Wednesday, January 13, 2010

ஏக்கம்..


பெட்டைக் குயிலோசைக்கு
எசபாட்டாய் ஒற்றைக் குயிலோசை
மரங்களெல்லாம் தாண்டி
மனம் மாற்றிக் கொண்டன..

ஏனோ இப்போதெல்லாம்
ஒற்றைக் குயிலின்
உரத்த ஓசையில்
மற்றக் குயில் அடங்கியே போகிறது

எப்போதேனும்
சேர்ந்து கூவிடினும்
சுருதி ஏனோ
பேதமாகவே ஒலிக்கிறது!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனிமையும் தவிப்பும் மட்டுமே
துணையான நாட்கள் அவை

கருவேம்புக் கஷாயம்
கால்கடுக்க நடைப் பிரதட்சணம்
கண்ணன் கோவிலில் தொட்டில்
கடும் விரதம் பல நாள்

மாரியாத்தா கோவிலில் மண்சோறு
மலையேறி முருகனிடம் மடிப்பிச்சை
மாதம் தவறாமல் செக்கப்பும் மருந்தும்
மலடி என்றதோர் அடைமொழியும் கூட

மருந்து பலித்ததோ
மாயம் நிகழ்ந்ததோ
அவள் மலர்ந்தாள்
அவளும் மலர்ந்தாள்

அம்மா பாரும்மாவும்
அண்ணா அடிச்சிட்டாம்மாவும்
அலுத்துப் போன ஒரு நாளில்
அனிச்சையாய் சொடுக்கியது நாக்கு

இந்தச் சனியனுங்க தொல்லையில்லாம
எங்கயாவது தனியா நிம்மதியா தொலையணும்!

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

56 comments:

Prathap Kumar S. said...

சூப்பர்

Prathap Kumar S. said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சார்....

அகல்விளக்கு said...

ஹைய்ய்ய்யா......

கவிதை சூப்பரு.....

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா.....

S.A. நவாஸுதீன் said...

ரெண்டுமே நல்லா இருக்கு சார்.

S.A. நவாஸுதீன் said...

இனிய பொங்கல்/தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

vasu balaji said...

நன்றி@@பிரதாப்
நன்றி@@ராஜா
நன்றி@@நவாஸூதீன்

சூர்யா ௧ண்ணன் said...

அருமையான கவிதை தலைவா!
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!..,

ஈரோடு கதிர் said...

ரெண்டாவது கவிதை....

அட...அட....
அருமைங்கண்ணே

Unknown said...

ரெண்டாவது அருமை..

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

மனித இயல்பு.அருமை.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பொங்கல் வாழ்த்துகள்.

Paleo God said...

அருமை சார்..::))

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..::)

Unknown said...

சொடுக்கியது நாக்கு மட்டுமல்ல, உங்கள் கவிதையும் தான்!

பிரபாகர் said...

குயில்களுக்கும் அலுப்பா! அருமை அய்யா...

கிடைத்தலுக்காய் கடும் விரதம், கிடைத்தலின் பெரும் இன்பம். அலுத்தலின் ஆதங்கம். இது எல்லா விஷயத்துக்குமே பொருந்துமய்யா!

இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பின்னோக்கி said...

2 வது கவிதை வாழ்க்கையில் நடக்கும் இயல்பான சம்பவம்.

முதல் கவிதை எனக்கு புரியவில்லை. அதாவது உட்கருத்து.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

aambalsamkannan said...

முதல் கவிதை ஏதோ சொல்கின்றீர்கள் ஆனால் எனக்குதான் புரியவில்லை.

இரண்டாவது கவிதை 'அலுத்துப் போன ஒரு நாளில்
அனிச்சையாய் சொடுக்கியது நாக்கு"
நல்ல வரிகள்,

இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்.

vasu balaji said...

@@நன்றி சூர்யா
@@நன்றி கதிர்
@@நன்றி பட்டிக்காட்டான்
@@நன்றி ஸ்ரீ
@@நன்றி ஷங்கர்
@@முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஜியெஸ்கே
@@நன்றி பிரபாகர்
@@நன்றி சார்
@@நன்றி பின்னோக்கி
@@நன்றி ஆம்பல்

ஆரூரன் விசுவநாதன் said...

இயல்பு வாழ்க்கையின் எச்சங்களை இலக்கியமாய் வடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

கைக்குக் கிடைக்கும் வரைதான் எந்த ஆர்வமும். கிடைத்த பிறகு அதை மறந்து அடுத்ததற்காய் ஏங்கும் மனம்.. புதியது தேடத் தொடங்கும்...குயிலும் சேர்ந்த பின் ஆர்வம் அடங்கி ஒற்றைக் குயிலோசையை அடங்க, குழந்தையும் சனியனை மாறி தனிமை விரும்பும் நெஞ்சம்.

சரிதானே...

ஸ்ரீராம். said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

geethappriyan said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா
கவிதையும் அருமை
ஓட்டுக்கள் போட்டாச்சி

Chitra said...

தனிமையும் தவிப்பும் மட்டுமே
துணையான நாட்கள் அவை ............ very nice.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

சிவாஜி said...

அருமை! வாழ்க்கையின் முரண்பாடு எப்போதும் கவிதை தான்! ரசிக்கும் மனம் யாருக்கு?

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

balavasakan said...

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்...

Ramesh said...

குயில் என்னைக் கெளவிக்கொண்டு....
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா

நிலாமதி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா.....

கலகலப்ரியா said...

good ones sir...


//ஸ்ரீராம். Says:


கைக்குக் கிடைக்கும் வரைதான் எந்த ஆர்வமும். கிடைத்த பிறகு அதை மறந்து அடுத்ததற்காய் ஏங்கும் மனம்.//

:)..

நசரேயன் said...

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் பாலா

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

காதல் குயில்கள் மனம் மாற்றி எசப்பாட்டு பாடி - காலம் கடந்த போது ஒஉரு உரத்த ஓசையில் மற்றது அடங்க - எப்பொழுதாவது சேர்ந்து கூவினாலும் சுருதி பேதம் - இதுதான் வாழ்க்கை

அடுத்த கவிதை - தனிமை - தவிப்பு - வேண்டுதல் பலவிதமாக - மலடி என்ற அடைமொழி அழிய. அவள் மலர அவளும் மலர்ந்தாள் -

மழலைகளின் குறும்பு தாங்க முடியாமல் நாக்கு சொடுக்கியது - ம்ம்ம்ம்

ஆமாம் அவள் மலர அவளும் மலர்ந்தது எனில் அண்ணா எங்கிருந்து வந்தான் - அக்கா என இருக்க வேண்டுமா

நல்ல கவிதைகள்

நல்வாழ்த்துகள் பாலா

Unknown said...

//எப்போதேனும்
சேர்ந்து கூவிடினும்
சுருதி ஏனோ
பேதமாகவே ஒலிக்கிறது!
//

அனுபவம் பேசுகிறது... :)))

Unknown said...

//அம்மா பாரும்மாவும்
அண்ணா அடிச்சிட்டாம்மாவும்
அலுத்துப் போன ஒரு நாளில்
அனிச்சையாய் சொடுக்கியது நாக்கு
//

நல்ல வார்த்தைப் பிரயோகம்..

Unknown said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/இயல்பு வாழ்க்கையின் எச்சங்களை இலக்கியமாய் வடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்/

நன்றி ஆரூரன்

vasu balaji said...

ஸ்ரீராம். said...

கைக்குக் கிடைக்கும் வரைதான் எந்த ஆர்வமும். கிடைத்த பிறகு அதை மறந்து அடுத்ததற்காய் ஏங்கும் மனம்.. புதியது தேடத் தொடங்கும்...குயிலும் சேர்ந்த பின் ஆர்வம் அடங்கி ஒற்றைக் குயிலோசையை அடங்க, குழந்தையும் சனியனை மாறி தனிமை விரும்பும் நெஞ்சம்.

சரிதானே...//

ம்ம்.கொஞ்சம்.

vasu balaji said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா
கவிதையும் அருமை
ஓட்டுக்கள் போட்டாச்சி//

நன்றிங்க கார்த்திக்கேயன். உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துகள்.

vasu balaji said...

Chitra said...

தனிமையும் தவிப்பும் மட்டுமே
துணையான நாட்கள் அவை ............ very nice.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்./

நன்றிங்க சித்ரா

vasu balaji said...

சிவாஜி said...

அருமை! வாழ்க்கையின் முரண்பாடு எப்போதும் கவிதை தான்! ரசிக்கும் மனம் யாருக்கு?

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.//
ஆமாங்க. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

vasu balaji said...

Balavasakan said...

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்...//

நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துகள் வாசு.

vasu balaji said...

றமேஸ்-Ramesh said...

குயில் என்னைக் கெளவிக்கொண்டு....
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா//

:). நன்றி. உனக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் றமேஸ்

vasu balaji said...

நிலாமதி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா.//

நன்றிங்க. உங்களுக்கும் என் இனிய நல்வாழ்த்துகள்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/good ones sir... //

நன்றிம்மா

vasu balaji said...

துபாய் ராஜா said...

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.//

நன்றிங்க ராஜா.

vasu balaji said...

நசரேயன் said...

//இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றி நசரேயன்

நிஜாம் கான் said...

அருமையான கவிதை அண்ணே! நல்லாயிருக்கு.

vasu balaji said...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

/ இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்/

நன்றிங்க சீனா. உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துகள்.


/ஆமாம் அவள் மலர அவளும் மலர்ந்தது எனில் அண்ணா எங்கிருந்து வந்தான் - அக்கா என இருக்க வேண்டுமா//

அவள் மலர்ந்தாள்: கருவுற்றாள்
அவளும் மலர்ந்தாள்:அவள் வாழ்விலும் மகிழ்ச்சி பூத்தது என்ற கருத்தில் சொன்னோன்.

/நல்ல கவிதைகள்/

நன்றி சீனா

நல்வாழ்த்துகள் பாலா

நிஜாம் கான் said...

அண்ணே உங்களுக்கும் எல்லாருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்! நாடு செழிக்கட்டும். வீடும் செழிக்கட்டும்..,

vasu balaji said...

முகிலன் said...

//எப்போதேனும்
சேர்ந்து கூவிடினும்
சுருதி ஏனோ
பேதமாகவே ஒலிக்கிறது!
//

அனுபவம் பேசுகிறது... :)))//

யப்பா சாமி. அங்க நடக்கறது, ஓடுறது, நீந்தறதெல்லாம் போட்டுதள்ளியாச்சி. பறக்கறது விட்டு போச்சேன்னு நம்மள குயிலாக்குறீங்களா?:))

vasu balaji said...

முகிலன் said...

//அம்மா பாரும்மாவும்
அண்ணா அடிச்சிட்டாம்மாவும்
அலுத்துப் போன ஒரு நாளில்
அனிச்சையாய் சொடுக்கியது நாக்கு
//

நல்ல வார்த்தைப் பிரயோகம்..

நன்றி முகிலன்.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

அருமையான கவிதை அண்ணே! நல்லாயிருக்கு.//

நன்றி நிஜாம்.

மாதேவி said...

கவிதை நன்றாக இருக்கிறது.

இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்.

Radhakrishnan said...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். அருமையான கவிதை.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//அவள் மலர்ந்தாள்
அவளும் மலர்ந்தாள்//

அட! .. அட!! ..அட!!!!!!!

vasu balaji said...

நன்றிங்க மாதேவி, வெ.இரா மற்றும் சரவணக்குமார்.

priyamudanprabu said...

சூப்பர்
சூப்பர்

vasu balaji said...

நன்றி பிரபு