பதிவுலகப் பாசமலர் நைஜீரியா இராகவன் நானும் தீபாவளியும் என்ற தலைப்பில் எழுதிய தொடர் இடுகைக்கான அழைப்பை ஏற்று என் இடுகை இது. அண்ணன் சொன்னா மாதிரியும் சொல்லலாம். இதில் பொய் சொல்ல ஒன்றும் வழியில்லாததால் அனைத்தும் உண்மைன்னும் சொல்லலாம்.இஃகி இஃகி.
பெருசா எழுதினாலும் இவ்வளவுதான். 52 வயது. தென்னக இரயில்வேயில் மூத்த துணை நிதி ஆலோசகர். தங்கமணி அறிமுகம் முடிந்தது முன்னமே. மகன் மெகானிகல் எஞ்ஜினீயர் தற்போது அரிஜோனாவில் எம்.எஸ் படிக்கிறார். மகள் இரண்டாம் ஆண்டு பொறியியல் சிவில் படிக்கிறார்.
பத்து வயதில் ஒரு ஆம்பிளைப்பிள்ளைக்கு வெறும் மத்தாப்பு வாங்கிக் கொடுக்கிறார்களே என்ற கடுப்பில், புத்தாடையணிந்து உர்ரென வாசலில் நின்றிருக்க, எதிர் வீட்டு மாமா ஏரோப்ளேன் வெடிக்க பயப்பட்டு என்னை அழைக்க, ஆஹா வாழ்க்கையில் மத்தாப்பு தவிர கண்டிராத எனக்கு ஏரோப்ளேன் பட்டாசா என்ற குஷியில், சரியாக அதற்கு மேல் குனிந்து கொண்டு வைக்க, அது என்னையே சுற்றி வந்து சட்டை, நிஜார்,உடம்பு என்று கரியடித்தது.
1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?
பெருசா எழுதினாலும் இவ்வளவுதான். 52 வயது. தென்னக இரயில்வேயில் மூத்த துணை நிதி ஆலோசகர். தங்கமணி அறிமுகம் முடிந்தது முன்னமே. மகன் மெகானிகல் எஞ்ஜினீயர் தற்போது அரிஜோனாவில் எம்.எஸ் படிக்கிறார். மகள் இரண்டாம் ஆண்டு பொறியியல் சிவில் படிக்கிறார்.
2) தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம் ?
பத்து வயதில் ஒரு ஆம்பிளைப்பிள்ளைக்கு வெறும் மத்தாப்பு வாங்கிக் கொடுக்கிறார்களே என்ற கடுப்பில், புத்தாடையணிந்து உர்ரென வாசலில் நின்றிருக்க, எதிர் வீட்டு மாமா ஏரோப்ளேன் வெடிக்க பயப்பட்டு என்னை அழைக்க, ஆஹா வாழ்க்கையில் மத்தாப்பு தவிர கண்டிராத எனக்கு ஏரோப்ளேன் பட்டாசா என்ற குஷியில், சரியாக அதற்கு மேல் குனிந்து கொண்டு வைக்க, அது என்னையே சுற்றி வந்து சட்டை, நிஜார்,உடம்பு என்று கரியடித்தது.
அம்மா கொன்னுடுவான்னு அழுத என்னைக் கடத்திப்போய், துணியை உருவித் துவைத்து, டேபிள் ஃபேனில் அரைகுறையாய்க் காய வைத்து வெளியில் விட்டார்கள். அது வரை துண்டு கட்டிக்கொண்டிருந்த புத்தாடை களைய வைத்த தீபாவளி.
சென்னையில்தான்.
எப்பொழுதும் போல் அடுத்தவரைப் பற்றிக் கவலைப் படாத பட்டாசு வெடிப்புகள். வயது வேறு பாடில்லாத டாஸ்மாக் படையெடுப்புகள். தொலைக்காட்சி அடிமைகள்.
நான் கொண்டாடவில்லை. வாங்கவும் இல்லை. மனைவியும் மகளும் எங்கு வாங்கினார்களோ தெரியாது.
ரெண்டுமில்லை. ஓசியில் வந்த க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா.
இல்லை. எதிர்பாராத விதமாக யாரும் வாழ்த்துச் சொல்லி கடனே என்று சொல்ல வேண்டிய நிர்பந்தமும் வரவில்லை.
அதிகபட்சம் பட்டிமன்றம் பார்ப்பதுண்டு. சாப்பாடு, தூக்கம், படித்தல் இப்போது வலைமனை.
9)இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள்? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம் ?
அலுவலகத்தில் ஒரு சமூக சிந்தனையாளர் ஒருங்கிணைத்து உதவுவதில் பங்கேற்பது. இராம கிருஷ்ண ஆத்மாலயம் என்ற தொண்டு நிறுவனத்தில் இந்த முறை கொண்டாடினார்கள்.
நான் அழைக்காமல் தவிர்க்கும் காரணம் கலகலப்ரியா, கதிர், பிரபாகர் அவர்களுக்குப் புரியும். எனவே இளைய தலைமுறை க. பாலாசி, நைனா என என்னை அழைக்கும் பாசமுடன்....வசந்த் ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர அழைக்கிறேன்.
3) 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?
சென்னையில்தான்.
4) தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள் ?
எப்பொழுதும் போல் அடுத்தவரைப் பற்றிக் கவலைப் படாத பட்டாசு வெடிப்புகள். வயது வேறு பாடில்லாத டாஸ்மாக் படையெடுப்புகள். தொலைக்காட்சி அடிமைகள்.
5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
நான் கொண்டாடவில்லை. வாங்கவும் இல்லை. மனைவியும் மகளும் எங்கு வாங்கினார்களோ தெரியாது.
6)உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?
ரெண்டுமில்லை. ஓசியில் வந்த க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா.
7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
இல்லை. எதிர்பாராத விதமாக யாரும் வாழ்த்துச் சொல்லி கடனே என்று சொல்ல வேண்டிய நிர்பந்தமும் வரவில்லை.
8)தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?
அதிகபட்சம் பட்டிமன்றம் பார்ப்பதுண்டு. சாப்பாடு, தூக்கம், படித்தல் இப்போது வலைமனை.
அலுவலகத்தில் ஒரு சமூக சிந்தனையாளர் ஒருங்கிணைத்து உதவுவதில் பங்கேற்பது. இராம கிருஷ்ண ஆத்மாலயம் என்ற தொண்டு நிறுவனத்தில் இந்த முறை கொண்டாடினார்கள்.
10)நீங்கள் அழைக்கவிருக்கும் இருவர், அவர்களின் வலைத்தளங்கள் ?