Wednesday, December 9, 2009

ஞானும், சயன்ஸூம் பின்னே கொறச்சு காமெடியும்!

பிரபலங்களிடம், நீங்கள் நடிக்க வராமலிருந்தால் அல்லது இருக்கும் துறை தவிர்த்து வேறு என்னவாக இருந்திருப்பீர்கள் என்று கேட்பார்கள் அல்லவா? அப்படி என்னை நானே (ம்கும். இல்லாட்டி பி.பி.சில வந்து கேட்டுடுவாய்ங்க)கேட்டுக் கொண்டதன் விளைவு இது.

ஆறு வயதிருக்கலாம். வீட்டில் பம்ப் ஸ்டவ் புழக்கத்திலிருந்த காலம். அப்பாவுக்கு பாத்திரத்தில் கரி பிடிக்கக் கூடாது. தீச்சுவாலை நீல நிறத்தில் எரிய வேண்டும். ஸ்டவ் தங்கம் மாதிரி பள பளவென்றிருக்க வேண்டும். ஞாயிறுகளின் மதியம் இதனுடைய பராமரிப்பில் போகும்.

தேய்த்து, காய வைத்து, அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி, அதன் வாஷர்களுக்கு தேங்காய் எண்ணைக் குளியல் நடத்தி, பம்ப் அடிக்கையில் காற்று கசியாமல் இருக்கிறதா, மண்ணெண்ணெய்த் தாரை ஊசி மாதிரி வருகிறதா என்ற அவரின் பராமரிப்பு சோதனைகளைப் பார்வையிடுவதுதான் பொழுது போக்கு நமக்கு.

டேங்கில் நீர் ஊற்றி, பர்னர் இருக்கும் இடத்தில் கை வைத்து அழுத்தி, பம்ப் அடிக்கும் இடத்தில் வாய் வைத்து ஊதி(ஊதுனதுன்னு அப்புறம் தான் தெரியும்) கையை டக்கென எடுக்கையில் பம் என்ற சத்ததோடு காற்றுப் போகும்.

ஒரு நாள் இந்தச் சோதனை முடிந்து, மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துவிட்டு, எதற்கோ அவர் எழுந்து போக, சுற்றுமுற்றும் பார்த்தபடி, நான் கை வைத்து அடைத்துக் கொண்டு, ஊதாமல் உறிஞ்சியபடி, கை எடுக்க,மண்ணெண்ணெய் புறையேறக் குடித்துவிட்டேன். அடுத்த சில நொடிகளில் மயங்கியபடி (போதை) உளறியபடி, குடித்ததைக் கக்கி கழிப்பறை(ங்கொய்யாலே, தெருவோரக் கால்வாய்க்கு பேரு கழிப்பறை. பந்தாவப் பாரு) போகவேண்டிய உந்துதல்.

விழுந்துவிடாமல் பிடித்துக் கொண்டிருந்த அம்மா, ஒரு அடி, ஒரு ஆச்சா, ஒரு அடி, ஒரு ஆச்சா என்று லயம் பிசகாமல் செய்த கச்சேரியும், அதற்கு அழாமல் கண்கள் சொருக கிக்கிக்கீ என்று சிரித்ததும், அம்பத்தூர் பட் டாக்டரிடம் தூக்கிக் கொண்டுபோய் அழுதபடி கெரசனைக் குடிச்சிட்டான் என்றதும் லேசாக நினைவில் இருக்கிறது.

வாந்தி எடுத்தானா, கக்கூஸ் போச்சா (இது மாதிரி நிறைய பார்த்திருப்பாரோ)என்று கேட்டு, கவனப் பிசகாக இருந்ததற்கு அவர்களைத் திட்டி, ஒன்னும் பயமில்லை, கொஞ்ச நேரம் தூங்குவான் சரியாகிவிடும் என்று சொல்லி ஃபீஸ் கூட வாங்காமல்(பொழைக்கத் தெரியாத டாக்டர்) அனுப்பியதாக பின்னாளில் அடிக்கடி படிக்கப்படும் குற்ற அறிக்கையில் தெரிய வந்தது.

அதன் பிறகு தீவிர கண்காணிப்பின் பயனாக, காற்றழுத்தம் குறித்த மேலதிக ஆராய்ச்சியில் ஈடுபட முடியாமல் ஒரு எதிர்கால ந்யூட்டனின் வாரிசு தடுக்கப்பட்டது   சரித்திரமானது. இதற்கெல்லாம் மனம் தளராமல், ஐந்தாவது படிக்கையில், எங்கோ பொட்டலம் கட்டி வந்த பேப்பரில், பல்பின் மேல் காசை வைத்து ஹோல்டரில் பொருத்தி, ஸ்விட்சைப் போட்டால் மெயின் ஃப்யூஸ் போய்விடும் என்ற தகவலைப் படித்ததில் நிஜ‌மா என்று பார்க்க‌ ஆர்வ‌மாய் இருந்த‌து.

உயரம் காரணமாக, மேசை விளக்கில் சோதனை செய்ய முடிவெடுத்து, ஒரு நான்கு அணாக் காயினை லவட்டி பல்பின் மேல் வைத்து பொருத்த எடுத்த பிரயத்தினத்தில், அது வழுக்கி வழுக்கி விழுந்து வெறுப்பேற்ற, மேசை விளக்கைத் தலை கீழாகப் பிடித்து, ஹோல்டருக்குள் காசை வைத்து பல்ப் மாட்டிவிட்டேன்.

ஸ்விட்சைப் போட்டதும் பல்ப் எரியவில்லை. அதே நேரம் ஃப்யூசும் போகவில்லை. பார்த்ததில் பல்பின் ஒரு பக்கக் கம்பி ஹோல்டருக்குள் பொருந்தாமல் பல்ப் கோணிக் கொண்டிருந்தது. ஸ்விட்சை அணைக்க மறந்து, பல்பைக் கழற்றி பார்த்தால் காசு நட்டுகுத்தாக கம்பிகளுக்கிடயில் இருந்தது.

அதை எடுக்கும் பிர‌ய‌த்த‌னத்தில் இர‌ண்டுவிர‌ல்க‌ளும் ஹோல்ட‌ர் க‌ம்பியை அழுத்த‌, மின்க‌சிவாகி ப‌டார் என்ற‌ ச‌ப்த‌ம் கேட்ட‌துதான் தெரியும். வெட்டிய‌ ம‌ர‌மாய் விழுந்த‌தில் என் ம‌ண்டை த‌ரையில் ப‌ட்ட‌ ச‌ப்த‌மா, ஃப்யூஸ் போன‌ ச‌ப்த‌மா என்ற‌ குழ‌ப்ப‌த்தில் கிட‌க்க‌, க‌ட்டையில‌ போற‌வ‌ன் க‌ர‌ண்டு கூட‌வெல்லாம் விளையாடுறானே என்று அல‌றிய‌ப‌டி அம்மா ஓடி வ‌ந்து தூக்கிச் சாத்தின‌தும் கொஞ்ச‌ம் தெளிந்து கேட்ட‌ முத‌ல் கேள்வி, ஃப்யூஸ் போச்சா என்று! இனிமே ஸ்விட்ச் ப‌க்க‌ம் போனியோ கையை உடைத்து விடுவேன் என்ற‌ நிர‌ந்த‌ர‌த் த‌டாவினால் என்னுள் இருந்த‌ ஜூல்சும் எடிச‌னும் காணாம‌ல் போனார்க‌ள்.

ஒன்பதாவது படிக்கையில்,வீட்டில் கோபால் பல்பொடிதான் பாவிப்பது என்ற பாலிசி டெசிஷன் காரணமாக, குப்பைப் பொறுக்கும் ஆட்கள் மாதிரி வீதியோரம் நோட்டமிட்டபடி போவதும் வருவதுமாய் இருந்து ஒரு நாள், இதற்கு மேலும் பிதுக்க முடியாது என்ற நிலையில் கிடைத்த ஒரு பற்பசை பொக்கிஷத்தைக் கண்டெடுத்தேன்.

வீட்டுக்கு வந்து, அந்தச் சுருட்டலை நீவி விட்டு மூடியபடி, சுவாமி விளக்கில் சூடு காட்ட, உள்ளிருந்த காற்று விரிவடைந்து முழு பற்பசை ட்யூப் மாதிரி விரிவடைந்தது. அதற்குள் பாதிக்குக் குறைவாய் நீர் நிரப்பி, அம்மாவிடம் கெஞ்சி அரைக்கரண்டி மண்ணெண்ணெய் வாங்கி, இங்க் போத்தலில் ஊற்றி, மூடியில் ஓட்டை போட்டு காடா விளக்கு செய்துக் கொண்டேன். ஒரு முழு செங்கலை நெடுக்காக நிறுத்தி, ஒரு அரைச் செங்கலை அதன் மேல் நிறுத்தினேன்.

பச்சைத் தென்னை ஓலை ஒன்று கிழித்து, அதன் ஈர்க்கில் மூன்றங்குலத்துக்கு உடைத்து, நடுவில் இரண்டாக உடைத்து 'வி' வடிவத்தில் இரண்டு கற்களுக்கு இடையில் சொருகியாயிற்று. அந்த 'வி'க்கு இடையே பதமாக பற்பசை ட்யூபை தொங்கவிட்டேன்.(அல்ல்லோ! ராக்கெட் லாஞ்சிங் பேடுங்க). இனி, காடா விளக்கைப் பொருத்தி ட்யூபின் கீழ் வைத்தால் சரி.

அம்மா, வெண்ணை, அக்கம் பக்கத்து வாண்டுகள் முன்னிலையில் வான்வெளி விஞ்ஞானி வானம்பாடியின் சோதனையோட்டம் தயார். காற்றில் சுவாலை ஆடுவதால் சூடு பிடிக்கத் தாமதம் என்று சிறு சிறு சீரமைப்புகள் எல்லாம் செய்தும் நேரம்தான் ஓடிக்கொண்டே இருந்ததே தவிர ராக்கெட் கிளம்பக் காணோம். ஒருவரையொருவர் பார்த்து நக்கலாய்ச் சிரித்ததும், இது தேறாது என்று கூட்டம் கலையப் பார்த்ததும் மானப் பிரச்சனையாகிவிட்டது.

இருங்கோ இருங்கோ இதோ கிளம்பிடும் என்று விளக்கை நகர்த்தி நகர்த்தி சுவாலையக் காட்டியபடி, ஒரு கண் ட்யூபின் கீழ் மடிப்பு நீராவியின் அழுத்தத்தில் பிரிவைதைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தவாறும், மறுகண்ணில் ஒரு பார்வையாளரைக் கூட என் சாதனையைக் காணாமல் போகவிடுவதில்லை என்ற உறுதியுடனும் இருந்தபடி ஏமாந்த ஒரு தருணத்தில், கொதிக்கும் நீராவியையும், நீரையும் என் கையில் கொட்டியபடி ராக்கெட் கிளம்பியேவிட்டது.

பயத்தில் விளக்கைக் கீழேபோட்டதில் மண்ணெண்ணெய் பற்றிக்கொண்டு தன்பங்குக்கும் கையைச் சுட்டதில், ஒரு பாட்டில் இங்க் ஊற்றியும் எரிய எரிய கொப்புளமும், சாப்பிடமுடியாமல் பட்ட அவஸ்தைகளும் மீண்டும் ஒருமுறை என் அறிவியல் ஆர்வத்துக்கு தடையானதில் அடுத்தொரு அப்துல் கலாமும் அட்ரஸில்லாமல் போனார்.

துபாயிலிருந்து வந்த கடமை வீரர். வந்தாரு. தமிழ்மணத்தில ரெண்டாவது மைனஸ் போட்டாரு போயீட்டாரு. எடுத்துக் கொண்ட நேரம் 3 நிமிடத்துக்கும் குறைவு.
(டிஸ்கி: இதுக்கே கண்ணக் கட்டுதேன்னு அலப்பறை பண்ணுவீங்கன்னு தெரியும். போணியாச்சின்னா மீதி. இல்லன்னா விஞ்ஞானி உருவாகாம தடுத்தது கூட பெரிசில்ல அந்த அவலத்தைக் கேக்கக்கூட மனுசாளில்லையேன்னு போய்க்கிட்டே இருப்போம்ல)

117 comments:

ஈரோடு கதிர் said...

யப்பே.... ஆறுவயசிலேயெ சரக்கடிச்ச்வரா நீங்க....

ஈரோடு கதிர் said...

//அம்மா, வெண்ணை, அக்கம் பக்கத்து வாண்டுகள் முன்னிலையில்//

நல்லவேளை எங்க வெண்ணை கை தப்பியது

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

//யப்பே.... ஆறுவயசிலேயெ சரக்கடிச்ச்வரா நீங்க....//

மண்ணெண்ணெய் சரக்கு ஸ்டாக் இல்லைன்னு போர்ட் வெச்சிருந்தா அந்த சரக்குன்னு அர்த்தமா=))

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...


//நல்லவேளை எங்க வெண்ணை கை தப்பியது//

=))

ஈரோடு கதிர் said...

ஆமாம்னே.... சென்ட்ரல் கிட்டக்கத்தேனே இருக்கீங்க...

இந்த ட்ரெய்னுக்கு மேல் பெரிசா ரெண்டு கம்பி போகுதே..

அது ஃப்யூஸ் போறத பத்தி ஏதாவது ஆராய்ச்சி பண்ற ஐடியா இருக்கா

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
மண்ணெண்ணெய் சரக்கு ஸ்டாக் இல்லைன்னு போர்ட் வெச்சிருந்தா அந்த சரக்குன்னு அர்த்தமா=))//

இன்னிக்குத்தான் பயபுள்ளைக மப்பு ஏற எததையோ அடிக்குதே...

அப்பிடி சீமெண்னை புண்ணியத்தில போதை ஏத்திக்கிட்டு... சமாளிப்ப பாரேன்

ஈரோடு கதிர் said...

ஆனாலும்...

ராக்கெட் லாஞ்சிக் செம கலக்கல்னே

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

//ஆமாம்னே.... சென்ட்ரல் கிட்டக்கத்தேனே இருக்கீங்க...

இந்த ட்ரெய்னுக்கு மேல் பெரிசா ரெண்டு கம்பி போகுதே..

அது ஃப்யூஸ் போறத பத்தி ஏதாவது ஆராய்ச்சி பண்ற ஐடியா இருக்கா//

அடியாத்தீ. நம்ம ஃப்யூசுக்கு ஆப்பு வைக்கிறாங்கப்பூ.அவ்வ்வ்வ்

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/இன்னிக்குத்தான் பயபுள்ளைக மப்பு ஏற எததையோ அடிக்குதே...

அப்பிடி சீமெண்னை புண்ணியத்தில போதை ஏத்திக்கிட்டு... சமாளிப்ப பாரேன்//

அடப்பாவி மக்கா. எம்பிட்ட எனக்கே போடுறாங்க.

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

//ஆனாலும்...

ராக்கெட் லாஞ்சிக் செம கலக்கல்னே//

கலங்குனது என்கையி கையி..

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
ஆனாலும்...
ராக்கெட் லாஞ்சிக் செம கலக்கல்னே//

என்ன சரண்டர் ஆயிட்டீங்க?...

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
ஆனாலும்...
ராக்கெட் லாஞ்சிக் செம கலக்கல்னே//

என்ன சரண்டர் ஆயிட்டீங்க?...

ஏன் ஏன். பாராட்டக் கூடாது. அது வேற ஒன்னுமில்ல பாலாசி. டிஸ்கி படிச்சிட்டு மிச்சம் மீதி இருக்கிறதும் கேட்டுகிட்டா மொத்தமா வாரலாம்ல அதான்=))

PPattian : புபட்டியன் said...

சூப்பர் பாஸ்.. :)))

அப்ப மட்டும் இதெல்லாம் சரியா நடந்திருந்தா இந்தியாவுக்கு இன்னொரு நோபல் பார்சல்ல்ல்ல் ஆயிருக்கும்ல.. :)

க.பாலாசி said...

//ஒரு எதிர்கால ந்யூட்டனின் வாரிசு தடுக்கப்பட்டது சரித்திரமானது//

//இருந்த‌ ஜூல்சும் எடிச‌னும் காணாம‌ல் போனார்க‌ள்.//

//அடுத்தொரு அப்துல் கலாமும் அட்ரஸில்லாமல் போனார். //

இதெல்லாம் வேறயா?

//அணாக் காயினை லவட்டி//

அதையுமா?

நல்லவேளை நாடு பொழச்சது...

க.பாலாசி said...

//PPattian : புபட்டியன் said...
சூப்பர் பாஸ்.. :)))
அப்ப மட்டும் இதெல்லாம் சரியா நடந்திருந்தா இந்தியாவுக்கு இன்னொரு நோபல் பார்சல்ல்ல்ல் ஆயிருக்கும்ல.. :)//

யாருங்க அது....எடையில பூந்து ஆட்டைய கலைக்கிறது...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

விதி வலியது - எத்தனை அறிவியல் அறிஞர்கள் உருவாவதைத் தடுத்து - இரயில்வே துறைக்கு இவரது சேவை தேவை என வழி நடத்திச்சென்றது - வாழ்க விதி

நல்வாழ்த்துகள் பாலா

வானம்பாடிகள் said...

PPattian : புபட்டியன் said...

//சூப்பர் பாஸ்.. :)))

அப்ப மட்டும் இதெல்லாம் சரியா நடந்திருந்தா இந்தியாவுக்கு இன்னொரு நோபல் பார்சல்ல்ல்ல் ஆயிருக்கும்ல.. :)//

அதான. வாங்க பாஸ். முதல் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

//ஒரு எதிர்கால ந்யூட்டனின் வாரிசு தடுக்கப்பட்டது சரித்திரமானது//

//இருந்த‌ ஜூல்சும் எடிச‌னும் காணாம‌ல் போனார்க‌ள்.//

//அடுத்தொரு அப்துல் கலாமும் அட்ரஸில்லாமல் போனார். //

இதெல்லாம் வேறயா?

//அணாக் காயினை லவட்டி//

அதையுமா?

நல்லவேளை நாடு பொழச்சது...//

ஏன்? இதுக்கென்னா? இன்னும் இருக்கே. அதையுமாவா? வேற எதை லவட்டினேன்.=))

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

// யாருங்க அது....எடையில பூந்து ஆட்டைய கலைக்கிறது...//

அமைதி அமைதி! எல்லாரும் மொத்தலாம். அவசரமே இல்லை=))

வானம்பாடிகள் said...

cheena (சீனா) said...

//அன்பின் பாலா

விதி வலியது - எத்தனை அறிவியல் அறிஞர்கள் உருவாவதைத் தடுத்து - இரயில்வே துறைக்கு இவரது சேவை தேவை என வழி நடத்திச்சென்றது - வாழ்க விதி

நல்வாழ்த்துகள் பாலா//

=)). வாங்க சீனா. நன்றி.

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. செம கலக்கல் சார்.

///(டிஸ்கி: இதுக்கே கண்ணக் கட்டுதேன்னு அலப்பறை பண்ணுவீங்கன்னு தெரியும். போணியாச்சின்னா மீதி. இல்லன்னா விஞ்ஞானி உருவாகாம தடுத்தது கூட பெரிசில்ல அந்த அவலத்தைக் கேக்கக்கூட மனுசாளில்லையேன்னு போய்க்கிட்டே இருப்போம்ல)///

கண்டிப்பா எழுதுங்க சார். இத பிடிக்கலேன்னு சொல்ல யாராலையும் முடியாது. நின்னு நிதானமா அடிச்சு ஆடுங்க சார்.

ஈரோடு கதிர் said...

//cheena (சீனா) Says:
இரயில்வே துறைக்கு இவரது சேவை தேவை //

அய்ய்யோ.... அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ ஒலகம் எப்பூடியெல்லாம் நம்புது இவர

ஈரோடு கதிர் said...

// S.A. நவாஸுதீன் said...
கண்டிப்பா எழுதுங்க சார். //

அண்ணே...

அவரு எழுதுவாருங்கண்ணே...

இன்னும் நிறைய சரக்கு (...அட சீமெண்ணை இல்லீங்க) வச்சிருக்காரு

T.V.Radhakrishnan said...

ha..ha..haa..

நாடோடி இலக்கியன் said...

அருமை அருமை.ரசனையான நடை.

ரசித்துச் சிரித்தேன்.

மணிப்பயல் said...

போண்டாக்குள்ள எப்புடி கிழங்கு வெச்சி சுட்டாங்கன்னு நான் பதிநாலு வயசுக்கு அப்புறம்தாண்ணே தெரிஞ்சிகிட்டேன். ஆராய்ச்சி பண்ற அளவுக்கு ரிஸ்க் எடுத்தது இல்ல.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

`மண்ணெண்ணெய் குடிச்ச அனுபவம் எனக்கும் இருக்கு.....அது டின்னிலிருந்து ஒரு ட்யூப் வைத்து உறிஞ்சி சரியாக வாயில் படாமல், இன்னொரு காலி டின்னில் மண்ணெண்ணெய் வந்து விழ வைக்கும் ஒரு வித்தை. சரியான நேரத்தில் வாயை எடுக்காமல், ரெண்டு வாய் எண்ணெய் உள்ளே போய்விட, ரொம்ப கஷ்டப் பட்டேன்.
வாந்தி வந்து எண்ணெய் வெளியே வந்துவிட்டால் ஒரு பத்து பைசா போடுவதாக தெருக்கோடி அனுமாருக்கு கூட வேண்டிக்கொண்டேன்.
ஆனால், நாம் பார்க்கும் எந்த ஒரு சாகசமும் நாமும் செய்ய வேண்டும் என்ற உந்தல் சிறு வயசில் இருக்கும் அளவுக்கு வயசானபின் இல்லாது போவது உண்மைதான்.

ஸ்ரீ said...

சரி சேட்டை பண்ணிருக்கீங்க.
:-))))))))

வானம்பாடிகள் said...

S.A. நவாஸுதீன் said...

/ ஹா ஹா ஹா. செம கலக்கல் சார்./

நன்றி நவாஸ்

//கண்டிப்பா எழுதுங்க சார். இத பிடிக்கலேன்னு சொல்ல யாராலையும் முடியாது. நின்னு நிதானமா அடிச்சு ஆடுங்க சார்.//

ஹி ஹி. விட்றுவமா.

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

//cheena (சீனா) Says:
இரயில்வே துறைக்கு இவரது சேவை தேவை //

அய்ய்யோ.... அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ ஒலகம் எப்பூடியெல்லாம் நம்புது இவர

ஏன் ஏன் இந்த கொல வெறி. =))

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/ அண்ணே...

அவரு எழுதுவாருங்கண்ணே...

இன்னும் நிறைய சரக்கு (...அட சீமெண்ணை இல்லீங்க) வச்சிருக்காரு//

நானேதான் வாய குடுத்து மாட்டிக்கிட்டனா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

வானம்பாடிகள் said...

T.V.Radhakrishnan said...

// ha..ha..haa..//

=))

வானம்பாடிகள் said...

நாடோடி இலக்கியன் said...

//அருமை அருமை.ரசனையான நடை.

ரசித்துச் சிரித்தேன்.//

நன்றிங்க முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்

வால்பையன் said...

ஒன்னும் பிரச்சனையில்லை, இப்ப நினைச்சா கூட நீங்க இன்னோரு ஜி.டி.நாயுடுவா வரலாம்!

பூங்குன்றன்.வே said...

//என் சாதனையைக் காணாமல் போகவிடுவதில்லை என்ற உறுதியுடனும் இருந்தபடி ஏமாந்த ஒரு தருணத்தில், கொதிக்கும் நீராவியையும், நீரையும் என் கையில் கொட்டியபடி ராக்கெட் கிளம்பியேவிட்டது.//

கூட உங்க கனவும் பறந்து போனதோ?

//மீண்டும் ஒருமுறை என் அறிவியல் ஆர்வத்துக்கு தடையானதில் அடுத்தொரு அப்துல் கலாமும் அட்ரஸில்லாமல் போனார். //

ஆமாஇல்ல.

வானம்பாடிகள் said...

மணிப்பயல் said...

//போண்டாக்குள்ள எப்புடி கிழங்கு வெச்சி சுட்டாங்கன்னு நான் பதிநாலு வயசுக்கு அப்புறம்தாண்ணே தெரிஞ்சிகிட்டேன். ஆராய்ச்சி பண்ற அளவுக்கு ரிஸ்க் எடுத்தது இல்ல.//

=)).ஆஹா

வானம்பாடிகள் said...

வால்பையன் said...

// ஒன்னும் பிரச்சனையில்லை, இப்ப நினைச்சா கூட நீங்க இன்னோரு ஜி.டி.நாயுடுவா வரலாம்!//

ம்கும். அவரு பட்ட பாட்டை நானும்படணும்.

வானம்பாடிகள் said...

பூங்குன்றன்.வே said...

/ கூட உங்க கனவும் பறந்து போனதோ?//

அப்போதைய கனவு டூத்பேஸ்ட் ட்யூப் ராக்கட்தானே. ஆமாம். :)

/ ஆமாஇல்ல.//

ஆமாவா இல்லையா

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)))

KALYANARAMAN RAGHAVAN said...

//அம்பத்தூர் பட் டாக்டரிடம் தூக்கிக் கொண்டுபோய்//
அடடே நீங்க அம்பத்தூரில்இருந்தீங்களா ? நானும் 1979-லிருந்து அம்பத்தூர் வாசி தானுங்கோ!

//ஃபீஸ் கூட வாங்காமல்(பொழைக்கத் தெரியாத டாக்டர்//
யார் சொன்னது இப்போ நல்லாவே பொழைக்க தெரிஞ்சுகிட்டார். இன்னுமொரு பில்டிங்கும் கட்டிட்டார்.

நாட்டுக்கு ஒரு நல்ல சயன்டிஸ்ட் கிடைக்காமல் போய்விட்டதே! அதை நினைச்சாத்தாங்க வருத்தமா இருக்கு.

ரேகா ராகவன்.

ஜெரி ஈசானந்தா. said...

ரசித்தேன்

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே!சின்ன வயசிலேயே மண் அன்னையைக் குடித்ததால் மண்ணின் மீது இவ்வளவு பற்று உங்களுக்கு

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ண! நிங்களுக்கு ஓப்போசிட் ஓட்டு போடற அந்ந 2 ஆளும் பின்ன கானாம்.. எவட போயி???

இப்படிக்கு நிஜாம்.., said...

புது லோகோ எப்டின்னே இருக்கு???

கலகலப்ரியா said...

கடந்த கால விஞ்ஞானி வானம்பாடி வாழ்க..! விஞ்ஞானி ஆயிருந்தா... ப்ளாக் எழுதறச்சே தம்பட்டம் அடிச்சு... பந்தா மேல பந்தா பண்ணி... அடக்கி வாசிச்சு...ஆயிரத்தெட்டு வேல பண்ணி இருக்கலாம்..! நாம உங்கள தொடர்ந்திருக்க மாட்டோம்..=)).. ஜஸ்ட்டு மிஸ்ட்டு...! விதி வலியது..!

வானம்பாடிகள் said...

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...

/ -:)))/

=))

வானம்பாடிகள் said...

KALYANARAMAN RAGHAVAN said...

// அடடே நீங்க அம்பத்தூரில்இருந்தீங்களா ? நானும் 1979-லிருந்து அம்பத்தூர் வாசி தானுங்கோ!//

ஆமாம் சார். 57லிருந்து 65 வரை.

/யார் சொன்னது இப்போ நல்லாவே பொழைக்க தெரிஞ்சுகிட்டார். இன்னுமொரு பில்டிங்கும் கட்டிட்டார்./

இது 63 ல சார். பெரியவர். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்ல கிளினிக்.=))

/நாட்டுக்கு ஒரு நல்ல சயன்டிஸ்ட் கிடைக்காமல் போய்விட்டதே! அதை நினைச்சாத்தாங்க வருத்தமா இருக்கு.
/

ஆமாம்ல..அவ்வ்வ்வ்வ்வ்

நசரேயன் said...

நாடு தப்பிச்சிரிச்சின்ண்ணே

வானம்பாடிகள் said...

ஜெரி ஈசானந்தா. said...

/ரசித்தேன்/

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே!சின்ன வயசிலேயே மண் அன்னையைக் குடித்ததால் மண்ணின் மீது இவ்வளவு பற்று உங்களுக்கு/

இது நல்லாருக்குண்ணே.

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ண! நிங்களுக்கு ஓப்போசிட் ஓட்டு போடற அந்ந 2 ஆளும் பின்ன கானாம்.. எவட போயி???/

=)) ஓராளு வந்நல்லோ.

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

//புது லோகோ எப்டின்னே இருக்கு???//

சூப்பர்.

பிரியமுடன்...வசந்த் said...

:)))

ட்ளப்ம்சே

முகிலன் said...

உங்க சின்ன வயசு சாதனைகளப் படிச்சா நல்ல வேளை நாடு தப்பிச்சிருச்சின்னு தோணுனாக் கூட, நீங்கப் பாட்டுக்கு எதோ விஞ்ஞானியாப்போயி எதாவது மிசைலக் கண்டு பிடிச்சிருந்து அதை நம்ம சொந்தக்காரவுக மேலையேப் போடுறதப் பாத்து வருதப்படுறதுக்கு இது தேவலாம்னு இருக்கு.

புலவன் புலிகேசி said...

ஆமாம் இந்த ஆராய்ச்சில்லாம் அந்த மூனோட (பம்ப் ஸ்டவ், ஃப்யூஸ், ராக்கெட்) முடிஞ்சுதா இல்ல தொடருச்சா???

நீங்க ஒரு வில்லேஜ் விஞானி பாஸ்...

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

//கடந்த கால விஞ்ஞானி வானம்பாடி வாழ்க..! விஞ்ஞானி ஆயிருந்தா... ப்ளாக் எழுதறச்சே தம்பட்டம் அடிச்சு... பந்தா மேல பந்தா பண்ணி... அடக்கி வாசிச்சு...ஆயிரத்தெட்டு வேல பண்ணி இருக்கலாம்..! நாம உங்கள தொடர்ந்திருக்க மாட்டோம்..=)).. ஜஸ்ட்டு மிஸ்ட்டு...! விதி வலியது..!//

ஆஹா. இவ்வளவு வில்லங்கமிருக்கோ விஞ்ஞானில. அப்ப நல்லாத்தான் போய்க்கிருக்கு. அப்பச்செரி=))..

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

//நாடு தப்பிச்சிரிச்சின்ண்ணே//

இல்லண்ணே. நாந்தேன் தப்பிச்சேன்=))

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/ :)))

ட்ளப்ம்சே//

ங்கொய்யாலே. பின்னூட்டத்திலயும் ஆரம்பிச்சிட்டியா:)). உங்கதைய எழுது ஓய்.

வானம்பாடிகள் said...

முகிலன் said...

// உங்க சின்ன வயசு சாதனைகளப் படிச்சா நல்ல வேளை நாடு தப்பிச்சிருச்சின்னு தோணுனாக் கூட, நீங்கப் பாட்டுக்கு எதோ விஞ்ஞானியாப்போயி எதாவது மிசைலக் கண்டு பிடிச்சிருந்து அதை நம்ம சொந்தக்காரவுக மேலையேப் போடுறதப் பாத்து வருதப்படுறதுக்கு இது தேவலாம்னு இருக்கு.//

ரெண்டும் ஒன்னுதானே=))

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...

//ஆமாம் இந்த ஆராய்ச்சில்லாம் அந்த மூனோட (பம்ப் ஸ்டவ், ஃப்யூஸ், ராக்கெட்) முடிஞ்சுதா இல்ல தொடருச்சா???

நீங்க ஒரு வில்லேஜ் விஞானி பாஸ்...//

அதான் தொடரும் போட்டிருக்கேன்ல.=))

இராகவன் நைஜிரியா said...

// பிரபலங்களிடம், நீங்கள் நடிக்க வராமலிருந்தால் அல்லது இருக்கும் துறை தவிர்த்து வேறு என்னவாக இருந்திருப்பீர்கள் என்று கேட்பார்கள் அல்லவா? //

அண்ணே சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்க பிரபலம்தாங்க..

இராகவன் நைஜிரியா said...

// ஒரு அடி, ஒரு ஆச்சா, ஒரு அடி, ஒரு ஆச்சா என்று லயம் பிசகாமல் செய்த கச்சேரியும், //

தனி ஆவர்த்தனம் போலிருக்கு

இராகவன் நைஜிரியா said...

// அதன் பிறகு தீவிர கண்காணிப்பின் பயனாக, காற்றழுத்தம் குறித்த மேலதிக ஆராய்ச்சியில் ஈடுபட முடியாமல் ஒரு எதிர்கால ந்யூட்டனின் வாரிசு தடுக்கப்பட்டது சரித்திரமானது. //

மிகப் பெரிய விஞ்சானி ஆக வேண்டியவரை இப்படி தடுத்துட்டாங்களேன்னு நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்குங்க.

இராகவன் நைஜிரியா said...

// இனிமே ஸ்விட்ச் ப‌க்க‌ம் போனியோ கையை உடைத்து விடுவேன் என்ற‌ நிர‌ந்த‌ர‌த் த‌டாவினால் என்னுள் இருந்த‌ ஜூல்சும் எடிச‌னும் காணாம‌ல் போனார்க‌ள். //

சூப்பர் தடாதாங்க போங்க..

இராகவன் நைஜிரியா said...

ராக்கெட் லாஞ்ச் ஐடியா ரொம்ப நல்லாயிருக்கண்ணே..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...


/ அண்ணே சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்க பிரபலம்தாங்க..//

ஆஹா. வாங்கண்ணே.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/தனி ஆவர்த்தனம் போலிருக்கு//

ஓஹோ. கூட்டா சேர்ந்து கும்மணுமோ=))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ மிகப் பெரிய விஞ்சானி ஆக வேண்டியவரை இப்படி தடுத்துட்டாங்களேன்னு நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்குங்க.//

இல்ல.அவ்வ்வ். அப்படி நினைச்ச ஒரே ஜீவன் தமிழ்மணத்தில மைனஸ் போட்டு போயிருக்கு.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...


/ சூப்பர் தடாதாங்க போங்க../

=))

இராகவன் நைஜிரியா said...

// ஈரோடு கதிர் said...
//அம்மா, வெண்ணை, அக்கம் பக்கத்து வாண்டுகள் முன்னிலையில்//

நல்லவேளை எங்க வெண்ணை கை தப்பியது //

எங்க அண்ணன் கை போச்சேன்னு இங்க நாங்க கவலைப் பட்டு கிட்டு இருக்கோம்.. இவரு என்னடான்னா. அவங்க வெண்ணை கை தப்பிச்சதாம்... கொடுமையடா சாமி..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ராக்கெட் லாஞ்ச் ஐடியா ரொம்ப நல்லாயிருக்கண்ணே..//

பாவம். இந்தக்கால பசங்களுக்கு இதுவும் பண்ண முடியாது. பிளாஸ்டிக் ட்யூப்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ எங்க அண்ணன் கை போச்சேன்னு இங்க நாங்க கவலைப் பட்டு கிட்டு இருக்கோம்.. இவரு என்னடான்னா. அவங்க வெண்ணை கை தப்பிச்சதாம்... கொடுமையடா சாமி..//

ஒரு வெறியாத்தான் இருக்காரு கதிர்.

இராகவன் நைஜிரியா said...

// ஈரோடு கதிர் said...
ஆமாம்னே.... சென்ட்ரல் கிட்டக்கத்தேனே இருக்கீங்க...

இந்த ட்ரெய்னுக்கு மேல் பெரிசா ரெண்டு கம்பி போகுதே..

அது ஃப்யூஸ் போறத பத்தி ஏதாவது ஆராய்ச்சி பண்ற ஐடியா இருக்கா //

அண்ணே கதிர் அண்ணே.. நீங்க வெண்ணைக் கட்சிதான் .. நாங்க ஒத்துகிறோம்.. அதுக்காக இப்படியா?

இராகவன் நைஜிரியா said...

// PPattian : புபட்டியன் said...
சூப்பர் பாஸ்.. :)))

அப்ப மட்டும் இதெல்லாம் சரியா நடந்திருந்தா இந்தியாவுக்கு இன்னொரு நோபல் பார்சல்ல்ல்ல் ஆயிருக்கும்ல.. :) //

ஆமாம் அண்ணன் சிதம்பரம் அண்ணாமலைப் பழகத்தில் படிச்சாருன்னு யாராவது சொல்லிகிட்டு வேறு இருப்பாங்க

இராகவன் நைஜிரியா said...

மீ த 75

இராகவன் நைஜிரியா said...

// S.A. நவாஸுதீன் said...

கண்டிப்பா எழுதுங்க சார். இத பிடிக்கலேன்னு சொல்ல யாராலையும் முடியாது. நின்னு நிதானமா அடிச்சு ஆடுங்க சார். //

நிதானமா அடிச்சு ஆடுங்க... இனிமே தடை போட யாரும் கிடையாது

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
ஈரோடு கதிர் said...

//cheena (சீனா) Says:
இரயில்வே துறைக்கு இவரது சேவை தேவை //

அய்ய்யோ.... அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ ஒலகம் எப்பூடியெல்லாம் நம்புது இவர

ஏன் ஏன் இந்த கொல வெறி. =)) //

அண்ணே வெண்ணை சங்கத் தலைவர் ஒரு முடிவோடத்தான் இருக்காருன்னு நினைக்கின்றேன்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ அண்ணே கதிர் அண்ணே.. நீங்க வெண்ணைக் கட்சிதான் .. நாங்க ஒத்துகிறோம்.. அதுக்காக இப்படியா?//

பார்த்தீங்களாண்ணே. =))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

// PPattian : புபட்டியன் said...
சூப்பர் பாஸ்.. :)))


ஆமாம் அண்ணன் சிதம்பரம் அண்ணாமலைப் பழகத்தில் படிச்சாருன்னு யாராவது சொல்லிகிட்டு வேறு இருப்பாங்க//

அதான்! வடை போச்சே..அவ்வ்வ்

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

// S.A. நவாஸுதீன் said...

கண்டிப்பா எழுதுங்க சார். இத பிடிக்கலேன்னு சொல்ல யாராலையும் முடியாது. நின்னு நிதானமா அடிச்சு ஆடுங்க சார். //

நிதானமா அடிச்சு ஆடுங்க... இனிமே தடை போட யாரும் கிடையாது//

ஆஹா. இப்போ தடை போட்டாலும் உடைப்போம்ல.=))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...


//அண்ணே வெண்ணை சங்கத் தலைவர் ஒரு முடிவோடத்தான் இருக்காருன்னு நினைக்கின்றேன்.//

இட்டிலி ஆவிக்கு உருகினதில இருந்தே ஒரு மார்க்கமாத்தான் இருக்காரு. =))

அப்பாவி முரு said...

அய்யோ, வடை கூடையோட போச்சே....

ஆமா நைனா, நீங்க சிரிக்கிரப்ப எல்லாம் " =)) " அப்பிடி போடுறீங்களே,

நீங்க என்ன ஹிட்லர் மீசையா வச்சுருக்கீங்க?

அப்பாவி முரு said...

பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னுட்டம் போட்டதுக்காக கொவிச்சுக்கிநீங்க்களா நைனா?


கோவிச்சா, கொவிச்சுகங்க்க.

இக்கி, இக்கி

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல விஞ்ஞானியை உலகம் இழந்தது வருத்தம் தரக் கூடிய ஒன்றுதான்.


ம்ம்....என்ன பன்னறது பாலாண்ணே...

அப்படி ஆகியிருந்தா எப்படி இப்படியெல்லாம் பதிவெழுதறது...

ஹி.....ஹி.....

நினைவுகளுடன் -நிகே- said...

நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.

வானம்பாடிகள் said...

அப்பாவி முரு said...

//அய்யோ, வடை கூடையோட போச்சே....

ஆமா நைனா, நீங்க சிரிக்கிரப்ப எல்லாம் " =)) " அப்பிடி போடுறீங்களே,

நீங்க என்ன ஹிட்லர் மீசையா வச்சுருக்கீங்க?//

இஞ்சார்ரா என் நேரத்த. இவிங்கல்லாம் யூத்து யூத்துன்னு சொல்லிக்கிறதோட சரி. இவிங்களுக்கு நாம சொல்லித் தரவேண்டியிருக்கு. =))-->இது யாஹூ சிரிப்பான். விழுந்து விழுந்து சிரிக்கிறேன்=)) சரியா

வானம்பாடிகள் said...

அப்பாவி முரு said...

//பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னுட்டம் போட்டதுக்காக கொவிச்சுக்கிநீங்க்களா நைனா?


கோவிச்சா, கொவிச்சுகங்க்க.

இக்கி, இக்கி//

தோடா. இதுக்கெல்லாம் கோவிச்சிகிட்டு கவலைப்பட்டா நம்ம யூத்து போய்டும்னு தெரியும்ல..அசர மாட்டம்டியோ!=))

வானம்பாடிகள் said...

நினைவுகளுடன் -நிகே- said...

//நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.//

முதல் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன் said...

// நல்ல விஞ்ஞானியை உலகம் இழந்தது வருத்தம் தரக் கூடிய ஒன்றுதான்.


ம்ம்....என்ன பன்னறது பாலாண்ணே...

அப்படி ஆகியிருந்தா எப்படி இப்படியெல்லாம் பதிவெழுதறது...

ஹி.....ஹி.....//

வாங்க ஆரூரன். ம்கும். நானும் பாக்குறேன். ஒரு விஞ்ஞானியாவது வந்து பார்த்து நீங்க விஞ்ஞானியாகம இப்படி பதிவரானது வருத்தம்தான்னு சொல்லுவாங்களான்னு. நம்ம ரேஞ்சுக்கு ராமர் பிள்ளை கூட கண்டுக்க மாட்டங்குறாரு.

எறும்பு said...

//துபாயிலிருந்து வந்த கடமை வீரர். வந்தாரு. தமிழ்மணத்தில ரெண்டாவது மைனஸ் போட்டாரு போயீட்டாரு. எடுத்துக் கொண்ட நேரம் 3 நிமிடத்துக்கும் குறைவு.///

கடமை தானே ரெம்ப முக்கியம்

வானம்பாடிகள் said...

எறும்பு said...

/ கடமை தானே ரெம்ப முக்கியம்/

வாங்க எறும்பாரே. அதாஞ்செரி. முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.

லெமூரியன்... said...

படிச்சி ரொம்ப நேரம் சிரிசிட்டே இருந்தேங்க....! அருமையா இருக்கு போங்க உங்க ஆராய்ச்சி...!

பேநா மூடி said...

இந்த அம்மா அப்பவே இப்டி தாங்க வளரவே விட மாட்டங்க..,

எம்.எம்.அப்துல்லா said...

annaatha...

puthu templatettu..
puthu idugai..

piramaatham :)

பின்னோக்கி said...

சந்ி்ச்ச விபத்துக்கள் ரொம்ப அதிகமா இருக்கே. பெரிய விஞ்ஞானி ஒருவரை நாடு இழந்துடுச்சு :(

எனக்கு அந்த பம்ப் அடிக்குற அடுப்ப பார்த்தலே பயமா இருக்கும்.

ராக்கெட் விட்டது சூப்பர் ஐடியா.

புது டெம்ளேட் நல்லாயிருக்கு. உங்க போட்டாவையும் போடுங்க. அது இல்லாம ஒரு வெருமைத்தனம் தெரியுது.

பின்னோக்கி said...

என்ன ஒரு வேகம். அந்த புத்தகம் எல்லாம் அடுக்கி வெச்சுருந்த டெம்ளேட் போய் அடுத்த டெம்ளேட் வந்துடுச்சு.. சோ பாஸ்ட்..

Balavasakan said...

செம காமடி அண்ணே... என்னையும் யோசிக்க வச்சிட்டீங்க ஏனடா நீ என்னல்லாம் பண்ணின்னேன்னு

வானம்பாடிகள் said...

லெமூரியன்... said...

/படிச்சி ரொம்ப நேரம் சிரிசிட்டே இருந்தேங்க....! அருமையா இருக்கு போங்க உங்க ஆராய்ச்சி...!//

நன்றிங்க லெமூரியன்

வானம்பாடிகள் said...

பேநா மூடி said...

//இந்த அம்மா அப்பவே இப்டி தாங்க வளரவே விட மாட்டங்க..,//

ம்கும். =))

வானம்பாடிகள் said...

எம்.எம்.அப்துல்லா said...

/annaatha...

puthu templatettu..
puthu idugai..

piramaatham :)//

=)). நன்றி.

வானம்பாடிகள் said...

பின்னோக்கி said...

/என்ன ஒரு வேகம். அந்த புத்தகம் எல்லாம் அடுக்கி வெச்சுருந்த டெம்ளேட் போய் அடுத்த டெம்ளேட் வந்துடுச்சு.. சோ பாஸ்ட்..//

அவ்வ்வ். இது பேக் அப்கு ட்ரைபண்ண போய் மெயின்ல போட்டு வட போனது எனக்கில்ல தெரியும். என்ன ஒரு வேகமாம்.=))

வானம்பாடிகள் said...

Balavasakan said...

//செம காமடி அண்ணே... என்னையும் யோசிக்க வச்சிட்டீங்க ஏனடா நீ என்னல்லாம் பண்ணின்னேன்னு//

=)) நன்றி வாசு. எழுதலாமே.

Chitra said...

விழுந்துவிடாமல் பிடித்துக் கொண்டிருந்த அம்மா, ஒரு அடி, ஒரு ஆச்சா, ஒரு அடி, ஒரு ஆச்சா என்று லயம் பிசகாமல் செய்த கச்சேரியும், அதற்கு அழாமல் கண்கள் சொருக கிக்கிக்கீ என்று சிரித்ததும், அம்பத்தூர் பட் டாக்டரிடம் தூக்கிக் கொண்டுபோய் அழுதபடி கெரசனைக் குடிச்சிட்டான் என்றதும் லேசாக நினைவில் இருக்கிறது.....................அம்மாவின் கச்சேரியும் கரிசனையும்............. என்னத்த சொல்றது? கலக்குங்க.....

ரோஸ்விக் said...

//வாங்க ஆரூரன். ம்கும். நானும் பாக்குறேன். ஒரு விஞ்ஞானியாவது வந்து பார்த்து நீங்க விஞ்ஞானியாகம இப்படி பதிவரானது வருத்தம்தான்னு சொல்லுவாங்களான்னு//

அண்ணேன் நான் அப்படி சொன்ன என் மனசு குத்தும்...:-) இருந்தாலும் நீங்a விரும்பி கேட்டுகிட்டதால...சொல்றேன்....அப்பா விஞ்ஞானி-ங்க தப்புச்சய்ங்க....பதிவருங்க மாட்டிகிட்டாய்ங்க...

:-)))))

தியாவின் பேனா said...

கலக்கல்

வானம்பாடிகள் said...

Chitra said...

/அம்மாவின் கச்சேரியும் கரிசனையும்............. என்னத்த சொல்றது? கலக்குங்க...../

கலக்கினதால தானே கச்சேரியே=)). நன்றிங்க

வானம்பாடிகள் said...

ரோஸ்விக் said...

/அண்ணேன் நான் அப்படி சொன்ன என் மனசு குத்தும்...:-) இருந்தாலும் நீங்a விரும்பி கேட்டுகிட்டதால...சொல்றேன்....அப்பா விஞ்ஞானி-ங்க தப்புச்சய்ங்க//

//ஆட்டோக்கு ஜூட் வைக்கிற வில்லங்கம் விரிவா சொன்னப்பவே லேசா சந்தேகம் தட்டிச்சி. குட்டி பதினாறடியோ=))//

//பதிவருங்க மாட்டிகிட்டாய்ங்க...//

கட்டஞ்சரியில்ல.நாம என்ன பண்றது=)):-)))))

வானம்பாடிகள் said...

தியாவின் பேனா said...

/கலக்கல்//

நன்றி

ஈ ரா said...

கலக்குங்க..... காமெடி அபாரம்.. சின்னப்பிள்ளைகள்
சேட்டை இப்போ நினைத்தால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது....!

அப்புறம் ஒரு விஷயம்.. கொஞ்சம் லேட்டானா உங்களுக்கு பின்னூட்டம் போட எங்கோ கோடியில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்...

வானம்பாடிகள் said...

ஈ ரா said...

// கலக்குங்க..... காமெடி அபாரம்.. சின்னப்பிள்ளைகள்
சேட்டை இப்போ நினைத்தால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது....!//

ஆமாம் ஈ.ரா.

//அப்புறம் ஒரு விஷயம்.. கொஞ்சம் லேட்டானா உங்களுக்கு பின்னூட்டம் போட எங்கோ கோடியில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்...//

=))

VENNILLA said...

Hi friend this is vennilla here.. ur doing a wonderful job.. can we exchange links..

இராகவன் நைஜிரியா said...

//வானம்பாடிகள்

கட்டஞ்சரியில்ல.நாம என்ன பண்றது=)) //

எந்த கட்டம் அண்ணே... யாரு கட்டினது அண்ணே?

Mohan Kumar said...

சார் continue பண்ணுங்க நல்லா இருக்கு மலரும் நினைவு

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

// எந்த கட்டம் அண்ணே... யாரு கட்டினது அண்ணே?//

சக பதிவர்களுக்குதாண்ணே.உங்கள மாதிரி பின்னூட்டம் போடுறவங்களுக்கும்=))

வானம்பாடிகள் said...

Mohan Kumar said...

/சார் continue பண்ணுங்க நல்லா இருக்கு மலரும் நினைவு//

நன்றிங்க. போட்டாச்சே.

வானம்பாடிகள் said...

VENNILLA said...

/Hi friend this is vennilla here.. ur doing a wonderful job.. can we exchange links../

dunno what ya mean:)

கதிரவன் said...

கலக்கல் காமெடி :-))

ரயில்ல எதாவது சயன்ஸ் முயற்சி பண்ணினீங்களா ??