Sunday, May 10, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 47

சோனியா வருகை: சென்னையில் விமானங்கள் பறக்க தடை:செய்தி

காக்கா குருவி பறக்கலாமா?
________________________________________________
40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது: திருமா

உங்கள கூடதான் நம்பினோம். நடந்துச்சா?
________________________________________________
தமிழக மக்கள் தருகிற அன்பும், இந்திரா காந்தி, ராஜீவ்காந்திக்கு தந்த அன்பை எனக்கு தருகிறார்கள்.:சோனியா

நீங்கள் பதிலுக்கு கொடுத்ததெல்லாம்?.......
________________________________________________
இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.:சோனியா

ஆமாம் இளம்பெண்கள் சிங்களவனுக்கு, இளைஞர்களெல்லாம் கொட்டடிக்குள், குழந்தைகளெல்லாம் தனியாக, ஒரு வேளை கஞ்சிக்கு கதி இல்லை. இத விட உதவ முடியுமா?
________________________________________________
எங்களுடைய அரசு தமிழகத்தில் பெரிய முதலீடு செய்துள்ளது.:சோனியா

தமிழ்நாடும் இந்தியால தானே இருக்கு. நாங்களும் வரி கட்டுறோம்ல. உங்க சொந்த முதலீடு இல்லை தானே?
________________________________________________
முதல்வராக இருந்தபோது தனி ஈழம் பற்றி பேசாதது ஏன்?: ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி

முதல்வரா இருந்து கொண்டே இன்றைக்கு 1000 கு மேலயும் சாவடிச்சும் போர் நிறுத்தம்னு புளுகுறது ஏன்?
________________________________________________
இலங்கையில் போர் நிறுத்தம்தான் தேவை: சரத்குமார்

ஆமாம். இவர்ட்ட சொன்னாங்க.
________________________________________________
இலங்கை பிரச்சினையில் தமிழக கட்சிகள் குழம்பி போய் உள்ளன: அசோக்சிங்கல்

ஆமாம். போதலைன்னுதான் இந்துப் பிரச்சினைன்னு குழப்ப நீங்க வரமாட்டிங்களான்னு இருக்கோம்.
________________________________________________
இலங்கை போரில் சிக்கித் தவிக்கும் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றுங்கள். உங்களால்தான் முடியும்.:திருமா

அட அட. என்னா கரிசனை.
________________________________________________
இந்தியாவிற்கு சீனா, வங்காள தேசத்தின் அச்சுறுத்தலை தடுக்க காங்கிரசால் தான் முடியும்: திருமா

ஏன் ? வேற கட்சி இருந்தா ராணுவம் வாங்கையான்னு விட்டுடுவாங்களா?
________________________________________________
வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது இது இந்தக் காலம்:கலைஞர்

வெக்கக் கேடு. தருமமா போடுறாங்க? வடக்குல எவ்வளவு பேரு வருமான வரி ஏய்க்கிறான். இங்க எத்தனை பேரு கட்டுறாங்க சொல்லலாமே.
________________________________________________
அவரை பிரதமராக பொறுப்பேற்க வருக வருக என்று ராஷ்டீரிய பவன் அழைத்தபோது, நான் வரமறுக்கிறேன் என்று அந்த பதவியை தியாகம் செய்தவர் நம்முடைய சோனியா அவர்கள்:கலைஞர்

நாங்களும் இந்தியாலதாங்க இருக்கோம். என்ன நடந்துச்சின்னு தெரியும். வெக்கமா இல்லை?
________________________________________________
மக்களுக்கு சேவை செய்கிறேன் என் கட்சியின் மூலமாக என்று தேர்ந்தெடுத்துக்கொண்ட அந்த சொக்கத் தங்கத்தை வரவேற்று மகிழ்கிறேன்.: கலைஞர்

நேராவே சொக்கிட்டாருப்பா.
________________________________________________
தமிழ்ச்செல்வன் மறைவிற்கு இரங்கல் பா எழுதியதற்காக கருணாநிதி முதலமைச்சராக ஒரு நிமிடம் கூட நீடிக்க தகுதியில்லை என்று சொன்னவர்தான் எதிர்கட்சித் தலைவர்: கலைஞர்

அலறி அடிச்சி அடுத்த நாள் பல்டி அடிச்சவர்தான் ஆளும்கட்சித் தலைவர்னு தெரியும் ஐயா.
________________________________________________
தனி ஈழம் பெற்று தருவேன் என்று ஜெ. சொல்லுவது வேடிக்கையாக உள்ளது: கலைஞர்

ஈழம்னாலே உங்களுக்கு வேடிக்கை தானுங்கையா. வேதனை யாருக்கோ தானே.
________________________________________________
ராஜீவ்-ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு: சோனியா

உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? இது மட்டும் பண்ண முடியும்? அதென்னா துருத்திக்கிட்டு இதையே நீட்டுறது. அவங்க விருப்பம்னு ஒண்ணு கிடையாதா?
________________________________________________
யுத்த சூன்ய வலயத்தில் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்களே எஞ்சியுள்ளன: கருணா தெரிவிப்பு

எச்ச நாயீ. அதுக்கென்னா. இத சொல்லி எல்லாத்தையும் போட்டுத் தள்ளவா?
________________________________________________

8 comments:

vasu balaji said...

வருகைக்கு நன்றி அத்திரி!

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது

vasu balaji said...

நன்றி குணசீலன்.

ராஜ நடராஜன் said...

//இலங்கை பிரச்சினையில் தமிழக கட்சிகள் குழம்பி போய் உள்ளன: அசோக்சிங்கல்

ஆமாம். போதலைன்னுதான் இந்துப் பிரச்சினைன்னு குழப்ப நீங்க வரமாட்டிங்களான்னு இருக்கோம்.//

வயசு ஆக ஆக புத்தி வளரும்ன்னு சொல்வாங்க.பொருளாதாரத்துல Diminishing marginal utility ன்னு இருக்கும்.அதாவது ஒரு பொருளின் உபயோகம் ஒரு நிலைக்கு அப்பால் கீழ் முகமாக இருக்குமாம்.

அதே மாதிரி saturation point ன்னு சமைக்கும் எண்ணையை தொடர்ந்து மீன் வறுவல்,கோழியைப் பொறித்தல் போன்றவைகளுக்கு உபயோகித்தால் ஒரு நிலையில் அந்த எண்ணெய் உபயோகத்துக்கு உதவாதாம்.

அந்த மாதிரி சில பெருசுகள்.

vasu balaji said...

வாங்க நடராஜன். எங்க கொஞ்ச நாளாக் காணோம்.
/அந்த மாதிரி சில பெருசுகள்./

பல பெருசுகள்.

SUBBU said...

நறுக்கு
நறுக்கு
நறுக்கு
நறுக்கு

vasu balaji said...

நன்றி சுப்பு

Anonymous said...

Naduvula Romba Mokkai..
...Krish