Saturday, October 31, 2009

நானும் தீபாவளியும்!

பதிவுலகப் பாசமலர் நைஜீரியா இராகவன் நானும் தீபாவளியும் என்ற தலைப்பில் எழுதிய தொடர் இடுகைக்கான அழைப்பை ஏற்று என் இடுகை இது. அண்ணன் சொன்னா மாதிரியும் சொல்லலாம். இதில் பொய் சொல்ல ஒன்றும் வழியில்லாததால் அனைத்தும் உண்மைன்னும் சொல்லலாம்.இஃகி இஃகி.

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

    பெருசா எழுதினாலும் இவ்வளவுதான். 52 வயது. தென்னக இரயில்வேயில் மூத்த துணை நிதி ஆலோசகர். தங்கமணி அறிமுகம் முடிந்தது முன்னமே.  மகன் மெகானிகல் எஞ்ஜினீயர் தற்போது அரிஜோனாவில் எம்.எஸ் படிக்கிறார். மகள் இரண்டாம் ஆண்டு பொறியியல் சிவில் படிக்கிறார்.

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

பத்து வயதில் ஒரு ஆம்பிளைப்பிள்ளைக்கு வெறும் மத்தாப்பு வாங்கிக் கொடுக்கிறார்களே என்ற கடுப்பில், புத்தாடையணிந்து உர்ரென வாசலில் நின்றிருக்க, எதிர் வீட்டு மாமா ஏரோப்ளேன் வெடிக்க பயப்பட்டு என்னை அழைக்க, ஆஹா வாழ்க்கையில் மத்தாப்பு தவிர கண்டிராத எனக்கு ஏரோப்ளேன் பட்டாசா என்ற குஷியில், சரியாக அதற்கு மேல் குனிந்து கொண்டு வைக்க, அது என்னையே சுற்றி வந்து சட்டை, நிஜார்,உடம்பு என்று கரியடித்தது.

அம்மா கொன்னுடுவான்னு அழுத என்னைக் கடத்திப்போய், துணியை உருவித் துவைத்து, டேபிள் ஃபேனில் அரைகுறையாய்க் காய வைத்து வெளியில் விட்டார்கள். அது வரை துண்டு கட்டிக்கொண்டிருந்த புத்தாடை களைய வைத்த தீபாவளி.

3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

   சென்னையில்தான்.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

    எப்பொழுதும் போல் அடுத்தவரைப் பற்றிக் கவலைப் படாத பட்டாசு வெடிப்புகள். வயது வேறு பாடில்லாத டாஸ்மாக் படையெடுப்புகள். தொலைக்காட்சி அடிமைகள்.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

    நான் கொண்டாடவில்லை. வாங்கவும் இல்லை. மனைவியும் மகளும் எங்கு வாங்கினார்களோ தெரியாது.

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

   ரெண்டுமில்லை. ஓசியில் வந்த க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா.

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல்,   தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

   இல்லை. எதிர்பாராத விதமாக யாரும் வாழ்த்துச் சொல்லி கடனே என்று சொல்ல வேண்டிய நிர்பந்தமும் வரவில்லை.

8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

    அதிகபட்சம் பட்டிமன்றம் பார்ப்பதுண்டு. சாப்பாடு, தூக்கம், படித்தல் இப்போது வலைமனை.

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

அலுவலகத்தில் ஒரு சமூக சிந்தனையாளர் ஒருங்கிணைத்து உதவுவதில் பங்கேற்பது. இராம கிருஷ்ண ஆத்மாலயம்  என்ற தொண்டு நிறுவனத்தில் இந்த முறை கொண்டாடினார்கள்.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

     நான் அழைக்காமல் தவிர்க்கும் காரணம் கலகலப்ரியா, கதிர், பிரபாகர் அவர்களுக்குப் புரியும்.  எனவே இளைய தலைமுறை க. பாலாசி, நைனா என என்னை அழைக்கும் பாசமுடன்....வசந்த்  ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர அழைக்கிறேன்.

59 comments:

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்டோய்...

இராகவன் நைஜிரியா said...

// அண்ணன் சொன்னா மாதிரியும் சொல்லலாம். இதில் பொய் சொல்ல ஒன்றும் வழியில்லாததால் அனைத்தும் உண்மைன்னும் சொல்லலாம்.இஃகி இஃகி. //

அண்ணே.. இது சூப்பர் அண்ணே... நான் எல்லாமே உண்மையைத்தாங்க சொல்லியிருக்கேன்

இராகவன் நைஜிரியா said...

// அது என்னையே சுற்றி வந்து சட்டை, நிஜார்,உடம்பு என்று கரியடித்தது. //

அது சரி... அதன் வழியில் நின்னுகிட்டு இருந்தா அது அப்படித்தான் பண்ணும்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/மீ த பர்ஸ்டோய்.../

வாங்க பதிவுலகப் பாசமலரே:))

இராகவன் நைஜிரியா said...

// 4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

எப்பொழுதும் போல் அடுத்தவரைப் பற்றிக் கவலைப் படாத பட்டாசு வெடிப்புகள். வயது வேறு பாடில்லாத டாஸ்மாக் படையெடுப்புகள். தொலைக்காட்சி அடிமைகள். //

நச் பதில்..

ஈரோடு கதிர் said...

// அது என்னையே சுற்றி வந்து சட்டை, நிஜார்,உடம்பு என்று கரியடித்தது. //

அப்பவும் எங்க தலைவர் வெண்ண தப்பிச்சிட்டார் பாருங்க

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே.. இது சூப்பர் அண்ணே... நான் எல்லாமே உண்மையைத்தாங்க சொல்லியிருக்கேன்/

அதுல சந்தேகமேயில்லை. உங்க இடுகையில நான் சொன்னா மாதிரி தங்கமணி படிக்கிறதால உண்மைன்னாதான் இஃகி.

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
வாங்க பதிவுலகப் பாசமலரே://

அப்போ நாங்க எல்லாம் வாச மலரோ!!!???

இஃகிஃகி

இராகவன் நைஜிரியா said...

// இல்லை. எதிர்பாராத விதமாக யாரும் வாழ்த்துச் சொல்லி கடனே என்று சொல்ல வேண்டிய நிர்பந்தமும் வரவில்லை. //

இது இன்னும் சூப்பர். வெளிப்படையான பதில். உங்கள் பதில்கள் அனைத்தும் அருமை.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said

/அது சரி... அதன் வழியில் நின்னுகிட்டு இருந்தா அது அப்படித்தான் பண்ணும்/

ஏரோப்ளேன் காலத்துலயே சாடிலைட் விட்டத யாரும் பாராட்ட மாட்டாய்ங்க.அவ்வ்வ்

இராகவன் நைஜிரியா said...

//
அலுவலகத்தில் ஒரு சமூக சிந்தனையாளர் ஒருங்கிணைத்து உதவுவதில் பங்கேற்பது. இராம கிருஷ்ண ஆத்மாலயம் என்ற தொண்டு நிறுவனத்தில் இந்த முறை கொண்டாடினார்கள். //

இது சூப்பர்ங்க.

இராகவன் நைஜிரியா said...

// நான் அழைப்பைத் தவிர்க்கும் கலகலப்ரியா, கதிர், பிரபாகர் அவர்களுக்குக் காரணம் புரியும். //
சரிங்கண்ணே..

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...
/அப்பவும் எங்க தலைவர் வெண்ண தப்பிச்சிட்டார் பாருங்க/

ஹி ஹி. அவரு பயந்து போய் பல்லி மாதிரி அம்மாட்ட ஒட்டினவருதான்.

இராகவன் நைஜிரியா said...

// கதிர் - ஈரோடு said...
// அது என்னையே சுற்றி வந்து சட்டை, நிஜார்,உடம்பு என்று கரியடித்தது. //

அப்பவும் எங்க தலைவர் வெண்ண தப்பிச்சிட்டார் பாருங்க //

எங்க அண்ணனை மாட்டிவிட்டு தப்பிச்சுகிறதல் வெண்ணை பெரிய ஆள் என்று எங்களுக்குத் தெரியும்

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/அப்போ நாங்க எல்லாம் வாச மலரோ!!!???

இஃகிஃகி/

ஏன் நேச மலரா இருக்க மாட்டீங்களோ?

இராகவன் நைஜிரியா said...

// கதிர் - ஈரோடு said...
//வானம்பாடிகள் said...
வாங்க பதிவுலகப் பாசமலரே://

அப்போ நாங்க எல்லாம் வாச மலரோ!!!???

இஃகிஃகி //

அண்ணே நீங்க தான் வாடா மலர்..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said.
/இது இன்னும் சூப்பர். வெளிப்படையான பதில். உங்கள் பதில்கள் அனைத்தும் அருமை./

நன்றி.

இராகவன் நைஜிரியா said...

லன்ஞ் டைம் ஆயிடுச்சு... மீதி வீட்டுக்கு போய்..

என்றென்றும் அன்புடன்

இராகவன்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/எங்க அண்ணனை மாட்டிவிட்டு தப்பிச்சுகிறதல் வெண்ணை பெரிய ஆள் என்று எங்களுக்குத் தெரியும்/

ஹியர் ஹியர்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/என்றென்றும் அன்புடன்

இராகவன்/

ஹேவ் எ நைஸ் லஞ்ச்.

க.பாலாசி said...

//தென்னக இரயில்வேயில் மூத்த துணை நிதி ஆலோசகர்//

ஓ.கோ...அப்பவே அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்போல....நீங்க ‘மூத்தவர்’னு....சரிதான்.

//அது என்னையே சுற்றி வந்து சட்டை, நிஜார்,உடம்பு என்று கரியடித்தது.//

ஓசி ஏரோப்ளேன்லாம் கொளுத்தினா இப்படித்தான்.

//நான் அழைப்பைத் தவிர்க்கும் கலகலப்ரியா, கதிர், பிரபாகர் அவர்களுக்குக் காரணம் புரியும். //

ஆகா...தப்பிச்சிட்டாங்களே.....

என்னையும் மிதிச்சு சாரி....மதிச்சு அழைத்ததற்கு நன்றி அய்யா....

vasu balaji said...

க.பாலாசி said...

/ஓ.கோ...அப்பவே அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்போல....நீங்க ‘மூத்தவர்’னு....சரிதான். /

அது இப்பதான் சாமியோவ். அதெல்லாம் சரியா வரும்.

/ஓசி ஏரோப்ளேன்லாம் கொளுத்தினா இப்படித்தான்./

இது வேற.

/ஆகா...தப்பிச்சிட்டாங்களே...../

இதென்ன தண்டனையா?

/என்னையும் மிதிச்சு சாரி....மதிச்சு அழைத்ததற்கு நன்றி அய்யா..../

அதென்ன என்னையும்?

Suresh Kumar said...

நல்ல பதில்கள் அய்யா

நிஜாம் கான் said...

ராகவன் அண்ணனே ஐடியா குடுத்துட்டு அவரே மீத பஸ்ட்டு எடத்த புடிச்சது மிகப்பெரிய அநியாயம்.இதன் மூலம் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன். மற்றபடி பதில்கள் கலக்கல் சார். போட்டுத்தாக்குங்க.

ஈ ரா said...

ஏரோப்ளேன் எங்கியாவது ஏடாகூடமா பட்டு இருந்தா என்ன ஆவுறது? நல்ல காலம் ; தப்பிசீங்கன்னா!

தமிழ் அமுதன் said...

பதிவு நல்லாருக்கு !


///இளைய தலைமுறை க. பாலாசி, நைனா என என்னை அழைக்கும் பாசமுடன்....வசந்த் ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர அழைக்கிறேன்.///

வசந்து என்ன சேட்டை பண்ண போறாரோ ???

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதில்கள்

தீப்பெட்டி said...

:)

கிரி said...

//தென்னக இரயில்வேயில் மூத்த துணை நிதி ஆலோசகர்//

அடுத்த தீபாவளிக்கு ஊருக்கு வர ரயிலில் டிக்கெட் கிடைக்குமா! ;-)

(சார் சும்மா டமாசு தப்பா எடுத்துக்காதீங்க)

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/மற்றபடி பதில்கள் கலக்கல் சார். போட்டுத்தாக்குங்க./

நன்றிங்க

vasu balaji said...

Suresh Kumar said...

/நல்ல பதில்கள் அய்யா/

வாங்க சுரேஷ் நன்றிங்க.

vasu balaji said...

ஈ ரா said...

/ஏரோப்ளேன் எங்கியாவது ஏடாகூடமா பட்டு இருந்தா என்ன ஆவுறது? நல்ல காலம் ; தப்பிசீங்கன்னா!/

அது சரி:))

vasu balaji said...

ஜீவன் said...

/பதிவு நல்லாருக்கு !/

நன்றி ஜீவன்.

/வசந்து என்ன சேட்டை பண்ண போறாரோ /

:))

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/ நல்ல பதில்கள்/

வாங்க ஐயா. நன்றிங்க.

vasu balaji said...

தீப்பெட்டி said...

/ :)/

:)

vasu balaji said...

கிரி said...
/அடுத்த தீபாவளிக்கு ஊருக்கு வர ரயிலில் டிக்கெட் கிடைக்குமா! ;-)/

டிக்கட்ல ப்ராப்ளமே இல்ல. கேக்குறவங்களுக்கு எல்லாம் குடுப்பாங்க. இடம்தானே ப்ராப்ளம்:))
/(சார் சும்மா டமாசு தப்பா எடுத்துக்காதீங்க)/

தப்பா எடுக்க என்ன இருக்கு. நெட் இருந்தா டிக்கட் எடுக்க ஈஸி. =))

பழமைபேசி said...

//நான் அழைப்பைத் தவிர்க்கும் //

நான் அழைக்கத் தவிர்க்கும்....

ப்ரியமுடன் வசந்த் said...

//பதிவுலகப் பாசமலர் நைஜீரியா இராகவன் //

கரெக்ட்டா சொன்ன நைனா

ப்ரியமுடன் வசந்த் said...

//நான் கொண்டாடவில்லை. வாங்கவும் இல்லை. மனைவியும் மகளும் எங்கு வாங்கினார்களோ தெரியாது.//

உன்னையெல்லாம்..நீயெல்லாம் ஒரு குடும்ப தலைவனா? உனக்கு இந்த பொட்டி தட்டுறதுக்கே நேரம் சரியா இருக்கும் நீ என்ன பண்ணுவ பாவம்?

ப்ரியமுடன் வசந்த் said...

//இல்லை. எதிர்பாராத விதமாக யாரும் வாழ்த்துச் சொல்லி கடனே என்று சொல்ல வேண்டிய நிர்பந்தமும் வரவில்லை.//

பொய் அப்போ எனக்கு பதில் வாழ்த்து சொன்னது உன்னோட ஆவியா?

ப்ரியமுடன் வசந்த் said...

//நான் அழைப்பைத் தவிர்க்கும் கலகலப்ரியா, கதிர், பிரபாகர் அவர்களுக்குக் காரணம் புரியும். எனவே இளைய தலைமுறை க. பாலாசி, நைனா என என்னை அழைக்கும் பாசமுடன்....வசந்த் ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர அழைக்கிறேன்.//

அப்போ பிரியாக்கா ,கதிரண்ணே,பிரபாண்ணே எல்லாரும் பழைய தலைமுறையா?

இப்பிடி என்னிய மாட்டிவிட்டுட்டியே நைனா?

vasu balaji said...

பழமைபேசி said...

/நான் அழைக்கத் தவிர்க்கும்..../

இஃகி. திருத்திட்டேன்.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/கரெக்ட்டா சொன்ன நைனா/

மாத்தி சொல்ல முடியாத தீர்ப்பாச்சே அது.
/உன்னையெல்லாம்..நீயெல்லாம் ஒரு குடும்ப தலைவனா? உனக்கு இந்த பொட்டி தட்டுறதுக்கே நேரம் சரியா இருக்கும் நீ என்ன பண்ணுவ பாவம்?/

நீ வாடி. சும்மா இடுகை போடலாம். பொடவ கடைக்கு போய் உன்ன ஓரம் கட்டுறப்போ தெரியும்.

/
பொய் அப்போ எனக்கு பதில் வாழ்த்து சொன்னது உன்னோட ஆவியா?/

நீ சொன்னப்ப தீபாவளியே வரலியே சாமி.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said.../

பின்னூட்டம் படிக்க மாட்டன்னா என்ன பண்றது. எங்களுக்கு தீபாவளி கொண்டாடப் பிடிக்கலை. நரகாசூரன் சாவலை இன்னும்.

/இப்பிடி என்னிய மாட்டிவிட்டுட்டியே நைனா?/

இதெல்லாம் பெரிய மாட்டலா.

கலகலப்ரியா said...

//நான் அழைக்கத் தவிர்க்கும் கலகலப்ரியா, கதிர், பிரபாகர் அவர்களுக்குக் காரணம் புரியும். //

அழைப்பைத் தவிர்க்கும்.. அழைக்கத் தவிர்க்கும்.. இரண்டுக்கும் வித்யாசம் எனக்கு தெரியல சார்...

அ. அவர்களைத் தவிக்கும் காரணம்.. அவர்களுக்கு புரியும்..
ஆ. அவர்களை அழைக்காதிருக்கும் காரணம்..

பாவம் சார் உங்க பாடு.. "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" போர்ட் போட்டவன் கதையா போச்சு...

கலகலப்ரியா said...

"தவிர்க்கும்" spello.. sry...

vasu balaji said...

கலகலப்ரியா said...
/நான் அழைக்காமல் தவிர்க்கும் காரணம் கலகலப்ரியா, கதிர், பிரபாகர் அவர்களுக்குப் புரியும். /

மாத்திட்டேன். நன்றி.

/பாவம் சார் உங்க பாடு.. "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" போர்ட் போட்டவன் கதையா போச்சு.../

ஹி ஹி. அதான் வடிவேலுவாவே வழுறவன்னு சொன்னியேம்மா அன்னைக்கு. சரியாதான் போய்க்கிருக்கு.

கலகலப்ரியா said...

//அப்போ பிரியாக்கா ,கதிரண்ணே,பிரபாண்ணே எல்லாரும் பழைய தலைமுறையா?//

ஆமாம் வசந்து... நீ என்னோட தம்பியா இருக்கிறதால இளைய தளபதி.. ஐ மீன்.. தலைமுறைன்னு நினைச்சிடப்டாது...

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ஆமாம் வசந்து... நீ என்னோட தம்பியா இருக்கிறதால இளைய தளபதி.. ஐ மீன்.. தலைமுறைன்னு நினைச்சிடப்டாது.../

அதாஞ்செரி. பாக்கலாம் புள்ள எப்படி பரீட்சை எழுதுதுன்னு.

பிரபாகர் said...

நன்றிங்கய்யா! மனதை அப்படியே நூறு சதம் புரிந்திருக்கிறீர்கள்.

உங்களைப்பற்றிய இன்னும் சில விவரங்களை தெரிந்துகொண்டேன்...

பிரபாகர்.

ஈ ரா said...

////தென்னக இரயில்வேயில் மூத்த துணை நிதி ஆலோசகர்//

ஓ.கோ...அப்பவே அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்போல....நீங்க ‘மூத்தவர்’னு....சரிதான். //


அது இப்பதான் சாமியோவ். அதெல்லாம் சரியா வரும்.

டிக்கட்ல ப்ராப்ளமே இல்ல. கேக்குறவங்களுக்கு எல்லாம் குடுப்பாங்க. இடம்தானே ப்ராப்ளம்:))
/(சார் சும்மா டமாசு தப்பா எடுத்துக்காதீங்க)/

//உன்னையெல்லாம்..நீயெல்லாம் ஒரு குடும்ப தலைவனா? உனக்கு இந்த பொட்டி தட்டுறதுக்கே நேரம் சரியா இருக்கும் நீ என்ன பண்ணுவ பாவம்?//

//பொய் அப்போ எனக்கு பதில் வாழ்த்து சொன்னது உன்னோட ஆவியா?//

//பாவம் சார் உங்க பாடு.. "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" போர்ட் போட்டவன் கதையா போச்சு...//

பதிவும் சரி பின்னூட்டங்களும் சரி, மனம் விட்டு சிரிக்க வைக்கிறது...

அசத்தலான குருப் தலைவரே உம்முடையது..

vasu balaji said...

பிரபாகர் said...

/நன்றிங்கய்யா! மனதை அப்படியே நூறு சதம் புரிந்திருக்கிறீர்கள்.

உங்களைப்பற்றிய இன்னும் சில விவரங்களை தெரிந்துகொண்டேன்.../

நன்றி பிரபாகர்

vasu balaji said...

ஈ ரா said...

/பதிவும் சரி பின்னூட்டங்களும் சரி, மனம் விட்டு சிரிக்க வைக்கிறது.../

நன்றி.

/அசத்தலான குருப் தலைவரே உம்முடையது../

சாமி இது க்ரூப் இல்லை. சரி ஒரு பேச்சுக்குன்னே வெச்சாலும் நம்முடையதுன்னு சொல்ல வேணாமா:))

S.A. நவாஸுதீன் said...

உங்க தெளிவான பதில்களில் நீங்கள் ரொம்ப ஜாலியான, ரொம்ப எதார்த்தமா சிந்திக்கின்ற கலகலப்பான ஆள்னு தெரியுது சார். ஒவ்வொரு பதிலும் சும்மா “நச்”.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/உங்க தெளிவான பதில்களில் நீங்கள் ரொம்ப ஜாலியான, ரொம்ப எதார்த்தமா சிந்திக்கின்ற கலகலப்பான ஆள்னு தெரியுது சார். ஒவ்வொரு பதிலும் சும்மா “நச்”./

வாங்க நவாஸ். நன்றி.

பின்னோக்கி said...

//அழுத என்னைக் கடத்திப்போய், துணியை உருவித் துவைத்து

இத படிச்சேன்..உடனே உங்க படத்த பார்த்தேன்..
ஷேம்..ஷேம்.. :-))

துபாய் ராஜா said...

இந்த பதிவில் கேலி, கிண்டல், கோபம், சோகம் எல்லாம் சம அளவில் சார்....

சுய அறிமுகத்திற்கு நன்றி சார்...

vasu balaji said...

பின்னோக்கி said...

/இத படிச்சேன்..உடனே உங்க படத்த பார்த்தேன்..
ஷேம்..ஷேம்.. :-))/

அது செரி.

vasu balaji said...

துபாய் ராஜா said...

/இந்த பதிவில் கேலி, கிண்டல், கோபம், சோகம் எல்லாம் சம அளவில் சார்....

சுய அறிமுகத்திற்கு நன்றி சார்.../

நன்றி ராஜா.