இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத்தயார்:கலைஞர்
இது வரைக்கும் யாருக்கு எப்படி உதவினீங்கன்னு தெரியும். இத தொடர வேணாம் அய்யா. மக்களுக்கு உருப்படியா நல்லதா பண்ணுங்க.
_____________________________________________
இந்தியாவுக்காகவும் போரிட்டோம்: ராஜபக்சே
என்னா பெரிய மனசு. உன்ன யாரு கேட்டாங்க சொல்ல முடியுமா?
_____________________________________________
18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம். :ராஜபக்ஸே
ஆக இதுதான் காரணமா?
_____________________________________________
புலிகளுக்கு எதிராக என்னுடைய வெற்றியும் சோனியா காந்தியின் தேர்தல் வெற்றியும் ஒரே சமயத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
என்னா டைமிங்கு! என்னா செட்டப்பு!
_____________________________________________
விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் காட்டியிருக்கிறது. :பக்ஸே
நீயெல்லாம் இப்படி பேசுற அளவுக்கு நடந்துகிட்டமே! நாண்ட்டுகிட்டு சாவாம இருக்கோம் பாரு. ஆனாலும் நிஜமாச்சே.
_____________________________________________
புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள். :பக்ஸே
நாங்க எதுக்கு விலை போனோம்னு எங்களுக்கு தெரியும்டி. அடங்கு.
_____________________________________________
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். அவர்கள் யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ராஜபக்ச.
எந்த வெக்கங்கெட்ட நாயின்னு தெரியும். அவன்ட சொல்லு எங்க போனாலும் ஆம்லட்னு.
_____________________________________________
தமிழக முதல்வருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு.
பதவிக்கு அலயிற நரிகள். எங்க சங்கரிய காணோம். மானத்த விட்டா மாரு முட்ட சோறுக்கு வழி கேக்க வந்தாங்க போல.
_____________________________________________
புலிகளை தடை செய்வது குறித்து கவனம் செலுத்துமாறு மலேசிய அரசாங்கத்திடம் அமைச்சர் ரோஹித்த கோரிக்கை
அடுத்த இலக்கு அங்கயா? ராணுவமா அது? கூலிப்படையா?
_____________________________________________
பழ.நெடுமாறன் மீது சென்னைபோலீசார் வழக்குப்பதிவு
50 நிமிஷம் கூட பேசிட்டா கொலைக்குத்தமா? ஆளும் கட்சிக் கூட்டமெல்லாம் சரியா முடிச்சிடுராங்களா?
_____________________________________________
45 நாள் தடை நீங்கியது: மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்
அப்போ கடலுக்குள்ள இருந்த மீனெல்லாம் வெளியே வந்துடும்.
_____________________________________________
ஜெ. இன்று கொடநாடு செல்கிறார்
ஈழத் தமிழ்நாடு வேலைதான் இல்லையே. நாடு இருக்கு போறாங்க. வீடு இல்லாதவங்களப் பத்தி அவங்களுக்கென்ன?
_____________________________________________
20 கோடியில் அமைச்சர் வீட்டு ஆடம்பர திருமணம்!
அமைச்சர்னா அந்தஸ்து வேணாமா? விலைவாசி அப்படி. கண்ணு போடாதிங்கப்பா.
_____________________________________________
அதிகாரப் பகிர்வை வழங்குமாறு இந்தியா இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திவருகிறது: எஸ் எம் கிருஷ்ணா
கத்தியும் நீங்களே குடுத்தா துண்டு போட்டு பகிர்ந்துடுவாங்க.
_____________________________________________
ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம்
அப்ப்டியே போய்டு. இந்த பக்கம் வந்தா நாறிபோய்டுவ!
_____________________________________________
14 comments:
புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள். :பக்ஸே
நாங்க எதுக்கு விலை போனோம்னு எங்களுக்கு தெரியும்டி. அடங்கு./////////////
உண்மையை நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க
// இந்தியாவுக்காகவும் போரிட்டோம்: ராஜபக்சே
என்னா பெரிய மனசு. உன்ன யாரு கேட்டாங்க சொல்ல முடியுமா?//
ஹி... இதெல்லாம் வேற கேட்பாங்களா... எல்லாம் நமக்கே தெரியுமே..
தங்களுடைய இடுகையை தமிழர்ஸ்சில்... www.tamilers.com - ல் இணைத்துள்ளேன்.
முடிந்தால் தமிழர்ஸின் ஓட்டுப் பட்டையையும் இணையுங்கள் நண்பரே.
// 45 நாள் தடை நீங்கியது: மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்
அப்போ கடலுக்குள்ள இருந்த மீனெல்லாம் வெளியே வந்துடும்.//
கடலுக்குள் இருக்கும் மீன் வெளியே வருதோ இல்லையோ, மீன் பிடிக்க போனவங்க நல்லபடியா திரும்பி வரவேண்டும்.
// 20 கோடியில் அமைச்சர் வீட்டு ஆடம்பர திருமணம்!
அமைச்சர்னா அந்தஸ்து வேணாமா? விலைவாசி அப்படி. கண்ணு போடாதிங்கப்பா.//
கோடி என்பது இப்போது எல்லாம் ஒன்றுமில்லைன்னு ஆகிப் போச்சுங்க..
/ இராகவன் நைஜிரியா said...
தங்களுடைய இடுகையை தமிழர்ஸ்சில்... www.tamilers.com - ல் இணைத்துள்ளேன்.
முடிந்தால் தமிழர்ஸின் ஓட்டுப் பட்டையையும் இணையுங்கள் நண்பரே./
வாங்க ராகவன் சார். நன்றி. செய்கிறேன்.
/Suresh Kumar said...
உண்மையை நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க/
நன்றி சுரேஷ்.
புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள். :பக்ஸே
நாங்க எதுக்கு விலை போனோம்னு எங்களுக்கு தெரியும்டி. அடங்கு.
சவுக்கடி விலை போனவர்களுக்கு
18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம். :ராஜபக்ஸே
ஆக இதுதான் காரணமா?
ஒத்துக்கிட்டான் அவன் வாயாலேயே
ஜெ. இன்று கொடநாடு செல்கிறார்
ஈழத் தமிழ்நாடு வேலைதான் இல்லையே. நாடு இருக்கு போறாங்க. வீடு இல்லாதவங்களப் பத்தி அவங்களுக்கென்ன?
அதானே
வருகைக்கு நன்றி சக்தி
//இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத்தயார்:கலைஞர்
இது வரைக்கும் யாருக்கு எப்படி உதவினீங்கன்னு தெரியும். இத தொடர வேணாம் அய்யா. மக்களுக்கு உருப்படியா நல்லதா பண்ணுங்க.//
நம்மை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே
//கிரி said...
நம்மை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே//
அப்படித்தான் இருக்கு
//விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் காட்டியிருக்கிறது. :பக்ஸே//
இறையாண்மை அம்மணமா திரியுது!
Post a Comment