Sunday, October 18, 2009

ரங்கமணின்னா ஈஸி இல்ல தெரியுமா..

நேற்றைய பண்டா இடுகையில் அந்தாளு ஏதோ கேக்கப் போக நம்ம லகலக கம்பேனி சீக்ரட்ட வெளிய சொல்லிருச்சி. எம் போறாத காலம், சொக்காய் கவிதை போட்டு பல பேர சொக்காய கிழிச்சிகிட்டு ஓடவிட்ட லொல்லின் மொத்த குத்தகைதாரர் வசந்த் கூட சேர்ந்துட்டாரு. நான் இல்லாம போய்ட்டனேன்னு இராகவன் அய்யா வருத்தப் படுற அளவுக்கு கும்மி.

சரி. நம்ம அவஸ்தைய பார்க்கறதில இவ்வளவு பேருக்கு சந்தோசம் கிடைக்கிறதுன்னா அத தடுக்க நாம யாரு? ஆனா ஒரு கண்டிசனு. யாரும் போட்டுக் குடுத்துறாதிய. ஏன் இப்புடி அலர்ரேன்னு இப்பவே சொறிய வேணாம். போக போகத் தெரியும்.

வேலைக்கு சேர்ந்த புதிசில இன்னைக்கு ஒரு ரூ கொடுத்தா போக வர 60 காசு பஸ் டிக்கட் போக அடுத்த நாள் 20 காசு வாங்கிகிட்டு ஆஃபீஸ் போய்ட்டு வந்தவன். அப்புறம், அம்மா ஏண்டா சீசன் வாங்கினா இன்னும் கம்மியாமேன்னு மாச சீசன் 20ரூன்னு வாங்கினது.

எம்.ஜி.ஆர். நடிச்ச நேற்று இன்று நாளை சினிமா பார்க்க போய் ஆளு தெரியாம போலீஸ் காரன் பூந்துட்டேன்னு விட்ட அறைல நொந்து நூலாகி (அப்போல்லாம் நூடில்ஸ்னு ஒன்னு இருக்கிறதே தெரியாது) அழுதுகிட்டே படம் பார்த்து, இனிமே படமே பார்க்கறதில்லைன்னு வைராக்கியமா 6 வருசம் இருந்த பய புள்ள.

காபி டீ குடிக்க, ஆஃபீஸ்ல லேட்டா வெலைன்னா டிஃபன் சாப்பிடன்னு கைக்காசுன்னு ஒரு பத்து ரூபா அம்மா குடுக்க ஆரம்பிச்சது. கணக்கு சொல்லிட்டு மிச்சம் வாங்கிக்கலாம். ஆக கைல மொத்தமா பத்து ரூபா நிக்கும். மெதுவா ஆங்கிலப் படம் பார்க்க ஆரம்பிச்சி, ஆஃபீஸ் பக்கத்துல மினர்வா தியேட்டர் வாகா அமைஞ்சு போச்சு.

11.15 க்கு மெதுவா செக்ஷன் ஆஃபீஸர் கிட்ட சார் பாரீஸ் கார்னர் போய்ட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு பஸ் புடிச்சி அங்க போனா 11.45 கு  டிக்கட் குடுப்பாங்க. 12க்கு  படம் போடுவாங்க. விளம்பரம்லாம் போடமாட்டாங்க. சரியா 1.30கு முடிஞ்சிடும். சத்தம் போடாம வந்து சாப்பிட்டு வேல பார்க்குறது.

எப்புடியோ செலவுன்னு ஆரம்பிச்சி, ஒரு கட்டத்துல அகவிலைப்படி அரியர்சு, சம்பளத்துல சொச்சப் பணம் (சொச்சம்னா என்னாமோ கற்பனை வேணாம், 219 ரூபாய்ன்னா 210 ரூ கறாரா குடுத்துடணும்)னு தேத்தி தேவி தியேட்டரு, சஃபையர்னு போக ஆரம்பிச்சி வாழ்க்கை வளமா போய்க்கிட்டிருந்தது ஒரு ரெண்டு மூணு வருசம்.

அதே அலுவலகத்தில வேலை செய்யிறவங்க தங்கமணியா வாய்ச்சது ஆரம்பத்துல நல்லாத்தான் இருந்திச்சி. இந்த சினிமா சமாசாரம்லாம் ஓரங்கட்டியாச்சி. அப்புடியே இருந்துட முடியுமா? நாள் கடக்க, ஒரு நாள் நண்பர்களெல்லாம் குற்றாலம் போறதா முடிவு பண்ணாங்க. நானும் ஒரு ஊக்கமா சரின்னுட்டேன். வீட்டில வந்து குற்றாலம் போறோம்னு சொன்னதுதான். ஏன் நாங்க வந்தா குற்றாலத்துல சேர்க்க மாட்டாங்களான்னு ஆரம்பிச்சது.

நாம எல்லாருமா தனியா போனாலும் குற்றாலம் குற்றாலம் தானேன்னு பிட்ட போட்டு, அம்மா, வெண்ணெய் எல்லாரையும், சேர்த்து கூட்டணி அமைச்சு ஆப்பு வெச்சாச்சி. அடுத்த நாள் போய் நான் வரலைடான்னா, அவனவன் ரொம்ப நக்கலா, நாங்க குற்றாலம் போறோன்னா சொல்லிட்டு வரோம். ஃப்ரென்டு கலியாணத்துக்குன்னு சொல்லிட்டு வரோம்னு சொன்னப்பதான் ஆகா, இந்த வாய்ப்பு போச்சேன்னு திகிலடிச்சது.

அவனவனும், போர் அடிக்குதுடா, சினிமா போலாம்னு கிளம்புவாய்ங்க. நான் போய்ட்டு வாங்கடான்னு ஙே நு நிப்பேன். வேற என்ன பண்ண டி.வி.எஸ். 50 ல ஒன்னா ஆஃபீஸ் வந்துட்டு நான் சினிமா போறேன். நீ பஸ்ல போய்க்கன்னா சோத்துக்கு எங்க போறது?

எப்புடியோ ஆண்டவன் புண்ணியத்துல ஒரே ஆஃபீஸ்னாலும் ஆஃபீஸ் விஷயமாவது சம்பந்தமில்லாம போய்க்கிட்டிருந்தது. ஒரே ஒரு விஷயம் தவிர. பி.எஃப். செக்ஷன்ல இருந்தாங்க அவங்க. அதனால சத்தம் போடாம காசு எடுக்க முடியாது. போறாத காலம் வந்து, எனக்கு ப்ரொமோஷன் வர  தங்கமணிக்கு வேற செக்ஷனுக்கு ட்ரேன்ஸ்ஃபர் வந்துச்சு.

மனுசனுக்கு கட்டம் சரியில்லைன்னா எப்படியெல்லாம் அமையுது பாருங்க. சரியா, நம்ம சம்பளக் கணக்கு, லீவ் கணக்கு எல்லாம் அவங்க கைல சிக்கிரிச்சி.  சரி, நாம என்ன பண்றோம். பொறந்த பொறப்புக்கு வேலைக்கு போய்ட்டு வரது கடமை. முன்ன மாதிரி சம்பளம் கைல குடுக்கறதும் போய் பேங்க்னு ஆகிப்போச்சு. சொச்சதுட்டுக்கும் வழியில்லைன்னு மனச தேத்திகிட்டு இருந்தேன்.

கடவுளுக்கு என் மேல என்ன கோவமோ? அவுங்க செக்ஷனுக்கே அதிகாரியா அனுப்பி விட்டான். கதறாத குறையா கெஞ்சுனேன், வேணாம்யான்னு. ஒரே செக்ஷன்ல இருக்கப்படாதுய்யான்னு சொன்னா 24 மணி நேரமும் கைதியா இருன்னு சிரிச்சிகிட்டே கையெழுத்து போட்டுட்டான் பாஸ்.

போன வருசங்க. இன்கம் டேக்ஸ் ஒரு 13 ரூ கம்மியா புடிச்சிட்டான். விடுங்கம்மா. 100 ரூ வரைக்கும் வித்தியாசமிருக்கலாம்னா, அதெப்புடி ஊட்டுக்காரன்னு கம்மியா புடிச்சியான்னு எனக்கு ஓலை வரும்னு 10 இடத்துல கரெக்ஷன் பண்ணி, கையெழுத்து போடுன்னு குடுத்தாங்க பாருங்க டார்ச்சரு.  எங்க போய் சொல்ல?

சம்பள பில்லு நேரமா இருக்கும். ஏதோ வேலை, இல்லாட்டி பொண்ணுக்கு உடம்பு சரியில்லைன்னா அப்பாவியா, நான் என்ன பண்ண? நீங்க லீவ் போடுறீங்களா?  எனக்கு பில் இருக்குன்னா சரின்னு சொல்லவா? உனக்கு உன் பில் மட்டும்தான், நான் மத்தவங்க பில்லெல்லாம் பார்க்கணுமே. நீ லீவ் எடுமா, நானே உன் பில் போடுறேன்னு பண்ணனும். அவ்வ்வ்.

இதெல்லாமாவது பரவாயில்லைங்க மக்கா. பாலியல் வன்முறைச்சட்டம்னு ஒன்னு இருக்கு. படுபாவி சட்டம்னு போட்டானே தவிர எது எதுல்லம் வன்முறைல வரும்னு சொல்லாம விட்டான். எப்போ பார்த்தாலும் என்ன திட்டுறான்னு ஒரு கம்ப்ளெயின்ட் போனா போதும்.  இந்த ஒரு பொம்பள தவிர இன்னும் 2 பொம்பளைங்க விசாரணை அதிகாரியா உக்காந்துடுவாங்க. மீள முடியுமா? அவுங்க வூட்டுகாரன் மேல இருகிற கடுப்பெல்லாம் சேர்த்து வெச்சி நம்மள ரேகிங்க் பண்ண மாட்டாங்களா?

கேனத்தனமா எதாவது எழுதி வெச்சாலோ, என்ன இதுன்னு கேக்க கூட கூப்ட மாட்டனே! கடுப்புல, என்னாடி வேல பார்க்குறன்னு கேட்டு தொலைஞ்சா, திட்டீட்டான்னு ஒரு வரி எழுதி குடுத்தா போதும். 4 சிட்டிங்ல மனுசன நாறடிச்சி அப்புறம், சரி சரி தொலையுறான், கம்ப்ளெயின்ட் வித்ட்ரா பண்றேன்னு சொன்னா போதாது?

ஒரு நாள் தயிர் சாதம் கட்டிட்டு ஊறுகா வைக்கலயேம்மான்னு கேட்டேன் ஆஃபீஸ்ல. இந்த ஃபைல் அர்ஜண்டா கேக்கறாங்க. கையெழுத்து போடுறீங்களான்னாங்க. அஃபிஷியலா பேசறாங்களாமா! இன்னோரு நாள், ஃபைல்ல காண்பிச்சி, இந்த ரூல் கிளியராதானே இருக்கு. நீங்க என்னா எழுதியிருக்கிங்கங்கறேன், சாரி, வெறும் ரசம் வெச்சிருக்கேன். புடலங்கா கூட்டு உங்களுக்குப் பிடிக்காதில்லை. சைட் டிஷ் ஏதாவது வாங்கிக்கோங்கன்னு போறாங்க.  லஞ்ச் டைம் ஆயிடுச்சாம்.

நீ அப்புடி வரியான்னு, வீட்ல வந்து என்னாம்மா பண்ண, அவ்ளோ புரியாம போக அதில என்ன இருக்குன்னு ஆரம்பிக்கவே, ஆஃபீஸ் வேலைய வீட்டுக்கு கொண்டு வராதீங்கன்னு அட்வைசு! இவ்வளவு சோகத்த சுமந்துகிட்டு பெக்கு போடாம ப்ளாக் போடுறான் ஒருத்தன். பாராட்டாம மிறட்ராய்ங்க வசந்து. அவ்வ்வ்வ்..

137 comments:

ஈரோடு கதிர் said...

எவ்வளவு பாடுபட்டுச் சொன்னோம்...

எங்க வெண்ணைய ரொம்ப ஓட்டாதீங்கனு... அதுதான் ஆண்டவனாப் பார்த்து தங்கமணிய பக்கத்துல கொண்டு வந்து வச்சிருக்கான்...

விதி வலியது...

ஆனாலும் பொடலங்கா கூட்டு உங்களுக்கு ஏன் பிட்டிக்கலேனு தெரியல....

ஈரோடு கதிர் said...

ooooo.... me the first

and

me the second!!!!????

என்ன கொடும ரங்கமணி

ப்ரியமுடன் வசந்த் said...

இதோ வந்துட்டே இருக்கேன்...கொஞ்சம் பொறுங்கப்பு முழுசா படிச்சுட்டு ரவுண்டு கட்டுறேன் இன்னிக்கு நைனா டார் டார்தான் அம்புட்டு பேரும் வாங்க கும்மிக்கு...வெயிட் 15 மினிட்ஸ்....ஐ வில் கம் பேக்

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... அண்ணே இவ்வளவு கொடுமைங்களா உங்களுக்கு..

உங்களை நினைச்சா பரிதாபமாகத்தான் இருக்கு, இருந்தாலும் கடமை அப்படின்னு ஒன்னு இருக்கில்ல...

அதாங்க ஓட்டு போட்டு, கும்மி அடிப்பது...

வசந்த் வேற லைன்ல இருக்கார்... பார்க்கலாம் என்னா ஆகுதுன்னு

இராகவன் நைஜிரியா said...

// கதிர் - ஈரோடு said...
எவ்வளவு பாடுபட்டுச் சொன்னோம்...

எங்க வெண்ணைய ரொம்ப ஓட்டாதீங்கனு... அதுதான் ஆண்டவனாப் பார்த்து தங்கமணிய பக்கத்துல கொண்டு வந்து வச்சிருக்கான்...

விதி வலியது...

ஆனாலும் பொடலங்கா கூட்டு உங்களுக்கு ஏன் பிட்டிக்கலேனு தெரியல.... //

அண்ணே வெண்ணை விவகாரத்தை எல்லாம் இதில இழுக்காதீங்க...

அதுக்கும் விதிக்கும் சம்பந்தமில்லை. வெண்ணை இன்னிக்கு நெய்யா இருக்க காரணமே எங்க அண்ணன் தான்.

இராகவன் நைஜிரியா said...

// நான் இல்லாம போய்ட்டனேன்னு இராகவன் அய்யா வருத்தப் படுற அளவுக்கு கும்மி. //

அதான் இன்னிக்கு வந்துட்டோமில்ல

இராகவன் நைஜிரியா said...

// சரி. நம்ம அவஸ்தைய பார்க்கறதில இவ்வளவு பேருக்கு சந்தோசம் கிடைக்கிறதுன்னா அத தடுக்க நாம யாரு? //

அதுக்காகத்தான் அந்த காலத்திலேயே சொல்லி வச்சு இருக்காங்க..

இடுக்கண் வருங்கால் நகுக.

இராகவன் நைஜிரியா said...

// யாரும் போட்டுக் குடுத்துறாதிய. //

இத இனிமே நாங்க வேற தனியாச் செய்யணுமா? அதான் எங்கப்பன் குதிர்குள்ள இல்லைன்னு நீங்களே ஒரு இடுகைப் போட்டு இருக்கீங்களே...

இராகவன் நைஜிரியா said...

// ஆஃபீஸ் பக்கத்துல மினர்வா தியேட்டர் வாகா அமைஞ்சு போச்சு.//

ஆஃபீஸ் நேரத்தில் சினிமா... ம்.. நடக்கட்டும், நடக்கட்டும்.

பழமைபேசி said...

// எங்கப்பன் குதிர்குள்ள இல்லைன்னு//

அப்படின்னா?

ப்ரியமுடன் வசந்த் said...

//நான் இல்லாம போய்ட்டனேன்னு இராகவன் அய்யா வருத்தப் படுற அளவுக்கு கும்மி.//

எங்க அவர் இப்போல்லாம் ரொம்ப பிஸின்னு நினைக்கிறேன் நேத்து கூட நம்ம கடைக்கு வந்து எட்டிப்பாத்துட்டு ஓடிட்டாரு ரொம்ப அறுவையா இருந்துருக்குமோ கதை? அவ்வ்வ்?

ப்ரியமுடன் வசந்த் said...

//சரி. நம்ம அவஸ்தைய பார்க்கறதில இவ்வளவு பேருக்கு சந்தோசம் கிடைக்கிறதுன்னா அத தடுக்க நாம யாரு? //

சந்தோசமில்லப்பு...ஒரு அனுதாபம் தெரிவிக்கலாமுன்னுதான்...

பழமைபேசி said...

//பிரியமுடன்...வசந்த் said...
//நான் இல்லாம போய்ட்டனேன்னு இராகவன் அய்யா வருத்தப் படுற அளவுக்கு கும்மி.//

எங்க அவர் இப்போல்லாம் ரொம்ப பிஸின்னு நினைக்கிறேன்
//

தம்பி வசந்த், நெசமாவே அவர் தூங்குறாரா? அல்லது தூங்குற மாதிரி உங்களை விட்டுப் பின்னூட்டம் போடச் சொன்னாரா?? Am I picking on someone? இஃகிஃகி!

ப்ரியமுடன் வசந்த் said...

//வேலைக்கு சேர்ந்த புதிசில இன்னைக்கு ஒரு ரூ கொடுத்தா போக வர 60 காசு பஸ் டிக்கட் போக அடுத்த நாள் 20 காசு வாங்கிகிட்டு ஆஃபீஸ் போய்ட்டு வந்தவன். அப்புறம், அம்மா ஏண்டா சீசன் வாங்கினா இன்னும் கம்மியாமேன்னு மாச சீசன் 20ரூன்னு வாங்கினது.//

பாவம் நைனா நீ...

ஆனா இம்புட்டு அலும்பு பண்ணுவன்னு அவங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நடராஜா ஆயிருப்பியே மிஸ் ஆயிடுச்சே...சோ சேட்...

இராகவன் நைஜிரியா said...

ஒரு சுய தம்பட்டம்...

உங்களுக்கு நான் தமிழிஷில் நான் போட்ட என்னுடைய 8,000 வது ஓட்டு...

பழமைபேசி said...

//ஆனா இம்புட்டு அலும்பு //

தம்பி வசந்த, நம்மால இதெல்லாம் பொறுத்துக்க முடியாது இராசா! இஃகிஃகி!!

அழும்பு² aḻumpu
, n. < அழிம்பு. Persisting in evil ways; தீம்பு. Loc.

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
// எங்கப்பன் குதிர்குள்ள இல்லைன்னு//

அப்படின்னா? //

ஐயா... என்னாது இது... நான் வரலை இந்த ஆட்டதுக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

//எம்.ஜி.ஆர். நடிச்ச நேற்று இன்று நாளை சினிமா பார்க்க போய் ஆளு தெரியாம போலீஸ் காரன் பூந்துட்டேன்னு விட்ட அறைல நொந்து நூலாகி (அப்போல்லாம் நூடில்ஸ்னு ஒன்னு இருக்கிறதே தெரியாது) அழுதுகிட்டே படம் பார்த்து, இனிமே படமே பார்க்கறதில்லைன்னு வைராக்கியமா 6 வருசம் இருந்த பய புள்ள. //

வைராக்கியமாமுல்ல..

யார்கிட்ட போலீஸ் விட்ட அறையில உடம்பு தேறுறதுக்கு 6 வருசமாச்சுன்னு சொல்லுப்பே...

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
//ஆனா இம்புட்டு அலும்பு //

தம்பி வசந்த, நம்மால இதெல்லாம் பொறுத்துக்க முடியாது இராசா! இஃகிஃகி!!

அழும்பு² aḻumpu
, n. < அழிம்பு. Persisting in evil ways; தீம்பு. Loc. //

ஐயா இங்கு இருப்பது தெரியாமல் நாங்க வந்துட்டோம் அப்படின்னு நினைக்கின்றேன்.

பழமைபேசி said...

// இராகவன் நைஜிரியா said...
ஒரு சுய தம்பட்டம்...

உங்களுக்கு நான் தமிழிஷில் நான் போட்ட என்னுடைய 8,000 வது ஓட்டு...
//

நான் சந்தேகப்பட்டதுக்கு ஆதாரம் இதுங்களா? எப்பூடி??

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...

வைராக்கியமாமுல்ல..

யார்கிட்ட போலீஸ் விட்ட அறையில உடம்பு தேறுறதுக்கு 6 வருசமாச்சுன்னு சொல்லுப்பே... //

சரியா சொன்னீங்க.. உண்மை அதுவாகத்தான் இருக்கும். சும்மா பாவ்லா காட்டிகிட்டு இருக்காரு

பழமைபேசி said...

// இராகவன் நைஜிரியா said...
ஒரு சுய தம்பட்டம்...

உங்களுக்கு நான் தமிழிஷில் நான் போட்ட என்னுடைய 8,000 வது ஓட்டு...
//

அஃகஃகா.... சிரிக்க வெச்சுட்டீங்க ஐயா, சிரிக்க வெச்சுட்டீங்க!!

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
// இராகவன் நைஜிரியா said...
ஒரு சுய தம்பட்டம்...

உங்களுக்கு நான் தமிழிஷில் நான் போட்ட என்னுடைய 8,000 வது ஓட்டு...
//

நான் சந்தேகப்பட்டதுக்கு ஆதாரம் இதுங்களா? எப்பூடி?? //

அதுல எப்படியும் உங்களுக்கு 350 முதல் 400 விழுந்து இருக்குங்க..

ப்ரியமுடன் வசந்த் said...

////ஆனா இம்புட்டு அலும்பு //

தம்பி வசந்த, நம்மால இதெல்லாம் பொறுத்துக்க முடியாது இராசா! இஃகிஃகி!!

அழும்பு² aḻumpu
, n. < அழிம்பு. Persisting in evil ways; தீம்பு. Loc. //

சரிங்க பழமை ஐயா மாத்திடலாம்

பாருங்களேன் இவ்ளோ சொல்லிட்டு இருக்கேன் ஆள் கண்ணாடிய நல்லா தேச்சுட்டு ஒரு சிரிப்பு சிரிச்சுக்கிட்டே இன்பாக்ஸ் படிச்சுட்டு இன்னும் ரிப்ளை பண்ணாம இருக்கு பாத்தீங்களா இதுதான் அழும்புன்னேன்....

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
// இராகவன் நைஜிரியா said...
ஒரு சுய தம்பட்டம்...

உங்களுக்கு நான் தமிழிஷில் நான் போட்ட என்னுடைய 8,000 வது ஓட்டு...
//

அஃகஃகா.... சிரிக்க வெச்சுட்டீங்க ஐயா, சிரிக்க வெச்சுட்டீங்க!! //

இஃகி...இஃகி

பழமைபேசி said...

சரிங்க, நான் வெளில போகணும்...

அல்டீப்பு, அசால்ட்டு, அப்பங்க் குதிர்குள்ள இல்ல, இதுகள்ல எந்த ஒன்னுக்கு யார் ஒருவர் விளக்கம் சொன்னாலும், உங்களுக்கு ஒரு பரிசு இருக்கு!

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...

சரிங்க பழமை ஐயா மாத்திடலாம்

பாருங்களேன் இவ்ளோ சொல்லிட்டு இருக்கேன் ஆள் கண்ணாடிய நல்லா தேச்சுட்டு ஒரு சிரிப்பு சிரிச்சுக்கிட்டே இன்பாக்ஸ் படிச்சுட்டு இன்னும் ரிப்ளை பண்ணாம இருக்கு பாத்தீங்களா இதுதான் அழும்புன்னேன்.... //

நீங்க சொன்னாச் சரியாகத்தான் இருக்கும்...

மகா அழும்பு...

பழமைபேசி said...

//தேச்சுட்டு ஒரு சிரிப்பு சிரிச்சுக்கிட்டே இன்பாக்ஸ் படிச்சுட்டு இன்னும் ரிப்ளை பண்ணாம இருக்கு பாத்தீங்களா இதுதான் அழும்புன்னேன்....//

பாலாண்ணணா, கொக்கா?

ப்ரியமுடன் வசந்த் said...

//மெதுவா ஆங்கிலப் படம் பார்க்க ஆரம்பிச்சி//

ஆத்தா சும்மாவா விட்டுச்சு உன்னிய

ஆங்கிலப்படமுன்னா உங்க காலத்துல எப்பிடியிருக்குமுன்னு தெரியும்டே...

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
சரிங்க, நான் வெளில போகணும்...

அல்டீப்பு, அசால்ட்டு, அப்பங்க் குதிர்குள்ள இல்ல, இதுகள்ல எந்த ஒன்னுக்கு யார் ஒருவர் விளக்கம் சொன்னாலும், உங்களுக்கு ஒரு பரிசு இருக்கு! //

குதிர் பற்றி ஒரு இடுகை படித்த ஞாபகம் உண்டுங்க... அதை நீங்க எழுதியிருக்கீங்களான்னு ஞாபகம் இல்லீங்க...

குதிர் என்பது கிராமத்தில் நெல் சேமித்து வைப்பதற்காக இருக்குங்க. சில இடங்களில் பத்தாயம் என்றும் சொல்லுவாங்க..

ஈரோடு கதிர் said...

ச்...சே.... என்ன சத்தம் இங்கே..


இருங்க பாலா அண்ணண போன் பண்ணி எழுப்பிவிடறேன்

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
//தேச்சுட்டு ஒரு சிரிப்பு சிரிச்சுக்கிட்டே இன்பாக்ஸ் படிச்சுட்டு இன்னும் ரிப்ளை பண்ணாம இருக்கு பாத்தீங்களா இதுதான் அழும்புன்னேன்....//

பாலாண்ணணா, கொக்கா?//

அய்யோ திரும்பவும் கொக்கா... மீ எஸ்...

ப்ரியமுடன் வசந்த் said...

அதுக்கு மேல இருக்குற ஒரு பாரா படிச்சேன் சிரிப்பு அடக்க முடியலை....

இராகவன் நைஜிரியா said...

// கதிர் - ஈரோடு said...
ச்...சே.... என்ன சத்தம் இங்கே..


இருங்க பாலா அண்ணண போன் பண்ணி எழுப்பிவிடறேன் //

என்னச் சத்தம் இந்த நேரம்.. அப்படின்னு பாட்டு பாடி எழுப்பிவிடுங்க

பழமைபேசி said...

//அதுல எப்படியும் உங்களுக்கு 350 முதல் 400 விழுந்து இருக்குங்க..//

ஆகா, எனக்கும் ஒரு பெருமை! உங்ககிட்ட அதிகமா வாங்கினது நானாகத்தான் இருப்பேன்! பதறாதீங்க, நான் சொல்ல வந்தது ஓட்டுங்க!!

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...
அதுக்கு மேல இருக்குற ஒரு பாரா படிச்சேன் சிரிப்பு அடக்க முடியலை.... //

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுகிட்டே இருங்க..

ஈரோடு கதிர் said...

அட.... விடுங்கப்பு...

தங்கமணிகிட்ட...
ரங்கமணி வாங்கிக் கட்டிகிட்டிருக்கும்

பாவம்... விட்டுடுவோம்..

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு said...
ச்...சே.... என்ன சத்தம் இங்கே..
//

பொறையனார் வருக, வருக!!

ப்ரியமுடன் வசந்த் said...

நைனா இதுக்குமேலயும் நீ வரலை சுவிஸ்ல இருந்து எங்கக்கா வந்து உன்னிய உண்டு இல்லேன்னு பண்ணிடும் ஒழுங்கு மரியாதியா வந்துடு இல்லாட்டி இன்னிக்கு டப்பா டான்ஸ் ஆடிடும்

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...
//அதுல எப்படியும் உங்களுக்கு 350 முதல் 400 விழுந்து இருக்குங்க..//

ஆகா, எனக்கும் ஒரு பெருமை! உங்ககிட்ட அதிகமா வாங்கினது நானாகத்தான் இருப்பேன்! பதறாதீங்க, நான் சொல்ல வந்தது ஓட்டுங்க!! //

அதிகமா இடுகை நீங்கத்தான் எழுதியிருக்கீங்க.. அதனால் உங்களுக்குத்தான் அதிகமான ஓட்டும் விழுந்து இருக்கும்.

மீதி 100 என்னாச்சுன்னு கேட்பீங்கன்னு நினைச்சேன்... கேட்காம விட்டுடீங்களே... அது நீங்க தமிழிஷில் இணைக்காம சில இடுகைகளை விட்டது, சில இந்தியா சென்னற போது ஓட்டு போடாமல் விடப்பட்டது..

ஈரோடு கதிர் said...

// பழமைபேசி said...
நான் சொல்ல வந்தது ஓட்டுங்க!!///

ஓட்டாஆஆஆஆஆஆஆஆ..

மாப்பு வேணா....ம்ம்ம்

இப்பத்தான் மறந்திருக்கேன்...

திரும்பவும் கெளப்பிவிட்றாதீங்க

இராகவன் நைஜிரியா said...

// கதிர் - ஈரோடு said...
அட.... விடுங்கப்பு...

தங்கமணிகிட்ட...
ரங்கமணி வாங்கிக் கட்டிகிட்டிருக்கும்

பாவம்... விட்டுடுவோம்.. //

கல்யாணமான வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா... இதுக்கெல்லாம் போய் விட்டு கொடுக்க முடியுமா?

ஈரோடு கதிர் said...

// பழமைபேசி said...
//கதிர் - ஈரோடு said...
ச்...சே.... என்ன சத்தம் இங்கே..
//

பொறையனார் வருக, வருக!!//

வந்துட்டோம்........ல.......

நாங்கதான்
மாப்பு...
இன்னைக்கு முதல் போணியே

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...
நைனா இதுக்குமேலயும் நீ வரலை சுவிஸ்ல இருந்து எங்கக்கா வந்து உன்னிய உண்டு இல்லேன்னு பண்ணிடும் ஒழுங்கு மரியாதியா வந்துடு இல்லாட்டி இன்னிக்கு டப்பா டான்ஸ் ஆடிடும் //

ஆமாம் மரியாதையா எங்கிருந்தாலும் வந்துடுங்க.. இல்லாட்டி நடப்பதே வேறு..

வசந்த பொறுமையைச் சோதிச்சது போதும்

Rekha raghavan said...

//சினிமா பார்க்க போய் ஆளு தெரியாம போலீஸ் காரன் பூந்துட்டேன்னு விட்ட அறைல //

@@ சினிமா பார்க்க போய் ஆளு தெரியாம பூந்துட்டேன்னு போலீஸ் காரன் விட்ட அறைல

இப்படி படிக்கனுங்களா? நீங்களும் நம்மளை மாதிரி அரசு ஊழியரா? ஆபீஸ் வேலைகளை பத்தி நல்லா சொன்னீங்க. அருமையான பதிவு.

ரேகா ராகவன்

இராகவன் நைஜிரியா said...

// கதிர் - ஈரோடு said...
// பழமைபேசி said...
நான் சொல்ல வந்தது ஓட்டுங்க!!///

ஓட்டாஆஆஆஆஆஆஆஆ..

மாப்பு வேணா....ம்ம்ம்

இப்பத்தான் மறந்திருக்கேன்...

திரும்பவும் கெளப்பிவிட்றாதீங்க //

ஆமாம் அண்ணே நீங்க இங்க இருப்பதை ஐயா மறந்துட்டாரு... கோச்சுகிடாதீங்க

ஈரோடு கதிர் said...

அண்ணா... பாலா...
வருகிறார்...
பராக்!
பராக்!!
பராக்!!!

(அட போன் பண்ணிடேம்பா,)

(மாப்பு ... இந்த பராக்-னு என்னங்க)

vasu balaji said...

:)). ஆஹா என்ன நடக்குது இங்க

இராகவன் நைஜிரியா said...

// கதிர் - ஈரோடு said...
அண்ணா... பாலா...
வருகிறார்...
பராக்!
பராக்!!
பராக்!!!

(அட போன் பண்ணிடேம்பா,)

(மாப்பு ... இந்த பராக்-னு என்னங்க)//

நம்பிட்டோம்... நம்பிட்டோம்.. நம்பிட்டோம்

ப்ரியமுடன் வசந்த் said...

//:)). ஆஹா என்ன நடக்குது இங்க //

வாடி வா ...

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...
/எங்க வெண்ணைய ரொம்ப ஓட்டாதீங்கனு... அதுதான் ஆண்டவனாப் பார்த்து தங்கமணிய பக்கத்துல கொண்டு வந்து வச்சிருக்கான்../

ஆஆஆ. வெண்ணேஏஏஏஏஏஏஏஏ

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
:)). ஆஹா என்ன நடக்குது இங்க //

கும்மி... கும்மி...

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ இதோ வந்துட்டே இருக்கேன்...கொஞ்சம் பொறுங்கப்பு முழுசா படிச்சுட்டு ரவுண்டு கட்டுறேன் இன்னிக்கு நைனா டார் டார்தான் அம்புட்டு பேரும் வாங்க கும்மிக்கு...வெயிட் 15 மினிட்ஸ்....ஐ வில் கம் பேக்/

இங்கார்ர்ரா. துண்டு போட்டு போறாரு

ஈரோடு கதிர் said...

// வானம்பாடிகள் said...
:)). ஆஹா என்ன நடக்குது இங்க//

பாத்தீங்களா...பாத்தீங்களா...
வந்துட்டாருல்ல....


ஓ,...

பராக்-னா நம்பிட்டோம்னு அர்த்தமா
இராகவன்

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
கதிர் - ஈரோடு said...
/எங்க வெண்ணைய ரொம்ப ஓட்டாதீங்கனு... அதுதான் ஆண்டவனாப் பார்த்து தங்கமணிய பக்கத்துல கொண்டு வந்து வச்சிருக்கான்../

ஆஆஆ. வெண்ணேஏஏஏஏஏஏஏஏ //

தூக்கத்தில் எழுப்பிட்டாரா வெண்ணைச் சங்கத் தலைவர்...

நல்லா இருகப்பு... எங்க அண்ணனை தொந்திரவு பண்ணி, இப்படி அலற விடறதே வேலையாப் போச்சுங்க உங்களுக்கு

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

//ஆஹா... அண்ணே இவ்வளவு கொடுமைங்களா உங்களுக்கு..

உங்களை நினைச்சா பரிதாபமாகத்தான் இருக்கு, இருந்தாலும் கடமை அப்படின்னு ஒன்னு இருக்கில்ல...

அதாங்க ஓட்டு போட்டு, கும்மி அடிப்பது...

வசந்த் வேற லைன்ல இருக்கார்... பார்க்கலாம் என்னா ஆகுதுன்னு//

அண்ணே வாங்க.அவ்வ்வ்வ்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said

/அண்ணே வெண்ணை விவகாரத்தை எல்லாம் இதில இழுக்காதீங்க...

அதுக்கும் விதிக்கும் சம்பந்தமில்லை. வெண்ணை இன்னிக்கு நெய்யா இருக்க காரணமே எங்க அண்ணன் தான்./

அது அது

இராகவன் நைஜிரியா said...

// கதிர் - ஈரோடு said...
// வானம்பாடிகள் said...
:)). ஆஹா என்ன நடக்குது இங்க//

பாத்தீங்களா...பாத்தீங்களா...
வந்துட்டாருல்ல....


ஓ,...

பராக்-னா நம்பிட்டோம்னு அர்த்தமா
இராகவன் //

நீங்க சொல்வதை நம்பிட்டோம் அப்படின்னு சொல்லவந்தேங்க.

அர்த்தம் சொல்வது எல்லாம் ஐயா பழமை பேசி அவர்கள் மட்டும்தான்... அதுக்கு நான் இல்லை...

ஈரோடு கதிர் said...

//இராகவன் நைஜிரியா said...
தூக்கத்தில் எழுப்பிட்டாரா வெண்ணைச் சங்கத் தலைவர்...//

ச்ச்ச்ச்..சீ...சீ... தூங்கலையாம்.. பேசிகிட்டிருந்தாராம்...

ம்ம்ம்ம்

இனி தூங்கினமாதிரிதான்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

//ஒரு சுய தம்பட்டம்...

உங்களுக்கு நான் தமிழிஷில் நான் போட்ட என்னுடைய 8,000 வது ஓட்டு...//

ஆஹா. அது என் லக். நன்றிங்க

இராகவன் நைஜிரியா said...

// கதிர் - ஈரோடு said...
//இராகவன் நைஜிரியா said...
தூக்கத்தில் எழுப்பிட்டாரா வெண்ணைச் சங்கத் தலைவர்...//

ச்ச்ச்ச்..சீ...சீ... தூங்கலையாம்.. பேசிகிட்டிருந்தாராம்...

ம்ம்ம்ம்

இனி தூங்கினமாதிரிதான் //

இவ்வளவு பெரிய இடுகை எழுதியபிறகும், இப்படி தப்பு தப்பாச் சொல்லக்கூடாது...

பேசவதை கேட்டுகிட்டு இருந்தாராம் அப்படின்னு சொல்லணும்..

கதிர் அண்ணே உங்களுக்கு தெரியாதா, எந்த ரங்கமணி வீட்டில பேசமுடியும் அப்படின்னு?

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

அண்ணா... பாலா...
வருகிறார்...
பராக்!
பராக்!!
பராக்!!!

(அட போன் பண்ணிடேம்பா,)

(மாப்பு ... இந்த பராக்-னு என்னங்க)//

கேட்ட கேள்விக்கு பதில காணோம். சொந்தக் காசுல சூனியமா:))

vasu balaji said...

பழமைபேசி said...

// எங்கப்பன் குதிர்குள்ள இல்லைன்னு//

அப்படின்னா?

//
அப்பா கடங்காரனுக்கு பயந்து குதிருக்குள்ள ஒளிஞ்சிகிட்டு யாருக்கும் சொல்லாதன்னா பயபுள்ள குதிருக்குள்ள இல்லன்னு படையப்பா மாதிரி காட்டி குடுத்த கதை தானுங்களே

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said
/இவ்வளவு பெரிய இடுகை எழுதியபிறகும், இப்படி தப்பு தப்பாச் சொல்லக்கூடாது...

பேசவதை கேட்டுகிட்டு இருந்தாராம் அப்படின்னு சொல்லணும்..

கதிர் அண்ணே உங்களுக்கு தெரியாதா, எந்த ரங்கமணி வீட்டில பேசமுடியும் அப்படின்னு?/

அப்புடிப் போடுங்கண்ணே. நம்மள மாதிரி நேர்மையா யார் இருக்கா. சும்மா இங்க வந்து அல்டீசு

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...
/பாவம் நைனா நீ...

ஆனா இம்புட்டு அலும்பு பண்ணுவன்னு அவங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நடராஜா ஆயிருப்பியே மிஸ் ஆயிடுச்சே...சோ சேட்.../

ஆஹா. அடுத்த இடுகைக்கு ஐடியா குடுக்கறதே வேலையா போச்சேப்பா வசந்த். அதெல்லாம் நாம நடக்காத நடையில்லை. தினம் 6 கி.மீ போக 6 கிமீ வர நடந்து படிச்சதுதான்.

ப்ரியமுடன் வசந்த் said...

பார்டா பெரிசெல்லாம் ஒன்னு கூடிட்டு நம்மளை கண்டுகின மாட்டேன்றாய்ங்க

ஓ நம்ம யூத்தோ?

அடுத்த யூத் வர வரைக்கும் வெயிட்டிங்க்....

சரிங்கடி நடத்துங்க....

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said..
/வசந்த் வேற லைன்ல இருக்கார்... பார்க்கலாம் என்னா ஆகுதுன்னு/

அவரு ரொம்ப நேரமா இருக்காரு. கும்மிக்கு ஆளில்லாம. என்ன சொல்லுது அழிம்புன்னு.:))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said.

/ஆஃபீஸ் நேரத்தில் சினிமா... ம்.. நடக்கட்டும், நடக்கட்டும்./

அருமையான படங்கள் வந்த நேரம் அது.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...
/சந்தோசமில்லப்பு...ஒரு அனுதாபம் தெரிவிக்கலாமுன்னுதான்.../

யாரு நீய்யி. அனுதாபம்.:))

ப்ரியமுடன் வசந்த் said...

//அருமையான படங்கள் வந்த நேரம் அது. //

ஹி ஹி ஹி...

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/சரிங்க பழமை ஐயா மாத்திடலாம்

பாருங்களேன் இவ்ளோ சொல்லிட்டு இருக்கேன் ஆள் கண்ணாடிய நல்லா தேச்சுட்டு ஒரு சிரிப்பு சிரிச்சுக்கிட்டே இன்பாக்ஸ் படிச்சுட்டு இன்னும் ரிப்ளை பண்ணாம இருக்கு பாத்தீங்களா இதுதான் அழும்புன்னேன்..../

இது வேறயா! இவ்ளோ கும்மி நடக்குதுன்னா பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா.

ப்ரியமுடன் வசந்த் said...

// இவ்வளவு சோகத்த சுமந்துகிட்டு பெக்கு போடாம ப்ளாக் போடுறான் ஒருத்தன். பாராட்டாம மிறட்ராய்ங்க வசந்து. அவ்வ்வ்வ்..//

ஓய்...பெக்கா வயசான காலத்துல அந்த பக்கம் போன பிச்சிப்புடுவேன் பிச்சு....

vasu balaji said...

பழமைபேசி said...

// இராகவன் நைஜிரியா said...
ஒரு சுய தம்பட்டம்...

உங்களுக்கு நான் தமிழிஷில் நான் போட்ட என்னுடைய 8,000 வது ஓட்டு...
//

நான் சந்தேகப்பட்டதுக்கு ஆதாரம் இதுங்களா? எப்பூடி??//


ஆஹா. அப்ப எனக்கில்லையா..அவ்வ்வ்வ்

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/
ஹி ஹி ஹி.../

அட இளிக்காத. ஒரு அடி தூரத்துலயே கத்திரி போட்றுவாய்ங்க. கதை மட்டும்தான் அப்பல்லாம்.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

//பார்டா பெரிசெல்லாம் ஒன்னு கூடிட்டு நம்மளை கண்டுகின மாட்டேன்றாய்ங்க

ஓ நம்ம யூத்தோ?

அடுத்த யூத் வர வரைக்கும் வெயிட்டிங்க்....

சரிங்கடி நடத்துங்க....//

தெரியுதா. நாந்தான் உன் கூட பேசிட்டிருக்கேன். என்ன போய் பெருசுங்க கூட சேர்க்கறியேப்பா.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ஓய்...பெக்கா வயசான காலத்துல அந்த பக்கம் போன பிச்சிப்புடுவேன் பிச்சு....//

ம்கும். வயசு காலத்துலயே போனதில்லை. இப்போ போறமாக்கு.

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

// பழமைபேசி said...
நான் சொல்ல வந்தது ஓட்டுங்க!!///

ஓட்டாஆஆஆஆஆஆஆஆ..

மாப்பு வேணா....ம்ம்ம்

இப்பத்தான் மறந்திருக்கேன்...

திரும்பவும் கெளப்பிவிட்றாதீங்க//

அட போங்க. நேத்து காலைல நாங்களே மேல் போங்கடே போட்டு தமிழ்மணத்தில என் ஓட்டு போட்டு ரெஃப்ரெஷ் பண்றேன், என் அன்பான எதிரி காத்திருந்து எதிர் ஓட்டுங்க. 1/2னு வருது. சத்தியமா படிச்சிருக்க கூட முடியாது:))

vasu balaji said...

/பழமைபேசி said...

அல்டீப்பு, அசால்ட்டு, அப்பங்க் குதிர்குள்ள இல்ல, இதுகள்ல எந்த ஒன்னுக்கு யார் ஒருவர் விளக்கம் சொன்னாலும், உங்களுக்கு ஒரு பரிசு இருக்கு//

அசால்டு=அதிரடியா சொல்றது
அப்பங்குதிருக்குள்ள இல்லை=தானே வாய விட்டு மாடிக்கிறது.
அல்டீப்பும் அல்டீசும் ஒன்னா தெரியல. ஒன்னுன்னா அலட்டல்.

ப்ரியமுடன் வசந்த் said...

// என் அன்பான எதிரி காத்திருந்து எதிர் ஓட்டுங்க. 1/2னு வருது. சத்தியமா படிச்சிருக்க கூட முடியாது:)) //

ஹெ ஹெ ஹே

அப்பிடியா சங்கதி இனிமேல் நானும் எதிர் கட்சிதான் ......

ப்ரியமுடன் வசந்த் said...

அசால்ட்டு = அலட்சியம்...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/அர்த்தம் சொல்வது எல்லாம் ஐயா பழமை பேசி அவர்கள் மட்டும்தான்... அதுக்கு நான் இல்லை...//

அதானே. நாமெல்லாம் தருமிங்க தானே. அதென்ன என்ன இழுத்து விட்டு எல்லாரும் எஸ்ஸாயிட்டீங்க.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ஹெ ஹெ ஹே

அப்பிடியா சங்கதி இனிமேல் நானும் எதிர் கட்சிதான் ......//

வகுந்துருவேன். எனக்கு யார் யார் ஓட்டு போடுறான்னு தெரியும்.:))

ப்ரியமுடன் வசந்த் said...

எங்க போயிட்டாக அவுக எல்லாம்?

சுவிஸ் ராணியும் காணோம்?

சரி விடு நைனா இன்னிக்கு அம்புட்டுத்தேன்னு நினைக்கிறேன்...

போயி தூங்கு....

vasu balaji said...

KALYANARAMAN RAGHAVAN said...


/இப்படி படிக்கனுங்களா? நீங்களும் நம்மளை மாதிரி அரசு ஊழியரா? ஆபீஸ் வேலைகளை பத்தி நல்லா சொன்னீங்க. அருமையான பதிவு.//

இல்லீங்க. பூந்தது யார்னு தெரியாம எனக்கு விழுந்துச்சு.:))

நன்றிங்க.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
பிரியமுடன்...வசந்த் said...

/ஹெ ஹெ ஹே

அப்பிடியா சங்கதி இனிமேல் நானும் எதிர் கட்சிதான் ......//

வகுந்துருவேன். எனக்கு யார் யார் ஓட்டு போடுறான்னு தெரியும்.:))//

ஆமாம். நானும் சொல்லிப்புட்டேன். அண்ணே எங்கிட்ட சொல்லுங்க அண்ணே உங்களுக்கு யார் எல்லாம் எதிர் ஓட்டுப் போடறாங்கண்ணு... நானும் அவங்களுக்கு எல்லாம் எதிரி ஓட்டுப் போட்டுவிடுகின்றேன்

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...
/அர்த்தம் சொல்வது எல்லாம் ஐயா பழமை பேசி அவர்கள் மட்டும்தான்... அதுக்கு நான் இல்லை...//

அதானே. நாமெல்லாம் தருமிங்க தானே. அதென்ன என்ன இழுத்து விட்டு எல்லாரும் எஸ்ஸாயிட்டீங்க.//

இல்லீங்க.. அரவிந்த் கணினி வேணும் அப்படின்னு கேட்டார். அதனால் வெளியே போக வேண்டியாதாயிடுச்சுங்க

இராகவன் நைஜிரியா said...

யார் யார் எல்லாம் இருக்கீங்க...

எல்லோரும் ஒரு ப்ரசண்ட் சொல்லுங்கப்பு... யார் இருக்கீங்கன்னு தெரியவே மாட்டேங்கது..

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்

/சரி விடு நைனா இன்னிக்கு அம்புட்டுத்தேன்னு நினைக்கிறேன்...

போயி தூங்கு..../

சரி.:)) பார்க்கலாம்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said.

/ஆமாம். நானும் சொல்லிப்புட்டேன். அண்ணே எங்கிட்ட சொல்லுங்க அண்ணே உங்களுக்கு யார் எல்லாம் எதிர் ஓட்டுப் போடறாங்கண்ணு... நானும் அவங்களுக்கு எல்லாம் எதிரி ஓட்டுப் போட்டுவிடுகின்றேன்/

:)). எனக்கு ஒன்னே ஒன்னு. கதிருக்கு 5.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said..

/இல்லீங்க.. அரவிந்த் கணினி வேணும் அப்படின்னு கேட்டார். அதனால் வெளியே போக வேண்டியாதாயிடுச்சுங்க/

ஆமாங்க. அவங்களுக்கு முதல்ல குடுக்கணும். நாமதான் இதுகூடவே இருக்கோமே. மெதுவா நடத்தலாம். என்ன படிக்கறாருங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

//)). எனக்கு ஒன்னே ஒன்னு. கதிருக்கு 5. //

கதிரு சொல்லவேயில்லை

பாவம் நீங்க இன்னுமா போலீஸ் உங்களை பிடிச்சு உள்ளார போடலை...?

:))))))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/யார் யார் எல்லாம் இருக்கீங்க...

எல்லோரும் ஒரு ப்ரசண்ட் சொல்லுங்கப்பு... யார் இருக்கீங்கன்னு தெரியவே மாட்டேங்கது../

நீங்க, நானு, வசந்த்.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/கதிரு சொல்லவேயில்லை

பாவம் நீங்க இன்னுமா போலீஸ் உங்களை பிடிச்சு உள்ளார போடலை...?

:))))))//

இடுகையே போட்டாரு. சொல்லலயாம்ல. என்ன எதுக்கு உள்ள போடுறது

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

ஆமாங்க. அவங்களுக்கு முதல்ல குடுக்கணும். நாமதான் இதுகூடவே இருக்கோமே. மெதுவா நடத்தலாம். என்ன படிக்கறாருங்க. //

இங்கு SS1 (Senior Secondary 1) படிக்கின்றார்ங்க. அதாவது நம்மூர் 10 வது என்றுச் சொல்லலாம்.

இங்கு Primary - 6 Years, Junior Secondary - 3 Years, Senior Secondary - 3 years.

ப்ரியமுடன் வசந்த் said...

நான் உங்க ரங்கமணிதான் எதிர் ஓட்டு போட்டுட்டாங்கன்னி நினைச்சுட்டேன்...

அன்பான எதிரின்னு சொன்னீங்களே

ஹ ஹ ஹா

:)))))

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...
//)). எனக்கு ஒன்னே ஒன்னு. கதிருக்கு 5. //

கதிரு சொல்லவேயில்லை

பாவம் நீங்க இன்னுமா போலீஸ் உங்களை பிடிச்சு உள்ளார போடலை...?

:)))))) //

அய்யோ, அய்யோ வசந்து...சிரிப்பு சிரிப்பா வருதுங்க..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
பிரியமுடன்...வசந்த் said...

/கதிரு சொல்லவேயில்லை

பாவம் நீங்க இன்னுமா போலீஸ் உங்களை பிடிச்சு உள்ளார போடலை...?

:))))))//

இடுகையே போட்டாரு. சொல்லலயாம்ல. என்ன எதுக்கு உள்ள போடுறது //

அண்ணே அவர் என்னச் சொல்ல வர்றார்னு உங்களுக்குப் புரியலையா...

கதிருக்கு 5 அப்படின்னு சொன்னதை வேற மாதிரி அர்த்தம் பண்ணிகிட்டாரு !! :)

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/யார் யார் எல்லாம் இருக்கீங்க...

எல்லோரும் ஒரு ப்ரசண்ட் சொல்லுங்கப்பு... யார் இருக்கீங்கன்னு தெரியவே மாட்டேங்கது../

நீங்க, நானு, வசந்த். //

வசந்து இருந்துமா... கும்மி மெதுவா போயிகிட்டு இருக்கு?

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...
நான் உங்க ரங்கமணிதான் எதிர் ஓட்டு போட்டுட்டாங்கன்னி நினைச்சுட்டேன்...

அன்பான எதிரின்னு சொன்னீங்களே

ஹ ஹ ஹா

:))))) //

ஓ இப்படியெல்லாம் வேற நடக்குதா?

இராகவன் நைஜிரியா said...

மீ த 100

இராகவன் நைஜிரியா said...

100 பின்னூட்டம் கண்ட அண்ணன் பாலா வாழ்க...

(ஊருக்கு வந்து செட்டில் ஆகும் போது ஒரு சப்போர்ட் வேணுமில்ல.. அதுக்கு இப்பவே ஒரு வாழ்க கோஷம் போட்டு வச்சுகிடுறேன்..)

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said
/அய்யோ, அய்யோ வசந்து...சிரிப்பு சிரிப்பா வருதுங்க../
/அண்ணே அவர் என்னச் சொல்ல வர்றார்னு உங்களுக்குப் புரியலையா...

கதிருக்கு 5 அப்படின்னு சொன்னதை வேற மாதிரி அர்த்தம் பண்ணிகிட்டாரு !! :)/

அதுக்கு என்ன ஏன் புடிச்சி உள்ள போடணும்னு :))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said

/வசந்து இருந்துமா... கும்மி மெதுவா போயிகிட்டு இருக்கு?/

அவுட் ஆஃப் ஃபார்ம் போல:))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/100 பின்னூட்டம் கண்ட அண்ணன் பாலா வாழ்க...

(ஊருக்கு வந்து செட்டில் ஆகும் போது ஒரு சப்போர்ட் வேணுமில்ல.. அதுக்கு இப்பவே ஒரு வாழ்க கோஷம் போட்டு வச்சுகிடுறேன்..)//

அப்படின்னா எனக்கு மட்டும் சொல்லிட்டு வாங்க. இல்லைன்னா கும்பல்ல நான் காணாம போய்டுவேன்:))

ப்ரியமுடன் வசந்த் said...

அவுட் ஆஃப் ஃபர்மில்ல நைனா

இன் ஆஃப் ஃபார்ம்

புரியலியா

ஃபேஸ்புக்ல விவசாயம் பண்ணிட்டு இருக்கேன்...

நானும் ஒரு விவசாயி தெரியும்ல

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said
/இங்கு SS1 (Senior Secondary 1) படிக்கின்றார்ங்க. அதாவது நம்மூர் 10 வது என்றுச் சொல்லலாம்.

இங்கு Primary - 6 Years, Junior Secondary - 3 Years, Senior Secondary - 3 years./

ம்ம்.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

//அவுட் ஆஃப் ஃபர்மில்ல நைனா

இன் ஆஃப் ஃபார்ம்

புரியலியா

ஃபேஸ்புக்ல விவசாயம் பண்ணிட்டு இருக்கேன்...

நானும் ஒரு விவசாயி தெரியும்ல//

அது சரி. ஒன்னும் விட்டு வைக்கிறதில்லையா?:))

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...
அவுட் ஆஃப் ஃபர்மில்ல நைனா

இன் ஆஃப் ஃபார்ம்

புரியலியா

ஃபேஸ்புக்ல விவசாயம் பண்ணிட்டு இருக்கேன்...

நானும் ஒரு விவசாயி தெரியும்ல //

ஓ இது வேறயா...

நடக்கட்டும்... விவசாயம் நன்கு செய்ய வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
பிரியமுடன்...வசந்த் said...

//அவுட் ஆஃப் ஃபர்மில்ல நைனா

இன் ஆஃப் ஃபார்ம்

புரியலியா

ஃபேஸ்புக்ல விவசாயம் பண்ணிட்டு இருக்கேன்...

நானும் ஒரு விவசாயி தெரியும்ல//

அது சரி. ஒன்னும் விட்டு வைக்கிறதில்லையா?:)) //

மாஸ்டர் ஆஃப் ஆல்... ஆல் இன் ஆல் அழகு ராஜா..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஓ இது வேறயா...

நடக்கட்டும்... விவசாயம் நன்கு செய்ய வாழ்த்துகள்.//

அதும் ஃபேஸ்புக்ல. :))

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said
/அய்யோ, அய்யோ வசந்து...சிரிப்பு சிரிப்பா வருதுங்க../
/அண்ணே அவர் என்னச் சொல்ல வர்றார்னு உங்களுக்குப் புரியலையா...

கதிருக்கு 5 அப்படின்னு சொன்னதை வேற மாதிரி அர்த்தம் பண்ணிகிட்டாரு !! :)/

அதுக்கு என்ன ஏன் புடிச்சி உள்ள போடணும்னு :)) //

நாம எல்லாம் ஒன்னுகுள்ள ஒன்னு இல்ல... அதனால் துணைக்கு உங்களையும், முடிஞ்சா என்னையும்...........

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/ஓ இது வேறயா...

நடக்கட்டும்... விவசாயம் நன்கு செய்ய வாழ்த்துகள்.//

அதும் ஃபேஸ்புக்ல. :)) //

ஆமாம்... விட்டா நம்ம ஃபேஸ், தலை எல்லாத்திலேயும் செய்வாருங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

//
ஆமாம்... விட்டா நம்ம ஃபேஸ், தலை எல்லாத்திலேயும் செய்வாருங்க...//

ராகவன் சார் உங்க தலையில விவசாயம் பண்ணமுடியாது..

ஆனா நம்ம நைனா தலையில பண்ணலாம் பாருங்க ட்ராக்டர்ல உழுத நிலமாட்டம் தலைய...

:))))

இராகவன் நைஜிரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...
//
ஆமாம்... விட்டா நம்ம ஃபேஸ், தலை எல்லாத்திலேயும் செய்வாருங்க...//

ராகவன் சார் உங்க தலையில விவசாயம் பண்ணமுடியாது..

ஆனா நம்ம நைனா தலையில பண்ணலாம் பாருங்க ட்ராக்டர்ல உழுத நிலமாட்டம் தலைய...

:)))) //

தம்பி வசந்த்... மூளை இருக்கின்றவர்களுக்கு வழுக்கை விழுமாம்...

என்னைப் போய் அண்ணன் கூட கம்பேர் செய்றீங்களே.. இது நியாயமா..

நானே பின்னூட்டமும், ஓட்டும் போட்டு பொழைப்பை ஓட்டுகின்ற ஆள்.. அவர் இடுகை போட்டு பேர் வாங்குபவர்...

என்னங்க இது..

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்

/ராகவன் சார் உங்க தலையில விவசாயம் பண்ணமுடியாது..

ஆனா நம்ம நைனா தலையில பண்ணலாம் பாருங்க ட்ராக்டர்ல உழுத நிலமாட்டம் தலைய...

:))))/

பாறைல விவசாயம் பண்றாராம்ல. இதுல தெரியுது உன் விவசாய டெக்கினிக்கு:)) ட்ராக்டர் உழுத நிலம் பார்த்தாவது இருக்கியா வசந்த்?

ப்ரியமுடன் வசந்த் said...

நைனா யாஹூ மெயில் ஓபன் பண்ணுப்பி ட்ராக்டர்ல உழுத நிலம் எப்பிடியிருக்கும்ன்னு தெரியும்!!!!

:))))

vasu balaji said...

இராகவன், நைஜிரியா
/தம்பி வசந்த்... மூளை இருக்கின்றவர்களுக்கு வழுக்கை விழுமாம்...

என்னைப் போய் அண்ணன் கூட கம்பேர் செய்றீங்களே.. இது நியாயமா..

நானே பின்னூட்டமும், ஓட்டும் போட்டு பொழைப்பை ஓட்டுகின்ற ஆள்.. அவர் இடுகை போட்டு பேர் வாங்குபவர்...

என்னங்க இது..//

இந்த டாபிக் நாளைக்கு இடுகை.:))

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

//நைனா யாஹூ மெயில் ஓபன் பண்ணுப்பி ட்ராக்டர்ல உழுத நிலம் எப்பிடியிருக்கும்ன்னு தெரியும்!!!!

:))))//

இது சரி:)). ஆனா என் தலை இப்புடி இல்லையே.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said.

/ஆமாம்... விட்டா நம்ம ஃபேஸ், தலை எல்லாத்திலேயும் செய்வாருங்க...//

பேருக்கு நாலு இருந்திச்சி. ஐலசா படிச்சிட்டு பார்க்குறேன். எல்லாம் தரைல. அவ்வ்வ்வ்

ப்ரியமுடன் வசந்த் said...

ஹ ஹ ஹா

நைனா போதும் வயிறு வலிக்குது சிரிச்சு

தாங்ஸ்...மீண்டும் நாளை சந்திப்போம்........உன்னிய பாக்கணும்போல இருக்கு ம்ம் வெயிட்டுடி வர்றேன் எண்ணி மூணே மாசம்தான் வந்து இதுக்கெல்லாம் உனக்கு இருக்கு நேர்ல வந்து குடுக்குறேன் பரிசு...

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

// ஹ ஹ ஹா

நைனா போதும் வயிறு வலிக்குது சிரிச்சு

தாங்ஸ்...மீண்டும் நாளை சந்திப்போம்........உன்னிய பாக்கணும்போல இருக்கு ம்ம் வெயிட்டுடி வர்றேன் எண்ணி மூணே மாசம்தான் வந்து இதுக்கெல்லாம் உனக்கு இருக்கு நேர்ல வந்து குடுக்குறேன் பரிசு...//

வாம்மா வா:)). சூப்பரா நானே சமைச்சு மணக்க மணக்க சாம்பார் சாதம் தரேன்.

ஈ ரா said...

//வீட்டில வந்து குற்றாலம் போறோம்னு சொன்னதுதான். ஏன் நாங்க வந்தா குற்றாலத்துல சேர்க்க மாட்டாங்களான்னு ஆரம்பிச்சது.//

நியாயம் தானப்பு..

//அதே அலுவலகத்தில வேலை செய்யிறவங்க தங்கமணியா வாய்ச்சது ஆரம்பத்துல நல்லாத்தான் இருந்திச்சி.//

இதப்பத்தி ஒரு பதிவப் போடுங்க முதல்ல...

//வேற என்ன பண்ண டி.வி.எஸ். 50 ல ஒன்னா ஆஃபீஸ் வந்துட்டு நான் சினிமா போறேன். நீ பஸ்ல போய்க்கன்னா சோத்துக்கு எங்க போறது?//

சோத்துக்கு என்ன பன்றதுன்னு, அம்மையார்தான் கேப்பாங்க?

//ஒரு நாள் தயிர் சாதம் கட்டிட்டு ஊறுகா வைக்கலயேம்மான்னு கேட்டேன் ஆஃபீஸ்ல. இந்த ஃபைல் அர்ஜண்டா கேக்கறாங்க. கையெழுத்து போடுறீங்களான்னாங்க. அஃபிஷியலா பேசறாங்களாமா! இன்னோரு நாள், ஃபைல்ல காண்பிச்சி, இந்த ரூல் கிளியராதானே இருக்கு. நீங்க என்னா எழுதியிருக்கிங்கங்கறேன், சாரி, வெறும் ரசம் வெச்சிருக்கேன். புடலங்கா கூட்டு உங்களுக்குப் பிடிக்காதில்லை. சைட் டிஷ் ஏதாவது வாங்கிக்கோங்கன்னு போறாங்க. லஞ்ச் டைம் ஆயிடுச்சாம்.

நீ அப்புடி வரியான்னு, வீட்ல வந்து என்னாம்மா பண்ண, அவ்ளோ புரியாம போக அதில என்ன இருக்குன்னு ஆரம்பிக்கவே, ஆஃபீஸ் வேலைய வீட்டுக்கு கொண்டு வராதீங்கன்னு அட்வைசு!//

நீங்க தான தயிர் சாதம் வச்சது... அப்புறம் என் ஊர்காயை வைக்கல?

//வ்வளவு சோகத்த சுமந்துகிட்டு பெக்கு போடாம ப்ளாக் போடுறான் ஒருத்தன். பாராட்டாம மிறட்ராய்ங்க வசந்து. அவ்வ்வ்வ்..
//

அதாஞ்ச்செரி

தமிழ் நாடன் said...

///இவ்வளவு சோகத்த சுமந்துகிட்டு பெக்கு போடாம ப்ளாக் போடுறான் ஒருத்தன். பாராட்டாம மிறட்ராய்ங்க வசந்து. அவ்வ்வ்வ்..///

இதுதான் டாப்பு!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாலாண்ணே, சுவாரஸ்யமா இருந்ததுங்க.. நல்ல கொசுவர்த்தி இடுகை.

என்னங்க இது? ஒரே கும்மியா இருக்கு? 120 பின்னூட்டம்னு பாத்தாவே கண்ணக் கட்டுது :)

vasu balaji said...

ஈ ரா said...
/சோத்துக்கு என்ன பன்றதுன்னு, அம்மையார்தான் கேப்பாங்க? /

/நீங்க தான தயிர் சாதம் வச்சது... அப்புறம் என் ஊர்காயை வைக்கல? /

கம்பெனி ரகசியமெல்லாம் வெளிய சொல்லப்படாது:))

vasu balaji said...

தமிழ் நாடன் said...

ஹி ஹி. வாங்க தமிழ் நாடன்.

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) sa
/என்னங்க இது? ஒரே கும்மியா இருக்கு? 120 பின்னூட்டம்னு பாத்தாவே கண்ணக் கட்டுது :)/

ஆமாங்க. செம கும்மி. கதிர் பராக் சொல்லிட்டு பழமை கூட எஸ்ஸாயிட்டாரு:))

கண்ணகி said...

தீபாவளி வாழ்த்துக்கு நன்றி. என்ன அருமையான சந்தர்ப்பம் கிடைத்த்ருக்கிறது. எங்க அண்ணியாரைச சொன்னேன். எனக்கு மட்டும் இப்படி ஒரு சான்ஸ் கிடைத்திருந்தால் வீடு கட்டி விளையாடி இருப்பேன். உங்கள் குடுமி அவர் கையில். இருந்தாலும் நீங்கள் பாவம்தான். விதி வலியது. மனதைத் தேற்றிக கொள்ளுங்கள்.

vasu balaji said...

வாங்க பிரபாகர். எங்க காணோமேன்னு பார்த்தேன்.

vasu balaji said...

/ வாத்துக்கோழி said...

தீபாவளி வாழ்த்துக்கு நன்றி. என்ன அருமையான சந்தர்ப்பம் கிடைத்த்ருக்கிறது. எங்க அண்ணியாரைச சொன்னேன். எனக்கு மட்டும் இப்படி ஒரு சான்ஸ் கிடைத்திருந்தால் வீடு கட்டி விளையாடி இருப்பேன். உங்கள் குடுமி அவர் கையில். இருந்தாலும் நீங்கள் பாவம்தான். விதி வலியது. மனதைத் தேற்றிக கொள்ளுங்கள்./

நன்றிங்கம்மா. ஹெ ஹெ. குடுமியே இல்லை. இதில அவங்க கைலயாம்ல=))

ராஜ நடராஜன் said...

//11.15 க்கு மெதுவா செக்ஷன் ஆஃபீஸர் கிட்ட சார் பாரீஸ் கார்னர் போய்ட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு பஸ் புடிச்சி அங்க போனா 11.45 கு டிக்கட் குடுப்பாங்க. 12க்கு படம் போடுவாங்க. விளம்பரம்லாம் போடமாட்டாங்க. சரியா 1.30கு முடிஞ்சிடும். சத்தம் போடாம வந்து சாப்பிட்டு வேல பார்க்குறது.//

இப்படியெல்லாம் கூட டெக்னிக் இருக்குதா:))))

ஈ ரா said...

//ஹெ ஹெ. குடுமியே இல்லை. இதில அவங்க கைலயாம்ல=))/

ISR Selvakumar said...

யம்மாடி..ஒரு கமெண்டு போடறதுக்கு இவ்வளவு பேர தாண்டி வரணுமா? கமெண்டுகளும் மணிதான்.

vasu balaji said...

ராஜ நடராஜன்
/இப்படியெல்லாம் கூட டெக்னிக் இருக்குதா:))))/

ஆமாம் சார். ப்ச். நல்ல தியேட்டர். போயே போச்சு.

vasu balaji said...

r.selvakkumar said...

/யம்மாடி..ஒரு கமெண்டு போடறதுக்கு இவ்வளவு பேர தாண்டி வரணுமா? கமெண்டுகளும் மணிதான்./

முதல் வரவுக்கு நன்றி செல்வக்குமார். =))

துபாய் ராஜா said...

கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை குதிச்சி, குதிச்சி ஆடுச்சாம்.... :))

வீட்டுல பண்ணுற டார்ச்சரே எங்களாலே தாங்க முடியலை. 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்துல இருக்கிறதை நினைச்சு கூட பார்க்கமுடியலை. நீங்க தெய்வம் சார்... :))

vasu balaji said...

துபாய் ராஜா said...
/வீட்டுல பண்ணுற டார்ச்சரே எங்களாலே தாங்க முடியலை. 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்துல இருக்கிறதை நினைச்சு கூட பார்க்கமுடியலை. நீங்க தெய்வம் சார்... :))/

அது இந்த வசந்துக்கு புரியுதா. ஏன் தூங்கலைன்னு திட்டுறாரு.=))