Thursday, October 22, 2009

என் செல்லக் கண்ணம்மா!

உனக்காய் காத்திருக்கையில்
இறந்த நேரம் காட்டும் கடிகாரம்
கலங்கிய கண்ணோ
காண மறுக்கிறது!

நொடி முள்ளாய் மனம் துடிக்க
நிமிட முள்ளாய் நான் தேட
மணி முள்ளாய்ச் சேர மறுக்கிறாய் நீ!

களைத்த மனத்துக்கு
அடிக்கும் மணி
சாவு மணியாய்
ஒலிக்கிறது

நிமிடங்களெனக்கு நாளாய் பறக்க
நீ ஏனோ மணியாய் கடத்துகிறாய்
உன்னோடிருக்கும் நேரம் மட்டும்
அடிக்கும் மணி கோவில் மணியாகிறது!
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாமிருவ‌ரும் ஒருநாள்
கோவிலுக்குப் போனோம்
நினைவிருக்கிற‌தா?
அத‌ன் பிற‌கு என்னால்
கோவிலுக்குப் போக‌ முடிய‌வில்லை
ஆம். க‌ண்மூடி நின்றால்
சிமிழ்போல் மூடிய‌ உன் க‌ண்க‌ளும்
தாம‌ரையாய்க் குவிந்த‌
உன் க‌ர‌ங்க‌ளும்
காற்றில் சிலும்பும்
ரோஜா இத‌ழ்க‌ள் போல்
துதி செய்த‌ உன் இத‌ழ்க‌ளும்
க‌ர்ப‌க்கிர‌க‌ விளக்காய்
உன் முக‌த்திருந்த‌ அமைதியும்
நினைவைச் சிதைக்கையில்
என்ன‌ பிரார்த்திப்ப‌து?

                                                                 

54 comments:

பிரபாகர் said...

//க‌ண்மூடி நின்றால்
சிமிழ்போல் மூடிய‌ உன் க‌ண்க‌ளும்
தாம‌ரையாய்க் குவிந்த‌
உன் க‌ர‌ங்க‌ளும்
காற்றில் சிலும்பும்
ரோஜா இத‌ழ்க‌ள் போல்
துதி செய்த‌ உன் இத‌ழ்க‌ளும்
க‌ர்ப‌க்கிர‌க‌ விளக்காய்
உன் முக‌த்திருந்த‌ அமைதியும்
நினைவைச் சிதைக்கையில்
என்ன‌ பிரார்த்திப்ப‌து?//

ஹை... நான்தான் முதல் இன்று.

நினைவெல்லாம் நீ என்கிறீர்கள்... அற்புதம் அய்யா... உங்கள் துணைவியார் பெரும் பாக்கியம் செய்தவர். என்னமாய் வர்ணனை..

ஈரோடு கதிர் said...

//மணி முள்ளாய்ச் சேர மறுக்கிறாய் நீ!//

அடப்பாவமே

ஈரோடு கதிர் said...

//என்ன‌ பிரார்த்திப்ப‌து?//

எங்கிருந்தாலும் வாழ்க னு தான்

படையப்பா...
ச்சீ... பாலாண்ணே
வயசானாலும் உங்க ஸ்டைலும்.. ஜொள்ளும் இன்னும் மாறாம அப்படியே இருக்கு

மணிஜி said...

மணியான கவிதை..ரசித்தேன் ...

பிரபாகர் said...

அய்யா உங்களின் எழுத்துக்கு என்றும் இருபத்தொன்றுதான்... அதில் இளமை ஊஞ்சலாடுகிறது...

vasu balaji said...

பிரபாகர் said...
/ஹை... நான்தான் முதல் இன்று./

ஆமாம். மைனஸ் ஓட்டுலயும் முதல் முதலா கணக்கு ஆரம்பிச்சிட்டாங்களே.ஹி ஹி.

/உங்கள் துணைவியார் பெரும் பாக்கியம் செய்தவர். என்னமாய் வர்ணனை../

இந்த போட்டுக்குடுக்குற வேலையெல்லாம் வேணாம்=)).

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/அடப்பாவமே/

ரொம்பப்பாவம். அவ்வ்வ்.

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...
/எங்கிருந்தாலும் வாழ்க னு தான்/

அய்யோ!

/படையப்பா...
ச்சீ... பாலாண்ணே
வயசானாலும் உங்க ஸ்டைலும்.. ஜொள்ளும் இன்னும் மாறாம அப்படியே இருக்கு/

இப்புடி எத்தன பேரு புறப்பட்டிருக்கீங்க..அவ்வ்வ்

vasu balaji said...

தண்டோரா ...... said...

/மணியான கவிதை..ரசித்தேன் /

நன்றிங்க

கலகலப்ரியா said...

//ரபாகர் Says:
October 22, 2009 1:41 PM

//க‌ண்மூடி நின்றால்
சிமிழ்போல் மூடிய‌ உன் க‌ண்க‌ளும்
தாம‌ரையாய்க் குவிந்த‌
உன் க‌ர‌ங்க‌ளும்
காற்றில் சிலும்பும்
ரோஜா இத‌ழ்க‌ள் போல்
துதி செய்த‌ உன் இத‌ழ்க‌ளும்
க‌ர்ப‌க்கிர‌க‌ விளக்காய்
உன் முக‌த்திருந்த‌ அமைதியும்
நினைவைச் சிதைக்கையில்
என்ன‌ பிரார்த்திப்ப‌து?//

ஹை... நான்தான் முதல் இன்று.

நினைவெல்லாம் நீ என்கிறீர்கள்... அற்புதம் அய்யா... உங்கள் துணைவியார் பெரும் பாக்கியம் செய்தவர். என்னமாய் வர்ணனை..//

அதே..!

vasu balaji said...

பிரபாகர் said...

/ அய்யா உங்களின் எழுத்துக்கு என்றும் இருபத்தொன்றுதான்... அதில் இளமை ஊஞ்சலாடுகிறது.../

இது வேற.

vasu balaji said...

கலகலப்ரியா said..
/அதே..!/

எதே!=))

சாந்தி நேசக்கரம் said...

உன்னோடிருக்கும் நேரம் மட்டும்
அடிக்கும் மணி கோவில் மணியாகிறது!

அப்போ அதுக்குப்பின்னால் அடிக்கும் மணி சாவுமணியா?

நல்ல கவிதை பாராட்டுக்கள்.

சாந்தி

vasu balaji said...

முல்லைமண் said...

/அப்போ அதுக்குப்பின்னால் அடிக்கும் மணி சாவுமணியா?/

களைத்த மனத்துக்கு
அடிக்கும் மணி
சாவு மணியாய்
ஒலிக்கிறது

அப்புறமென்ன சந்தேகம்.

/நல்ல கவிதை பாராட்டுக்கள்./

நன்றிங்க

அப்பாவி முரு said...

பட்டாம் பூச்சி பறக்கும் காலம் வரும்போது, இங்கிருந்து நிறைய உருவிக்கலாம் போலிருக்கே...

:)

vasu balaji said...

அப்பாவி முரு said...

/பட்டாம் பூச்சி பறக்கும் காலம் வரும்போது, இங்கிருந்து நிறைய உருவிக்கலாம் போலிருக்கே...

:)/

சீக்கிரம் வரட்டும் நண்பா:)

க.பாலாசி said...

//நொடி முள்ளாய் மனம் துடிக்க
நிமிட முள்ளாய் நான் தேட
மணி முள்ளாய்ச் சேர மறுக்கிறாய் நீ!..//

ஆகா...அருமை அருமை...

//க‌ண்மூடி நின்றால்
சிமிழ்போல் மூடிய‌ உன் க‌ண்க‌ளும்
தாம‌ரையாய்க் குவிந்த‌
உன் க‌ர‌ங்க‌ளும்
காற்றில் சிலும்பும்
ரோஜா இத‌ழ்க‌ள் போல்
துதி செய்த‌ உன் இத‌ழ்க‌ளும்
க‌ர்ப‌க்கிர‌க‌ விளக்காய்
உன் முக‌த்திருந்த‌ அமைதியும்
நினைவைச் சிதைக்கையில்
என்ன‌ பிரார்த்திப்ப‌து?//

என்னத்த சொல்றது. கவித...கவித....

(யப்பா....முடியல சாமி......)

சூர்யா ௧ண்ணன் said...

// நொடி முள்ளாய் மனம் துடிக்க
நிமிட முள்ளாய் நான் தேட
மணி முள்ளாய்ச் சேர மறுக்கிறாய் நீ!//

அருமை தலைவா!

அன்புடன் நான் said...
This comment has been removed by the author.
அன்புடன் நான் said...

இந்த க(வி)தை ... தி.மு அல்லது தி.பி ???????

ஈ ரா said...

அசத்தும்... கோவிலுக்கு போனா, சாமியப் பாருங்கன்னோவ்..

vasu balaji said...

க.பாலாசி said...

/ஆகா...அருமை அருமை.../

ஓஹோ. நன்றி.

/என்னத்த சொல்றது. கவித...கவித....

(யப்பா....முடியல சாமி......)/

ஆமாம். முடியாமதான் எழுதுனது:(

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...

/அருமை தலைவா!/

நன்றி

vasu balaji said...

சி. கருணாகரசு said...

/இந்த க(வி)தை ... தி.மு அல்லது தி.பி ???????/

இதுக்கெல்லாம் தி.மு. தி.பி இருக்கா?

vasu balaji said...

ஈ ரா said...

/அசத்தும்... கோவிலுக்கு போனா, சாமியப் பாருங்கன்னோவ்../

இந்த பின்னூட்டத்திற்கு பதில் விரைவில்=))

தமிழ் நாடன் said...

///நினைவெல்லாம் நீ என்கிறீர்கள்... அற்புதம் அய்யா... உங்கள் துணைவியார் பெரும் பாக்கியம் செய்தவர். என்னமாய் வர்ணனை..////

நெசமாலுமா? தங்கமணிக்கா இந்த வர்ணனை? நெஞ்ச தொட்டுச்சொல்லுங்க?

(எதோ நம்மால முடிஞ்சது)

vasu balaji said...

தமிழ் நாடன் said...

/நெசமாலுமா? தங்கமணிக்கா இந்த வர்ணனை? நெஞ்ச தொட்டுச்சொல்லுங்க?

(எதோ நம்மால முடிஞ்சது)/

இல்லைங்க.=))

vasu balaji said...

பிரபாகர்! உணர்ச்சி வசப்பட்டது நீர். உண்டை விழுறது எனக்கா? அவ்வ்வ்

கார்த்திகைப் பாண்டியன் said...

அய்யா..நீர் கவிஞர்.. நீரே கவிஞர்...:-))

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/அய்யா..நீர் கவிஞர்.. நீரே கவிஞர்...:-))/

ஆமாங்க. பாலாசீ கவிதை படிச்சி மனசொடிஞ்சி போனவங்களுக்கு மருந்து=))

யூர்கன் க்ருகியர் said...

IC..

புலவன் புலிகேசி said...

//க‌ண்மூடி நின்றால்
சிமிழ்போல் மூடிய‌ உன் க‌ண்க‌ளும்
தாம‌ரையாய்க் குவிந்த‌
உன் க‌ர‌ங்க‌ளும்
காற்றில் சிலும்பும்
ரோஜா இத‌ழ்க‌ள் போல்
துதி செய்த‌ உன் இத‌ழ்க‌ளும்
க‌ர்ப‌க்கிர‌க‌ விளக்காய்
உன் முக‌த்திருந்த‌ அமைதியும்
நினைவைச் சிதைக்கையில்
என்ன‌ பிரார்த்திப்ப‌து?//

ஐயாவுக்கு கடந்த காலம் நினைவு வருகிறதோ??

தீப்பெட்டி said...

//என்ன‌ பிரார்த்திப்ப‌து?//

அம்மன பக்கத்துல வச்சுக்கிட்டு இப்படியா கேக்குறது..

Maheswaran Nallasamy said...

இதைதான் தெய்வீக காதல்ன்னு சொல்லுகிறார்களோ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல கவிதை

vasu balaji said...

யூர்கன் க்ருகியர் said...

/IC../

:-?? என்னா? அவ்வ்வ்

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/ஐயாவுக்கு கடந்த காலம் நினைவு வருகிறதோ??/

:).

vasu balaji said...

தீப்பெட்டி said...

/அம்மன பக்கத்துல வச்சுக்கிட்டு இப்படியா கேக்குறது../

அம்மன் கிட்ட தானே கேக்குறாரு.

vasu balaji said...

Maheswaran Nallasamy said...

/இதைதான் தெய்வீக காதல்ன்னு சொல்லுகிறார்களோ?/

அப்புடித்தான் தெரியுது.

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/நல்ல கவிதை/

நன்றிங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

வயசான காலத்துல

ஏன் இப்படி காதல் கத்திரிக்காய்ன்னு இம்சை பண்ற?

ஊடகன் said...

ஐயா, வயசானாலும் உங்கள் இளமை உங்கள் வரிகளில் தெரிகிறது.........
நல்லா இருந்தது...........

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/வயசான காலத்துல

ஏன் இப்படி காதல் கத்திரிக்காய்ன்னு இம்சை பண்ற?/

நீ கவிதைன்னு பண்ணுற இம்சைக்கு இந்த இம்சை சுகம். எங்க காணோம் உன்னிய.

vasu balaji said...

ஊடகன் said...

/ஐயா, வயசானாலும் உங்கள் இளமை உங்கள் வரிகளில் தெரிகிறது.........
நல்லா இருந்தது.........../

மனசுக்கும் எழுத்துக்கும் வயசிருக்க:))

ஈ ரா said...

//ஈ ரா said...

/அசத்தும்... கோவிலுக்கு போனா, சாமியப் பாருங்கன்னோவ்../

இந்த பின்னூட்டத்திற்கு பதில் விரைவில்=))//

அங்க வந்து என்ன கும்மலாம்னு பார்கிறீரா, அஸ்கு புஸ்கு.. --))

துபாய் ராஜா said...

//உனக்காய் காத்திருக்கையில்
இறந்த நேரம் காட்டும் கடிகாரம்
கலங்கிய கண்ணோ
காண மறுக்கிறது!//

அருமை சார்...

துபாய் ராஜா said...

//நொடி முள்ளாய் மனம் துடிக்க
நிமிட முள்ளாய் நான் தேட
மணி முள்ளாய்ச் சேர மறுக்கிறாய் நீ!//

அட்டகாசம்.

துபாய் ராஜா said...

//களைத்த மனத்துக்கு
அடிக்கும் மணி
சாவு மணியாய்
ஒலிக்கிறது

நிமிடங்களெனக்கு நாளாய் பறக்க
நீ ஏனோ மணியாய் கடத்துகிறாய்
உன்னோடிருக்கும் நேரம் மட்டும்
அடிக்கும் மணி கோவில் மணியாகிறது!//

தூஊஊஊஊஊள்ள்ள்ள்ள்ள்ள்ள் சார்.

துபாய் ராஜா said...

//நாமிருவ‌ரும் ஒருநாள்
கோவிலுக்குப் போனோம்
நினைவிருக்கிற‌தா?
அத‌ன் பிற‌கு என்னால்
கோவிலுக்குப் போக‌ முடிய‌வில்லை
ஆம். க‌ண்மூடி நின்றால்
சிமிழ்போல் மூடிய‌ உன் க‌ண்க‌ளும்
தாம‌ரையாய்க் குவிந்த‌
உன் க‌ர‌ங்க‌ளும்
காற்றில் சிலும்பும்
ரோஜா இத‌ழ்க‌ள் போல்
துதி செய்த‌ உன் இத‌ழ்க‌ளும்
க‌ர்ப‌க்கிர‌க‌ விளக்காய்
உன் முக‌த்திருந்த‌ அமைதியும்
நினைவைச் சிதைக்கையில்
என்ன‌ பிரார்த்திப்ப‌து?//

தெய்வீகக் காதலய்யா உங்கள் காதல்...

vasu balaji said...

துபாய் ராஜா said...

/அருமை சார்...//அட்டகாசம்./

/தூஊஊஊஊஊள்ள்ள்ள்ள்ள்ள்ள் சார்./

நன்றி ராஜா.

vasu balaji said...

துபாய் ராஜா said...

/தெய்வீகக் காதலய்யா உங்கள் காதல்.../

ஆஹா

vasu balaji said...

துபாய் ராஜா said...

/தெய்வீகக் காதலய்யா உங்கள் காதல்.../

ஆஹா

கண்ணகி said...

ஐம்பதிலும் மாறாத காதல். வெற்றிகரமான தாம்பத்தியத்தின் ரகசியம் இதுதான் போல. அழகோ அழகு

vasu balaji said...

@@வாத்துக்கோழி

நன்றிங்க.