இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழரை நியமிக்க கோரிக்கை: ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்
நடக்கிற கதையா பேசுங்கப்பா. கர்நாடகா ஆச்சு, கேரளா ஆச்சு, ஆந்திராதான் பாக்கி. அங்க ஆளு தேடுவாங்க.
_______________________________________________
பிரபாகரனை உயிருடன் பிடிக்க விரும்பினோம்:ராஜபக்சே
பிடிச்சிருந்தா இப்படி டிராமா போட்டிருக்க முடியாதே?
_______________________________________________
ராஜபக்சேயுடன் -பான் கி மூன் 1மணிநேர சந்திப்பு
என்ன பிரயோசனம். உங்க உதவி இல்லாம இவ்வளவு கொலை பண்ணி இருக்க முடியாது. மத்த படி நான் சொன்னது சொன்னதுதான்னு அனுப்பிட்டானே!
_______________________________________________
எங்களை விசாரிக்கும் முன்பு------: ராஜபக்சே சகோதரர் ஆவேசம்
உங்களுக்கு விசாரணை வேற கேடா? அப்படியே கழுவேத்தணும்.
_______________________________________________
ராஜபக்சேவிடம் விவாதித்தது என்ன?: கலைஞரிடம் விளக்கிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அட! அரிச்சந்திரன் ஆவி புகுந்துட்டுதா? ஏதோ புளுகிட்டு போயிருப்பான்.
_______________________________________________
ஈழத் தமிழர்களின் பிரச்னைகள் என்னவென்று கண்டறித்து அவற்றை இலங்கை அரசு தீர்க்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.
மனுசனா வாழணும்னு நினைக்கிறது தான் பிரச்சனை. அதனால தான் தீர்க்கிறாரு லட்சக் கணக்கில.
_______________________________________________
தமிழ் மக்களை பார்த்து கலங்கினேன்: பான்கீமூன்
ஸ்டார்டிங் எல்லாம் நல்லாதான் பண்றீங்க. பினிசிங் பக்சே கைலயே விட்டு போறீங்களே எல்லாரும்.
_______________________________________________
கிளிநொச்சியில் ராணுவமுகாம்:இலங்கை அரசு திட்டம்
வை வை. எத்தன வாட்டிதான் கொண்டு வந்து கொண்டு வந்து குடுப்ப. அங்கயே இருந்தா வசதி.
_______________________________________________
இலங்கை தமிழர்களுக்கு உறுதுணையாக இருப்போம்: நடிகர் சங்க பொதுக்குழு தீர்மானம்
எல்லாம் நடிக்கும் போது அதே தொழில்ல இருக்கிறவங்க நீங்க நடிக்காமலா? பார்த்தோமே! எவ்வளவு உறுதுணைன்னு.
_______________________________________________
தொண்டு பணியாளர்கள், சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை முகாம்களுக்குள் அனுமதிக்குமாறு பான் கீ மூன் வலியுறுத்தல்: ஜனாதிபதி மறுப்பு
எல்லாருக்கும் பெப்பே தான்! கோலெடுத்தா தான் குரங்காடும்.
_______________________________________________
அமைச்சரவையில் பங்கேற்பது பற்றி விவாதித்து அறிவிப்போம்: கலைஞர்
தேவையில்ல போங்கடான்னு சொன்னா என்னாயிடும்? ஆதரவு தேவையா இருக்கும்போதே அரையணாக்கு மதிக்கல.
_______________________________________________
அதிகாரப் பகிர்விற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது: ஜே.வி.பி
ஆரம்பிக்கக் கூட இல்லை. இவனுங்க ஆரம்பிச்சிட்டானுங்க. எவனுக்காவது புரியுதா? எங்க இவனுங்கள அடிக்க வேணாம் புடிக்கட்டும்.
_______________________________________________
நடேசனும் புலித்தேவனும், உயிரோடு இருந்திருந்தால், அவர்கள் தமிழர்களுக்கு நம்பிக்கையான அரசியல் தலைவர்களாகியிருப்பார்கள்:மேரி கொல்வின்
அதனால தானே போட்டுத் தள்ளிட்டாங்கள்.
_______________________________________________
பரீட்சையில் காப்பியடித்த கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு
பிடிக்கிறாங்களான்னு பார்த்திருப்பாரு. உருப்படும்.
_______________________________________________
வயகராவை கண்டுபிடித்த விஞ்ஞானி 92 வயதான ராபர்ட் பர்ச்காட் சியாட்டில் நகரில் மரணம் அடைந்தார்.
டெஸ்ட் பண்ணாரோ?
_______________________________________________
7 comments:
super
thanks
தமிழன் கருனானிதி மெல்ல இந்தியனாக மாறி,இப்போது இதாலிய பிரஜை!
வாழ்நாள் முழுவதும் உன்னை நம்பி ஏமாந்தேனே!
நெம்ப சூப்பருங்கோவ்.....!!!
தமிழ் மக்களை பார்த்து கலங்கினேன்: பான்கீமூன்
ஸ்டார்டிங் எல்லாம் நல்லாதான் பண்றீங்க. பினிசிங் பக்சே கைலயே விட்டு போறீங்களே எல்லாரும்.
superb
நன்றி மேடி, சக்தி.
//ஈழத் தமிழர்களின் பிரச்னைகள் என்னவென்று கண்டறித்து அவற்றை இலங்கை அரசு தீர்க்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.//
இனிமேதான் கண்டு பிடிக்கனுமாமா ?
Post a Comment