Friday, January 8, 2010

அல்லோ! நாங்களும் மிகப் பெரிய ரவுடிதான்..

நேற்று காலையில் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடந்தேவிட்டது. என்னன்னு கேக்க மாட்டிங்களா? ப்ரியா நீ கேளேன். கதிர் நீங்க கேளுங்களேன். பாலாசி நீயாவது கேளேன். சரி நானே சொல்லிடுறேன். நாய் சேகர் மாதிரி கெஞ்சாம, அலப்பற பண்ணாம நானும் கோர்ட்டுல போய் சாட்சி சொல்லிட்டு வந்தேன். (யோவ்! த்த்தூன்னு சத்தம் வந்திச்சே யாரு துப்பினது?)

44 வருஷமா சென்னை மாநகருக்குள்ள இருந்தாலும், சுத்திப்பார்க்கன்னு கூட ஹைகோர்ட் உள்ள போகாத ஒரு அப்புராணிய விதி இழுத்து கொண்டு போய் விட்டுடுச்சி.  அலுவலக சம்பந்தமான ஒரு கேஸ் (அல்ல்ல்லோ! க்க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிமினல் கேசுங்க) விஷயமாக 7ம் திகதி காலை 10 மணிக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய யூத்து (நாந்தான் நாந்தான்) சாட்சி சொல்ல வேண்டியிருப்பதால் முந்தா நாள் சாயந்திரம் 4.00 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் என்ற கடிதம் சுமார் 4 மணிக்கு கொடுக்கப்பட்டது.

ஆட்டோ பிடித்து ஓடி, வக்கீலை பார்த்து விபரம் கேட்டுக் கொண்டு நாளைக் காலை 10க்கெல்லாம் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி வரும் வரையில் எந்த பரபரப்பும் இல்லை. நேரம் செல்லச் செல்லத்தான் இந்த வரலாற்றுச் சிறப்பான நிகழ்ச்சியின் தாக்கம் என்னுள் இறங்க ஆரம்பித்தது.

ஒரு ஃபேன் வாங்கவும், வாக்மேன் வாங்கவுமே அரைலூசாகும் அளவுக்கு பல்வேறு சிந்தனைகளுக்கு ஆளாகும் நான் இதில் மட்டும் சோடை போய் விடுவேனா என்ன? மனதிற்குள் பராசக்தி முதல் பார்த்த படங்களில் எல்லாம் வந்த கோர்ட் சீன் கண்முன் வந்தது. ஆண் பெண் என்று அத்தனை வக்கீல் பாத்திரத்தில் நடித்த நடிகர்களும், பெர்ரிமேசனும் சூழ்ந்து நின்று கும்மியடித்தார்கள். அந்தக் கும்பலில் ரொம்ப சாதுவாய் இருந்தது நானும் எங்கள் வழக்கறிஞரும்தான்.

நானே சாட்சியாய், நானே வக்கீலாய், நானே எதிர்கட்சி வக்கீலாய், நானே நீதிபதியாய், நானே வானம்பாடி, வானம்பாடி வானம்பாடி எனக்கூவும் டவாலியாய் எல்லாம் கற்பனை செய்து கொண்டு விசாரணை, குறுக்கு விசாரணை எல்லாம் நடாத்தி ரிகர்சல் பார்த்துக் கொண்டு ஒரு மார்க்கமாய் தூங்கப் போனேன்.

காலையில் ஒரு வழியாக, தேடி கண்டுபிடித்து சரியான கோர்ட்டில் ஆஜராகி, அங்கிருந்தவரிடம் சம்மனை நீட்டி இங்கதானே என்றேன். அரைக்கண்ணால் பார்த்து, விட்னஸா, அங்க போய் உக்காருங்க என்று ஒரு பெஞ்சைக் காட்டினார். முதல் முறை கோர்ட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் அந்த வரலாற்று நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை ஊடகங்கள் தவற விட்டாங்களேன்னு அனுதாபமா இருந்தது.

உள்ள நுழைஞ்சா 2 கூண்டு இருந்திச்சி. கொஞ்சம் மிரண்டு போய் அப்புறம் சரி பெருசா கும்பலா இருக்கிறது குற்றவாளிக் கூண்டு, ஒத்தையா இருக்கிறது சாட்சிக் கூண்டுன்னு சமாதானமாகி அந்த பெஞ்சில் போய் அமர்ந்தேன். சுற்றிலும் தூங்குமூஞ்சி மரம், குளுகுளுவென்ற காற்று, ஜன்னலோர பெஞ்ச். சவாசனம் செய் என்று மனசு கெஞ்சினாலும் இல்லை கோழியாசனம்தான் நல்லது என்று யோகாவில் மூழ்கினேன்.

சைலேன்ஸ் என்று சினிமா மாதிரியே கோர்ட் ஆரம்பித்தது. கேஸ் நம்பர் படித்து குற்றவாளிகள் பெயர்களைப் படிக்க என்னமோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் வரிசையாக அவர்கள் இடத்தில் வந்து நின்று கை தூக்குவார்களே அப்படி வந்து நின்றதும் ஆடிப்போனேன்.

ங்கொய்யால நெத்தி நிறைய விபூதி, சந்தனம், குங்குமம், கையில கழுத்துல கலர் கலரா கயிறு, தாயத்து இன்னும் என்னல்லாம் உண்டோ அத்தனையும் வைத்துக் கொண்டு வந்தவர்கள் நடுவில் நான் கேடி மாதிரி இருந்ததாகப்பட்டது. (ப்ரியா: இல்லன்னாலும்!)

எனக்குன்னே அமையுமா தெரியல. அந்த கும்பல்ல ஒருத்தன் பேரு என் பேரா இருந்து தொலையுமா? அதுவும் வராம இருந்து தொலைவானா. இவங்க பேர் சொல்லி திரும்ப திரும்ப கூப்பிட கால் எழுந்து ஓடுறேன்னு இழுக்க, மண்டை பன்னாட அது குற்றவாளி பட்டியல் நீயில்லடான்னு இழுத்து புடிக்க அந்த கும்பல்ல ஒரு புண்ணியவான் அவரு வரலைங்கன்னான். அப்பாடான்னு இருந்திச்சி.

ஒரு வழியா ஏறு ராசான்னு கூப்புட்டாக. நான் பொசுக்குன்னு ஊடால போய் நின்னா, அங்க நின்ன ஆளு, ஏங்க இப்புடி குறுக்கால வரக்கூடாதுங்க. சுத்திக்கிட்டு வரணும்னான். சரியா, ஏறி நின்னு, எல்லா சாமியும் கும்பிட்டு மனசுக்குள்ள இருந்த பக் பக்கை  மறைத்து நீதிபதியை பார்த்து ஒரு கான்ஃபிடண்ட் அண்ட் ப்ளீசிங் ஸ்மைல் (ப்ரியா:ஹய்யோ ஹய்யோ! பிதாமகன் விக்ரம் மாதிரி சிரிச்சிருக்கும். இதுக்கு இந்த சீனப் பாரேன். சார் முடியல) விட்டு நிற்க, எதிர் கட்சி வக்கீல் புதுசா ஏதோ பிரச்சனை கிளப்பினார்.

இறங்கிப் போய் உக்காருங்க கூப்புடுவாங்கன்னு என் முதல் எண்ட்ரியே ஊத்திகிச்சி. இந்த முறை வடிவேலுக்கு எதிர் திசையில் கலக்க ஆரம்பித்துவிட்டது. சகுனமே சரியில்லையே என்னாகுமோ என்ற பயம் ஒரு பக்கம். எதிர் கட்சி வக்கீலும் நீதிபதியும் விவாதத்தில் இறங்கி யார் சூடாகி விட்டாலும் பொரியப் போறது நான் என்ற பயம் ஒரு பக்கம்.

பக்கத்து பன்னாட சத்தமாகவே ஸ்லோகம் சொல்லி சாமிகிட்ட டீலிங் போடுறாரு. எனக்கு அதுவும் வராது. வேணாம்! வேணாம். கூப்டுருங்க. அழுதுறுவேன்னு நான் ஸ்லோகம் சொல்லிக்கிட்டேன்.

இந்த முறை கூப்பிட்டதும் வக்கீல்கள் கோட்டுப் பின்னாடி மறைஞ்சு வந்ததால ஏன் இப்படி வந்தன்னு யாரும் கேக்கல. ஏறீட்டேன் கூண்டுக்குள்ள. ஜட்ஜ் அய்யாக்கும் என்ன பத்தி தெரிஞ்சிருக்கும் போல. இங்லீஷ் வருமான்னாரு. மனசுக்குள்ள ஆத்தா சொல்ற ஜாவும் இல்லாம யாவும் இல்லாம ஒரு மாதிரியான ஜ்யா வந்து அப்புடியே எடுத்து வுட்டேன். ரொம்ப நட்பா பிரமாணம் சொல்ல வச்சாரு.

அப்புறம் எங்க வக்கீல பார்த்து நீங்க கேக்கலாம்னாரு. உள்ளங்கால்ல இருந்து ஒரு சூடு பரவிச்சி. சொறி நாய்க்கு பயந்து ஓடுறவன் மாதிரி லப்டப் காதுல டோல்பி சவுண்ட்ல கேக்குது. பாடி, பேஸ்மெண்ட் எல்லாம் தடதடன்னு ஆடுது. நாவு அண்ணத்துல ஒட்டிகிச்சி.
ஆரம்பிச்சது அந்த வரலாற்று நிகழ்ச்சி:-

வக்கீல்: இந்தக் கையெழுத்து உங்களோடதா?

நான்: ஆமாம்

வக்கீல்:இந்த நம்பர் உங்களோடதா?

நான்: ஆமாம்

வக்கீல்: இந்த நம்பர் ரிசர்வ் பேங்க் குடுத்த நம்பரா?

நான்: ஆமாங்க.

கமான் நேக்ஸ்ட்னு இருக்க பொசுக்குன்னு அவ்ளதான்னுட்டாரு. நோஓஓஓஓ. திஸ் ஈஸ் நாட் ஃபேர். இதுக்கா நான் இவ்வளவு மெர்ச்சலானேன்னு வந்திச்சி. ஜட்ஜ் அய்யா எதிர்கட்சி வக்கீல பார்த்து க்ராஸ்னாரு.

அவரு இன்னும் நட்பா நோ யுவர் ஹானர்னு என்னிய பார்த்து சிரிச்சதுல அழுகை முட்டிகிட்டு வந்திச்சி. குற்றம் சாட்டப் பட்டவர்களை நீங்க ஏதாவது கேக்க போறீங்களான்னா, என்னிய பார்க்க கூட பாராம ச்ச்ச்சீ போடான்னுட்டானுங்க.

அத்தனையும் விழுங்கிக்கிட்டு ஆஃபிஸ் வந்தா, நம்ம சதீஷ் (எனக்கு உதவிக்கு இருக்கிறவரு) எங்க சார் போய்ட்டீங்கன்னப்ப சொன்னேன்: நானும் மிகப் பெரிய ரவுடிதான்னு இந்த உலகத்துக்கு காட்டிட்டு வந்தேன்னு!

206 comments:

1 – 200 of 206   Newer›   Newest»
ஈரோடு கதிர் said...

செரி... செரி இனிமே இப்படி குற்றம் செஞ்சு.... ஜெயிலுக்குப் போகாதீங்கா.... சாரி... கோர்ட்டுக்கு போகாதீங்க

க.பாலாசி said...

//யோவ்! த்த்தூன்னு சத்தம் வந்திச்சே யாரு துப்பினது?//

நானில்லிங்... அது கதிர் சார் பக்கத்லேர்ந் வருதுங்...

vasu balaji said...

க.பாலாசி said...

/ நானில்லிங்... அது கதிர் சார் பக்கத்லேர்ந் வருதுங்.../

வா ராசா. பின்னூட்ட மன்னா. டைமிங்ல உன்ன அடிச்சிக்க ஆளில்லடி. நடத்து:))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//செரி... செரி இனிமே இப்படி குற்றம் செஞ்சு.... ஜெயிலுக்குப் போகாதீங்கா.... சாரி... கோர்ட்டுக்கு போகாதீங்க//

அல்லோ. நாம போனது சாட்சிக்கு:))

க.பாலாசி said...

//அந்த வரலாற்று நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை ஊடகங்கள் தவற விட்டாங்களேன்னு அனுதாபமா இருந்தது. //

நல்லவேள இந்த கொடுமையை பாக்காம மக்கள் தப்பிச்சாங்க...

க.பாலாசி said...

//சுற்றிலும் தூங்குமூஞ்சி மரம், குளுகுளுவென்ற காற்று, ஜன்னலோர பெஞ்ச். சவாசனம் செய் என்று மனசு கெஞ்சினாலும் இல்லை கோழியாசனம்தான் நல்லது என்று யோகாவில் மூழ்கினேன்.//

அங்கண போயி ஆசனம்லாம் பண்ணமுடியாதே... பண்ணினா...ஆசனத்த அமரவிடாம பண்ணிடுவாங்களே..

எறும்பு said...

அசால்டா பண்ற வேலைய அல்ப***மா பண்ணிட்டு பேச்சை பாரு பேச்சை..
;))

க.பாலாசி said...

//(ப்ரியா: இல்லன்னாலும்!)//

இதை நான் வழிமொழிகிறேன்.

vasu balaji said...

க.பாலாசி said...

// நல்லவேள இந்த கொடுமையை பாக்காம மக்கள் தப்பிச்சாங்க...//

ஏன் சொல்லமாட்ட. எனக்கொரு பனங்கொட்டைக்கு கூட கதியத்துப் போச்சு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

பிரபாகர் said...

அய்யா,

கோர்ட் வசனங்கள வீதியில் பாடற ரேடியோவில கேட்டு கேட்டு மனப்பாடமே ஆகற அளவுக்கு(விதி - கணக்கே இல்லய்யா) இருந்த நான் ஒரு நாள் ஆத்தூர் கோர்ட்ல நேர்ல பாத்துட்டு சப்புனு ஆயிட்டேன்.

இங்க உங்க இடுகையை படிச்சிட்டு வரிக்கு வரி சிரிச்சி மாளல. நக்கல் நையாண்டியோட அருமை அய்யா!

பிரபாகர்.

vasu balaji said...

க.பாலாசி said...

/ அங்கண போயி ஆசனம்லாம் பண்ணமுடியாதே... பண்ணினா...ஆசனத்த அமரவிடாம பண்ணிடுவாங்களே..//

அல்லோ. கோர்ட் ஆரம்பிக்க முன்ன. இந்த பீலால்லாம் உடாதடி. அங்க வக்கீலு குத்தவாளி தேச்சி வச்சிருந்த கைனி புடுங்கி வாய்ல அப்பிகிட்டு அசிங்கமா திட்டு படுறான்.

vasu balaji said...

ராஜகோபால் (எறும்பு) said...

// அசால்டா பண்ற வேலைய அல்ப***மா பண்ணிட்டு பேச்சை பாரு பேச்சை..
;))//

அட மொதக்கா போறதுன்னா அப்புடிதான் இருக்கும்:))

vasu balaji said...

க.பாலாசி said...

//(ப்ரியா: இல்லன்னாலும்!)//

இதை நான் வழிமொழிகிறேன்.//

இன்னிக்கி நிறைய இடுகையில இப்புடி போட்டிருந்தியே. புது டெம்ப்ளேட்டா:))

எறும்பு said...

//நானும் மிகப் பெரிய ரவுடிதான்னு இந்த உலகத்துக்கு காட்டிட்டு வந்தேன்னு!//

உங்க ரேஞ்சுக்கு இதெல்லாம் சப்ப மாட்டரு... ஏதாவது பெரிசா பண்ணிட்டு உள்ள போய்ட்டு வாங்க... முதல் காரியமா மைனஸ் ஓட்டு போடறவன் யாருன்னு கண்டுபிடிச்சு ஒரு சதக் பண்ணுங்க... கூடிய சீக்கிரம் சி ம் ஆயிடலாம்..
;))

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

:-)))//

வாங்க சார்:))

vasu balaji said...

பிரபாகர் said...

அய்யா,

கோர்ட் வசனங்கள வீதியில் பாடற ரேடியோவில கேட்டு கேட்டு மனப்பாடமே ஆகற அளவுக்கு(விதி - கணக்கே இல்லய்யா) இருந்த நான் ஒரு நாள் ஆத்தூர் கோர்ட்ல நேர்ல பாத்துட்டு சப்புனு ஆயிட்டேன்.

இங்க உங்க இடுகையை படிச்சிட்டு வரிக்கு வரி சிரிச்சி மாளல. நக்கல் நையாண்டியோட அருமை அய்யா!

பிரபாகர்.//

:)). அப்புடிங்கறீங்க? நன்றி

vasu balaji said...

ராஜகோபால் (எறும்பு) said...

/ உங்க ரேஞ்சுக்கு இதெல்லாம் சப்ப மாட்டரு... ஏதாவது பெரிசா பண்ணிட்டு உள்ள போய்ட்டு வாங்க... முதல் காரியமா மைனஸ் ஓட்டு போடறவன் யாருன்னு கண்டுபிடிச்சு ஒரு சதக் பண்ணுங்க... கூடிய சீக்கிரம் சி ம் ஆயிடலாம்..//

சே சே. நான், கேபிள், கதிர்லாம் இவனுங்க வரலைன்னாதான் நம்ம பாப்புலாரிட்டி போச்சேன்னு டொக்குன்னு ஆய்டுவம்.
;))

பிரபாகர் said...

//சவாசனம் செய் என்று மனசு கெஞ்சினாலும் இல்லை கோழியாசனம்தான் நல்லது என்று யோகாவில் மூழ்கினேன்.//

இப்படியும் ஒரு ஆசனம் இருக்கிறது இப்பத்தான் தெரியும். இத்தன நாள் நான் தொடர்ந்து ஒரு ஆசனம் செஞ்சிகிட்டிருக்கேங்கறது இன்னிக்குத்தான் தெரியும்.

பிரபாகர்.

எம்.எம்.அப்துல்லா said...

ஏய்ய்ய்..நாங்கள்லாம் பலமுறை கோட்டுலேயே சேட்டை பண்ணுனவிங்க.தெர்யும்ல.

:)

க.பாலாசி said...

//இன்னிக்கி நிறைய இடுகையில இப்புடி போட்டிருந்தியே. புது டெம்ப்ளேட்டா:))//

நோ... என்னைய யரோ விடாம ஃபாளோ பண்றாங்க...என்னோட டெம்ப்ளேட்டே வேற...

எம்.எம்.அப்துல்லா said...

சும்மா முன்சீப் கோர்ட்டு, சி.ஜே.எம் கோர்ட்டுனு போயி போரடிக்குது நைனா. எத்துன்னா பெர்ஸா பண்ணிட்டு சுப்ரீம் கோர்ட்டு போவோம்.

ஆரூரன் விசுவநாதன் said...

//சென்னை உயர்நீதி மன்றத்தில் பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய யூத்து (நாந்தான் நாந்தான்) சாட்சி சொல்ல வேண்டியிருப்பதால்//


ஹும்....ரொம்ப கஷ்டம்.......

ஆரூரன் விசுவநாதன் said...

//நானே சாட்சியாய், நானே வக்கீலாய், நானே எதிர்கட்சி வக்கீலாய், நானே நீதிபதியாய், நானே வானம்பாடி, வானம்பாடி வானம்பாடி எனக்கூவும் டவாலியாய் எல்லாம் கற்பனை செய்து கொண்டு விசாரணை, குறுக்கு விசாரணை எல்லாம் நடாத்தி ரிகர்சல் பார்த்துக் கொண்டு ஒரு மார்க்கமாய் தூங்கப் போனேன்.//

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல்ல.........

க.பாலாசி said...

//அவரு இன்னும் நட்பா நோ யுவர் ஹானர்னு என்னிய பார்த்து சிரிச்சதுல அழுகை முட்டிகிட்டு வந்திச்சி//

கேள்வி கேட்டா அவருக்குள்ள அழுகை வந்திருக்கும் ...அதனாலத்தான் விட்டிருப்பாரு...

பின்னோக்கி said...

உடனே இந்த பதிவ நீக்கிடுங்க. Contempt of the Court ஆகிடப் போகுது.

ஆரூரன் விசுவநாதன் said...

//பக் பக்கை மறைத்து நீதிபதியை பார்த்து ஒரு கான்ஃபிடண்ட் அண்ட் ப்ளீசிங் ஸ்மைல்//

(ப்ரியா:ஹய்யோ ஹய்யோ! பிதாமகன் விக்ரம் மாதிரி சிரிச்சிருக்கும். இதுக்கு இந்த சீனப் பாரேன். சார் முடியல)


ப்ரியா தப்பா சொல்லீட்டாங்க....... நம்ம சிரிப்புதான்
எப்பவுமே பாக்கியராசு சிரிப்பாச்சே......

அதுக்குப் பேரு சிரிக்கிறதில்ல...

நே.....ன்னு முழிக்கறது

vasu balaji said...

பிரபாகர் said...

/ இப்படியும் ஒரு ஆசனம் இருக்கிறது இப்பத்தான் தெரியும். இத்தன நாள் நான் தொடர்ந்து ஒரு ஆசனம் செஞ்சிகிட்டிருக்கேங்கறது இன்னிக்குத்தான் தெரியும்.//

ஆசனம்தான் முக்கியம் பேரில்ல:))

vasu balaji said...

எம்.எம்.அப்துல்லா said...

//ஏய்ய்ய்..நாங்கள்லாம் பலமுறை கோட்டுலேயே சேட்டை பண்ணுனவிங்க.தெர்யும்ல.

:)//

அண்ணே! உங்கள சொல்லுவனா:)) நாங்களூம்னுதான சொன்னேன்.

க.பாலாசி said...

//ஆரூரன் விசுவநாதன் said...
ஹும்....ரொம்ப கஷ்டம்.......//

‘யூத்’ன்னு சொன்னததான சொன்னீங்க...

vasu balaji said...

க.பாலாசி said...


/ நோ... என்னைய யரோ விடாம ஃபாளோ பண்றாங்க...என்னோட டெம்ப்ளேட்டே வேற...//

அதா மாத்திட்டியே!

vasu balaji said...

எம்.எம்.அப்துல்லா said...

//சும்மா முன்சீப் கோர்ட்டு, சி.ஜே.எம் கோர்ட்டுனு போயி போரடிக்குது நைனா. எத்துன்னா பெர்ஸா பண்ணிட்டு சுப்ரீம் கோர்ட்டு போவோம்.//

ஹெ ஹெ. அங்க ஒருக்கா நம்மாளு தங்கிலீஷ்ல கேட்டு நாளு ஃபுல்லா தப்பான கோர்ட்ல உக்காந்து, பெரிய கூத்தாகி போச்சு:))

ஆரூரன் விசுவநாதன் said...

////செரி... செரி இனிமே இப்படி குற்றம் செஞ்சு.... ஜெயிலுக்குப் போகாதீங்கா.... சாரி... கோர்ட்டுக்கு போகாதீங்க//

அல்லோ. நாம போனது சாட்சிக்கு:))/

அல்லோ.....அதுக்கு சாட்சி இருக்கா????????

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/ ஹும்....ரொம்ப கஷ்டம்......./

யாருக்கு:))

/இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல்ல........./

சரி சரி. கொஞ்சம் கூட குறைய இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். கம்ப்ளெயிண்ட் பண்ணப்படாது.

/ப்ரியா தப்பா சொல்லீட்டாங்க....... நம்ம சிரிப்புதான்
எப்பவுமே பாக்கியராசு சிரிப்பாச்சே......

அதுக்குப் பேரு சிரிக்கிறதில்ல...

நே.....ன்னு முழிக்கறது/

ம்கும். இது அத விட பெட்டரு.

vasu balaji said...

பின்னோக்கி said...

/உடனே இந்த பதிவ நீக்கிடுங்க. Contempt of the Court ஆகிடப் போகுது./

சாஆஆஆஆர். காமெடிய ட்ராஜடி ஆக்கிட்டீங்களே. இதுல கோர்ட்டப் பத்தி ஒரு வார்த்தையும் கமெண்ட் பண்ணலையே:))

க.பாலாசி said...

//ஆரூரன் விசுவநாதன் said...
அல்லோ.....அதுக்கு சாட்சி இருக்கா????????//

அந்த சாட்சிய விடுங்க... இவரு ஆமா..ஆமா..ன்னு சொன்னதுல்லாம் ஒரு சாட்சியாம்...ஹய்யோ..ஹய்யோ...

ஈரோடு கதிர் said...

அடங்கொன்னியா..

பின்னூட்டம் பின்னுதே..


நான் வேற இன்னும் படிக்கவேயில்லையே...


செரி... நாமலும் அடிச்சு ஆடுவோம்.... நாளைக்கு படிச்சிக்குவோம்

ஈரோடு கதிர் said...

ஆமாண்ணே....

எதுக்குன்னே கோர்ட்டுக்கு போனீங்க

ஏதாவது ஜட்ஜ் வேலைக்குக்கீது கூப்ட்டாங்களா

vasu balaji said...

க.பாலாசி said...

/ கேள்வி கேட்டா அவருக்குள்ள அழுகை வந்திருக்கும் ...அதனாலத்தான் விட்டிருப்பாரு...//

அத சிரிச்சிகிட்டே சொல்றான் பாரு

vasu balaji said...

க.பாலாசி said...


/ ‘யூத்’ன்னு சொன்னததான சொன்னீங்க.../

தோடா! என்னோட போட்டி போடுறதுக்கு சொன்னது:))

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
அடங்கொன்னியா..
பின்னூட்டம் பின்னுதே..
நான் வேற இன்னும் படிக்கவேயில்லையே...
செரி... நாமலும் அடிச்சு ஆடுவோம்.... நாளைக்கு படிச்சிக்குவோம்//

நீங்கதான் நம்ம ஆளு...வாங்க...

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/அல்லோ.....அதுக்கு சாட்சி இருக்கா????????//

சம்மன் இருக்கே.

vasu balaji said...

க.பாலாசி said...

/ அந்த சாட்சிய விடுங்க... இவரு ஆமா..ஆமா..ன்னு சொன்னதுல்லாம் ஒரு சாட்சியாம்...ஹய்யோ .. ஹய்யோ...//

அதுக்குதானே கூப்டாங்க:))

ஆரூரன் விசுவநாதன் said...

////ஆரூரன் விசுவநாதன் said...
அல்லோ.....அதுக்கு சாட்சி இருக்கா????????//

அந்த சாட்சிய விடுங்க... இவரு ஆமா..ஆமா..ன்னு சொன்னதுல்லாம் ஒரு சாட்சியாம்...ஹய்யோ..ஹய்யோ...//


இவரெங்க ஆமா....
ஆமாங்கறது.....

வக்கீல் ஆமாவா?ன்னு கேட்டிருப்பாரு,,,இவரும் தலைய மேலயும், கீழயும் ஆட்டியிருப்பாரு....

நல்ல கேசு....நல்ல சாட்சி

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...

நீங்கதான் நம்ம ஆளு...வாங்க...//

பாலாசி நேத்து ஏதோ இடுகை போட்டியாமே.... எல்லாரும் பேசிக்கிட்டாங்க... ஆமா என்கிட்டே ஏன் சொல்லவேயில்லை

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

அடங்கொன்னியா..

பின்னூட்டம் பின்னுதே..


நான் வேற இன்னும் படிக்கவேயில்லையே...


செரி... நாமலும் அடிச்சு ஆடுவோம்.... நாளைக்கு படிச்சிக்குவோம்//


நாளைக்கு கோர்ட் லீவு:))

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
ஏதாவது ஜட்ஜ் வேலைக்குக்கீது கூப்ட்டாங்களா//

நீங்கவேற...உங்களுக்கு எப்ப ஜோக் அடிக்கிறதுன்னே தெரியல...

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

ஆமாண்ணே....

எதுக்குன்னே கோர்ட்டுக்கு போனீங்க

ஏதாவது ஜட்ஜ் வேலைக்குக்கீது கூப்ட்டாங்களா//

தோ! நாட்டாமையதான் கூப்டணும்னு என்னா:))

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...

வக்கீல் ஆமாவா?ன்னு கேட்டிருப்பாரு,,,இவரும் தலைய மேலயும், கீழயும் ஆட்டியிருப்பாரு....//

நாட்டமை இங்க இருக்கிறப்ப அங்க என்ன சண்ட..

சரி...சரி... தலை ஆடுச்சே... முடி ஆடுச்சா....!!!???

ஈரோடு கதிர் said...

50

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/ இவரெங்க ஆமா....
ஆமாங்கறது.....

வக்கீல் ஆமாவா?ன்னு கேட்டிருப்பாரு,,,இவரும் தலைய மேலயும், கீழயும் ஆட்டியிருப்பாரு....

நல்ல கேசு....நல்ல சாட்சி//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

ஆரூரன் விசுவநாதன் said...

//ஆரூரன் விசுவநாதன் said...

/அல்லோ.....அதுக்கு சாட்சி இருக்கா????????//

சம்மன் இருக்கே.//

அதுக்கு சாட்சி இருக்கா?????????

ஈரோடு கதிர் said...

எப்பூடி...

இடுகை படிக்காமையே... மீ... த... 50 போட்டுட்டோம்ல

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
பாலாசி நேத்து ஏதோ இடுகை போட்டியாமே.... எல்லாரும் பேசிக்கிட்டாங்க... ஆமா என்கிட்டே ஏன் சொல்லவேயில்லை//

நீங்க கமெண்ட் டிபார்ட்மெண்ட்ல இருந்ததால லூசுல விட்டுட்டேன்..

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ நாட்டமை இங்க இருக்கிறப்ப அங்க என்ன சண்ட..

சரி...சரி... தலை ஆடுச்சே... முடி ஆடுச்சா....!!!???//

ந்ன்ன்னோஓஓஓஒ. அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர். மிஸ்லீடிங் கொஸ்சன்:))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//எப்பூடி...

இடுகை படிக்காமையே... மீ... த... 50 போட்டுட்டோம்ல//

பின்னூட்டப் புயல் பிரபாகர் படிக்காம பின்னூட்டமே போடுறாராம். இதுக்கு அலம்பல பாரு:))

அகல்விளக்கு said...

அப்ஐக்ஷன் யுவர் ஆனர்.....

ஈரோடு கதிர் said...

//அகல்விளக்கு said...
அப்ஐக்ஷன் யுவர் ஆனர்.....//

பாருங்கய்யா....

பயபுள்ள தூக்கத்துல வந்து என்னமோ சொல்லுது

vasu balaji said...

அகல்விளக்கு said...

/அப்ஐக்ஷன் யுவர் ஆனர்...../

ம்கும். நாந்தான் பயந்து உளறிடுவேனோன்னு இருந்தா. அப்ஜக்‌ஷன் சொல்ற அளகப் பாரு:))

ஈரோடு கதிர் said...

//விதி இழுத்து கொண்டு போய் விட்டுடுச்சி//

ஆட்டோல போயிட்டு அலும்பப் பாரு.... விதி வந்து இழுத்துக்கிட்டு போச்சாம்....

பிரபாகர் said...

//பின்னூட்டப் புயல் பிரபாகர் படிக்காம பின்னூட்டமே போடுறாராம். இதுக்கு அலம்பல பாரு:))
//
அய்யா, இப்பூடி நம்மல டேமேஜ் பன்றேளே!

படிச்சிட்டு புரியாம போட்டிருக்கலாம், தப்பா புரிஞ்சிகிட்டு போட்டிருக்கலாம். படிக்காமயேன்னு சொல்லி என்ன நோகடிச்சிட்டிங்களே!... எங்க பொயி சொல்லுவேன், என்னான்னு சொல்லுவேன்!

அகல்விளக்கு said...

// ஈரோடு கதிர் said...

//அகல்விளக்கு said...
அப்ஐக்ஷன் யுவர் ஆனர்.....//

பாருங்கய்யா....

பயபுள்ள தூக்கத்துல வந்து என்னமோ சொல்லுது//

அட இருங்க அண்ணா...

படிச்சுட்டு இருக்கேன்...

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ பாருங்கய்யா....

பயபுள்ள தூக்கத்துல வந்து என்னமோ சொல்லுது//

அதான:))

க.பாலாசி said...

//அகல்விளக்கு said...
அப்ஐக்ஷன் யுவர் ஆனர்.....//

வாங்க ராசா...என்னடா ஈரோட்டு டிக்கெட் ஒண்ணு கொரையுதேன்னு பாத்தேன்...

ஈரோடு கதிர் said...

//க்க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிமினல் கேசுங்க//

பின்ன பேமிலி காஸ்... ச்சீ... கேசா போடுவாய்ங்க

அகல்விளக்கு said...

ஆஹா டேமேஐ் ஆகாம எப்படி தப்பிச்சாரு.....

ஈரோடு கதிர் said...

//4.00 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் என்ற கடிதம் சுமார் 4 மணிக்கு//

ரயில்வே டைம் தானே

ஆரூரன் விசுவநாதன் said...

//ஈரோடு கதிர் said...

/ நாட்டமை இங்க இருக்கிறப்ப அங்க என்ன சண்ட..

சரி...சரி... தலை ஆடுச்சே... முடி ஆடுச்சா....!!!???//

ந்ன்ன்னோஓஓஓஒ. அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர். மிஸ்லீடிங் கொஸ்சன்:))//

அப்ஜக்ஷன் ஓவர் ரூல்டு....நீங்க கண்டினியூ பண்ணுங்க.....


எத்தன தமிழ் சினிமா பார்த்திருப்போம்....எங்க கிட்டயேவா?

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ ஆட்டோல போயிட்டு அலும்பப் பாரு.... விதி வந்து இழுத்துக்கிட்டு போச்சாம்....//

ரெண்டும் ஒன்னுதான்:))

பிரபாகர் said...

இதுல ஒரு பட்டம் வேற சொல்லியிருக்கீரு... பயமாயிருக்குங்கய்யா!

பிரபாகர்.

அகல்விளக்கு said...

அது நடமாடும் நீதிமன்றமா....

இல்ல ஆலமர கோர்ட்டா????

க.பாலாசி said...

//அகல்விளக்கு said...
அட இருங்க அண்ணா...
படிச்சுட்டு இருக்கேன்...//

என்ன ராசா இந்த காலத்துல படிச்சுட்டு இருக்கீங்க.. இரண்டு வரிய உருவி... சூப்பரப்புன்னு போடுவீங்களா???அதவுட்டுட்டு....

ஈரோடு கதிர் said...

//பக்கத்து பன்னாட சத்தமாகவே ஸ்லோகம் சொல்லி சாமிகிட்ட டீலிங் போடுறாரு.//

உங்களுக்கும் சேர்த்து சொல்லியிருப்பாரு..

பன்னாடயாம்ல

vasu balaji said...

ஈரோடு கதிர் said...


/ பின்ன பேமிலி காஸ்... ச்சீ... கேசா போடுவாய்ங்க//

சிவிளு சிவிளு:))

வரதராஜலு .பூ said...

நல்லாயிருக்கு ராசா

vasu balaji said...

பிரபாகர் said...

/ அய்யா, இப்பூடி நம்மல டேமேஜ் பன்றேளே!

படிச்சிட்டு புரியாம போட்டிருக்கலாம், தப்பா புரிஞ்சிகிட்டு போட்டிருக்கலாம். படிக்காமயேன்னு சொல்லி என்ன நோகடிச்சிட்டிங்களே!... எங்க பொயி சொல்லுவேன், என்னான்னு சொல்லுவேன்!//

பொயி தானே எப்புடி வேணா சொல்லலாம். தங்கச்சி கவிதை படிச்சிட்டு ப்ரமாதம்னு போட்டுட்டு அப்புறம் வந்து ஆறு வாட்டி படிச்சேன்னு சொல்லிட்டு
தப்பு தப்பா சொல்லிட்டு அலம்பல பாரு

பிரபாகர் said...

//எத்தன தமிழ் சினிமா பார்த்திருப்போம்....எங்க கிட்டயேவா?
//

ஆருரன், தமிழ் சினிமாவுக்கும் கோர்ட்டுக்கும் ஒரே சம்மந்தம் காட்டற பில்டிங் மட்டும் தான். உள்ள நடக்கிறதெல்லாம் வேற... சம்மந்தமே இருக்காது.

அகல்விளக்கு said...

//அகல்விளக்கு said...
அட இருங்க அண்ணா...
படிச்சுட்டு இருக்கேன்...//

என்ன ராசா இந்த காலத்துல படிச்சுட்டு இருக்கீங்க.. இரண்டு வரிய உருவி... சூப்பரப்புன்னு போடுவீங்களா???அதவுட்டுட்டு.... //

பப்ளிக்கா சொல்லக்கூடாதுண்ணா...

ஈரோடு கதிர் said...

//நானும் மிகப் பெரிய ரவுடிதான்னு இந்த உலகத்துக்கு காட்டிட்டு வந்தேன்னு!
//

பஞ்சாக்கும்

ம்ம்ம்ம்... நானும் ஆங்காங்கே காப்பி / பேஸ்ட் (அட குடிக்கிற காப்பி, பல்லுவிளக்குற பேஸ்ட் இல்லீங்க) பண்ணி பின்னூட்டம் போட்டுட்டேன்

நானும் இனிமே பாலாசியாயிட்டேன்

க.பாலாசி said...

//வரதராஜலு .பூ said...
நல்லாயிருக்கு ராசா//

இது யாருங்க....நடுவால வர்ரது...

vasu balaji said...

ஈரோடு கதிர் said...


/ ரயில்வே டைம் தானே/

ம்கும். ஏன் அதுக்கென்ன?

ஆரூரன் விசுவநாதன் said...

//ஈரோடு கதிர் said...


/ பின்ன பேமிலி காஸ்... ச்சீ... கேசா போடுவாய்ங்க//

சிவிளு சிவிளு:))//


இதுக்கே இத்தன அலும்பா????????

வரதராஜலு .பூ said...

நடுவால வந்துட்டேனா, ஏன் வரக்கூடாதா

பிரபாகர் said...

//பொயி தானே எப்புடி வேணா சொல்லலாம். தங்கச்சி கவிதை படிச்சிட்டு ப்ரமாதம்னு போட்டுட்டு அப்புறம் வந்து ஆறு வாட்டி படிச்சேன்னு சொல்லிட்டு
தப்பு தப்பா சொல்லிட்டு அலம்பல பாரு
//
பிரமாதம்னு சொல்றதுக்குத்தான் ஆறு தடவ படிச்சேன்... ஆறாவது தடவதான் புரிஞ்ச மாதிரி இருந்துச்சி... அதுவும் தப்புன்னு அப்புறம்தான் தெரிஞ்சது!

vasu balaji said...

பிரபாகர் said...

//இதுல ஒரு பட்டம் வேற சொல்லியிருக்கீரு... பயமாயிருக்குங்கய்யா!

பிரபாகர்.//

பாக்குறம்லடிங்கொய்யால. நேத்து வெளியான அத்தனை இடுகையிலயும் முதல் பின்னூட்டம் அய்யா தான:))

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
ம்ம்ம்ம்... நானும் ஆங்காங்கே காப்பி / பேஸ்ட் (அட குடிக்கிற காப்பி, பல்லுவிளக்குற பேஸ்ட் இல்லீங்க) பண்ணி பின்னூட்டம் போட்டுட்டேன்
நானும் இனிமே பாலாசியாயிட்டேன்//

இதெல்லாம் ஒத்துக்க முடியாது.... ‘அருமை’ங்கற வார்த்தையே காணோம்....

அகல்விளக்கு said...

பாலாண்ணா...

எல்லாஞ்சரி கடைசில முழிச்சிட்டீங்களா...

இல்ல காலைலதான் கனவு கண்டதே கண்டுபுடிச்சீங்களா..???

vasu balaji said...

வரதராஜலு .பூ said...

// நல்லாயிருக்கு ராசா//

வாங்க வாங்க. நன்றிங்க

அகல்விளக்கு said...

வரதராஐாண்ணா...

வாங்கண்ணா...

நீங்களும் ஜோதில ஐக்கியமாயிடுங்க..

:-))

பின்னோக்கி said...

இல்லைங்க. கோர்ட்ல நடந்த விசாரணையப் பத்தி எழுதியிருந்தீங்களே மேலும் நீங்கள் அரசாங்க அதிகாரி ஆகிற்றே என்ற கவலையில் சொன்னேன்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

// பஞ்சாக்கும்

ம்ம்ம்ம்... நானும் ஆங்காங்கே காப்பி / பேஸ்ட் (அட குடிக்கிற காப்பி, பல்லுவிளக்குற பேஸ்ட் இல்லீங்க) பண்ணி பின்னூட்டம் போட்டுட்டேன்

நானும் இனிமே பாலாசியாயிட்டேன்//

மொத்த பேத்தையும் கெடுத்து வெச்சிட்டான் பனங்கொட்ட லவ்வரு:))

வரதராஜலு .பூ said...

வானம்பாடிய கும்ம பெரிய கூட்டமே லைன்ல இருக்கு போல

ஆரூரன் விசுவநாதன் said...

//பாலாண்ணா...

எல்லாஞ்சரி கடைசில முழிச்சிட்டீங்களா...

இல்ல காலைலதான் கனவு கண்டதே கண்டுபுடிச்சீங்களா..???//


ஆமா....ஆமா.....ஆமாராசா.....

பிரபாகர் said...

//க.பாலாசி said...
//அகல்விளக்கு said...
அட இருங்க அண்ணா...
படிச்சுட்டு இருக்கேன்...//

என்ன ராசா இந்த காலத்துல படிச்சுட்டு இருக்கீங்க.. இரண்டு வரிய உருவி... சூப்பரப்புன்னு போடுவீங்களா???அதவுட்டுட்டு....
//
அடங்கொன்னியா, இதத்தான் செஞ்சிகிட்டிருக்கீரா? இளவல் ரொம்ப ரசிச்சி போடறதால்ல நினைச்சிகிட்டிருக்கேன்!

ஈரோடு கதிர் said...

//வரதராஜலு .பூ said...
வானம்பாடிய கும்ம பெரிய கூட்டமே லைன்ல இருக்கு போல//

அட.... வாங்கப்பூ... நீங்களும் ரெண்டு கும்மு கும்முங்க

அகல்விளக்கு said...

//அடங்கொன்னியா, இதத்தான் செஞ்சிகிட்டிருக்கீரா? இளவல் ரொம்ப ரசிச்சி போடறதால்ல நினைச்சிகிட்டிருக்கேன்! //


ஏங்க பாலசிண்ணா??

இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பிரபாகர் said...

நாந்தான் நூறுன்னு போடனும்.... திடீர்னு சைலண்ட் ஆயிட்டீங்க...

vasu balaji said...

அகல்விளக்கு said...

//பாலாண்ணா...

எல்லாஞ்சரி கடைசில முழிச்சிட்டீங்களா...

இல்ல காலைலதான் கனவு கண்டதே கண்டுபுடிச்சீங்களா..???//

அட இல்லப்பா. நெசமாத்தான்.

ஈரோடு கதிர் said...

// பிரபாகர் said...
அடங்கொன்னியா, இதத்தான் செஞ்சிகிட்டிருக்கீரா? இளவல் ரொம்ப ரசிச்சி போடறதால்ல நினைச்சிகிட்டிருக்கேன்!//

அல்ல்ல்லோவ் சிங்கப்பூர் பிரபாகர்ங்கள இது

பிரபாகர் said...

நாந்தான் 100.....

க.பாலாசி said...

நான்தான் 100

vasu balaji said...

வரதராஜலு .பூ said...

//வானம்பாடிய கும்ம பெரிய கூட்டமே லைன்ல இருக்கு போல//

ஆமாங்க. டிக்கட் போட்றலாமான்னு பாக்கறேன்.

க.பாலாசி said...

ஒரு 100க்கு எத்தனப்பேரு...எல்லாரும் வருசையில நில்லுங்கப்பா...

பிரபாகர் said...

அல்லோ,

நாங்க சொல்லி அடிப்போம்ல! நாமதான் 100.

அப்பாவி முரு said...

நம்ம குடும்பத்துல இதுவரைக்கு யாருமே போகாத இடத்துக்கு போயிட்டு வந்துட்டீயே நைநா...


அந்த கோர்ட் இருக்குற இடம் நம்ம தாத்தா காலத்துல அரசாங்கத்துக்கு தாரை வார்த்தது...


அங்க இருக்குற பார் கட்டிடம்(சட்ட நிலையம்) நம்ம சின்ன தாத்தா காலத்துல தாரைவார்த்தது...


அப்ப கூட அவங்க வெளியே நின்னுக்கிட்டே தான் தானம் கொடுத்தாங்க....


அந்த பரம்பரையில் வந்துட்டு இப்பிடி கூண்டுல ஏறி நின்னுட்டு வந்திருக்கியே நைநா....

அகல்விளக்கு said...

அய் நானு நானு

நானும் 100

ஈரோடு கதிர் said...

//க.லாசி said...
ஒரு 100க்கு எத்தனப்பேரு...எல்லாரும் வருசையில நில்லுங்கப்பா...
//

தம்பி... எங்கே அ...ஆ.. ரெண்டையும் காணோம்

அட அகலும் / ஆரூரும்தான்

vasu balaji said...

பின்னோக்கி said...

/ இல்லைங்க. கோர்ட்ல நடந்த விசாரணையப் பத்தி எழுதியிருந்தீங்களே மேலும் நீங்கள் அரசாங்க அதிகாரி ஆகிற்றே என்ற கவலையில் சொன்னேன்.//

இல்லை சார். இது என்னுடைய எண்ணங்கள் தானே. கமெண்ட் இல்லையே. அதனால தப்பில்லை.

ஆரூரன் விசுவநாதன் said...

நூறு பெற்று(கமெண்ட்ங்க....) பின்னி பெடலெடுத்த அன்பு அண்ணன் வாழ்க...

வரதராஜலு .பூ said...

கும்மியடிப்பவர்கள் தொடரவும். நான் விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

க.பாலாசி said...

//பிரபாகர் said...
அடங்கொன்னியா, இதத்தான் செஞ்சிகிட்டிருக்கீரா? இளவல் ரொம்ப ரசிச்சி போடறதால்ல நினைச்சிகிட்டிருக்கேன்!//

நீங்க எந்த இளவல்ல்ல்ல்ல சொல்றீங்க...நான் நல்லவனுங்க... இந்த யூத் பசங்கதான் சரியில்ல...

அகல்விளக்கு said...

// ஈரோடு கதிர் said...

//க.லாசி said...
ஒரு 100க்கு எத்தனப்பேரு...எல்லாரும் வருசையில நில்லுங்கப்பா...
//

தம்பி... எங்கே அ...ஆ.. ரெண்டையும் காணோம்

அட அகலும் / ஆரூரும்தான்//


உள்ளேன் அய்யா....

ஈரோடு கதிர் said...

//அப்பாவி முரு said...
அந்த பரம்பரையில் வந்துட்டு இப்பிடி கூண்டுல ஏறி நின்னுட்டு வந்திருக்கியே நைநா....
//

அய்ய்யோ... அய்யோ...
ஆமாம் பாருங்க கொஞ்சம் கூட பருப்பு ச்சீ பொறுப்பு இல்லாம சின்னப்புள்ளத்தனமா பண்ணீட்ட்ரா

பின்னோக்கி said...

என்ன சார் இது பெரிய ரவுடின்னு நினைச்சேன். Contempt of the Court ன உடனே பம்முறீங்களே :).

ஈரோடு கதிர் said...

//வரதராஜலு .பூ said...
கும்மியடிப்பவர்கள் தொடரவும். நான் விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.
//

அட... இருங்கண்ணே

vasu balaji said...

அப்பாவி முரு said...
/ அந்த பரம்பரையில் வந்துட்டு இப்பிடி கூண்டுல ஏறி நின்னுட்டு வந்திருக்கியே நைநா....//

அதான் சொல்லிட்டன்ல. விதின்னு:))

ஈரோடு கதிர் said...

//பின்னோக்கி said...
என்ன சார் இது பெரிய ரவுடின்னு நினைச்சேன். Contempt of the Court ன உடனே பம்முறீங்களே :).
//

போடுங்க போடுங்க.... இன்னும் ரெண்டு மூனு வார்த்தைய போட்டு மிரட்டுங்க அவர

பின்னோக்கி said...

ரவுடி..ரவுடி தான்.. நீங்க ரவுடி தான்.. இது இந்த 115 கமெண்ட் மேல சத்தியம்..

vasu balaji said...

க.பாலாசி said...

/ நீங்க எந்த இளவல்ல்ல்ல்ல சொல்றீங்க...நான் நல்லவனுங்க... இந்த யூத் பசங்கதான் சரியில்ல...//

ம்கும். சொன்னவர முதல்ல வயச சரியா போட சொல்லு:))

vasu balaji said...

பின்னோக்கி said...

//என்ன சார் இது பெரிய ரவுடின்னு நினைச்சேன். Contempt of the Court ன உடனே பம்முறீங்களே :).//

கண்டெம்ப்ட் ஆஃப் கோர்ட் இதில வராதே:))

ஆரூரன் விசுவநாதன் said...

எத்தனபேர் வந்தாலும் ஒத்தையா சமாளிப்பம்ல....



அட நெசந்தான்.......இத்தன பேரு கும்மினாலும் தாங்கிக்கறாரே....

அது எப்புடீங்ணா?????????


ஒத்துக்கிட்டோம்.....நீங்களும் பெரிய ரவுடிதாங்கோய்.......

ஈரோடு கதிர் said...

//பின்னோக்கி said...
ரவுடி..ரவுடி தான்.. நீங்க ரவுடி தான்.. இது இந்த 115 கமெண்ட் மேல சத்தியம்..
//

அப்போ... ஒன்னும் பிரச்சனையில்லையா... செரி செரி நீங்களும் ஒரு 10 கமெண்டு போடுங்க... எதுக்கும் எங்களுக்கு தொணைக்கு இருக்கட்டும்

பிரபாகர் said...

எல்லாருக்கும் வணக்கம். வேலைக்கு நேரமாச்சி. கிளம்பறேன். பிறகு பாக்கலாம்.

பிரபாகர்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

// போடுங்க போடுங்க.... இன்னும் ரெண்டு மூனு வார்த்தைய போட்டு மிரட்டுங்க அவர//

அல்லோ. உக்காந்த இடத்துலன்னா சும்மா லா அள்ளி வீசுவம்டி. அங்கன போய் பேரு கேட்டாதான் திக்கும். யார்ட்ட:))

vasu balaji said...

பிரபாகர் said...

/ எல்லாருக்கும் வணக்கம். வேலைக்கு நேரமாச்சி. கிளம்பறேன். பிறகு பாக்கலாம்.

பிரபாகர்.//

ங்கொய்யால விடிய விடிய பின்னூட்டம் போடுறதுக்கு போறது. இதுக்கு ரவுசப்பாரு:))

அப்பாவி முரு said...

சரி நைநா செஞ்ச பாவம் தீரவும், பிடிச்ச பீடை விலகவும் நம்ம சங்கத்து ஆளுகளைக் கூப்பிட்டு கெடா சோறு போட்டு விருந்து வைச்சா எல்லாம் சரியாகிடும்.


ஏற்பாடு பண்ணுங்க....

ஈரோடு கதிர் said...

எதுக்கும்.........

பின்னோக்கியின் பயமுறுத்தலை அடுத்து பிரபா எஸ்கேப் ஆனது போல்.... ஞானும் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்....


அடுத்த இடுகையில சந்திப்போம்...

அண்ணே.... 7 மணிக்கு அடுத்த இடுகை போட்டுறுங்க

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

எத்தனபேர் வந்தாலும் ஒத்தையா சமாளிப்பம்ல....



அட நெசந்தான்.......இத்தன பேரு கும்மினாலும் தாங்கிக்கறாரே....

அது எப்புடீங்ணா?????????


ஒத்துக்கிட்டோம்.....நீங்களும் பெரிய ரவுடிதாங்கோய்.......//

அது அது. அதும் யூத்து ரவுடி:))

vasu balaji said...

அப்பாவி முரு said...

// சரி நைநா செஞ்ச பாவம் தீரவும், பிடிச்ச பீடை விலகவும் நம்ம சங்கத்து ஆளுகளைக் கூப்பிட்டு கெடா சோறு போட்டு விருந்து வைச்சா எல்லாம் சரியாகிடும்.


ஏற்பாடு பண்ணுங்க....//

அட பாவம். கெடாக்கு வந்திச்சா கேடு:))

ஈரோடு கதிர் said...

//அப்பாவி முரு said...
சரி நைநா செஞ்ச பாவம் தீரவும், பிடிச்ச பீடை விலகவும் நம்ம சங்கத்து ஆளுகளைக் கூப்பிட்டு கெடா சோறு போட்டு விருந்து வைச்சா எல்லாம் சரியாகிடும்.
ஏற்பாடு பண்ணுங்க....
//

முரு.... 14ம் தேதி நீங்க சென்னை வரும்போதே வெட்டச் சொல்லீருங்க... கெடாய

பின்னோக்கி said...

எதோ என்னால முடிஞ்சது கதிர் :)
அடுத்த பதிவுல வந்து இவர இன்னும் மிரட்டுவோம்.

பிரபாகர் said...

// வானம்பாடிகள் said...
க.பாலாசி said...

/ நீங்க எந்த இளவல்ல்ல்ல்ல சொல்றீங்க...நான் நல்லவனுங்க... இந்த யூத் பசங்கதான் சரியில்ல...//

ம்கும். சொன்னவர முதல்ல வயச சரியா போட சொல்லு:))
//
37ன்னு சரியா மாத்திட்டேனே அய்யா! மனசால இருவத்தேழுன்னு போடறதுக்கு இந்த ஜனநாயக நாட்டில உரிமை இல்லையா? அய்யகோ! என்ன கொடுமை இது.... இது அடுக்குமா? (யோவ், பத்து மணிக்கு டூட்டி, போகலன்னா ஆப்புடி - மனசாட்சி)...

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

எதுக்கும்.........

பின்னோக்கியின் பயமுறுத்தலை அடுத்து பிரபா எஸ்கேப் ஆனது போல்.... ஞானும் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்....


அடுத்த இடுகையில சந்திப்போம்...

அண்ணே.... 7 மணிக்கு அடுத்த இடுகை போட்டுறுங்க//

அல்லோ. நான் என்ன பிரபாகர் மாதிரி பீரோலயா வெச்சிருக்கேன். நினைச்ச உடனே இடுகை போட. எழுதணுமப்பு.

பிரபாகர் said...

//அல்லோ. நான் என்ன பிரபாகர் மாதிரி பீரோலயா வெச்சிருக்கேன். நினைச்ச உடனே இடுகை போட. எழுதணுமப்பு.
//
ம்... நடத்துங்க! ஓய்வு நேரத்துல நிறைய எழுதற கம்பனி சீக்ரட் அவுட்!

vasu balaji said...

பிரபாகர் said...

/ ம்... நடத்துங்க! ஓய்வு நேரத்துல நிறைய எழுதற கம்பனி சீக்ரட் அவுட்!//

ஓய்வு நேரம்! நம்பீட்டம்:))

நிஜாம் கான் said...

ஏய்யா வாண்டடா வந்து ரவுடின்னு சொல்றேன் என்னையும் ஏத்துயா..., யோவ் சத்தியமா நானும் ரவுடிதான்யா..,

நிஜாம் கான் said...

அண்ணே! நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று இப்போ சொல்வது மட்டும் தான் உண்மைன்னு சத்தியம் வாங்குவாங்களே அதெல்லாம் சினிமாவுல மட்டும் தானா?

இராகவன் நைஜிரியா said...

அடேங்கப்பா... எப்பூடி இங்க ஒரு களேபரம் நடந்திருக்கு... கவனிக்காக விட்டுட்டேனே...

இராகவன் நைஜிரியா said...

// என்னன்னு கேக்க மாட்டிங்களா? ப்ரியா நீ கேளேன். கதிர் நீங்க கேளுங்களேன். பாலாசி நீயாவது கேளேன். //

இதுக்குத்தான் அண்ணே எங்கிட்ட சொல்லணும் ... நானாவது கேட்டு இருப்பேன் இல்ல.. சரி.. சரி .. யாரும் கேட்கலை... நானாவது கேட்கிறேன்..

அந்த வ...ர....லா...ற்...று... நிகழ்ச்சியை எடுத்து வுடுங்க அண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// அப்புராணிய விதி இழுத்து கொண்டு போய் விட்டுடுச்சி. //

அப்புராணி...???? ஓக்கே ரைட்டு...

விதி வலியது... !!! :-)

இராகவன் நைஜிரியா said...

// யூத்து (நாந்தான் நாந்தான்) //

ஆமாம்... நீங்க யூத்து, யூத்து, யூத்து, யூத்து...

ஒத்துகிட்டோம்..

இராகவன் நைஜிரியா said...

// முந்தா நாள் சாயந்திரம் 4.00 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் என்ற கடிதம் சுமார் 4 மணிக்கு கொடுக்கப்பட்டது.//

ஓ... 4 மணிக்கு சந்திக்க வேண்டும் என்று 4 மணிக்கு லெட்டர் கொடுத்தாங்களா...

லீகல் டிபார்ட்மெண்ட் நல்லாவே வேலைப் பார்க்கின்றாங்க..

அகல்விளக்கு said...
This comment has been removed by the author.
அகல்விளக்கு said...

அய்ய்ய்ய்ய்ய்

நான் இப்போ 143

அகல்விளக்கு said...

எல்லா விக்கெட்டும் போனாலும்
கடைசி பேட்ஸ் மேனா நின்னு அடிக்கும்
ராகவன் அண்ணா வாழ்க...
ராகவன் அண்ணா வாழ்க..

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...
/அண்ணே! நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று இப்போ சொல்வது மட்டும் தான் உண்மைன்னு சத்தியம் வாங்குவாங்களே அதெல்லாம் சினிமாவுல மட்டும் தானா?/

சினிமால வரா மாதிரி இல்லை. ஆனா உறுதிமொழி எடுக்கணும்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அடேங்கப்பா... எப்பூடி இங்க ஒரு களேபரம் நடந்திருக்கு... கவனிக்காக விட்டுட்டேனே.../

இப்பல்லாம் நிறைய வடை போச்சே ஆறது

Subankan said...

பதிவப் படிச்சுட்டு ஏதாவது கும்மலாம்னு பாத்தா இங்க ஏற்கனவே அது நடந்துட்டிருக்கா? நான் ஒரு ஓரமா ஒரு பெஞ்சில உக்காந்து பாத்துட்டுப் போயிடறன்.

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

அகல்விளக்கு said...

அய் 150

Ramesh said...

ஏய் யாருப்பா இங்க ரவுடி???
இவரா??
சுத்தம் !
ம்ம்...
நல்லா இருக்கு...
நாமளும் ரவுடிங்க ஹிஹிஹிஹி
நானும் இன்னும் போகல.

க.பாலாசி said...

// அகல்விளக்கு said...
அய் 150//

எங்க சிங்கத்த களத்துல விட்டுட்டுதான் நாங்க விலகியிருக்கோம். பின்னால யாரும் நாங்கதான் ரவுடின்னு சொல்லக்கூடாது.

நசரேயன் said...

நான் தான் ரெம்ப தாமதமா வந்து ரவுடிய பார்க்க வந்து இருக்கேன்

நசரேயன் said...

//முதல் முறை கோர்ட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் அந்த வரலாற்று நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை ஊடகங்கள் தவற விட்டாங்களேன்னு அனுதாபமா இருந்தது.//
அதையெல்லாம் காட்டுற அளவுக்கு அவங்க ரெடி இல்லையாம்

ப்ரியமுடன் வசந்த் said...

:-)

balavasakan said...

ஆகா...நம்புறோம் சார் நீங்க பெரிய ரவுடிதான்... என்னா குடுக்கிறீங்க அதுக்கு...

முனைவர் இரா.குணசீலன் said...

திரைப்படங்களில் வரும் நீதிமன்றக்காட்சிகள் வேறு..

நிகழ்கால வாழ்க்கையில் வரும் நீதிமன்றங்கக் காட்சிகள் வேறு..


அழகாக எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள் ஐயா..

நீங்க பெரிய ரவுடிதான்னு எல்லோரையும் ஒத்துக்கிறவைச்சிட்டீங்க..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ ஆமாம்... நீங்க யூத்து, யூத்து, யூத்து, யூத்து...

ஒத்துகிட்டோம்.//

வேற வழி. அப்பதானே நீங்களும் யூத்து!

/ஓ... 4 மணிக்கு சந்திக்க வேண்டும் என்று 4 மணிக்கு லெட்டர் கொடுத்தாங்களா...

லீகல் டிபார்ட்மெண்ட் நல்லாவே வேலைப் பார்க்கின்றாங்க../

இது வேற டிபார்ட்மெண்ட்.

vasu balaji said...

அகல்விளக்கு said...

எல்லா விக்கெட்டும் போனாலும்
கடைசி பேட்ஸ் மேனா நின்னு அடிக்கும்
ராகவன் அண்ணா வாழ்க...
ராகவன் அண்ணா வாழ்க..//

:))

/ அகல்விளக்கு said...

அய் 150/

இந்த வடையும் போச்சா:))

Thenammai Lakshmanan said...

//ஈரோடு கதிர் Says:
January 8, 2010 5:59 PM
ஆமாண்ணே....

எதுக்குன்னே கோர்ட்டுக்கு போனீங்க

ஏதாவது ஜட்ஜ் வேலைக்குக்கீது கூப்ட்டாங்களா//

superb kathir

vasu balaji said...

றமேஸ்-Ramesh said...

//ஏய் யாருப்பா இங்க ரவுடி???
இவரா??
சுத்தம் !
ம்ம்...
நல்லா இருக்கு...
நாமளும் ரவுடிங்க ஹிஹிஹிஹி
நானும் இன்னும் போகல.//

சை. இவ்ளோ கஷ்டபட்டும் இந்த பிஞ்சு ஒத்துக்க மாட்டங்குறானே:))

vasu balaji said...

Subankan said...

//பதிவப் படிச்சுட்டு ஏதாவது கும்மலாம்னு பாத்தா இங்க ஏற்கனவே அது நடந்துட்டிருக்கா? நான் ஒரு ஓரமா ஒரு பெஞ்சில உக்காந்து பாத்துட்டுப் போயிடறன்.//

ஏன்! ஃப்ரீ ஃபார் ஆல் தானே:))

vasu balaji said...

க.பாலாசி said...

// அகல்விளக்கு said...
அய் 150//

எங்க சிங்கத்த களத்துல விட்டுட்டுதான் நாங்க விலகியிருக்கோம். பின்னால யாரும் நாங்கதான் ரவுடின்னு சொல்லக்கூடாது.//

அடப்பாவி:))

cheena (சீனா) said...

அன்பின் ரவுடி பாலா

எந்த ஒரு நிகழ்வில் சம்பந்தப் பட்டிருந்தாலும் அதனை வைத்து இடுகை - அதுவும் நகைச்சுவையுடன் இட முடியும் என நிரூபித்தது நன்று நன்று

நல்வாழ்த்துகள் ரவுடி பாலா

vasu balaji said...

நசரேயன் said...

//நான் தான் ரெம்ப தாமதமா வந்து ரவுடிய பார்க்க வந்து இருக்கேன்//

அது பிரசித்தமாச்சே

// நசரேயன் said...

// அதையெல்லாம் காட்டுற அளவுக்கு அவங்க ரெடி இல்லையாம்//

போட்டும். அவங்களூக்கு TRP ரேடிங் போச்சு. அவ்ளோதான்.

vasu balaji said...

Balavasakan said...

//ஆகா...நம்புறோம் சார் நீங்க பெரிய ரவுடிதான்... என்னா குடுக்கிறீங்க அதுக்கு...//

அடப்பாவி! அங்க எலக்‌ஷனும் அப்படித்தானா? நீ இப்படி மாறிப்போனா:))

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

:-)//

=))

vasu balaji said...

முனைவர்.இரா.குணசீலன் said...

திரைப்படங்களில் வரும் நீதிமன்றக்காட்சிகள் வேறு..

நிகழ்கால வாழ்க்கையில் வரும் நீதிமன்றங்கக் காட்சிகள் வேறு..


அழகாக எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள் ஐயா..

நீங்க பெரிய ரவுடிதான்னு எல்லோரையும் ஒத்துக்கிறவைச்சிட்டீங்க..//

ஆமாங்க குணா:)) நன்றி

vasu balaji said...

cheena (சீனா) said...

அன்பின் ரவுடி பாலா

எந்த ஒரு நிகழ்வில் சம்பந்தப் பட்டிருந்தாலும் அதனை வைத்து இடுகை - அதுவும் நகைச்சுவையுடன் இட முடியும் என நிரூபித்தது நன்று நன்று

நல்வாழ்த்துகள் ரவுடி பாலா//

=)). நன்றிங்க சீனா. முடியல=))

vasu balaji said...

thenammailakshmanan said...


// superb kathir//

நன்றிங்க

பா.ராஜாராம் said...

அதகளம் பண்ணி இருக்கீங்க பாலா சார்!

தொடங்கியது முதல் முடிவு வரையில் சிரித்து கொண்டே இருந்தேன்..

கலக்கல்!

CS. Mohan Kumar said...

என் தொழில் சார்பா நானும் பல முறை Court போயிருக்கேன். நல்லா எழுதிருக்கீங்க சார்!

செ.சரவணக்குமார் said...

கேட்ட மூணு கேள்விக்கும், ஆமாம் சாமின்னு பதில் சொல்லிட்டு வந்துருக்கீங்க, இதுக்கு இவ்வளவு பில்டப்பா???? தாங்க முடியல சார்.

ஆனால் ஒரு நிகழ்வை எத்தனை அருமையாக நகைச்சுவை மிளிர சொல்லியிருக்கிறீர்கள். கிரேட் சார்.

குடுகுடுப்பை said...

கோர்ட்ல நடந்தத வெளியில சொல்லலாமா சார்?

vasu balaji said...

பா.ராஜாராம் said...

/ அதகளம் பண்ணி இருக்கீங்க பாலா சார்!

தொடங்கியது முதல் முடிவு வரையில் சிரித்து கொண்டே இருந்தேன்..

கலக்கல்!/

நன்றி பா.ரா.

vasu balaji said...

மோகன் குமார் said...

/என் தொழில் சார்பா நானும் பல முறை Court போயிருக்கேன். நல்லா எழுதிருக்கீங்க சார்!/

நன்றி மோகன் குமார்.

vasu balaji said...

செ.சரவணக்குமார் said...

/கேட்ட மூணு கேள்விக்கும், ஆமாம் சாமின்னு பதில் சொல்லிட்டு வந்துருக்கீங்க, இதுக்கு இவ்வளவு பில்டப்பா???? தாங்க முடியல சார்.

ஆனால் ஒரு நிகழ்வை எத்தனை அருமையாக நகைச்சுவை மிளிர சொல்லியிருக்கிறீர்கள். கிரேட் சார்.//

நன்றிங்க

vasu balaji said...

குடுகுடுப்பை said...

/கோர்ட்ல நடந்தத வெளியில சொல்லலாமா சார்?/

விமரிசனம்தான் செய்யக் கூடாது. அதுமில்லாம இதில் என் மனதில் நடந்தது தான் அதிகம்:)). முதல் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி தலைவரே:)). அந்த போஸ்டு...

Chitra said...

சொறி நாய்க்கு பயந்து ஓடுறவன் மாதிரி லப்டப் காதுல டோல்பி சவுண்ட்ல கேக்குது. பாடி, பேஸ்மெண்ட் எல்லாம் தடதடன்னு ஆடுது. நாவு அண்ணத்துல ஒட்டிகிச்சி. ..............பாமரன் சார், பரிதாப ரவுடி நீங்க தான். சிரிச்சு முடியலை.

புலவன் புலிகேசி said...

//முதல் முறை கோர்ட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் அந்த வரலாற்று நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை ஊடகங்கள் தவற விட்டாங்களேன்னு அனுதாபமா இருந்தது.//

இதுக்கே ஊடகங்கள் உங்க மேல கேஸ் போடனும். உண்மையா நீங்க ஒரு மிகப்பெரிய ரவுடிதான். வடிவேலு மாதிரியே.

//(ப்ரியா:ஹய்யோ ஹய்யோ! பிதாமகன் விக்ரம் மாதிரி சிரிச்சிருக்கும். இதுக்கு இந்த சீனப் பாரேன். சார் முடியல) //

எங்க ப்ரியா வந்து திட்டுவாங்களோன்னு, நீங்களே எழுதி கிட்டீங்க. உஷார் பேர்வழிதான்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் தான் போங்க..

இம்மாம் பெரிய ரவுடிய எதுக்குக் கேள்வி கேட்கனும்னு நினைச்சுட்டாங்க போல :)

Me the 181 :))

கிரி said...

என்ன தான் வீரனா இருந்தாலும் சாட்சி கூண்டு என்றால் கொஞ்சம் உதறத்தான் செய்யும் :-)

வயாசனபிறகு ரவுடி ஆகி இருக்கீங்க வாழ்த்துக்கள் ;-)

Thenammai Lakshmanan said...

என்னது முடி முகத்துல விழுதுன்னு க்ளிப் போட்டு மாளலயா

ஹாஹாஹா

நல்லா உங்கள நீங்களே கமெண்ட் பண்ணிக்கிறீங்க

ஐ லைக் இட்

குட்.... கீப் இட் அப் ....ஹாஹாஹா

vasu balaji said...

Chitra said...

/ ..............பாமரன் சார், பரிதாப ரவுடி நீங்க தான். சிரிச்சு முடியலை./

எல்லாருமா காமெடி பீசாக்கிட்டாங்களே. அவ்வ்வ்.

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

//முதல் முறை கோர்ட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் அந்த வரலாற்று நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை ஊடகங்கள் தவற விட்டாங்களேன்னு அனுதாபமா இருந்தது.//

/இதுக்கே ஊடகங்கள் உங்க மேல கேஸ் போடனும். உண்மையா நீங்க ஒரு மிகப்பெரிய ரவுடிதான். வடிவேலு மாதிரியே.//

நீங்களாவது ஒத்துகிட்டீங்களே. நன்றி புலிகேசி.

// எங்க ப்ரியா வந்து திட்டுவாங்களோன்னு, நீங்களே எழுதி கிட்டீங்க. உஷார் பேர்வழிதான்//

ம்கும். இதுக்கும் சேர்த்து விழுந்தாலும் என்ன பண்ண?

vasu balaji said...

ச.செந்தில்வேலன் said...

கலக்கல் தான் போங்க..

இம்மாம் பெரிய ரவுடிய எதுக்குக் கேள்வி கேட்கனும்னு நினைச்சுட்டாங்க போல :)

Me the 181 :))//

வாங்க செந்தில்.:))

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா ஹா. செம கலக்கல். சத்தம் போட்டு சிரிக்கனும்போல இருக்கு. இந்த பாலாப்போன ஆஃபிஸ்ல அது முடியலையே.

ரொம்ப ரசிச்ச இடுகை சார்.

vasu balaji said...

கிரி said...

என்ன தான் வீரனா இருந்தாலும் சாட்சி கூண்டு என்றால் கொஞ்சம் உதறத்தான் செய்யும் :-)

வயாசனபிறகு ரவுடி ஆகி இருக்கீங்க வாழ்த்துக்கள் ;-)//

இது இது இதத்தான் எதிர்பார்த்தேன். நன்றி கிரி.

vasu balaji said...

thenammailakshmanan said...

என்னது முடி முகத்துல விழுதுன்னு க்ளிப் போட்டு மாளலயா

ஹாஹாஹா

நல்லா உங்கள நீங்களே கமெண்ட் பண்ணிக்கிறீங்க

ஐ லைக் இட்

குட்.... கீப் இட் அப் ....ஹாஹாஹா//

அட அப்புல புடிச்சிதானே கை வலிக்குதுங்கறேன்:))

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

// ஹா ஹா ஹா ஹா. செம கலக்கல். சத்தம் போட்டு சிரிக்கனும்போல இருக்கு. இந்த பாலாப்போன ஆஃபிஸ்ல அது முடியலையே.

ரொம்ப ரசிச்ச இடுகை சார்.//

ஹாஹா. நன்றிங்க நவாஸ்:))

மதார் said...

உங்கள பார்த்த ரொம்ப பாவமா இருக்கு , என்னால முடியல தனிய உக்காந்து லூசு மாதிரி சிரிச்சேன் படிச்சுட்டு (ஆபீஸ்ல இருக்கிறேன் )

Paleo God said...

வழக்கு நீதிமன்றத்திலிருப்பதால்.. கருத்து சொல்ல விரும்பவில்லை..

::))

(அப்ப கோர்ட்டுக்கு போரவங்கள்ளாம் சிரிச்சிகிட்டே போராங்களே,,)

vasu balaji said...

மதார் said...

உங்கள பார்த்த ரொம்ப பாவமா இருக்கு , என்னால முடியல தனிய உக்காந்து லூசு மாதிரி சிரிச்சேன் படிச்சுட்டு (ஆபீஸ்ல இருக்கிறேன் )//

ம்ம்

vasu balaji said...

பலா பட்டறை said...

வழக்கு நீதிமன்றத்திலிருப்பதால்.. கருத்து சொல்ல விரும்பவில்லை..

::))

(அப்ப கோர்ட்டுக்கு போரவங்கள்ளாம் சிரிச்சிகிட்டே போராங்களே,,)

ஆமாங்க.:))

கலகலப்ரியா said...

ம்ம்... ஒரு வழியா நியூ இயர் resolution மீறிட்டீங்க...

வழக்கம் போல... நீங்க பண்ற காமெடிய அப்டியே effect குறையாம கொடுத்திருக்கீங்க... :P

பின்னூட்டத்ல.. வயசாச்சு.. வயசாச்சுன்னு சொல்லி... யூத்துன்னு அவங்கள கண்பிக்க ட்ரை பண்ற சின்னப் பசங்கள எல்லாம் நாலு வாங்கு (செல்லமாதான்..) வாங்கலாமான்னு இருக்கு..

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ம்ம்... ஒரு வழியா நியூ இயர் resolution மீறிட்டீங்க...//

அய்யயோ. நீ சொன்னா மாதிரி இந்த ஒரு இடுகைதான் உருப்படியா போட்டேன்னுல்ல இருக்கேன்..அவ்வ்வ்:))

//வழக்கம் போல... நீங்க பண்ற காமெடிய அப்டியே effect குறையாம கொடுத்திருக்கீங்க... :P//

அடிப்பாவி:))

//பின்னூட்டத்ல.. வயசாச்சு.. வயசாச்சுன்னு சொல்லி... யூத்துன்னு அவங்கள கண்பிக்க ட்ரை பண்ற சின்னப் பசங்கள எல்லாம் நாலு வாங்கு (செல்லமாதான்..) வாங்கலாமான்னு இருக்கு..//

சொல்லாத. செய்ய்ய்ய். என்னா அலும்பு பண்றாங்க:))

அகல்விளக்கு said...

மீ த 200 போடாம இருக்க விடமாட்டீங்க போல....

நடத்துங்க...

நிச்சயம் போட்டுடலாம்...

அகல்விளக்கு said...

அ for அகல்விளக்கு

அகல்விளக்கு said...

ஆ for ....??? தெரியல (200 கொண்டு வர்றதுக்கு என்னல்லாம் பண்ண வேண்டியிருக்கு)

அகல்விளக்கு said...

அப்பாடா...

டூட்டி ஓவர்

மீ த செகண்ட் சென்சுரீரீய்ய்ய்ய்ய்ய்......

«Oldest ‹Older   1 – 200 of 206   Newer› Newest»