Sunday, August 9, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 88

யாழ் பலாலி புனரமைப்புக்கு 117 மில்லியன் ரூபாய் கோத்தபாயவிடம் இந்தியா கையளிப்பு.

எதுக்கோ கையூட்டு இது. உள்ளூர்ல ஓணான் பிடிக்க வழி இல்லாம ஜனங்க சாவுது. அசலூர்க் காரன் அல்வா தின்ன இவரு அள்ளி இறைக்கிறாரு.
____________________________________________________
விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் பத்மநாதன் கைதாகி இருக்கமாட்டார் :கருணா

அதுமட்டுமா? நீயும் இப்படியெல்லாம் உளறாம இருந்திருப்ப.
____________________________________________________
கைதாகியுள்ள கே.பி புலிகளின் இரகசியத் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளார் :இராணுவம்

அதை அப்படியே உடனே அம்பலப் படுத்திடுவாரு இவரு அரிச்சந்திரன் பேரன்.
____________________________________________________
கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளியேறிய சிங்கள மக்களை மீள வருமாறு முதலமைச்சர் அழைப்பு

கூப்பிடாம அவனே ஏத்துறது போறாது இவரு வேற தாம்பூலம் நீட்டுறாரு.
____________________________________________________
பத்மநாதன் கைதுடன் புலிகள் மீதான வெற்றி முழுமை பெற்றது: கோத்தபாய

எத்தன வாட்டிடா முழுமை பெறும்? இனியாவது அப்பாவி ஜனங்கள விடுங்கடா. பிழைச்சிப் போகட்டும்.
____________________________________________________
இலங்கையில் மீண்டும் வெள்ளைவான் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது

யோவ். அடுத்தது யாருன்னு தீர்மானம் பண்ண கொஞ்ச நாள் எடுக்காதா? விட்டா பஸ் மாதிரி தினம் அட்டவணை இல்லையேன்னு கவலைப் படுவாங்க போல.
____________________________________________________
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க சென்னையில் தமிழர் பிரகடன பேரணி:பழ.நெடுமாறன்.

நீங்களாவது இத கவனம் வெச்சிட்டு அப்பப்ப ஏதோ பண்ணுறீங்கைய்யா. இல்லைன்னா அடுத்த தேர்தல் வரைக்கும் மறந்தே போயிடுவோம்.
____________________________________________________
என் சபதம் நிறைவேறிவிட்டது:கலைஞர் பேச்சு

அப்ப இனிமே சாதனையை நிறைவேற்ற முயற்சிபீங்கன்னு நம்பலாமா. ஆனா பதினெட்டு வருசமெல்லாம் தாங்காதுய்யா.
____________________________________________________
இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு தமிழகபோலீசார் மட்டும்!

தெரிஞ்ச விசயத்துக்கு இது கூட எதுக்கு? ஒண்ணு ரெண்டு எதிர்ப்பு கூட இருந்திடாம இருக்கவா?
____________________________________________________
இலங்கைக்கு தப்ப முயன்ற எஸ்.ஏ.ராஜா கைது!

கொலைகாரனுக்கெல்லாம் இலங்கைதான் சரி. ஐநா கூட ஒண்ணும் பண்ணாதுன்னு அவ்ளோ நம்பிக்கை ஆசாமிக்கு.
____________________________________________________
சென்னை: பர்மிட் இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல்

போலீஸ் காரர்களின் ஆட்டோ தவிரன்னு சொல்லாட்டியும் தெரியும்ல.
____________________________________________________
இடைத்தேர்தல் புறக்கணிப்பு கோழைத்தனத்தின் வெளிப்பாடு: எஸ்.வி.சேகர்

பயபுள்ள டிராமா, சினிமாவெல்லாம் விட்டாலும் காமெடி டச் போவுதா பாரு. தனியா நின்னிருக்கலாமே சேகரு?
____________________________________________________
விஜயகாந்த் சட்டசபைக்கு ஏன் வரவில்லை என்று நான் கேட்டதில்லை: கலைஞர்

நீங்க வராதப்ப நாங்க கூடதான் கேக்கலை. நாங்க சொல்லிகிட்டா திர்ரோம்.
____________________________________________________
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

விட்டுக்குடுன்னு கேக்கவா போறான். பின்ன கோர்ட்டில் நோக்கிக் கொள்ளாம்னு முடிச்சிருவானுவ. உசாரு.
____________________________________________________
ஓடி ஒளியவில்லை: கலைஞருக்கு ராமதாஸ் பதில்

உங்களுக்கென்னாங்க ஓடணும்னு தலை எழுத்து. கார்ல போய் ஓய்வெடுத்தா இப்படி எல்லாம் சொல்றதா?
____________________________________________________
சென்னையில் பஸ்டிக்கெட் பண்டல் திருட்டு

புல்லரிக்குது. பஸ்ஸ திருடாம டிக்கட்ட திருடி டிக்கட்டில்லாம பயணம் செய்யக்கூடாதுங்கற அந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
____________________________________________________

14 comments:

கும்மாச்சி said...

தல கமெண்ட் எல்லாம் சூப்பர்.

பழமைபேசி said...

//கொலைகாரனுக்கெல்லாம் இலங்கைதான் சரி//

அருமை!

vasu balaji said...

வாங்க கும்மாச்சி. நன்றி.

vasu balaji said...

/ பழமைபேசி said...

//கொலைகாரனுக்கெல்லாம் இலங்கைதான் சரி//

அருமை!/

வாங்க பழமை. நன்றி.

Unknown said...

எப்பிடீங்க... நாங்களும் தான் செய்தி பாக்கிறம்... எங்களுக்கு இப்பிடி ஒரு ஐடியாவும் வருவதே இல்லையே

Unknown said...

அருமையா இருக்குங்க கமெண்ட்ஸ்......!!

vasu balaji said...

/ கீத் குமாரசாமி said...
எப்பிடீங்க... நாங்களும் தான் செய்தி பாக்கிறம்... எங்களுக்கு இப்பிடி ஒரு ஐடியாவும் வருவதே இல்லையே/

ஹி ஹி. இதுக்காக மெனக்கிடறதில்லிங்க. படிக்கிறப்பவே மனசுல தோணுறது தான். உங்க கேள்வி என்னையும் ஏன்னு கேக்க வச்சிடுத்து. பதில் ஒரு இடுகைல சொல்றேன்.

vasu balaji said...

/ லவ்டேல் மேடி said...
அருமையா இருக்குங்க கமெண்ட்ஸ்......!!/

நன்றி மேடி.

Suresh Kumar said...

எல்லாமே நறுக்குன்னு இருக்கு தல நீங்க நம்ம பக்கம் இப்பவெல்லாம் வாறதில்ல போல இருக்கு

vasu balaji said...

நன்றி சுரேஷ் குமார். இல்லை சுரேஷ் குமார். தவறாமல் வருகிறேன். VOIP குறித்து இட்ட இடுகையை பயன் படுத்திப் பார்க்காமல் பின்னூட்டம் பேருக்கு இட மனம் வரவில்லை. கே.பி. குறித்த கட்டுரை அதிகாலையில் தூங்கப் போகும் போது தான் பார்த்தேன்.

கார்த்திக் said...

/* விஜயகாந்த் சட்டசபைக்கு ஏன் வரவில்லை என்று நான் கேட்டதில்லை: கலைஞர் */

சட்டசபையா.. அது எங்க இருக்கு-னு கேட்டா திருச்சி பக்கம், ஈரோடு பக்கம் இருக்கு-னு சொல்லுவாங்க..

vasu balaji said...

கார்த்திக் said..
சட்டசபையா.. அது எங்க இருக்கு-னு கேட்டா திருச்சி பக்கம், ஈரோடு பக்கம் இருக்கு-னு சொல்லுவாங்க..

:)). வாங்க கார்த்திக்.

யூர்கன் க்ருகியர் said...

NICE COMMENTS!

vasu balaji said...

யூர்கன் க்ருகியர் said...

NICE COMMENTS!

Thank you!