Monday, August 10, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 89

பத்மநாதன் கடத்தல் தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைக்கின்றது : நார்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்

காசுக்கு பறக்கிற ஜனங்களும் ஓட்டுக்கு அலையுற தலைவர்களும் இருக்கும் வரை நம்பி நாசமா போறதில தமிழனை அசைச்சிக்க முடியாது.
_______________________________________________
தமிழன அழிப்பில் முக்கிய பங்கு வகித்த இராணுவ அதிகாரிகளை மதிப்பளிக்க ஐ.நா.வுக்கு அழைத்துச் செல்கிறார் மகிந்த

மிதிப்பளிக்க வேண்டிய நாய்களுக்கு மதிப்பளிப்பு வேற ஒரு கேடு. அப்படியே நோபல் பரிசும் வாங்கிக் கொடுத்தா நல்ல முன்னுதாரணம்.
_______________________________________________
பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரை தேடி வலை வீச்சு: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

அட ஏன் இவ்வளவு சிரமம். ஒரு வார்த்த சொன்னா நான் புடிச்சி தரேன்னு அவனவனும் வருவான்ல.
_______________________________________________
புலிகளின் ஆயுதக் கடத்தல் விவகாரம் வெளிவரும்: ஜனாதிபதி

வெள்ளை வேனில் ஆள்கடத்தல் விவகாரம் மட்டும் வரவே வராதில்ல பிச்ச.
_______________________________________________
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு விரைவில் இல்லாதொழிக்கப்படும்:கோத்தபாய‌

நீ ஏவி விட்டா பாயுறதுக்கு உலகமே காத்திருக்கும்போது என்ன வேணும்னாலும் பண்ணலாம். பேசாம வெள்ளை விமானம் விட்டா சரியா இருக்கும்ல சின்ன பிச்ச .
_______________________________________________
இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு பணிகளில் வேகம் தேவை: கலைஞர்

அட எவ்வளவு வேகமா சொல்லிட்டாரு. அடுத்த தவணை உதவி பண்ண அலுத்துப் போச்சாக்கும்.
_______________________________________________
நான் இந்தியாவின் ஆதரவாளனா? ராஜபக்சே

கோவிக்காத ராஜஎச்ச! எவன் சொன்னான் அப்படி? நீ காசுக்குதான் ஆதரவாளன்.
_______________________________________________
பத்மநாதனை கடத்திய கோத்தபாயவின் சிறப்புகுழு

அரசாங்கம் பண்ணா சிறப்புக் குழு. தனி ஆள் பண்ணா பயங்கரவாதம். போங்கடா நீங்களும் உங்க லாஜிக்கும்.
_______________________________________________
வணங்காமண்' பொருட்கள் வன்னி மக்களை எப்போது சென்றடையும்?

அதிகாரப் பகிர்வு கொடுக்கறப்போ கூடவே குடுப்பான். கெடாம இருக்கணும்.
_______________________________________________
சென்னை சிறுவன் பலி: பிரதமர் அவசர ஆலோசனை

தமிழன் செத்தாதான் ஆலோசனை எல்லாம். நிவாரணம் அறிவிச்சா போதும். எப்போ வரும்னு ஏங்கிக்கிட்டே இத மறந்துருவம்.
_______________________________________________
சென்னை ஐகோர்ட் மோதல் வழக்கை விசாரிக்க விருப்பமில்லை: நீதிபதிகள்

ஆமாங்க. என்ன தீர்ப்பு சொன்னாலும் நாட்டாம தீர்ப்ப மாத்திச் சொல்லுன்னு மத்த பார்ட்டி அலறும். எதுக்கு வம்பு?
_______________________________________________
2011ம் ஆண்டு பொதுத்தேர்தலை ஜெயலலிதா புறக்கணித்தாலும் ஆச்சரியம் இல்லை: மு.க.ஸ்டாலின்

ஆசை இருக்கலாம். பேராசை இருக்கலாமா? ஆற்றில போட்டாலும் அளந்து போடுன்னு அந்தம்மா இப்ப சும்மா இருக்கு.
_______________________________________________
பெங்களூர் பயணம் சிறப்பாக அமைந்தது: சென்னை திரும்பிய கலைஞர்

இனிமே காவேரி தண்ணீர் வந்துடும். ஒகேனக்கல்ல அணை கட்டிக்கலாம். தமிழ்ப் படம் காட்டுவாங்க. அடிக்கடி பண்ணை வீட்டுக்கு போகலாம். தமிழனுக்கு என்னா குறைச்சல்?
_______________________________________________
சிவபெருமானின் சூலம் தெரிந்தது:ஓசூர் பரபரப்பு

இந்த சிவனுக்கும் நக்கல பாரேன். தமிழ்நாட்டில இடமா இல்லை? ஓசூர்ல உக்காந்துகிட்டு. இருக்கிற அடிபிடி போதாதுன்னு கர்நாடகா சிவனா, தமிழ்நாட்டு சிவனான்னு வேற அடிச்சிக்கணுமா?
_______________________________________________

9 comments:

யூர்கன் க்ருகியர் said...

"பிச்ச"..."சின்ன பிச்ச" ரெண்டும் சரியான "எச்ச"

SUBBU said...

கடைசி இரண்டும் :))))))))))

Unknown said...

பிச்ச.. எச்ச.. சின்னப்பிச்ச.. விளையாடுறீங்களே சகா

vasu balaji said...

/ யூர்கன் க்ருகியர் said...

"பிச்ச"..."சின்ன பிச்ச" ரெண்டும் சரியான "எச்ச"/

ஆமாங்க. பத்திகிட்டு வருது.

vasu balaji said...

/ SUBBU said...

கடைசி இரண்டும் :))))))))))/

வாங்க சுப்பு. எங்க ஆளைக் காணோம்?

vasu balaji said...

/ Kiruthikan Kumarasamy said...

பிச்ச.. எச்ச.. சின்னப்பிச்ச.. விளையாடுறீங்களே சகா/

ஹி ஹி.

SUBBU said...

/வானம்பாடிகள் said...
/ SUBBU said...

கடைசி இரண்டும் :))))))))))/

வாங்க சுப்பு. எங்க ஆளைக் காணோம்?
//

ஊருக்கு போய்ய்ட்டேன்னு சொன்னா நம்பவா போறீங்க :))))))))

Maheswaran Nallasamy said...

வெள்ளை விமானம் .....ஹஹா .. கோத்தபய பார்த்தான் இத .. பய புள்ள டென்ஷன் ஆயிருவான். நறுக்குன்னு நாலு வார்த்தை நூறாவது எபிசொட் வந்த உடனே உங்களுக்கு பெங்களூர்-ல சிலை வைக்கலாமின்னு இருக்கேன்.

vasu balaji said...

/நறுக்குன்னு நாலு வார்த்தை நூறாவது எபிசொட் வந்த உடனே உங்களுக்கு பெங்களூர்-ல சிலை வைக்கலாமின்னு இருக்கேன்./


அவ்வ்வ்வ்வ்வ்வ். மஹேஸ் திருவள்ளுவர் சிலை இனிமேல எப்படி இருக்கும்னு உங்க இடுகைல போட்டுட்டு எனக்கு சிலை வைக்கிறேங்கிறீங்களே. என்ன கோவம் என் மேல உங்களுக்கு. எதுனாலும் பேசி தீத்துக்கிறுவம். சிலை எல்லாம் வேணாம்.