நேற்று காலையில் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடந்தேவிட்டது. என்னன்னு கேக்க மாட்டிங்களா? ப்ரியா நீ கேளேன். கதிர் நீங்க கேளுங்களேன். பாலாசி நீயாவது கேளேன். சரி நானே சொல்லிடுறேன். நாய் சேகர் மாதிரி கெஞ்சாம, அலப்பற பண்ணாம நானும் கோர்ட்டுல போய் சாட்சி சொல்லிட்டு வந்தேன். (யோவ்! த்த்தூன்னு சத்தம் வந்திச்சே யாரு துப்பினது?)
44 வருஷமா சென்னை மாநகருக்குள்ள இருந்தாலும், சுத்திப்பார்க்கன்னு கூட ஹைகோர்ட் உள்ள போகாத ஒரு அப்புராணிய விதி இழுத்து கொண்டு போய் விட்டுடுச்சி. அலுவலக சம்பந்தமான ஒரு கேஸ் (அல்ல்ல்லோ! க்க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிமினல் கேசுங்க) விஷயமாக 7ம் திகதி காலை 10 மணிக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய யூத்து (நாந்தான் நாந்தான்) சாட்சி சொல்ல வேண்டியிருப்பதால் முந்தா நாள் சாயந்திரம் 4.00 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் என்ற கடிதம் சுமார் 4 மணிக்கு கொடுக்கப்பட்டது.

ஆட்டோ பிடித்து ஓடி, வக்கீலை பார்த்து விபரம் கேட்டுக் கொண்டு நாளைக் காலை 10க்கெல்லாம் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி வரும் வரையில் எந்த பரபரப்பும் இல்லை. நேரம் செல்லச் செல்லத்தான் இந்த வரலாற்றுச் சிறப்பான நிகழ்ச்சியின் தாக்கம் என்னுள் இறங்க ஆரம்பித்தது.
ஒரு ஃபேன் வாங்கவும், வாக்மேன் வாங்கவுமே அரைலூசாகும் அளவுக்கு பல்வேறு சிந்தனைகளுக்கு ஆளாகும் நான் இதில் மட்டும் சோடை போய் விடுவேனா என்ன? மனதிற்குள் பராசக்தி முதல் பார்த்த படங்களில் எல்லாம் வந்த கோர்ட் சீன் கண்முன் வந்தது. ஆண் பெண் என்று அத்தனை வக்கீல் பாத்திரத்தில் நடித்த நடிகர்களும், பெர்ரிமேசனும் சூழ்ந்து நின்று கும்மியடித்தார்கள். அந்தக் கும்பலில் ரொம்ப சாதுவாய் இருந்தது நானும் எங்கள் வழக்கறிஞரும்தான்.
நானே சாட்சியாய், நானே வக்கீலாய், நானே எதிர்கட்சி வக்கீலாய், நானே நீதிபதியாய், நானே வானம்பாடி, வானம்பாடி வானம்பாடி எனக்கூவும் டவாலியாய் எல்லாம் கற்பனை செய்து கொண்டு விசாரணை, குறுக்கு விசாரணை எல்லாம் நடாத்தி ரிகர்சல் பார்த்துக் கொண்டு ஒரு மார்க்கமாய் தூங்கப் போனேன்.
காலையில் ஒரு வழியாக, தேடி கண்டுபிடித்து சரியான கோர்ட்டில் ஆஜராகி, அங்கிருந்தவரிடம் சம்மனை நீட்டி இங்கதானே என்றேன். அரைக்கண்ணால் பார்த்து, விட்னஸா, அங்க போய் உக்காருங்க என்று ஒரு பெஞ்சைக் காட்டினார். முதல் முறை கோர்ட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் அந்த வரலாற்று நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை ஊடகங்கள் தவற விட்டாங்களேன்னு அனுதாபமா இருந்தது.
உள்ள நுழைஞ்சா 2 கூண்டு இருந்திச்சி. கொஞ்சம் மிரண்டு போய் அப்புறம் சரி பெருசா கும்பலா இருக்கிறது குற்றவாளிக் கூண்டு, ஒத்தையா இருக்கிறது சாட்சிக் கூண்டுன்னு சமாதானமாகி அந்த பெஞ்சில் போய் அமர்ந்தேன். சுற்றிலும் தூங்குமூஞ்சி மரம், குளுகுளுவென்ற காற்று, ஜன்னலோர பெஞ்ச். சவாசனம் செய் என்று மனசு கெஞ்சினாலும் இல்லை கோழியாசனம்தான் நல்லது என்று யோகாவில் மூழ்கினேன்.
சைலேன்ஸ் என்று சினிமா மாதிரியே கோர்ட் ஆரம்பித்தது. கேஸ் நம்பர் படித்து குற்றவாளிகள் பெயர்களைப் படிக்க என்னமோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் வரிசையாக அவர்கள் இடத்தில் வந்து நின்று கை தூக்குவார்களே அப்படி வந்து நின்றதும் ஆடிப்போனேன்.
ங்கொய்யால நெத்தி நிறைய விபூதி, சந்தனம், குங்குமம், கையில கழுத்துல கலர் கலரா கயிறு, தாயத்து இன்னும் என்னல்லாம் உண்டோ அத்தனையும் வைத்துக் கொண்டு வந்தவர்கள் நடுவில் நான் கேடி மாதிரி இருந்ததாகப்பட்டது. (ப்ரியா: இல்லன்னாலும்!)
எனக்குன்னே அமையுமா தெரியல. அந்த கும்பல்ல ஒருத்தன் பேரு என் பேரா இருந்து தொலையுமா? அதுவும் வராம இருந்து தொலைவானா. இவங்க பேர் சொல்லி திரும்ப திரும்ப கூப்பிட கால் எழுந்து ஓடுறேன்னு இழுக்க, மண்டை பன்னாட அது குற்றவாளி பட்டியல் நீயில்லடான்னு இழுத்து புடிக்க அந்த கும்பல்ல ஒரு புண்ணியவான் அவரு வரலைங்கன்னான். அப்பாடான்னு இருந்திச்சி.
ஒரு வழியா ஏறு ராசான்னு கூப்புட்டாக. நான் பொசுக்குன்னு ஊடால போய் நின்னா, அங்க நின்ன ஆளு, ஏங்க இப்புடி குறுக்கால வரக்கூடாதுங்க. சுத்திக்கிட்டு வரணும்னான். சரியா, ஏறி நின்னு, எல்லா சாமியும் கும்பிட்டு மனசுக்குள்ள இருந்த பக் பக்கை மறைத்து நீதிபதியை பார்த்து ஒரு கான்ஃபிடண்ட் அண்ட் ப்ளீசிங் ஸ்மைல் (ப்ரியா:ஹய்யோ ஹய்யோ! பிதாமகன் விக்ரம் மாதிரி சிரிச்சிருக்கும். இதுக்கு இந்த சீனப் பாரேன். சார் முடியல) விட்டு நிற்க, எதிர் கட்சி வக்கீல் புதுசா ஏதோ பிரச்சனை கிளப்பினார்.
இறங்கிப் போய் உக்காருங்க கூப்புடுவாங்கன்னு என் முதல் எண்ட்ரியே ஊத்திகிச்சி. இந்த முறை வடிவேலுக்கு எதிர் திசையில் கலக்க ஆரம்பித்துவிட்டது. சகுனமே சரியில்லையே என்னாகுமோ என்ற பயம் ஒரு பக்கம். எதிர் கட்சி வக்கீலும் நீதிபதியும் விவாதத்தில் இறங்கி யார் சூடாகி விட்டாலும் பொரியப் போறது நான் என்ற பயம் ஒரு பக்கம்.

பக்கத்து பன்னாட சத்தமாகவே ஸ்லோகம் சொல்லி சாமிகிட்ட டீலிங் போடுறாரு. எனக்கு அதுவும் வராது. வேணாம்! வேணாம். கூப்டுருங்க. அழுதுறுவேன்னு நான் ஸ்லோகம் சொல்லிக்கிட்டேன்.
இந்த முறை கூப்பிட்டதும் வக்கீல்கள் கோட்டுப் பின்னாடி மறைஞ்சு வந்ததால ஏன் இப்படி வந்தன்னு யாரும் கேக்கல. ஏறீட்டேன் கூண்டுக்குள்ள. ஜட்ஜ் அய்யாக்கும் என்ன பத்தி தெரிஞ்சிருக்கும் போல. இங்லீஷ் வருமான்னாரு. மனசுக்குள்ள ஆத்தா சொல்ற ஜாவும் இல்லாம யாவும் இல்லாம ஒரு மாதிரியான ஜ்யா வந்து அப்புடியே எடுத்து வுட்டேன். ரொம்ப நட்பா பிரமாணம் சொல்ல வச்சாரு.
அப்புறம் எங்க வக்கீல பார்த்து நீங்க கேக்கலாம்னாரு. உள்ளங்கால்ல இருந்து ஒரு சூடு பரவிச்சி. சொறி நாய்க்கு பயந்து ஓடுறவன் மாதிரி லப்டப் காதுல டோல்பி சவுண்ட்ல கேக்குது. பாடி, பேஸ்மெண்ட் எல்லாம் தடதடன்னு ஆடுது. நாவு அண்ணத்துல ஒட்டிகிச்சி.
ஆரம்பிச்சது அந்த வரலாற்று நிகழ்ச்சி:-
வக்கீல்: இந்தக் கையெழுத்து உங்களோடதா?
நான்: ஆமாம்
வக்கீல்:இந்த நம்பர் உங்களோடதா?
நான்: ஆமாம்
வக்கீல்: இந்த நம்பர் ரிசர்வ் பேங்க் குடுத்த நம்பரா?
நான்: ஆமாங்க.
கமான் நேக்ஸ்ட்னு இருக்க பொசுக்குன்னு அவ்ளதான்னுட்டாரு. நோஓஓஓஓ. திஸ் ஈஸ் நாட் ஃபேர். இதுக்கா நான் இவ்வளவு மெர்ச்சலானேன்னு வந்திச்சி. ஜட்ஜ் அய்யா எதிர்கட்சி வக்கீல பார்த்து க்ராஸ்னாரு.

அவரு இன்னும் நட்பா நோ யுவர் ஹானர்னு என்னிய பார்த்து சிரிச்சதுல அழுகை முட்டிகிட்டு வந்திச்சி. குற்றம் சாட்டப் பட்டவர்களை நீங்க ஏதாவது கேக்க போறீங்களான்னா, என்னிய பார்க்க கூட பாராம ச்ச்ச்சீ போடான்னுட்டானுங்க.
அத்தனையும் விழுங்கிக்கிட்டு ஆஃபிஸ் வந்தா, நம்ம சதீஷ் (எனக்கு உதவிக்கு இருக்கிறவரு) எங்க சார் போய்ட்டீங்கன்னப்ப சொன்னேன்: நானும் மிகப் பெரிய ரவுடிதான்னு இந்த உலகத்துக்கு காட்டிட்டு வந்தேன்னு!
அத்தனையும் விழுங்கிக்கிட்டு ஆஃபிஸ் வந்தா, நம்ம சதீஷ் (எனக்கு உதவிக்கு இருக்கிறவரு) எங்க சார் போய்ட்டீங்கன்னப்ப சொன்னேன்: நானும் மிகப் பெரிய ரவுடிதான்னு இந்த உலகத்துக்கு காட்டிட்டு வந்தேன்னு!
206 comments:
«Oldest ‹Older 201 – 206 of 206அகல்விளக்கு said...
/அப்பாடா...
டூட்டி ஓவர்
மீ த செகண்ட் சென்சுரீரீய்ய்ய்ய்ய்ய்....../
ஒத்துக்கிர்ரேன். நீஎன்ன விட மிகப் பெரிய ரவுடின்னு ஒத்துக்கிர்ரேன். :))
ipdi oru chance irunthichaa..? che.. vada pochche..! (no kummi... only oppaari..) joot..
கலகலப்ரியா said...
/ipdi oru chance irunthichaa..? che.. vada pochche..! (no kummi... only oppaari..) joot../
அய். எனக்கும் 2 பக்கத்துக்கு போடிச்சி பின்னூட்டம். நிஜம்மாவே நான் மிகப்பெரும் தானா:))
ஆஹா....
இரண்டு பின்னூட்டம் பெறுபவர்கள் மத்தியில்
இரண்டு பக்கம் பின்னூட்டம் பெற்ற தானைத்தலைவன்
வாழ்க...
வாழ்க...
பதிவு சூப்பர். கருத்துகளும் கும்மிகளும் அதைவிட சூப்பர்.
வேலை வெட்டி இல்லாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரிய கொஞ்சம் பொறாமையாக இருக்குது.
வடிவேலுவ போட்ட மாதிரி கொரில்லா செல்ல உங்கள போட்டா தான் செரியாவும்
Post a Comment