Thursday, May 14, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 51

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, தமிழக காவல்துறையினர், சமூக விரோதிகள் மற்றும் குற்ற பின்னணி உடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுத்ததால் மாநிலத்தில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது: டி.ஜி.பி.

வேட்பாளர்களில் சிலரைத் தவிரன்னு சொல்லாம விட்டார். அவங்க மேலயும் நடவடிக்கை எடுத்திருந்தால்?
___________________________________________________
நரேஷ் குப்தா ஓட்டு போடவில்லை ,வேலைப் பளு காரணமாக அவர் ஓட்டு போட முடியவில்லை:செய்தி

நல்ல உதாரணம். இதே காரணத்தால தான் தலைமை கமிசனருக்கும் ஓட்டு இல்லை. கடமை வீரர்கள்.
___________________________________________________
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

பிரச்சனைன்னு வந்தா அது வாக்களிக்கிற நேரத்துல தானே வருது. அப்புறம் பாதுகாத்து என்ன பண்ண?
___________________________________________________
இரவு 11 மணிக்கு வாக்களித்த 90 விவசாயிகள்

அவங்க என்ன தேர்தல் அதிகாரியா. வேலை இருந்திச்சின்னு போடாம போக. குடிமகன்களாச்சே!
___________________________________________________
100அதிமுகவினர் காங்கிரசில் இணைந்தனர்

ஆரம்பிச்சிட்டாங்கப்பா.
___________________________________________________
இலங்கை: மனிதாபிமானப் பிரச்சனையை தீர்க்காவிட்டால் பேரழிவைத் தவிர்க்கமுடியாது:ஒபாமா

அதுக்குத்தானேண்ணே இத்தனை போராட்டம். யாரு தீர்க்கறது? அது தானே தெரியலை.
___________________________________________________
இலங்கை தமிழர்கள் தொடர் படுகொலை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவலை

அட வாங்க! எவ்ளோ நாள்தான் கவலைப் படுவீங்க. கட்டி புடிச்சி அழவாவது செய்யலாம்.
___________________________________________________
தமிழர்களுக்கு குரல் தந்த ஒபாமாவுக்கு நன்றி: விடுதலைப்புலிகள்

தமிழர்களுக்கு எதிராக ஆயுதம் தந்த நாடுகளுக்கெல்லாம் நன்றின்னு பக்சே சொல்லுவாரு.
___________________________________________________
ஈழத்தமிழருக்காக 19ல் ஆர்ப்பாட்டம்:கி. வீரமணி

அய்யோ எதுக்குங்க? போரைத்தான் நிறுத்தியாச்சே. இப்போ காலைல டிபன், மதியம் ராத்திரி சாப்பாடு, மாத்திக்கட்ட துணி. அதுக்குதான் ஏங்கி நிக்கிறாங்க. போங்கய்யா.
___________________________________________________
வருண்காந்தி மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து

வரிசையா ரத்தாகிறத பார்க்கும்போது பாதுகாப்புச் சட்டத்துக்கெதிரா ஒரு பாது காப்புச் சட்டம் வேணும் போல.
___________________________________________________
பா.ஜ ஆட்சி அமைக்க விடமாட்டோம்: பிரகாஷ்கரத்

அப்படியே வேற கட்சிய அமைக்க விட்டாலும் தொடர விடமாட்டீங்க. இப்படியே தானே உங்க பிழைப்பு.
___________________________________________________
மனித உரிமைக் கண்காணிப்பகம் முள்ளிவாய்காலை செயற்கைக் கோள் மூலம் படம் எடுத்துள்ளது

பத்திரமா வைங்க. நாள பின்ன என்னல்லாம் போச்சுன்னு பார்த்துக்கலாம்.
___________________________________________________
போரை நிறுத்த சர்வதேசம் அழுத்தம் கொடுத்தாலும் அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: ஊடக அமைச்சர்

சர்வதேச நிலைப்பாட்டிலும் மாற்றமில்லை. அவங்க கேட்டுகிட்டே இருப்பாங்க. நீங்க சாவடிச்சிகிட்டே இருப்பீங்க.
___________________________________________________
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஜோர்தானுக்கு விஜயம்

லிபியா பிச்சை அதுக்குள்ள பங்கு போட்டாச்சா? ஜோர்டான் பிச்சைக்கு கிளம்பிட்டாரு.
___________________________________________________
எந்த நேரத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆளும் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும்: ஜனாதிபதி எச்சரிக்கை

மக்கா! சாக்கிரத. ஏதோ உள்குத்து இருக்கும்போல. ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சின்னு ஆக போகுது.
___________________________________________________
இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபையும் கவலை; பொதுமக்கள் அவலநிலை குறித்து ரஷ்ய தூதரும் கவலை

எந்த பய புள்ளையும் காப்பாத்தப் போறதில்லை, விதி விட்ட வழின்னு அங்க சனங்க கவலையே இல்லாம செத்துகிட்டிருக்காங்க.
___________________________________________________
தமிழர்களை கொன்று கண்கள் சிறுநீரகம், ஈரலை திருடுகிறார்கள் : பாதிரியார் பரபரப்பு தகவல்

நகையெல்லாம் திருடியாச்சி. இதமட்டும் விட்டு வைக்கிறாங்களா? ஆகக் கூடி செத்தாலும் இவனுங்க விடுறாங்க இல்லை.
___________________________________________________
சிறீலங்கா விவகாரம் பாதுகாப்புச் சபை உத்தியோகபூர்வ ஒன்றுகூடலை நடத்தியுள்ளது :செய்தி

இனியாவது செயல் படுங்க சாமிகளா. திரும்பவும் கோரிக்கைன்னு இழுபடாம.
___________________________________________________
இராணுவத் தேவைகளுக்காக சிறீலங்காவில் அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை - சீனா

ஆமாம். ஆடு நனயுதேன்னு ஓநாய் அழுத பழமொழி சீனால இல்லையோ?
___________________________________________________
‘வடக்கின் வசந்தம்’ பசில் ராஜபக்ஷ தலைமையில் விசேட குழு நியமனம்

ஆகா! ஆகா! நிவாரணம் பங்கு போட இவரா?
___________________________________________________

11 comments:

sakthi said...

நரேஷ் குப்தா ஓட்டு போடவில்லை ,வேலைப் பளு காரணமாக அவர் ஓட்டு போட முடியவில்லை:செய்தி

நல்ல உதாரணம். இதே காரணத்தால தான் தலைமை கமிசனருக்கும் ஓட்டு இல்லை. கடமை வீரர்கள்.
ஹ ஹ ஹ ஹ

sakthi said...

இரவு 11 மணிக்கு வாக்களித்த 90 விவசாயிகள்

அவங்க என்ன தேர்தல் அதிகாரியா. வேலை இருந்திச்சின்னு போடாம போக. குடிமகன்களாச்சே!

அதானே

sakthi said...

தமிழர்களை கொன்று கண்கள் சிறுநீரகம், ஈரலை திருடுகிறார்கள் : பாதிரியார் பரபரப்பு தகவல்

நகையெல்லாம் திருடியாச்சி. இதமட்டும் விட்டு வைக்கிறாங்களா? ஆகக் கூடி செத்தாலும் இவனுங்க விடுறாங்க இல்லை.

அடப்பாவிகளா

சூர்யா ௧ண்ணன் said...

//நரேஷ் குப்தா ஓட்டு போடவில்லை ,வேலைப் பளு காரணமாக அவர் ஓட்டு போட முடியவில்லை:செய்தி//

தலைவா!
வேலை பளு என்பது இரண்டாவது காரணம். முதலாவது, Election பூத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
(தினமலர் செய்தி)

vasu balaji said...

வாங்க சக்தி. நன்றி

vasu balaji said...

/முதலாவது, Election பூத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
(தினமலர் செய்தி)/

:)) இது நம்பக்கூடிய செய்தியா தெரியல. ஒரு அரசு அதிகாரியோட கார் டிரைவர் இதெல்லாம் முன்கூட்டியே கேட்டு வெச்சிடுவாரு.

கிரி said...

//வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

பிரச்சனைன்னு வந்தா அது வாக்களிக்கிற நேரத்துல தானே வருது. அப்புறம் பாதுகாத்து என்ன பண்ண?//

பெட்டியவே தூக்கிட்டு போய்டறாங்களே

யூர்கன் க்ருகியர் said...

நன்கு எழுதி உள்ளீர் ... சாட்டையடி தொடரட்டும் ....

டவுசர் பாண்டி said...

//நரேஷ் குப்தா ஓட்டு போடவில்லை//

இதுக்கா இவ்லோ சீனு

போட்டாரு ?

vasu balaji said...

கிரி, ஜூர்கேன் மற்றும் பாண்டி..வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

SUBBU said...

:)))))))))))))))))))