இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய சிறப்பு தூதர்: இந்தியா பரிசீலனை
கைப் பொன்னுக்கு கண்ணாடி வேறயா. இவரு போய் ஐந்து நட்சத்திர ஓட்டல்ல தங்கி, அருமையாத் தின்னு அவன் எழுதிக் குடுத்ததுக்கும் மேல கூவப் போராரு. ஒரு தமிழன அனுப்புன்னு கேக்க கூட பயமா இருக்கு. அவந்தான் முதல்ல விலை போறான்.
__________________________________________
இலங்கை அரசை விசாரணை செய்து தண்டனை பெற்றுத்தர உலகநாடுகளிடம் வேண்டுகோள்: திராவிடர் கழகம்
முதல்ல உங்க தலைவர வேண்டுங்க. அப்புறம் உலகத் தலைவர்களை நோண்டலாம்.
__________________________________________
தமிழர் நிலை கண்டு பதைபதைத்தேன்: இலங்கை தலைமை நீதிபதி
வெள்ளை வேன் வரப் போகுது. அவதானமா இருங்கோவன்.
__________________________________________
இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு நிவாரண உதவி: ஐ.நா.
போங்கடா. நிர்வாணப் படுத்துற நாயிகிட்ட கொட்டிக் கொடுத்து நிவாரணம் பண்ணிடப் போறான்.
__________________________________________
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி: ஜனாதிபதி உரையில் அறிவிப்பு
2125 கோடி மக்களுக்கு செலவு பண்ணி இருந்தா இந்தப் பிச்சை தேவையா.
__________________________________________
பன்றி காய்ச்சல்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு
காய்ச்சி எடுத்த அமைச்சர சொல்றாங்களா?
__________________________________________
இந்திய அரசியலில் சாதுர்யத்தை உருவாக்கி காட்டியிருப்பவர் முதல்வர் கருணாநிதி: துணை முதல்வர்
இடுப்பு கோவணத்த உருவிட்டு போனா கூட அரஞாண் கயற்றில கை வெச்சுடுவானான்னு சவடால் விடுறவங்கள்ள நாம. மானங்கெட்டு போனதுக்கு பேரு சாதுரியமா?
__________________________________________
போலி அதிகம் உள்ளதால் ரேஷன் அட்டையை வாக்களிக்க பயன்படுத்தவில்லை: நரேஷ்குப்தா
ஆளு போலியா இருந்தா பரவாயில்லை. அட்டைதான் போலியா இருந்துடப்படாது.
__________________________________________
பிரித்தானியாவில் 12 மணித்தியால தொடர் தமிழீழ தேசியக் கொடிப் போராட்டம் வெள்ளை இன பெண்ணால் முன்னெடுப்பு
யோவ். கொளுத்துற வெயில்ல காலைல இருந்து கரன்ஸிமால, 86 வகை வரிசைன்னு நிக்கிற தமிழன தெரியல. சட்டக்கார பொம்பிளை 12 மணி நேரம் கொடிப் போராட்டம் பண்ணத செய்தி போடுறீங்களா?
__________________________________________
இலங்கையின் உள்விவகாரத்தில் அண்டை நாடுகளோ சர்வதேச நாடுகளோ தலையிடத்தேவையில்லையென சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நீ தலையிட்டு ஆயுதம் குடுக்காம இருந்திருந்தா உள்விவகாரமே வந்திருக்காதே.
__________________________________________
10 comments:
இந்திய அரசியலில் சாதுர்யத்தை உருவாக்கி காட்டியிருப்பவர் முதல்வர் கருணாநிதி: துணை முதல்வர்
இடுப்பு கோவணத்த உருவிட்டு போனா கூட அரஞாண் கயற்றில கை வெச்சுடுவானான்னு சவடால் விடுறவங்கள்ள நாம. மானங்கெட்டு போனதுக்கு பேரு சாதுரியமா?
ஏங்க இப்படி???
ஹ ஹ ஹ ஹ
//நீ தலையிட்டு ஆயுதம் குடுக்காம இருந்திருந்தா உள்விவகாரமே வந்திருக்காதே. //
அதான?
/ஏங்க இப்படி???
ஹ ஹ ஹ ஹ/
:))
வாங்க பழமை. சென்னைலையா இருக்கிங்க?
//இலங்கை அரசை விசாரணை செய்து தண்டனை பெற்றுத்தர உலகநாடுகளிடம் வேண்டுகோள்: திராவிடர் கழகம்//
//முதல்ல உங்க தலைவர வேண்டுங்க. அப்புறம் உலகத் தலைவர்களை நோண்டலாம்//
சரியாய் சொன்னிங்க பாலா அண்ணா
//போங்கடா. நிர்வாணப் படுத்துற நாயிகிட்ட கொட்டிக் கொடுத்து நிவாரணம் பண்ணிடப் போறான்.
//
நல்ல கேளுங்க அப்படி
நன்றி நசரேயன், தோழி.
//இலங்கை அரசை விசாரணை செய்து தண்டனை பெற்றுத்தர உலகநாடுகளிடம் வேண்டுகோள்: திராவிடர் கழகம்
முதல்ல உங்க தலைவர வேண்டுங்க. அப்புறம் உலகத் தலைவர்களை நோண்டலாம்//
சரியான பஞ்ச் :)))))
//முதல்ல உங்க தலைவர வேண்டுங்க. அப்புறம் உலகத் தலைவர்களை நோண்டலாம்//
:-)))
நன்றி கிரி, சுப்பு
Post a Comment