(பதிவர் கூடலில் பாதியில் விட்ட வடிவேலு எப்படியோ காரனுப்பி என்னை அழைக்க நான் போய் மாட்டிகிட்டேன். ஏன், எப்படின்னு லாஜிக்கலா கேள்வியெல்லாம் வரப்படாது. படிச்சமா சிரிச்சமா, ஓட்டு, பின்னூட்டம் போட்டமான்னு இருக்கணும். ச்ச்செரியா.)
நான்: வணக்கம்ணே. எப்புடிண்ணே என்ன புடிச்சீங்க.
வடிவேலு:இல்ல. நீயெல்லாம் மனுசந்தானா. அன்னைக்கு சத்திரத்தில மட்டையாக்கிட்டு போய்ட்டியே. !
நான்: சூ. அதெல்லாம் நான் இன்னும் யாருக்கும் சொல்லல. இப்போ எப்படி புடிச்சீங்க அத சொல்லுங்க.
வடிவேலு: அதெல்லாம் கம்பேனி சீக்குரட்டு. சொல்றதுக்கில்ல. இப்ப எதுக்கு கூப்புட்டன்னா தோ பாரு. கம்பீட்டர் பொட்டி வாங்கியாச்சி. நானும் பதிவராகி பிரபலமாவணும். அம்புட்டுதேன். எனக்கு சொல்லிக்குடு வா.
நான்: ஐயோ அந்த வார்த்தைக்கு வாஸ்து சரியில்லண்ணே.
வடிவேலு:ஏண்டா இப்புடி. உங்களுக்கெல்லாம் நான் பதிவராயி பேமசாயிறப்படாது. அம்புட்டுதானே.
நான்:(ஒரு படம் விடாம அங்கயே அடி விழுந்தும் திருந்த மாட்டியே நீயி)அதெல்லாமில்ல. நீ பேப ஆயிக்கண்ணே.
வடிவேலு: இருய்யா இருய்யா. இப்ப என்ன கேட்டேன்னு பேப்பயங்கற.
நான்:பேய்பய இல்லண்ணே. பே.ப. பேமஸ் பதிவர். வாஸ்து சரியில்லன்னு மாத்திட்டேன்.
வடிவேலு: ஹய்யோ ஹய்ய்ய்யோ. அது வாஸ்து இல்லய்யா பேப்பலே. நேஏஏமாலஜி.
நான்:(என் நேரம். ஐ சீ கெட் அவுட் சொல்றதெல்லாம் இத சொல்ல நான் கேக்கணும்) சரிண்ணே. இது ரொம்ப தேவையா இப்போ. அதான் விஜயகாந்த் இருக்காரு. பேப்பர்காரய்ங்க இருக்காங்க. கூப்டு ஏதாவது சொன்னா நாலஞ்சு பிட்ட சேர்த்து போட்டு இழுத்து விடுவாங்க. அத விட்டு இது ஏண்ணே.
வடிவேலு: தோபார். இந்த வேலையெல்லாம் வேணாம். அண்ணன் பாசமா கேக்குறேன். பதிவ தொடங்கு. அருவாள தூக்க வெச்சிறாத என்னிய.
நான்: சரிண்ணே. தலயெழுத்த யாரு மாத்துறது. வலைமனைக்கு பேரு சொல்லுங்கண்ணே.
வடிவேலு:தோ. அந்த புள்ளகிட்ட சொல்லாத. வெடிவேலுன்னு வெச்சிரு. டெர்ரரா இருக்கும்.
நான்: அப்புடியெல்லாம் முடியாது. நாளைக்கு அந்த புள்ள படிக்கவந்தா தெரிஞ்சிடும். கேட்டா சரிங்க போவுது.
வடிவேலு: ச்சேரி சேரி.அப்புறம்?
நான்: இதுல உங்களப்பத்தி போடணும். ஒரு படம் வேணும்.
வடிவேலு:போஓஓடு போஓடு. நாய் சேகர் படம் போடு.
நான்: துப்புவாய்ங்க. ஒரு பய படிக்க வரமாட்டான். அலட் ஆறுமுகம் போடலாம்.
வடிவேலு: ஹூம். அவன் அவன் எடுக்குற முடிவு உனக்கு சாதகமாத்தான் அமையுதுடா வடிவேலு. சரி போட்டுக்க.
நான்: இப்ப தொண்டய்ங்க.
வடிவேலு: ஏய் ஏய். என்ன பார்த்த எப்புடி தெரியுது. தொண்டய்ங்கன்னு என் படத்த போடுற. நக்கல்தானே. நானே தலைவன். நானே தொண்டன். என்ன நம்பி ஒரு பய வரமாட்டான்னு தான போடுற ராஸ்கல்
நான்: யோவ். நீரு முன்னாடி போனாதான தொண்டய்ங்க பின்னாடி வர. அதான். பொத்திக்கிட்டிரு
வடிவேலு: ஓஓஓஓ. அப்புடியா. தஸ் நாயீஈஈஈஸ்.
நான்: (இது வேற)இப்போ ஓட்டு பட்ட வைக்கணும்னே.
வடிவேலு: வந்ததில இருந்தே ராங்காதான் போய்க்கிருக்க நீ. நான் தேர்தல்லயா நிக்க போறன். ஓட்டு கீட்டுன்னு பேசிகிட்டு. சல்லிக்காசு தரமாட்டேன்.
நான்: யோவ் வெண்ண. பேபவா இல்லையான்னு எப்புடி தெரிஞ்சிக்கிர்ரது. அதுக்குதான் ஓட்டு.
வடிவேலு: அய்ய்ய்ங். இது தெரியாம் ஏசிப்புட்டனப்பா. சரி ச்சாரி.
நான்: சரி இப்போ ஒரு இடுகை போடணும்.
வடிவேலு: போடு போடு.
நான்: யோவ். நீர் போடணும். நான் என் பதிவுல போடுவேன். இதுல நீர் போடணும்.
வடிவேலு:கோச்சிக்கிறாதப்பா. அண்ணன் புதுசில்ல. சரி என்ன போடலாம் சொல்லு.
நான்: எந்த குப்பய வேணும்னாலும் போடலாம். பாட்டு, கதை, கவிதை, நடந்தது, நடக்காதது எதுனாலும்.
வடிவேலு: அப்போ எம்.சி.ஆர்து நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி சாங் போடு.
நான்: அதெல்லாம் தேடிக்குவாங்க. சொந்தமா எழுதுங்க. முதல்லயே சுடுறதா?
வடிவேலு:ஆஹா. இத்தினி நாளும் சொல்லிக்குடுத்தத தானப்பா பண்ணிகிருந்துருக்கேன். இப்படி சிக்க வெச்சிட்டியே.யப்பா யப்பா. ஒன்னு ரெண்டு சொல்லிகுடுப்பா. நான் கத்துக்குறேன்.
நான்: (என் தல எழுத்து. நானே கத்துகுட்டி. இதுல சொல்லி வேற குடுத்து உருப்பட்ரும்) நீயே சொல்லுண்ணே. கவிதை எழுதுறீயா?
வடிவேலு: ஏப்பா இந்தக் கொலவெறி. ஆரம்பத்துலயே சமாதி கட்ட பாக்குற நீ.
நான்: அட இல்லண்ணே. எழுதலாம். இன்னைக்கு என்ன நடந்துச்சு சொல்லுங்க.
வடிவேலு:காலைல எழுந்தேன்.
நான்: அத அப்புடியே போடுண்ணே.
வடிவேலு: இதயா? சரி போட்டேன்.
நான்: அப்புறம்?
வடிவேலு: காபி குடிச்சேன்.
நான்: அதயும் போடுண்ணே அடுத்த வரில.
வடிவேலு: இதயுமா? சரி போட்டேன். என்ன வெச்சி காமெடி கீமெடி பண்ணலயே
நான்: சே சே இல்லண்ணே (ம்கும் வேற எதுக்கு இப்புடி மாங்கு மாங்குன்னு தட்டுறேன்)அப்புறம்?
வடிவேலு:(கடுப்பாகி) கக்குசு போனய்யா. கக்குசு போனேன். இதயும் போடுறதா?
நான்: போடுங்கண்ணே.அப்பிடியே போடாம கழிப்பறைனு போடுங்க. அடுத்ததா கால்தான் வலித்ததுன்னு போடுங்கண்ணே. இப்ப படிங்க.
வடிவேலு:காலையில் எழுந்தேன்
காபி குடித்தேன்
கழிப்பறை போனேன்
கால்தான் வலித்தது!

ஏன்யா. நான் சொன்னனா. கால் வலித்ததுன்னு. இது கவிதை? உன்னிய.
நான்: இருண்ணே. நான் பின்னூட்டம் போடுவன் பாரு. முதல்ல இத அமுக்கி திரட்டில சேரு.
வடிவேலு: என்னா எழவோ. பண்ணியாச்சி பண்ணியாச்சி.
நான்:(பின்னூட்டம் போட்டு) இப்போ என் பின்னூட்டம் படிண்ணே.
வடிவேலு:வானம்பாடிகள் said: அண்ணே! முதல் கவிதையே பிரமாதம்ணே. அசத்திட்டீங்கண்ணே./காலையில் எழுந்தேன் காபி குடித்தேன்/ கண்ணு முன்னாடி தெரியுதுண்ணே. /கழிப்பறை போனேன் கால்தான் வலித்தது/ வலி தெரியுதுண்ணே கவிதைல. படிமக் கவிதைண்ணே. உள்ள ஆள் இருந்துச்சுன்னு நினைக்கலாம். வராம உக்காந்து வலிச்சதுன்னும் வெச்சிக்கலாம். கொஞ்சம் ’பின்’ நவீனத்துவமாவும் தெரியுதுண்ணே. அசத்துங்க நான் தொடர்ரேண்ணே.
நான்: எப்புடிண்ணே.
வடிவேலு: அட ஆமாய்யா. கவிதை மாதிரி தான் தெரியுது. இவ்வளவு விஷயமிருக்கா இதில. அண்ணன் மேல எவ்வளவு பாசம்பா உனக்கு.
நான்:(ஆடு வளர்க்குறது அழகு பார்க்கறதுக்கில்ல. கோழி வளர்க்கிறது கொஞ்சறதுக்கில்லடி.)பதிலுக்கு நீங்க என் பதிவுக்கு வந்து பின் தொடர்ந்து, படிச்சி, ஓட்டு போடணும்னே. பின்னூட்டமும் போடணும்னே.
வடிவேலு: ஏப்பா. என் கவிதையில இவ்ளோ மேட்டர் இருக்கு. நீ நல்லா இருக்குன்ன. நீ சப்ப இடுகை போட்டாலும் நான் இப்படி சொல்லணுமோ?
நான்:(அட்றா சக்க) அப்புடியெல்லாம் இல்லண்ணே. நல்லால்லன்னா நல்லால்லன்னு சொல்லணும்னே. ஆனா கொஞ்சம் பாலிசா, இது சரியில்ல.இது இப்படி பண்ணலாம்னு சொல்லணும்னே. நீங்க பாட்டுக்கு இங்க பேசறா மாதிரி, இதெல்லாம் இடுகையாடா வெண்ணன்னு எல்லாம் போடப்படாது. சரியா.
வடிவேலு: அவ்ளோதானா.
நான்: தோடா! இனிமே உக்காந்து அப்பப்ப ஃப்ரெஸ் பண்ணி எவ்ளோ ஓட்டு வந்திச்சின்னு பார்க்கணும். என் பின்னூட்டத்துக்கு நன்றி சொல்லி பதில் போடணும்.
வடிவேலு: ஓஓ. அதெல்லாம் வேற இருக்கோ!
நான்:ஆமாம். சும்மாவா. ராவெல்லாம் கண்ணு விழிச்சி பார்த்துட்டே இருக்கணும். சூட்டிங் நடுவுல பார்க்கணும்.
வடிவேலு: அட வேல செய்யிற இடத்துல எப்புடிப்பா?
நான்: கொள்ள பேரு வேல செய்யிற இடத்துலதான் இத பண்றதே. ராத்திரி ஃபுல்லா எத்தினி ஓட்டு வந்திருக்கும்னு தூக்கம் இல்லாம காலையில சீக்கிரமா ஆஃபீஸ் போறது. இப்புடியாச்சும் நேரத்துக்கு வராய்ங்களேன்னு கொள்ள ஆபீசில விட்டு வெச்சிருக்காய்ங்க.
வடிவேலு:இங்கார்ரா!இய்ய்ங். இதுல இவ்வளவு விசயமிருக்கா.
நான்: சரி. நீ நினச்சப்பல்லாம் நான் வர முடியாது. ஒரு நாலஞ்சு இடுகை போட்டு சேர்த்து வையி. ஒரு நளைக்கு ஒன்னுன்னு போடலாம்.
வடிவேலு: சரிப்பா. இப்போ என்ன போடலாம் சொல்லு.
நான்: ஒரு கதை எழுதலாம்.
வடிவேலு: (அது தெரிஞ்சா ஃபீல்டுல சொல்லி காசு பார்க்கமாட்டனா. ஏண்டா இப்புடி)சரி சொல்லு.
நான்:வரிக்கு வரியெல்லாம் சொல்ல மாட்டன். ஒன் லைன் சொல்றேன். நீ வளைச்சு வளைச்சு எழுது.
வடிவேலு: சரி சொல்லு
நான்: உன்னிய மாதிரி ஒருத்தன் ஆயா தூங்குறப்ப சுருக்குப் பைய களவாண்டுட்டு மெட்ராசுக்கு சினிமால நடிக்க போறான்.
வடிவேலு: அடிங்கொய்யாலே. நான் சொன்ன பிட்ட எனக்கே திருப்பி போடுறியா.
நான்: அட இருண்ணே. உன்னிய மாதிரி பஸ்ல வந்தேன். ட்ரெயின்ல கக்கூசில டிக்கட் எடுக்காம வந்தன்னா ஒரு பய படிப்பானா? த்ரில் வேணும்னே.
வடிவேலு:ஸ்டார்டிங் ஸ்ட்ராங்காதான் இருக்கு. பினிசிங் சரியில்லன்னா பிச்சிப்புடுவேன்.

(தொடரும்)
(நான் மட்டும் தொடர் இடுகை எழுத வேணாமா. அதான். ஒழுங்கா பின்னூட்டம் வந்தா தொடரும். இல்லாட்டி சுபம்)
103 comments:
ஒரு மைனஸ் போடுறதுக்குன்னே துபாய்ல இருந்து வந்து போட்டியா செல்லம். இதுக்கெல்லாம் கவலப்பட மாட்டம்டி.=))
மீ த பர்ஸ்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
Wait a minute for 5 minutes. Going for a meeting - coming and ready start music for special kummi...
ok..:-)
//இராகவன் நைஜிரியா Says:
மீ த பர்ஸ்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்//
என்ன ராசா... மைனஸ் ஓட்டா?
சூப்பர்ணே, ஆமா கும்மி நடக்கப்போவுதா இங்க?
இராகவன் நைஜிரியா said...
/ மீ த பர்ஸ்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்/
/Wait a minute for 5 minutes. Going for a meeting - coming and ready start music for special kummi...
ok..:-)/
வாங்க வாங்க =))
Subankan said...
/சூப்பர்ணே, ஆமா கும்மி நடக்கப்போவுதா இங்க?/
என்ன வேணா நடக்கும். வடிவேலுவா கொக்கா=))
சூப்பர் தலைவா!
இப்படி அடக்க முடியாம வாய் விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு ...
சூப்பரோ சூப்பர்..
கலக்குறீங்க தலைவா!
உங்க இடுகையை படிச்சு.... லூசுத்தனமா ஆபிஸ்ல சத்தமா சிரிச்சு... எல்லாரும் என்னை மெண்டல் மாதிரி பார்த்து...
சோ.... இதைக் கண்டித்தும்
எங்க தலைவர் வெண்ணை பெயரை இரண்டு வாட்டி... டூ டைம்ஸ் பயன்படுத்தியதைக் கண்டித்தும்
நோ.... பின்னூட்டம் இந்த இடுகைக்கு...
ஆனா.... நம்ம நண்பர்கள் கும்மியடிச்சா.... வந்து கும்மியடிப்பேன்
/போஓஓடு போஓடு. நாய் சேகர் படம் போடு.//
இதுக்குத்தான் 'கெக்கபிக்கனு' சிரிச்சிட்டேன்
சூர்யா ௧ண்ணன் said...
/ சூப்பர் தலைவா!
இப்படி அடக்க முடியாம வாய் விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு ...
சூப்பரோ சூப்பர்..
கலக்குறீங்க தலைவா!/
நன்றி தலைவா.
கதிர் - ஈரோடு said...
/ஆனா.... நம்ம நண்பர்கள் கும்மியடிச்சா.... வந்து கும்மியடிப்பேன்/
அது போதுமே.=))
//தஸ் நாயீஈஈஈஸ்.//
இதுக்கு சிரிச்சு பொறை ஏறிடிச்சி
//வானம்பாடிகள் said: அண்ணே! முதல் கவிதையே பிரமாதம்ணே. அசத்திட்டீங்கண்ணே./காலையில் எழுந்தேன் காபி குடித்தேன்/ கண்ணு முன்னாடி தெரியுதுண்ணே. /கழிப்பறை போனேன் கால்தான் வலித்தது/ வலி தெரியுதுண்ணே கவிதைல. படிமக் கவிதைண்ணே. உள்ள ஆள் இருந்துச்சுன்னு நினைக்கலாம். வராம உக்காந்து வலிச்சதுன்னும் வெச்சிக்கலாம். கொஞ்சம் ’பின்’ நவீனத்துவமாவும் தெரியுதுண்ணே.//
நோட் பண்ணுங்கப்பா...நோட் பண்ணுங்க
பாமரன் அய்யாவை
பதிவெழுதக் கேட்டு
சும்மா போனதை
சொற்களில் ஏற்றி
அமளி துமளியாய்
ஆர்ப்பாட்டம் படித்து
சும்மாவே சிரிக்கும் நான்
சப்தமாய் சிரித்திட
பார்த்த என் மகனவன்
பீதியில் தாயிடம்
சிரிக்கிறார் தனியே
சப்தமாய் சப்தமாய்
மிரண்டு சொல்ல நான்
மிச்ச்சத்தை சொல்ல
இரண்டு பெரும்
இணைந்து சிரித்தோம்....
பிரபாகர்.
//இதெல்லாம் இடுகையாடா வெண்ணன்னு எல்லாம் போடப்படாது.//
வடிவேலு:ம்ம்ம்ம்.... '(:=' '=:))'இப்பிடி போட்ட ஒத்துக்குவியா
//பிரபாகர் said...
மிரண்டு சொல்ல நான்
மிச்ச்சத்தை சொல்ல
இரண்டு பெரும்
இணைந்து சிரித்தோம்....//
அண்ணே இதுவும் எங்கியோ 'கெக்கபிக்க' னு சிரிச்சி.... எல்லோரும் கிண்டல் பண்ணுனது எவ்வளவு பில்டப்போட சொல்லுது பாருங்க
(ஆடு வளர்க்குறது அழகு பார்க்கறதுக்கில்ல. கோழி வளர்க்கிறது கொஞ்சறதுக்கில்லடி.)பதிலுக்கு நீங்க என் பதிவுக்கு வந்து பின் தொடர்ந்து, படிச்சி, ஓட்டு போடணும்னே. பின்னூட்டமும் போடணும்னே.
தலைவரே..இந்த மேட்டரை நான் அசை போட்டுகிட்டு இருந்தேன்..நீங்க பதிவே போட்டீங்க..தொடருங்க..நல்லாயிருக்கு
/Wait a minute for 5 minutes. Going for a meeting - coming and ready start music for special kummi...
ok..:-)//
எங்கண்ணா..வூட்டாண்டை ஆளையே காணும்?
சுபம் எல்லாம் போட்டு நிருதிப்பிடாதீங்க... நல்லாத்தான் போயிட்டிருக்கு...
வவுறு பசிக்குது.... சோறு தின்னுபோட்டு வாரேன்
இன்னும் ஓட்டுக் கூட போடலை
போட்டுட்டு வந்துடறேன்..
அய்யா கவிதை, நடப்பு நிகழ்வுகள்ல பின்றாருன்னு ரொம்பவும் தப்பா நினைச்சிட்டிருந்தேன்... காமடியிலும் கலக்கறாருங்கோ...
/ஒரு மைனஸ் போடுறதுக்குன்னே துபாய்ல இருந்து வந்து போட்டியா செல்லம். இதுக்கெல்லாம் கவலப்பட மாட்டம்டி.=))//
சென்னையிலும் சில நாய்ங்க இதே பொழைப்பா சுத்துது தலைவரே
கதிர் - ஈரோடு said...
//தஸ் நாயீஈஈஈஸ்.//
இதுக்கு சிரிச்சு பொறை ஏறிடிச்சி
=)). எழுதுன என்ன நினைச்சி பாக்குறாங்களா=))
கதிர் - ஈரோடு said...
/நோட் பண்ணுங்கப்பா...நோட் பண்ணுங்க/
பண்ணுங்க பண்ணுங்க.
// கதிர் - ஈரோடு said...
//இராகவன் நைஜிரியா Says:
மீ த பர்ஸ்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்//
என்ன ராசா... மைனஸ் ஓட்டா? //
நைனா ஐ இன் நைஜிரியா... நோ துபாய்...
நம்ம அண்ணன் பின்னூட்டத்தைப் படிங்க... இட் இஸ் ஃப்ரம் துபாய்... ஓகே
//
சென்னையிலும் சில நாய்ங்க இதே பொழைப்பா சுத்துது தலைவரே
October 23, 2009 2:36 PM
//
அத ஏன் தண்டோரா 'போட்டு' சொல்றீங்க..?
பிரபாகர் said...
இதுக்கு கவிதையில பாராட்டா. =)). நன்றி
//இராகவன் நைஜிரியா Says:
நைனா ஐ இன் நைஜிரியா... நோ துபாய்...
நம்ம அண்ணன் பின்னூட்டத்தைப் படிங்க... இட் இஸ் ஃப்ரம் துபாய்... ஓகே//
தப்பா நினைச்சிக்காதிங்க தமாசுக்கு போட்டது அது.... அண்ணன்கிட்ட சொல்லிட்டுத்தான் போட்டேன்
//வடிவேலு:காலையில் எழுந்தேன்
காபி குடித்தேன்
கழிப்பறை போனேன்
கால்தான் வலித்தது!
ஏன்யா. நான் சொன்னனா. கால் வலித்ததுன்னு. இது கவிதை? உன்னிய.//
ஆகா....கவித கவித....
//நான்: சரி. நீ நினச்சப்பல்லாம் நான் வர முடியாது. ஒரு நாலஞ்சு இடுகை போட்டு சேர்த்து வையி. ஒரு நளைக்கு ஒன்னுன்னு போடலாம். //
நம்மள மாதிரியே...
//உங்க இடுகையை படிச்சு.... லூசுத்தனமா ஆபிஸ்ல சத்தமா சிரிச்சு... எல்லாரும் என்னை மெண்டல் மாதிரி பார்த்து...//
உங்களுக்குமா....
ஓட்டு அப்பாலிக்கா போட்டுக்கிறேன். இப்போதைக்கு அவுட் ஆஃப் ஆர்டர்....
கதிர் - ஈரோடு said...
/வடிவேலு:ம்ம்ம்ம்.... '(:=' '=:))'இப்பிடி போட்ட ஒத்துக்குவியா//
அய்யோ என்னால முடியல=))
தண்டோரா ...... said...
/பதிலுக்கு நீங்க என் பதிவுக்கு வந்து பின் தொடர்ந்து, படிச்சி, ஓட்டு போடணும்னே. பின்னூட்டமும் போடணும்னே.
தலைவரே..இந்த மேட்டரை நான் அசை போட்டுகிட்டு இருந்தேன்..நீங்க பதிவே போட்டீங்க..தொடருங்க..நல்லாயிருக்கு/
நன்றிங்கண்ணே. நான் வராம =))
// நான்: வணக்கம்ணே. எப்புடிண்ணே என்ன புடிச்சீங்க. //
வலைப்பூவில் வலை வீசி பிடிச்சாரு..
ஈ ரா said...
/சுபம் எல்லாம் போட்டு நிருதிப்பிடாதீங்க... நல்லாத்தான் போயிட்டிருக்கு.../
அட அதெல்லாம் ஒரு பில்டப்பு.=))
கதிர் - ஈரோடு said...
/வவுறு பசிக்குது.... சோறு தின்னுபோட்டு வாரேன்/
ஆமாம். சிரிக்காம சாப்புட்டு தெம்பா வாங்க.
பிரபாகர் said...
/அய்யா கவிதை, நடப்பு நிகழ்வுகள்ல பின்றாருன்னு ரொம்பவும் தப்பா நினைச்சிட்டிருந்தேன்... காமடியிலும் கலக்கறாருங்கோ../
=)). அப்புடிங்கிறீங்க. அவங்க அவங்க எடுக்குற முடிவு சாதகமாத்தான் அமையுது வானம்பாடி. போஒ போஓ. போய்க்கிடே இரு.
ஓட்டு போட்டாச்சுங்க...
தண்டோரா ...... said...
/சென்னையிலும் சில நாய்ங்க இதே பொழைப்பா சுத்துது தலைவரே/
ஆமாண்ணே. நமக்கு இதே பெரிய பொழுது போக்கு. என்னல்லாம் கள்ளத்தனம் பண்றாய்ங்கன்னு=))
\\ கதிர் - ஈரோடு said...
//இராகவன் நைஜிரியா Says:
நைனா ஐ இன் நைஜிரியா... நோ துபாய்...
நம்ம அண்ணன் பின்னூட்டத்தைப் படிங்க... இட் இஸ் ஃப்ரம் துபாய்... ஓகே//
தப்பா நினைச்சிக்காதிங்க தமாசுக்கு போட்டது அது.... அண்ணன்கிட்ட சொல்லிட்டுத்தான் போட்டேன் \\
ஐய்ய என்ன நைனா இப்படி சொல்லிக்கின.. உங்கள போய் தப்பா நினைச்சுக்குவேனா...
நாம எல்லாம் ஒரு ஜாலி குடும்பம் மாதிரி...
// தண்டோரா ...... said...
/Wait a minute for 5 minutes. Going for a meeting - coming and ready start music for special kummi...
ok..:-)//
எங்கண்ணா..வூட்டாண்டை ஆளையே காணும்? //
ஆமாண்ணே... ரொம்ப நாளாச்சு உங்க வீட்டு பக்கம் வந்து... வேலை கொஞ்சம் கூடுதாலாக இருக்குங்க... அதுல எந்த இடுகைப் படிச்சோம், எது படிக்கில அப்படின்னு உட்டு போயிடுதுங்க... சாரி
கதிர் - ஈரோடு said...
/அண்ணே இதுவும் எங்கியோ 'கெக்கபிக்க' னு சிரிச்சி.... எல்லோரும் கிண்டல் பண்ணுனது எவ்வளவு பில்டப்போட சொல்லுது பாருங்க/
ஆமாம் ஆமாம். குழந்தை பயந்துட்டிருப்பாரு=))
// (நான் மட்டும் தொடர் பதிவு எழுத வேணாமா. அதான். ஒழுங்கா பின்னூட்டம் வந்தா தொடரும். இல்லாட்டி சுபம்)//
எங்க சொல்லுங்க தொடர் இடுகை...
எங்க தலைமை ஆசிரியர் ஐயா பழமை பேசி படிச்சா, ரொம்ப நொந்துடுவார்... வானம்பாடி நீங்களுமா என்று.. :-)
கதிர் - ஈரோடு said...
/தப்பா நினைச்சிக்காதிங்க தமாசுக்கு போட்டது அது.... அண்ணன்கிட்ட சொல்லிட்டுத்தான் போட்டேன்/
ஆமாங்கண்ணே. =))
// நான்: ஐயோ அந்த வார்த்தைக்கு வாஸ்து சரியில்லண்ணே //
ஆஹா ... வாஸ்து... தாங்க முடியலடா சாமி... நடக்கட்டும்.. நடக்கட்டும்
// வானம்பாடிகள் said...
கதிர் - ஈரோடு said...
/தப்பா நினைச்சிக்காதிங்க தமாசுக்கு போட்டது அது.... அண்ணன்கிட்ட சொல்லிட்டுத்தான் போட்டேன்/
ஆமாங்கண்ணே. =)) //
என்ன அண்ணே.. இதையெல்லாமா தப்பா நினைச்சுகுவாங்க... அப்புறம் உங்க தம்பி அப்படின்னு சொல்ல முடியுங்களா... இல்ல அக்கா கலகலப்ரியா என்னை வுட்டுத்தான் வச்சு இருக்குமா.. பிச்சுபிடாது பிச்சு..
// அதெல்லாமில்ல. நீ பேப ஆயிக்கண்ணே. //
பேப ஆனா அப்புறம் பே.. பே..ன்னு சொல்லிகிட்டு இருக்க வேண்டியதுதாங்க. எங்க இருந்து எப்படி அடிவிழும் அப்படின்னு தெரியாதுங்க..
// வடிவேலு: ஹய்யோ ஹய்ய்ய்யோ. அது வாஸ்து இல்லய்யா பேப்பலே. நேஏஏமாலஜி. //
ஓ இது வேறயா...ஐய்யோ... ஐய்யோ..
க.பாலாசி said...
/ஆகா....கவித கவித..../
இதத்தான சொன்னது. ஏத்தி விடுவாய்ங்கன்னு=))
/நம்மள மாதிரியே.../
அடப்பாவிகளா! கொள்ளப்பேரு இப்புடித்தான் பண்றாய்ங்களா?
/உங்களுக்குமா..../
எல்லாருக்கும்தான்
மீ த 50
இராகவன் நைஜிரியா said...
// நான்: வணக்கம்ணே. எப்புடிண்ணே என்ன புடிச்சீங்க. //
வலைப்பூவில் வலை வீசி பிடிச்சாரு..
=))
இராகவன் நைஜிரியா said.
/ஐய்ய என்ன நைனா இப்படி சொல்லிக்கின.. உங்கள போய் தப்பா நினைச்சுக்குவேனா...
நாம எல்லாம் ஒரு ஜாலி குடும்பம் மாதிரி.../
ஐ. இதே வார்த்த தான் நானும் சொன்னேன்.
இராகவன் நைஜிரியா said
/எங்க சொல்லுங்க தொடர் இடுகை...
எங்க தலைமை ஆசிரியர் ஐயா பழமை பேசி படிச்சா, ரொம்ப நொந்துடுவார்... வானம்பாடி நீங்களுமா என்று.. :-)/
அய்யய்யோ. ஒரு வாட்டி பார்த்துட்டு மாத்திடணும். மாப்பு வரதுக்குள்ள.
இராகவன் நைஜிரியா said
/
ஆஹா ... வாஸ்து... தாங்க முடியலடா சாமி... நடக்கட்டும்.. நடக்கட்டும்/
=))
/
ஓ இது வேறயா...ஐய்யோ... ஐய்யோ../
விட்றப்படாதில்ல
/ஓட்டு போட்டாச்சுங்க.../
உங்க ஓட்டு பேங்க்ல போட்டா மாதிரிண்ணே. சே சே. நைஜிரியாலயும் நல்ல பேங்க் இருக்கு தெரியும்ணே=))
ஜஸ்ட் மிஸ்... ஃபார் 50
இராகவன் நைஜிரியா said
/என்ன அண்ணே.. இதையெல்லாமா தப்பா நினைச்சுகுவாங்க... அப்புறம் உங்க தம்பி அப்படின்னு சொல்ல முடியுங்களா... இல்ல அக்கா கலகலப்ரியா என்னை வுட்டுத்தான் வச்சு இருக்குமா.. பிச்சுபிடாது பிச்சு../
அக்காவ காணமே. =))
// காலையில் எழுந்தேன்
காபி குடித்தேன்
கழிப்பறை போனேன்
கால்தான் வலித்தது! //
சூப்பர் கவிதை அண்ணே...
எனக்கும் கொஞ்சம் கவிதை எழுத கத்துக் கொடுங்கண்ணே...
// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said
/என்ன அண்ணே.. இதையெல்லாமா தப்பா நினைச்சுகுவாங்க... அப்புறம் உங்க தம்பி அப்படின்னு சொல்ல முடியுங்களா... இல்ல அக்கா கலகலப்ரியா என்னை வுட்டுத்தான் வச்சு இருக்குமா.. பிச்சுபிடாது பிச்சு../
அக்காவ காணமே. =)) //
அதானே... யக்கோவ்... எங்கப் போயிட்டீங்க...
உங்க வருகைக்காக காத்துகிட்டு இருக்கோம்
இராகவன் நைஜிரியா said
/சூப்பர் கவிதை அண்ணே...
எனக்கும் கொஞ்சம் கவிதை எழுத கத்துக் கொடுங்கண்ணே.../
இதானே வேணாங்குறது. நேத்து கவிதை படிச்சீங்களா பார்க்கணுமே. இருங்க.
இராகவன் நைஜிரியா said...
/அதானே... யக்கோவ்... எங்கப் போயிட்டீங்க...
உங்க வருகைக்காக காத்துகிட்டு இருக்கோம்/
=))
நைனா செம்ம
சிரிச்சு சிரிச்சி வயித்த வலிக்குது
நீ கண்டின்யூ பண்ணு உன் ரவுச துபாய்க்காரனாவது துகேர்ள்காரனாவது...து.அவங்கெடக்கான்.
// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said
/சூப்பர் கவிதை அண்ணே...
எனக்கும் கொஞ்சம் கவிதை எழுத கத்துக் கொடுங்கண்ணே.../
இதானே வேணாங்குறது. நேத்து கவிதை படிச்சீங்களா பார்க்கணுமே. இருங்க. //
எதுக்கு போய் பார்த்துட்டு வந்து திட்டவா...
நேத்து கவிதை படிச்சேன்... பின்னூட்டம் போடவேயில்லை... இன்னிக்கு இந்த இடுகை வந்துடுச்சில்ல... அதனால அதுக்கு பின்னூட்டம் போடவில்லை..
இராகவன் நைஜிரியா said...
/எதுக்கு போய் பார்த்துட்டு வந்து திட்டவா...
நேத்து கவிதை படிச்சேன்... பின்னூட்டம் போடவேயில்லை... இன்னிக்கு இந்த இடுகை வந்துடுச்சில்ல... அதனால அதுக்கு பின்னூட்டம் போடவில்லை..//
திட்றதா. நான் உங்களுக்குன்னே ஒரு இடுகை போட இருந்தேன். கதிர் பழமைக்கு போட்டதால தள்ளிப் போட்டிருக்கேன். எவ்வளவு நாள் ஏன் இராகவன் சார் நம்ம வலைப்பூ பக்கம் பாக்க மாட்டங்குறாருன்னு நினைப்பேன் தெரியுமா. இப்போல்லாம் பின்னூட்டமில்லைன்னா மிஸ் பண்றது தான்.:(
ஸ்ஸ். சத்தம் போடாதீங்க. இடுகைன்னு மாத்திட்டேன். தலைமை பிஸில கண்டுக்கிறமாட்டாரு.டாங்ஸ்
பிரியமுடன்...வசந்த் said...
/நைனா செம்ம
சிரிச்சு சிரிச்சி வயித்த வலிக்குது
நீ கண்டின்யூ பண்ணு உன் ரவுச துபாய்க்காரனாவது துகேர்ள்காரனாவது...து.அவங்கெடக்கான்.//
ஆமாமா. நம்பீட்டம். 64 பின்னூட்டம். ஆரம்பத்துலயே பதிவர் கூடலில் வடிவேலு பாதில விட்டேன்னு உள்குத்து வெச்சேன். ஆமாம்ல. ஏன்னு யாருமே கேக்கல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆமாம்ல
ஏன் பாதில விட்ட?
முக்காவாசில விட வேண்டியதுதான?
செம காமெடி. சூப்பர். :)
தொடருங்கள். தொடருங்கள்
பிரியமுடன்...வசந்த் said...
/ஆமாம்ல
ஏன் பாதில விட்ட?
முக்காவாசில விட வேண்டியதுதான?/
உன்னாலதான்:))
அப்பாடி ஒருவழியா ஓட்டு போட்டுட்டேன்...வரட்டுமா....
Varadaradjalou .P said...
/செம காமெடி. சூப்பர். :)
தொடருங்கள். தொடருங்கள்/
நன்றிங்க
///ஆமாம்ல
ஏன் பாதில விட்ட?
முக்காவாசில விட வேண்டியதுதான?/
உன்னாலதான்:)) //
நான் என்ன பண்ணுனேன்
பொய்யா சொல்லீட்டு திரிஞ்ச ட்ரைன்ல தள்ளிவிட சொல்லிடுவேன் ...
// சூர்யா ௧ண்ணன் said...
சூப்பர் தலைவா!
இப்படி அடக்க முடியாம வாய் விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு ...
சூப்பரோ சூப்பர்..
கலக்குறீங்க தலைவா! //
வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் அப்படின்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.
அதுக்காக வாய் விட்டு போயிடுச்சுன்னா எப்படி சிரிக்கிறதுன்னு கேட்கக் கூடாது..
பிரியமுடன்...வசந்த் said...
/நான் என்ன பண்ணுனேன்
பொய்யா சொல்லீட்டு திரிஞ்ச ட்ரைன்ல தள்ளிவிட சொல்லிடுவேன் .../
அட நிசமாத்தான். கோச்சுகிட்டியோன்னு நினைச்சிட்டேன்.ஏன் வம்புன்னு நிறுத்திட்டேன்.
// பிரியமுடன்...வசந்த் said...
///ஆமாம்ல
ஏன் பாதில விட்ட?
முக்காவாசில விட வேண்டியதுதான?/
உன்னாலதான்:)) //
நான் என்ன பண்ணுனேன்
பொய்யா சொல்லீட்டு திரிஞ்ச ட்ரைன்ல தள்ளிவிட சொல்லிடுவேன் ... //
வர வர ஏன் இவ்வளவு டெரர்ரா மாறிட்டு வர்றீங்க வசந்த்...
கல்யாணம் ஆகப் போகுதில்ல... இப்படி கோபப்பட்டு உடம்பை புண்ணாக்கிக்கப் போறீங்க.. பார்த்து சூதனமா நடந்துகுங்க..
மீ த 75த்
வடிவேலு ஆனார் பதிவர்!
இராகவன் நைஜிரியா said.
/கல்யாணம் ஆகப் போகுதில்ல... இப்படி கோபப்பட்டு உடம்பை புண்ணாக்கிக்கப் போறீங்க.. பார்த்து சூதனமா நடந்துகுங்க../
இல்லண்ணே. செல்லம் கொஞ்சுது புள்ள. அங்க கதிர் இடுகைல கும்மிண்ணே.
ஆரம்பிச்சா அப்படியே அருவி மாதிரி வருது. கலக்கிட்டீங்கண்ணே!
அண்ணே இது நா நெசமாவே சொன்னதண்ணே! நம்புங்க! நம்பிக்கைதான் வாழ்க்கைக்கு ஆதாரம்.
தமிழ் நாடன் said...
/ஆரம்பிச்சா அப்படியே அருவி மாதிரி வருது. கலக்கிட்டீங்கண்ணே!/
=)) நன்றிங்க.
//வடிவேலு: அட வேல செய்யிற இடத்துல எப்புடிப்பா?
நான்: கொள்ள பேரு வேல செய்யிற இடத்துலதான் இத பண்றதே. ராத்திரி ஃபுல்லா எத்தினி ஓட்டு வந்திருக்கும்னு தூக்கம் இல்லாம காலையில சீக்கிரமா ஆஃபீஸ் போறது. இப்புடியாச்சும் நேரத்துக்கு வராய்ங்களேன்னு கொள்ள ஆபீசில விட்டு வெச்சிருக்காய்ங்க.//
ஏய் வாணியம்பாடி,
ஸ்ஸ்ஸ்ஸ்ஸாரி. கொஞ்சம் ஸ்ஸ்ஸ்ஸ்லிப்பாயிடிச்சி.
வானம்பாடி,
இப்பிடி உண்மையெல்லாம் சொல்லி பதிவு போட்டு வேலைக்கு வேட்டு வெச்சிருவெ போலிருக்கே.
சிரிச்சி சிரிச்சி " பாடில " கொஞ்சம் வெயிட் (ஒயிட் இல்ல மேன்) கொறைஞ்சிருக்கு. தேங்க்குஸ்.
சத்ரியன் said...
/ஸ்ஸ்ஸ்ஸ்ஸாரி. கொஞ்சம் ஸ்ஸ்ஸ்ஸ்லிப்பாயிடிச்சி./
ஆஆஆ. நாக்கு தவறமாட்டண்ணேன்னு சொன்னவருக்கே ஸ்லிப்பா
/இப்பிடி உண்மையெல்லாம் சொல்லி பதிவு போட்டு வேலைக்கு வேட்டு வெச்சிருவெ போலிருக்கே./
அட போங்க. பாஸும் ஏதோ பின்னூட்டமோ பதிவோ போட்டுட்டிருப்பாரு.
/சிரிச்சி சிரிச்சி " பாடில " கொஞ்சம் வெயிட் (ஒயிட் இல்ல மேன்) கொறைஞ்சிருக்கு. தேங்க்குஸ்./
அடடா. இது தெரியாம கொள்ள பேத்த சிரிக்க வெச்சிட்டனே. =))
//வடிவேலு:வானம்பாடிகள் said: அண்ணே! முதல் கவிதையே பிரமாதம்ணே. அசத்திட்டீங்கண்ணே./காலையில் எழுந்தேன் காபி குடித்தேன்/ கண்ணு முன்னாடி தெரியுதுண்ணே. /கழிப்பறை போனேன் கால்தான் வலித்தது/ வலி தெரியுதுண்ணே கவிதைல. படிமக் கவிதைண்ணே. உள்ள ஆள் இருந்துச்சுன்னு நினைக்கலாம். வராம உக்காந்து வலிச்சதுன்னும் வெச்சிக்கலாம். கொஞ்சம் ’பின்’ நவீனத்துவமாவும் தெரியுதுண்ணே. அசத்துங்க நான் தொடர்ரேண்ணே.
நான்: எப்புடிண்ணே.
வடிவேலு: அட ஆமாய்யா. கவிதை மாதிரி தான் தெரியுது. இவ்வளவு விஷயமிருக்கா இதில.//
சிரிச்சு முடியலை சார். :))))))
தொடருங்கள்.தொடர்கிறோம்..
துபாய் ராஜா said...
/சிரிச்சு முடியலை சார். :))))))
தொடருங்கள்.தொடர்கிறோம்../
:)). நன்றி ராஜா.
:-)))))))))))))
ஸ்ரீ said...
/ :-)))))))))))))/
:))
//
வடிவேலு:தோ. அந்த புள்ளகிட்ட சொல்லாத. வெடிவேலுன்னு வெச்சிரு. டெர்ரரா இருக்கும். //
ம்ம்... இருக்கட்டு.. இருக்கட்டு..
//
வடிவேலு:(கடுப்பாகி) கக்குசு போனய்யா. கக்குசு போனேன். இதயும் போடுறதா?
நான்: போடுங்கண்ணே.அப்பிடியே போடாம கழிப்பறைனு போடுங்க. அடுத்ததா கால்தான் வலித்ததுன்னு போடுங்கண்ணே. இப்ப படிங்க.//
வானம்பாடிய நம்பி மோசம் போகாத வேலு.. கக்கூசுன்னு போட்டா எடுப்பா இருக்கும்... சும்மா கழிப்பறை.. குளிப்பறைன்னுக்கிட்டு..
கலகலப்ரியா said...
/ம்ம்... இருக்கட்டு.. இருக்கட்டு../
நான்:அண்ணே. சொன்னேன்ல. இந்த புள்ள சரின்னுட்டா, வெடிவேலுக்கு=))
கலகலப்ரியா said...
/வானம்பாடிய நம்பி மோசம் போகாத வேலு.. கக்கூசுன்னு போட்டா எடுப்பா இருக்கும்... சும்மா கழிப்பறை.. குளிப்பறைன்னுக்கிட்டு../
இல்லம்மா. அந்தாளுக்கு கவிதைன்னு நம்பறதுக்காக போட்டது.இல்லாம ஒரு சஸ்பென்ஸ் இருக்கு. =))
சிரித்து சிரித்து வயிரு வலிக்குது சார்
நேசமித்ரன் said...
/சிரித்து சிரித்து வயிரு வலிக்குது சார்/
:)
யப்பா....பயங்கர கும்பலாருக்கே...இந்த கைப்புள்ள இங்க என்ன பண்ணப் போறேன்...
அது சரி said...
/யப்பா....பயங்கர கும்பலாருக்கே...இந்த கைப்புள்ள இங்க என்ன பண்ணப் போறேன்.../
வாங்க ஸார். =). அது மதியம் செமையா கும்மியடிச்சாங்க.
நல்ல சிரிச்சாச்சு..தொடரும்னு போட்டிருக்கீங்க தொடருங்க........
உள்ளேன் அய்யா .!
தொடருங்க.....
நல்ல நகைச்சுவை பதிவு
பழமைபேசி said...
/வடிவேலு ஆனார் பதிவர்!/
:)). நன்றி பழமை
புலவன் புலிகேசி said...
/நல்ல சிரிச்சாச்சு..தொடரும்னு போட்டிருக்கீங்க தொடருங்க......../
/ஜீவன் said...
உள்ளேன் அய்யா .!
தொடருங்க...../
/வெண்ணிற இரவுகள்....! said...
நல்ல நகைச்சுவை பதிவு/
நன்றி புலிகேசி, ஜீவன், வெண்ணிற இரவுகள்.
உண்மையா ஐயா..?
விவேகானந்தன் said...
/உண்மையா ஐயா..?/
லொல்லு..ம்ம்ம்ம்=))
நறுக் நல்லாவே போயிட்டுருக்குது.வெடிவேலும் அமர்க்களப் படும்.கற்பனை தொடரட்டும்.
ராஜ நடராஜன் said...
/நறுக் நல்லாவே போயிட்டுருக்குது.வெடிவேலும் அமர்க்களப் படும்.கற்பனை தொடரட்டும்./
நன்றி சார்.
Post a Comment