இலங்கை: அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப் படுவார்கள் என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறேன்: சோனியா
அப்பாவி யாரு பாவி யாருன்னு யாரு முடிவு பண்ணுவீங்க?
________________________________________________
போலீசார் தங்கள் கடமையை முறையாக செய்ய வேண்டும்: ஜெயலலிதா
கட்டளைக்கு கீழ்ப்படிதல் கடமையாகாதான்னு கேப்பாங்களே?
________________________________________________
தமிழகத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது
பொய்ப் பிரசாரம் ஓய்கிறது. தேர்தல் முடிவு வர வரைக்கும் ஈழத்த மறந்துடுவாங்க.
________________________________________________
பணநாயகமா ? அல்லது சனநாயகமா ? -ராமதாஸ்
அதான் இது இதான் அது. பதவி இல்லாம அரசியலா? அரசியலில்லாம பதவியா? அது சொல்லுங்க.
________________________________________________
ஐந்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை: தேர்தல் அதிகாரி
அப்போ மாநிலத் தேர்தலுக்கு வெளிய வந்துடலாமா?
________________________________________________
ஒரே நாளில் 2,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை: செய்தி
போரெல்லாம் நின்ன பிறகும் இப்படி செத்தா என்ன பண்ணுவாங்க?
________________________________________________
இங்கிலாந்து செய்தியாளர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றம்
அட இலங்கைக்குள்ள போனதே பெரிய சாதனையாச்சே?
________________________________________________
விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க ஜெ. குரல் கொடுக்கவேண்டும்: சீமான்
பார்த்துங்க. குரல் தானேன்னு டப்பிங் கலைஞர பேச விட போறாங்க.
________________________________________________
புல்மோட்டை மருத்துவமனை வவுனியாவுக்கு மாற்றம்
ஏன்? சிங்களவனுக்கு சரியான அடியோ?
________________________________________________
சீமானும், பாரதிராஜாவும் அ.தி.மு.க. கலைக்குழுவாக மாறிவிட்டார்கள்: வாகை சந்திரசேகர்
நீங்களும் நெப்போலியனும் திமுக கலைக்குழுவா? வேலயப்பாருங்கையா.
________________________________________________
இலங்கை பிரச்சனையில் மற்ற நாடுகள் தலையிடலாம். - ராமதாஸ்
தலையிட்டதால வந்த அனர்த்தம் போதாதா? மனிதாபிமானம் உள்ள நாடுகள்னு சொல்லுங்க.
________________________________________________
முல்லைத்தீவில் 2,000 தமிழர்கள் பலி: ஐ.நா. கண்டனம்
அப்பாடா. கடமை முடிஞ்சது. ஒரு நாள் அங்க யாரும் சாகாமலே கண்டனம் விட்டு மாட்டிக்கப் போறான் சப்ப.
________________________________________________
எங்களிடம் வாக்கு இல்லை;வாக்கரிசிதான் இருக்கிறது:சீமான் ஆவேசப்பேச்சு
ஒரு ரூபாய் அரிசி கடத்திட்டீங்கன்னு வழக்கு போட்டுடுவாங்க. உசாரு.
________________________________________________
தனி ஈழம் அமைக்க ராணுவத்தை அனுப்ப வேண்டாம்: ஜெ.வுக்கு சீமான் வேண்டுகோள்
அதும் சரிதான். கன்பீசன் ஆனா கஷ்டம்.
________________________________________________
நடிகையிடம் சில்மிஷம் வழக்கு: கேரள முன்னாள் அமைச்சர் விடுதலை
நடிகையிடமிருந்தா வழக்கிலிருந்தா?
________________________________________________
பா.ஜ ஆட்சி அமைக்க ஜெ. ஆதரவுஅளிப்பார்:உமாபாரதி
ஜெ பிரதமாராக பா.ஜ. ஆதரவளிக்குமா?
________________________________________________
தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரம்
பதவி இருக்குமா போய்டுமான்னு இருக்கறதால தானே இறுதி கட்டம்னு சொன்னது. வேற இல்லையே?
________________________________________________
5 comments:
//இங்கிலாந்து செய்தியாளர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றம்
அட இலங்கைக்குள்ள போனதே பெரிய சாதனையாச்சே?//
எவனாவது ஆப்படிப்பான்னு பார்த்தா ஒரு பயலும் புத்திசாலித்தனமா செயல்பட மாட்டேங்குறானுங்களே:(
முடிஞ்ச வரைக்கும் முகாம்ல பேட்டியெல்லாம் எடுத்தாங்கதான். எல்லாம் பார்த்து ஐயோ அநியாயம்னு சொன்னதோட சரி.எப்போவாவது நடவடிக்கை எடுப்பாங்களான்னே தெரியல. ஒரே நாள்ள 2000 நிஜமா பொய்யான்னு பட்டி மன்றம் வைக்கிறதோட சரி.
//எங்களிடம் வாக்கு இல்லை;வாக்கரிசிதான் இருக்கிறது:சீமான் ஆவேசப்பேச்சு
ஒரு ரூபாய் அரிசி கடத்திட்டீங்கன்னு வழக்கு போட்டுடுவாங்க. உசாரு//
:-))))
வாங்க கிரி. நன்றி
உணர்வுபூர்வமான பதிவு. வாழ்த்துக்கள்
Post a Comment