Monday, January 4, 2010

விசாப்பன்யார்...

என்னா பாக்கறீங்க? விசாப்பன்யார்னா என்னான்னா? இந்த அவசர உலகத்தில புத்தாண்டு வாழ்த்து சொல்றது இப்புடித்தான் நம்ம ஆஃபீஸ்ல. விஷ் யூ எ ஹாப்பி ந்யூ இயர்னு சொல்லவோ கேக்கவோ யாருக்கு பொறுமை இருக்கு? சின்ன ஆஃபீஸ்னா பரவால்ல. இது மட்டு மட்டா 3000 பேருக்கு மேல வேலை செய்யிற இடம். அதுல பாதி பேரு எதுக்கோ அலைஞ்சிண்டே இருப்பாங்க.

விவேக் சொல்லுவாரே, எனக்கு கமிஷனர தெரியும் ஆனா அவருக்குதான் என்னைத் தெரியாதுன்னு. அப்படி உங்களுக்கு தெரியாதவங்களுக்கு உங்களைத் தெரியும். உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு உங்களத் தெரியாது. இந்த மாதிரி சூழல்ல காமெடிக்கு பஞ்சமா என்ன?

100 மீட்டர் தூரத்துல நேரா முகம் பார்த்து ஹல்லோஓஓ பாஸ்னு கைய நீட்டிட்டு ஒருத்தரு வருவாரு. இவனாரு? நமக்கு இவன தெரியுமா இல்ல இவனுக்கு நம்மள தெரியுமான்னு மண்டைக்குள்ள ஸர்ச் கமாண்ட் ஓடிட்டிருக்க, யோவ் கிட்ட வந்துட்டான் கை நீட்டுய்யான்னு கை அனிச்சையா நீள, நான் யார் தெரியுதான்னு கேக்காம இருக்கணுமே கடவுளேன்னு மனசு வேண்ட, அந்த கடைசி நொடியில நம்மள தாண்டி ஒரு பத்து அடி பின்னால பாண்ட் பாக்கட் உள்ள கை விட்டுகிட்டு தலைய சாய்ச்சி குறும்பா சிரிச்சிகிட்டிருக்கறவருக்கு விசாப்பன்யார் சொல்லுவான் பாருங்க.

நீட்டுன கை நீட்டுன படி இருக்க, சட்டுன்னு நம்மள எவனும் தெரிஞ்சவன் பார்த்திருப்பானான்னு திகிலோட சுத்திமுத்தி பார்த்து, இல்லைன்னா யப்பேன்னு ஒரு நிம்மதியும், அப்புடி எதுக்கு அவசரமா நீண்டன்னு கைய ஒரு வெறுப்போடவும் பார்க்குற பார்வையிருக்கே, அத உலகத்துல எந்த நடிகனாலயும் காட்ட முடியாது.

அப்புடி ஒரு வேள தெரிஞ்ச முகம் தெம்பட்டுச்சோ, அசராம கையில புதுசா முளைச்ச ரேகைய ஆராய்ச்சி பண்றா மாதிரி அதே டெக்கினிக்க யூஸ் பண்ணி அல்லோன்னு போய் அந்த தெரிஞ்ச மூஞ்ஜிக்கு விசாப்பன்யார் சொல்லுவாய்ங்க. அது லந்து பார்ட்டியா இருந்து தொலைஞ்சதோ, சும்மாதானே சொல்றான் கைய நீட்டினா என்ன போச்சின்னு இருக்கமாட்டான். இப்பதான 10 நிமிஷத்துக்கு முன்ன கக்கூஸ்ல விஷ்பண்ண, மறந்துட்டியான்னு மானத்த வாங்குவான்.

அட இந்த கை குலுக்குறதுலதான் எத்தன வில்லங்கம் இருக்கு தெரியுமா? விரல சேர்த்து கொத்தா புடிச்சி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு நொறுக்கி(இறுக்கமான நட்பாம் ங்கொய்யால) அடுத்த அரை மணி நேரத்துக்கு ஒன்னுமே பண்ண முடியாதபடி சிலது, அடிபம்புல அடிக்கிறா மாதிரி, உன் கைய கழட்டி எடுத்துட்டுதான் மறுவேலைன்னு குலுக்கோ குலுக்குன்னு குலுக்கும் சிலது, புடிக்கவும் புடிக்காம, எடுக்கவும் எடுக்காம கூச்சமா தொட்டுகிட்டு சிலது, கைய நீட்டினா கும்புடு, கும்புடு போட்டா கைய நீட்டின்னு டரியலாகும் சிலது.

கக்கூஸ் வாஷ்பேசின்ல கை கழுவிட்டு ஈரக்கைய நீட்டுவான், சாப்பிட்டு கை கழுவிட்டு வரும்போதே கை நீட்டுவான் சில பேரு. அவசரமா கைக்குட்டை எடுக்கறதுக்குள அட கைய குடுங்க சார்னு ஈரக்கைய புடிச்சி கசக்கோ கசக்குன்னு கசக்கி விசாப்பன்யார் சொல்லியாவணும் இவனுவளுக்கு.

அப்புறம் பாஸ்ங்களுக்கு விசாப்பன்யார் சொல்றது இருக்கே அது சும்மா போனமா சொன்னமான்னு பண்ணமுடியாது. கூடிக்கூடிப் பேசி, க்ருப் க்ரூப்பாத்தான் (வரலாறு முக்கியம் அமைச்சரே) முடிவெடுப்பாங்க. ஆஃபீஸ் இம்ப்ரெஸ்ட்ல பொக்கே வாங்கறதா, மொமெண்டோ வாங்கறதான்னு பலதும் தீர்மானிக்கணும். அப்புறம் ஃப்ரீயானா சொல்லுங்கன்னு சொல்லிட்டு காத்திருக்கணும்.

சில நேரம் அப்புறம் பார்க்கறேன்னு சொன்னா இது வரைக்கும் வந்த இனிப்புகள் ஸ்ரீமித்தாய், க்ராண்ட் ஸ்வீட்ஸ் போல வீட்டுக்கு கொண்டு போற அயிட்டமா வந்திருக்கும்னு புரிஞ்சிக்கணும். ஸ்ரீகிருஷ்ணா, ஆனந்த பவன் ஸ்வீட்ஸ் இருந்தா நம்ம தலைல கட்ட வசதி. அதனால உடனே பார்த்துடலாம்.

அரை மணி நேரத்துக்கு முன்ன நாக்கு புடிங்கிக்கிறா மாதிரி திட்டி, நீயெல்லாம் ஆஃபீசருன்னா பெரிய கொம்பா? கேட்டு தாண்டமாட்டன்னு திட்டிட்டு போன தலைவரு, அவரை விட பெரிய தலைவர் கூட வந்து நம்ம தகுதிக்கு ஏற்ப குளிக்கிற துண்டோ, சால்வையோ, பொன்னாடையோடவோ வந்து, விசாப்பன்யார் சொல்லி, சின்னதா நம்மள பாராட்டி உரையோட போர்த்துறப்ப, தொழிலாளர் தோழர் சுனாபானா வாழ்கன்னு சவுண்ட் விடுறப்ப என்னிய வெச்சி காமெடி கீமடி பண்ணலயேன்னு கேக்க தோணுமா தோணாதா?

ஆனா சக ஊழியர்ல இருந்து பெரிய தலைவரைக்கும் அலற வைக்கிற பார்ட்டி ஒண்ணு இருக்கு நம்ம ஆஃபீசுல. பத்துபைசா ந்யூட்ரீன் ஆரஞ்சு முட்டாய் (சக ஊழியருக்கு), 25 பைசா சாக்லேட் சூபர்வைசருக்குன்னு, முழங்காலுக்கு கொஞ்சம் மேல் வரைக்கும் பாக்கட் வச்ச தொளதொளா பாண்ட் பாக்கட்ல பக்கத்துக்கு ஒண்ணுன்னு ரொப்பிக்கிட்டு வருவாரு.

எல்லாருக்கும் கொடுக்க முடியுமா. அது பம்மி பம்மி குடுக்கறதுக்குள்ள வேர்வைலயும் சூட்டுலயும் கொத கொதன்னு இருக்கும். பாசமா குடுத்து விசாபன்யார் சொல்லி, ஆசையா குடுக்குறேன்ல அத சாப்டமாட்டியான்னு அடம்புடிப்பாரு.

அந்த ரவுண்ட் முடிஞ்சதும் பைக்குள்ள இருந்து ஒரு ரூபா, 2ரூபா பார் சாக்லேட் அடுத்த பெரிய அதிகாரிங்களுக்கு ரொப்பி வெச்சிகிட்டு கூழாக்கி நீட்டி, கொஞ்சம் தன்மையா சாப்டுங்க சார்னு மென்முறைய கையாளுவாரு. ஒரு 12 மணி வாக்கில எலுமிச்சம்பழம், அத விட பெரிய சைஸ்ல ஒரு ஆப்பிள் அதுங்கள பாக்கட் உள்ள போட்டுகிட்டு, நழுவுற பேண்ட இழுத்து இழுத்து விட்டு, அய்யா ஃப்ரீன்னா சொல்லு, அம்மா ஃப்ரீன்னா சொல்லுன்னு சுத்தி சுத்தி வருவாரு.

உள்ள விடாதன்னு சொல்லி வச்சாலும், மவனே/ளே வீட்டுக்குப் போவல்ல அப்போ இருக்குடி உனக்குன்னு இருப்பாரு. ஒரு 4 அல்லது 5 மணி நேரத்துக்கு கவட்டி சூட்டுல நல்லா வெம்பி சுருங்கிப்போய், எலுமிச்சம்பழம் கலர் மாறிப்போய் இருக்க லிஃப்ட், கார்னு காத்திருந்து மடக்கி விசாப்பன்யார் சொல்லி குப்பைல போடவோ வேற யாருக்குமோ குடுக்காம பார்த்துக்கற அழகிருக்கே, அட அட. அதவிட தேடி தேடி போய் கோவிச்சிக்கிட்டாங்க ஏன் காலைலயே சொல்லலன்னுன்னு அளந்துட்டுத் திரிவாரு.

இப்பிடியெல்லாம் ஒரு விசாப்பன்யார் இல்லைன்னு யாரு கேட்டா?

(டிஸ்கி:விசாப்பன்யார் பெயரல்ல!!! விஷ்+யூ+எ+ஹாப்பி+ந்யூ+இயர் சேர்த்து அவசரமா சொல்லுறப்ப இப்புடிதான் காதில விழுது)

53 comments:

பெசொவி said...

சரியா சொன்னீங்கண்ணா.....புது வருஷம் பொறக்க வேண்டியதுதான்....இந்த பெரிய ஆபீசருங்களை சந்திக்கிறது இருக்கே....ங்கொய்யால....பெரிய ரோதனைதான். எனக்கு வேற ஒரு எக்ஸ்பீரியன்ஸ். ஒரு வருஷம் (2006) இருந்த ஆபீசர், எங்களை உள்ளே கூப்பிட்டார். என்ன இன்ஸ்ட்ரக்ஷன் தெரியுமா....உள்ளே போனதும் அவருக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லக் கூடாது. அவர் கண்ணையே பாத்துட்டிருக்கனும். அப்பால, அவர் வெளிய போகச் சொன்னதும் போயிடணும். அன்னிக்கு வந்த வெறுப்பில, அடுத்த ரெண்டு வருஷம் எந்த ஆபிசருக்கும் ஹாப்பி நியூ இயர் சொல்ல ரூமுக்கு உள்ள போனதில்ல.

ஈரோடு கதிர் said...

அண்ணே....விசாப்பன்யார்...

டிஸ்கி: அப்பாலிக்கா வர்றேன்

பின்னோக்கி said...

படிக்க காமெடியா இருந்தாலும், தின வாழ்வில் அசடு வழிய வைக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று.

ரொம்ப நாள் பார்க்காத சொந்தக்காரங்க கிட்ட பேசும் போது, அவங்களோட புள்ளைங்க பேர் தெரியாம, பாப்பா எப்படி இருக்கன்னு கேட்டு அசடு வழிவோம்.

ரோடுல போகும் போது, ரோட்டுக்கு அந்த பக்கம் நின்னு ஒருத்தன் கைத்தட்டி “பாஸ்..உங்களைத்தான்”னு கூப்பிடும்போது, நமக்கு பின்னாடி ஒரு கும்பலே நின்னு நானா ? நானா ?ன்னு செய்கையிலயே கேட்டுக்கிட்டு இருக்கும்.

அப்புறம் ஒரு டவுட். உங்க ஆபீஸ்ல நீங்க ப்ளாக் எழுதுறது தெரியுமா ? :)

இராகவன் நைஜிரியா said...

ஆபீசில் இந்த ப்ராப்ளம் வேற இருக்கா...

சிரிச்சி சிரிச்சு வயத்து வலி வந்துடுச்சு அண்ணே

S.A. நவாஸுதீன் said...

///நீட்டுன கை நீட்டுன படி இருக்க, சட்டுன்னு நம்மள எவனும் தெரிஞ்சவன் பார்த்திருப்பானான்னு திகிலோட சுத்திமுத்தி பார்த்து, இல்லைன்னா யப்பேன்னு ஒரு நிம்மதியும், அப்புடி எதுக்கு அவசரமா நீண்டன்னு கைய ஒரு வெறுப்போடவும் பார்க்குற பார்வையிருக்கே, அத உலகத்துல எந்த நடிகனாலயும் காட்ட முடியாது. ///

இதைவிட பெரிய பல்பு வாங்கவே முடியாது. அவ்ளோ எரிச்சலா வரும் நம்ம மேலேயே.

S.A. நவாஸுதீன் said...

கலகலப்புக்கு நான் 100% கேரண்டி சார் இந்த இடுகைக்கு.

Chitra said...

உங்களுக்கு தெரியாதவங்களுக்கு உங்களைத் தெரியும். உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு உங்களத் தெரியாது. இந்த மாதிரி சூழல்ல காமெடிக்கு பஞ்சமா என்ன?
............... super comedy!

கலகலப்ரியா said...

இன்னைக்கு காலைல போன்ல சொன்ன விசாபன்யார் இவர்தானா சார்...! இப்போ புரியுது...அப்போ புரியல...! சாரி சார்... ஷேமான்யூ... ச்சே... சேம்டூயு.. எதுக்கு வம்பு... விசாப்பன்யார் சார்..!

கலகலப்ரியா said...

அந்த பெயர்சொல்ல விருப்பமில்லை... உங்க ஆபீசா சார்... ^o^

க.பாலாசி said...

//அப்படி
உங்களுக்கு
தெரியாதவங்களுக்கு
உங்களைத் தெரியும்.
உங்களுக்கு
தெரிஞ்சவங்களுக்கு
உங்களத் தெரியாது.//

ஆகா...அருமையான கவிதை...

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
டிஸ்கி: அப்பாலிக்கா வர்றேன்//

அட பின்னூட்டத்துக்கே விஸ்கி ச்சீ... டிஸ்கியா???

நசரேயன் said...

அண்ணே உங்க கைய கொடுங்க

vasu balaji said...

நசரேயன் said...

/அண்ணே உங்க கைய கொடுங்க/

=)).தோடா..இன்னைக்கு கை கொடுத்து கொடுத்து கை வலிக்கு=))

க.பாலாசி said...

//விசாப்பன்யார்//

அதென்ன ஹிந்தி வார்த்தையா??

க.பாலாசி said...

//க.பாலாசி said...
ஆகா...அருமையான கவிதை...//

ஐயோ கவிதைகளுக்குன்னு உள்ள கமெண்ட்ட இங்கண போட்டுட்டேனே..

ஸ்ரீராம். said...

இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொல்ற டெக்னிக்கா...
சிரிக்கச் சொன்னாலும் காத்திருக்கற லிஸ்ட்டுல யாரை முதல்ல கூப்பிடறாங்க, அவங்களுக்கு என்ன பதில் மரியாதை என்றெல்லாம் பார்த்து நொந்து போகணும்...
புத்தாண்டுக் கஷ்டங்கள்ள இதுவும் ஒண்ணு..

balavasakan said...

; )

2010 ஒரே கலக்கலாத்தான் இருக்கு உங்களுக்கு...

Unknown said...

// பின்னோக்கி said...
படிக்க காமெடியா இருந்தாலும், தின வாழ்வில் அசடு வழிய வைக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று.

ரொம்ப நாள் பார்க்காத சொந்தக்காரங்க கிட்ட பேசும் போது, அவங்களோட புள்ளைங்க பேர் தெரியாம, பாப்பா எப்படி இருக்கன்னு கேட்டு அசடு வழிவோம்.

ரோடுல போகும் போது, ரோட்டுக்கு அந்த பக்கம் நின்னு ஒருத்தன் கைத்தட்டி “பாஸ்..உங்களைத்தான்”னு கூப்பிடும்போது, நமக்கு பின்னாடி ஒரு கும்பலே நின்னு நானா ? நானா ?ன்னு செய்கையிலயே கேட்டுக்கிட்டு இருக்கும்.

அப்புறம் ஒரு டவுட். உங்க ஆபீஸ்ல நீங்க ப்ளாக் எழுதுறது தெரியுமா ? :)
//

இதெல்லாம் நானும் அனுபவிச்சிருக்கேன்.

Unknown said...

விசாப்பன்யார் சார்

உங்களத்தான், ஹலோ எங்க பின்னாடி பாக்குறீங்க உங்களத்தான்

ப்ரியமுடன் வசந்த் said...

(^_^)

vasu balaji said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
/அன்னிக்கு வந்த வெறுப்பில, அடுத்த ரெண்டு வருஷம் எந்த ஆபிசருக்கும் ஹாப்பி நியூ இயர் சொல்ல ரூமுக்கு உள்ள போனதில்ல./

:))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/அண்ணே....விசாப்பன்யார்...

டிஸ்கி: அப்பாலிக்கா வர்றேன்/

ம்கும். இது வேற.

vasu balaji said...

பின்னோக்கி said...

/படிக்க காமெடியா இருந்தாலும், தின வாழ்வில் அசடு வழிய வைக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று.//

ஆமாங்க.


/ அப்புறம் ஒரு டவுட். உங்க ஆபீஸ்ல நீங்க ப்ளாக் எழுதுறது தெரியுமா ? :)//

பன்னாடைங்க. ஆரம்பத்துல ஓட்டு பின்னூட்டம் ஒன்னும் வரலையேன்னு மாஞ்சி மாஞ்சி சொன்னாலும் ஒரு பய சீந்த மாட்டங்குறான். அல்பனுங்க:))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஆபீசில் இந்த ப்ராப்ளம் வேற இருக்கா...

சிரிச்சி சிரிச்சு வயத்து வலி வந்துடுச்சு அண்ணே//

அட கடவுளே. டாக்டர் கிட்ட போய்டாதீங்க. அப்புறம் ஜல்ப் புடிக்கும்.:))

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/ இதைவிட பெரிய பல்பு வாங்கவே முடியாது. அவ்ளோ எரிச்சலா வரும் நம்ம மேலேயே.//

ஆஹா. கொள்ள பேரு இப்படி இருக்காங்களா.:))

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/ கலகலப்புக்கு நான் 100% கேரண்டி சார் இந்த இடுகைக்கு./

நன்றி நவாஸ்

vasu balaji said...

Chitra said...

/ ............... super comedy!/

ம்ம். ஓஹோ:))

vasu balaji said...

கலகலப்ரியா said...

// இன்னைக்கு காலைல போன்ல சொன்ன விசாபன்யார் இவர்தானா சார்...! இப்போ புரியுது...அப்போ புரியல...! சாரி சார்... ஷேமான்யூ... ச்சே... சேம்டூயு.. எதுக்கு வம்பு... விசாப்பன்யார் சார்..!//

அடங்கொன்னியா:)) நக்கல பாரேன்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/அந்த பெயர்சொல்ல விருப்பமில்லை... உங்க ஆபீசா சார்... ^o^//

பேரே தெரிஞ்சாலும் இது தெரியாது. அதுவே தெரியாதப்பொ என்ன சொல்ல:))

vasu balaji said...

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
டிஸ்கி: அப்பாலிக்கா வர்றேன்//

அட பின்னூட்டத்துக்கே விஸ்கி ச்சீ... டிஸ்கியா???//

இவ்வளவு நேரம் பின்னூட்டம் வராதப்போவே நினைச்சேன். நேத்து சண்டே ஸ்பெஷலா:))

vasu balaji said...

ஸ்ரீராம். said...

இடுக்கண் வருங்கால் சிரிக்கச் சொல்ற டெக்னிக்கா...
சிரிக்கச் சொன்னாலும் காத்திருக்கற லிஸ்ட்டுல யாரை முதல்ல கூப்பிடறாங்க, அவங்களுக்கு என்ன பதில் மரியாதை என்றெல்லாம் பார்த்து நொந்து போகணும்...
புத்தாண்டுக் கஷ்டங்கள்ள இதுவும் ஒண்ணு..//

ஒன்னு இல்ல சார் நிறைய:))

vasu balaji said...

Balavasakan said...

; )

2010 ஒரே கலக்கலாத்தான் இருக்கு உங்களுக்கு...//

ஹி ஹி. ஆமாம் வாசு.

vasu balaji said...

முகிலன் said...

/ இதெல்லாம் நானும் அனுபவிச்சிருக்கேன்.//

யூ டூ முகிலன்:))

/உங்களத்தான், ஹலோ எங்க பின்னாடி பாக்குறீங்க உங்களத்தான்/

அலோ . பின்னோக்கிய கோட் பண்ணிட்டு பின்னாடி பார்க்காதன்னா எப்புடீ:))

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/(^_^)/

உனக்கு பொருத்தமா இருக்கும் வசந்த். பொண்ணு கொள்ள அழகு. கொரியாவா, ஜப்பானா?:))

அது சரி(18185106603874041862) said...

//
100 மீட்டர் தூரத்துல நேரா முகம் பார்த்து ஹல்லோஓஓ பாஸ்னு கைய நீட்டிட்டு ஒருத்தரு வருவாரு. இவனாரு? நமக்கு இவன தெரியுமா இல்ல இவனுக்கு நம்மள தெரியுமான்னு மண்டைக்குள்ள ஸர்ச் கமாண்ட் ஓடிட்டிருக்க, யோவ் கிட்ட வந்துட்டான் கை நீட்டுய்யான்னு கை அனிச்சையா நீள, நான் யார் தெரியுதான்னு கேக்காம இருக்கணுமே கடவுளேன்னு மனசு வேண்ட, அந்த கடைசி நொடியில நம்மள தாண்டி ஒரு பத்து அடி பின்னால பாண்ட் பாக்கட் உள்ள கை விட்டுகிட்டு தலைய சாய்ச்சி குறும்பா சிரிச்சிகிட்டிருக்கறவருக்கு விசாப்பன்யார் சொல்லுவான் பாருங்க.
//

ஆஹா...என்னை விட நிறைய பட்டுருக்கீங்க போலருக்கே....

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...:0)))))

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
பிரியமுடன்...வசந்த் said...

/(^_^)/

உனக்கு பொருத்தமா இருக்கும் வசந்த். பொண்ணு கொள்ள அழகு. கொரியாவா, ஜப்பானா?:))

//

கொஞ்சம் குண்டான சைனீஸ் மாதிரி இருக்கே..:0)))

vasu balaji said...

அது சரி said...

/ஆஹா...என்னை விட நிறைய பட்டுருக்கீங்க போலருக்கே....

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...:0)))))/

:0))) இருக்காதா பின்ன

vasu balaji said...

அது சரி said...
/கொஞ்சம் குண்டான சைனீஸ் மாதிரி இருக்கே..:0)))/

ஆமாம்ல:))

பிரபாகர் said...

அய்யா இதுபோல்தான் பன்னிரண்டு படிக்கும்போது ஒருவருக்கு வணக்கம் சொல்ல அவரும்...(அய்யோ வலிக்குது... வேணாம், படிச்ச குஷியில பழசெல்லாம் ஞாபகம் வந்து....)

பிரபாகர்.

ஆரூரன் விசுவநாதன் said...

அண்ணே.......கலக்கீட்டீங்க.......

வரிக்கு வரி எழுதி பின்னூட்டம் போடனும்னு தோனுது......

சரி காமெடி..........

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
கலக்கீட்டீங்க.

புலவன் புலிகேசி said...

எல்லாத்துலயும் காமெடி...கஷ்டத்தையும் சங்கடத்தையும் கூட காமெடியா சொல்லி...பேரு வேற விசாப்பன்யார்.. சூப்பரு

நிஜாம் கான் said...

அண்ணே! கை குடுக்கிற விசயத்துல இவ்ளோ உள்குத்து இருந்தாலும் அதை முழுமையா ஒழிச்சது அவாள் தான். ஏன்னா அவங்கள தொடறத்துக்கு இளையராசா இருந்தாலும், எவ்ளோ பெரிய விஞ்ஞானியா இருந்தாலும் கூழக்கும்புடுதான்.

நிஜாம் கான் said...

அடடா! இந்த சாக்லெட் குடுக்கிறதுலயும் இவ்ளோ விசயம் இருக்கா? அது என்ன விசாப்பன், நீங்க கண்டுபுடிச்சதா அண்ணே??

thiyaa said...

அருமை
நல்ல நடை
வாழ்த்துகள்

geethappriyan said...

ஐயா ,
சுவையான பதிவு தான்.
வாக்களித்துவிட்டேன்

vasu balaji said...

பிரபாகர் said...

அய்யா இதுபோல்தான் பன்னிரண்டு படிக்கும்போது ஒருவருக்கு வணக்கம் சொல்ல அவரும்...(அய்யோ வலிக்குது... வேணாம், படிச்ச குஷியில பழசெல்லாம் ஞாபகம் வந்து....)

பிரபாகர்.//

அது அது.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

அண்ணே.......கலக்கீட்டீங்க.......

வரிக்கு வரி எழுதி பின்னூட்டம் போடனும்னு தோனுது......

சரி காமெடி..........//

சரி. நம்பீட்டம். இது டெம்ப்ளேட் இல்ல:))

vasu balaji said...

ஸ்ரீ said...

:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
கலக்கீட்டீங்க.//

வாங்க ஸ்ரீ:))

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

எல்லாத்துலயும் காமெடி...கஷ்டத்தையும் சங்கடத்தையும் கூட காமெடியா சொல்லி...பேரு வேற விசாப்பன்யார்.. சூப்பரு//

அது பேரில்ல. டிஸ்கி பாருங்க.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

//அண்ணே! கை குடுக்கிற விசயத்துல இவ்ளோ உள்குத்து இருந்தாலும் அதை முழுமையா ஒழிச்சது அவாள் தான். ஏன்னா அவங்கள தொடறத்துக்கு இளையராசா இருந்தாலும், எவ்ளோ பெரிய விஞ்ஞானியா இருந்தாலும் கூழக்கும்புடுதான்.//

அட எழவே இது வேறயா..போடாங்கொய்யாலேன்னு கட்டி புடிச்சிடணும்.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

//அடடா! இந்த சாக்லெட் குடுக்கிறதுலயும் இவ்ளோ விசயம் இருக்கா? அது என்ன விசாப்பன், நீங்க கண்டுபுடிச்சதா அண்ணே??//

ம்கும். நான் யார்னு கேட்டேன்னு நினைச்சிட்டீங்களோ. டிஸ்கி பாருங்க:))

தாராபுரத்தான் said...

எனனமோ இருக்குது..