Thursday, August 20, 2009

உன்குத்தமா என்குத்தமா...?

நம்மாளுவ இருக்கானுவளே. அதெப்பிடித்தான் இப்படி இருப்பாங்களோ தெரியாது. இல்லை என் மண்டைதான் இப்படி குதர்க்கமா பார்க்குதா தெரியலை. ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. பல அலுவலகங்களில், பல ஊர்களில், என் முப்பத்தி மூன்று வருட சர்வீசில் அனேகமாக நாள் தவறாமல் உணவு நேரத்தில் காணும் கூத்து இது. பல நேரங்களில் அடக்க மாட்டாமல் பைத்தியம் மாதிரி சிரித்து தொலைத்திருக்கிறேன். என்னதான் பாசக்காரப் பயலுவன்னாலும் இடம் பொருள் ஏவல்னு ஒண்ணு இருக்கில்ல.

500 பேர் கூடும் திரையரங்கத்தில் கழிப்பறைக்கு விதி செய்யும் அரசு 5000 பேர் இருக்கும் தன் அலுவலகத்தை கண்டுக்கவே கண்டுக்காது. அதிகம் போனால் ஒரு தளத்தில் 5 யூரினல் 2 அல்லது 3 கழிப்பறை இருக்கும். சாப்பாட்டு நேரத்தில் கூட்டம் நெரியும். க்யூ கட்டாத குறைதான். யூரினலில் இடமில்லை என கழிப்பறைக்கு போய் விட்டு வெளியே வருபவரிடம் , காத்திருப்பவரிடம் என்று விவஸ்தை இல்லாமல் அவரின் நண்பர் கேட்கும் கேள்வி 'சாப்டாச்சா'? என்ன பதில் சொன்னாலும் வில்லங்கமா தோணுமா இல்லையா? இது கேக்குற இடமா இதுன்னு கேக்கிறவனும் நினைக்க மாட்டானுவ. மத்தவன் பதில் சொல்லாம போகவும் மாட்டானுவ.
---------------------------------------------------------------------------------
ஒரு பெரிய அதிகாரி இருந்தார். சரியான கடுவன் பூனை. ஒரு நாள் எதற்கோ கூப்பிட்ட பொழுது ப்ரீஃப் கேசைப் பாதி திறந்து தேடியபடி இருந்தார். என் போறாத காலம் அதுக்குள்ள இருந்த மத்துக் கழிக்காம்பு கண்ணில் பட்டுவிட்டது. மண்டைக் குடைச்சல் ஆரம்பித்து விட்டது. இத எதுக்கு வெச்சிருக்கார் என்று. கோடு போட என்றாலும் அவ்வளவு பெரிய அதிகாரிக்கு அது தேவை இல்லை. அதுவும் கோடு போட உதவாத நிலையில் கேவலமாக இருந்தது அது. மெதுவாக அவரின் ஸ்டெனோவிடம் கேட்டேன். எதுக்கு அந்தக் கழி என்று. அப்படி வெச்சிருக்காரா? இவ்வளவு நாள் நாங்க பார்க்கவே இல்லையே என்ற பதில் வரவும் தூக்கம் தொலைந்தது. அந்தாளைப் பார்க்கும் போதெல்லாம், ப்ளீஸ் சொல்லுங்கசார் என்று கெஞ்ச வேண்டும் போல வரும். கண்டு பிடிக்காம விடுறதில்லைன்னு வைராக்கியமே வந்துடிச்சி.

அது அதுக்கும் நேரம் காலம் வர வேண்டாமா. வந்துச்சி. திரும்ப ஒரு நாள் கூப்பிட்டு வருமான வரி சம்பந்தமான ஆவணங்களைக் காட்டி கேட்டுக் கொண்டிருந்தார். ஏதோ ஆவணம் தேவை என சொல்லிவிட்டு வந்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து கூப்பிட்டு ஒரு ஆவணம் காணவில்லை; நீங்க கொண்டு போனீங்களா என்றார். அதை ஜெராக்ஸ் எடுக்க கொடுத்தது தெரியும். வாய்த்ததுடா வாய்ப்பு! நடத்து, என்று உங்க ப்ரீஃப் கேசில் வைத்தீர்கள் என்றேன். அப்படியா என்று திரும்ப பாதி திறந்து தேடிவிட்டு இல்லையே என்றார். மவனே விடுறதில்லைன்னு, இல்லை சார் பவுச்சில் வெச்சீங்கன்னு திரும்பவும் சொல்ல, அப்படியா என்று ப்ரீஃப்கேசை டேபிளில் வைத்த போது எனக்கு விடை கிடைத்தது. பொட்டிய முழுசா தொறக்கப்படாதாம். பாதி மூடினா மாதிரி இருக்க ஸ்டேன்ட் அந்த கட்டை. அதை சாத்தி வைத்து விட்டு ரெண்டு கையாலையும் தேடினாங்க. எதுக்கும் ஸ்டெனோவைக் கேக்கிறேன்னு பறந்துட்டேன்.
------------------------------------------------------------------------------
இன்னொரு அதிகாரி இருக்கார். அலுவலகத்துக்கு அருகாமையில் வீடு. மனுசன் அலுவலக நேரம் முழுதும் மேலதிகாரி அறையில் இருப்பார். காலை வருவதும் லேட். மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம் போட்டு விட்டு வருவார் போல. இரண்டரை மணிக்கு மேல் வருவாரு பகுடரெல்லாம் போட்டு ஃப்ரெஷ்ஷா. நிதி நிலைத் துறை அதிகாரியாச்சா. எண்களோடதான் போராட்டம். A3 காகிதத்தில் கட்டு கட்டாய் ஏதோ ஸ்டேட்மென்ட் அனுப்ப வேண்டி இருக்கும். 5 மணிக்கு வருவாரு தன் அறைக்கு. வரும்போதே ஸ்டேட்மென்ட் ரெடியான்னு தான் வருவாரு. கிண்டலா சொல்லலைங்க. நம்புங்க. 3 ப்ளை ஷீட்ல எக்ஸெல்ல இருந்து 2 காபின்னு ப்ரின்ட் எடுத்தா 6 காபி வரும் இல்லையா? ஆறு பேரைக் கூப்பிடுவாரு. இவரையும் சேர்த்து ஆளுக்கு ஒரு ஷீட் பிரிச்சிப்பாங்க. ஒருத்தர் படிப்பாரு. மத்த 5 பேரும் சரி பார்க்கணும். ஒரு ஷீட் முடிய மீதமிருக்கிற ஆள் 6 செட்டா பரத்தி வெச்சி காத்திருப்பாரு. விடிய விடிய வேலை பார்ப்பாங்க. காலைல வந்து சொல்லுவாரு. நேத்து ஒரு மணியாச்சி சாரி வீட்டுக்கு போக. காலைல ஸ்பீட் போஸ்ட்ல அனுப்பிட்டேன்னு. பெரிய புண்ணாக்கு எக்சலன்ட்னு சொல்றப்போ சிரிக்கிறதா? அப்புறதா? ஒரே நேரத்துல எடுத்த பிரின்டவுட்ல என்னதான் ரென்டு செட்னாலும் தப்பா வந்துடுமா? அதே ப்ரின்ட்டவுட்ட வெச்சி காபியை கம்பேர் பண்ணா என்ன கண்டு பிடிச்சிட போறாரு?
------------------------------------------------------------------------------
இன்னோரு ஆளு அப்பிராணி. ரொம்ப சீனியர். வேலைல கெட்டிக்காரர். தசாவதாரம் நாயுடுவேதான். இவர் கிட்ட ட்ரெயினிங் எடுத்த அம்மணி இவருக்கு மேலதிகாரியா வர வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுப் போச்சு. இந்திக்காரம்மா. அதனால இங்கிலீஷ்ல தான் பேசணும். ஏதோ ஒரு கடிதம் ரொம்ப அவசரமா பதில் அனுப்ப வேண்டி இருந்தது. ஐய்யாவோட டிஸ்கஷன் முடிச்சி எப்படி பதில் அனுப்பலாம்னு பேசி வெச்சிட்டு வந்துட்டாங்க. அந்தம்மா அந்த கடிதத்தை இவர் கிட்ட குடுத்ததா நினைச்சி, கொண்டுவா பதில் போடணும்னு சொல்லி இருக்கு. இவரு அலறி, என்கிட்ட இல்லைன்னு சொல்லியும் நம்பல. சரியாத் தேடி பாருன்னிச்சி. வந்து சின்ஸியரா தேடிப் பார்த்துட்டு போய் இல்லைன்னு சொல்லி இருக்காரு. அம்மணி தொலைச்சிட்டு குடுக்கலைன்னு சொல்றியான்னு காச் மூச்னு கத்த மனசொடிஞ்சி போய்ட்டாரு. அப்போ அவர் சொன்னது இது:

Madam. At this Age. I wont lie with you Madam. You ask any body in the office. I never lie with anybody. If you want you can open my drawer and see. There is nothing inside. It is empty only.

படிக்கிறவங்க வில்லங்கமா புரிஞ்சிகிட்டா நானோ அந்த மனுசனோ பொறுப்பில்லை.

24 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கடைசியில் இப்படியா தல..,

யூர்கன் க்ருகியர் said...

தாங்கி பிடிப்பதற்கு அவருக்கு மத்து கழிதானா கிடைத்தது :) விநோதம் தான் !!

இராகவன் நைஜிரியா said...

அண்ணே பின்னீட்டீங்க போங்க...

யார் குத்தமும் இல்லை... கேட்கிறவங்க குத்தம் தாங்க இது...

இராகவன் நைஜிரியா said...

// இது கேக்குற இடமா இதுன்னு கேக்கிறவனும் நினைக்க மாட்டானுவ. மத்தவன் பதில் சொல்லாம போகவும் மாட்டானுவ. //

இது சின்ன சின்ன சந்தேகம் மாதிரி.. பெரிய பெரிய சந்தேகம் அப்படின்னு நினைக்கின்றேன்..

இராகவன் நைஜிரியா said...

// கண்டு பிடிக்காம விடுறதில்லைன்னு வைராக்கியமே வந்துடிச்சி. //

வாழ்க்கையில வைரக்கியம் அப்படின்னா இப்படித்தான் இருக்கணும்...

ஒரு காரியத்தை நினைச்சா முடிக்காம விடப்பிடாது..

இராகவன் நைஜிரியா said...

// என் முப்பத்தி மூன்று வருட சர்வீசில் //

அண்ணே அவ்வளவு பெரியவங்களா நீங்க...

இனிமே நீங்க அண்ணே இல்லே... பெரியண்ணன்..

இராகவன் நைஜிரியா said...

// Madam. At this Age. I wont lie with you Madam. You ask any body in the office. I never lie with anybody. If you want you can open my drawer and see. There is nothing inside. It is empty only. //

அண்ணே ஆபிசில் சிரிச்சு சிரிச்சு எல்லோரும் ஒரு மாதிரியா பார்க்க ஆரம்பிச்சுடாங்கண்ணே...

இராகவன் நைஜிரியா said...

// படிக்கிறவங்க வில்லங்கமா புரிஞ்சிகிட்டா நானோ அந்த மனுசனோ பொறுப்பில்லை.//

படிங்கிறவங்க வில்லங்கமா புரிஞ்சுகிட்டா பரவாயில்லை, அந்த அம்மா வில்லங்கமா புரிஞ்சுக்காத வரைக்கும் சந்தோஷபடுங்க..

vasu balaji said...

/ SUREஷ் (பழனியிலிருந்து) said...

கடைசியில் இப்படியா தல..,/

இது பாராட்டா? திட்டா?

vasu balaji said...

/ யூர்கன் க்ருகியர் said...

தாங்கி பிடிப்பதற்கு அவருக்கு மத்து கழிதானா கிடைத்தது :) விநோதம் தான் !!/

அதுதான் குடைச்சலுக்கு காரணமே.

vasu balaji said...

/ இராகவன் நைஜிரியா said...

அண்ணே பின்னீட்டீங்க போங்க...

யார் குத்தமும் இல்லை... கேட்கிறவங்க குத்தம் தாங்க இது.../

ஹி ஹி.

vasu balaji said...

/இராகவன் நைஜிரியா said.

இது சின்ன சின்ன சந்தேகம் மாதிரி.. பெரிய பெரிய சந்தேகம் அப்படின்னு நினைக்கின்றேன்..//

ஆமாம் சார். எப்படி கொஞ்சம் கூட உணராம இப்டின்னு.

vasu balaji said...

/இராகவன் நைஜிரியா said.

கூடிய வரைக்கும் அதுக்கு போராடுறது தான்.

vasu balaji said...

/அண்ணே அவ்வளவு பெரியவங்களா நீங்க...

இனிமே நீங்க அண்ணே இல்லே... பெரியண்ணன்../

18 வயது முடிய வேலைன்னு போயாச்சி. அவ்ளோ பெரியண்ணனா தெரியல. :))

vasu balaji said...

/இராகவன் நைஜிரியா said
அண்ணே ஆபிசில் சிரிச்சு சிரிச்சு எல்லோரும் ஒரு மாதிரியா பார்க்க ஆரம்பிச்சுடாங்கண்ணே...//

:))

vasu balaji said...

/இராகவன் நைஜிரியா said..
படிங்கிறவங்க வில்லங்கமா புரிஞ்சுகிட்டா பரவாயில்லை, அந்த அம்மா வில்லங்கமா புரிஞ்சுக்காத வரைக்கும் சந்தோஷபடுங்க..//

அந்தாளு நல்லகாலம்.

ப்ரியமுடன் வசந்த் said...

//Madam. At this Age. I wont lie with you Madam. You ask any body in the office. I never lie with anybody. If you want you can open my drawer and see. There is nothing inside. It is empty only.//

ஹிஹிஹிஹிஹி

முடியலடா சாமீ

வயிறுவலிக்க சிரிச்சுட்டேன்.......

:)

:)

:)

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...
ஹிஹிஹிஹிஹி

முடியலடா சாமீ

வயிறுவலிக்க சிரிச்சுட்டேன்.......

=))

Unknown said...

தலைவா,
நிஜமாவே நல்ல பதிவு.
இது மாதிரி நெறைய எழுதுங்க. உங்களுக்கு அரசியல் பதிவு வேண்டாம். உங்களுக்கு சரியா வரல.

vasu balaji said...

/ C said...

தலைவா,
நிஜமாவே நல்ல பதிவு.
இது மாதிரி நெறைய எழுதுங்க. உங்களுக்கு அரசியல் பதிவு வேண்டாம். உங்களுக்கு சரியா வரல./

நன்றிங்க. நான் எப்போ அரசியல் பதிவு எழுதினேன்?

Unknown said...

நான் எப்போ அரசியல் பதிவு எழுதினேன்?
--
நீங்க சமுதாய பதிவுன்னு நினைச்சுகிட்டு கலைஞர் மாதிரி, அல்லது தினமலர் மாதிரி கேள்வி பதில் பதிவு போடறீங்களே, அதை சொன்னேன்.

vasu balaji said...

/ C said...
நீங்க சமுதாய பதிவுன்னு நினைச்சுகிட்டு கலைஞர் மாதிரி, அல்லது தினமலர் மாதிரி கேள்வி பதில் பதிவு போடறீங்களே, அதை சொன்னேன்.//

இல்லைங்கைய்யா. அது சமுதாயப் பதிவுன்னும் நான் நினைக்கவில்லை. செய்தி படிக்கிறப்ப பளிச்சுன்னு ஒரு எதிர்வினை மனசுல வருமில்லையா. அதனுடய வெளிப்பாடு. அவ்வளவுதான். இது கலைஞரையோ அல்லது தினமலரையோ நினைவு படுத்தினா ரொம்ப வருத்தப் படுவேன்.

Maheswaran Nallasamy said...

இப்படி உங்க அலுவலக ரகசியங்களை வெளிய சொல்லுறதுக்கு, உங்க மேல ஏன் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க கூடாது-ன்னு மெமோ வர போகுது.. :)) சும்மா...உங்களையும் கலாய்ச்சேன்..

vasu balaji said...

/ Maheswaran Nallasamy said...
இப்படி உங்க அலுவலக ரகசியங்களை வெளிய சொல்லுறதுக்கு, உங்க மேல ஏன் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க கூடாது-ன்னு மெமோ வர போகுது.. :)) சும்மா...உங்களையும் கலாய்ச்சேன்.//

அந்த மாதிரி காமெடி ஒண்ணும் நடந்துச்சி.=))