Saturday, November 7, 2009

பசி!


 யூத்ஃபுல் விகடன் படைப்புகளில் வெளியான என் சிறுகதை.

அலுவலகம் செல்லுவதற்காக பஸ் நிறுத்ததில் நின்றிருந்தான் ராஜா. அலுவலக நேரத்துக்கு வந்தால் பஸ்ஸில் தொங்கக் கூட இடம் கிடைக்காது என்பதால் எட்டு மணிக்கே கிளம்பி வந்திருந்தும் கூட்டம் இருந்தது. பள்ளிக்கூட பஸ் வருவதற்காக சற்று தள்ளி ஒரு சிறுவர் சிறுமியர் கூட்டமும் நின்றிருந்தது. கூச்சலும் கும்மாளமும் கலாய்த்தலுமாய் இருந்த அவர்கள் மேல் ஒரு கண்ணும், பஸ் வருகிறாதா என்பதில் குறியாக ஒரு கண்ணுமாய் காத்திருந்தான்.

திடீரென‌, ப‌க்க‌த்திலிருந்த‌ பெருசு, ஏய்! போடா! இவ‌னுங்க‌ தொல்ல‌ தாங்க‌ முடிய‌ல‌. கொழுப்பெடுத்து பெத்து போட்டு தெருவுல‌ உட்டுடுவாங்க‌ என்று அல‌ற‌வும், திரும்பிப் பார்த்தான் ராஜா. 4 வ‌ய‌திருக்கும். அழுக்காக‌, க‌ளையாக‌ ஒரு சிறுவ‌ன் சினேக‌மாய்ச் சிரித்த‌ப‌டி, கை ஏந்திய‌ப‌டி ராஜாவிட‌ம் வ‌ந்தான். காணாத‌து போல் முக‌த்தைத் திருப்பிக் கொண்டு ப‌ஸ் வ‌ருகிற‌தா என‌ப் பார்த்தான் ராஜா.

அவன், அருகில் வ‌ந்து மெதுவாக‌க் காலைச் சுர‌ண்டிய‌ப‌டி, அண்ணே! ப‌சிக்குத‌ண்ணே என்ற‌து. அந்த‌ப் பெருசு ந‌ல்லா ருசி க‌ண்டுட்டானுங்க‌. கை நீட்டினா காசு வ‌ரும்னு. பேப்ப‌ர் பார்த்திங்க‌ளா சார். ஒரு நாளைக்கு 1000ரூ ச‌ம்பாதிக்கிறாங்க‌ளாம். இதுக்காக‌வே பிள்ளைக‌ளை பெத்த‌வுங்க‌ பிச்சை எடுக்க‌ விடுறாங்க‌ளாம். என்னா அநியாய‌ம் பாருங்க‌ என்ற‌தில், இல்லையென்றும் சொல்லாம‌ல், காசும் த‌ராம‌ல் ச‌ற்று தள்ளி ப‌ள்ளி ப‌ஸ்ஸுக்கு காத்திருந்த‌ பிள்ளைக‌ளின் அருகாமையில் சென்றான்.

அந்த‌ச் சிறுவ‌னும் மெதுவே ந‌க‌ர்ந்து அவ‌னை விட‌ கொஞ்ச‌ம் பெரிய‌ ஒரு சிறுவ‌னைப் பார்த்து சிரித்தபடி கடக்க‌ அந்த‌ச் சிறுவ‌ன் இங்கே வா என்றான். அவ‌னும் அருகில் வ‌ர, ப‌சிக்குதா என்றான். ஆமாண்ணே என்ற‌து அந்த‌ வாண்டு. இங்கே வா என்று ஓர‌மாக‌ கூட்டிக் கொண்டு போய் சாப்பாட்டுப் பையிலிருந்து த‌ண்ணீர் பாட்டிலை எடுத்து , கை க‌ழுவிக்கோ என்று ஊற்றினான்.

மிர‌ண்ட‌ப‌டி, கையைக் க‌ழுவி உத‌றி பார்த்துக் கொண்டிருக்க‌, த‌ன்னுடைய‌ ட‌ப்ப‌வைத் திற‌ந்து, நூடில்ஸ் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அவ‌ன் கையில் வைக்க‌ அடுத்த‌ நொடி காணாம‌ல் போய் கை நீண்ட‌து. சிரித்த‌ப‌டியே அடுத்தடுத்து அவ‌னுக்கு கொடுக்க சில‌ நிமிட‌ங்க‌ளில் ட‌ப்பா காலியான‌து. கை க‌ழுவாம‌ல் அப்ப‌டியே அழுக்குச் ச‌ட்டையில் துடைத்த‌ப‌டி, த‌ண்ணி குடுண்ணே என்று கை குவித்து வாங்கிக் குடித்த‌ சிறுவ‌னின் முக‌ம் அழ‌கா, அவ‌னுக்கு சாப்பிட‌க் கொடுத்த‌ சிறுவ‌னின் முக‌த்தில் இருந்த‌ ச‌ந்தோஷ‌த்தில் இவ‌ன் முக‌ம் அழ‌கா என்று திகைத்தபடி நின்றான் ராஜா.

ஏதும் பேசாம‌ல் பையை எடுத்துக் கொண்டு வ‌ந்த‌ சிறுவ‌னிடம்,  உனக்கு நூடில்ஸ் பிடிக்காதா? உன் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டாயே, ம‌திய‌ம் என்ன‌ செய்வாய்? என‌க் கேட்டான் ராஜா. இல்லண்ணா, ஸ்னாக்ஸ் இருக்கு. அது ல‌ஞ்சுக்கு சாப்பிட்டுக்குவேன். இல்லைன்னாலும் ஃப்ர‌ண்ட்ஸ் ஷேர் ப‌ண்ணுவாங்க‌. அவ‌னுக்கு யாரு த‌ருவா என்ற‌தும் ஒரு ப‌க்க‌ க‌ன்ன‌ம் ஜிவு ஜிவு என்ற‌து.

குற்ற‌ உண‌ர்ச்சி குறு குறுக்க‌, அந்த‌ச் சிறுவ‌னை அழைத்து ஒரு 5ரூ நாண‌ய‌த்தை நீட்ட‌, வேணாண்ணே அந்த‌ண்ண‌ன் சாப்பாடு குடுத்தான். இப்போ ப‌சிக்க‌லைண்ணே என்று சிரித்த‌ப‌டி ந‌க‌ர்ந்தான் அவ‌ன். இன்னொரு க‌ன்ன‌மும் ஜிவு ஜிவு என்ற‌து ராஜாவுக்கு. கூசிக் குறிகிப்போய் ப‌ஸ் வ‌ருகிற‌தா எனப் பார்க்க‌, த‌ன்னைத்தான் பார்க்கிறானோ என்று த‌ரையைப் பார்த்தார் பெரிய‌வ‌ர்.

86 comments:

சூர்யா ௧ண்ணன் said...

கதை நல்லாயிருக்கு தலைவா!

கலகலப்ரியா said...

:-)

கலகலப்ரியா said...

:o surya.. ithu enna poatti.. =))

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...

/கதை நல்லாயிருக்கு தலைவா!/

நன்றி சூர்யா.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ :-)/

அவ்வ்வ்வ்வ்வ்.ஒன்னும் சொல்லாம சிரிச்சா எப்புடி.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/:o surya.. ithu enna poatti.. =))/

ஆஹா. சொல்ல வெச்ச சூர்யாக்கு நன்றி.

கலகலப்ரியா said...

illa... sir.. touchy.. pinnoottam podurahtukkulla enna avasaram.. wt..

சூர்யா ௧ண்ணன் said...

//:o surya.. ithu enna poatti.. =))//

எப்பூடி நாமெல்லாம் யாரு? ...

கலகலப்ரியா said...

//இப்போ ப‌சிக்க‌லைண்ணே என்று சிரித்த‌ப‌டி ந‌க‌ர்ந்தான் அவ‌ன்.//

:-)... இது ஒண்ணுதான் நமக்கு மிச்சம்... தன்மானம்..! இப்டியே இரு ராசா.. போதும்..!

vasu balaji said...

கலகலப்ரியா said...

/illa... sir.. touchy.. pinnoottam podurahtukkulla enna avasaram.. wt../

ஹிஹி. அது அப்புடித்தான்.

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...

/
எப்பூடி நாமெல்லாம் யாரு? .../

=))

vasu balaji said...

கலகலப்ரியா said...

/:-)... இது ஒண்ணுதான் நமக்கு மிச்சம்... தன்மானம்..! இப்டியே இரு ராசா.. போதும்..!/

ம்ம்ம்.

கலகலப்ரியா said...

//சூர்யா ௧ண்ணன் said...

//:o surya.. ithu enna poatti.. =))//

எப்பூடி நாமெல்லாம் யாரு? ...//

ம்ம்... நாமளும் "துப்பறியும் சம்பு" படிச்சிருக்கோம்ல... நடந்தது நடந்து போச்சு.. இந்த வெற்றிய நான் உங்களுக்கு விட்டுக் கொடுத்துடுறேன்.. ! பொழைச்சி போங்க..!

கலகலப்ரியா said...

ஓ...! மறந்துட்டேன்.. விகடன் முகப்பில வந்ததுக்கு வாழ்த்துகள் சார்..! எல்லாப் புகழும் குருவிற்கே...(நேக்கு நேக்கு..)

haaa...=)))

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ம்ம்... நாமளும் "துப்பறியும் சம்பு" படிச்சிருக்கோம்ல... நடந்தது நடந்து போச்சு.. இந்த வெற்றிய நான் உங்களுக்கு விட்டுக் கொடுத்துடுறேன்.. ! பொழைச்சி போங்க..!/

=)). வாலு வாலு. அய்யோ முடியல.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ஓ...! மறந்துட்டேன்.. விகடன் முகப்பில வந்ததுக்கு வாழ்த்துகள் சார்..! எல்லாப் புகழும் குருவிற்கே...(நேக்கு நேக்கு..)

haaa...=)))/

=)). ஆமாம்மா.

மணிஜி said...

கதை நல்லாயிருக்கு..அங்க மழை எப்படி?இனிக்கு உங்களை சந்திக்கலாம்ன்னு நினைச்சேன்.

vasu balaji said...

தண்டோரா ...... said...

/கதை நல்லாயிருக்கு..அங்க மழை எப்படி?இனிக்கு உங்களை சந்திக்கலாம்ன்னு நினைச்சேன்./

நன்றிண்ணே. இடுப்பு அளவு தண்ணி வீதியில.

க.பாலாசி said...

கதையை மிக ரசித்தேன். நமக்கிந்த புத்திவரவில்லையே என்று எண்ணத்தான் தோன்றுகிறது. (இயன்றதை செய்யாத இயலாமையின் புத்தி)

இளமைவிகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

vasu balaji said...

க.பாலாசி said...

/கதையை மிக ரசித்தேன். நமக்கிந்த புத்திவரவில்லையே என்று எண்ணத்தான் தோன்றுகிறது. (இயன்றதை செய்யாத இயலாமையின் புத்தி)

இளமைவிகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.../

நன்றி பாலாஜி.:)

கலகலப்ரியா said...

//க.பாலாசி said...

கதையை மிக ரசித்தேன். நமக்கிந்த புத்திவரவில்லையே என்று எண்ணத்தான் தோன்றுகிறது. (இயன்றதை செய்யாத இயலாமையின் புத்தி)//

இயன்றதைச் செய்ய இயலாமை என்பதே சரியாக இருக்கும் :-s

vasu balaji said...

கலகலப்ரியா said...

/இயன்றதைச் செய்ய இயலாமை என்பதே சரியாக இருக்கும் :-s/

ஆமாம்.

தேவன் said...

அருமையான கதை !

பிரபாகர் said...

இளசுகளின் மனசு அழகாய் அய்யா மூலம் வெளிப்பட்ட்டிருக்கும் இது ஒரு அழகான படிப்பினையுடன் கூடிய சிறுகதை.....

மிகவும் அருமை அய்யா!

பிரபாகர்.

பிரபாகர் said...

இளமை விகடனுக்காக வாழ்த்துக்கள். விகடனிலேயே வரவேண்டியது...

பிரபாகர்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல கதை.வாழ்த்துகள்.

vasu balaji said...

கேசவன் .கு said...

/அருமையான கதை !/

ரொம்ப நன்றிங்க கேசவன். வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

vasu balaji said...

பிரபாகர் said...

/மிகவும் அருமை அய்யா!/

நன்றி பிரபாகர்.

/இளமை விகடனுக்காக வாழ்த்துக்கள். விகடனிலேயே வரவேண்டியது.../

நன்றி.

vasu balaji said...

ஸ்ரீ said...

/நல்ல கதை.வாழ்த்துகள்./

வாங்க ஸ்ரீ நன்றி.

தேவன் said...

/// ப‌சிக்க‌லைண்ணே என்று சிரித்த‌ப‌டி ந‌க‌ர்ந்தான் ///

உண்மையிலேயே கொஞ்சம் உருக வச்சுட்டீங்க!

blogpaandi said...

நல்ல சிறுகதை. யூத்ஃபுல் விகடன் படைப்புகளில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

vasu balaji said...

கேசவன் .கு said...
/உண்மையிலேயே கொஞ்சம் உருக வச்சுட்டீங்க!/

நன்றிங்க மீண்டும்.:)

vasu balaji said...

blogpaandi said...

/நல்ல சிறுகதை. யூத்ஃபுல் விகடன் படைப்புகளில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்./

வாங்க பாண்டி. நன்றிங்க.

அகல்விளக்கு said...

கதை நல்லாருக்கு..

நீங்க யூத்துன்றத நிரூபிச்சிட்டீங்க.....

S.A. நவாஸுதீன் said...

கதை ரொம்ப நல்லா இருக்கு சார்

ஈரோடு கதிர் said...

அண்ணா...

பல சமயம் ஓரிரண்டு ரூபாய்க்கு, பந்தாவாக சில்லறையில்லைனு சொன்ன என் சில்லைறைப் புத்தியை அறைந்த மாதிரி இருக்கு

பழமைபேசி said...

4. சில்லறை cillaṟai : (page 1432)

6. Woman's small ear-ornament. See காதுச்சில்லறை. Loc. 7. Petty, annoying business; தொந்தரவான சிறு காரியம். 8. Trouble from thieves; திருடர் உபத் திரவம். கள்ளர் சில்லறை. (W.) 9. Death from malignant diseases; கொடுநோயால் ஏற்படும் சாவு. (W.)
==================================

Small income from miscellaneous sources; சில்லரை வரும்படி. 2. Money gained by embezzlement or fraud; கள்ளச் சிறுதேட்டு. (W.)

பின்னோக்கி said...

natch sirukathai.super

பின்னோக்கி said...

antha periyavar peru vaanambaadi ???

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
ரொம்பத் தொலைச்சிட்டோம் பாலாஜி. கிண்டிக் கெளறி உட்டுட்டீங்க ஏக்கத்தை.
//

கிளறியா? கெளரியா?

ஈரோடு கதிர் said...

சில்லரை.
சில்லரை..
சில்லரை...

மாப்பு
மன்னிச்சிக்கிடுங்க

ஈரோடு கதிர் said...

//பழமைபேசி said...
//வானம்பாடிகள் said...
ரொம்பத் தொலைச்சிட்டோம் பாலாஜி. கிண்டிக் கெளறி உட்டுட்டீங்க ஏக்கத்தை.
//

கிளறியா? கெளரியா?//

ஒரு வேளை கௌரிய(கவுரி) மனசில வச்சி சொல்லியிருபாரோ

ஈரோடு கதிர் said...

//பழமைபேசி said...
//வானம்பாடிகள் said...
ரொம்பத் தொலைச்சிட்டோம் பாலாஜி. கிண்டிக் கெளறி உட்டுட்டீங்க ஏக்கத்தை.
//

கிளறியா? கெளரியா?//


அல்ல்ல்ல்ல்ல்லோவ்.... மாப்பு

இது பாலாசி ஊட்டுச் சண்டை..
அந்த பஞ்சாயத்த அங்கதான் நடத்தோனும்...

இங்க எதுக்கப்பு

Prathap Kumar S. said...

டச்சிங் கதை...நல்லாருக்கு சார்...

பழமைபேசி said...

கிடைச்ச வாய்ப்பை, மாப்பு நல்லாவே பயன்படுத்திகிட்டாரு போல இருக்கே? அவ்வ்வ்வ்.....

பழமைபேசி said...

//இது பாலாசி ஊட்டுச் சண்டை..
அந்த பஞ்சாயத்த அங்கதான் நடத்தோனும்...

இங்க எதுக்கப்பு//

வீடு புகுந்து இரகளைன்னு பத்திரிகைகள்ல படிச்சது இல்லைங்களா?

cheena (சீனா) said...

நல்லாருக்கு கதை - மழலைகளின் உள்ளமே தனிதான் - உலகமே தனிதான்

நல்வாழ்த்துகள்

தமிழ் அமுதன் said...

நல்லாயிருக்கு அண்ணே ..!

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா வந்துருக்கு கதை...

வாழ்த்துக்கள் பாலா சார்...

பா.ராஜாராம் said...

அருமையான கதை சார்.வாழ்துக்கள்!

thiyaa said...

வாழ்த்துகள் சார்..

vasu balaji said...

அகல் விளக்கு said...

/கதை நல்லாருக்கு..

நீங்க யூத்துன்றத நிரூபிச்சிட்டீங்க...../

அய்யய்யோ. அப்போ டவுட் இருந்திச்சாக்கு..அவ்வ்வ்

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/கதை ரொம்ப நல்லா இருக்கு சார்/

நன்றிங்க நவாஸ்

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/பல சமயம் ஓரிரண்டு ரூபாய்க்கு, பந்தாவாக சில்லறையில்லைனு சொன்ன என் சில்லைறைப் புத்தியை அறைந்த மாதிரி இருக்கு/

இது வேறயா.

vasu balaji said...

பழமைபேசி said...

/4. சில்லறை cillaṟai : (page 1432)/

ஆஹா. மாப்புக்கு க்ளாஸா. நடக்கட்டு.

vasu balaji said...

பின்னோக்கி said...

/natch sirukathai.super/

நன்றி.

/antha periyavar peru vaanambaadi ???/

ஹி ஹி. இதுக்குதான் நான் ட்ரெயின்ல போறது. லொல்ல பாரு.

vasu balaji said...

பழமைபேசி said...

/கிளறியா? கெளரியா?/

ஆஹா. எனக்கும் இருக்கா. அது வந்து கி தான். ஆனா நான் கிண்டிக் கெளறின்னு போட்டா க் அ தூக்கிட்டு றி ரி யாக்கினா வாத்தி சதி பண்றாரு..அவ்வ்வ்வ்

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/ஒரு வேளை கௌரிய(கவுரி) மனசில வச்சி சொல்லியிருபாரோ/

சின்ன மாப்பு. மாட்டிச்சின்னு பிட்ட போடுறீங்களா. அதாருங்க கவுரி. உங்களுக்கு கவனம் வந்துச்சி இப்ப=))

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/அல்ல்ல்ல்ல்ல்லோவ்.... மாப்பு

இது பாலாசி ஊட்டுச் சண்டை..
அந்த பஞ்சாயத்த அங்கதான் நடத்தோனும்...

இங்க எதுக்கப்பு/

=)). இது நல்லாருக்கே.

vasu balaji said...

பழமைபேசி said...

/கிடைச்ச வாய்ப்பை, மாப்பு நல்லாவே பயன்படுத்திகிட்டாரு போல இருக்கே? அவ்வ்வ்வ்...../

ஆப்புன்னா மாப்புக்கு அல்வா மாதிரி=))

vasu balaji said...

பழமைபேசி said...

/வீடு புகுந்து இரகளைன்னு பத்திரிகைகள்ல படிச்சது இல்லைங்களா?/

ஓஓஓஓஓஓ. இதானா அது.

vasu balaji said...

ஜீவன் said...

/நல்லாயிருக்கு அண்ணே ..!/

நன்றிங்க ஜீவன்.

vasu balaji said...

cheena (சீனா) said...

/நல்லாருக்கு கதை - மழலைகளின் உள்ளமே தனிதான் - உலகமே தனிதான்

நல்வாழ்த்துகள்/

நன்றிங்க.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ நல்லா வந்துருக்கு கதை...

வாழ்த்துக்கள் பாலா சார்.../

ஆஹா. நன்றி. அதை விட உன் ப்ரொஃபைல் பாப்பா க்யூட்.

vasu balaji said...

தியாவின் பேனா said...

/வாழ்த்துகள் சார்../

நன்றிங்க தியா.

vasu balaji said...

நாஞ்சில் பிரதாப் said...

/டச்சிங் கதை...நல்லாருக்கு சார்.../

நன்றி பிரதாப்

vasu balaji said...

பா.ராஜாராம் said...

/அருமையான கதை சார்.வாழ்துக்கள்!/

வாங்க ராஜாராம் ஸார். முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

மணிநரேன் said...

மனதை நெருட வைத்த கதை.

ஈ ரா said...

நல்ல கதை அண்ணே.. சிந்திக்க வைத்தது...இனி நிறைய பேரை செயல்படவும் வைக்கும் என நம்புகிறேன்..

அன்புடன் மலிக்கா said...

கதை மிக அருமையாக இருக்கு வானம்பாடிகளாரே, வாழ்த்துக்கள்

வெண்ணிற இரவுகள்....! said...

கதை அருமை .......நன்றாய் இருந்தது ....................Children of heaven படம் பார்த்தது போல் இருந்தது

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமை.. நாம் நாள்தோறும் இதுபோன்ற விஷயங்களை கடந்துதான் வர வேண்டி இருக்கிறது.. இம்மாதிரி சிறுவர்களை பார்க்கும்போது ஒரு கணமேனும் இனி இந்த கதை நினைவுக்கு வரும்.. அதுதான் உங்கள் வெற்றி..

vasu balaji said...

மணிநரேன் said...

/மனதை நெருட வைத்த கதை./

வாங்க மணிநரேன். நன்றி.

vasu balaji said...

ஈ ரா said...

/நல்ல கதை அண்ணே.. சிந்திக்க வைத்தது...இனி நிறைய பேரை செயல்படவும் வைக்கும் என நம்புகிறேன்../

வாங்க ஈ.ரா. நன்றிங்க.

vasu balaji said...

அன்புடன் மலிக்கா said...

/கதை மிக அருமையாக இருக்கு வானம்பாடிகளாரே, வாழ்த்துக்கள்/

நன்றிங்க.

vasu balaji said...

வெண்ணிற இரவுகள்....! said...

/கதை அருமை .......நன்றாய் இருந்தது ....................Children of heaven படம் பார்த்தது போல் இருந்தது/

ரொம்ப நன்றிங்க.

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/ இம்மாதிரி சிறுவர்களை பார்க்கும்போது ஒரு கணமேனும் இனி இந்த கதை நினைவுக்கு வரும்.. அதுதான் உங்கள் வெற்றி../

நன்றிங்க

Suresh Kumar said...

நல்ல கதை வாழ்த்துக்கள்

vasu balaji said...

Suresh Kumar said...

/நல்ல கதை வாழ்த்துக்கள்/

நன்றிங்க சுரேஷ் குமார்.:)

Jaleela Kamal said...

ரொம்ப அருமை

கதையும் சூப்பர் வாழ்த்துக்கள்

vasu balaji said...

Jaleela said...

/ரொம்ப அருமை

கதையும் சூப்பர் வாழ்த்துக்கள்/

ரொம்ப நன்றிங்க, முதல் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

நாகா said...

அருமையான கதை ஐயா.. மனிதாபிமானம் என்ற ஒரு உணர்வு மனிதனுக்கு இன்னும் மீதமிருக்கிறதா என்ன?

vasu balaji said...

நாகா said...

/அருமையான கதை ஐயா.. மனிதாபிமானம் என்ற ஒரு உணர்வு மனிதனுக்கு இன்னும் மீதமிருக்கிறதா என்ன?/

நன்றிங்க நாகா. இன்னும் கொஞ்ச நஞ்சம் இருக்கத்தான் செய்யுது குழந்தைகளிடம்.:)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மிக அருமையான படைப்பு பாலாண்ணே!! நம்மில் பலர் அந்த இளைஞனைப் போலவும் பலர் பெரியவரைப் போலவும் தான் உள்ளோம்.

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

/மிக அருமையான படைப்பு பாலாண்ணே!! நம்மில் பலர் அந்த இளைஞனைப் போலவும் பலர் பெரியவரைப் போலவும் தான் உள்ளோம்./

வாங்க செந்தில். நன்றிங்க.

Unknown said...

நல்ல கதை....எப்போஊடி உங்கனால மட்டும் இப்பூடி... :-)..