Wednesday, August 12, 2009

காலம் செய்த கோலமடி..

இந்தியா:

"தமிழர்களைக் கொன்று குவிப்பது உள்நாட்டு விவகாரமா" ஐ.நா. சபையில் தமிழக அமைச்சர் பேச்சு.

"அழிக்காதே அழிக்காதே தமிழினத்தை அழிக்காதே!", "பறிக்காதே பறிக்காதே தமிழர் உரிமையைப் பறிக்காதே !", "கொடுக்காதே கொடுக்காதே இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதே!" என்ற முழக்கங்களோடு மனு கொடுத்தனர்.

"இலங்கைத் தமிழருக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா ஆதரிக்கவில்லை. சிங்களர்களுக்குச் சமமான உரிமைகள் வழங்கப் பட வேண்டும் என்றுதான் கூறுகிறது. இலங்கையில் சிங்கள மக்களும் தமிழர்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்."

"இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். இதன் காரணமாக இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழ் நாட்டுக்கு வருகிறார்கள். அகதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது."

"இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று இந்தியா நினைக்கவில்லை. இலங்கையில் வாழும் தமிழருக்கு நியாயமான உரிமைகளும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்பிரச்சினை ஐ.நா.சபையில் விவாதிக்கப் படுகிறது."

"இலங்கை அரசின் கொள்கை பற்றியோ, அதன் நடவடிக்கைகள் பற்றியோ, அங்குள்ள அரசியல் வாதிகள் பற்றியோ நாங்கள் பேசாமல் இருக்கும்போது இந்திய அரசைப் பற்றியும், மாநில அரசைப் பற்றியும், இங்குள்ள அரசியல் வாதிகள் பற்றியும் விமரிசிப்பதற்கு ஐ.நா. போன்ற உலக அரங்கை பயன் படுத்தும் அளவுக்கு இலங்கையின் தரம் தாழ்ந்து போனது மிகவும் வருந்தத் தக்கது."

"இந்தியாவில் இந்து முஸ்லீம் கலவரம் நடக்கவில்லையா என்று கேட்கிறார்கள். அப்படிப் பட்ட பிரச்சினைகளை பேசித் தீர்க்கிறோமே தவிர இப்படிப் பட்ட பிரச்சினைகளினால் இந்திய மக்கள் வெளிநாடுகளுக்குப் போனதாக வரலாறு கிடையாது"

"மேலும் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படும் போது போலீசாரும் ராணுவமும் நேர்மையாகவும், சட்டப் படியும் நடந்துக் கொள்கின்றனரே தவிர ராணுவமும், போலீசாரும் வன்முறையாளர்களுக்குத் துணை போகவில்லை. "

"அப்படி பாதிக்கப்பட்டு ஓடி வருகின்ற முதியவர்களையும், தாய்க்குலத்தினரையும் குழந்தைகளையும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்று அவர்களுக்குப் பரிவு காட்டி ஆதரவளிக்கிறது."

அமைச்சரின் இந்தப் பேச்சை

"அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் மிக உன்னிப்பாகவும், கவனமாகவும் கேட்டனர். பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகள் அமைச்சரைக் கைகுலுக்கிப் பாராட்டினர்."

இலங்கை:

"இலங்கைத் தமிழர் பிரச்சினை இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. அதை இந்த சர்வதேச (ஐ.நா.) அரங்கில் இந்தியா கிளப்புவது கண்டு வியப்படைகிறேன். இலங்கைத் தமிழ் தீவிர வாதிகளும் தமிழர் கட்சியினரும் பிரிவினையை ஆதரிக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் நாட்டில் உள்ளவர்களும் அனுதாபம் காட்டுகிறார்கள். இலங்கைத் தீவிர வாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள். இலங்கையில் நடந்துள்ள சம்பவங்களை மிகைப் படுத்துவது சரியல்ல‌"

என்ன உளறல்? எப்பொழுது நடந்தது இதுன்னு நினைக்காதிங்க. காலத்தின் கோலம். இந்தியா சார்பில் பேசியவர் மாநில அமைச்சர் திரு பண்ருட்டி ராமச்சந்திரன். இலங்கை சார்பில் உளறிய அமைச்சர் இன்னோரு இழவெடுத்த ஃபொன்சேகா. 1983 அக்டோபரில் இந்திரா தலைமையில் ஐ.நா. குழுவில் இடம்பெற்று அமெரிக்காவில் பேசிய பேச்சு. இலங்கையைப் பொறுத்த வரை பிரமிப்பாக இருக்கிறது. 25 வருடங்களுக்கு முன் சொன்ன அதே பொய்யை, அதே பேச்சுக்களை அணுவளவும் மாறாமல் சொல்லி எவ்வளவு பெரிய இனப் படுகொலையை செய்துவிட்டு மார்தட்டிக் கொள்கிறது?

இந்தியா? அமைச்சரின் பேச்சில் உள்ள நேர்மை. எதிர்கட்சி தன்கட்சி என்றில்லாத ஒருமை. எப்படி நெஞ்சு நிமிர்த்தி இந்தியாவின் நடவடிக்கையை முன் வைக்கிறார். ராணுவம் குறித்தும் போலீசார் குறித்தும் என்ன ஒரு நம்பிக்கை. எல்லாவற்றையும் எங்கே தொலைத்துவிட்டோம்.

அப்பொழுதும் அதே காங்கிரஸ்தான். அன்னை இந்திராவின் தலைமையில் எப்படி இருந்தோம்.

அவர் மகன் அனுப்பிய ராணுவத்தினரால் அசிங்கப் பட்டோம். நம்பிக்கைக்கு விழுந்த முதல் அடி.(ஜெயவர்த்தனே எப்படி எல்லாம் சிரித்திருப்பாரோ?)

இலங்கை அமைச்சர் பேசிய பேச்சு ஒரு ராணுவத் தளபதி பேசிய கேவலத்துக்கு முன்னால் ஒன்றுமே இல்லை. அதற்கே அவ்வளவு கடுமையாக சாடிய ஒரு சாதாரண அமைச்சர் எங்கே. கேவலம் ஓட்டுக்காக சுரணையின்றி சொக்கிப் போன... சொல்லக் கூட அசிங்கமாக இருக்கிறது.

மருமகள் வழிகாட்டலில் மொத்தமாக அடிமையாகிவிட்டோம். கோவணத்தைக் காணோம், நாராயணனுக்கு ஃபோன் போடு என ராஜபக்சே சொன்னால் நாக்கு தள்ள வாலாட்டிக் கொண்டு ஓடும் அளவுக்கு. 'ரா'வணா. ஆள் காட்டி, ஆள் அனுப்பி, ஆயுதம் கொடுத்து, கோடிக் கணக்கில் உதவி, ஐ.நா.வில் நாம் செய்ய வேண்டியதை யாரோ செய்ததையும் தடுத்து என்னவெல்லாம் நடந்துவிட்டது. அப்பொழுதும் சீனா நமக்கு நண்பன் இல்லை தானே? ஏன் இந்தக் கொலை வெறி. அன்னை இந்திராவை ஆதரித்த அதே பிராணாப்பும், சிதம்பரமும் இப்படி ஆள்காட்டத் துணைபோனதேன்? இந்திராவை அன்னை என்றழைத்த வாயால் இழவெடுத்த சோனியாவை அப்படிக் கூப்பிட நாக்கூசாதா? என்ன காரணமென்றாலும் இப்பொழுது கூட முடக்கி வைக்கப் பட்டிருக்கும் அப்பாவி ஜனங்களுக்கு ஆதரவில்லாத நிலைப்பாடு ஏன்? வளர்ப்பு நாயைத் தடவிக் கொடுப்பது போல் அவ்வப்பொழுது இந்தியா எங்கள் நண்பன் எனக் கொலைகாரன் சொல்வதில் இன்பமா? எந்த நாய்க்காவது எலும்புத் துண்டுமேல் பாசமா?

அமைச்சர் பெருமிதத்தோடு சொன்ன எல்லாம் பொய்யாய் போய்விட்டது. மிஞ்சி இருப்பது இந்தியன் அகதியாக ஓடியதில்லை என்பது தான். அதையும் நடத்தி விட்டோமென்றால் மார் தட்டிக் கொள்ளலாம். மேரா பாரத் மகான்!

(நன்றி: இலங்கைத் தமிழர் வரலாறு. தினத் தந்தி:12.8.2009)

முழு வயிற்றெரிச்சலை பார்க்க விரும்புபவர்களுக்கு :
***

3 comments:

இது நம்ம ஆளு said...

"தமிழர்களைக் கொன்று குவிப்பது உள்நாட்டு விவகாரமா"

"காலம் செய்த கோலமடி.."

யூர்கன் க்ருகியர் said...

காலம் செய்த கோலமடி..இல்லை அது ..
சூனியா செஞ்ச வேலையடி!

எட்டப்பன்கள் நிறைந்த காலமடி .அவனுங்களுக்கு
கூடிய விரைவில் செருப்படி!

vasu balaji said...

/யூர்கன் க்ருகியர் said...

எட்டப்பன்கள் நிறைந்த காலமடி .அவனுங்களுக்கு
கூடிய விரைவில் செருப்படி!/

கிடைக்கணும்.