Wednesday, January 6, 2010

டெக்னிக்கலா கொஞ்சம் பிரச்சனைகள்..

 எலக்ட்ரிசியன்:

அன்பே!
முதன் முதலில் நான் உன்னைச் சந்தித்த போது டெஸ்டிங் பல்ப் போல் என் மனது மினுக்கியது. முதன் முதலாய் என் விரல் தீண்டியபோது டெஸ்டர் விளக்காய் சிவந்தாய். மினுக் மினுக்கென்று பொய்கோபம் காட்டினாய். எப்படியோ கனெக்‌ஷன் கொடுத்து நம் வீட்டு விளக்கெரிய உன்னைத் திருமணம் செய்தேன். இ.பி. காரனை விட மோசமாக உன் தம்பிக்கு லஞ்சம் கொடுத்தது எனக்குத் தான் தெரியும்.

நாம் த்ரீ ஃபேஸ் ஆன பிறகு அடிக்கடி பவர் போகிறது. வாரா வாரம் சினிமா, வெளியில் சாப்பாடு என்று ஸ்பைக் பஸ்டர் வைத்தாலும் உன் வோல்டேஜ் ஸ்டெடியாக இருப்பதில்லை. 230ல் இருக்கிறாய் என்று பார்த்துக் கொண்டேயிருக்க 300க்கு எகிறி டி.வி, டேபிள் லேம்ப் எல்லாம் காலியாகிறது.

கொஞ்சல் செருப்பு, கெஞ்சல் டெஸ்டர் எல்லாம் பக்காவாக வைத்துக் கொண்டு, ந்யூட்ரல் வைரில் பிரச்சினை எனச் சரிசெய்யப் போனால் அங்கே பவர் கொடுக்கிறாய். பவர் வயராச்சே என்று டெஸ்டர் வைத்தால் சப்ளை மறைத்து, துணிந்து தொடுகையில் திடீரென ஷாக் கொடுக்கிறாய். 11 kv ட்ரான்ஸ்ஃபார்மரில் அடிபட்ட காக்காயாய் நான் தூக்கியடிக்கப் படுகிறேன்.

சில நேரம் மிகுந்த சந்தோஷத்துடன் லைன் கொடுத்து பகிரலாம் என வருகையில் எர்த்தாக்கி விடுகிறாய். அதையும் மீறி நான் கொஞ்சம் உற்சாகம் காட்டினால் இன்வெர்ட்டர் வைத்திருக்கிறேனோ என்று சந்தேகப்படுகிறாய். தீர்வாக தனிக்குடித்தனம் என்ற ட்ரிப்பர் வைத்தும் அடிக்கடி வோல்டேஜ் ஃப்ளக்சுவேஷனால் மிகவும் பாதிக்கப்படுகிறேன். என்னதான் செய்வது என்றே புரியவில்லை.

தங்கமணி: உன் ஃப்யூஸ் புடுங்கிட்டா இப்புடி பெனாத்த மாட்ட. பொத்திகிட்டு உக்காரு. இல்லாட்டி எலொக்ட்ரோக்யூட் ஆய்டுவ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொட்டி தட்டி:

அன்பே!

முதன் முதலில் நான் எவ்வளவு முயன்றும் நீ ட்ரைவர் நாட் ஃபவுண்ட் மாதிரியே இருந்தாய். பிறகுதான் உன் மனதில் ஆண்கள் என்றாலே நிறைய வைரஸ் இருப்பது அறிந்து, உன் தோழி மூலம் கோல்ட் பூட் செய்து, உன் ஆபரேடிங் சிஸ்டத்தில் இடம் பிடித்தேன்.

சேஃப் மோடில் மெது மெதுவே உன் வைரஸ் எல்லாம் நீக்கிய பின்னும், பூட் ஆக வெகு காலம் பிடித்தது. மிகுந்த பொறுமையுடன் உன் மன ரிஜிஸ்ட்ரியில் தேவையில்லாத எண்ட்ரிக்கள் நீக்கி, டிஃப்ராக் செய்து, ஆடோஸ்டார்ட் ப்ரோக்ராமெல்லாம் மாற்றி நான் சிஸ்டம் ரிஸ்டோர் கிரியேட் செய்தேன்.

எவ்வளவுதான் வைரஸ் சேராமல் பார்த்துக் கொண்டாலும், மால்வேர்கள் இறக்குமதி செய்து கொண்டு லோடாக்கத் தயங்குகிறாய். சில நேரம் நான் காணவில்லை என்று வேறு பொய் சொல்கிறாய். உனக்கு ஏதாவது வேண்டுமென்று கேட்கையில், விண்டோஸ் மெசேஜ் பாக்ஸ் மாதிரி வேணுமா வேணாமா, சரியா தவறா, என்று இரண்டு கேள்விகள் வாயில் வந்தாலும் எனக்கு மட்டும் எதிர் கருத்துக்கான நோ பட்டன் டிசேபிள் ஆகியே இருக்கிறது. க்ளோஸ் பட்டனும் இல்லாததால் மேற்கொண்டு பயணிக்க எஸ் பட்டன் அமுக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை.

கொஞ்சம் கோபப் பட்டாலும் ஹாங் ஆகி சாகடிக்கிறாய். ரி பூட் போட்டால் பூட் ஃபைலை ஒளித்து வைத்து பைத்தியமாக்குகிறாய். பல நேரங்களில், ட்ரெஸ்,சினிமா, ஹோட்டல் (alt+ctrl+del) அமுக்கினாலும் சட்டை பண்ணுவதேயில்லை.

ஏதாவது விவாதம் என்று வந்தால் சிண்டாக்ஸ் எர்ரர் என்று ஓரம் கட்டுகிறாய். நான் கொஞ்சம் கவனக் குறைவாய் இருக்கும் நேரம் ரிபூட் ஆகிறாய். என் உழைப்பெல்லாம் காணாமல் போகிறது. உனக்குத் தெரியாமல் சேமித்தால் ஹிட்டன் அட்ரிப்யூட் கொடுத்து டரியலாக்குகிறாய்.

முக்கியமான விஷயங்களை நினைவு படுத்தச் சொன்னல் மறந்துவிட்டு மெமொரி டம்ப் என்று போகிறாய். மூன்று வருடம் முன்பு சொன்ன மூக்குத்தி விஷயம் கவனம் வைத்துக் கொண்டு பூட்டிங் வைரஸாய் கொல்கிறாய். ரெகுலர் அப்டேட் செய்தாலும் அடிக்கடி லைசன்ஸ் செக் செய்கிறாய். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

தங்கமணி: அடிங்கொய்யாலே. விட்டா ஓவராத்தான் போய்க்கிருக்க. என்னா ப்ளான்? ப்ராஸஸர் இல்லாம பண்ணிடுவேன். சி ப்ராம்ப்டுக்கு கூட சிங்கியடிக்கணும் ஜாக்கிரதை.

65 comments:

க.பாலாசி said...

டெஸ்ட்..

ஆரூரன் விசுவநாதன் said...

ஹா.....ஹா...ஹா.....ஹா......


வயிறு வலிக்குது.....

க.பாலாசி said...

//தங்கமணி: உன் ஃப்யூஸ் புடுங்கிட்டா இப்புடி பெனாத்த மாட்ட. பொத்திகிட்டு உக்காரு. இல்லாட்டி எலொக்ட்ரோக்யூட் ஆய்டுவ.//

இது ஷாக்.

//ப்ராஸஸர் இல்லாம பண்ணிடுவேன்//

ஆத்தாடி....

Paleo God said...

ஏண்ணே... STABLIZER ட்ரை பண்றதுதானே ::))??

இராகவன் நைஜிரியா said...

அண்ணே... எப்படிங்க அண்ணே இதெல்லாம்...

ரொம்ப நல்லா இருக்கு..

இராகவன் நைஜிரியா said...

// உன் ஃப்யூஸ் புடுங்கிட்டா இப்புடி பெனாத்த மாட்ட. பொத்திகிட்டு உக்காரு. இல்லாட்டி எலொக்ட்ரோக்யூட் ஆய்டுவ.//

இன்னுமா ஃப்யூஸ் புடுங்காம இருக்காங்க... கொடுத்து வச்சவர்.

இராகவன் நைஜிரியா said...

// அடிங்கொய்யாலே. விட்டா ஓவராத்தான் போய்க்கிருக்க. என்னா ப்ளான்? ப்ராஸஸர் இல்லாம பண்ணிடுவேன். சி ப்ராம்ப்டுக்கு கூட சிங்கியடிக்கணும் ஜாக்கிரதை. //

அது சரி....

Ramesh said...

அண்ணே.. தாங்க முடியல.. ஹாஹாஹாஹா...
ம்ம்ம் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..
இரண்டுமே அசத்தல் போங்க.

ஜிகர்தண்டா Karthik said...

அருமையா இருக்குன்னே...
உக்காந்து வெறித்தனமா தினக் பண்ணிருகீங்க..
முதலுக்கு எனது பதில் - பெடர்மாக்ஸ் லைட் வாங்கிற வேண்டியதுதான்..
ரெண்டாவதுக்கு - புது கம்ப்யூட்டர் வாங்குங்க...
இதுதான் இந்த நாட்டாமை தீர்ப்பு....

ராஜ நடராஜன் said...

பள்ளிக்கூட பசங்க கண்ணுல படணும்.கப்புன்னு புடிச்சுக்குவாங்க:)

தங்கமணி செக்மேட் வைக்கறதும் நல்லதுதான் போல:)

அகல்விளக்கு said...

சிச்சு சிச்சு வயிரு வலிக்குதுண்ணா...........

:-)))

பின்னோக்கி said...

பிரியமுடன் வசந்த் கூட பழக்கம் வெச்சுக்காதீங்கன்னு எத்தனையோ தடவை உங்ககிட்ட சொன்னேன். ஆனா நீங்க கேட்கலை.

ஸ்ரீராம். said...

வித்தியாச சிந்தனை...நல்லா இருக்கு.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

எப்படி இத்தனை விசயங்கள் / தொடர்புள்ள வார்த்தைகள் கிடைக்குது உங்களுக்கு? கலக்கலா இருக்கு :)

ஈரோடு கதிர் said...

//நாம் த்ரீ ஃபேஸ் ஆன பிறகு //

நல்லவேளை 4 அல்லது 5ஃபேஸ் ஆகாலை

geethappriyan said...

நல்ல ஹாஸ்யம் ஐயா
வாக்குகள் அளித்தேன்

Unknown said...

நல்ல காமெடி.

இந்த மாரி பிரச்சனைக்கெல்லாம் நம்ம கைல ஒரு சொலூசன் கீது. தங்கமணிய ஒரு ரூம்க்குள்ள தள்ளி கதவப் பூட்டிட்டு...

கால்ல விழுந்துடனும். அவ்வளவுதான்.

ஈரோடு கதிர் said...

//உற்சாகம் காட்டினால் இன்வெர்ட்டர் வைத்திருக்கிறேனோ என்று சந்தேகப்படுகிறாய். //

அடங்கொன்னியா இது வேறையா சாமி

ஈரோடு கதிர் said...

//எஸ் பட்டன் அமுக்குவதைத் தவிர //

இருங்க அண்ணன்கிட்ட சொல்றேன்

// ப்ராஸஸர் இல்லாம பண்ணிடுவேன்//

அட்றா சக்கை அட்றா சக்கை அட்றா அட்றா சக்கை

ஆப்பு வச்சாத்தான் கம்னு கிடைப்பீங்க

ஈரோடு கதிர் said...

//எஸ் பட்டன் அமுக்குவதைத் தவிர //

இருங்க அண்ணன்கிட்ட சொல்றேன்

// ப்ராஸஸர் இல்லாம பண்ணிடுவேன்//

அட்றா சக்கை அட்றா சக்கை அட்றா அட்றா சக்கை

ஆப்பு வச்சாத்தான் கம்னு கிடைப்பீங்க

Chitra said...

சி ப்ராம்ப்டுக்கு கூட சிங்கியடிக்கணும் ஜாக்கிரதை. .......... ha,ha,ha,ha........சிரிச்சி முடியலை.

ப்ரியமுடன் வசந்த் said...

(*_*)

http://storage0.dms.mpinteractiv.ro/media/401/581/7961/2462467/2/smiley-face-wallpaper-001.jpg

பிரபாகர் said...

கரன்ட் மேட்டருங்கறது இதுதானாங்கய்யா?

//சி ப்ராம்ப்டுக்கு கூட சிங்கியடிக்கணும் ஜாக்கிரதை.
//
அய்யா புரியுதுல்ல, பி கேர்ஃபுல்.

பிரபாகர்.

சிநேகிதன் அக்பர் said...

கலக்கல் ஐயா,

டெக்னிக்கலா கலக்குறது இப்படித்தானா.

ரோஸ்விக் said...

பிரச்சனைகள் எவ்வளவு டெக்னிக்கலா இருந்தாலும்.... டெக்னிக்கா ஹேண்டில் பண்ற ஆளு நீங்க... ஆனா, ப்ராஸஸர்-ஐ பத்திரமா பார்த்துக்கங்க ஆமா... :-)))

நசரேயன் said...

தெரியாத்தனமா அலுவலகத்திலே படிச்சி பிட்டேன் ...

vasu balaji said...

க.பாலாசி said...

/ டெஸ்ட்../

ம்கும். இது வேற

/இது ஷாக். /

உனக்கு இது புதுசா என்ன?

/ஆத்தாடி..../

ஏன் அலர்றா?

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/ஹா.....ஹா...ஹா.....ஹா......


வயிறு வலிக்குது...../

இது ஏதோ அனானி பின்னூட்டமாட்ருக்கு. அன்புடன் ஆரூரன் காணோம்..அவ்வ்வ்வ்

vasu balaji said...

பலா பட்டறை said...

/ஏண்ணே... STABLIZER ட்ரை பண்றதுதானே ::))??/

அட ட்ரிப்பரே வேலைக்காவலையாம். இது வேற தண்ட செலவா:))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே... எப்படிங்க அண்ணே இதெல்லாம்...

ரொம்ப நல்லா இருக்கு../

நன்றிண்ணே.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ இன்னுமா ஃப்யூஸ் புடுங்காம இருக்காங்க... கொடுத்து வச்சவர்.//

இது வேறயா. கம்பேனி ரகசியம் வெளிய வந்துடுத்தே:))

vasu balaji said...

றமேஸ்-Ramesh said...

//அண்ணே.. தாங்க முடியல.. ஹாஹாஹாஹா...
ம்ம்ம் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..
இரண்டுமே அசத்தல் போங்க.//

:)) வாங்க றமேஸ்

vasu balaji said...

ஜிகர்தண்டா Karthik said...

// அருமையா இருக்குன்னே...
உக்காந்து வெறித்தனமா தினக் பண்ணிருகீங்க..//

ம்கும். இதுக்கு உக்காந்து வேற யோசிக்கிறாங்களா?

//முதலுக்கு எனது பதில் - பெடர்மாக்ஸ் லைட் வாங்கிற வேண்டியதுதான்..//

அந்த பிரச்சனையும் எழுதிட்டா போச்சி.

//ரெண்டாவதுக்கு - புது கம்ப்யூட்டர் வாங்குங்க...//

அது வேற ஃபேமிலியால்ல ஆயிடும். இது போய் சொல்யூஷனா?

// இதுதான் இந்த நாட்டாமை தீர்ப்பு....//

விளங்கீரும்.

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

பள்ளிக்கூட பசங்க கண்ணுல படணும்.கப்புன்னு புடிச்சுக்குவாங்க:)

தங்கமணி செக்மேட் வைக்கறதும் நல்லதுதான் போல:)//

ஆஹா. உங்ககிட்ட இருந்து கமெண்ட் வந்திச்சின்னா நல்லாதான் வந்திருக்கு :))

vasu balaji said...

அகல்விளக்கு said...

//சிச்சு சிச்சு வயிரு வலிக்குதுண்ணா...........

:-)))//

ம்ம்ம்:))

vasu balaji said...

பின்னோக்கி said...

//பிரியமுடன் வசந்த் கூட பழக்கம் வெச்சுக்காதீங்கன்னு எத்தனையோ தடவை உங்ககிட்ட சொன்னேன். ஆனா நீங்க கேட்கலை.//

நாந்தான் விடை தலைப்புலயே சொல்லிட்டேனே..அவ்வ்வ்:))

vasu balaji said...

ஸ்ரீராம். said...

/வித்தியாச சிந்தனை...நல்லா இருக்கு./

நன்றிங்க ஸ்ரீராம்

vasu balaji said...

ச.செந்தில்வேலன் said...

/எப்படி இத்தனை விசயங்கள் / தொடர்புள்ள வார்த்தைகள் கிடைக்குது உங்களுக்கு? கலக்கலா இருக்கு :)//

வாங்க செந்தில்:)) நன்றி

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ நல்லவேளை 4 அல்லது 5ஃபேஸ் ஆகாலை//

தோடா. இப்புடியெல்லாம் வேற அகிடியா இருக்கோ.

vasu balaji said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நல்ல ஹாஸ்யம் ஐயா
வாக்குகள் அளித்தேன்//

நன்றிங்க கார்த்திக்.

vasu balaji said...

முகிலன் said...

நல்ல காமெடி.

இந்த மாரி பிரச்சனைக்கெல்லாம் நம்ம கைல ஒரு சொலூசன் கீது. தங்கமணிய ஒரு ரூம்க்குள்ள தள்ளி கதவப் பூட்டிட்டு...

கால்ல விழுந்துடனும். அவ்வளவுதான்.//

இந்த ஒரு டெக்கினிக்கதான் தலமுறை தலமுறையா பண்ணிட்டிருக்காங்க இந்த ஆம்பிளைங்க. ஆனாலும் என்னமோ தாந்தான் கண்டுபிடிச்ச்சா மாதிரி அலம்பல் இருக்கே. :)) அங்க பாருங்க முகிலன் தங்க்ஸ் ஹய்யோஓ ஹய்யோஒன்னு சிரிக்கிறாங்க.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ அடங்கொன்னியா இது வேறையா சாமி//

எர்த்ல கை வச்சாமாதிரி ஏன் தூக்கிவாரி போடுது:))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ இருங்க அண்ணன்கிட்ட சொல்றேன்/

ஏன். எனக்கு அய்யாதான் இதுக்கும் ஆசான்னு சொல்லவா:))


/அட்றா சக்கை அட்றா சக்கை அட்றா அட்றா சக்கை

ஆப்பு வச்சாத்தான் கம்னு கிடைப்பீங்க//

கதிருக்கு கட்டம் சரியில்ல:))

vasu balaji said...

Chitra said...

//சி ப்ராம்ப்டுக்கு கூட சிங்கியடிக்கணும் ஜாக்கிரதை. .......... ha,ha,ha,ha........சிரிச்சி முடியலை.//

சித்ராக்கு என்னாச்சி. எல்லா இடுகையிலயும் லாஸ்ட்லைன் கட் பேஸ்ட் பின்னூட்ட டெம்ப்ளேட்:))

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/(*_*)/

பழனியா திருப்பதியா?

vasu balaji said...

பிரபாகர் said...

கரன்ட் மேட்டருங்கறது இதுதானாங்கய்யா?

//சி ப்ராம்ப்டுக்கு கூட சிங்கியடிக்கணும் ஜாக்கிரதை.
//
அய்யா புரியுதுல்ல, பி கேர்ஃபுல்.

பிரபாகர்.//

ஓஹோ. சரி.

vasu balaji said...

அக்பர் said...

கலக்கல் ஐயா,

டெக்னிக்கலா கலக்குறது இப்படித்தானா.//

இது ஒரு வகை அவ்வளவுதான். முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

vasu balaji said...

ரோஸ்விக் said...

//பிரச்சனைகள் எவ்வளவு டெக்னிக்கலா இருந்தாலும்.... டெக்னிக்கா ஹேண்டில் பண்ற ஆளு நீங்க... ஆனா, ப்ராஸஸர்-ஐ பத்திரமா பார்த்துக்கங்க ஆமா... :-)))//

நன்றி ரோஸ்விக்:))

vasu balaji said...

நசரேயன் said...

//தெரியாத்தனமா அலுவலகத்திலே படிச்சி பிட்டேன் ...//

நான்கூடத்தான் யாருக்கும் தெரியாத் தனமா அலுவலகத்தில எழுதினேன்:))

கலகலப்ரியா said...

அப்புறம் படிச்சுக்கறேன் சார்...

vasu balaji said...

கலகலப்ரியா said...

/அப்புறம் படிச்சுக்கறேன் சார்../

யூ த 50:)).

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஹா.....ஹா...ஹா.....ஹா......

Subankan said...

எலக்ட்ரிசியன் சூப்பர் அண்ணா, சிரித்துச் சிரித்து வயிறு வலிக்குது

S.A. நவாஸுதீன் said...

அம்மாடி......... சிரிச்சு சிரிச்சு முடியலை சார்.

ஆஃபிஸ்ல எனக்கு ஏதொ டெக்னிக்கல் ப்ராப்ளம் மாதிரி பாக்குறாங்க எல்லாரும்.

எம்.எம்.அப்துல்லா said...

நல்லவேளை கணக்குப்பிள்ளைகளை விட்டுட்டீங்க. ஜாதிபாசம்??

:))

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/ஹா.....ஹா...ஹா.....ஹா....../

:))

vasu balaji said...

Subankan said...

/எலக்ட்ரிசியன் சூப்பர் அண்ணா, சிரித்துச் சிரித்து வயிறு வலிக்குது/

:)). நன்றி சுபாங்கன். டாக்டரைக் காணலையே:))

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

//அம்மாடி......... சிரிச்சு சிரிச்சு முடியலை சார்.

ஆஃபிஸ்ல எனக்கு ஏதொ டெக்னிக்கல் ப்ராப்ளம் மாதிரி பாக்குறாங்க எல்லாரும்.//

=)). நன்றி நவாஸ்

vasu balaji said...

எம்.எம்.அப்துல்லா said...

/ நல்லவேளை கணக்குப்பிள்ளைகளை விட்டுட்டீங்க. ஜாதிபாசம்??

:))//

தோடா. அதெல்லாம் விடலை. ஆடிட்ல நீளம் கருதி தேக்கிட்டாங்க:))

Thamira said...

நல்ல கலகலப்பான நகைச்சுவைக் கடிதங்கள். :‍-))

vasu balaji said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்ல கலகலப்பான நகைச்சுவைக் கடிதங்கள். :‍-))//

வாங்க ஆதி. நன்றி.

கலையரசன் said...

உங்களுக்கு டெக்னிக்கலா என்ன பின்னூட்டம் போடுறதுன்னு நான் இங்க யோசிச்சிகிட்டு இருக்கேன்!!
:-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

நிறைய சிரிக்க வைத்து சிந்திக்க வச்சிட்டீங்களே

vasu balaji said...

கலையரசன் said...

உங்களுக்கு டெக்னிக்கலா என்ன பின்னூட்டம் போடுறதுன்னு நான் இங்க யோசிச்சிகிட்டு இருக்கேன்!!
:-)//

வாங்க கலை. நன்றி முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

vasu balaji said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நிறைய சிரிக்க வைத்து சிந்திக்க வச்சிட்டீங்களே//

வாங்க ஸ்டார்ஜன்:))