இப்பல்லாம் நாராயணன்னு பேர் இருந்தாலே அழிவுக்குதான் வழி சொல்லுவாங்க போல. கடந்த 22ம்தேதி சூரிய கிரகணம் வரு முன்னரே இருக்கிற தீவு, கடலோர நாடுகள் பேரு எல்லாம் சொல்லி சுனாமி வரும். பூகம்பம் வரும்னு பீதிய கிளப்பினாரு. அப்புறம் சத்தமே காணோம். இரண்டு நாட்களாக சென்னையில் பூகம்பம், கடல் உள் வாங்கியதுன்னு செய்தி வரவும் கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு. அப்போவே சொன்னாராம். நடந்துடிச்சாம். அவனவனும் புதுவருடம் பிறந்தாலாவதுன்னு எப்படியோ ஒரு நம்பிக்கையில இருப்பாங்க. அது பொறுக்கலை இவருக்கு. 2010ல் பூகம்பம் வருமாம். ரொம்ப ஜாக்கிரதையா பதினாறு மாசத்துக்கு அதோட தாக்கம் இருக்குமாம். தெரியாம கேக்குறேன். அதுக்குள்ள அடுத்த புது வருடம் வருமே. அது ஒண்ணும் பண்ணாதா?
பன்றிக்காய்ச்சல் பரவுதா? இவங்க பங்குக்கு ஏதாவது பண்ண வேணாமா? வந்துட்டாரு இவரு. பஞ்சாங்கத்து பாட்டுல சொல்லி இருக்கிறது பன்றிக் காய்ச்சல் தானாம். டெங்கு, எலி ஜூரம்னு கூட ஏதாவது சேர்ந்தா என்ன சொல்லுவாரோ தெரியலை. ஆக இதையும் முன்னாடியே கண்டு பிடிச்சி பாட்டில போட்டிருக்காங்க. இந்தாளு முன்னாடியே ஏன் சொல்லலைன்னு புடிச்சி உள்ள போட்டா இந்த டுபாக்கூர் வேலை நிக்குமோ தெரியவில்லை. ஏதோ பதிகம் படிக்கணும்னு சொன்னா அது பரவாயில்லை. நம்புறவன் பண்ணிட்டு போவான். யாகம் பண்ணனுமாம். கும்பல் சேரக் கூடாதுன்னு அரசு அலறுது. இதில யாகம்னு வசூல் பண்ணி கும்பல் கூட்டி புகைல இருமல் வருதா, பன்னிக் காய்ச்சல் இருமலான்னு தெரியாம சாவணும்.
இது பாவம் சாமினிய மக்களைப் பிடிச்சி ஆட்டிட்டிருக்கிற வன்கொடுமைங்க. எந்த பெயிண்ட் காண்ட்ராக்டரோ மிஞ்சிப் போன பெயிண்ட அடிச்சி ஆரம்பிச்சானா? இல்ல பெயிண்ட் கம்பெனி இந்த கலர்ல எல்லாம் பெயிண்ட் மிஞ்சி போச்சி. தள்ளிவிட வழின்னு கண்டு பிடிச்சானா தெரியல. வாஸ்து பெயிண்டிங்காம். கண்ண உறுத்துற கலர் எல்லாம் சேர்த்து ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தமில்லாம வசதிக்கேத்த படி கலர் கலரா அடிச்சா வாஸ்து வாரி வழங்குதாம். பாவம் மாட்டுறதெல்லாம் ஏழ பாழைங்கதான். கடன உடன வாங்கி ரெண்டு கலராவது அடிக்குதுங்க. பணக்காரங்க, அல்லது கொஞ்சம் மேல் தட்டு மக்கள், நடுத்தர மக்கள் வசிக்கும் இடத்தில் இந்தக் கூத்து இல்லை. எப்படியெல்லாம் காசு பார்க்குறாங்க.

12 comments:
இந்த ஏமாற்று பேர்வழிகளை பிடித்து ஜெயில்ல போட்டாலும் ஜெயிலுக்கே வாஸ்து பார்ப்பாங்க..
நடுத்தரவர்க்கம் தான் இதெற்கெல்லாம் அலட்டிக் கொள்ளும், நாராயணன்கள் நடுத்தர வர்க்கத்தைத் தான் நடுத்தெருவுக்கு கொண்டு வர முயற்சிப்பார்கள்.
ஏன் இதையெல்லாம் நம்பனும் !
:)
வானம்பாடி,
சரியான பதிவு.
இதைப் பற்றி நானும் ஒரு இடுகையிட்டிருக்கிறேன் இங்கே.
சூரியகிரகண மேதாவிகளே!
/ யூர்கன் க்ருகியர் said...
இந்த ஏமாற்று பேர்வழிகளை பிடித்து ஜெயில்ல போட்டாலும் ஜெயிலுக்கே வாஸ்து பார்ப்பாங்க../
செய்வானுங்க. ஜெயில்ல A class B class இருக்கிறா மாதிரி வாஸ்து கிளாசும் வைப்பானுங்க
/கோவி.கண்ணன் said...
ஏன் இதையெல்லாம் நம்பனும் !
:)/
அதுதானேங்க சாபக்கேடு. வாலறுந்த நரி கதை மாதிரி தான் கெட்ட ஒண்ணு பெயிண்டுக்கு ஆர்டர் குடுக்கும்போதே புதையல் கிடைச்சதுன்னு புரளிய கெளப்பும். போய் மாட்டுனா, ஏதோ ஒரு பீதிய கெளப்பி இது பண்ணலைன்னான்னு மிரட்டக்கூட செய்யுறப்ப அப்பாவி ஜனம் என்ன பண்ணும். இத விடக் கொடுமை ஆஸ்பத்திரியில் வாஸ்து மீன். எல்லாரும் ரோகம்பிடிச்சி தன் கிட்ட வரணும்னு. :))
/ ஊர்சுற்றி said...
வானம்பாடி,
சரியான பதிவு.
இதைப் பற்றி நானும் ஒரு இடுகையிட்டிருக்கிறேன் இங்கே. /
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. பார்த்தேன்.
இதற்கு எல்லாம் பதிவ போட்டு ஏன் உங்க நேரத்த வீண் செய்றீங்க தல
திரும்ப திரும்ப எதையாவதுச் சொல்லி ஏமாத்திகிட்டுத்தான் இருக்காங்க.
திருடற கூட்டம் திருடிகிட்டே இருக்குது. ஏமாறற கூட்டம் ஏமாந்துகிட்டே இருக்குது..
எத்தனை ஏமாந்தாலும் ஜனங்க திருந்துகிற வழிய காணும்.
/ யாசவி said...
இதற்கு எல்லாம் பதிவ போட்டு ஏன் உங்க நேரத்த வீண் செய்றீங்க தல/
வயிற்றெறிச்சல வேற எங்க கொட்டுறது.
/இராகவன் நைஜிரியா said..
எத்தனை ஏமாந்தாலும் ஜனங்க திருந்துகிற வழிய காணும்./
அதாங்க சார் தாங்க முடியல. தெரியலன்னாலும் பரவால்ல. தொலைக்காட்சியில் தினம் ஒரு ஃப்ராடு மாட்றான். அப்படியும் இப்படி.
இவங்க இப்பிடீல்லாம் பீலா விடறது இருக்கட்டும் பாலா...இதை senseationalize பண்ணி செய்தியா வெளியிடற பத்திரிகைகளை என்ன பண்றது?... எனக்கு என்ன புரியலைன்னா.. எதையுமே இவங்க முன்கூட்டியே சொல்ல மாட்டாங்க.. நடந்து முடின்சாப்புறம்.. அந்தப் பாட்டில இருந்திச்சு, இந்த ஏட்டில இருந்திச்சு.. நான் அப்பவே சொன்னேன் அப்டீன்னு ஒரே அலப்பறை... இவங்க சொல்றத வச்சுப் பாத்தா நிஜமான தீர்க்கதரிசிகள் கமல்ஹாசனும் மதனும் அல்லவா.. ஏனென்றால் சுனாமி பற்றி 2003லேயே கதைச்சது அவங்கதானெ... ஒரு ரெண்டு பேரையாவது புடிச்சு உள்ள போட்டு நொங்கெடுத்தாதான் அடங்குவாங்க
அப்படித்தான் செய்யணும். அதனாலயே முன்னாடி சொல்ல மாட்டானுவ. சுய தம்பட்டம். கடவுளே நாந்தான்னு பண்ணுற அலப்பறை தாங்காது.
Post a Comment