Saturday, December 19, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.7

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்பு

இவனுக்கு மனசு வேற இருக்கா அழுந்தறதுக்கு. கூடிய சீக்கிரம் அரைப்பைத்தியமா அலைஞ்சா சரி.
__________________________________________________________________________________________________
கோட்டபாய சிறுநீரகக் கோளாறு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

இதுக்கும் ட்ரெயினிங்க் குடுத்துட்டானா எங்க அரசியல் வாதிங்க. நிஜம்மா புட்டுகிச்சின்னா நின்று கொல்லும் சரி.
__________________________________________________________________________________________________
இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம்: முதலாவது பிரசாரக் கூட்டத்தில் மஹிந்த

பிரபாகரனின் பெற்றோர் எங்கனே எவனும் கேக்க மாட்டங்குறாங்களே?
__________________________________________________________________________________________________
தேர்தலுக்கு ஏழை விவசாயிகள், அன்பளிப்பாக வழங்கும் பணத்தை நான் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வேன்: ராஜபக்ஸே

ஏன். அடிச்சதெல்லாம் புள்ளைங்களுக்கு அழுத்திட்டு, அவன் கோவணத்துல முடிஞ்சத புடுங்கவா பிச்ச.
__________________________________________________________________________________________________
மாபெரும் யுத்த வீரர் தேசத்துரோகியானார்! பொன்சேகா மீது பொரிகிறது ஹெல உறுமய

மொத்த துரோகத்துல இது ஒரு சொத்தைத் துரோகம். நட்டதுதானடா அறுக்க முடியும்.
__________________________________________________________________________________________________
ஜெனரல் சரத் பொன்சேகா தனது சொத்து விபரங்கள் கையளிப்பு

சம்பளத்துல பிடித்தமெல்லாம் போக பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒன்னரைலட்ச ரூபாய் கடன்னு குடுத்தானா? போங்கடே!
__________________________________________________________________________________________________
தமிழ் தேசிய ஐக்கியத்தை சிதைக்காமல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம்: தமிழ் கூட்டமைப்பிற்கு மனோ மீண்டும் பகிரங்க அழைப்பு

எத்தனை பட்டாலும் திருந்த மாட்டீங்களா? அழைச்சிகிட்டே இருங்க தேர்தல் முடிஞ்சப்புறமும்.
__________________________________________________________________________________________________
பிரபாகரனின் மகள் துவாரகாவின் சடலத்தை தாம் கண்டெடுக்கவில்லை  வெளியாகிய படங்கள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது :பிரிகேடியர் உதய நாணயக்கார

ஒரு அறிக்கையாவ‌து உண்மையா விட்டிருக்கியா ப‌ர‌தேசி.
__________________________________________________________________________________________________
மன்மோகனின் ஆலோசனையின் பேரிலேயே சரத் பொன்சேகா பதவி நீக்கப்பட்டார் என்ற செய்திக்கு இந்திய அரசு பதில் வழங்கவில்லை

என்னாத்த‌ச் சொல்லுற‌து. சொல்லிக் குடுக்க‌லையா நாராய‌ணா?
__________________________________________________________________________________________________
மனுத்தாக்கல் செய்யும்போது ஆரவாரம் இல்லை மகிந்த படுகோபம்

குடுத்த‌ காசுக்கு மேல‌ கூவ‌ அவ‌ன் என்ன‌ த‌மிழ‌னா?
__________________________________________________________________________________________________
கருணா – பிள்ளையான் குழு மோதல்

ரைட்டு!
__________________________________________________________________________________________________
தமிழர்கள் குடியமர்த்தலுக்கு உலக வங்கி ரூ.385 கோடி உதவி

ஆஹா. குடுங்க‌ப்பா. தேர்த‌ல் செல‌வுக்கு.
__________________________________________________________________________________________________
தமிழ்நாட்டை பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை: தங்கபாலு

ச‌த்திய‌மூர்த்தி ப‌வ‌ன் ப‌ங்கு போட‌ வேண்டி வ‌ருமே!
__________________________________________________________________________________________________
வந்தவாசியில்: வாக்காளர்களுக்கு லெமன்சாதம்

இடைத்தேர்த‌லுக்கும் பிரியாணி போட்டா க‌ட்டுப்ப‌டியாகுமா?
__________________________________________________________________________________________________
இடைத்தேர்தல்: மதுக்கடைகள் மூடப்பட்டன

ஸ்டாக் தீந்துடுச்சா?
__________________________________________________________________________________________________
நான் தீவிர அரசியலில் இருந்து போய்விடுவேன் என்று யாராவது நினைத்தால் அது தவறு: அத்வானி

ம்கும். தெரியும்டி. இழுத்துகிட்டிருந்தாலும் எல‌க்ஷ‌ன்னு காதில‌ விழுந்தா ப‌ட‌க்குன்னு எழும்பி உக்காருவீங்க‌!
__________________________________________________________________________________________________
விண்வெளி ஆராய்ச்சி நிலைய‌த்தில் வேலை வாங்கித் த‌ருவ‌தாக‌ மோச‌டி, ஜோசிய‌ர் கைது!

ஜோசிய‌ம் விண்வெளி ஆராய்ச்சின்னு நினைச்சி குடுத்துட்டாங்க‌ளா?
__________________________________________________________________________________________________

33 comments:

ஈரோடு கதிர் said...

//ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்பு

கோட்டபாய சிறுநீரகக் கோளாறு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.//

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

க.பாலாசி said...

//பிரபாகரனின் மகள் துவாரகாவின் சடலத்தை தாம் கண்டெடுக்கவில்லை வெளியாகிய படங்கள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது :பிரிகேடியர் உதய நாணயக்கார
ஒரு அறிக்கையாவ‌து உண்மையா விட்டிருக்கியா ப‌ர‌தேசி.//

அதானே...லூசுப்பயலுங்க....

//ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்பு
கோட்டபாய சிறுநீரகக் கோளாறு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி//

என்னது ராஜபக்ஷ செத்துட்டானா.....?????

பூங்குன்றன்.வே said...

//ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்பு

இவனுக்கு மனசு வேற இருக்கா அழுந்தறதுக்கு. கூடிய சீக்கிறம் அரைப்பைத்தியமா அலைஞ்சா சரி.//

இன்னும் பிடிக்கலையா பைத்தியம்?

//கருணா – பிள்ளையான் குழு மோதல்

ரைட்டு!//

அடிச்சிக்கிட்டு சாவுங்கடா எருமைகளா....

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/ இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே//

=))

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/ அதானே...லூசுப்பயலுங்க..../

அவன் நம்மளல்ல அப்புடி நினைச்சிருக்கான்.

// என்னது ராஜபக்ஷ செத்துட்டானா.....?????//

அத்தன சுலபத்துல போயிரப்படாது.

வானம்பாடிகள் said...

பூங்குன்றன்.வே said...

/ இன்னும் பிடிக்கலையா பைத்தியம்?//

பிடிச்சிரும்.

//அடிச்சிக்கிட்டு சாவுங்கடா எருமைகளா....//

=))

Chitra said...

விண்வெளி ஆராய்ச்சி நிலைய‌த்தில் வேலை வாங்கித் த‌ருவ‌தாக‌ மோச‌டி, ஜோசிய‌ர் கைது!

ஜோசிய‌ம் விண்வெளி ஆராய்ச்சின்னு நினைச்சி குடுத்துட்டாங்க‌ளா?
.............இப்படியுமா ஏமாறுவாங்க? என்ன கொடுமை பாமரன் சார், இது?
உங்கள் கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்குங்க.

ஜீவன் said...

//ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்பு

கோட்டபாய சிறுநீரகக் கோளாறு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.//

ஐயோ சீக்கிரம் போய்ட போறானுங்க ...! இவனுங்க இருந்து நொந்து நூலாப்போயி
நாயைவிட கேவலமா செத்து நாறி போய் கெடக்கணும்....! அத நாம பார்க்கணும்..!

பிரபாகர் said...

தன்வினை தன்னைச்சுடும்... அனுபவிச்சித்தானே ஆகனும் செஞ்ச பாவத்தை!

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

//நான் தீவிர அரசியலில் இருந்து போய்விடுவேன் என்று யாராவது நினைத்தால் அது தவறு: அத்வானி

ம்கும். தெரியும்டி. இழுத்துகிட்டிருந்தாலும் எல‌க்ஷ‌ன்னு காதில‌ விழுந்தா ப‌ட‌க்குன்னு எழும்பி உக்காருவீங்க‌!//

நம்ம ஊரு தாத்தாவும் இப்படித்தான்....

ஆரூரன் விசுவநாதன் said...

மிக ரசனையான விமர்சனங்கள். பகடி என்ற வார்த்தையின் பொருளை உங்களிமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்......அனைத்தும் அருமை

யூர்கன் க்ருகியர் said...

Very nice comments sir .

முகிலன் said...

As usual நெத்தியடி

T.V.Radhakrishnan said...

கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கு.

இப்படிக்கு நிஜாம்.., said...

//ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்பு

இவனுக்கு மனசு வேற இருக்கா அழுந்தறதுக்கு. கூடிய சீக்கிரம் அரைப்பைத்தியமா அலைஞ்சா சரி.
__________________________________________________________________________________________________
கோட்டபாய சிறுநீரகக் கோளாறு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

இதுக்கும் ட்ரெயினிங்க் குடுத்துட்டானா எங்க அரசியல் வாதிங்க. நிஜம்மா புட்டுகிச்சின்னா நின்று கொல்லும் சரி.
______________________________________//

அண்ணே! தெய்வம் நின்று கொல்லும்

இப்படிக்கு நிஜாம்.., said...

//தமிழர்கள் குடியமர்த்தலுக்கு உலக வங்கி ரூ.385 கோடி உதவி

ஆஹா. குடுங்க‌ப்பா. தேர்த‌ல் செல‌வுக்கு. //
ரொம்ப நக்கல் தான்

இப்படிக்கு நிஜாம்.., said...

//வந்தவாசியில்: வாக்காளர்களுக்கு லெமன்சாதம்

இடைத்தேர்த‌லுக்கும் பிரியாணி போட்டா க‌ட்டுப்ப‌டியாகுமா?//

பொருளாதார மந்தமோ

இப்படிக்கு நிஜாம்.., said...

//விண்வெளி ஆராய்ச்சி நிலைய‌த்தில் வேலை வாங்கித் த‌ருவ‌தாக‌ மோச‌டி, ஜோசிய‌ர் கைது!

ஜோசிய‌ம் விண்வெளி ஆராய்ச்சின்னு நினைச்சி குடுத்துட்டாங்க‌ளா?//

அண்ணே! கிளி சோசியரா கம்பூட்டர் சோசியரான்னு சொல்லலயே!

ரோஸ்விக் said...

இலங்கையிலேருந்து கொஞ்சம் நல்ல செய்திகளும் இப்ப நமக்கு வருதுண்ணே! :-))

வானம்பாடிகள் said...

Chitra said...

// .............இப்படியுமா ஏமாறுவாங்க? என்ன கொடுமை பாமரன் சார், இது?
உங்கள் கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்குங்க.//

நன்றிங்க சித்ரா

வானம்பாடிகள் said...

ஜீவன் said...

// ஐயோ சீக்கிரம் போய்ட போறானுங்க ...! இவனுங்க இருந்து நொந்து நூலாப்போயி
நாயைவிட கேவலமா செத்து நாறி போய் கெடக்கணும்....! அத நாம பார்க்கணும்..!//

ஆமாங்க. நன்றி ஜீவன்

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

// தன்வினை தன்னைச்சுடும்... அனுபவிச்சித்தானே ஆகனும் செஞ்ச பாவத்தை!

பிரபாகர்.//

சுடணும்.அனுபவிக்கணும். மத்தவங்க படிச்சிக்கவாவது.

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...
/ நம்ம ஊரு தாத்தாவும் இப்படித்தான்....//

எல்லா மட்டையும் ஒரே குட்டைதானே.

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன் said...

//மிக ரசனையான விமர்சனங்கள். பகடி என்ற வார்த்தையின் பொருளை உங்களிமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்......அனைத்தும் அருமை//

ஆஹா. சந்தோசம். நன்றி.

வானம்பாடிகள் said...

யூர்கன் க்ருகியர் said...

/ Very nice comments sir ./

நன்றி யூர்கன். உங்க டச்சைக் காணோமே!

வானம்பாடிகள் said...

முகிலன் said...

/As usual நெத்தியடி/

நன்றி முகிலன்

வானம்பாடிகள் said...

T.V.Radhakrishnan said...

/கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கு./

நன்றி சார்.

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

// அண்ணே! தெய்வம் நின்று கொல்லும்//

ஒரு பக்கம் இப்படி படிக்கிறப்ப எல்லாரும் இப்படி நினைக்கிறோம்னு சந்தோசம். ஆனாலும், நிஜ வாழ்க்கையில் வம்புதும்பு வேண்டாம், யாரையும் கஷ்டப் படுத்த வேணாம்னு நினைக்கிற நம்ம இப்படி நினைக்க வச்சுட்டானேன்னு பயம்மா இருக்குங்க நிஜாம்.

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

// ரொம்ப நக்கல் தான்//

இது வரைக்கும் குடுத்ததெல்லாம் எங்க போச்சு? அதக் கூட கேக்காம குடுக்குறானே.

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ பொருளாதார மந்தமோ//

பின்னாடி இருக்கே பெருஞ்சிலவுன்னு சிக்கனம்தான்

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ அண்ணே! கிளி சோசியரா கம்பூட்டர் சோசியரான்னு சொல்லலயே!//

=)). கட்டம் கட்டுறவருதான்.

வானம்பாடிகள் said...

ரோஸ்விக் said...

//இலங்கையிலேருந்து கொஞ்சம் நல்ல செய்திகளும் இப்ப நமக்கு வருதுண்ணே! :-))//

ஷ்ஷ்ஷ்ஷ். சத்தமா சொல்லாதீங்க. கண்ணு பட்டுடும்

கிரி said...

//இதுக்கும் ட்ரெயினிங்க் குடுத்துட்டானா எங்க அரசியல் வாதிங்க//

ஹி ஹி ஹி

//பிரபாகரனின் பெற்றோர் எங்கனே எவனும் கேக்க மாட்டங்குறாங்களே? //

அதனால தான் கேட்கறாங்களோ ;-)