Tuesday, August 3, 2010

இரண்டாம் நிழல் -1

முன்னுரை

இரவுகள் அழகானவை.மெல்லச் சிரிக்கும் பெண்ணின் ஒளி வீசும் பற்களைப் போல...இரவுகள் அகோரமானவை...நீண்டு மறையும் பாம்பின் பிளவுண்ட நாக்குப் போல...வெளிச்சம் என்ற நிர்வாணத்தை மறைக்க இயற்கை அணிந்த உடை இரவு. கண்கள் பளபளக்க தலை குனிந்து இரை தேடி மிருகங்கள் வேட்டை செய்யும் இரவு.

இருள் சூழ்ந்த அந்த அறையில் கண்ணாடிக் கோப்பையின் உள்ளே ததும்பும் மதுவைப் போல மெல்லிய மஞ்சள் வெளிச்சம் சோகையாய் வழிந்து கொண்டிருக்க நீளமான அந்த மேஜையச் சுற்றிலும் போட்டிருந்த மூன்று நாற்காலிகளில் நட்டு வைத்த நடுகல்லைப் போல அந்த மூவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். நாற்காலி இல்லாத நான்காம் பக்கத்தில் இருளுடன் கலக்க முயற்சித்து உறைந்தது போல அந்த ஃப்ளாட் ஸ்க்ரீன் டி.வி அவர்களைப் போலவே மெளனமாய் இருந்தது.

உறைந்து போன மெளனத்தை உடைக்க வெட்கப்படுவது போல நடுநாயகமாய் திரைக்கு எதிரில் அமர்ந்திருந்தவரின் சிகரெட்டால் கறுத்த அந்த உதடுகள் இரை தேடும் பாம்பு போல மெல்லிய குரலில் பேசியது.

“அந்தப் பிள்ள மேல தாண்டே எனக்கு சம்சயம். அவளாச் செய்யலன்னாலும் யாராச்சும் மிரட்டியிருப்பானுவளோன்னு நெனைக்கேன்...”

மற்ற இருவரும் ஆமோதிப்பது போல தலையசைத்தனர். நடுவிலிருந்த உருவம் ரிமோட்டை எடுத்து ஆன் செய்ததும் திரையில் படம் ஓடத்துவங்கியது. முடிந்ததும்...

“இதாண்டே நம்ம ப்ளான். இண்டைக்கே இத எக்ஸிக்யூட் செய்யணும். செரியா?”

"பெரிய விஷயமாருக்கு...மேல சொல்லணுமா..." தயக்கத்துடன் மற்றவர்களில் ஒருவன் இழுத்தான்...

"இல்லடே...மேல கொண்டு போக இன்னமும் பெரிசா வேணும். இப்ப கொண்டு போனா ‘ஒனக்கு இதே வேலையா போச்சுவே’ன்னு குப்பையில போட்ருவானுவ. அதுக்குத் தான் இந்த ப்ளான். முடிச்சிடுவிய இல்லியா..."

செஞ்சிடலாம் சார்...என்று அவன் இழுக்க, இழுக்காதடே...பொழுது சாயறதுக்குள்ள முடிச்சிட்டு நைட்டுக்குள்ள குறிச்சிக்குப்பம் வந்துடுங்க. நான் அங்கின வெயிட் பண்ணுதேன்...

அவர்கள் இருவரும் முகத்தை அழுந்த துடைத்து தலையாட்டி எழுந்து கொண்டார்கள். நீரில்லாத நதி போல அவர்கள் நகர்ந்து மறைய நடுநாயகமாய் இருந்த நபர் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு மீண்டும் இருளை வெறிக்க ஆரம்பித்தார்.

=================

பாகம் -1

சென்னையின் சமீபத்திய பிரபலமான மல்டிப்ளக்ஸ் அது. தியேட்டர்களினிடையே கடையா, கடைகளினிடையே தியேட்டர்களா என்று பட்டிமன்றம் ரேஞ்சுக்கு குழப்படியான ஒரு அமைப்பு. காசு செலவில்லாமல் ஏசி குளிர்ச்சியில் எக்ஸிபிஷன் மாதிரி பொழுதைக் கழிக்க வரும் கூட்டம், பீட்டரில் கலாய்க்கும் மாணவிகள்,  கிறங்கிப் பின்னாடி திரியும் மாணவர்கள் என்று பரபரப்பான சூழல். 

பார்க்கிங் லாட்டின் நுழைவில் சர்ரென வந்து நின்ற ஸ்கோடாவை கண்டதும், ஓடி வந்தார் வாலட் மாணிக்கம். ஒரு சல்யூட் வைத்து, கார் கதவை திறந்து விட்டு,  “வாங்கம்மா, நல்லாருக்கீங்களா? அய்யா வரலைங்களா?” என்றார். ஒரு மேஜிக் மாதிரி, திறந்த காருள்ளிருந்து, லோ வெயிஸ்ட் லீவையும், கருப்பு டீ ஷர்ட்டும் அணிந்து, ஷாம்பூ விளம்பரம் மாதிரி ஒரு தலையசைப்பில் கூந்தலை பின்னுக்குத் தள்ளி, “ஹை ஓல்ட் மேன்” என்று அவரை மாதிரியே சல்யூட் அடித்து சிரித்து,  “வருவாங்க! முன்னாடியே பார்க் பண்ணுங்க மாணிக்கம்” என்று, சாவியும், நூறு ரூபாயும் திணித்துவிட்டு காத்திருந்தாள் ஸ்ருஷ்டி.

ஸ்ருஷ்டி! இருபத்தாறு வயது! இதோ நடந்து கடப்பவர்கள் அந்த நடிகை இந்த நடிகை என அனுமானிப்பதும்,. பார்க்கிங்குக்கு வந்த கார்கள் நகர மறுப்பதற்கும் காரணமானவள். தொழிலதிபர் ஸ்ரீதரனின் ஒரே வாரிசு. ஒரு வருஷம் ஆத்லடிக் என்றும் மறு வருடம் டென்னிஸ் என்றும், “ஐ லவ் பரத நாட்டியம் அப்பா” என்றும் அலக்கழித்தவள் M.B.A. முடித்து வந்ததும், பெருமையாக, தன் கம்பெனியில் சேர அழைப்பு விடுத்தவரை, “சாரி டாட்! ஐ வுட் ராதர் டேக் ஓவர் யுவர் பிஸினஸ்” என்று தனியே தொழில் தொடங்கியவள். 

ஓட்டமும் நடையுமாக வந்து, சாவியைக் கொடுத்த மாணிக்கத்துக்கு நன்றி சொல்லி, செல்லை எடுத்து ஒற்றி, “யோவ்! இன்னா? கிளம்பியாச்சா?” என்றாள்.  “க்கே! ஜஸ்ட் டைம் ஃபார் அ கப்பூச்சினோ! லேட் பண்ணா போயிண்டே இருப்பேன். ஒன் வீக் சாவடிப்பேன்” என்று சிரித்து காஃபி ஷாப் நோக்கி நகர்ந்தாள்.

“ராட்சசி!” என்றபடி, முகம் கழுவி கிளம்ப தயாரானான் ப்ரஸன்னா. அஸிஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ். சரியாக, அந்த நேரம் கமிஷனரின் கால். “ப்ரஸன்னா! வில் யூ ப்ளீஸ் கம் ஃபார் அ மொமெண்ட்” என்றதும், போச்சுடா என்று நினைத்தபடி கமிஷனரின் அறைக்கு நடந்தான்.

“உட்கார் ப்ரஸன்னா. ஐ வோண்ட் டேக் மச் ஆஃப் யுவர் டைம். ஐ.ஜி. வாண்ட் யூ ஃபார் அ ஸ்பெஷல் டாஸ்க். நாளைக்கு காலைல 6க்கு மெரினால மீட் பண்ணனுமாம். கிவ் அ கால் அரவுண்ட் 8 இன் த ஈவினிங். பெஸ்ட் ஆஃப் லக்!” என்று கை கொடுத்தார். 

வெளியே வந்து, முகம் கழுவி, தயாராகி, ட்ரைவரை தயாராக இருக்கச் சொல்லி ஆர்டர்லிக்கு சொல்லிவிட்டு, ஸ்ருஷ்டிக்கு கால் செய்தான். “கிளம்பிட்டேன் டியர்! டென் மினிட்ஸ்ல வந்துர்ரேன்” என்று கிளம்பி, வெளியே வந்தான். போர்டிகோவில் நின்ற காரில் ஏறி, மல்டிப்ளக்ஸில் ட்ராப் பண்ணிட்டு நீங்க போலாம், ராஜன் என்றான். 

டைம் பார்த்தபடி, கப்பூச்சினோ உறிவதும், சுற்றிலும் இருப்பவர்களைப் பார்ப்பதும், இவள் பார்ப்பது தெரிந்ததும், சட்டென கண்ணைத் திருப்புபவர்களை ரசிப்பதுமாய் இருந்தாள் ஸ்ருஷ்டி. 

கார் கமிஷனர் அலுவலகத்தை விட்டு கிளம்பி வீதியில் இறங்கும் தருவாயில், வேகமாக வந்த ஒரு ஃபோர்ட், சடாரெனத் திரும்பி வழிமறித்து, முன்னால் சென்ற ஒரு ஆட்டோவில் மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஹார்ன்கள் அலற ட்ராஃபிக் ஜாம். 

டிரைவர் ராஜன், கத்த, செண்ட்ரி ஓடி, வழி ஒழுங்கு படுத்த முயன்று, திரும்ப ஓடி வந்து, ஆட்டோக்கு நல்ல அடி சார். சண்டை போடுறாங்க என்று திரும்ப ஓடினான். ஏஸியின் கார் நிற்பது கண்டு மற்ற செண்ட்ரிக்கள், போலிஸ் என்று ஓடி வந்தனர். ப்ரஸன்னாவும் காரை விட்டிறங்கி, ஆக்ஸிடண்ட் ஆன இடத்துக்கு விரைந்தான். 

பத்து நிமிடங்கள் பறந்துவிட்டிருந்தன. ஸ்ருஷ்டி பொறுமையிழந்தாள். “சாவு இடியட்” என்று கிளம்பினாள். ஒரு முறை அழைத்தாள். காரில் விட்டுப் போயிருந்த செல் அடிப்பது, ஹாரன் சத்தத்தில் கேட்காமல் போனது. ‘ஆஸ் ஹோல்’ என்று திட்டியபடி, செல்லை ம்யூட் செய்து, பையில் போட்டு பார்க்கிங் லாட்டுக்கு விரைந்தாள். 

மாணிக்கத்தைக் காணவில்லை. கட்டைத் தடியனாக ஒரு வாலட் ஓடி வந்து, மாணிக்கம் சாப்பிட போயிருக்காரும்மா. சாவி கொடுங்க நான் எடுத்துட்டு வரேன் என்று சாவி வாங்கிப் போனான். 

“சை! ஐ டோல்ட் ஹிம்! ஃபுல்டே லீவ் போடு. ஆஃபீஸ் போனா ஸ்பாயில் ஆயிடும்னு. இடியட்!’ என்றபடி நின்றவளின் அருகில் வந்து நின்றது கார். கதவைத் திறந்து இறங்கியவன், அவள் ஏறியதும் கதவை மூடி சல்யூட் அடித்தான். விருட்டென்று காரைக் கிளப்பி வெளியில் வரும்போது ரியர்வ்யூவில் ஒரு உருவம் அசைவதும், காதுக்கு அருகே சில்லென்று ஒரு உணர்வும், டேக் லெஃப்ட் அண்ட் ட்ரைவ் நார்மலியும் கேட்டது. 

ட்ராஃபிக் ஜாம் ஒருவாறு சரியாக, திரும்ப காரில் ஏறிய ப்ரஸன்னா மிஸ்ட் கால் பார்த்து கால் செய்தான். ஸ்விட்ச்ட் ஆஃப் என்று வந்த மெசேஜை வெறுத்து, சீக்கிரம் மல்டிப்ளக்ஸ் ரோடில் விடு என்றான்.

தொடரும்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தக் கதை சில பதிவர்கள் சேர்ந்து எழுதியது. கீழ்க்கண்ட பதிவர்களில் யார் இந்தப் பகுதியை எழுதியது என்பதை மறக்காமல் கதை குறித்த பின்னூட்டத்துடன் குறிப்பிடவும்.

1. அது சரி 2. முகிலன் 3. கதிர் 4. வானம்பாடிகள் 5.கலகலப்ரியா 6.பிரபாகர் 7. நசரேயன்.8.பலா பட்டரை ஷங்கர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டிஸ்கி: மாங்கு மாங்குன்னு உக்காந்து கதையப் போட்டா அத பத்தி சொல்லாம ஒத்தையா ரெட்டையா புடிக்கிறீங்களா? அவ்வ்வ்வ். 

75 comments:

vasu balaji said...

டெஸ்டிங்

Paleo God said...

டெஸ்டிங் ஓக்கே சார்! :)

Thenammai Lakshmanan said...

இது பலா வோட ஸ்டைல்.. ஐ நோ..:)))

Unknown said...

Sir,

There seems to be a problem with the unicode letters on your page. Not able to read them in some browsers like safari. Please check

கலகலப்ரியா said...

ஜிங்குஜா ஜிங்குஜா... அருமையான ஆரம்பம்... கொஞ்சம் ஸ்பெல்லிங் பார்க்கனும்.. (அப்போ நான் எழுதலைன்னு ஆகிப்போச்சா... அவ்வ்வ்...)...

நசரேயன் said...

டெஸ்டிங் டபுள் ஓக்கே

Unknown said...

// thenammailakshmanan said...
இது பலா வோட ஸ்டைல்.. ஐ நோ..:)))
//

Repeattuuuuuu

நசரேயன் said...

mukilan,
Please try in chrome, it works like charm.

vasu balaji said...

கலகலப்ரியா said...
ஜிங்குஜா ஜிங்குஜா... அருமையான ஆரம்பம்... கொஞ்சம் ஸ்பெல்லிங் பார்க்கனும்.. (அப்போ நான் எழுதலைன்னு ஆகிப்போச்சா... அவ்வ்வ்...)...//

பார்த்தாச்சு பார்த்தாச்சு. க்ளூ குடுக்குறியா நீய்யி.

Unknown said...

My iPhone does not have chrome
Can only read this at home :((

Unknown said...

Kalakalpriyaavaa irukkumo?

Che Che avangaala ippidi puriyira maathiri elutha theriyaathu. ;)))

பழமைபேசி said...

//கீழ்க்கண்ட பதிவர்களில் யார் இந்தப் பகுதியை எழுதியது என்பதை மறக்காமல் கதை குறித்த பின்னூட்டத்துடன் குறிப்பிடவும்.
//

வானம்பாடிகள் பாலா??

vasu balaji said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ஒருத்தரும் கதையப்பத்தி பின்னூட்ட மாட்டிங்களா:((

கலகலப்ரியா said...

//முகிலன் said...
Kalakalpriyaavaa irukkumo?

Che Che avangaala ippidi puriyira maathiri elutha theriyaathu. ;)))//

ஆகா... ஆரம்பிச்சிட்டாய்ங்கையா... ஆரம்பிச்சிட்டாய்ங்க... கவுஜ போடாம மக்களுக்கு இம்பூட்டு கஷ்டம் பாரு ப்ரியா...

கலகலப்ரியா said...

நம்ம கம்ப்யூட்டர் சோஸ்யரு சொன்ன மாதிரி யாரும் கத பத்தி சொல்ல மாட்டேங்கிறாய்ங்களே... கெஸ் பண்றதில இறங்கிட்டாய்ங்களே...மக்கா கதையப் படிங்க கதையப் படிங்க... அப்றமா கெஸ் பண்ணிக்கலாம்..

Unknown said...

Nalla starting sir. Intha munnurai nadaikkum paakam ondroda nadaikkum viththiyaasam irukke? Rendu Peru eluthinatho?

Eppidiyirunthaalum para parannu poguthu.

Prasannavai late pannanumne antha accident nadanthirukkumo?

கலகலப்ரியா said...

||முகிலன் has left a new comment on the post "இரண்டாம் நிழல் -1":

Nalla starting sir. Intha munnurai nadaikkum paakam ondroda nadaikkum viththiyaasam irukke? Rendu Peru eluthinatho?

Eppidiyirunthaalum para parannu poguthu.

Prasannavai late pannanumne antha accident nadanthirukkumo? ||

ம்ம்க்கும்... எனக்கும் இந்த டவுட்டுதான்... முன்னுரை எழுதின ஆள்தான் ... ஃபர்ஸ்ட் பார்ட் எழுதினாங்களா... ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்ததப் பார்த்தா நசரேயன் மாதிரி இருக்கே...

கலகலப்ரியா said...

சார் எதுக்கும் ஒம்போதாவது ஆப்ஷனா... மேற் குறிப்பிட்ட யாருமில்லை அப்டின்னும் ஒரு ஆப்ஷன் கொடுங்க சார்... ப்ளீஸ்...

Unknown said...

//ம்ம்க்கும்... எனக்கும் இந்த டவுட்டுதான்... முன்னுரை எழுதின ஆள்தான் ... ஃபர்ஸ்ட் பார்ட் எழுதினாங்களா... ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்ததப் பார்த்தா நசரேயன் மாதிரி இருக்கே...//

Aana thundungara vaarthai varaliyae. Doubt ah irukku. Oru velai snake prabhavo

Paleo God said...

க்ளூ .(1)& (2)
//உறைந்து போன மெளனத்தை உடைக்க வெட்கப்படுவது போல நடுநாயகமாய் திரைக்கு எதிரில் அமர்ந்திருந்தவரின் சிகரெட்டால் கறுத்த அந்த உதடுகள் இரை தேடும் பாம்பு போல மெல்லிய குரலில் பேசியது//

க்ளூ . (3)
//ஓட்டமும் நடையுமாக வந்து, சாவியைக் கொடுத்த மாணிக்கத்துக்கு நன்றி சொல்லி, செல்லை எடுத்து ஒற்றி, “யோவ்! இன்னா? கிளம்பியாச்சா?” என்றாள்//

க்ளூ. (4)
//ட்ராஃபிக் ஜாம் ஒருவாறு சரியாக, திரும்ப காரில் ஏறிய ப்ரஸன்னா மிஸ்ட் கால் பார்த்து கால் செய்தான். ஸ்விட்ச்ட் ஆஃப் என்று வந்த மெசேஜை வெறுத்து, சீக்கிரம் மல்டிப்ளக்ஸ் ரோடில் விடு என்றான்.//

இதுக்குமேல ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸொல்ல முடியல சார்! :))

vasu balaji said...

முகிலன் said...

//ம்ம்க்கும்... எனக்கும் இந்த டவுட்டுதான்... முன்னுரை எழுதின ஆள்தான் ... ஃபர்ஸ்ட் பார்ட் எழுதினாங்களா... ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்ததப் பார்த்தா நசரேயன் மாதிரி இருக்கே...//

Aana thundungara vaarthai varaliyae. Doubt ah irukku. Oru velai snake prabhavo//

நோ. ஆத்தூர் தெடாவூரும் வரலையே

கலகலப்ரியா said...

||முகிலன் said...
//ம்ம்க்கும்... எனக்கும் இந்த டவுட்டுதான்... முன்னுரை எழுதின ஆள்தான் ... ஃபர்ஸ்ட் பார்ட் எழுதினாங்களா... ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்ததப் பார்த்தா நசரேயன் மாதிரி இருக்கே...//

Aana thundungara vaarthai varaliyae. Doubt ah irukku. Oru velai snake prabhavo||

ஆகா இந்தத் துண்டு மேட்டர் எனக்கு உறைக்கல பாருங்க... அதனாலதான் நீங்க டிடெக்டிவ்... நான்.. ம்ம்...செரி போகட்டு... ஆனா.. அண்ணா இதக் கேட்டாங்கன்னா ஹார்ட் அட்டாக் வந்துடும்...

ராஜ நடராஜன் said...

வீட்டுக்கு சுண்ணாம்பு பூசினிங்களாக்கும்!நல்லாயிருக்குது!.

க ரா said...

வானம்பாடிகள் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ஒருத்தரும் கதையப்பத்தி பின்னூட்ட மாட்டிங்களா:((
--
கதை நல்லா இருக்கு சார்..

இப்படிக்கு,
இராமசாமி

Unknown said...

//க்ளூ .(1)& (2)
//உறைந்து போன மெளனத்தை உடைக்க வெட்கப்படுவது போல நடுநாயகமாய் திரைக்கு எதிரில் அமர்ந்திருந்தவரின் சிகரெட்டால் கறுத்த அந்த உதடுகள் இரை தேடும் பாம்பு போல மெல்லிய குரலில் பேசியது//

க்ளூ . (3)
//ஓட்டமும் நடையுமாக வந்து, சாவியைக் கொடுத்த மாணிக்கத்துக்கு நன்றி சொல்லி, செல்லை எடுத்து ஒற்றி, “யோவ்! இன்னா? கிளம்பியாச்சா?” என்றாள்//

க்ளூ. (4)
//ட்ராஃபிக் ஜாம் ஒருவாறு சரியாக, திரும்ப காரில் ஏறிய ப்ரஸன்னா மிஸ்ட் கால் பார்த்து கால் செய்தான். ஸ்விட்ச்ட் ஆஃப் என்று வந்த மெசேஜை வெறுத்து, சீக்கிரம் மல்டிப்ளக்ஸ் ரோடில் விடு என்றான்.//

இதுக்குமேல ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸொல்ல முடியல சார்! :))
//

Kalakalapriyaavaa? Kathaiyaiyum eluthittu inga vanthu comments pottu alibi create pandraangala?

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

வீட்டுக்கு சுண்ணாம்பு பூசினிங்களாக்கும்!நல்லாயிருக்குது!.//

வாங்க வாங்க. நெம்ப நாளாச்சு. எங்கையும் ஆளு தட்டுப்படலை. நீங்களாச்சும் சொல்லுங்ணா:((

கலகலப்ரியா said...

||முகிலன் said...

Kalakalapriyaavaa? Kathaiyaiyum eluthittu inga vanthu comments pottu alibi create pandraangala?||

முடியல....

க ரா said...

எனக்கென்னவோ நீங்கதான் எழுதின மாதிரி இருக்கு.. மொத்ததுல அவங்க எல்லாரும் எழுதினதுக்கு இது ஒரே எதிர் கதையா :)

நசரேயன் said...

//ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்ததப்
பார்த்தா நசரேயன் மாதிரி இருக்கே..//

இருக்கும் .. இருக்கும்

நசரேயன் said...

கதை நல்லா இருக்குன்னு தனியா சொல்லனுமா என்ன ?

கலகலப்ரியா said...

||நசரேயன் has left a new comment on the post "இரண்டாம் நிழல் -1":

//ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்ததப்
பார்த்தா நசரேயன் மாதிரி இருக்கே..//

இருக்கும் .. இருக்கும் ||

சரி சரி... டென்ஷன் ஆவாதீங்க..

கலகலப்ரியா said...

||நசரேயன் said...
கதை நல்லா இருக்குன்னு தனியா சொல்லனுமா என்ன ?||

இல்ல ஆள் சேர்த்து மீட்டிங் போட்டு கூட்டத்தோட கூட்டமாக் கூடச் சொல்லலாம்...

Unknown said...

//எனக்கென்னவோ நீங்கதான் எழுதின மாதிரி இருக்கு.. மொத்ததுல அவங்க எல்லாரும் எழுதினதுக்கு இது ஒரே எதிர் கதையா :)//

I like this thinking

Chitra said...

புது ப்லாக் template , இந்த கதை மாதிரியே நல்லா இருக்குதுங்க.... மண்டபத்தில சேர்ந்து உட்கார்ந்து யார் எழுதுனாங்களோ, அவங்க கிட்டேயும் சொல்லிடுங்க... நன்றி.

பிரபாகர் said...

கதை சுவராஸ்யமாக செல்கிறது நிறைய முடிச்சுகளை தூவியிருக்கிறீர்கள், அடுத்த பாகம் படிக்க அதீத ஆவலாய் இருக்கிறேன். சிருஷ்டியுங்கள்!

பிரபாகர்...

Paleo God said...

//பிரபாகர் has left a new comment on the post "இரண்டாம் நிழல் -1":

கதை சுவராஸ்யமாக செல்கிறது நிறைய முடிச்சுகளை தூவியிருக்கிறீர்கள், அடுத்த பாகம் படிக்க அதீத ஆவலாய் இருக்கிறேன். சிருஷ்டியுங்கள்!

பிரபாகர்..//

அல்லோ,

இங்க இத்தினி பேரு தொழாவிக்கினு கீரோம் ரைட் ராயலா வந்து வழமை போலவே வழுக்கினா எப்டி நைனா? மருவாதையா லைன்ல வாப்பா! :))

Unknown said...

வானம்பாடி சார் இன் எழத்து மாதிரியும் இல்லை, ப்ரியாவின் உரை நடையும் இல்ல. வேறு யாரோ தான்.

மொத்தத்தில் கதையும் பிடிக்கவில்லை. விடுங்க. ஜூட்.

Unknown said...

யார் ஸ்டைலில் எழுதினா என்ன.. கதை நல்லாருக்கு ..
எஸ்கேப்..

ஸ்ரீராம். said...

மொத்தத்துல நல்லா தொடங்கியிருக்கு...

Mahi_Granny said...

பாகம் 1 தங்கள் எழுத்தா? கதை ultra modern . தொடருங்கள்

Cable சங்கர் said...

சாய்ஸ்.. வானம்பாடிகள், ஆர் ஷங்கர்

அது சரி(18185106603874041862) said...

இதுவரை யாருன்னு தெரியாம பின்னூட்டம் தான் வந்துக்கிட்டு இருந்துச்சு...இப்போ கதையேவா? அநியாயம் பண்றாங்களேய்யா....அவ்வ்வ்வ்வ்......

அது சரி(18185106603874041862) said...

அனேகமா பிரபாகர் அண்ணன் எழுதிருப்பாரு போலருக்கே....

நல்ல தொடக்கம். நன்றி பிரபாகர்.

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருக்கு சார்.... யார் எழுதினானு நீங்க‌ளே பேசி ஒரு முடிவுக்கு வாங்க‌.. நான் எஸ்கேப்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

கதை நல்லாயிருக்கு..மத்தபடி இந்த ஆட்டத்துக்கு நான் வரலே..

Jey said...

ககபி கண்டிப்ப கிடையாது(இவகளாவது புரியிரா மாரி எழுதுரதாவது...), முன்னுரை எழுத்த பாத்தா வானம்படிகள் சார் எழுதுனா மாதிரி தெரியல....மத்தவங்கள்ல யரோதான் எழுதிருக்கனும்.. அவங்கள படிச்சதில்ல...போய் படிச்சிருவோம்...

vasan said...

என்ன‌மோ நடக்குது!
க‌தை,சுஜாதா ஸ்டைல்ல‌
தொட‌ங்கியிருக்கிங்க‌.
க‌லக‌லாவின் 9வது ஆப்ச‌னும்
IAS QUESTION PAPER லெவ‌ல்ல‌.

பா.ராஜாராம் said...

செம்ம ஸ்பீட் கதை!

யார் எழுதியது? இது நல்லா இருக்கே? :-)

ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் ரொம்ப குறைவு. நசரேயன் வாய்ப்பில்லை.

நான் அவனில்லை கதையாவுல இருக்கு கமெண்ட்டை பார்த்தால்?

காசை சுண்டி பார்த்ததில் காசும் செங்குத்தா சொருகி நிற்குது. காசின் ரெண்டு முகத்தையும் பார்த்தேன். ஒரு பக்கம் பாலாண்ணா. மற்றொன்னில் ஷங்கர்.

சரி, ரிசல்ட் எப்ப வரும்?

vasu balaji said...

thenammailakshmanan said...

/இது பலா வோட ஸ்டைல்.. ஐ நோ..:)))//

இருக்குங்க. திருட்டுபசங்க எனக்கே சொல்லமாட்டிங்கறாங்க.:)

vasu balaji said...

கலகலப்ரியா said...

//ஜிங்குஜா ஜிங்குஜா... அருமையான ஆரம்பம்... கொஞ்சம் ஸ்பெல்லிங் பார்க்கனும்.. (அப்போ நான் எழுதலைன்னு ஆகிப்போச்சா... அவ்வ்வ்...)...//

இப்புடி சொன்னா இல்லைன்னு நம்பிருவாய்ங்களா?

vasu balaji said...

கலகலப்ரியா said...
//முகிலன் said...
Kalakalpriyaavaa irukkumo?

Che Che avangaala ippidi puriyira maathiri elutha theriyaathu. ;)))//

ஆகா... ஆரம்பிச்சிட்டாய்ங்கையா... ஆரம்பிச்சிட்டாய்ங்க... கவுஜ போடாம மக்களுக்கு இம்பூட்டு கஷ்டம் பாரு ப்ரியா...//

சொன்னா எங்க கேக்கற நீய்யி. வாரத்துக்கு ஒரு கவுஜ போட்டாதான் சரியாவாய்ங்க:)

vasu balaji said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
க்ளூ .(1)& (2)
//உறைந்து போன மெளனத்தை உடைக்க வெட்கப்படுவது போல நடுநாயகமாய் திரைக்கு எதிரில் அமர்ந்திருந்தவரின் சிகரெட்டால் கறுத்த அந்த உதடுகள் இரை தேடும் பாம்பு போல மெல்லிய குரலில் பேசியது//

க்ளூ . (3)
//ஓட்டமும் நடையுமாக வந்து, சாவியைக் கொடுத்த மாணிக்கத்துக்கு நன்றி சொல்லி, செல்லை எடுத்து ஒற்றி, “யோவ்! இன்னா? கிளம்பியாச்சா?” என்றாள்//

க்ளூ. (4)
//ட்ராஃபிக் ஜாம் ஒருவாறு சரியாக, திரும்ப காரில் ஏறிய ப்ரஸன்னா மிஸ்ட் கால் பார்த்து கால் செய்தான். ஸ்விட்ச்ட் ஆஃப் என்று வந்த மெசேஜை வெறுத்து, சீக்கிரம் மல்டிப்ளக்ஸ் ரோடில் விடு என்றான்.//

இதுக்குமேல ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸொல்ல முடியல சார்! :))//

இதுக்கும் மேலன்னா எழுதுனவய்ங்களை புடிச்சி இழுத்துண்டு வந்துதான் காட்டணும்

vasu balaji said...

இராமசாமி கண்ணண் said...

//எனக்கென்னவோ நீங்கதான் எழுதின மாதிரி இருக்கு.. மொத்ததுல அவங்க எல்லாரும் எழுதினதுக்கு இது ஒரே எதிர் கதையா :)//

அய்ங். என்ன அந்த அளவுக்கா ஒலகம் நம்புது?

vasu balaji said...

Chitra said...

//புது ப்லாக் template , இந்த கதை மாதிரியே நல்லா இருக்குதுங்க.... மண்டபத்தில சேர்ந்து உட்கார்ந்து யார் எழுதுனாங்களோ, அவங்க கிட்டேயும் சொல்லிடுங்க... நன்றி.//

அது யாருன்னு சொன்னா சொல்ல வசதியா இருக்குமில்ல:))

vasu balaji said...

பிரபாகர் said...

//கதை சுவராஸ்யமாக செல்கிறது நிறைய முடிச்சுகளை தூவியிருக்கிறீர்கள், அடுத்த பாகம் படிக்க அதீத ஆவலாய் இருக்கிறேன். சிருஷ்டியுங்கள்!

பிரபாகர்...//

இதென்னாடா வெளக்கெண்ணெய் பதிலா வழுக்கிட்டு போவுது. அல்லோ. கதை எப்புடி, யாரு எழுதினான்னு சொல்லும் ஓய். முடிச்சு, சிருஷ்டின்னு.

vasu balaji said...

Sethu said...

/வானம்பாடி சார் இன் எழத்து மாதிரியும் இல்லை, ப்ரியாவின் உரை நடையும் இல்ல. வேறு யாரோ தான்.

மொத்தத்தில் கதையும் பிடிக்கவில்லை. விடுங்க. ஜூட்.//

அவ்வ்வ்வ்வ்வ்:(. டாங்சுங் சேது.

vasu balaji said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//அல்லோ,

இங்க இத்தினி பேரு தொழாவிக்கினு கீரோம் ரைட் ராயலா வந்து வழமை போலவே வழுக்கினா எப்டி நைனா? மருவாதையா லைன்ல வாப்பா! :))//

அதானே:))

vasu balaji said...

கே.ஆர்.பி.செந்தில் said...

/யார் ஸ்டைலில் எழுதினா என்ன.. கதை நல்லாருக்கு ..
எஸ்கேப்../

எஸ்கேப்பானா கதையே இல்லாம பூடுமே:))

vasu balaji said...

ஸ்ரீராம். said...

/மொத்தத்துல நல்லா தொடங்கியிருக்கு...//

நன்றி ஸ்ரீராம்

vasu balaji said...

Mahi_Granny said...

//பாகம் 1 தங்கள் எழுத்தா? கதை ultra modern . தொடருங்கள்//

நீங்கதாங்க சொல்லணும். நன்றிங்க

vasu balaji said...

Cable Sankar said...

//சாய்ஸ்.. வானம்பாடிகள், ஆர் ஷங்கர்//

தலைவரே. கதை என்னாச்சு? அவ்வ்வ்

vasu balaji said...

அது சரி said...

//இதுவரை யாருன்னு தெரியாம பின்னூட்டம் தான் வந்துக்கிட்டு இருந்துச்சு...இப்போ கதையேவா? அநியாயம் பண்றாங்களேய்யா....அவ்வ்வ்வ்வ்.....//

அநியாயத்துக்கு அக்குரும்பு பண்றாய்ங்க

vasu balaji said...

அது சரி said...

/அனேகமா பிரபாகர் அண்ணன் எழுதிருப்பாரு போலருக்கே....

நல்ல தொடக்கம். நன்றி பிரபாகர்.//

ஹி ஹி. வர்ணணைய வெச்சி கெஸ்ஸா:))

vasu balaji said...

நாடோடி said...

/க‌தை ந‌ல்லா இருக்கு சார்.... யார் எழுதினானு நீங்க‌ளே பேசி ஒரு முடிவுக்கு வாங்க‌.. நான் எஸ்கேப்..//

எங்க நின்னா கடத்திடுவாய்ங்களோன்னு எஸ்ஸாயிட்டே இருக்காய்ங்கப்பா

vasu balaji said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கதை நல்லாயிருக்கு..மத்தபடி இந்த ஆட்டத்துக்கு நான் வரலே..//

சார்! கொஞ்சம் மனசு வைங்க சார். :))

vasu balaji said...

Jey said...
ககபி கண்டிப்ப கிடையாது(இவகளாவது புரியிரா மாரி எழுதுரதாவது...), முன்னுரை எழுத்த பாத்தா வானம்படிகள் சார் எழுதுனா மாதிரி தெரியல....மத்தவங்கள்ல யரோதான் எழுதிருக்கனும்.. அவங்கள படிச்சதில்ல...போய் படிச்சிருவோம்...//

சரி படிச்சிட்டு வந்து சொல்லுங்க

vasu balaji said...

vasan said...

//என்ன‌மோ நடக்குது!
க‌தை,சுஜாதா ஸ்டைல்ல‌
தொட‌ங்கியிருக்கிங்க‌.
க‌லக‌லாவின் 9வது ஆப்ச‌னும்
IAS QUESTION PAPER லெவ‌ல்ல‌.//

நன்றிங்க வாசன்:)

vasu balaji said...

பா.ராஜாராம் said...
செம்ம ஸ்பீட் கதை!

யார் எழுதியது? இது நல்லா இருக்கே? :-)

ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் ரொம்ப குறைவு. நசரேயன் வாய்ப்பில்லை.

நான் அவனில்லை கதையாவுல இருக்கு கமெண்ட்டை பார்த்தால்?

காசை சுண்டி பார்த்ததில் காசும் செங்குத்தா சொருகி நிற்குது. காசின் ரெண்டு முகத்தையும் பார்த்தேன். ஒரு பக்கம் பாலாண்ணா. மற்றொன்னில் ஷங்கர்.

சரி, ரிசல்ட் எப்ப வரும்?//

:)) நன்றி பா.ரா. எத்தன பார்ட் எழுதி வெச்சிருக்காய்ங்கன்னே தெரியல. தினம் மண்டபத்துக்கு போனா ஒரு பாகம் குடுக்குறாய்ங்க.:))

Unknown said...

"அவ்வ்வ்வ்வ்வ்:(. டாங்சுங் சேது."
சார்! இதுக்கு என்ன அர்த்தம். கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுங்க சார்.

தாராபுரத்தான் said...

கலக்குறீங்களே..என்னைப் போன்றவங்களுக்கு கண்ணா முழியல்ல திருகதுங்க..

vasu balaji said...

Sethu said...

/"அவ்வ்வ்வ்வ்வ்:(. டாங்சுங் சேது."
சார்! இதுக்கு என்ன அர்த்தம். கொஞ்சம் புரியர மாதிரி சொல்லுங்க சார்.//

கதை பிடிக்கலைக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். பளிச்சுன்னு சொன்னதுக்கு டாங்சுங்க (கோயம்பத்தூர் போய்ட்டு வந்த எஃபெகட்)டாங்சுங். :))

vasu balaji said...

தாராபுரத்தான் said...

/கலக்குறீங்களே..என்னைப் போன்றவங்களுக்கு கண்ணா முழியல்ல திருகதுங்க..//

ஆஹா. அண்ணன் கலாய்க்கிறாரு டோய்:))

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமையான தொடர்...
நல்லாயிருக்கு வானம்பாடிகள் சார்....
தொடருங்கள்.

க.பாலாசி said...

ஒரு இரவையும் கனவையும் ஆக்கிரமிக்கக்கூடிய ராஜேஸ்குமார் க்ரைம் நாவல் மாதிரியான படைப்பு. நல்ல விருவிருப்பு.... யார் எழுதினா என்ன? உங்களோடதாக்கூட இருக்கலாம்ல....

Radhakrishnan said...

விரைவில் படித்து விடுகிறேன். மூன்று பாகம் வந்துவிட்டதே.