Sunday, August 16, 2009

சின்ன சின்ன சந்தேகங்கள்

பாராட்டுனா அப்ரிஷ்யேட் பண்றதுங்கறமே மட்டம் தட்டினா டிப்ரிஷியேட் பண்ணிட்டாங்கன்னு ஏன் சொல்றதில்ல?

ஹெல்மட் போடுங்கப்பான்னா வழுக்கை விழும்னு கோர்ட் வரைக்கும் போறவுங்க என்னேரமும் இயர்போன் வெச்சிகிட்டு பாட்டு கேக்குறாங்களே காது புட்டுக்காதா?

மேல ஏத்திவிடுறப்போ எஸ்கலேடர் சரி, இறக்கிவிடுறப்போவும் அதே பேரு எப்படி?

பேச்சைக் குறைன்னு பெரியவங்க சொன்னத கேக்குறதா? பேசிக்கிட்டே இருங்கன்னு செல்போன்காரன் சொல்றத கேக்குறதா?

இந்த பொம்பள புள்ளைய பத்து விரல்ல டைப் பண்றத விட கட்டை விரல்ல எஸ்.எம்.எஸ். ரொம்ப வேகமா அடிக்குதுங்களே எப்படி?

ஹெட்போன தன் காதுல மாட்டிகிட்டு, யாராவது ஏதாவது கேட்டா கேக்குறவன் செவிடன் மாதிரி ஓன்னு கத்துறமே ஏன்?

குடியிருப்புக்குள்ள லாரி எல்லாம் வராம குறுக்கு கம்பி போட்டா, தாண்டி போற சைக்கிள்காரன்ல இருந்து கார் ஓட்டிட்டு போறவன் வரைக்கும் (ஓட்டுறவன் மட்டும்தான்) அந்த இடம் வந்ததும் குனிஞ்சிகிட்டு ஓட்டுறாங்களே ஏன்?

நிறைய மருந்து இருக்கிறதால புதுசு புதுசா நோவு வருதா; நிறைய நோவு இருக்கிறதால புதுசு புதுசா மருந்து கண்டு பிடிக்கிறாங்களா?

அநியாய வட்டி வாங்கினா சிறைத் தண்டனைன்னு சொல்ற அரசே, சொத்து பங்கு போட்டா குறைவான முத்திரை தீர்வையும், கடன் பத்திரம் பதிய அதிகமான தீர்வையும் வைக்குதே எப்படி?

புகைப்பட அடையாள அட்டையை பார்த்து, பேர் இருக்கான்னு பார்த்துத்தானே வாக்களிக்க விடுறாங்க. அப்புறம் ஏன் விரல்ல மை வைக்கணும்?

விமானப் பயணம் ஒரு மணி நேரம்னாலும் 2 மணி நேரத்துக்கு முன்னாடியே ரிப்போர்ட் பண்ணணுங்கிறானே ஏன்?

அடிக்கடி விமானத்துல போற கொள்ள பேரு லக்கேஜ்ல அவன் ஒட்டுற ஸ்டிக்கரையும் பட்டையையும் அப்பிடியே விட்டுட்டு திரியிறாங்களே ஏன்?

விமானத்துல பயணம் பண்ண களைப்புக்கு ஜெட்லாக்னு பேரு இருக்கே ரயில், பஸ் பயணக் களைப்புக்கு ரயில்லேக், பஸ் லேக் னு ஏன் சொல்றதில்ல?

பகல்ல கம்பளி போர்த்தினா மாதிரி மொய்க்கிற ராத்திரி எங்க போய் தூங்குது? பொழுது சாயவே படை எடுக்கிற கொசு பகல்ல எங்க போகுது?

யாருமே இல்லாத ரூம்ல ஒரு கொசு கூட இருக்காதே. ஒரு ஆளு வந்ததும் அதுக்கெப்படி தகவல் தெரிஞ்சி கூட்டமா வந்து புடுங்குது?

65 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//விமானப் பயணம் ஒரு மணி நேரம்னாலும் 2 மணி நேரத்துக்கு முன்னாடியே ரிப்போர்ட் பண்ணணுங்கிறானே ஏன்?
//

ஷாரூக் கான் கிட்ட கேப்போமா.., தல..,

அவர 2 மணி நேரம் முன்னாடி வரச்சொன்னா சாரூக் டீடெயிண்டு அப்படின்னு இங்கிலீஷ் சானல் நீயூஸ் வருமாமே...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நிறைய மருந்து இருக்கிறதால புதுசு புதுசா நோவு வருதா;//

உண்மையில் மருந்துகளும் கண்டுபிடிக்கும் முறைகளும் அதிகமாக இருப்பதால் பல வியாதிகள் முதலிலேயே கண்டறியப் படுகின்றன. எனவே வியாதிகளின் எண்ணிக்கை அதைகரிப்பது போல் தோன்றுகிறது, இல்லையென்றால் அந்த கண்டறியப் படாத வியாதிகள் கடைசியில் சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்றவை பாதித்தப் இன்னரே தெரிய வந்திருக்கும்

vasu balaji said...

/அவர 2 மணி நேரம் முன்னாடி வரச்சொன்னா சாரூக் டீடெயிண்டு அப்படின்னு இங்கிலீஷ் சானல் நீயூஸ் வருமாமே.../

:)) அதான.

vasu balaji said...

இந்த மருத்துவர நம்பலாம். ஆனாலும் ஒரு மருந்து குடுத்தா அதுல இருந்து வேற ஒரு வில்லங்கம் வருதே. தேவன் மாயம் இடுகை பாருங்க.

Barari said...

ADA UNGALUKKU THERIYAATHAA MURUNTHAI THAYAAR SEITHU VITTU THAAN NOYAI ARIVIKKIRAARKAL MARUNTHU COMPANY KAARARKAL.ITHAI ARINTHU VAITHTHIRUKKUM ORU SILA NALLA MARUTHTHUVARKAL ETHIRTHTHU KELVI KETTAAL MUTTAAL PATTAM KATTI VIDUVAARKALO ENDRU PAYANTHU VAYAI MOODI VIDUKIRAARKAL.

யூர்கன் க்ருகியர் said...

இவ்வளவு பெரிய பெரிய சந்தேகங்களை கேட்டுட்டு "சின்ன சின்ன சந்தேகங்கள்" அப்படின்னு டைட்டில் வச்சிருப்பது ஏன் ?

vasu balaji said...

Thanks for your comment Barari

vasu balaji said...

/ யூர்கன் க்ருகியர் said...

இவ்வளவு பெரிய பெரிய சந்தேகங்களை கேட்டுட்டு "சின்ன சின்ன சந்தேகங்கள்" அப்படின்னு டைட்டில் வச்சிருப்பது ஏன் ?/


பெரிய சந்தேகம்னா படிக்க வரவே மாட்டாங்கல்ல. அதான்:)))))

கலகலப்ரியா said...

//மேல ஏத்திவிடுறப்போ எஸ்கலேடர் சரி, இறக்கிவிடுறப்போவும் அதே பேரு எப்படி?//
கண்ணாடிய நல்லா கழுவி துடைச்சிட்டு பாருங்க நைனா.. அது எச்சுகலேட்டர் தலை கீழா வச்சிருக்காய்ங்க நம்ம கிட்டயேவா.. இதோ வரோம்ல வந்து மிச்சம் சொச்சத்துக்கு பதில் சொல்றோம்..

vasu balaji said...

/கலகலப்ரியா said...
அது எச்சுகலேட்டர் தலை கீழா வச்சிருக்காய்ங்க நம்ம கிட்டயேவா.. /

தோடா! தலைகீழா வேச்சாலும் அது ஏத்தியா விடுது. இறக்கிதானெ விடுது. அதானே குழப்பம்.

vasu balaji said...

/இதோ வரோம்ல வந்து மிச்சம் சொச்சத்துக்கு பதில் சொல்றோம்../

வாங்க வாங்க!:D

ப்ரியமுடன் வசந்த் said...

சத்தமா கைதட்டுக்கள்......

வித்யாசமான சிந்தனைகளுக்கு.....

vasu balaji said...

வாங்க வசந்த். நன்றி.

கலகலப்ரியா said...

ஐயோ.. அது தலை கீழா ஏத்தி விடுதுங்க..

ப்ரியமுடன் வசந்த் said...

//August 17, 2009 10:31 PM
கலகலப்ரியா said...
ஐயோ.. அது தலை கீழா ஏத்தி விடுதுங்க..//

எப்பிடி தலைய கீழ வச்சு கொண்டுட்டு போகுமா? கால மேலவச்சு கொண்டுட்டு போகுமா?

vasu balaji said...

/கலகலப்ரியா said...
ஐயோ.. அது தலை கீழா ஏத்தி விடுதுங்க..//



ஆமாங்க. வாஸ்தவம். சென்னை ஏர் போர்ட்ல ஒரு குழந்தையை ஏத்தி விட்டது வானுலகுக்கு. அப்போல இருந்து எல்லா எஸ்கலேட்டர்கும் ஒரு காவலாளி. உலகத்துல வேற எங்கையும் இப்படி உண்டுமா தெரியல.

vasu balaji said...

/கலகலப்ரியா said...
இதோ வரோம்ல வந்து மிச்சம் சொச்சத்துக்கு பதில் சொல்றோம்../

எங்க மிச்ச சொச்சம். நின்னு போன எஸ்கலேடர்ல மாட்டினா மாதிரி நிறுத்திட்டீங்க.

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

எப்பிடி தலைய கீழ வச்சு கொண்டுட்டு போகுமா? கால மேலவச்சு கொண்டுட்டு போகுமா?//
அது அவங்க அவங்க வசதி வசந்து.. எச்சுகலேட்டார் தலை கீழ போறதுன்னு.. நானும் தலை கீழா போக முடியுமா.. நான் கால்ல நின்னுண்டுதான் போறது.. ! ஆனா உங்க வசதின்னு ஒண்ணு இருக்கில்ல.. ! சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.. ஹெஹெ..!

vasu balaji said...

=))))). முடியல சாமி.

கலகலப்ரியா said...

// வானம்பாடிகள் said...

எங்க மிச்ச சொச்சம். நின்னு போன எஸ்கலேடர்ல மாட்டினா மாதிரி நிறுத்திட்டீங்க.//

வந்துட்டம்ல.. வந்துட்டம்ல.. வந்துட்டம்ல..

vasu balaji said...

/கலகலப்ரியா said...
வந்துட்டம்ல.. வந்துட்டம்ல.. வந்துட்டம்ல..

வாங்க! வாங்க! வாங்க!

கலகலப்ரியா said...

//ஹெல்மட் போடுங்கப்பான்னா வழுக்கை விழும்னு கோர்ட் வரைக்கும் போறவுங்க//
வயித்தெரிச்சல பாருடா.. உங்களுக்கு வழுக்கை பத்தி கவலை இல்லைனா அதில ஒரு நியாயம் இருக்கு.. முடி உள்ளவனுக்கு கவலைன்னா அதிலையும் ஒரு நியாயம் இருக்கா இல்லையா..

கலகலப்ரியா said...

//பேச்சைக் குறைன்னு பெரியவங்க சொன்னத கேக்குறதா? பேசிக்கிட்டே இருங்கன்னு செல்போன்காரன் சொல்றத கேக்குறதா?//

செல் போன் காரன் பெரிய மனுஷன் இல்லைன்னு சொல்ல வரீங்களா என்ன..? உங்களுக்கு ஏன் இவ்ளோ கஷ்டம்.. பில் என்ன சொல்லுதுன்னு பாருங்களேன்.. (bill um periya aal thaanungale..)

பழமைபேசி said...

சின்ன சின்ன...ஆனா, நல்ல நல்ல..

கலகலப்ரியா said...

//கட்டை விரல்ல எஸ்.எம்.எஸ். ரொம்ப வேகமா அடிக்குதுங்களே//

SMS 3 எழுத்து கூட இல்ல.. ரெண்டு எழுத்துதானுங்களே..!

vasu balaji said...

/கலகலப்ரியா said...

பில் என்ன சொல்லுதுன்னு பாருங்களேன்.. (bill um periya aal thaanungale..)/
உங்களுக்கு தெரியாதா? மக்கள் உசாரு. பேசின பிறகு காசெல்லாம் கம்பெனி செலவுலதான். நம்மள மாதிரி ஆளுங்க கைமேல காசு. வாய் மேல தோசதான். அதாங்க. ப்ரீ பேய்டு. ஐந்து ரூபாய்க்கு கூட சார்ஜ் பண்ணும் ஒரே வசதி உள்ள நாடு இந்தியா தான்னு நினைக்கிறேன்.

கலகலப்ரியா said...

appaa mudiyala.. inime kelvikku no. podungappaa.. exam mathiri no. poattu bathil podurom..

//ஹெட்போன தன் காதுல மாட்டிகிட்டு, யாராவது ஏதாவது கேட்டா கேக்குறவன் செவிடன் மாதிரி ஓன்னு கத்துறமே ஏன்?//
ஹெட்போன் காதில மாட்டலைன்னா மட்டும்.. எப்டி..?

vasu balaji said...

/கலகலப்ரியா said...
SMS 3 எழுத்து கூட இல்ல.. ரெண்டு எழுத்துதானுங்களே..!/

ஏனுங். உங்களுக்கு நிஜமாலுமே எங்கூரு பொண்ணுங்கள தெரியலீங். 3 பக்க மேட்டர 30 செகன்ட்ல அடிச்சிட்டு செல்ல வெச்சா அது 300 மெசேஜ் போய்ட்டே இருக்கும். =)))

கலகலப்ரியா said...

//கார் ஓட்டிட்டு போறவன் வரைக்கும் (ஓட்டுறவன் மட்டும்தான்) அந்த இடம் வந்ததும் குனிஞ்சிகிட்டு ஓட்டுறாங்களே ஏன்?//

ஹிஹிஹி.. நீங்க கூடவா..?

vasu balaji said...

/கலகலப்ரியா said...

ஹெட்போன் காதில மாட்டலைன்னா மட்டும்.. எப்டி..?/

=))

கலகலப்ரியா said...

//நிறைய மருந்து இருக்கிறதால புதுசு புதுசா நோவு வருதா; நிறைய நோவு இருக்கிறதால புதுசு புதுசா மருந்து கண்டு பிடிக்கிறாங்களா?//

கேட்டுட்டாருய்யா.. முட்டைல இருந்து கோழியா.. கோழில இருந்து முட்டையாவ இப்டி சுத்தி வளைச்சி எத்தன வருசத்துக்குய்யா கேட்டுண்டிருக்க போறீங்க..

vasu balaji said...

/appaa mudiyala.. inime kelvikku no. podungappaa.. exam mathiri no. poattu bathil podurom.. /

தோடா! இதெல்லாம் ஓவரு. ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டு மிச்சமெல்லாம் சாய்ஸ்லனு விடுவீங்க.அவ்வ்வ்வ்

vasu balaji said...

/ பழமைபேசி said...

சின்ன சின்ன...ஆனா, நல்ல நல்ல../

இஃகி. நன்றி.

vasu balaji said...

/ கலகலப்ரியா said...

//கார் ஓட்டிட்டு போறவன் வரைக்கும் (ஓட்டுறவன் மட்டும்தான்) அந்த இடம் வந்ததும் குனிஞ்சிகிட்டு ஓட்டுறாங்களே ஏன்?//

ஹிஹிஹி.. நீங்க கூடவா..?/

ஆஆ. கம்பேனி ரகசியத்த சத்தமா சொல்லாதீங்க.

vasu balaji said...

/கேட்டுட்டாருய்யா.. முட்டைல இருந்து கோழியா.. கோழில இருந்து முட்டையாவ இப்டி சுத்தி வளைச்சி எத்தன வருசத்துக்குய்யா கேட்டுண்டிருக்க போறீங்க../

பதில் தெரியற வரைக்கும்தான்.

கலகலப்ரியா said...

//அப்புறம் ஏன் விரல்ல மை வைக்கணும்?//
இப்டி யாராவது கேனத்தனமா கேக்க முடியுமாங்க..? வீட்ல உள்ளவங்க மூஞ்சியையே சட்டுபுட்டுன்னு அடையாளம் தெரியல.. உங்கள மாதிரி ஒரு ஆள் ஒரு வாட்டி ஸ்டூல்ல ஏறி நின்னுண்டு போனா.. இல்ல ஹெல்மெட் மாட்டிண்டு போனா.. என்ன ஆவுறது..?

கலகலப்ரியா said...

//விமானப் பயணம் ஒரு மணி நேரம்னாலும் 2 மணி நேரத்துக்கு முன்னாடியே ரிப்போர்ட் பண்ணணுங்கிறானே ஏன்?//

கண்ணு படப்போகுதுப்பா.. வேற எதுவும் உருப்படியா கிடைக்கலையா..? பத்து மணி நேரத்தில புள்ள பொறந்துடிச்சு.. அதுக்கு ஏன் பத்து மாதம் வெயிட் பண்ணான்னு யார்ட்டயாவது கேட்டு வைக்க போறீருய்யா.. சாக்கிரத.. !

vasu balaji said...

/வீட்ல உள்ளவங்க மூஞ்சியையே சட்டுபுட்டுன்னு அடையாளம் தெரியல.. உங்கள மாதிரி ஒரு ஆள் ஒரு வாட்டி ஸ்டூல்ல ஏறி நின்னுண்டு போனா.. இல்ல ஹெல்மெட் மாட்டிண்டு போனா.. என்ன ஆவுறது..?/

ஸ்டூல்ல நின்னா மூஞ்சி மாறிடுமா? அதான் அடையாள அட்டைல போடோ இருக்குன்னு சொன்னேன்ல.

கலகலப்ரியா said...

//அடிக்கடி விமானத்துல போற கொள்ள பேரு லக்கேஜ்ல அவன் ஒட்டுற ஸ்டிக்கரையும் பட்டையையும் அப்பிடியே விட்டுட்டு திரியிறாங்களே ஏன்?//
அந்தப் பட்டை இல்லை ஐயா மாட்டரு.. அதில பட்டை பட்டையா போட்டிருக்கிற அட்ரஸ்ஸு.. அது மாட்டரு..

கலகலப்ரியா said...

//பகல்ல கம்பளி போர்த்தினா மாதிரி மொய்க்கிற ஈ ராத்திரி எங்க போய் தூங்குது? பொழுது சாயவே படை எடுக்கிற கொசு பகல்ல எங்க போகுது?//
அட நன்னாரிப்பயலுவ.. இப்போதானே தெரியுது மாட்டரு.. இவிங்க போய் படுத்துண்டு அவங்கள எழுப்பி விடுவாய்ங்க போலயே... அப்போ கொசுவும் , ஈயும் கூட்டுக் களவாணிங்களா..?

vasu balaji said...

/அந்தப் பட்டை இல்லை ஐயா மாட்டரு.. அதில பட்டை பட்டையா போட்டிருக்கிற அட்ரஸ்ஸு.. அது மாட்டரு../

அதுக்குன்னு 3 வருசமா போய்ட்டு வந்துட்டிருக்கறதெல்லாம் அப்டியே விடுவாங்களா? எல்லா ஏர்லைன் ஸ்டிக்கரும் இருக்குமுங்கோ. அய்யா பறவைன்னு எல்லாருக்கும் தெரியணுமாம். அது மேட்டரு.

vasu balaji said...

/அட நன்னாரிப்பயலுவ.. இப்போதானே தெரியுது மாட்டரு.. இவிங்க போய் படுத்துண்டு அவங்கள எழுப்பி விடுவாய்ங்க போலயே... அப்போ கொசுவும் , ஈயும் கூட்டுக் களவாணிங்களா..?/

அடங்கொக்காமக்கா. இதானா?

கலகலப்ரியா said...

//யாருமே இல்லாத ரூம்ல ஒரு கொசு கூட இருக்காதே. ஒரு ஆளு வந்ததும் அதுக்கெப்படி தகவல் தெரிஞ்சி கூட்டமா வந்து புடுங்குது?//
பூனை கண்ண மூடிச்சாம்.. பூலோகம் இருண்டிச்சாம்.. மவனே.. யாரும் இல்லாதப்போ அதுதான் அதோட ரெஸ்ட் ஹவுஸ்.. தெரிஞ்சிக்குங்க..

கலகலப்ரியா said...

oho.. ennai vachche.. pinnoottam century adikkalaam nu paarkiriyalo.. maattikka maattomdi.. joot..!

vasu balaji said...

/பூனை கண்ண மூடிச்சாம்.. பூலோகம் இருண்டிச்சாம்.. மவனே.. யாரும் இல்லாதப்போ அதுதான் அதோட ரெஸ்ட் ஹவுஸ்.. தெரிஞ்சிக்குங்க../

அதென்னாங்க. கொசு விஷயம் மட்டும் தீர்மானமா பதில் வருது=))

sakthi said...

இந்த பொம்பள புள்ளைய பத்து விரல்ல டைப் பண்றத விட கட்டை விரல்ல எஸ்.எம்.எஸ். ரொம்ப வேகமா அடிக்குதுங்களே எப்படி?

நல்ல கேள்வி பாலா

பதில் கேட்டு சொல்றேன்

vasu balaji said...

/ கலகலப்ரியா said...

oho.. ennai vachche.. pinnoottam century adikkalaam nu paarkiriyalo.. maattikka maattomdi.. joot..!/

:((அவ்வ்வ்வ்வ்வ். கண்டு பிடிச்சிட்டீங்களா? இவ்வளவு இடுகைல இன்னைக்குதாங்க நிறைவா இருக்கு. கலியாண வீட்டில கோவிச்சிக்கிட்ட பங்காளி மொய் எழுதிட்டு சாப்டாம போனா மாதிரி என்னதான் வாக்களிச்சாலும் பின்னூட்டமில்லைன்னா சங்கடமா இருக்குமா இல்லையா. நன்றிங்கோவ்.

இராகவன் நைஜிரியா said...

பாமரமன் வலைப்பூவா.. இதுவா... ரொம்ப சந்தேகமா இருக்குக்க... நிறைய பின்னூட்டம்...

இது மாதிரி நிறைய பின்னூட்டம் வாங்க வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

இது மாதிரி இடுகை போட ஆரம்பிச்சீங்க... நிறைய பேருக்கு ஆட்டம் கண்டுவிடும்ங்க...

சின்ன சின்ன சந்தேகங்கள்... ஆனால் பதில் இல்லாத சந்தேகங்கள்..

இராகவன் நைஜிரியா said...

// பாராட்டுனா அப்ரிஷ்யேட் பண்றதுங்கறமே மட்டம் தட்டினா டிப்ரிஷியேட் பண்ணிட்டாங்கன்னு ஏன் சொல்றதில்ல? //

திஸ் இஸ் வெரி பேட். இனிமே எல்லோரும் டிப்ரிஷியேட் என்று சொல்லுங்கப்பு..

இராகவன் நைஜிரியா said...

// ஹெல்மட் போடுங்கப்பான்னா வழுக்கை விழும்னு கோர்ட் வரைக்கும் போறவுங்க என்னேரமும் இயர்போன் வெச்சிகிட்டு பாட்டு கேக்குறாங்களே காது புட்டுக்காதா? //

ஹெல்மெட் போட்டா வழுக்கை விழுமா... அப்படி யெல்லாம் வேற சொல்லிகிட்டு திரியராங்களா என்ன?

இராகவன் நைஜிரியா said...

//
இந்த பொம்பள புள்ளைய பத்து விரல்ல டைப் பண்றத விட கட்டை விரல்ல எஸ்.எம்.எஸ். ரொம்ப வேகமா அடிக்குதுங்களே எப்படி? //

அது ரகசியம்.. பரம ரகசியம் .. கேட்கப் பிடாது...

யாசவி said...

1. don't know

2. not aware

3. escalator - making the action faster (escalate). So for coming down also it is escalator

4. follow the old folks

5. sms typing for her/his favourite peoples

6. trying to out voice based on ear's feedback. If ears already have noice then the person trying to raise the voice

7. don't know may be suresh can answer

8. earlier not aware now aware

9.yes. why?

10. yes. why?

11. security and prepation since cannot pick up people last minute. some airlines allow even upto last 30 minutes.

12. then how u know that the guy is frequent traveller

13. Jetlock because of time zone shifting problem. bus or train cannot have time zone shifting.

14. yes. why?

15. if nobody in the room how u know no mosquitto in the room

யாசவி said...

1. don't know

2. not aware

3. escalator - making the action faster (escalate). So for coming down also it is escalator

4. follow the old folks

5. sms typing for her/his favourite peoples

6. trying to out voice based on ear's feedback. If ears already have noice then the person trying to raise the voice

7. don't know may be suresh can answer

8. earlier not aware now aware

9.yes. why?

10. yes. why?

11. security and prepation since cannot pick up people last minute. some airlines allow even upto last 30 minutes.

12. then how u know that the guy is frequent traveller

13. Jetlock because of time zone shifting problem. bus or train cannot have time zone shifting.

14. yes. why?

15. if nobody in the room how u know no mosquitto in the room

;-)

vasu balaji said...

/sakthi said...

பதில் கேட்டு சொல்றேன்/

நம்பிட்டோம்.

vasu balaji said...

/ இராகவன் நைஜிரியா said...

பாமரமன் வலைப்பூவா.. இதுவா... ரொம்ப சந்தேகமா இருக்குக்க... நிறைய பின்னூட்டம்...

இது மாதிரி நிறைய பின்னூட்டம் வாங்க வாழ்த்துகள்./

எனக்குந்தான்.=)). ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி சார்.

vasu balaji said...

/ இராகவன் நைஜிரியா said...

இது மாதிரி இடுகை போட ஆரம்பிச்சீங்க... நிறைய பேருக்கு ஆட்டம் கண்டுவிடும்ங்க.../

:> ஆஆ. இருக்கிற சந்தேகம் போறாதா. ஏன்?

vasu balaji said...

/இராகவன் நைஜிரியா said
ஹெல்மெட் போட்டா வழுக்கை விழுமா... அப்படி யெல்லாம் வேற சொல்லிகிட்டு திரியராங்களா என்ன?/

ஆமாம் சார். கோர்ட்ல கேஸ் கூட போட்டாங்க. கொஞ்ச நாள் பெண்கள் ஜடை தடுக்காத மாதிரி பின்னாடி ஒரு வளைவு வெச்சி கூட ஹெல்மட் வித்தாங்க=))

vasu balaji said...

/இராகவன் நைஜிரியா said
அது ரகசியம்.. பரம ரகசியம் .. கேட்கப் பிடாது.../

அய்யோ சரியா சொன்னீங்க. என் மகளைக் கூட கேட்டு பார்த்துட்டேன். கேவலமா ஒரு சிரி சிரிச்சிட்டு போய்ட்டா. ஒரு நாள் க்ளூ மட்டும் கிடைச்சது. இந்தியால நோக்கியா ஏன் பிரபலம்னு. அதோட கீ பேட் க்ரிப் சூப்பர். சோனியெல்லாம் வேஸ்ட் ஃபெல்லோன்னு.

vasu balaji said...

/6. trying to out voice based on ear's feedback. If ears already have noice then the person trying to raise the voice

இது கதை. நேரா பேசுறப்போ ஒத்தர ஒருத்தர் மிஞ்சி கத்துறமா என்னா?

/13. Jetlock because of time zone shifting problem. bus or train cannot have time zone shifting./

ஐ. புருடா. அமெரிக்கால, ஐரோப்பால எல்லாம் பஸ்ல, ரயில்ல, கார்ல போனா டைம் ஜோன் மாறுமே. அங்கயும் ஏன் அப்படி சொல்றதில்லை.

/15. if nobody in the room how u know no mosquitto in the room/

அனுபவந்தேன்.

யாசவி said...

//6. trying to out voice based on ear's feedback. If ears already have noice then the person trying to raise the voice

இது கதை. நேரா பேசுறப்போ ஒத்தர ஒருத்தர் மிஞ்சி கத்துறமா என்னா?//


The sound level in the headset is higher than talking sound. This is my opinion


///13. Jetlock because of time zone shifting problem. bus or train cannot have time zone shifting./

ஐ. புருடா. அமெரிக்கால, ஐரோப்பால எல்லாம் பஸ்ல, ரயில்ல, கார்ல போனா டைம் ஜோன் மாறுமே. அங்கயும் ஏன் அப்படி சொல்றதில்லை//

Jetlock refers travel from one time zone to other time zone in short period like travel from india to singapore 4 hours and u'll have experience -2.5 hours which is impossible(Presently) in bus or train.

Infuture if achieved by bus then may call it bus lock/train lock

vasu balaji said...

/Jetlock refers travel from one time zone to other time zone in short period like travel from india to singapore 4 hours and u'll have experience -2.5 hours which is impossible(Presently) in bus or train./

The United States spans 6 time zones. It shares the main four time zones with Canada (Eastern Time, Central Time, Mountain Time and Pacific Time).
இங்கல்லாம் பஸ்ல கார்ல, ரயில்லன்னு பக்கத்து பக்கத்து மாநிலத்துல மாறுமே. ஃப்ரான்ஸ் இருந்து லண்டனுக்கு பஸ்ல, ரயில்ல எல்லாம் போகும்போதும் மாறும். பின்ன ஏஏஏஏன்?

இது நம்ம ஆளு said...

"சின்ன சின்ன சந்தேகங்கள்"

அருமை

யோசிக்கணும்

vasu balaji said...

/ இது நம்ம ஆளு said...

"சின்ன சின்ன சந்தேகங்கள்"

அருமை

யோசிக்கணும்/

நன்றிங்க

கலகலப்ரியா said...

jetlag a epponga lock pannanga..?