Sunday, May 31, 2009

கீழேயும் தள்ளி குழி பறிக்கும் குதிரைகள்

குதிரை கீழேயும் தள்ளி குழியும் பரிச்சதாம்னு ஒரு சொலவடை சொல்லுவாங்க. அது இதுதானான்னு 2 பேர பார்த்து கேக்கணும்னு தவிப்பா இருக்கு. ஒன்று கலைஞர் அய்யா, மத்தது தினத்தந்தி.

கலைஞர்: சாதனையாளர் விருதை ஏற்க மறுத்து வற்புறுத்தலின் பேரில் ஏற்றுக் கொண்ட பொழுது கடைசிச் சாதனையாக ஈழப் பிரச்சனையில் ஒரு தீர்வு காண வேண்டும் என்ற போதும் தொடர்ந்து தீர்மானங்கள், சர்வ கட்சிகளுடன் ஆலோசனை, நடுவண் அரசுக்கு வேண்டுகோள், தீர்மானம் என்ற போது எங்கள் மனதில் நம்பிக்கையும், எதிர் பார்ப்பும் விதைத்தது நீங்கள். திருமாவின் உண்ணாவிரததில் தொடங்கி உங்கள் செயல் பாடுகள் அந்த நம்பிக்கையை நொறுக்கி, தேர்தல் நெருங்க முற்று முழுதாக வாய் மூடி மௌனியாய், பெயருக்கு அறிக்கைகள், வேண்டுகோள் என்று பொய்த்து கடைசியில் தேர்தல் மட்டுமே என்றாகிய பொழுது எங்கள் நம்பிக்கைகளை அல்ல எங்களையே கொன்றதற்குச் சமம். இந்த வெற்றி எதற்கென்பது உங்களுக்குத் தெரியும். சத்தியமாக ஈழத் தமிழருக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு ஆதரவில்லை இது என்பது நீங்கள் அறியாததல்ல. தேர்தல் முடிந்து தில்லி சென்ற போது உங்களால் தொப்புள் கொடி உறவுகள் எனப்பட்ட பல்லாயிரக் கணக்கான உயிர்களின் கதி என்ன என்பது பெரிய தவிப்பாய் உலகம் முழுதும் கேள்வி எழுப்பிய பொழுது உங்கள் நாவைக் கட்டியது எது? பதவி பேரம் துவங்கி பெரும்பான்மை கர்வத்தில் உதாசீனப் பட்டு திரும்பிய நிலையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப் பாடு குறித்து உங்களால் ஆகக் கூடியது பெயருக்கு ஒரு கடிதம் மட்டும்தானா? நீங்கள் பார்த்திருப்பீர்கள் பக்ஸேயின் கொக்கரிப்பை:

18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போரை ஆதரித்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களுடைய நன்றி.

இந்திய அரசு எங்கள் பக்கம்தான் என்பதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தோம்.

விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் காட்டியிருக்கிறது.

எங்களுடைய நடவடிக்கைகளை ஆதரித்த கட்சியும் கூட்டணியும் வென்றிருக்கிறது.

இவன் கொன்றதில் புலிகள் எத்தனை பேர்? மக்கள் எத்தனை பேர்? படிக்கும் போதே கூசிப் போகிறது. தமிழர் குறித்து இந்தக் கயவன் மனதில் என்ன எண்ணம் இருக்க முடியும்? உங்கள் அருமை நண்பர் சிதம்பரம் பதவி ஏற்றதும் மிக அவசரமாக இந்தியா வந்த அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்துப் பேசியமைக்கும் நீங்கள் ஏன் எதுவும் சொல்லவில்லை? இவற்றில் நீங்கள் அவர்களுக்கு செய்த உதவி என்ன? இந்த நிலையில் தொடர்ந்தும் உதவத் தயார் என்பது மேலே சொன்ன சொலவடை தானா?

தினத் தந்தி: தமிழரின் நாளின் விடியல் தந்தியோடு. எழுத்துக் கூட்டியாவது படிக்கும் எண்ணற்ற வாசகர்கள். கோடியைத் தாண்டிய வாசகர்கள். ஆளும் கட்சி அறிக்கை விடும்போதெல்லாம் ஈழத் தமிழருடன். மற்ற நாட்களெல்லம் ராஜபக்சேயின் ஜால்ரா. நாணயக்காரவின் புளுகும், ஃபொன்சேகாவின் புரட்டும் வேத வாக்கு. 30 புலிகள் கொல்லப் பட்டார்கள் முதல் பக்கத்தில். 3000 தமிழர்கள் காயம் ஏதோ ஒரு பக்கத்தின் மூலையில். மேல் நாட்டுப் பத்திரிகைகள் சொல்லுவதெல்லாம் இவருக்குத் தெரியாது. பக்ஸேயின் அடிவருடி பாட்டம் லைன் தான் இவருக்கு. போகட்டும். எல்லாத் தினசரிகளும் இப்படித்தான். ஈன மானமில்லாமல் இப்போது ஒரு வாரமாக அறிவிப்பு. ஈழத் தமிழர் போராட்டம் குறித்த காலச் சுவடுகள் மெகாத் தொடர். படிக்கத் தவறாதீர்கள்! இப்போது தான் தெரிந்ததா? இரண்டு மாதம் முன்பு தொடங்கி இருந்தால் என்ன மாற்றமெல்லாம் நிகழ்ந்திருக்கக் கூடும். புலிகளா, ராணுவமா பந்தயத்தில் கல்லா கட்டிய ருசி. சாவில் வியாபாரம். குதிரை...சொலவடைதான்.

14 comments:

ராஜ நடராஜன் said...

நெஞ்சுக்கு நீதியில்லா வரலாற்றுப்பிழைகள்.

கிரி said...

//எல்லாத் தினசரிகளும் இப்படித்தான்//

இது தான் உண்மை

sakthi said...

இவன் கொன்றதில் புலிகள் எத்தனை பேர்? மக்கள் எத்தனை பேர்? படிக்கும் போதே கூசிப் போகிறது. தமிழர் குறித்து இந்தக் கயவன் மனதில் என்ன எண்ணம் இருக்க முடியும்? உங்கள் அருமை நண்பர் சிதம்பரம் பதவி ஏற்றதும் மிக அவசரமாக இந்தியா வந்த அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்துப் பேசியமைக்கும் நீங்கள் ஏன் எதுவும் சொல்லவில்லை? இவற்றில் நீங்கள் அவர்களுக்கு செய்த உதவி என்ன? இந்த நிலையில் தொடர்ந்தும் உதவத் தயார் என்பது மேலே சொன்ன சொலவடை தானா?

ஆமாம் இதில் என்ன சந்தேகம்

sakthi said...

ஈழத் தமிழர் போராட்டம் குறித்த காலச் சுவடுகள் மெகாத் தொடர். படிக்கத் தவறாதீர்கள்! இப்போது தான் தெரிந்ததா? இரண்டு மாதம் முன்பு தொடங்கி இருந்தால் என்ன மாற்றமெல்லாம் நிகழ்ந்திருக்கக் கூடும். புலிகளா, ராணுவமா பந்தயத்தில் கல்லா கட்டிய ருசி. சாவில் வியாபாரம். குதிரை...சொலவடைதான்.

ஈழம் கதைக்கும் கவிதைக்கும் கரு

அவ்வளவுதான்

முடிந்த வரை ஓட்டு சேகரிக்கபட்ட பயன்படுத்தப்பட்ட துருப்புச்சீட்டு

யூர்கன் க்ருகியர் said...

தினத்தந்தியுமா??

Suresh Kumar said...

உலகத்தில் எந்த ஒரு இனத்திற்கும் இப்படி ஒரு கொடுமை நடந்ததில்லை . ஏனெனில் தமிழினத்தில் மட்டும் தான் ஈன பிறவிகள் இருக்கின்றனர்

vasu balaji said...

/நெஞ்சுக்கு நீதியில்லா வரலாற்றுப்பிழைகள்./
நெஞ்சுக்கு அநீதி எழுதலாம்

vasu balaji said...

ஆம் கிரி.

vasu balaji said...

/ஈழம் கதைக்கும் கவிதைக்கும் கரு

அவ்வளவுதான்/

இந்த பாவம் சும்மா விடாது.

vasu balaji said...

/தினத்தந்தியுமா??/

தினத் தந்திதான். ஆனாலும் ஒரு ஆறுதலும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இனிமேலாவது மக்களுக்குப் புரியும்.

vasu balaji said...

/தமிழினத்தில் மட்டும் தான் ஈன பிறவிகள் இருக்கின்றனர்/

அப்படி வரலாற்றில் நின்று விடிவோமே என்று கலக்கமாக இருக்கிறது.

கலகலப்ரியா said...

படிக்கல சார்.. இதெல்லாம் படிக்க முடியல.. வெறுப்பா இருக்கு..

vasu balaji said...

/இதெல்லாம் படிக்க முடியல.. வெறுப்பா இருக்கு../

வெறுத்துப் போய்தாங்க எழுதினேன்.

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,


நன்றி
தமிழ்ர்ஸ்