Wednesday, May 6, 2009

கத கேளு கத கேளு -10

கத சொல்லி நாளாச்சில்ல!ம்ம். பீர்பால் கதை கேப்போமா? அக்பரும் பீர்பாலும் ஒரு குளிரான இரவில நகர்வலம் போனாங்களாம். யமுனைக் கரையில போகையில அப்படி ஒரு குளிரு. ராஜாக்கு தாங்க மாட்டாம இந்தக் குளிருல ஆயிரம் பொன் கொடுத்தாலும் ஒரு பயலும் வெளீய வரமாட்டான். வா போகலாம்னாரு. பீர்பால் அப்படி சொல்ல முடியாது. தேவை வரப்போ எதுவுமே பொருட்டில்லனு வாதம். அதையும் பார்க்கலாம்னு அடுத்த நாள் ராஜா ஒரு அறிவிப்பு தண்டோரா போட சொன்னாரு. இரவு முழுக்க யமுனைல நதிக்குள்ள அரையாடை உடுத்தி, யார் நிக்கிறாங்களோ அவங்களுக்கு 1000 பொன் பரிசு. நிக்கிறாங்களான்னு பார்க்க ஆள வேற போட்டாச்சி தூரமா. ஒரு பிச்சைக்காரன் ஆகா. எப்படியும் வீடில்ல. வீதில முடங்கி கிடக்கிறோம். ஒரு இரவு தண்ணில நின்னா நாளைக்கு என் கஷ்டமெல்லாம் போயிடுமேன்னு போய் நான் நிக்கிறேன்னு நின்னான். விடிய விடிய நின்னு காலைல ராஜா கிட்ட போய் நான் நின்னேன். பரிசு குடுங்கன்னு கேட்டான். ராஜா காவலுக்கிருந்த ஆள விசாரிச்சா ஆமாம். அவன் நின்னது உண்மைன்னாங்க. ராஜா பொன்னைக் கொண்டு வர சொல்லிட்டு, ஆமா எப்படி உன்னால முடிஞ்சதுன்னாங்க. அவன், அது உங்க அரண்மனைல ஒரு விளக்கு தெரிஞ்சது. அத பார்த்துகிட்டே மனதை ஒருமைப்படுத்தி நின்னேன். குளிர் தெரியலன்னான். ராஜா கோவப் பட்டு நீ அந்த விளக்கு சூட்டில நின்னதால குளிர் தெரியல. அதனால பரிசில்லைனு விரட்டிட்டாரு.

கொஞ்ச நாள் கழிய வேட்டைக்கு போனாங்க. ஒரு மானைத் துரத்தி அங்க இங்க வழிதவறி ஓடி, கானகத்தில ஒரு வெளியில களைச்சி உக்காந்தாங்க ராஜாவும் பீர்பாலும். ராஜாவுக்கு பசி. பீர்பால் இருங்க ஏதாவது சமைக்கிறேன்னு போனான். நேரமாகுது ஆளக் காணோம். ராஜாக்கு பசி அதிகமாக என்ன பண்றன்னு குரல் விட்டா சமைக்கிறேன்னு பதில் வருது. பசி அதிகமாக ஆக நேரம் போக போக ராஜாக்கு கோவம் பிச்சிக்குது. என்னதான் பண்றாங்க பீர்பால்னு தேடிப் போனா
3 மூங்கில் கழிய சாய்ச்சி கட்டி, அதில ஒரு பானைய கட்டி அதில அரிசியை போட்டு ரொம்ப கீழ சுள்ளிய கொளுத்தி விட்டிருக்காரு. ராஜாக்கு கோவம்னா கோவம். மனுசன் பசியில சாவுரான், இதென்ன கோக்குமாக்கு வேலை. அவ்வளவு உசரத்தில பானையை வெச்சிட்டு அதல பாதாளத்துல தீயை வெச்சா எப்படி வேகும்னு கத்துறாரு. பீர்பால், அரண்மனை விளக்கு சூட்டில அந்தாளு குளிர் காய்ஞ்சான்ல? இது அத விட பக்கத்துல தான் இருக்கு நெருப்பு. என்னைக்கோ சாப்பாடு ஆகாம போய்டுமான்னு கேட்டாங்க.

ராஜாக்கு பொடனில சொடேர்னு அடிச்சா மாதிரி ஆச்சி. அப்புறம் அந்தாள தேடி புடிச்சி பரிசைக் கொடுத்து அனுப்பினாங்க.

ஈழக் கோரிக்கையை முன்வைத்ததன் மூலம் ஜெயலலிதா நம் நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு புறம்பான வகையில் செயற்பட்டுள்ளதாக சிதம்பரம் குற்றம் சுமத்தியுள்ளாரே. தமிழ் ஈழம் அமைக்க பாடு படுவேன்னா இந்திய ஒருமைப்பாட்டுக்கு என்ன ? அந்த ராஜா சொன்னா மாதிரியில்ல இது இருக்குன்னெல்லாம் அரசியலாக்காதீங்கப்பு. கத சொல்றது தான் நம்ம வேல.

2 comments:

SUBBU said...

wait பன்னுங்க

SUBBU said...

சிதம்பரத்த election ரிசல்ட் வரைக்கும் வாய மூடிகிட்டு இருக்க சொல்லுங்கன்னே, அப்பரம் தெரியும் அவர் வல்லலு!