வாழ்க்கையில் கட்டம் சரியில்லாமலோ, விதியோ, இதெல்லாம் யாரு நம்புறாங்கறவங்களுக்கு ஏன்னே சொல்லத் தெரியாமல் ஏதோ ஒன்றாலோ நடக்கும் சில நிகழ்வுகள் நம் மனத்தில் இவருக்குப் போய் ஏன் இப்படி நடந்தது என உச்சுக் கொட்ட வைக்கும்.
1975 முதல் 1978 வரை இந்திராகாந்தி அம்மையாரால் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்ட காலம் அது. உண்மையில் அரசுத்துறைக்கு பொற்காலம் அது. இரயில்வேத் துறையில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டு, பங்கு பெறுபவர்கள் வேலை நீக்கம் செய்யப் படுவார்கள் என்று நிர்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என தொழிற்சங்கத்தால் தடுக்கப்பட்டது.
சொந்தக் காரணங்களுக்காக திருப்பத்தூர், திண்டிவனம், நெல்லூர் என்று 100-150 கி.மீ.க்கு அப்பாலிலிருந்து தினசரி வந்து போகும் தொழிலாளர்கள் அதிகம். வேலை நிறுத்தம் காரணமாக வர முடியாமல் போக நேரலாம் என்று அலுவலகத்திலேயே பெரும்பான்மையானோர் தங்கிவிட்டனர். திடீரென தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அலுவலக வாயிலில் கூடி கோஷம் எழுப்புவதும், வேலைக்கு வருபவர்களைத் தடுப்பதும், போலீஸ் வந்து அள்ளிக்கொண்டு போவதும் தினசரி வழமையாகிப் போனது.
சக தொழிலாளர் ஒருவரும் அவர் சகோதரர்கள் மூவரும் செங்கல்பட்டிலிருந்து தினசரி வந்து செல்பவர்கள். அவர்களும் அலுவலகத்தில் தங்கியவர்கள். நண்பர் மிக நேர்மையான திறமையான அலுவலர். அலுவலக நேரத்தில் சீட் தேய பணி செய்தும், பயண நேரத்தில் முடிக்க முடியும் என வீட்டுக்கு அள்ளிக் கொண்டு செல்பவர். அதிகாரிகளிடத்தில் மிக நல்ல பெயர் எடுத்தவர்.
வேலை நிறுத்த நாள் ஒன்றில் அமாவாசை வந்துவிட அலுவலக நேரத்துக்கு முன் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு, அருகிலிருந்த கோவிலுக்குச் சென்று, யாரோ ஒரு ஏழைக்கு காலை உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு அலுவலகம் செல்ல வருகையில் கதவடைப்பு போராட்டம் துவங்கிவிட்டிருந்தது. இத்தனைக்கும் அலுவலகத்துக்கும், கோவிலுக்கும் 50மீ தூரம் கூட இல்லை. நண்பர் பதைத்துப் போய் செய்வதறியாமல் நின்றிருக்க, பின்பக்கமிருந்து வந்த போலீஸ் கதற கதற இவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போனதால் பணி நீக்கம் செய்யப் பட்டார்.
வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து, பங்கேற்காதவர்களை ஊக்குவிக்கிறேன் என அரசுத் தரப்பு அவர்களின் பிள்ளைகளில் ஒருவருக்கு வேலை அல்லது அதற்குத் தகுதியற்றோருக்கு ஒரு இன்கிரிமெண்ட் என அறிவித்தது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டாலும், தேர்தல் சமயத்தில் ஒரு மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் பழைய சர்வீஸ் கணக்கெடுக்கப் படாமல் புதியதாக பணி நியமனம் என்ற எலும்புத்துண்டு நீட்டப்பட்டது.
நண்பரும் அப்படி கிட்டத்தட்ட 25 வருட பணிமூப்பைத் துறந்து வேலைக்குச் சேர்ந்தார். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், அவர்கள் தலைமையில் நடந்த போராட்டம் என்பதால் பழைய பணியும் வேலை நிறுத்ததில் பங்கேற்றவர்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படும். வேலை நிறுத்தக் காலம் மன்னிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நண்பரைத் தவிர அனைவரும் பயனடைந்தனர்.
காரணம் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கோவிலுக்கு சென்ற பாவம் (அலுவலக நேரத்துக்கு முன்பே) அலுவலகத்தில் முறைகேடாக கையெழுத்துப் போட்டுவிட்டு வேலை நிறுத்தத்திலும் பங்கேற்றமைக்காக பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்ட ஒரே நபர் இவர்.
அடுத்த 15 வருடங்கள் தினசரி நரகம் ஆனது அவர் வாழ்க்கை. அதிகாரிகள் தரப்பில் எவரும் இவருக்காக எதுவும் செய்ய முடியாது என்பது ஒருபுறமிருப்பினும், அதற்கு மேல் அவருக்காக பரிந்துரைக்கவோ மேல் முறையீட்டில் உதவவவோ எவருமில்லை என்பதே உண்மை. அழுது, கெஞ்சி அலுவலக நடைமுறையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனைக்கும் ஒரே பதில் முடியாது என்பதே.
இருந்த ஒரே வழி, முதல் குடிமகனின் மன்னிப்பு. தூக்கு தண்டனைக் கைதிகளின் கடைசி நம்பிக்கைத் துளியாக இருக்குமே அந்த ஒரு வழி. பணிமூப்புக்கு 3 மாதம் முன் நேர்மையா உழைச்சேன், நல்லகாரியம்னு சொன்னதை செய்தேன், எனக்கு இதுதானா வழியென்று அழுதபடியே தயங்கித் தயங்கி கையொப்பமிட்ட மனு, பத்து நிமிடத்தில் காமாட்சி அருளால் ஏற்கப்பட்டது.
சரி! இது உணர்த்துவது என்ன?
அ)தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் வெல்லுமா?
ஆ)15 வருஷமா சரியில்லாத கட்டம் ஏதோ ஒரு கட்டத்துல சரியானதா?
இ)நேரத்தோட ஆளு அம்பு தேடாம பொழைக்கத் தெரியாம இருந்து அவஸ்தைப்பட்டது அவர் தப்பு என்ற யதார்த்தமா?
64 comments:
நல்ல அனுபவ கருத்துக்கள் பாலா சார்
ஹைய்யா நாந்தான் முதல்லயா ...
ஈ) அவர் உங்கள மாதிரி ஒருத்தரிடம் ஐடியா கேட்காததாலோ? :))))
வேதனையில் / விரக்தியில் / மன அழுத்தத்தில் தெளிவான சிந்தனை வராதது இயல்பே...
ஒன்று மட்டும் சொல்லலாம் இனியாவது முடிந்த அளவு நிம்மதியாக இருக்கட்டும் அவர்
நல்ல அனுபவ karithukkal
அவசர நிலைப் பிரகடனதுக்குப் பிறகு ஜனதா கொஞ்சம் நின்னு ஆடி இருக்கலாம்.ஜனதா சாப்பாடு மக்கள் அதிக நாட்கள் சாப்பிட்டிருப்பார்கள்.ரத யாத்திரை,மசூதி இடிப்பு போன்றவை தவிர்க்கப் பட்டிருக்கும்.
வடக்கில் அவசர நிலைப் பிரகடனம் சஞ்சய் காந்தியால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம்.மிசா தவறுகள் தவிர தென்னகத்தில் அரசு பணிகளில் சோம்பலின்மை,ரயில்கள் காலதாமதமின்மை,கூட்டத்தோட கோயிந்தா இன்மை போன்றவை சிறப்பாக செயல்பட்ட மாதிரி பல இன்மைகள்.
இந்திரா காந்தி கால ஆட்சியில் பாக் எல்லைக்குள் கொஞ்சம் புகுந்து பார்த்திருக்கலாம்.(யாரது கரியப்பாவா?கொஞ்சம் பாக். இடத்தைப் புடிச்சுட்டு அப்புறம் கொடுத்திடலாமுன்னு சொன்னது?)பெரியண்ணன் அமெரிக்காவுக்கு பயந்துகிட்டே நாள் ஓடிப் போச்சு.இப்ப அண்ணாத்தே காலம் கடந்த இந்திய கரிசனம்.
ரொம்ப கொடுமையான விஷயம் சார்..சம்பந்தமே இல்லாம யாருடைய தவறுகளுக்கோ..யாரோ பலியாவது இன்னும் தொடர்ந்துகொண்டே இருப்பது வேதனை..:(
பாவம்தான் சார் அவர்.
////அ)தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் வெல்லுமா?
ஆ)15 வருஷமா சரியில்லாத கட்டம் ஏதோ ஒரு கட்டத்துல சரியானதா?
இ)நேரத்தோட ஆளு அம்பு தேடாம பொழைக்கத் தெரியாம இருந்து அவஸ்தைப்பட்டது அவர் தப்பு என்ற யதார்த்தமா////
தலைப்புதான் பதில்.
கஷ்டம் !!
அருமையான பகிர்வு..எங்கள் வங்கியிலும்..தான் தவறு செய்யாது.. நண்பனுக்கு உதவப் போய் தண்டனை அடைந்த என் நண்பன் ஒருவன் உண்டு.
நல்லதொரு பகிர்வு சார்.
இனியாவது அவர் நிம்மதியாகவிருக்கட்டும்......
//அ)தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் வெல்லுமா?//
வெல்லும்... நம்பிக்கைதான்.
இன்னைக்கும் சில நேர்மையான அரசாங்க பேர்வழிகளுக்கு மட்டும் எங்கயோ இதுமாதிரி மாட்டிக்கிற மச்சம் இருக்கத்தான் செய்யுது.
எமர்ஜென்சி அப்ப எனக்கு விவரம் தெரியாது. ஆனா இவர் கதை பரிதாபமா இருக்கு.
இப்ப எமர்ஜென்சி கொண்டுவந்தா நல்லதா ? கெட்ட்தா ?
சிந்தனைக்கு சில நேரங்களில் உத்வி தேவை.... இஃகி!
நல்ல பகிர்வு
அவரின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது,,,,,
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
/ நல்ல அனுபவ கருத்துக்கள் பாலா சார்/
நன்றிங்க.:)
வெற்றி said...
/ ஈ) அவர் உங்கள மாதிரி ஒருத்தரிடம் ஐடியா கேட்காததாலோ? :))))//
கதை கந்தலாயிருக்குமோ?:))
ஈரோடு கதிர் said...
வேதனையில் / விரக்தியில் / மன அழுத்தத்தில் தெளிவான சிந்தனை வராதது இயல்பே...
ஒன்று மட்டும் சொல்லலாம் இனியாவது முடிந்த அளவு நிம்மதியாக இருக்கட்டும் அவர்//
சிந்தனை எல்லாமில்லை. நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை என நினைத்து விடுவார்களோ என்ற எண்ணம் அந்த அப்பாவிக்கு:(
பேநா மூடி said...
நல்ல அனுபவ karithukkal/
நன்றி
அய்யா,
முதலாவதாய் சொன்னதுதான் எனப் படுகிறது, இருந்தாலும் ஒரு கேள்வி, ஏன் இந்த அரசு எந்திரம் இப்படி பாழ்ப்பட்டு கிடக்கிறது? சரியாவதற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா?
பிரபாகர்.
ராஜ நடராஜன் said...
அவசர நிலைப் பிரகடனதுக்குப் பிறகு ஜனதா கொஞ்சம் நின்னு ஆடி இருக்கலாம்.ஜனதா சாப்பாடு மக்கள் அதிக நாட்கள் சாப்பிட்டிருப்பார்கள்.ரத யாத்திரை,மசூதி இடிப்பு போன்றவை தவிர்க்கப் பட்டிருக்கும்.
வடக்கில் அவசர நிலைப் பிரகடனம் சஞ்சய் காந்தியால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம்.மிசா தவறுகள் தவிர தென்னகத்தில் அரசு பணிகளில் சோம்பலின்மை,ரயில்கள் காலதாமதமின்மை,கூட்டத்தோட கோயிந்தா இன்மை போன்றவை சிறப்பாக செயல்பட்ட மாதிரி பல இன்மைகள்.
இந்திரா காந்தி கால ஆட்சியில் பாக் எல்லைக்குள் கொஞ்சம் புகுந்து பார்த்திருக்கலாம்.(யாரது கரியப்பாவா?கொஞ்சம் பாக். இடத்தைப் புடிச்சுட்டு அப்புறம் கொடுத்திடலாமுன்னு சொன்னது?)பெரியண்ணன் அமெரிக்காவுக்கு பயந்துகிட்டே நாள் ஓடிப் போச்சு.இப்ப அண்ணாத்தே காலம் கடந்த இந்திய கரிசனம்.//
என் கருத்தும் இதுதான். அதிகாரவர்க்கத்தின் கயமைத்தனத்தினாலும் இப்போது வாய்மூடியிருந்த பத்திரிகைகள் அப்போது குரல்வளை போச்சு என்று தம்பட்டம் அடித்ததாலும் நோக்கம் ஒன்றாயிருக்க விளைவு வேறானது.:(
பலா பட்டறை said...
ரொம்ப கொடுமையான விஷயம் சார்..சம்பந்தமே இல்லாம யாருடைய தவறுகளுக்கோ..யாரோ பலியாவது இன்னும் தொடர்ந்துகொண்டே இருப்பது வேதனை..:(//
இதில் தவறு என்று சொல்ல முடியாது. சட்டம் வட்டம் என்று அதற்கு மேல் போகாத இயலாமை. அவ்வளவுதான்.
அண்ணே! நம்மவர்கள் 5 வருசம் செய்யற தப்பை மறக்க அன்றைக்கு வழங்கப்படும் பணம் போதும். ஓட்டு போட்டுவிடுவார்கள். அந்த வழியில் வந்தவர்கள்தானே அதிகாரிகளும். நீங்க காலங்காலமா உழைத்தாலும் ஒரு சின்ன மிஸ்டேக் உங்களை கீழே தள்ளிவிடும். தர்மமாவது ஒன்னாவது. மீட்டர் இருந்தா மேட்டரை முடிக்கலாம்,
S.A. நவாஸுதீன் said...
பாவம்தான் சார் அவர்.
தலைப்புதான் பதில்.//
ஆம் நவாஸ்:)
யூர்கன் க்ருகியர் said...
கஷ்டம் !!//
வாங்க யூர்கன்
T.V.Radhakrishnan said...
அருமையான பகிர்வு..எங்கள் வங்கியிலும்..தான் தவறு செய்யாது.. நண்பனுக்கு உதவப் போய் தண்டனை அடைந்த என் நண்பன் ஒருவன் உண்டு.//
நன்றி சார். அலுவலகங்களில் இது ஒரு வித்தியாசம். அவ்வளவுதான்.
துபாய் ராஜா said...
நல்லதொரு பகிர்வு சார்.//
வாங்க ராஜா. நன்றி.
அகல்விளக்கு said...
இனியாவது அவர் நிம்மதியாகவிருக்கட்டும்......//
ஆம். நலமாயிருக்கிறார்.
க.பாலாசி said...
//அ)தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் வெல்லுமா?//
வெல்லும்... நம்பிக்கைதான்.
இன்னைக்கும் சில நேர்மையான அரசாங்க பேர்வழிகளுக்கு மட்டும் எங்கயோ இதுமாதிரி மாட்டிக்கிற மச்சம் இருக்கத்தான் செய்யுது.//
நிறையவே:(
பின்னோக்கி said...
எமர்ஜென்சி அப்ப எனக்கு விவரம் தெரியாது. ஆனா இவர் கதை பரிதாபமா இருக்கு.
இப்ப எமர்ஜென்சி கொண்டுவந்தா நல்லதா ? கெட்ட்தா ?//
முறையான முன்னெச்செரிக்கையோடு அவசியமே:)
பழமைபேசி said...
சிந்தனைக்கு சில நேரங்களில் உத்வி தேவை.... இஃகி!//
இஃகி:)
பிரியமுடன் பிரபு said...
நல்ல பகிர்வு//
நன்றி பிரபு.
ஆரூரன் விசுவநாதன் said...
அவரின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது,,,,,//
ம்ம்:>
பிரபாகர் said...
அய்யா,
முதலாவதாய் சொன்னதுதான் எனப் படுகிறது, இருந்தாலும் ஒரு கேள்வி, ஏன் இந்த அரசு எந்திரம் இப்படி பாழ்ப்பட்டு கிடக்கிறது? சரியாவதற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா?
பிரபாகர்.//
அது ஒரு தனி உலகம். எதுவும் சரிப்படாது. ஒரு கேஸில் சரி என்பது மற்றதில் பெரும் தவறாக போய்விடும்.:(
இப்படிக்கு நிஜாம்.., said...
அண்ணே! நம்மவர்கள் 5 வருசம் செய்யற தப்பை மறக்க அன்றைக்கு வழங்கப்படும் பணம் போதும். ஓட்டு போட்டுவிடுவார்கள். அந்த வழியில் வந்தவர்கள்தானே அதிகாரிகளும். நீங்க காலங்காலமா உழைத்தாலும் ஒரு சின்ன மிஸ்டேக் உங்களை கீழே தள்ளிவிடும். தர்மமாவது ஒன்னாவது. மீட்டர் இருந்தா மேட்டரை முடிக்கலாம்,//
எல்லா நேரத்திலும் அது சரிவராது நிஜாம். இது அதில் ஒன்று.
அவரின் நல்ல குணங்களை அறிந்தவர்கள் "பாவம் அவருக்கு ஏன் இந்த சோதனை. ரொம்ப நல்ல மனுஷன்" என்பர்.
அவரைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள் "இவனுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்" என்பர்.
நரம்பில்லாத நாக்குகளும்... இரக்கமில்லா மனங்களும் எப்படி வேண்டுமானாலும் பேசத் தூண்டும்.
பாவம் அந்த மனிதர். இனிவரும் காலங்களிலாவது அவர் மைழ்வாக இருக்க வேண்டும்.
Vidhi Valiyathu Athai maatra mudiyathu. Enna Nadakkanumo athu nadakkum. itharku yarayum kurai solli ondrum aga povathillai.
அனுபவப பகிர்வு நல்லாத்தான் இருக்கு. கேள்வி கேக்கறது ரொம்ப சுலபம். பதில் சொல்லிப் பாருங்க.
நல்ல வேளை பதினைந்து வருடமாக தாக்கு பிடித்தால் தான் பதிவு போட உங்களுக்கு ஓரு வாய்ப்புஙகோ.
நல்ல வேளை பதினைந்து வருடமாக தாக்கு பிடித்தால் தான் பதிவு போட உங்களுக்கு ஓரு வாய்ப்புஙகோ.
:( என்ன கொடுமை.. பாவம் அவர்..
எமெர்ஜென்சியப்போ நான் பொறக்கவே இல்லைங்கறதால, அதைப் பத்தி அவ்வளவா தெரியாது. ஆனாலும் உங்க நண்பருக்கு நேர்ந்தது கொடுமை.
ஏதோ கடைசியில் அவரது 25 வருட உழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதே?
இனிமே யோசித்து என்ன செய்ய? நீங்கள் குறிப்பிட்ட மூன்று விசயங்களில் எதுவாக இருந்தாலும் அவரது வாழ்க்கை காலம் தொலைந்தது தொலைந்ததுதான்.
நடந்தது நடந்து விட்டது, இதுபோல் எவர் வாழ்விலும் நடக்காமல் இருந்தால் அதுவே நல்லதாக இருக்கும்.
என்னாத்த சொல்ல சார்... என்ன கொடுமை சார்... பாவம் அந்த மனிதர் ம..
மிகக் கொடுமையான நாட்களைக் கடந்திருக்கிறார். பாவம்தான். என்ன செய்து நிலைமையை சரி செய்து கொள்ள வேண்டும் என்று கூட தெரிந்து கொள்ளாததும் பாவம்தான். ஆனால்,
வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட பிறகு Movement Register இல் கைஎழுத்திடாமலோ, மேலதிகாரியின் அனுமதி இன்றியோ போய் இருந்தால் அது தவறுதான். அதை இந்த மாதிரி சில மாட்டிக் கொண்ட தருணங்களில் சரி செய்வது மிகக் கடினம். என் நண்பர் ஒருவர் பணி நேரத்தில் வெளியே சென்று விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதியாக, அலுவலக நண்பர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்தை மாற்றி, அனுமதி எழுதிவைத்து உதவினார்கள்..
நீங்கள் சொல்வது மிசாக் காலம் என்பதால் சாமி வந்து காப்பாற்ற வேண்டியதாய் இருந்திருக்கிறது.
நிறைய யோசிக்க வைத்த விஷயம் இது...... !
எனக்கென்னவோ ஒவ்வொரு குடிமகனுக்கும், அடிப்படை சட்டம் தெரியனும்
பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் அதை பாடமாகினால் இந்த மாதிரி பிரச்சனைகள் வராதோன்னு தோணுது...
இதான் சார் உலகம்...
Roseling said...
அவரின் நல்ல குணங்களை அறிந்தவர்கள் "பாவம் அவருக்கு ஏன் இந்த சோதனை. ரொம்ப நல்ல மனுஷன்" என்பர்.
அவரைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள் "இவனுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்" என்பர்.
நரம்பில்லாத நாக்குகளும்... இரக்கமில்லா மனங்களும் எப்படி வேண்டுமானாலும் பேசத் தூண்டும்.
பாவம் அந்த மனிதர். இனிவரும் காலங்களிலாவது அவர் மைழ்வாக இருக்க வேண்டும்.//
ஆமாங்க. நல்லா இருக்கார். வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.
KULIR NILA said...
Vidhi Valiyathu Athai maatra mudiyathu. Enna Nadakkanumo athu nadakkum. itharku yarayum kurai solli ondrum aga povathillai.//
ம்ம்.
புலவன் புலிகேசி said...
அனுபவப பகிர்வு நல்லாத்தான் இருக்கு. கேள்வி கேக்கறது ரொம்ப சுலபம். பதில் சொல்லிப் பாருங்க.//
நான் தருமி. கேக்கதான் தெரியும்.
தாராபுரத்தான் said...
நல்ல வேளை பதினைந்து வருடமாக தாக்கு பிடித்தால் தான் பதிவு போட உங்களுக்கு ஓரு வாய்ப்புஙகோ.//
:))
முத்துலெட்சுமி/muthuletchumi said...
:( என்ன கொடுமை.. பாவம் அவர்..//
ரொம்பக் கொடுமைங்க. ஆனா எப்பவும் போல உழைப்பில் குறையே வைக்கவில்லை. அது மட்டுமே பலன் கொடுத்தது என நம்புகிறேன்.
முகிலன் said...
எமெர்ஜென்சியப்போ நான் பொறக்கவே இல்லைங்கறதால, அதைப் பத்தி அவ்வளவா தெரியாது. ஆனாலும் உங்க நண்பருக்கு நேர்ந்தது கொடுமை.
ஏதோ கடைசியில் அவரது 25 வருட உழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதே?//
ஆமாம்.
வெ.இராதாகிருஷ்ணன் said...
இனிமே யோசித்து என்ன செய்ய? நீங்கள் குறிப்பிட்ட மூன்று விசயங்களில் எதுவாக இருந்தாலும் அவரது வாழ்க்கை காலம் தொலைந்தது தொலைந்ததுதான்.
நடந்தது நடந்து விட்டது, இதுபோல் எவர் வாழ்விலும் நடக்காமல் இருந்தால் அதுவே நல்லதாக இருக்கும்.//
ம்ம்.சரியாகச் சொன்னீர்கள்.
Balavasakan said...
என்னாத்த சொல்ல சார்... என்ன கொடுமை சார்... பாவம் அந்த மனிதர் ம..//
ம்ம்.
ஸ்ரீராம். said...
மிகக் கொடுமையான நாட்களைக் கடந்திருக்கிறார். பாவம்தான். என்ன செய்து நிலைமையை சரி செய்து கொள்ள வேண்டும் என்று கூட தெரிந்து கொள்ளாததும் பாவம்தான். ஆனால்,
வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட பிறகு Movement Register இல் கைஎழுத்திடாமலோ, மேலதிகாரியின் அனுமதி இன்றியோ போய் இருந்தால் அது தவறுதான். அதை இந்த மாதிரி சில மாட்டிக் கொண்ட தருணங்களில் சரி செய்வது மிகக் கடினம். என் நண்பர் ஒருவர் பணி நேரத்தில் வெளியே சென்று விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதியாக, அலுவலக நண்பர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்தை மாற்றி, அனுமதி எழுதிவைத்து உதவினார்கள்..
நீங்கள் சொல்வது மிசாக் காலம் என்பதால் சாமி வந்து காப்பாற்ற வேண்டியதாய் இருந்திருக்கிறது./
இது அலுவலக நேரத்துக்கும் முன்னால். :)
Chitra said...
நிறைய யோசிக்க வைத்த விஷயம் இது...... !//
:)
ஜிகர்தண்டா Karthik said...
எனக்கென்னவோ ஒவ்வொரு குடிமகனுக்கும், அடிப்படை சட்டம் தெரியனும்
பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் அதை பாடமாகினால் இந்த மாதிரி பிரச்சனைகள் வராதோன்னு தோணுது...//
சட்டம்லாம் வட்டம் போட்டப்புறமும் இருக்கிற வழி பத்திதான் இது:)
கலகலப்ரியா said...
இதான் சார் உலகம்...//
ம்ம். ஆமாம்மா.
பலா பட்டறை Says:
January 19, 2010 2:14 PM
ரொம்ப கொடுமையான விஷயம் சார்..சம்பந்தமே இல்லாம யாருடைய தவறுகளுக்கோ..யாரோ பலியாவது இன்னும் தொடர்ந்துகொண்டே இருப்பது வேதனை..:(
இதுதான் வேதனையானது, நானும் அப்படி பலியாகி இருக்கிறேன் பல நேரங்களில்.
குடுகுடுப்பை said...
பலா பட்டறை Says:
January 19, 2010 2:14 PM
ரொம்ப கொடுமையான விஷயம் சார்..சம்பந்தமே இல்லாம யாருடைய தவறுகளுக்கோ..யாரோ பலியாவது இன்னும் தொடர்ந்துகொண்டே இருப்பது வேதனை..:(
இதுதான் வேதனையானது, நானும் அப்படி பலியாகி இருக்கிறேன் பல நேரங்களில்.//
வாங்க.ஆமாங்க.
Post a Comment