Friday, August 7, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 87

செல்வராசா பத்மநாதன் இன்று பேங்காக்கில் கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அப்போ இது பொய் நியூஸ்.
_______________________________________________
செல்வராசா பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை : தாய்லாந்து பிரதமர் உறுதிபடுத்துகிறார்

ப‌ய‌ புள்ள‌ வாய‌ தொற‌ந்தா ஃப்ராடு. ஒரு செய்தியாவ‌து ஒழுங்கா வ‌ருதா. எல்லாச் ச‌ப்பைக்கும் த‌மிழ‌ன்னா ஏன் இவ்வ‌ள‌வு க‌ரைச்ச‌ல்.
_______________________________________________
விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதன் மலேசியாவில் கைது:

எந்த‌ நாட்டில் க‌ட‌த்த‌லுக்குப் பெய‌ர் கைது? வெயிடிங் ஃபார் நெக்ஸ்ட் நியூஸ். அது ப‌த்ம‌நாத‌ன் இல்லைன்னு.
_______________________________________________
செல்வராஜா பத்மநாதன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப் பட்டுள்ளார்.

அட! இவனுங்க விசாரிக்கிற புலனெல்லாம் வேறயாச்சே. அதனால இவனுங்க இருக்காது. எந்த தமிழ்நண்டு இழுத்து விட்டிச்சோ தெரியல.
_______________________________________________
இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளால் இலங்கைக்கான எனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளேன் : எம்.எஸ்.சுவாமிநாதன்

ஒத்தறதென்னா ஒத்துறது. ஒதுக்கித் தள்ளுங்க ஐயா.
_______________________________________________
இலங்கையில் தமிழ் அதிகாரிகளுக்கு அவமரியாதை

தமிழன்னா அதிகாரியானா என்ன அகதியானா என்ன? சம உரிமை இதிலதான் குடுப்பான்
_______________________________________________
இந்திய ராணுவ டாக்டர்கள் நாடு திரும்புகின்றனர்: மருத்துவமனை மூடப்படுகிறது

ஆஹா. கார்பரேட் ஆசுபத்திரி கட்ட நிலம் குடுத்துட்டானுங்களோ?
_______________________________________________
இலங்கையின் வடக்கு வசந்தம் திட்டத்துக்கும், எனக்கும் தொடர்பு இல்லை: எம்.எஸ்.சுவாமிநாதன்

இலங்கைக்கும் உங்களுக்குமே தொடர்பு வேணாம்.
_______________________________________________
எத்தனை வசதிகள் கிடைத்தாலும் முகாம் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியாது:பசில்ராஜபக்சே

ஆமாம்டா புள்ள. கொஞ்ச கொடுமையா பண்ணி இருக்கீங்க? வசதில மறக்குறதுக்கு?
_______________________________________________
விஜயகாந்துக்கு தேர்தலில் 'ஜீரோ' தான்: அழகிரி

பேசி முடிச்சிட்டீங்களாண்ணே?
_______________________________________________
அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 12 பேரும் ராஜினாமா செய்வார்களா?: ஸ்டாலின் கேள்வி

நாப்பது இருந்தா இன்னும் நாலு மந்திரி கேக்கலாம்னா? தேர்தல் செலவை கழகம் ஏற்குமா?
_______________________________________________
கண்டிப்பாக தே.மு.தி.க. ஆட்சியை பிடிக்கும்: விஜயகாந்த் நம்பிக்கை

அப்படி ஒரு சீன் வெச்சி படம் எடுத்தாதான் உண்டு.
_______________________________________________
அதிக ஓட்டு வாங்கித்தந்தால் 25 பவுன் பரிசு:அழகிரி அதிரடி

அடங்கொய்யால! சைட் டிஷ்ஷே இவ்ளோன்னா மெயின் டிஷ்ஷூக்கு எவ்ளோ செலவாகியிருக்கும்?
_______________________________________________
தீவிரவாதிகள் தாக்கினால் பதிலடி கொடுப்பது எப்படி?

தொலைக்காட்சி, பத்திரிகையில எல்லாம் இப்படி தலைப்பு போட்டு, பாகிஸ்தானே பொறுப்பு. நடவடிக்கை எடுக்காவிட்டால் சும்மா இருக்கமாட்டோம்னு சொல்லிட்டு போய்ட்டே இருப்பாரு மந்திரி. அதென்ன இலங்கையா? ராணுவத்தை அனுப்ப?
_______________________________________________
அமெரிக்கா:7 மாதங்களில் 10 லட்சம் பேர்வேலையிழப்பு

வெள்ளச்சாமி விழுந்தாலுமே பிரம்மாண்டந்தேன்.
_______________________________________________
ஷாரூக்கான் மீது வருமான வரி வழக்கு

அடப்பாவி. வரிகட்டாமலா 200 கோடிக்கு வீடு கட்டுறான். அது சரி. அவனென்னா மாசக்கூலிக்கா வேலை செய்யுறான். கறாறாபுடிக்கிறதுக்கு. இவனுக்கு ஜனாதிபதி அவார்ட் வேற குடுப்பானுவ.
_______________________________________________
லஞ்சம் வாங்கிய இ.எஸ்.ஐ. பெண் அதிகாரி கைது

அட வாங்கறதுன்னு ஆரம்பிச்சா ஆண் என்ன பெண் என்ன? விட்டா இதில கூட 30சதம்னு சொல்லிடுவனுங்க.
_______________________________________________
மாணவிகளுக்கு போதை ஊசி போட்ட ஆசிரியர் கைது

மார்க்கு போடணும்னா ஊசி போடணும்னு சொல்லி இருப்பானோ?
_______________________________________________

5 comments:

பழமைபேசி said...

இஃகி!

sakthi said...

லஞ்சம் வாங்கிய இ.எஸ்.ஐ. பெண் அதிகாரி கைது

அட வாங்கறதுன்னு ஆரம்பிச்சா ஆண் என்ன பெண் என்ன? விட்டா இதில கூட 30சதம்னு சொல்லிடுவனுங்க.

ஆமா சம உரிமை வேண்டும் தானே பாலா

vasu balaji said...

வாங்க பழமை.

vasu balaji said...

/sakthi said...

ஆமா சம உரிமை வேண்டும் தானே/

இல்லாம பின்ன.

Suresh Kumar said...

தல நறுக்குன்னு இருக்கு தல