ஐநா மனிதஉரிமைகள் சபை கூட்டத்தில் இலங்கை அரசுக்கு வெற்றி
சமாதானதுக்கு நோபல் பரிசு பட்சேக்கா? ஃபொன்சேகாக்கா?
_______________________________________________
மனித உரிமைகள் மீறல்கள் குறித்த வாக்கெடுப்புக்கு 22 நாடுகள் எதிராகவும் 17 நாடுகள் ஆதரவாகவும் 8 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமலும் இருந்ததன் மூலம் இத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஐநாவ எப்போ கலைக்கப் போறாங்க? ஆசியால இருக்கிறவங்களுக்கு உரிமை இல்லையா இல்ல மனுசங்களே இல்லயா?
_______________________________________________
இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க பாகிஸ்தான் அரசாங்கமே அதிக உதவிகளை வழங்கியது: ஜே.வி.பி.
ஃபொன்செகா சீனாங்குறாரு . இவரு பாகிஸ்தானுங்கறாரு. பேசி வெச்சிட்டு புளுகமாட்டின்களா பரதேசிங்களா?
_______________________________________________
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது பெற்றோரும், வவுனியா அகதி முகாமில்: ஜனாதிபதி
இன்னும் யார் யார் என்னா சொல்லப் போறாங்களோ?
_______________________________________________
சாட்டிலைட் போனில் பிரபாகரனுடன் பேசிய அரசியல் தலைவர்கள்; “சிம்” கார்டில் ரகசியம் அம்பலம். தமிழக மற்றும் தென் மாநில அரசியல் தலைவர்கள் அவருடன் பேசியிருப்பதும் சிம் கார்டு மூலம் தெரிய வந்துள்ளது. : செய்தி
கூமுட்டைங்களா? சாடிலைட் ஃபோனுக்கு சிம்கார்ட் இருக்குமான்னு கேட்டு சொல்லப்படாது. இத படிச்சிட்டு எத்தன பேருக்கு புடுங்கிக்கப் போகுதோ? நானில்லன்னு தானா மாட்டப் போறாங்க!
_______________________________________________
பத்மநாதனுக்கு வலை வீச்சு!
ஆமாம். நேரவாவது கேக்கலாம். என்னதான் நடந்திச்சின்னு.
_______________________________________________
போரின் இறுதிகட்டத்தில் வெளியேறிவர்களில் பலர் காணவில்லை
அங்க இருந்தவங்களதான் காணவில்லை. இவங்களுமா?
_______________________________________________
மே 18-ம் தேதி மாலை சண்டையில் ""பிரபாகரன் இறந்ததை'' படைத் தலைவரால் அறிய முடிந்தது: செய்தி
17கும் 19கும் நடுவில ஒரு நாள் குழப்பாம இருந்துடலாமா? புதுக்கதை.
_______________________________________________
விரைவில் பிரபாகரன் வெளியில் வருவார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
நம்பி இருக்கோம். ஐநால்லாம் கொய்னாதான்.
_______________________________________________
பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தவிடாமல் பாகிஸ்தான், தென்கொரியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தடுத்து வருவதால் இந்த நாடுகள் மீது இந்தியா பகிரங்கமாக குற்றம் சாட்டியது.
இது வேறயா? அதனால என்ன குறைஞ்சு போச்சு? நடத்தியாச்சில்ல?
_______________________________________________
ஜெயித்தால் நல்ல எந்திரம்;தோற்றால் மோசமான மிஷினா: கலைஞர் கமெண்ட்
அடுத்த தேர்தல்ல பார்க்கலாம். நீங்க சொன்னது தானே?
_______________________________________________
சந்திராசாமி வெளிநாடு போகலாம்: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கோர்ட் அனுமதி
குவாட்டரோச்சிய விட்டாச்சு. இப்போ இவருமா? என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது. ஒன்னுமே புரியல....
_______________________________________________
திமுக அமைச்சரவையில் காங்கிரசுக்கு பங்கு வேண்டும்:சுதர்சனம்
இனிமே குடைச்சல் தான்.
_______________________________________________
6 comments:
//மனித உரிமைகள் மீறல்கள் குறித்த வாக்கெடுப்புக்கு 22 நாடுகள் எதிராகவும் 17 நாடுகள் ஆதரவாகவும் 8 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமலும் இருந்ததன் மூலம் இத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.//
அடப்பாவிகளா ..மனசாட்சிப்படி வோட்டு போட மாட்டீங்களாடா ?
ஐ நா விலும் அரசியலா?
பேசி வெச்சிட்டு புளுகமாட்டின்களா பரதேசிங்களா?
பஞ்ச பரதேசிகள்
/மனசாட்சிப்படி வோட்டு போட மாட்டீங்களாடா ?/
பிண சாட்சி இருந்தே இப்படி பண்றவங்களுக்கு மனசாட்சி வேறா?
வாங்க சூரியன்
mm
வாங்க ப்ரியா.
Post a Comment