Thursday, January 14, 2010

பட்டணத்துப் பொங்கல்.

நானும் பொறுமையா இருந்து பார்த்தேன். அடக்கமாட்டாம வருது. ஆளாளுக்கு கிராமத்து பொங்கல் வைபவம், அதும் மாட்டுப் பொங்கல் பத்தி அளந்து விடுறாங்க. என்னடா, பாவப்பட்ட ஜன்மங்க பட்டணத்துல பொழைக்குதுங்களே, நல்ல நாளும் அதுவுமா ஏங்க விடுறமேன்னு தோணுதா?

சரி எழுதட்டும், வேணாங்கல. எல்லாரும் பெரிய பெரிய இடுகையா போட்டு, மாடு எழுந்திருக்கிறதில இருந்து அது தூங்க போற வரைக்குமா எழுதுவாங்க? இங்க இருக்குற மாடு படிச்சா இப்புடி ஒரு பொறப்பான்னு சூசைட் பண்ணிக்கும்.

இங்கயும் மாடு இருக்கு. இங்கயும் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவாங்க தெரியுமா? கறவை மாடுன்னா ஒரு மாதிரி, வண்டி மாடுன்னா ஒரு மாதிரி. கறவை மாடுன்னா, மாட்டுக்காரரு, பாலெல்லாம் ஊத்திட்டு வந்து, நாஷ்டா சாப்டு, கடைக்கு போய் பெயிண்ட் டப்பா, கலர் பேப்பரு, பலூனு, புது நைலான் கயிறு எல்லாம் வாங்கிட்டு வருவாரு.

பத்து மணிக்கு மேல மாடுங்கள அவுத்து தெருவில விடுவாரு. தெரு தாண்டி போகாம காவலுக்கு ஆளிருக்கும். இவரு தொழுவத்த (ம்கும். அந்த காலத்துல  தொழுவம் அளவுதான் இவரு மனை) அது இருக்கும் ஒரு ஓரம், அத சுத்தம் பண்ணுவாரு.

அப்புறம் மாட திரும்ப கொண்டுவந்து கட்டி, நாத்தம் புடிச்ச பெயிண்ட் அடிப்பாரு கொம்புக்கு. அது முடிய சாப்பிட போவாரு. அப்புறம் ஒரு தூக்கம் போட்டுட்டு கொழால ட்யூப் கனெக்‌ஷன் குடுத்து கழுவி விடுவாரு. இதமா வைக்கோல்ல தேய்க்கிறதெல்லாம் இல்ல.

அதான் இப்ப வண்டி கழுவற ட்யூப் 100ரூன்னு விக்கிறானே அதில சுள்ளுன்னு அடிச்சி கழுவுவானுங்க. 4 மணிக்கா ஊசி போட்டு, ஒட்ட கறந்துட்டு, பால் ஊத்த போவாரு. அவரு சம்சாரம், பொட்டு வச்சி விட்டு, காஞ்ச வைக்கோல் பிரிச்சி போடும். பால் காரரு பால் ஊத்திட்டு டாஸ்மாக்குல ஊத்திகிட்டு வருவாரு.

ஒரு பக்கம் பால்காரம்மா பொங்கலுக்கு (ரேஷன் அரிசிலதானுங்கோ) வழி பண்ணும். இவரு கயிறு மாத்தி, பலூன் கட்டி, எல்லாம் முடிய அந்தம்மா பொங்கல் ரெடின்னா, கட்டுன படியே, கற்பூரம் சுத்துவாங்க. ஒரு ஒரு உருண்ட பொங்கல் ஊட்டுவாங்க.

அப்புறம் ஒரு கதர் துண்டு கழுத்துல இல்லன்னா கொம்புல கட்டி, வாடிக்கை வீட்டுக்கு ஓட்டிகிட்டு போவாங்க. அங்க வெல்லம், சில பேரு அருகம்புல்லு 4 தழைன்னு குடுப்பாங்க. மொதலாளிக்கு காசு குடுப்பாங்க. இப்போ, வீதில போனா போலீசு புடிக்குமாமே. அந்தக் காசையும் புடிங்கிக்குறான்னு மெயின்ரோடு பக்கம் போகாம முட்டுசந்து, மூத்திர சந்தாதான் கூட்டிட்டு போறானுவ மொதலாளிங்க.

அப்புறம் கொண்டாந்து கட்டிட்டு, திரும்ப டாஸ்மாக் போய் ஊத்திகிட்டு உழுந்து கெடக்கறதோ ஊட்டுக்கு வரதோ அவங்க வசதிக்கு பண்ணுவாங்க. வண்டி மாடு இன்னும் பாவம். லோடடிக்கற நேரத்துல பெயிண்ட் அடிப்பாங்க கொம்புக்கு. இல்லன்னா அதுவுமில்ல.அது 4 மணி வரைக்கும் வண்டி இழுத்துட்டு வந்து, அத பேருக்கு கழுவி விடுவாங்க.

அப்புறம் மூக்கணாங்கயிறு மாத்தி, அரை முழம் பூ கொம்புல சுத்தி, கற்பூரம் காட்டி, கட்டி போட்டு, அய்யா கெளம்பிடுவாரு தண்ணியடிக்க. அதுங்களுக்கு உண்டகட்டி பொங்கல் ஒரு வாய், அப்புறம் வைக்கோல்.



அடுத்த நாள், காலையிலயே கிளம்பிடுவாங்க. ஒரு பஸ் அளவு ஜனம் ஏறிக்கும் வண்டியில. தொங்கட்டான் தொங்கட்டான்னு பீச்சு, பொருக்காட்சின்னு கூட்டிட்டு போவானுங்க. எதோ, அதுங்க புரட்சிய காட்ட போலீச பார்த்ததும் ஒன்னுக்கு போறது, சாணி போடுறதுன்னு அழிம்பு பண்ணிகிட்டே போவும். அதுங்க பாஷைல இன்னிக்கு மாமூல் போச்சான்னு நக்கலடிக்கும் போல.

மாடு இல்லாத மாடுங்க. அட மனுசப் பன்னாடைங்க சிலது இருக்குங்க. என்னமோ அதுங்களுக்குதான் பொங்கல் மாதிரி, ரயிலு, பஸ், காலியா வர லாரின்னு ஏறிகிட்டு பொறுக்கித்தனம் பண்ணிகிட்டு பீச்சு, பொருட்காட்சி, தியேட்டர்னு வருவானுங்க.

ரயில்னா இவனுங்க அப்பன் ஊட்டு வண்டி மாதிரி, டிக்கட்டெல்லாம் வாங்க மாட்டானுங்க. மப்புல மேல சாயரது, கொஞ்சம் ஏம்பான்னா கும்பலா சேர்ந்து ரவுசுடுறதுன்னு அழிம்பு பண்ணுவானுங்க. பஸ்ஸுன்னா சர்ர்ர்னு போலீஸ் ஸ்டேஷன்ல நிறுத்திடுவானுவன்னு மாறி மாறி குரங்கு மாதிரி தாவிகிட்டு, ஜன்னல் வழியா கிள்றது, அலறினா ஓடுற பஸ்ல இருந்து குதிச்சி வேற பஸ்ல தாவறதுன்னு குஜாலா போவானுங்க.

நாள் ஃபுல்லா பொறுக்கிட்டு, பெரிய சாதனை மாதிரி கத்திகிட்டு, வந்த மாதிரியே திரும்புவானுங்க. அப்புறம் டாஸ்மாக்கு, தெருவோர பரோட்டா கடைல தீனி, கோஷ்டி சண்டைன்னு கலகலப்பா போகும்.

ரீஜண்டா இருக்கிறவங்க, டி.வி. பார்த்துகிட்டே, பால்கனில பொங்கல் வெச்சி, ரகசியமா பொங்கலோ பொங்கல்னு பானைக்கு சொல்லிட்டு, ஏப்பி பொங்கல் எஸ்.எம்.எஸ் அனுப்புவாங்க. சாயந்திரம், கரும்பு சீவி, சின்ன சின்ன துண்டு போட்டு வச்சிகிட்டு, டிவி பார்த்துகிட்டே சாப்புட்டு, நியூஸ் பேபர்ல துப்பி, இருட்டினதும் தெருவுல போட்டுடுவாங்க.

சினிமாக்கு போறவங்க போவாங்க. போவாதவங்க டி.வில சேனல் மாத்தி மாத்தி சினிமா பாப்பாங்க. எப்புடியோ, நாங்களும் கொண்டாடுவம்ல பொங்கலு! அலட்டாதீங்கடி!

48 comments:

Subankan said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் அண்ணா.

பெரிய பதிவா இருக்கே, அப்புறமா வந்து படிச்சுக்கிறன்.

vasu balaji said...

நன்றி சுபாங்கன்:)).வாங்க.

பின்னோக்கி said...

நல்லா சொன்னீங்க .... ஒரு இளைஞனின் ஆவேசக் குரல் மாதிரி இருக்குங்க. நாம, ஈ.சி.ஆர்ல 100 கி.மீ ஸ்பீடுல போகும் போது நடுவுல ஓடிவர்ற மாடு பார்த்துதான் பழக்கம். அதுக்குன்னு ஒரு பொங்கல் ரொம்ப ஓவருங்க :).

Paleo God said...

// அலட்டாதீங்கடி!//

அப்படி போட்டு தாக்குங்க...::))

//நாம, ஈ.சி.ஆர்ல 100 கி.மீ ஸ்பீடுல போகும் போது நடுவுல ஓடிவர்ற மாடு பார்த்துதான் பழக்கம். அதுக்குன்னு ஒரு பொங்கல் ரொம்ப ஓவருங்க :).//

ஆனா லீவு உட்றுங்க சாமியோவ்..::))

cheena (சீனா) said...

அன்பின் பாலா

அருமையான நகைச்சுவையுடன் எழுதப்பட்ட பட்டணத்துப் பொங்கல்

ரசிச்சேன்

நல்வாழ்த்துகள்

சிநேகிதன் அக்பர் said...

அதானே அசத்தலா கொண்டாடுங்க சார்.

பொங்கல் வாழ்த்துகள்.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள். தலைவா

ஸ்ரீராம். said...

"எதோ, அதுங்க புரட்சிய காட்ட போலீச பார்த்ததும் ஒன்னுக்கு போறது, சாணி போடுறதுன்னு அழிம்பு பண்ணிகிட்டே போவும். அதுங்க பாஷைல இன்னிக்கு மாமூல் போச்சான்னு நக்கலடிக்கும் போல"

"ரீஜண்டா இருக்கிறவங்க, டி.வி. பார்த்துகிட்டே, பால்கனில பொங்கல் வெச்சி, ரகசியமா பொங்கலோ பொங்கல்னு பானைக்கு சொல்லிட்டு, ஏப்பி பொங்கல் எஸ்.எம்.எஸ் அனுப்புவாங்க. சாயந்திரம், கரும்பு சீவி, சின்ன சின்ன துண்டு போட்டு வச்சிகிட்டு, டிவி பார்த்துகிட்டே சாப்புட்டு, நியூஸ் பேபர்ல துப்பி, இருட்டினதும் தெருவுல போட்டுடுவாங்க.".............

நல்லா ரசிச்சு, உணர்ந்து எழுதி இருக்கீங்க...

க ரா said...

வானம்பாடி அய்யாவுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

பிரபாகர் said...

பட்டணத்து பொங்கல் பிரமாதமான காமெடி பீஸால்ல இருக்கு...

உங்ககிட்ட நிறைய கத்துக்கிறங்கய்யா, எப்படி எழுதனும்னு...

ரசிச்சி எழுதியிருக்கீங்க.... ரொம்ப ரசிக்கும்படியா...

பிரபாகர்.....

Chitra said...

சினிமாக்கு போறவங்க போவாங்க. போவாதவங்க டி.வில சேனல் மாத்தி மாத்தி சினிமா பாப்பாங்க. எப்புடியோ, நாங்களும் கொண்டாடுவம்ல பொங்கலு! அலட்டாதீங்கடி! ...................ரொம்ப அலட்டி கொள்ளாமலே செமத்தியா பின்னுறீங்க........!

ஈரோடு கதிர் said...

நானே... எங்கூட்டுக்கு பால் கறக்கிற எருமைக்கு மட்டும்.... நாளைக்கு எருமைப் பொங்கல் கொண்டாடலாம்னு பார்த்தா....

பட்டணத்துல கொண்டாடறாங்களாம் நல்லா பொங்கலு....

ஆனா... சாமி... உங்க ஊரு மாட்டு ஓனருக்குத்தான் செம பொங்கல் போல இருக்கே...


பார்த்துண்ணே.... மாட்டுக்கு கீது டாஸ்மாக் சரக்கு ஊத்திடப் போறாங்க... எதுக்கும் மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த ரெண்டு நாள் பால் வாங்கீடாதீங்க

vasu balaji said...

பின்னோக்கி said...

/நல்லா சொன்னீங்க .... ஒரு இளைஞனின் ஆவேசக் குரல் மாதிரி இருக்குங்க. நாம, ஈ.சி.ஆர்ல 100 கி.மீ ஸ்பீடுல போகும் போது நடுவுல ஓடிவர்ற மாடு பார்த்துதான் பழக்கம். அதுக்குன்னு ஒரு பொங்கல் ரொம்ப ஓவருங்க :).//

அதுக்காகவே கொண்டாடணும்:))

vasu balaji said...

பலா பட்டறை said...

// அலட்டாதீங்கடி!//

அப்படி போட்டு தாக்குங்க...::))

//நாம, ஈ.சி.ஆர்ல 100 கி.மீ ஸ்பீடுல போகும் போது நடுவுல ஓடிவர்ற மாடு பார்த்துதான் பழக்கம். அதுக்குன்னு ஒரு பொங்கல் ரொம்ப ஓவருங்க :).//

ஆனா லீவு உட்றுங்க சாமியோவ்..::))//

ஆம். அது முக்கியம்:))

vasu balaji said...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

அருமையான நகைச்சுவையுடன் எழுதப்பட்ட பட்டணத்துப் பொங்கல்

ரசிச்சேன்

நல்வாழ்த்துகள்//

நன்றிங்க சீனா:))

vasu balaji said...

அக்பர் said...

அதானே அசத்தலா கொண்டாடுங்க சார்.

பொங்கல் வாழ்த்துகள்.//

:)) நன்றி அக்பர்

vasu balaji said...

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள். தலைவா//

நன்றி அண்ணாமலையான்:). உங்களுக்கும்.

vasu balaji said...

ஸ்ரீராம். said...

/ நல்லா ரசிச்சு, உணர்ந்து எழுதி இருக்கீங்க...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்..மாட்டு பொங்கல் பார்ட்டைச் சொல்லல தானே:))

vasu balaji said...

ramasamy kannan said...

//வானம்பாடி அய்யாவுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..//

வாங்க, முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துகள்.:))

vasu balaji said...

பிரபாகர் said...

பட்டணத்து பொங்கல் பிரமாதமான காமெடி பீஸால்ல இருக்கு...

உங்ககிட்ட நிறைய கத்துக்கிறங்கய்யா, எப்படி எழுதனும்னு...

ரசிச்சி எழுதியிருக்கீங்க.... ரொம்ப ரசிக்கும்படியா...

பிரபாகர்.....//

ம்கும். போற போக்கில மனோரமா கோழி படம் ஒட்டி வச்சிட்டு பழைய சோறு சாப்டுறா மாதிரி, மாடு படம் ஒட்டிட்டு தான் இங்க மாட்டுப் பொங்கல் வரும் போல:))

Unknown said...

//ரீஜண்டா இருக்கிறவங்க, டி.வி. பார்த்துகிட்டே, பால்கனில பொங்கல் வெச்சி, ரகசியமா பொங்கலோ பொங்கல்னு பானைக்கு சொல்லிட்டு, ஏப்பி பொங்கல் எஸ்.எம்.எஸ் அனுப்புவாங்க. சாயந்திரம், கரும்பு சீவி, சின்ன சின்ன துண்டு போட்டு வச்சிகிட்டு, டிவி பார்த்துகிட்டே சாப்புட்டு, நியூஸ் பேபர்ல துப்பி, இருட்டினதும் தெருவுல போட்டுடுவாங்க
//

நல்ல நகைச்சுவை.. :)))

vasu balaji said...

Chitra said...

/ரொம்ப அலட்டி கொள்ளாமலே செமத்தியா பின்னுறீங்க........!//

நன்றிங்க சித்ரா

Unknown said...

//நாங்களும் கொண்டாடுவம்ல பொங்கலு! அலட்டாதீங்கடி!
//

பொறாமைல வெந்து சாகாதீங்க பாஸூ.. கூல் பண்ணிக்கிட்டு போய் சென்னை சங்கமம் பாருங்க..

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

நானே... எங்கூட்டுக்கு பால் கறக்கிற எருமைக்கு மட்டும்.... நாளைக்கு எருமைப் பொங்கல் கொண்டாடலாம்னு பார்த்தா....

பட்டணத்துல கொண்டாடறாங்களாம் நல்லா பொங்கலு....

ஆனா... சாமி... உங்க ஊரு மாட்டு ஓனருக்குத்தான் செம பொங்கல் போல இருக்கே...


பார்த்துண்ணே.... மாட்டுக்கு கீது டாஸ்மாக் சரக்கு ஊத்திடப் போறாங்க... எதுக்கும் மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த ரெண்டு நாள் பால் வாங்கீடாதீங்க//

அல்லோ. கவர் பால்ல தண்ணி கலந்து தான் குடுப்பாங்க. பொங்கல்னா இன்னும் நீர்த்துதான் வரும்:)

நசரேயன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

vasu balaji said...

நசரேயன் said...

/ இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்//

:)). நன்றி.

aambalsamkannan said...

சாகித்திய அக்காடெமி விருதுபெற்ற 'கோபல்லபுரத்து மக்கள்' (1991) என்ற என் இடுக்கையில்
மாடுகளை பற்றியும் சிலவற்றை கூறியுள்ளேன்,நேரம் கிடைக்கும் போது பாருங்களேன் ஐயா.

Romeoboy said...

இப்படியா உண்மைய போட்டு உடைகிறது ??

தாராபுரத்தான் said...

எங்களை மாதிரி ஆட்களுக்கு இது புதுசுங்க.நல்லா ரசித்து படித்தேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான நகைச்சுவை

சுண்டெலி(காதல் கவி) said...

pongal vazhththukkal

சுண்டெலி(காதல் கவி) said...

nallaa irukku...

pongal vazhththukkal....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))))))

Radhakrishnan said...

ஹா ஹா! மிகவும் நகைச்சுவையாக இருந்தது இந்த பொங்கல் சுவை. ஆனால் யதார்த்தம் தொலையவில்லை பாருங்கள், பொங்கலோ பொங்கல். அருமையான பதிவு.

priyamudanprabu said...

நானும் பொறுமையா இருந்து பார்த்தேன். அடக்கமாட்டாம வருது. ஆளாளுக்கு கிராமத்து பொங்கல் வைபவம், அதும் மாட்டுப் பொங்கல் பத்தி அளந்து விடுறாங்க. என்னடா, பாவப்பட்ட ஜன்மங்க பட்டணத்துல பொழைக்குதுங்களே, நல்ல நாளும் அதுவுமா ஏங்க விடுறமேன்னு தோணுதா?//
///////////


அதுதானே?!!!!!!!!!!!?

priyamudanprabu said...

எதோ, அதுங்க புரட்சிய காட்ட போலீச பார்த்ததும் ஒன்னுக்கு போறது, சாணி போடுறதுன்னு அழிம்பு பண்ணிகிட்டே போவும். அதுங்க பாஷைல இன்னிக்கு மாமூல் போச்சான்னு நக்கலடிக்கும் போல.
////

ஹ ஹா

priyamudanprabu said...

சினிமாக்கு போறவங்க போவாங்க. போவாதவங்க டி.வில சேனல் மாத்தி மாத்தி சினிமா பாப்பாங்க. எப்புடியோ, நாங்களும் கொண்டாடுவம்ல பொங்கலு! அலட்டாதீங்கடி!
/////


எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியுள்ளது..................

Unknown said...

நகரங்களில் விழாக்களின் நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளது உங்கள் 'பட்டணத்துப் பொங்கல்'.

vasu balaji said...

@@பார்த்தேன் ஆம்பல்
@@வாங்க ரோமியோ:))

vasu balaji said...

தாராபுரத்தான் said...

// எங்களை மாதிரி ஆட்களுக்கு இது புதுசுங்க.நல்லா ரசித்து படித்தேன்.//

:)) வாங்க அப்பன்.நன்றிங்க

vasu balaji said...

காதல் கவி said...

nallaa irukku...

pongal vazhththukkal....//

நன்றிங்க.

vasu balaji said...

ஸ்ரீ said...

:-))))))))))))//

நன்றி ஸ்ரீ:))

vasu balaji said...

வெ.இராதாகிருஷ்ணன் said...

//ஹா ஹா! மிகவும் நகைச்சுவையாக இருந்தது இந்த பொங்கல் சுவை. ஆனால் யதார்த்தம் தொலையவில்லை பாருங்கள், பொங்கலோ பொங்கல். அருமையான பதிவு.//

நன்றி வெ.இரா.

vasu balaji said...

@@நன்றி பிரபு:))
@@நன்றி ஜியெஸ்கே.

balavasakan said...

சாருக்கு எனது இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்... என்னா சார் எப்புடி நன்னா படைச்சானுகளா..?ஹி..ஹி..

ஜிகர்தண்டா Karthik said...

அடடே இவ்வளவு சிறப்ப பொங்கல் கொண்டாடினீங்களா..
"ஆமா.. பொங்கல் எப்போ வந்தது..."
இது எங்க நிலைமை

நிஜாம் கான் said...

mee the too laatuuuu

S.A. நவாஸுதீன் said...

பட்டணதுக்கு மாடுகள் பாவம்தான் சார். வருஷத்துல ஒரு நாள் கூட அதுங்களுக்கு எஞ்சாய் பண்ண முடியலை.

வழக்கம்போல் இடுகையில் சுவாரசியத்திற்கு குறைவில்லை.