Sunday, January 3, 2010

தனிமை..


உன்னோடு இருக்கும் போதான நம் தனிமை
சொர்க்கமாயிருக்கிறது
நீயில்லாத போதான என் தனிமை மட்டும்
ஏன் நரகமாகிறது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் நினைவுகளுடனான என் தனிமை
சந்தோஷமாயிருக்கிறது
உன் நினைவுகளுடனான என் தனிமையே
துடிக்கவைக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொடுவது உணர்ச்சியென்று
எவன் சொன்னது?
உன் முதல் முத்த நினைவை
எப்படி என்னால் உணர முடிகிறது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நினைவுகள் மூளை சம்பந்தப்பட்டதல்ல
உடல் சம்பந்தப்பட்டதென எனக்கு உணர்த்தினாய்
உன்னோடு இருப்பதான என் நினைவு
உற்சாகமாய் இருக்கிறது
உன்னைப் பிரிந்த நினைவோ
உடலைச் சில்லிட்டு ஓய்ச்சலாக்குகிறது..
~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரிந்திருக்கும் நினைவுகள்
நோவாகிறது
சேர்ந்திருக்கும் நினைவுகள்
மருந்தாகிறது
பிரிந்திருக்கும் நேரம் அதிகமென்பதால்
மருந்தாகவேனும் என்னோடிருப்பாயா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதலே ரோகமாய்
காதலே சிகிச்சையாய்
காதலே மூச்சாய்
காதலே பேச்சாய்
காதலே பசியாய்
காதலே உணவாய்
காதலே எல்லாமுமாய்
காதலோடும் கண்ணீரோடும்
காத்திருக்கிறேன் உனக்காய்..

58 comments:

நசரேயன் said...

//உன்னோடு இருக்கும் போதான நம் தனிமை
சொர்க்கமாயிருக்கிறது!//

புல்லா இருக்குமோ?

நசரேயன் said...

//நீயில்லாத போதான என் தனிமை மட்டும்
ஏன் நரகமாகிறது?
//

காந்திஜெயந்தி அன்றைக்கு அப்படித்தான் தோணும்

நசரேயன் said...

//உன் நினைவுகளுடனான என் தனிமை
சந்தோஷமாயிருக்கிறது//

அளவா குடிக்கும் போது

//உன் நினைவுகளுடனான என் தனிமையே
துடிக்கவைக்கிறது//

அளவில்லாமல் குடிக்கும் போது

Rekha raghavan said...

//பிரிந்திருக்கும் நினைவுகள்
நோவாகிறது
சேர்ந்திருக்கும் நினைவுகள்
மருந்தாகிறது//

அருமையான வரிகள். ரசித்தேன்.

ரேகா ராகவன்.

ஸ்ரீராம். said...

என்னாச்சு...வீட்டுல ஊருக்குப் போய் இருக்காங்களா?

ஐந்தாவது முதலாய், ஒன்று, இரண்டு, மூன்று இரண்டாவதாய்...கடைசி எல்லாவற்றுக்கும் மொத்தமாய்..

நசரேயன் said...

//தொடுவது உணர்ச்சியென்று
எவன் சொன்னது?//

ஆமா பாட்டிலை தொட்டா சுகம் இல்ல


//உன் முதல் முத்த நினைவை
எப்படி என்னால் உணர முடிகிறது?//

ஒரு ரவுண்டுக்கு அப்புறம் தான்

நசரேயன் said...

//நினைவுகள் மூளை சம்பந்தப்பட்டதல்ல
உடல் சம்பந்தப்பட்டதென எனக்கு உணர்த்தினாய்//

குடிக்கும் முன்னாடி அப்படித்தான் தோணும்

//
உன்னோடு இருப்பதான என் நினைவு
உற்சாகமாய் இருக்கிறது
உன்னைப் பிரிந்த நினைவோ
உடலைச் சில்லிட்டு ஓய்ச்சலாக்குகிறது..
//
கண்டிப்பா

நசரேயன் said...

//பிரிந்திருக்கும் நினைவுகள்
நோவாகிறது
சேர்ந்திருக்கும் நினைவுகள்
மருந்தாகிறது
பிரிந்திருக்கும் நேரம் அதிகமென்பதால்
மருந்தாகவேனும் என்னோடிருப்பாயா?//

வீட்டிலே வாங்கி அடுக்கி வையுங்க நல்ல மருந்து

நசரேயன் said...

//காதலே ரோகமாய்
காதலே சிகிச்சையாய்
காதலே மூச்சாய்
காதலே பேச்சாய்
காதலே பசியாய்
காதலே உணவாய்
காதலே எல்லாமுமாய்
காதலோடும் கண்ணீரோடும்
காத்திருக்கிறேன் உனக்காய்..//

அடச்சீ.. இது காதல் கவுஜையா.. நான் வேற என்னோவோன்னு நினைச்சேன்

பின்னோக்கி said...

என்ன ஒரு பீலிங்..அப்பாடி.. என்னங்க விஷயம் ?? :)

இராகவன் நைஜிரியா said...

கவிதையில் இளமை ஊஞ்சலாடுகிறது.

cheena (சீனா) said...

அன்பின் பாலா

தனிமை - அப்படி என்றால் என்ன - உடன் இல்லாவிட்டால் தனிமையா ? தனிமையில் இனிமை கன முடியாதா ?
நம் தனிமை சொர்க்கம்
என் தனிமை நரகம்

சரி சரி

நல்வாழ்த்துகள் பாலா

ஈரோடு கதிர் said...

//கதிர், ஆரூரன் மாதிரி இளசுகள கிளுகிளுக்கச் செய்யும் காதல் கவிதை எழுத மாட்டேன்//

நேத்துதானே சத்தியம் வாங்கினேன்

ப்ரியமுடன் வசந்த் said...

:)

ஈரோடு கதிர் said...

//உன் முதல் முத்த நினைவை
எப்படி என்னால் உணர முடிகிறது?
//

இது சூப்பர்... இதுக்காக மட்டுமே சத்தியத்த கொஞ்சம் தளர்த்திக்கலாம்

ஈரோடு கதிர் said...

//cheena (சீனா) said...
அன்பின் பாலா
//

அய்யா... என்ன இது

காலையில 4 மணிக்கும் பின்னூட்டம் போடுறீங்க / இப்போ 11 மணிக்கும் பின்னூட்டம் போடுறீங்க... உங்கள பார்த்த பொறாமையா இருக்கு

பா.ராஜாராம் said...

உணர்வு பூர்வமாய் வந்திருக்கு பாலா சார்!

வெற்றி said...

//தொடுவது உணர்ச்சியென்று
எவன் சொன்னது?
உன் முதல் முத்த நினைவை
எப்படி என்னால் உணர முடிகிறது?//

அய்யோ! பின்னிட்டீங்க போங்க..

Unknown said...

நசரேயன், நியூ இயருக்கு அடிச்சது இன்னும் இறங்கலையா?

கலகலப்ரியா said...

ஸ்ஸ்ஸ்ஸபா... இப்பவே கண்ணைக் கட்டுதே... அருமை அருமை... அன்புடன்... =))

vasu balaji said...

நசரேயன் said...
/புல்லா இருக்குமோ?/
/காந்திஜெயந்தி அன்றைக்கு அப்படித்தான் தோணும்/
/அளவா குடிக்கும் போது/
/அளவில்லாமல் குடிக்கும் போது/
/அடச்சீ.. இது காதல் கவுஜையா.. நான் வேற என்னோவோன்னு நினைச்சேன்/

அண்ணாச்சி. துண்டு பெட்ஷீட் எல்லாம் ஏன் வேலைக்காவலன்னு இப்போ தெரியுது. இது ஃபீலிங்க்ஸ் அண்ணாச்சி ஃபில்லிங் இல்ல:))

vasu balaji said...

KALYANARAMAN RAGHAVAN said...

/ அருமையான வரிகள். ரசித்தேன்./

நன்றிங்க. எங்க நாளாச்சி காணோம்.

vasu balaji said...

ஸ்ரீராம். said...

என்னாச்சு...வீட்டுல ஊருக்குப் போய் இருக்காங்களா?

ஐந்தாவது முதலாய், ஒன்று, இரண்டு, மூன்று இரண்டாவதாய்...கடைசி எல்லாவற்றுக்கும் மொத்தமாய்..//

நன்றி ஸ்ரீராம்.

vasu balaji said...

பின்னோக்கி said...

என்ன ஒரு பீலிங்..அப்பாடி.. என்னங்க விஷயம் ?? :)//

சொல்லிட்டீங்களே. ஃபீலிங்னு. அதான் விஷயம்:))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/கவிதையில் இளமை ஊஞ்சலாடுகிறது.//

அண்ணே! தனிமைக்கும் காதலுக்கும் வயசிருக்காண்ணே. :))

vasu balaji said...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

தனிமை - அப்படி என்றால் என்ன - உடன் இல்லாவிட்டால் தனிமையா ? தனிமையில் இனிமை கன முடியாதா ?
நம் தனிமை சொர்க்கம்
என் தனிமை நரகம்

சரி சரி

நல்வாழ்த்துகள் பாலா//

நன்றிங்க சீனா. 100 பேர் கூட்டத்தில கூட தனிமை உணர முடியும். தனியா இருக்கும்போதே துணை உணர முடியும்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ நேத்துதானே சத்தியம் வாங்கினேன்/

கலகலா சொல்லிச்சு. ஒரு இடுகைன்னாலும் உருப்படியா போடணும்னு. அங்க கேளுங்க.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ :)/

:). டெம்ப்ளேட் கூட காபி பேஸ்ட் போடுறியா பையா:)))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ இது சூப்பர்... இதுக்காக மட்டுமே சத்தியத்த கொஞ்சம் தளர்த்திக்கலாம்//

ஐயா முத்த இனிஸ்பேட்டர். மொத்தமா சொல்லுங்கைய்யா.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//cheena (சீனா) said...
அன்பின் பாலா
//

அய்யா... என்ன இது

காலையில 4 மணிக்கும் பின்னூட்டம் போடுறீங்க / இப்போ 11 மணிக்கும் பின்னூட்டம் போடுறீங்க... உங்கள பார்த்த பொறாமையா இருக்கு//

அல்லாவ். சும்மா டீ ஷர்ட் போட்டுகிட்டு யூத்துன்னு சொல்லிகிட்டு திர்ரதில்லடி. இப்புடி ஆக்டிவா இருக்கணும்.

vasu balaji said...

பா.ராஜாராம் said...

/உணர்வு பூர்வமாய் வந்திருக்கு பாலா சார்!//

என் உணர்வுக்கு கிடைத்த அங்கீகாரம். நன்றி பா.ரா.

vasu balaji said...

வெற்றி said...

//தொடுவது உணர்ச்சியென்று
எவன் சொன்னது?
உன் முதல் முத்த நினைவை
எப்படி என்னால் உணர முடிகிறது?//

அய்யோ! பின்னிட்டீங்க போங்க..//

நன்றிங்க வெற்றி.

vasu balaji said...

முகிலன் said...

நசரேயன், நியூ இயருக்கு அடிச்சது இன்னும் இறங்கலையா?//

அண்ணாச்சி குடிச்சாரா குளிச்சாரா தெரியலையே. சீ இது காதலாங்குறாரு:))

vasu balaji said...

கலகலப்ரியா said...

ஸ்ஸ்ஸ்ஸபா... இப்பவே கண்ணைக் கட்டுதே... அருமை அருமை... அன்புடன்... =))//

ஏய். வாலு. நிஜம்மா நல்லாருக்கா. ஆஆஆஆஆஆஆஆஆரூரா. இங்க பாரீரா:))

புலவன் புலிகேசி said...

//தொடுவது உணர்ச்சியென்று
எவன் சொன்னது?
உன் முதல் முத்த நினைவை
எப்படி என்னால் உணர முடிகிறது?//

ஆ அழகுங்கய்யா,,,நல்ல கவிதை.ரசித்தேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர்
//கதிர், ஆரூரன் மாதிரி இளசுகள கிளுகிளுக்கச் செய்யும் காதல் கவிதை எழுத மாட்டேன்//

நேத்துதானே சத்தியம் வாங்கினேன்
//
சத்தியத்த அய்யா மீறல கதிர், கிறங்கிப்போற மாதிரில்ல எழுதியிருக்காரு?

ம்... எவ்வளவோ பில்டப் கொடுத்து யூத்து அது இதுன்னு சொல்லிக்கறோம், அய்யா கேப்புல பூந்து அவருதான் யூத்துன்னு நம்ம டெபாசிட்ட காலிபண்ணிட்டு போயிடறாரே?

பிரபாகர்.

thiyaa said...

அருமையான கவித்துளிகள்
வலைச்சரத்தில் உங்கள் பனி சிறக்க வாழ்த்துகள்

sathishsangkavi.blogspot.com said...

//உன்னோடு இருக்கும் போதான நம் தனிமை
சொர்க்கமாயிருக்கிறது!
நீயில்லாத போதான என் தனிமை மட்டும்
ஏன் நரகமாகிறது?//

அனுபவ வரிகள் போல் இருக்குது சார்..........

sathishsangkavi.blogspot.com said...

50வது பதிவிற்கு வாழ்ததுக்கள்.........

நிஜாம் கான் said...

// இராகவன் நைஜிரியா said...
கவிதையில் இளமை ஊஞ்சலாடுகிறது.//

ராகவன் அண்ணே! கவிதையில் மட்டும் தானா?
எசகு பிசகா ரிப்பீட்டு...........,,,,,,,,,,,,,,

ரோஸ்விக் said...

//100 பேர் கூட்டத்தில கூட தனிமை உணர முடியும். தனியா இருக்கும்போதே துணை உணர முடியும்//

இந்த இடுகையை மட்டுமல்ல .... இதையும் ரொம்பவே ரசிச்சேன். நல்லா சொல்லீருக்கீங்க அண்ணே.

S.A. நவாஸுதீன் said...

அதே தனிமைதான் இத்தனை நல்ல கவிதைகளும் தந்திருக்கிறது எங்களுக்கு.

ஒவ்வொன்றும் அருமை பாலா சார்.

Ramesh said...

///உன் நினைவுகளுடனான
என் தனிமை
சந்தோஷமாயிருக்கிறது
உன் நினைவுகளுடனான
என் தனிமையே
துடிக்கவைக்கிறது///

உண்மையாக பிடிச்சிருக்கு
கவிதைக்கு :)
வாழ்த்துக்கள்

நர்சிம் said...

கலக்குங்க. முதல் வரியில் இருக்கும் ஆச்சர்ய குறிய எடுத்துருங்க..இன்னும் கலக்கும்.

balavasakan said...

சார் திருப்பி திருப்பி சொல்லுறன் என்னதான் நீங்க காதல் கவிதை எழுதினாலும் யுத்தாக முடியாது...

:)நல்லாருக்கு சார்

க.பாலாசி said...

//தொடுவது உணர்ச்சியென்று
எவன் சொன்னது?
உன் முதல் முத்த நினைவை
எப்படி என்னால் உணர முடிகிறது?//

அவ்வ்வ்வ்வ்வ்........ என்னமோ போங்க...

vasu balaji said...

புலவன் புலிகேசி said...


/ ஆ அழகுங்கய்யா,,,நல்ல கவிதை.ரசித்தேன்//

நன்றி புலிகேசி.

vasu balaji said...

பிரபாகர் said...

/ சத்தியத்த அய்யா மீறல கதிர், கிறங்கிப்போற மாதிரில்ல எழுதியிருக்காரு?

ம்... எவ்வளவோ பில்டப் கொடுத்து யூத்து அது இதுன்னு சொல்லிக்கறோம், அய்யா கேப்புல பூந்து அவருதான் யூத்துன்னு நம்ம டெபாசிட்ட காலிபண்ணிட்டு போயிடறாரே?

பிரபாகர்.//

அது அது.

vasu balaji said...

தியாவின் பேனா said...

/ அருமையான கவித்துளிகள்
வலைச்சரத்தில் உங்கள் பனி சிறக்க வாழ்த்துகள்//

நன்றிங்க தியா.

vasu balaji said...

Sangkavi said...

/ அனுபவ வரிகள் போல் இருக்குது சார்..........//

ஓஹோ

/50வது பதிவிற்கு வாழ்ததுக்கள்/

பாவம் யாருக்கு சேர வேண்டியதோ

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ ராகவன் அண்ணே! கவிதையில் மட்டும் தானா?
எசகு பிசகா ரிப்பீட்டு...........,,,,,,,,,,,,,,//

டாங்ஸ் டாங்க்ஸ்

vasu balaji said...

ரோஸ்விக் said...


/ இந்த இடுகையை மட்டுமல்ல .... இதையும் ரொம்பவே ரசிச்சேன். நல்லா சொல்லீருக்கீங்க அண்ணே.//

நன்றி ரோஸ்விக்

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/அதே தனிமைதான் இத்தனை நல்ல கவிதைகளும் தந்திருக்கிறது எங்களுக்கு.

ஒவ்வொன்றும் அருமை பாலா சார்./

நன்றி நவாஸ்

vasu balaji said...

றமேஸ்-Ramesh said...

/ உண்மையாக பிடிச்சிருக்கு
கவிதைக்கு :)
வாழ்த்துக்கள்//

நன்றி றமேஸ்

vasu balaji said...

நர்சிம் said...

/கலக்குங்க. முதல் வரியில் இருக்கும் ஆச்சர்ய குறிய எடுத்துருங்க..இன்னும் கலக்கும்.//

ஆமாம் நர்சிம். மாத்திட்டேன். நன்றி.

vasu balaji said...

Balavasakan said...

சார் திருப்பி திருப்பி சொல்லுறன் என்னதான் நீங்க காதல் கவிதை எழுதினாலும் யுத்தாக முடியாது...

:)நல்லாருக்கு சார்/

தோ. என்ன ஆகுறது. அதாங்கறேன்.:))

vasu balaji said...

க.பாலாசி said...


/அவ்வ்வ்வ்வ்வ்........ என்னமோ போங்க...//

ஏம்பா அளுவற! அடி கவனம் வருதோ:))