O))))
நேசமித்ரன் said...
என்ன நடை சார் இது ?
அம்மாடி...
ஒரு மாதிரி நிச்சலனமா இருந்தது கொஞ்ச நேரம்...!
வைதீரணி என்னும் வெண்ணீராற்றை மிக எளிதாக கடந்திருப்பார்கள் பாட்டி//
நன்றி நேசமித்திரன்:)
ஜிகர்தண்டா Karthik said...
அண்ணே... நெஞ்சை நெகிழவைத்த கதைண்ணே...
நன்றி கார்த்திக்.
//புத்தகம் போடுங்க.பதிப்பகத்து காசு தேவைன்னா தேத்திடலாம்!//
ராஜ நடராஜன் சார் சொல்ற மாதிரி புத்தகம் போடுங்க...
சும்மா பட்டய கிளப்பீரலாம்...
ஆஹா. அதுக்கு இன்னும் மெருகு வேணும்.:))
புலவன் புலிகேசி said...
:))//
:)
கமல் said...
சோகம் கலந்த முடிவு... அருமையாக எழுதியுள்ளீர்கள். வேறென்ன சொல்வதென்று புரியவில்லை.//
நன்றி கமல்
தண்டோரா ...... said...
செதுக்குங்க சார்...//
நன்றிண்ணா:)
T.V.ராதாகிருஷ்ணன் said...
அருமையான நடை//
நன்றி சார்.
KarthigaVasudevan said...
நல்லா இருக்குங்க பாட்டி கதை.பாட்டிகளின் கதைகள் எல்லாம் பாடங்கள் தான் படிக்கிறவங்களுக்கு.//
நன்றிங்க! முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
நர்சிம் said...
எழுதிய விதம் பிடித்திருந்தது சார்.//
நன்றிங்க நர்சிம்!
வரதராஜலு .பூ said...
//முனை மடங்கியிருந்தா முழுக்காசு தரேன். அரையே அரைமணி நேரம் போதும் என்று டீல் போட்டு படித்தவள்.//
இதுதான்டா டீல்.
வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்வது என்பது இதுதான்.
அருமையான நடை. எப்பிடிங்க இப்பிடில்லாம் எழுதறிங்க?
ஹேட்ஸ் ஆஃப் டூ யூ.//
ரொம்ப நன்றிங்க. இந்த மாதிரி ஊக்கம்தாங்க ஆக்கம்:)
கவிதை காதலன் said...
அடடே.. நல்லா இருக்கு//
வாங்க. நன்றிங்க
கலகலப்ரியா said...
அருமையா எழுதி இருக்கீங்க சார்... ஆனாலும் அலமேலு இன்னும் நன்றாகப் பேசி இருக்கலாம்....//
ஆஹா. சந்தோஷமாயிருக்கு. உனக்குத் தெரியுமே. ஒரு புக் எழுதற அளவுக்கு விஷயமிருக்கு:))
யூர்கன் க்ருகியர் said...
//அவல்காரத் தெரு, தென்னமரத் தெரு, குயத் தெரு, மண்டித் தெரு//
படிக்கும்போதே வேலூரா இருக்குமோன்னு நினெச்சேன், வேலூரேதான் !!
********************************
ஆனாலும் அநியாயத்துக்கு சூப்பராக எழுதுகிறீர்கள் சார் .. :)//
நன்றி யூர்கன்
எம்.எம்.அப்துல்லா said...
என்ன பின்னூட்டம் போடலாம்????//
ஆஹா:))
அழகான நடை. அலமேலு பாட்டி உங்கள் எழுத்தில் வாழ்ந்துவிட்டாள்..!
//வாழ்க்கை முழுதும் சோதனை மட்டுமே என்று பிறந்தவர்களில் பலர் பலியானாலும், ஒரு சிலர் பார்க்கலாம் ஒரு கை என்று அதையும் மீறி வாழ்ந்து காட்டுகையில் பிரமிப்பாய் இருக்கும்.//
சிறுவயதிலிருந்து நான் ரசித்த ரசித்து கொண்டிருக்கின்ற action heroine கேரக்டர் பக்கத்துக்கு வீட்டு பாட்டி, பெரியம்மா, அப்புறம் இப்போ அலமேலு சித்தி இவங்க எல்லோருக்கும் வில்லன் வேறுயாருமல்ல விதி தான்.விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லுவாங்க.ஆனா நிஜவாழ்வில் நான் பார்த்தது இவங்கெல்லாம் விதியை புன்னகையால் தான் ஜெயிச்சிருக்காங்க...ஒவ்வொரு புன்னகையும் ஒவ்வொரு தோட்டா எப்போவெல்லாம் இந்த வில்லன் (விதி)சோதிக்க வர்றானோ அப்போவெல்லாம் இவங்க பதிலடி புன்னகைங்கிற தோட்டாவா தான் இருக்கும். பாவங்க விதி பலமுறை இவங்க கிட்ட தோத்துகிட்டு தலை தெறிக்க ஓடிருக்கு.......(நன்றி பாலா சார் மீண்டும் ஒரு நியாபகம் வருதே! நியாபகம் வருதே!)
அலமேலு பாட்டிய பக்கத்து டீ கடையில இருந்து தினந்தோறும் பாத்தது மாதிரியே இருந்தது உங்க எழுத்து நடை... அருமை அண்ணே...
அசத்தல் அண்ணன்
ஆண்டவன் அழைப்பை ஆண்டவள் ஏற்றுக்கொண்டாள்.நிம்மதியாக ...
இடுக்கை அருமை சார்
70 வரிகளில் ஒரு பெண்மணியின் 92 வருட வாழ்க்கையை இதை விட சிறப்பாக விவரிக்க முடியுமா எனத் தெரியவில்லை. அடுத்த கட்டத்திற்கு சென்றது உங்கள் எழுத்து.
சரியான அலப்பறைதான்.. என்ன ஒரு அழகான ஸ்கெட்ச்.. அலமேலு கண் முன்னே..
எஸ்.ஏ.சரவணக்குமார் said...
அழகான நடை. அலமேலு பாட்டி உங்கள் எழுத்தில் வாழ்ந்துவிட்டாள்..!//
நன்றி சரவணக்குமார்
@ஆமாங்க ப்ரின்ஸ். நன்றி:)
ரோஸ்விக் said...
அலமேலு பாட்டிய பக்கத்து டீ கடையில இருந்து தினந்தோறும் பாத்தது மாதிரியே இருந்தது உங்க எழுத்து நடை... அருமை அண்ணே...//
நன்றி ரோஸ்விக்
நசரேயன் said...
அசத்தல் அண்ணன்//
நன்றிங்க அண்ணாச்சி:)
தாராபுரத்தான் said...
ஆண்டவன் அழைப்பை ஆண்டவள் ஏற்றுக்கொண்டாள்.நிம்மதியாக /
அருமையாச் சொன்னீங்கண்ணா.
மங்குனி அமைச்சர் said...
இடுக்கை அருமை சார்//
நன்றிங்க:)
பின்னோக்கி said...
70 வரிகளில் ஒரு பெண்மணியின் 92 வருட வாழ்க்கையை இதை விட சிறப்பாக விவரிக்க முடியுமா எனத் தெரியவில்லை. அடுத்த கட்டத்திற்கு சென்றது உங்கள் எழுத்து.//
பாராட்டுக்கு நன்றி:)
ரிஷபன் said...
சரியான அலப்பறைதான்.. என்ன ஒரு அழகான ஸ்கெட்ச்.. அலமேலு கண் முன்னே..//
நன்றிங்க ரிஷபன்.)
nallaayirunthaa alamelu appaththaa....:)
Post a Comment