தண்டவாளத்துக்கு கீழ இருக்கிறதையும் ஸ்லீப்பருங்கறான், அது மேல ஓடுறதையும் ஸ்லீப்பருங்கரானே. ஏன்?
------------------------------------------------------------------------------
லைன் மேல ஓடுற ரயிலுக்கு ரயில்வேன்னு பேர வெச்சிட்டு தண்ணில போற கப்பலுக்கு ஷிப்லைன், வானத்துல பறக்குற விமானத்துக்கு ஏர்லைன்னு ஏன் பேரு வெச்சான் வெள்ளைச்சாமி?
------------------------------------------------------------------------------
தரையோட இருக்கிற ஹைவேஸ் பாலத்து கீழ போகும்போது மட்டும் சப்வே ஆவுதே! பாலத்து மேல போகும்போது மட்டும் ஹைவேஸ்னே இருக்கே எப்படி?
------------------------------------------------------------------------------
அமெரிக்கா விட்ட ராக்கட்டு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமா இறங்குச்சின்னு வெள்ளக்காரன் சொல்றான். அது இறங்க ஆறு மாசம் முன்னதான் செவ்வாய் கிரகப் பெயற்சி; 8 ல இருந்து 9 கு போச்சி, 8 ல சந்திரன் வருதுடிச்சின்னு நம்மூரு ஜோசியன் சொல்றான். எத நம்பறது?
------------------------------------------------------------------------------
சந்த்ரயான் வெற்றிகரமா பறக்கணும்னு தேங்கா உடைச்சி, கற்பூரம் காட்டினப்புறம் தான விட்டாங்களாம். நாள பின்ன சந்திரனுக்கு ஆளு போய் இறங்கினா ரிடர்ன்ல வெற்றிகரமா திரும்ப பூஜை பண்ண வேணாமா? அங்க கற்பூரம் எரியாது. தேங்கா உடையாதே. என்ன பண்ணுவாங்க?
------------------------------------------------------------------------------
கணினி முன்னாடி உக்காந்திருந்தாலும் மணி என்னன்னா கொள்ள பேரு கைக்கடிகாரம் இல்லன்னா சுவர்க்கடிகாரம் தானே பார்க்குறாங்க. வலக்கை ஓரமா கணினி காட்டுற மணியை பார்க்கறதில்லை?
------------------------------------------------------------------------------
திரைக்கும் மூஞ்சிக்கும் மூணு அடி தூரத்துல தான் பாக்குறதுனு உலகம் முழுதும் இருக்கிறப்ப அத ஏன் இன்னும் தொலைக்காட்சின்னு சொல்லணும்?
------------------------------------------------------------------------------
என்னதான் காசு குடுத்து வாங்கின கீ வெச்சிருந்தாலும் கதவ தொறந்தா கணினி உள்ள விடுது.அப்பவும் திருடன் மாதிரி 'விண்டோஸ்' வழியாதானெ போகணும். அப்புறமெதுக்கு அது நல்ல கீயா சுட்ட கீயான்னு செக்கப்பு?
------------------------------------------------------------------------------
விமானமோட்றப்ப ஹெட்ஃபோன் மாட்டணும்னு விமானி எப்படியும் தொப்பி போட மாட்டாருல்ல. அப்புறம் எதுக்கு காசுக்கு தண்டமா அத குடுக்கறது?
------------------------------------------------------------------------------
ஆசுபத்திரி கட்டின டாக்டர் கோவிலுக்கு போய் ஆசுபத்திரி அமோகமா வளரணும்னு வேண்டுனா சாமி வரம் குடுப்பாரா? சாபம் குடுப்பாரா?
------------------------------------------------------------------------------
ஹார்ட் டிஸ்க்னு பேர வெச்சிட்டு க்ராஷ் ஆயிடிச்சின்னா அபத்தமா இல்லை?
------------------------------------------------------------------------------
விழுப்புரம் போறதுன்னாலும் வீடடில இருந்து சாப்பாடு கட்டிட்டு போறவன் அமெரிக்கா போறதுன்னா அவன் குடுக்கறாதே போதும்னு போறானே? என்ன கூச்சம்?
------------------------------------------------------------------------------
என்னதான் ஊருக்கு முன்ன செக் இன் பண்ணி கதவு பக்கத்துல சீட் போட்டாலும் கடோசியா லக்கேஜ் வந்தா கடோசியாதானே போகமுடியும். அப்புறம் ஏன் முதல்ல அந்த சீட் போடுறாங்க?
------------------------------------------------------------------------------
வடைய எண்ணெயில் பொறிக்கிறோம். இட்டிலிய ஆவியில அவிக்கிறோம். தோசை கல்லுல ஊத்துறோம். ஆனாலும் சொல்றப்ப வடசுட்டா, இட்லிசுட்டா, தோச சுட்டான்னே ஏன் சொல்றாங்க.?
------------------------------------------------------------------------------
40 comments:
வடைய எண்ணெயில் பொறிக்கிறோம். இட்டிலிய ஆவியில அவிக்கிறோம். தோசை கல்லுல ஊத்துறோம். ஆனாலும் சொல்றப்ப வடசுட்டா, இட்லிசுட்டா, தோச சுட்டான்னே ஏன் சொல்றாங்க.?
அதானே
சந்த்ரயான் வெற்றிகரமா பறக்கணும்னு தேங்கா உடைச்சி, கற்பூரம் காட்டினப்புறம் தான விட்டாங்களாம். நாள பின்ன சந்திரனுக்கு ஆளு போய் இறங்கினா ரிடர்ன்ல வெற்றிகரமா திரும்ப பூஜை பண்ண வேணாமா? அங்க கற்பூரம் எரியாது. தேங்கா உடையாதே. என்ன பண்ணுவாங்க?
எப்படியும் எங்க மூளையை யூஸ் செய்து தேங்காய் உடைச்சே தீருவோம் பாலா
Anbu Bala sir,
Naan ungal valaithalathin puthia vasagan. samuga akkarai konda ungal sammatiadigal thodarattum.
T.Moorthy
அய்யோ... அய்யோ தாங்கமுடியலடா சாமி...
எப்ப இருந்து இப்படி ஆனீங்க சாமி...
// தண்டவாளத்துக்கு கீழ இருக்கிறதையும் ஸ்லீப்பருங்கறான், அது மேல ஓடுறதையும் ஸ்லீப்பருங்கரானே. ஏன்?//
அதானே... வாழ்க்கையிலே ஒரே கன்பூஷன்ப்பா...
// தரையோட இருக்கிற ஹைவேஸ் பாலத்து கீழ போகும்போது மட்டும் சப்வே ஆவுதே! பாலத்து மேல போகும்போது மட்டும் ஹைவேஸ்னே இருக்கே எப்படி? //
அதானே ... அப்வே என்று பெயர் வச்சு இருக்கணும்... கரீக்ட்டணே நீங்க கேட்கிற கேள்வி.. என்னா பதில் தான் தெரியலை..
// கணினி முன்னாடி உக்காந்திருந்தாலும் மணி என்னன்னா கொள்ள பேரு கைக்கடிகாரம் இல்லன்னா சுவர்க்கடிகாரம் தானே பார்க்குறாங்க. வலக்கை ஓரமா கணினி காட்டுற மணியை பார்க்கறதில்லை? //
கடிகாரம் பார்க்கின்றதுக்கு நிறைய பேருக்கு டைம் இருக்கு என்று அர்த்தம்..
எல்லாம் ஒரு பழக்க தோஷம்தான் காரணம்..
// திரைக்கும் மூஞ்சிக்கும் மூணு அடி தூரத்துல தான் பாக்குறதுனு உலகம் முழுதும் இருக்கிறப்ப அத ஏன் இன்னும் தொலைக்காட்சின்னு சொல்லணும்? //
அண்ணே, இப்ப வருகின்ற தமிழ் சீரியல்களைப் பார்த்தா அது தொலைக்காட்சி இல்லை... தொ(ல்)லைக் காட்சி.
// விமானமோட்றப்ப ஹெட்ஃபோன் மாட்டணும்னு விமானி எப்படியும் தொப்பி போட மாட்டாருல்ல. அப்புறம் எதுக்கு காசுக்கு தண்டமா அத குடுக்கறது? //
எல்லா ஒரு ஸ்டைலுக்குத்தான்..
சரி அண்ணே அந்த விமானி ஹெட்போன் மாட்டிகிட்டு என்ன பாட்டு அண்ணே கேட்பாரு..
// ஆசுபத்திரி கட்டின டாக்டர் கோவிலுக்கு போய் ஆசுபத்திரி அமோகமா வளரணும்னு வேண்டுனா சாமி வரம் குடுப்பாரா? சாபம் குடுப்பாரா? //
இப்ப கேட்டீங்களே .. இதுதான் சரியான கேள்வி...
யாருப்பா அங்க இதுக்கு யாராவது சரியான பதிலைச் சொல்லுங்கப் பார்க்கலாம்?
// விழுப்புரம் போறதுன்னாலும் வீடடில இருந்து சாப்பாடு கட்டிட்டு போறவன் அமெரிக்கா போறதுன்னா அவன் குடுக்கறாதே போதும்னு போறானே? என்ன கூச்சம்? //
அண்ணே அந்தக் காலம் மலையேறி போயிடுச்சண்ணே...
இப்பவும் விழுப்புரத்தில் போல் பிட்சா தேடறவங்க இருக்காங்க..
எதோ நம்மால முடிஞ்ச அளவு கமெண்ட் போட்டாச்சு...
மீதி கும்மிய மத்தவங்க பார்த்துப்பாங்க என்ற நம்பிக்கையில்
உங்க நண்பண்
இராகவன், நைஜிரியா
/K.Thirumoorthy said...
Anbu Bala sir,
Naan ungal valaithalathin puthia vasagan. samuga akkarai konda ungal sammatiadigal thodarattum.
T.Moorthy/
வரவுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி மூர்த்தி.
/இராகவன் நைஜிரியா said
எப்ப இருந்து இப்படி ஆனீங்க சாமி.../
இத்தனை குழப்பத்தில இருக்கேன். இது வேற யோசிக்க வச்சிட்டீங்களே சார்.
/sakthi said...
எப்படியும் எங்க மூளையை யூஸ் செய்து தேங்காய் உடைச்சே தீருவோம் பாலா/
மண்டையில உடைச்சாதான் முடியுங்கிறீங்களா?
/அதானே ... அப்வே என்று பெயர் வச்சு இருக்கணும்... கரீக்ட்டணே நீங்க கேட்கிற கேள்வி.. என்னா பதில் தான் தெரியலை../
அப்வேன்னா அபசகுனமா இருக்குன்னு வைக்கல போல.=))
/அண்ணே, இப்ப வருகின்ற தமிழ் சீரியல்களைப் பார்த்தா அது தொலைக்காட்சி இல்லை... தொ(ல்)லைக் காட்சி./
ஒரே ஒரு சேனல்லதான சார் அங்க சீரியல் வருது. அதுக்கே இப்படி சொல்றீங்களே. எங்கள கொஞ்சம் நினைச்சிப் பாருங்க.
/எல்லாம் ஒரு பழக்க தோஷம்தான் காரணம்../
அதாஞ்சரி. குளிச்சிட்டு வர ஆள டைம் கேட்டா டக்னு மணிக்கட்டதான் பார்ப்பாங்க.=))
/யாருப்பா அங்க இதுக்கு யாராவது சரியான பதிலைச் சொல்லுங்கப் பார்க்கலாம்?/
இது ராஜ் டிவில யாராவது சாமியார்தான் பதில் சொல்லக் கூடும்.
/இப்பவும் விழுப்புரத்தில் போல் பிட்சா தேடறவங்க இருக்காங்க../
அது தனியா போனா அப்படி. குழந்தகுட்டியோட போய் பிட்ஸானு பேரு சொன்னாலே சொத்து எழுதி குடுக்கணும் போல.
/ இராகவன் நைஜிரியா said...
எதோ நம்மால முடிஞ்ச அளவு கமெண்ட் போட்டாச்சு.../
நன்றி சார். நம்ம கலகலப்ரியா கமெண்டுக்கு வெயிட்டிங்கு.
///ஆசுபத்திரி கட்டின டாக்டர் கோவிலுக்கு போய் ஆசுபத்திரி அமோகமா வளரணும்னு வேண்டுனா சாமி வரம் குடுப்பாரா? சாபம் குடுப்பாரா?///
இதத்தான் ரூம்போட்டு யோசிக்கிறதுன்னு சொல்வாங்களோ?? நல்லாருக்கு பாலா
/Kiruthikan Kumarasamy said.
இதத்தான் ரூம்போட்டு யோசிக்கிறதுன்னு சொல்வாங்களோ?? நல்லாருக்கு பாலா/
இது சமீபத்தில ஒரு ஆஸ்பத்திரியில் காத்திருக்கும்போது வந்த டாக்டர் அங்கிருந்த ஸ்வாமி படத்தைக் கும்பிட்டுவிட்டு உள்ள வந்ததைப் பார்த்ததும் தோணினது.=))
// வானம்பாடிகள் said...
/அண்ணே, இப்ப வருகின்ற தமிழ் சீரியல்களைப் பார்த்தா அது தொலைக்காட்சி இல்லை... தொ(ல்)லைக் காட்சி./
ஒரே ஒரு சேனல்லதான சார் அங்க சீரியல் வருது. அதுக்கே இப்படி சொல்றீங்களே. எங்கள கொஞ்சம் நினைச்சிப் பாருங்க. //
அதாண்ணே... ஒரு தொலைக்காட்சிக்கே மனுஷன் மண்டை காய்ஞ்சு போறான்... 10 இருந்தா என்னாவங்க...
// வானம்பாடிகள் said...
/ இராகவன் நைஜிரியா said...
எதோ நம்மால முடிஞ்ச அளவு கமெண்ட் போட்டாச்சு.../
நன்றி சார். நம்ம கலகலப்ரியா கமெண்டுக்கு வெயிட்டிங்கு. //
மீ டூ வெயிட்டிங்க ஃபார் கலகல கமெண்ட்ஸ் பை கலகலப்ரியா..
பாமரன் பதிவில் என்னோட பின்னூட்டம் தான் 25வது பின்னூட்டம்.
ஹா... ஹா... மீ த 25த்
// வானம்பாடிகள் said...
/ இராகவன் நைஜிரியா said...
நன்றி சார். நம்ம கலகலப்ரியா கமெண்டுக்கு வெயிட்டிங்கு. //
மீ டூ வெயிட்டிங்க ஃபார் கலகல கமெண்ட்ஸ் பை கலகலப்ரியா..//
ஓஹோ.. பின்னூட்டம் போட வைக்க இப்டி ஒரு வழி இருக்கோ.. ஏனுங்க ராகவன் நீங்க கூடவா இப்டி... எல்லாம் சகவாச தோஷம்..!
/கலகலப்ரியா said...
ஓஹோ.. பின்னூட்டம் போட வைக்க இப்டி ஒரு வழி இருக்கோ.. ஏனுங்க ராகவன் நீங்க கூடவா இப்டி... எல்லாம் சகவாச தோஷம்..!/
ஆஹா! கல கல களை கட்டிடிச்சேய். வாம்மா கலகலா!
இன்னிக்கு பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் போடலாம்னு பார்க்கறேன்..
//sakthi said...
எப்படியும் எங்க மூளையை யூஸ் செய்து தேங்காய் உடைச்சே தீருவோம் பாலா//
ஏங்க.. ஆயிரம் ஜோஸ்யம் பார்த்து.. மூளைய கசக்கி பிழிஞ்சு ஜூஸ் பண்ணி வானம்பாடின்னு ராசியான பேரு வச்சிருக்காரு நைனா.. நீங்க அத கண்டுக்காம சந்திரன்ல ஜூஸ் கடை வைக்கிறதில இருக்கீங்க.. கொஞ்சம் பார்த்து பண்ணுங்கம்ணி..
/கலகலப்ரியா said...
ஆயிரம் ஜோஸ்யம் பார்த்து.. மூளைய கசக்கி பிழிஞ்சு ஜூஸ் பண்ணி வானம்பாடின்னு ராசியான பேரு வச்சிருக்காரு நைனா.. /
இல்லாம பின்ன. இப்போதானே கொஞ்சம் பின்னூட்டமெல்லாம் வந்து நம்ம வலைமனையும் கொஞ்சம் இருக்குன்னு தெரியுது."வானம்பாடிகள்"
//கணினி முன்னாடி உக்காந்திருந்தாலும் மணி என்னன்னா கொள்ள பேரு கைக்கடிகாரம் இல்லன்னா சுவர்க்கடிகாரம் தானே பார்க்குறாங்க. வலக்கை ஓரமா கணினி காட்டுற மணியை பார்க்கறதில்லை?//
ஏனுங்க.. நீங்க எந்த யுகத்தில இருக்கீங்க..? பெருசுங்கன்னு தெரியுதுப்பா.. நாம எல்லாம் கண் முன்னாடி இம்பூட்டுப் பெருசா காலண்டர் இருந்தாலும்.. மணி பார்க்கிற இடத்தில மணிக்கணக்கா சுண்டெலி (அதாங்க மௌஸ்) கொண்டு போய் வச்சுண்டுதான் தேதி பார்ப்போம்.. (enna date nu appattamaa therinjaa kooda apdithaanunga..)
/கலகலப்ரியா said...
மணி பார்க்கிற இடத்தில மணிக்கணக்கா சுண்டெலி (அதாங்க மௌஸ்) கொண்டு போய் வச்சுண்டுதான் தேதி பார்ப்போம்.. (enna date nu appattamaa therinjaa kooda apdithaanunga..)//
ஆஹா! இது நான் கவனிக்காம விட்டனே!ஒரு வேள காலண்டர்ல கிழிக்காம விட்டிருந்தாலும்னு பண்ணுவீங்க போல. உசாருதான்.
// இராகவன் நைஜிரியா said...
// ஆசுபத்திரி கட்டின டாக்டர் கோவிலுக்கு போய் ஆசுபத்திரி அமோகமா வளரணும்னு வேண்டுனா சாமி வரம் குடுப்பாரா? சாபம் குடுப்பாரா? //
யாருப்பா அங்க இதுக்கு யாராவது சரியான பதிலைச் சொல்லுங்கப் பார்க்கலாம்?///
ஏனுங்க ராகவன்.. உங்களுக்கு பதில் சொல்ல முடியலன்னா.. யார்ட்டயாவது நைனாவா மாட்டி விடலாம்னுதானே இப்டி சொன்னீங்க..?
ஏனுங்க பஞ்சம்பாடி.. ஆங்... சாரி.. வானம்பாடி சாமி கிட்ட கேக்கற கேள்வி எல்லாம் இங்க கேக்குறீங்க..? நம்ம வீட்டு பக்கத்ல இருக்கிற சாமி வரம்தான் கிடைக்கும்னு சொல்லுறாருங்க.. அவிங்களுக்கு எல்லாம் லாபக் கணக்குதானாம்ல.. என்ன பண்ண போறீக..?
/கலகலப்ரியா said...
அவிங்களுக்கு எல்லாம் லாபக் கணக்குதானாம்ல.. என்ன பண்ண போறீக..?/
அவங்க லாபத்துல பங்கு கேக்கவா போறேன். ஆனா இப்படிக் கேட்டதால எனக்கும் லாபம்தான். பின்னூட்டங்கள்.
/ஏனுங்க பஞ்சம்பாடி..//
அன்னிக்கு என்ன பேரு வைக்கலாம் போட்டியில்லாமன்னு யோசிசப்ப இந்தப் பேரை சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்.
//வடைய எண்ணெயில் பொறிக்கிறோம். இட்டிலிய ஆவியில அவிக்கிறோம். தோசை கல்லுல ஊத்துறோம். ஆனாலும் சொல்றப்ப வடசுட்டா, இட்லிசுட்டா, தோச சுட்டான்னே ஏன் சொல்றாங்க.?//
ஆமாங்க அந்தக் காலத்தில எழுத்துக்களையும், சின்னங்களையும் கல்வெட்டில பொறிச்சாங்க, இப்போ நாம வடைய எண்ணெயில பொறிக்கிறோம்..!!!! முடிஞ்சததானே பண்ண முடியும்..!
இந்த வட சுட்டா.. இட்லி சுட்டா.. தோச சுட்டா.. குருவி சுட்டாவ எப்ப சார் விட போறீங்க.. இயந்திரத் துப்பாக்கிக்கெல்லாம் கூட போக வேணாம்.. விண்டோஸ் சுட்டதயாவது சொல்லலாம்ல..
சரி விஷயத்துக்கு வருவோம்.. என்னது.. தோசைய கல்லில ஊத்துறதா..? கேனத்தனமால்ல இருக்கு.. நீங்க வீட்ல வாரக் கடைசில சுட்டு வச்ச தோசைய வாரம் முழுக்க கல்லில போட்டு எடுத்து சாப்டுறத சொல்றீங்களா..? மத்தபடி கரைச்சு வச்ச மாவதாங்க ஊத்துவாய்ங்க.. நல்லா கேக்க வந்துட்டாய்ங்கடா கேள்வி..
//வானம்பாடிகள் said...
/ஏனுங்க பஞ்சம்பாடி..//
அன்னிக்கு என்ன பேரு வைக்கலாம் போட்டியில்லாமன்னு யோசிசப்ப இந்தப் பேரை சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்.//
என்னது.. யோசிச்சப்போ இல்லைங்க.. ஜோஸ்யம் பார்த்தப்போன்னு சொல்லுங்க.. விட்டா நான்தான் உங்க குடும்ப ஜோஸ்யை சிகாமணி சிந்தாமணின்னு ஏதோ சொல்லுவீங்க போலேயே.. !
/மத்தபடி கரைச்சு வச்ச மாவதாங்க ஊத்துவாய்ங்க.. நல்லா கேக்க வந்துட்டாய்ங்கடா கேள்வி..//
ஆஆஆஆ. கல்லுல மாவு ஊத்தினா வருமே சொய்ய்ய்ய் நு ஒரு சத்தம் கேக்குதுங்களா! சரியான சூடு.
/விண்டோஸ் சுட்டதயாவது சொல்லலாம்ல.. //
ஷ்.ஷ்.சத்தமா சொல்லாதீங்க. அந்த வயத்தெரிச்சல்ல தானே இந்த கேள்வி வந்திச்சி. என்னா செக்கப்புன்னு.
//எனக்கும் லாபம்தான். பின்னூட்டங்கள்.//
இதுக்குதானே.. கத்தரிக்கா என்ன விலை.. கொழுக்கட்டைக்கு என்ன மாவு யூஸ் பண்றாங்க.. கலைஞர் கண்ணாடி என்ன ப்ராண்டுன்னு நாலு ஐஞ்சு கேள்வி எடுத்து விட்டா எக்கச் சக்க பின்னூட்டம் வருமே.. இதுக்கு ஏனுங்க ரூம் போட்டு யோசிக்கிறீங்க.. `?
/இதுக்குதானே.. கத்தரிக்கா என்ன விலை.. கொழுக்கட்டைக்கு என்ன மாவு யூஸ் பண்றாங்க.. கலைஞர் கண்ணாடி என்ன ப்ராண்டுன்னு நாலு ஐஞ்சு கேள்வி எடுத்து விட்டா எக்கச் சக்க பின்னூட்டம் வருமே.. இதுக்கு ஏனுங்க ரூம் போட்டு யோசிக்கிறீங்க.. `?//
உங்களுக்கென்ன சொல்ல மாட்டீங்க.அவ்வ்வ்.உங்களையும் ராகவன் சாரையும், சில நேரம் யூர்கனையும் விட்டா இப்படி பின்னூட்டம் எங்க பாக்குறது!
Post a Comment