தமிழர்கள் மின் வேலியிடப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விலங்குகள் வராம மின்வேலி போட்டாத்தான் சட்டப்படி குற்றம். மனுசனுக்கில்லை. வேணும்னா ஐ.நா. ல ஓட்டு எடுக்கலாமான்னு கேப்பானுவ.
________________________________________________
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது: சிவ்சங்கர் மேனன்
தெரியாம கேக்குறேன். இந்த முடிவெல்லாம் இவர் எடுக்கிறது தானா? மந்திரி முந்திரி எல்லாம் மண்டையாட்டவா?
________________________________________________
20 நாடுகளின் உதவியுடனேயே விடுதலைப் புலிகளை அரசு தோற்கடித்தது: வெளியுறவு அமைச்சர் ரோஹித
அழிக்க 20 நாடு, அதில இருந்து தப்பிக்க 24 நாடு, தினம் உண்டு கொழுக்க நிவாரணம் கொட்டிக் கொடுக்க எல்லாரும்னு பிச்சைலயே போகுது பொழப்பு. இதுக்கு அலட்டல பாரு.
________________________________________________
இலங்கையில் நுழைய அனுமதி மறுப்பு: கனடா எம்.பி. தவிப்பு
கனடா டாலர் மட்டும் தான் மறுப்பில்லாம அனுப்பதிப்பான் ராஜபிச்ச.
________________________________________________
இலங்கை அரச பயங்கரவாதிகள் தமிழீழ மக்களை ஒரு பூச்சியை விட கேவலமாக நடத்துகின்றார்கள்
அரசா இருந்தா பயங்கரவாதத்துக்கு பேரு இறையாண்மை. எல்லாம் வந்து வந்து வேடிக்கை பார்த்துட்டு போறாங்க.
________________________________________________
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும், சிவ்சங்கர் மேனனும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி 500 கோடி ரூபாய்களை இலங்கைக்கு வழங்க பரிந்துரைத்துள்ளனர்:தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினரான பேராசிரியர் வி.சூரியநாராயணன்
கேடிங்கப்பா. பரிந்துரை எதுக்கு. போடு கையெழுத்துன்னா போடப் போறாங்க.
________________________________________________
20 பேரைக்கொண்ட குழு இந்த பணத்தை 19 சிங்களவர்கள் 1 முஸ்லிம் ஆகியோருக்கு செலவிட பரிந்துரைத்துள்ளது
பினாமி போல. எல்லாம் மந்திரிங்க சொந்தக் காரனா இருக்கும்.
________________________________________________
தமிழ்ச்சமூகத்திற்கு இந்தியா துரோகம் இழைத்து விட்டது: திருமாவளவன்
உங்களுக்கு இப்போவாவது உறுத்துதே.சந்தோஷம்.
________________________________________________
நேருக்கு நேர் மோதுங்கள்:பாகிஸ்தானிடம் அமெரிக்கா
வளர்த்த கடா முட்ட வந்தான்னு பாடிட்டு போங்கப்பு. பக்ஸேக்கு சொல்லக் காணோம். ஊரக் கூட்டி தேரிழுத்தான்.
________________________________________________
சீனாவுடன் மோதல் வருமா?:எல்லையில் விமானங்களை குவிக்கிறது இந்தியா
பக்ஸேட்ட மிச்சம் மீதி இருந்தா கேட்டுப் பாருங்க. குடுப்பான். காசுக்குதான். அதான் உசாரா உன் சண்டையதானே நான் போட்டேன்னுட்டானே?
________________________________________________
பாவனைக்கு உதவாத பீரங்கி தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையே தீயில் அழிவடைந்துள்ளது ‐ நாணயக்கார
பாவம்பா. புளுகி நாளாச்சின்னு வந்துட்டான். பீரங்கி தோட்டா பஞ்சுலயா பண்ணி வெச்சாங்க?
________________________________________________
பாஜக-ஜனதா தளம் இணைந்து செயல்படும்: இல.கணேசன்-சு.சுவாமி அறிவிப்பு
டெபாசிட் கூட இல்லாம நாசமா போக வழி.
________________________________________________
10 comments:
//இலங்கை அரச பயங்கரவாதிகள் தமிழீழ மக்களை ஒரு பூச்சியை விட கேவலமாக நடத்துகின்றார்கள்//
//அரசா இருந்தா பயங்கரவாதத்துக்கு பேரு இறையாண்மை. எல்லாம் வந்து வந்து வேடிக்கை பார்த்துட்டு போறாங்க.//
என்ன சொல்ல மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு :((((
________________________________________________
//இலங்கையில் நுழைய அனுமதி மறுப்பு: கனடா எம்.பி. தவிப்பு
கனடா டாலர் மட்டும் தான் மறுப்பில்லாம அனுப்பதிப்பான் ராஜபிச்ச.//
சரியான நக்கல்
நன்றி தோழி.
/நசரேயன் said..
சரியான நக்கல்/
பின்ன என்னங்க.அவ்வளவு தூரம் பயணித்து வந்த பிறகு திருப்பி அனுப்புறது என்ன கயவாளித் தனம். காசு குடுத்தா கேள்வி கேக்குறானா.
//இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது: சிவ்சங்கர் மேனன்
தெரியாம கேக்குறேன். இந்த முடிவெல்லாம் இவர் எடுக்கிறது தானா? மந்திரி முந்திரி எல்லாம் மண்டையாட்டவா?//
சிவசங்கர் மேனன் வாய் ரொம்பவே நீளுது.நல்லதுக்கில்லை இந்தியாவுக்கு.வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா இன்னும் டீச்சர் ட்ரெயினிங்க் முடிக்கலையாம்.
//தமிழர்கள் மின் வேலியிடப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விலங்குகள் வராம மின்வேலி போட்டாத்தான் சட்டப்படி குற்றம். மனுசனுக்கில்லை. வேணும்னா ஐ.நா. ல ஓட்டு எடுக்கலாமான்னு கேப்பானுவ.//
ஐ நா எவ்வளவு கேவலமாக போய் விட்டது! :-(
//கனடா டாலர் மட்டும் தான் மறுப்பில்லாம அனுப்பதிப்பான் ராஜபிச்ச.//
:-)
//இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது: சிவ்சங்கர் மேனன்
தெரியாம கேக்குறேன். இந்த முடிவெல்லாம் இவர் எடுக்கிறது தானா? மந்திரி முந்திரி எல்லாம் மண்டையாட்டவா?//
இதுதான் உண்மை பாஸ்.. எப்பவும் வெளியுறவு துறைக்கான கொள்கைகள வகுக்குறது அதிகாரிகள் மட்டும் தான்.. அதிகாரிகளின் ஆலோசனைப்படி அரசியல்வாதிகள் வாயசைப்பு மட்டும்தான்..
இந்த நிலமை மாறணும்னா வலிமையான தலைவர் வேணும்..
இலங்கையில் நுழைய அனுமதி மறுப்பு: கனடா எம்.பி. தவிப்பு
கனடா டாலர் மட்டும் தான் மறுப்பில்லாம அனுப்பதிப்பான் ராஜபிச்ச.////////////
உலகத்தில உள்ள யாரையும் ராஜ பக்ஷே அன் கோ கேவலபடுத்தினாலும் எவனுக்கும் சூடு சொரணை வராது .
வருகைக்கு நன்றி, கிரி, சுரேஷ்
/தீப்பெட்டி said...
இந்த நிலமை மாறணும்னா வலிமையான தலைவர் வேணும்../
சரியா சொன்னிங்க. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி
Post a Comment