Sunday, May 31, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 67

20,000 தமிழர்கள் படுகொலை குறித்து முன்பே விஜய் நம்பியார், பான் கி மூனுக்குத் தெரியும்: "த டைம்ஸ்

தெரிஞ்சிதானே பாராட்டாத குறையா போனாங்க. எப்படித் தான் தின்னு தூங்க முடியுதோ தெரியலை.
_____________________________________________
வன்னியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஐ.நா. மறைத்தது: "லீ மாண்ட்" (பிரெஞ்சு நாளிதழ்) தகவல்

பத்திரிகை நினைச்சா நீதி கிடைக்கும். பண்ணுவீங்களா?
_____________________________________________
புகலிடம் மறுக்கப்பட்டவர்களைத் திருப்பியனுப்ப சுவிட்ஸர்லாந்து நாடாளுமன்றம் ஆதரவு; எனினும் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்: நீதி அமைச்சர்

மனுசங்க இன்னும் இருக்காங்கன்னு இந்தப் பேய்களுக்கு புரியட்டும். சிதம்பரம் திருப்பி அனுப்புறாராம்.
_____________________________________________
இலங்கை யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கையை ஐ.நா. வெளியிட வேண்டும்

இடுவானுங்க. கோட்டபாய கேட்டு.
_____________________________________________
இனவெறி தாக்குதல்: பிரச்சினை எழுப்ப பாஜக முடிவு

அட! இப்போ வலிக்குதோ? ஏன்? இறயாண்மைன்னு போங்களேன். அவன் பார்த்துப்பான். ஏன் கூவணும். இந்திக்காரன். அதானே?
_____________________________________________
தனிநபர் வருவாய் ரூ.3,000 ஆக உயர்ந்தது

ஓட்டுக்கு குடுத்ததெல்லாம் சொல்லாதீங்கப்பா? உழைச்சா இவ்ளோ வருதா?
_____________________________________________
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்: வாசன்

பண்ணுங்க. நாள பின்ன தேவைன்னா சுத்தாம எல்லாம் குடுக்க முடியும்.
_____________________________________________
கள் இறக்குவோர் மீது கடும் நடவடிக்கை: தமிழக அரசு

ஏன். சாராயம் படுத்துடுமா?
_____________________________________________
தமிழக போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர்: தென் பிராந்திய ராணுவ அதிகாரி பாராட்டு

மாநில அரசுக்கு போலீஸ். மத்திய அரசுக்கு ராணுவம். நடத்துங்க.
_____________________________________________
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்ற வேண்டும்: கோத்தபாய

அப்படிப் போடு. அரசியல் தீர்வு நல்லா குடுப்பானுங்க. இதுக்குதானே கால் நக்கினீங்க.
_____________________________________________
பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன் :சீமான்

அது தவறில்லை சீமான். தலைவன்னா அவர்தான்னு மத்த பேருக்கு பாடம்.
_____________________________________________
பிரபாகரனின் பெற்றோர்கள் உறவினரிடமிருந்து பிரிப்பு: செய்தி

என்ன கொடுமை எல்லாம்டா பண்ணுவிங்க. பரதேசிங்களா.
_____________________________________________

கீழேயும் தள்ளி குழி பறிக்கும் குதிரைகள்

குதிரை கீழேயும் தள்ளி குழியும் பரிச்சதாம்னு ஒரு சொலவடை சொல்லுவாங்க. அது இதுதானான்னு 2 பேர பார்த்து கேக்கணும்னு தவிப்பா இருக்கு. ஒன்று கலைஞர் அய்யா, மத்தது தினத்தந்தி.

கலைஞர்: சாதனையாளர் விருதை ஏற்க மறுத்து வற்புறுத்தலின் பேரில் ஏற்றுக் கொண்ட பொழுது கடைசிச் சாதனையாக ஈழப் பிரச்சனையில் ஒரு தீர்வு காண வேண்டும் என்ற போதும் தொடர்ந்து தீர்மானங்கள், சர்வ கட்சிகளுடன் ஆலோசனை, நடுவண் அரசுக்கு வேண்டுகோள், தீர்மானம் என்ற போது எங்கள் மனதில் நம்பிக்கையும், எதிர் பார்ப்பும் விதைத்தது நீங்கள். திருமாவின் உண்ணாவிரததில் தொடங்கி உங்கள் செயல் பாடுகள் அந்த நம்பிக்கையை நொறுக்கி, தேர்தல் நெருங்க முற்று முழுதாக வாய் மூடி மௌனியாய், பெயருக்கு அறிக்கைகள், வேண்டுகோள் என்று பொய்த்து கடைசியில் தேர்தல் மட்டுமே என்றாகிய பொழுது எங்கள் நம்பிக்கைகளை அல்ல எங்களையே கொன்றதற்குச் சமம். இந்த வெற்றி எதற்கென்பது உங்களுக்குத் தெரியும். சத்தியமாக ஈழத் தமிழருக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு ஆதரவில்லை இது என்பது நீங்கள் அறியாததல்ல. தேர்தல் முடிந்து தில்லி சென்ற போது உங்களால் தொப்புள் கொடி உறவுகள் எனப்பட்ட பல்லாயிரக் கணக்கான உயிர்களின் கதி என்ன என்பது பெரிய தவிப்பாய் உலகம் முழுதும் கேள்வி எழுப்பிய பொழுது உங்கள் நாவைக் கட்டியது எது? பதவி பேரம் துவங்கி பெரும்பான்மை கர்வத்தில் உதாசீனப் பட்டு திரும்பிய நிலையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப் பாடு குறித்து உங்களால் ஆகக் கூடியது பெயருக்கு ஒரு கடிதம் மட்டும்தானா? நீங்கள் பார்த்திருப்பீர்கள் பக்ஸேயின் கொக்கரிப்பை:

18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போரை ஆதரித்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களுடைய நன்றி.

இந்திய அரசு எங்கள் பக்கம்தான் என்பதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தோம்.

விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் காட்டியிருக்கிறது.

எங்களுடைய நடவடிக்கைகளை ஆதரித்த கட்சியும் கூட்டணியும் வென்றிருக்கிறது.

இவன் கொன்றதில் புலிகள் எத்தனை பேர்? மக்கள் எத்தனை பேர்? படிக்கும் போதே கூசிப் போகிறது. தமிழர் குறித்து இந்தக் கயவன் மனதில் என்ன எண்ணம் இருக்க முடியும்? உங்கள் அருமை நண்பர் சிதம்பரம் பதவி ஏற்றதும் மிக அவசரமாக இந்தியா வந்த அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்துப் பேசியமைக்கும் நீங்கள் ஏன் எதுவும் சொல்லவில்லை? இவற்றில் நீங்கள் அவர்களுக்கு செய்த உதவி என்ன? இந்த நிலையில் தொடர்ந்தும் உதவத் தயார் என்பது மேலே சொன்ன சொலவடை தானா?

தினத் தந்தி: தமிழரின் நாளின் விடியல் தந்தியோடு. எழுத்துக் கூட்டியாவது படிக்கும் எண்ணற்ற வாசகர்கள். கோடியைத் தாண்டிய வாசகர்கள். ஆளும் கட்சி அறிக்கை விடும்போதெல்லாம் ஈழத் தமிழருடன். மற்ற நாட்களெல்லம் ராஜபக்சேயின் ஜால்ரா. நாணயக்காரவின் புளுகும், ஃபொன்சேகாவின் புரட்டும் வேத வாக்கு. 30 புலிகள் கொல்லப் பட்டார்கள் முதல் பக்கத்தில். 3000 தமிழர்கள் காயம் ஏதோ ஒரு பக்கத்தின் மூலையில். மேல் நாட்டுப் பத்திரிகைகள் சொல்லுவதெல்லாம் இவருக்குத் தெரியாது. பக்ஸேயின் அடிவருடி பாட்டம் லைன் தான் இவருக்கு. போகட்டும். எல்லாத் தினசரிகளும் இப்படித்தான். ஈன மானமில்லாமல் இப்போது ஒரு வாரமாக அறிவிப்பு. ஈழத் தமிழர் போராட்டம் குறித்த காலச் சுவடுகள் மெகாத் தொடர். படிக்கத் தவறாதீர்கள்! இப்போது தான் தெரிந்ததா? இரண்டு மாதம் முன்பு தொடங்கி இருந்தால் என்ன மாற்றமெல்லாம் நிகழ்ந்திருக்கக் கூடும். புலிகளா, ராணுவமா பந்தயத்தில் கல்லா கட்டிய ருசி. சாவில் வியாபாரம். குதிரை...சொலவடைதான்.

Saturday, May 30, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 66

இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத்தயார்:கலைஞர்

இது வரைக்கும் யாருக்கு எப்படி உதவினீங்கன்னு தெரியும். இத தொடர வேணாம் அய்யா. மக்களுக்கு உருப்படியா நல்லதா பண்ணுங்க.
_____________________________________________
இந்தியாவுக்காகவும் போரிட்டோம்: ராஜபக்சே

என்னா பெரிய மனசு. உன்ன யாரு கேட்டாங்க சொல்ல முடியுமா?
_____________________________________________
18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம். :ராஜபக்ஸே

ஆக இதுதான் காரணமா?
_____________________________________________
புலிகளுக்கு எதிராக என்னுடைய வெற்றியும் சோனியா காந்தியின் தேர்தல் வெற்றியும் ஒரே சமயத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

என்னா டைமிங்கு! என்னா செட்டப்பு!
_____________________________________________
விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் காட்டியிருக்கிறது. :பக்ஸே

நீயெல்லாம் இப்படி பேசுற அளவுக்கு நடந்துகிட்டமே! நாண்ட்டுகிட்டு சாவாம இருக்கோம் பாரு. ஆனாலும் நிஜமாச்சே.
_____________________________________________
புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள். :பக்ஸே

நாங்க எதுக்கு விலை போனோம்னு எங்களுக்கு தெரியும்டி. அடங்கு.
_____________________________________________
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். அவர்கள் யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ராஜபக்ச.

எந்த வெக்கங்கெட்ட நாயின்னு தெரியும். அவன்ட சொல்லு எங்க போனாலும் ஆம்லட்னு.
_____________________________________________
தமிழக முதல்வருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு.

பதவிக்கு அலயிற நரிகள். எங்க சங்கரிய காணோம். மானத்த விட்டா மாரு முட்ட சோறுக்கு வழி கேக்க வந்தாங்க போல.
_____________________________________________
புலிகளை தடை செய்வது குறித்து கவனம் செலுத்துமாறு மலேசிய அரசாங்கத்திடம் அமைச்சர் ரோஹித்த கோரிக்கை

அடுத்த இலக்கு அங்கயா? ராணுவமா அது? கூலிப்படையா?
_____________________________________________
பழ.நெடுமாறன் மீது சென்னைபோலீசார் வழக்குப்பதிவு

50 நிமிஷம் கூட பேசிட்டா கொலைக்குத்தமா? ஆளும் கட்சிக் கூட்டமெல்லாம் சரியா முடிச்சிடுராங்களா?
_____________________________________________
45 நாள் தடை நீங்கியது: மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்

அப்போ கடலுக்குள்ள இருந்த மீனெல்லாம் வெளியே வந்துடும்.
_____________________________________________
ஜெ. இன்று கொடநாடு செல்கிறார்

ஈழத் தமிழ்நாடு வேலைதான் இல்லையே. நாடு இருக்கு போறாங்க. வீடு இல்லாதவங்களப் பத்தி அவங்களுக்கென்ன?
_____________________________________________
20 கோடியில் அமைச்சர் வீட்டு ஆடம்பர திருமணம்!

அமைச்சர்னா அந்தஸ்து வேணாமா? விலைவாசி அப்படி. கண்ணு போடாதிங்கப்பா.
_____________________________________________
அதிகாரப் பகிர்வை வழங்குமாறு இந்தியா இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திவருகிறது: எஸ் எம் கிருஷ்ணா

கத்தியும் நீங்களே குடுத்தா துண்டு போட்டு பகிர்ந்துடுவாங்க.
_____________________________________________
ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம்

அப்ப்டியே போய்டு. இந்த பக்கம் வந்தா நாறிபோய்டுவ!
_____________________________________________

Friday, May 29, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 65

மு.க. ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது ஏன்? கருணாநிதி விளக்கம்

உடல் நிலை காரணம் சரி. ஸ்டாலினுக்கு ஏன்னு ஆற்காட்டார் கேக்கலயா?
__________________________________________
கருணாநிதி பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; தென்சென்னை தி.மு.க. வழங்குகிறது .

சூப்பர் காரணம். குழந்தைக்கு என்ன வயசு இருக்கலாம்? தங்கம் வில குறைவா இருந்தப்போ வந்த பிறந்த நாள்ள எல்லாம் குடுக்கலையே?
__________________________________________
மந்திரிசபையில் சேருவதை விட கீழ் மட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தவே விரும்புகிறேன் என்றார்: ராகுல் காந்தி

இப்போதான் அபரிமிதமா பலமிருக்கே. இந்த கதை செல்லாது?
__________________________________________
பல்வேறு தொழில் நுட்ப கருவிகளை வழங்கியதுடன் அவற்றை இயக்குவதற்கு அதிகாரிகளையும் பாகிஸ்தானே அனுப்பி வைத்ததால்தான் இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் : பாகிஸ்தான் ராணுவம் அதிரடி

இனப்படுகொலைக்கும் போட்டா போட்டியா?
__________________________________________
விடுதலைப்புலிகள் மீண்டும் தாக்கக்கூடும்: பொன்சேகா

மொத்தமா ஒழிச்சாச்சுன்னு சொன்னது என்னா? இப்படி மிச்சம் மீதி சொன்னாதான் கலக்ஷனுக்கு வசதி.
__________________________________________
இலங்கை இறுதி கட்ட போரில் 20 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொலை: இங்கிலாந்து பத்திரிகை தகவல்

அதெல்லாம் தப்பே இல்லைன்னு ஐநா சொல்லியாச்சே? இதே மீனோ, மானோ இருந்தாலாவது புளூக்ராஸ் தொங்க விட்டிருக்கும். இறையாண்மைல இதெல்லாம் சகஜமப்பா!
__________________________________________
ஈழத்தில் பிரபாகரன் தலைமையில் மீண்டும் போர் வெடிக்கும்: திருமாவளவன்

அப்போதும் நாம் வால் பிடிப்போம்.
__________________________________________
இலங்கைக்கு ஆதரவாக ஓட்டு போட்டு இந்தியா மீண்டும் தவறு செய்துள்ளது: வைகோ

இந்தியான்னு சொல்லாதிங்க. காங்கிரஸ்னு சொல்லுங்க. சோனியா தேசம்னு பேரு மாத்தினா கூட எவனுக்கும் உரைக்காது.
__________________________________________
இலங்கை இரங்கல் தீர்மானத்துக்கு அனுமதி மறுப்பு : பா.ம.க. வெளிநடப்பு

அந்த அளவுக்காவது நடிக்காம இருக்காங்களே!
__________________________________________
தமிழர்களின் கோரிக்கையை புறக்கணித்தது இந்தியா: இலங்கைக்கு ஓட்டு போட்டது

கடிதம் போய் சேர்ந்திருக்காது. அதனாலயோ?
__________________________________________
பஸ் கட்டண குறைப்பை அமல்படுத்தக்கோரி 1 ந் தேதி ஆர்ப்பாட்டம்: பா.ம.க.

அவங்களா குறைச்சாலும் ஆர்பாட்டம். இல்லைன்னாலும் ஆர்பாட்டமா?
__________________________________________
மத்திய அமைச்சர்களுக்கு மாத சம்பளம் ரூ.1 லட்சம்

இதுக்கா அவ்வளவு கோடி செலவு பண்ணாய்ங்க. பாவமே!
__________________________________________
அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு: அழகிரிக்கு உரம் மற்றும் ரசாயனத்துறை

நல்ல வளர்ச்சி இருக்கும். கவலையே வேணாம்
__________________________________________
இந்திய விமானப்படையில் நவீன விமானம் சேர்ப்பு

வாங்கி வைங்க. யாருக்காவது கொடுத்துதவலாம்.
__________________________________________
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்:அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத் சூலர்

எல்லா நாட்டிலயும் காங்கிரஸ்காரன் கொலகாரப் பாவிதான் போல.
__________________________________________

Thursday, May 28, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 64

ஐநா மனிதஉரிமைகள் சபை கூட்டத்தில் இலங்கை அரசுக்கு வெற்றி

சமாதானதுக்கு நோபல் பரிசு பட்சேக்கா? ஃபொன்சேகாக்கா?
_______________________________________________
மனித உரிமைகள் மீறல்கள் குறித்த வாக்கெடுப்புக்கு 22 நாடுகள் எதிராகவும் 17 நாடுகள் ஆதரவாகவும் 8 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமலும் இருந்ததன் மூலம் இத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஐநாவ எப்போ கலைக்கப் போறாங்க? ஆசியால இருக்கிறவங்களுக்கு உரிமை இல்லையா இல்ல மனுசங்களே இல்லயா?
_______________________________________________
இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க பாகிஸ்தான் அரசாங்கமே அதிக உதவிகளை வழங்கியது: ஜே.வி.பி.

ஃபொன்செகா சீனாங்குறாரு . இவரு பாகிஸ்தானுங்கறாரு. பேசி வெச்சிட்டு புளுகமாட்டின்களா பரதேசிங்களா?
_______________________________________________
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது பெற்றோரும், வவுனியா அகதி முகாமில்: ஜனாதிபதி

இன்னும் யார் யார் என்னா சொல்லப் போறாங்களோ?
_______________________________________________
சாட்டிலைட் போனில் பிரபாகரனுடன் பேசிய அரசியல் தலைவர்கள்; “சிம்” கார்டில் ரகசியம் அம்பலம். தமிழக மற்றும் தென் மாநில அரசியல் தலைவர்கள் அவருடன் பேசியிருப்பதும் சிம் கார்டு மூலம் தெரிய வந்துள்ளது. : செய்தி

கூமுட்டைங்களா? சாடிலைட் ஃபோனுக்கு சிம்கார்ட் இருக்குமான்னு கேட்டு சொல்லப்படாது. இத படிச்சிட்டு எத்தன பேருக்கு புடுங்கிக்கப் போகுதோ? நானில்லன்னு தானா மாட்டப் போறாங்க!
_______________________________________________
பத்மநாதனுக்கு வலை வீச்சு!

ஆமாம். நேரவாவது கேக்கலாம். என்னதான் நடந்திச்சின்னு.
_______________________________________________
போரின் இறுதிகட்டத்தில் வெளியேறிவர்களில் பலர் காணவில்லை

அங்க இருந்தவங்களதான் காணவில்லை. இவங்களுமா?
_______________________________________________
மே 18-ம் தேதி மாலை சண்டையில் ""பிரபாகரன் இறந்ததை'' படைத் தலைவரால் அறிய முடிந்தது: செய்தி

17கும் 19கும் நடுவில ஒரு நாள் குழப்பாம இருந்துடலாமா? புதுக்கதை.
_______________________________________________
விரைவில் பிரபாகரன் வெளியில் வருவார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

நம்பி இருக்கோம். ஐநால்லாம் கொய்னாதான்.
_______________________________________________
பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தவிடாமல் பாகிஸ்தான், தென்கொரியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தடுத்து வருவதால் இந்த நாடுகள் மீது இந்தியா பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

இது வேறயா? அதனால என்ன குறைஞ்சு போச்சு? நடத்தியாச்சில்ல?
_______________________________________________
ஜெயித்தால் நல்ல எந்திரம்;தோற்றால் மோசமான மிஷினா: கலைஞர் கமெண்ட்

அடுத்த தேர்தல்ல பார்க்கலாம். நீங்க சொன்னது தானே?
_______________________________________________
சந்திராசாமி வெளிநாடு போகலாம்: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கோர்ட் அனுமதி

குவாட்டரோச்சிய விட்டாச்சு. இப்போ இவருமா? என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது. ஒன்னுமே புரியல....
_______________________________________________
திமுக அமைச்சரவையில் காங்கிரசுக்கு பங்கு வேண்டும்:சுதர்சனம்

இனிமே குடைச்ச‌ல் தான்.
_______________________________________________

Wednesday, May 27, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 63

இலங்கை போர் குற்றங்கள்: விசாரணை நடத்த ஐநா மனித உரிமை ஆணையம் கோரிக்கை

நீங்கதானே பார்த்து ஏதாவது செய்யணும். நீங்களும் கோரிக்கை தானா?
__________________________________________
கேபினட் அமைச்சர்கள் பட்டியல்:அழகிரி,ராசா, தயாநிதிக்கு கேபினட்

ராஜா இல்லாம கனிமொழிக்கு கொடுத்திருந்தா கிச்சன் கேபினட்டா?
__________________________________________
நடிகர் நெப்போலியன் இணையமைச்சராகிறார்

இங்கயும் ஹீரோ இல்லையா?
__________________________________________
இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும்

அதனால தானே பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கன்னு விளம்பரம். பேசியே அழியற நமக்கு இதெல்லாம் சகஜமப்பு
__________________________________________
காங்.வெற்றிக்கு கம்யூனிஸ்ட் காரணம்:அத்வானி

அடுத்தவனேயே கை காட்டுவாங்க. நீங்க சரியா இல்லன்னு ஏன் ஒத்துக்க மாட்டிங்க?
__________________________________________
காலில் விழுந்ததால் ஆஸ்திரியாவில் கலவரம்

இதுக்கா கலவரம். எங்கள பார்த்து கத்துக்குங்கய்யா. கலவரப்பட்டு கால்ல விழுந்து எந்திரிக்காம அப்பிடியே கிடப்பமில்ல.
__________________________________________
பிரபாகரன் விஷயத்தில் இலங்கை அரசும், புலிகளும் கூறுவதை நம்ப வேண்டாம். இதை விட்டுவிடுவது நல்லது: தா. பாண்டியன்.

ரெண்டில ஏதோ ஒண்ணு தானே சரியா இருக்கணும். அத சொல்ல மாட்டீங்களாப்பு. நீங்க சொல்றதையாவது நம்பலாமா?
__________________________________________
தமிழ்ச் செல்வனது குடும்ப உறுப்பினர்கள் எவ்வித பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாத காரணத்தினால் அவர்கள் சுதந்திரமாக இடம் நகர அனுமதிக்கப்பட வேண்டும்: கருணா

காட்டி குடுத்ததுக்கெல்லாம் பிராய்ச்சித்தமா? இல்ல இதிலயும் உள்குத்து இருக்கா?
__________________________________________
போசணைக்குறைபாட்டினால் மக்கள் இறப்பதாக நாம் அறியவில்லை : ஹோம்ஸ்

நீங்க அறிஞ்சதுக்கெல்லாம் என்ன கிழிச்சிட்டீங்க. மைல் கணக்கில வரிசைல நின்னாதான் ஒரு வேளை சோறுன்னு போட்டோ எல்லாம் வந்திச்சே பார்க்கலையா?
__________________________________________
விசா இருந்தாலும் பணம் தரவில்லை என்றால் விடுதலைப்புலிகள் என்று பொய்க்குற்றச்சாட்டில் உள்ளே தள்ளிவிடுவோம் எனக் காவல்துறை அச்சுறுத்தல்: செய்தி

ராணுவத்தான் விட்டு வெச்சத இவனுங்க விட்றுவாங்களா? நிஜக் குற்றச்சாட்டு பதியணும்னாலும் காசு, பொய் குற்றச்சாட்டு பதியாம இருக்கிறதுக்கும் காசா?
__________________________________________
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விவாதிக்க அழைக்கப்பட்டுள்ள சிறப்பு கூட்டத்தின் நோக்கமும் பயனும் குறித்து தமக்கு கடுமையான தயக்கங்கள் இருப்பதாக இந்தியா கூறியுள்ளது.

இவங்க ஏன் தயங்குறாங்க? முன்னை இட்ட தீ முப்புறத்திலே?
__________________________________________
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட நீதிவான்கள் பதவி நீக்கப்பட்டனர்: பிரதம நீதியரசர்

இத எந்த நீதிமன்றம் விசாரிச்சது?
__________________________________________
புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடடிக்கை எடுக்கப்படும்: இராணுவத் தளபதி

கரும்புலி, வான்புலி, விடுதலைப்புலியெல்லாம் ஆச்சு. இப்போ காகிதப் புலியையும் அழிக்க நடவடிக்கையா?
__________________________________________
எதிரிக்கும் அப்பாவிப் பொது மக்களுக்கும் அடையாளம் காணமுடியாதவாறு ஸ்ரீலங்கா தலைவர்கள் உள்ளார்கள் : நியூயார்க் டைம்ஸ்

எல்லாரையும் புலின்னு சொன்னா போச்சு. அப்புறமெதுக்கு அடையாளம் எல்லாம்.
__________________________________________

Tuesday, May 26, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 62

பஞ்சாப்புக்கு கூடுதல் ராணுவம்: ப.சிதம்பரம்

ஃபொன்சேகாவ கூப்புடுங்கப்பா. அடக்கி ஒழிச்சிடுவாரு.
__________________________________________
சத்யம் கம்ப்யூட்டர் பெயர் மாறுகிறது

டுபாக்குர்னா?
__________________________________________
வியன்னா குருத்வாராவில் சீக்கிய மதகுரு கொல்லப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததுன்னு விசாரணை நடத்த வேண்டும் என்று எல்லாக் கட்சியும் கூடிப் பேசி தனித் தனியா போராடலாமே?
__________________________________________
குத்துச்சண்டை கற்றக்கொண்ட ராகுல்காந்தி

சட்டமன்றத்தில தான் இதெல்லாம் தேவை. பாராளுமன்றத்தில கூடவா?
__________________________________________
இலங்கைக்கு ஆயுத உதவிசெய்ய இந்தியா மறுத்து விட்டதாம்: சரத் பொன்சேகா சொல்கிறார்

இங்க ஆன்டனாதான் குடுத்தோம்னு சொன்னப்புறம் இப்படி சொன்னா எப்படி? தினம் ஒண்ணு புளுவியே ஆகணுமா?
__________________________________________
இலங்கை தமிழர்களுக்கு சம அந்தஸ்து தர நிர்பந்திக்க வேண்டும்: சரத்குமார்

எல்லா தமிழனும் புலின்னு அந்தஸ்து குடுத்து தானே வேலிக்குள்ள வெச்சிருக்கான். இன்னும் என்ன?
__________________________________________
ஈழத்தமிழர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்: பிரதமருக்கு கலைஞர் கடிதம்

இவ்வளவு நாள் எடுத்த முடிவெல்லாம் அப்படி இல்லன்னு ஒத்துக்கறீங்களா தலைவா? கடிதம் போய் சேர்ந்து அந்தாளு பார்க்கறதுக்குள்ள முடிச்சிடுவாங்க.
__________________________________________
ஐ.நா.சபை இலங்கை அரசின் அத்துமீறல்களை மூடி மறைத்து, அதனைப் பாதுகாக்க முயல்கின்றது

அப்பட்டமா தெரியுதே! பாராட்டு விழா நடத்தாம் இருந்தா சரி!
__________________________________________
விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த பலர் என்னை தொடர்பு கொண்டனர். இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளனர்.:கருணா

இனம் இனத்தோட சுரக்குடுக்க ஆத்தோட. உன்ன விட்டா இதுக்கு வேற ஆளேது?
__________________________________________
இலங்கை இராணுவத்திற்கு மேலும் ஒரு இலட்சம் பேரை சேர்க்க முடிவு: இராணுவத்தளபதி பேட்டி

பாதிக்குப் பாதின்னு கணக்கு வெச்சாலும் அவ்ளோ பேரா போயிட்டாங்க? கடன், உதவின்னு அவங்க சம்பாதிச்சா இவரு சம்பாதிக்க வேணாமா?
__________________________________________
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் தனியாகவே மேற்கொண்டது: பாலித கோஹன

இதே நாறவாயந்தான் அப்பப்போ இந்தியா உதவி இல்லாமல் இவ்வளவு முன்னேறி இருக்க முடியாதுன்னு சொன்ன பரதேசி.
__________________________________________
இராணுவத்தைத் தவிர்ந்த துணை ஆயுதக் குழுக்களிடம் உள்ள ஆயுதங்கள் களையப்பட வேண்டும்: ஆனந்தசங்கரி

அடங்கப்பா. என்ன பயம். இவங்க தண்டல் ஆரம்பிச்சிடுவாங்கன்னா?
__________________________________________
சிறிலங்கா அரசு மீது உடனடி விசாரணை இஸ்ரேல் ஆதரவு

கிஃபிர் குடுக்காம இருந்திருந்தா இதுக்கு அவசியமில்லல்ல. ஆனாலும் இப்பவாவது இப்படி சொல்றாங்களே!
__________________________________________
வன்னியில் சேவையாற்றிய மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்

பின்ன உங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும். மனுசனா இருந்துடப்படாதே!
__________________________________________
ஜனநாயக நீரோட்டத்தில் இணையப்போவதாக விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிவிப்பை பாதுகாப்பு செயலாளர் நிராகரித்துள்ளார்.

அதானே. சரணடைஞ்சாலே சுடுற ஆளுங்க இதுக்கெல்லாம் விட்டுறுவானா? மிச்சம் மீதி இல்லாம அழிச்சிடணும்.
__________________________________________
சீனாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்தது ஏன்?:

ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீனு குடுத்தானா?
__________________________________________
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவர்: சிதம்பரம் கருத்து

அட என்னங்க அவசரம். அங்க இருக்கறதெல்லாம் முடிச்சிட்டு யாருமில்ல அனுப்புன்னா அப்ப அனுப்பலாம். ஆயுதம் தந்து உதவியாச்சு. ஆள தந்து உதவமாட்டமா?
__________________________________________

Monday, May 25, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 61

தமிழ் மக்களை பார்த்து கலங்கினேன்: பான்கீமூன்

கிளம்பற பொழுது கூட்டறிகை விட்டு கலக்கிட்டீங்களே!
___________________________________________
மனித உரிமை மன்றத்தில் இந்தியா, சீனா சிறிலங்காவுக்கு ஆதரவு

வேறென்ன பண்ணுவாங்க. குடுத்துபுட்டு எதுக்க முடியுமா?
___________________________________________
மனிதாபிமான உதவிகளை முடக்கும் இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபன தலைமைப் பதவி பொருத்தமற்றது – ஐ.நா

கிழிச்சிடுவாங்க. இன்னோரு கோரிக்கை விடுவாங்க. அவ்வளவுதான்.
___________________________________________
பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பில் தெரிவித்த கருத்தில் ‘இரத்தகுளிப்பு’ இடம்பெறுவதாக அழைத்ததை பான்‍கி‍மூன் மீளப்பெற்றுள்ளார்.

வாஸ்தவம். எல்லா ரத்தமும் மண்ணுக்குள்ள போனா அப்புறம் குளிக்கிறதெங்கே. விட்டா இயற்கை மரணம்னே சொல்லுவாங்க.
___________________________________________
பத்மநாதனை கைது செய்வதற்கு பான் கீ மூன் உதவவேண்டும்: மகிந்த

இதுக்கு பயந்துதான் அந்தாளு புதுக்கரடி விட்டாங்களா?
___________________________________________
சிறிலங்காவின் எறிகணைகளால் 30,000 பேர் ஊனம்

ரத்தக் குளியலே நடக்கலைன்னு பன்கி மூன் சொல்லியாச்சி. இது பொய்னு சொல்லுவானுவ.
___________________________________________
பத்மநாதனின் அறிவிப்பு துரோகச் செயல் ஆகும்;பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - வைகோ

எத்தனை துரோகத்தைத் தான் தாங்குவார் அவர்.
___________________________________________
30 வருடங்களில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாக கோத்தபாய தெரிவித்தார்.

அதுவே போதுமே. இதெல்லாம் கனரக ஆயுதமா காகிதப் பூவான்னு.
___________________________________________
கனரக ஆயுதங்களின் பாவனைக்கான சான்றுகளை காணவில்லை: பான் கீ மூன்

ரெண்டு நாள் தள்ளி வந்து சண்டை நடந்ததற்கான சான்றுகளே இல்லை. அழகான கடற்கரைன்னு பாராட்டிட்டு போயிருக்கலாம்.
___________________________________________
இந்திய அரசு தமிழின விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும்: திருமாவளவன்

தலைவரையும் இப்படிச் சொல்ல சொல்லுங்க.
___________________________________________
சீக்கியர்கள் மோதல் எதிரொலி: பஞ்சாபில் ஊரடங்கு உத்தரவு

ஆஸ்திரியால ரெண்டு குழு மோதினா இங்க ஊரடங்கு. 50 ஆயிரம் பேரு கதி என்னான்னு தெரியாட்டியும் நம்மாளுங்களுக்கு கவலையில்லை. சிங்கு ஒரே சிங்குதான் எங்கன்னாலும். தமிழன் தான் தனி தனி.
___________________________________________
இலங்கையை இந்தியா ஆதரிக்கக்கூடாது: டி.ராஜா

அவன் போட்டு குடுக்க மாட்டானா?
___________________________________________
இலங்கை ஆட்சியாளர்களை விசாரணை கூண்டில் ஏற்ற வேண்டும்: ராமதாஸ்

குழியில விழப்போறான்னா கூட கட்டி இழுக்காம விழுவானா? கூட்டாளிங்கள விட்டுடலாமா?
___________________________________________
தமிழ்க் குடும்பத்தினரை தாக்கி சிங்களர்கள் அட்டகாசம்

ஒரே நாடா அவிங்க அரசியல் சட்டப் படி தீர்வு கண்டுடுவாய்ங்க. இன்னும் மோசமா அடிப்பானுங்க. இதுக்கெல்லாம் எவன் பேசப் போரான்.
___________________________________________

Sunday, May 24, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 60

இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழரை நியமிக்க கோரிக்கை: ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்

நடக்கிற கதையா பேசுங்கப்பா. கர்நாடகா ஆச்சு, கேரளா ஆச்சு, ஆந்திராதான் பாக்கி. அங்க ஆளு தேடுவாங்க.
_______________________________________________
பிரபாகரனை உயிருடன் பிடிக்க விரும்பினோம்:ராஜபக்சே

பிடிச்சிருந்தா இப்படி டிராமா போட்டிருக்க முடியாதே?
_______________________________________________
ராஜபக்சேயுடன் -பான் கி மூன் 1மணிநேர சந்திப்பு

என்ன பிரயோசனம். உங்க உதவி இல்லாம இவ்வளவு கொலை பண்ணி இருக்க முடியாது. மத்த படி நான் சொன்னது சொன்னதுதான்னு அனுப்பிட்டானே!
_______________________________________________
எங்களை விசாரிக்கும் முன்பு------: ராஜபக்சே சகோதரர் ஆவேசம்

உங்களுக்கு விசாரணை வேற கேடா? அப்படியே கழுவேத்தணும்.
_______________________________________________
ராஜபக்சேவிடம் விவாதித்தது என்ன?: கலைஞரிடம் விளக்கிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

அட! அரிச்சந்திரன் ஆவி புகுந்துட்டுதா? ஏதோ புளுகிட்டு போயிருப்பான்.
_______________________________________________
ஈழத் தமிழர்களின் பிரச்னைகள் என்னவென்று கண்டறித்து அவற்றை இலங்கை அரசு தீர்க்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.

மனுசனா வாழணும்னு நினைக்கிறது தான் பிரச்சனை. அதனால தான் தீர்க்கிறாரு லட்சக் கணக்கில.
_______________________________________________
தமிழ் மக்களை பார்த்து கலங்கினேன்: பான்கீமூன்

ஸ்டார்டிங் எல்லாம் நல்லாதான் பண்றீங்க. பினிசிங் பக்சே கைலயே விட்டு போறீங்களே எல்லாரும்.
_______________________________________________
கிளிநொச்சியில் ராணுவமுகாம்:இலங்கை அரசு திட்டம்

வை வை. எத்தன வாட்டிதான் கொண்டு வந்து கொண்டு வந்து குடுப்ப. அங்கயே இருந்தா வசதி.
_______________________________________________
இலங்கை தமிழர்களுக்கு உறுதுணையாக இருப்போம்: நடிகர் சங்க பொதுக்குழு தீர்மானம்

எல்லாம் நடிக்கும் போது அதே தொழில்ல இருக்கிறவங்க நீங்க நடிக்காமலா? பார்த்தோமே! எவ்வளவு உறுதுணைன்னு.
_______________________________________________
தொண்டு பணியாளர்கள், சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை முகாம்களுக்குள் அனுமதிக்குமாறு பான் கீ மூன் வலியுறுத்தல்: ஜனாதிபதி மறுப்பு

எல்லாருக்கும் பெப்பே தான்! கோலெடுத்தா தான் குரங்காடும்.
_______________________________________________
அமைச்சரவையில் பங்கேற்பது பற்றி விவாதித்து அறிவிப்போம்: கலைஞர்

தேவையில்ல போங்கடான்னு சொன்னா என்னாயிடும்? ஆதரவு தேவையா இருக்கும்போதே அரையணாக்கு மதிக்கல.
_______________________________________________
அதிகாரப் பகிர்விற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது: ஜே.வி.பி

ஆரம்பிக்கக் கூட இல்லை. இவனுங்க ஆரம்பிச்சிட்டானுங்க. எவனுக்காவது புரியுதா? எங்க இவனுங்கள அடிக்க வேணாம் புடிக்கட்டும்.
_______________________________________________
நடேசனும் புலித்தேவனும், உயிரோடு இருந்திருந்தால், அவர்கள் தமிழர்களுக்கு நம்பிக்கையான அரசியல் தலைவர்களாகியிருப்பார்கள்:மேரி கொல்வின்

அதனால தானே போட்டுத் தள்ளிட்டாங்கள்.
_______________________________________________
பரீட்சையில் காப்பியடித்த கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு

பிடிக்கிறாங்களான்னு பார்த்திருப்பாரு. உருப்படும்.
_______________________________________________
வயகராவை கண்டுபிடித்த விஞ்ஞானி 92 வயதான ராபர்ட் பர்ச்காட் சியாட்டில் நகரில் மரணம் அடைந்தார்.

டெஸ்ட் பண்ணாரோ?
_______________________________________________

Saturday, May 23, 2009

சுரணை கெட்ட தமிழனுக்கு மீண்டும் ஒரு செருப்படி

சுரணை கெட்ட தமிழனென்று மீண்டும் ஒரு முறை செருப்படி கொடுத்திருக்கிறார் சொக்கு. இறையாண்மை பேர் சொல்லி காட்டின ஆளையெல்லாம் கைது செய்து நீதி மன்றத்தில் அடி வாங்கியும் சுரணை கெட்டவர் தாமே நாம். இறையாண்மைக்கு எதிராக என்று குற்றம் சாட்டப் பட்டவர்கள் கேட்ட கேள்வி காவிரி நீர் பிரச்சினை, முல்லைப் பெரியார் பிரச்சினையில் இறையாண்மை எங்கே போனது என்று. அதற்குப் பதிலாக, பரிசாக இறையாண்மையை மதிக்காத கர்நாடகாவின் எஸ். எம். கிருஷ்ணா வெளியுறவுத்துறை அமைச்சர். கேரளத்தின் அந்தோணி பாதுகாப்புத் துறை அமைச்சர். ஆரம்பம் முதலே இன அழிப்பின் ஆலோசகரான ஒத்தப்பால இரட்டையர்கள் துணைக்கு. இனி ஈழத் தமிழர்களுக்கு விடிந்துவிடும்.

குற்றச்சாட்டே இல்லாதவர்களுக்குத் தான் மந்திரிப் பதவி என்று ஞானோதயம் வந்தது போல் தமிழக அமைச்சர்கள் குறித்து கருத்து பரப்பப் பட்டாலும், வதந்தி என்று சமாதானம் சொல்லிக்கொண்டு மானம் கெட்டு கொடுத்ததைக் கொடு என்று நிற்கப் போகிறோமா? தியாகம் செய்தேன் என்று சொல்பவர்க்கு மீண்டும் ஒரு முறை தியாகம் செய்வது பெரிய விடயமில்லை. ஒரு வேளை எதிர்த்தால் ஆட்சி கவிழ்க்கப் படும் என பயமிருக்கத் தேவையுமில்லை. ஈன நாடகத்தின் கதா பாத்திரமான கறை துடைக்கவும் ஒரு வாய்ப்பு.

பிரபாகரன் குறித்த பொய் பரப்பி எவ்வளவு மோசமாக ஓர் அரசு செயல் பட முடியுமோ அவ்வளவும் செய்யும் பக்ஸே இந்த உண்மையைக் கூட இந்தியாவுக்குச் சொல்லாமல் ஏமாற்ற முடியுமானால் நாளை என்னதான் செய்ய மாட்டான். அல்லது தெரிந்தேதான் இந்த பொய்களுக்கு நாங்களும் துணை போகிறோம் என்ற நிலைப்பாடானால் இவர்கள் தமிழர்களுக்கு என்ன நன்மை செய்து விடப் போகிறார்கள்?

கலைஞரும், மற்ற தலைவர்களும் ஈழத் தமிழ்நாடு குறித்தெல்லாம் கவலைப் பட அவசியமில்லை. ஒன்றாய்க் கூடி ஓர் குரலாய் கேட்க வேண்டிய தருணம் இது. அகில உலகமும் இறுதிக் கட்ட போர் என்ற நிலையில் எச்சரிக்கை, கோரிக்கை என்று வாயளவிலாவது அறிக்கை விட்ட தருணத்தில் ஒரு தொலைபேசி அழைப்பில் போர் நிறுத்தம் செய்யும் திறன் பெற்ற பிரணாப் என்ன செய்தார். பிரபாகரன் மரண நாடக சாக்கில் நடந்தேறிய கொலைகளுக்கு மற்ற நாடுகள் படும் அக்கறை கூட நமக்கேன் இல்லாமல் போனது? அவசரம் அவசரமாக கொண்டாட்டத்தில் பங்கேற்க இரண்டு வெறி நாய்கள் பரிசு கொண்டு போவானேன்? கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பது போல் கம்பி வேலிக்குள் அடைந்து சிதைந்த குடும்பங்களும், மருந்துக்கு வழியின்றி அவலத்தில் நிற்பவர்களுக்கும் அரசியல் தீர்வு எந்த விதத்தில் பயனளிக்கும். பயம் மட்டுமே சூழ்ந்த மனங்களுக்கு இதில் முடிவெடுக்க எப்படி இயலும்? எல்லாம் விட ஒரு குற்றவாளியும், அவனுக்குத் துணை இருந்தவனும் கூடி முன் வைக்கும் தீர்வு எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?

யார் எது சொன்னாலும் ஏற்க மறுக்கும் இலங்கை அதிபரும், மற்ற அமைச்சர்களும் இந்தியாவின் துணையோடு தான் இந்த வெற்றி சாத்தியம் என்று சொல்லிக் கொண்டு இப்போது இலங்கையின் ராணுவ நடவடிக்கைகள் விசாரணைக்கு வரும்போது போர்க் குற்றங்கள் நிரூபிக்கப் படும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி நடக்குமேயானால் அந்தக் கறை இந்தியாவின் மீதும் படியாமல் போக வாய்ப்பே இல்லை. ஒரே ஒரு வார்த்தை புலிகள் ஆயுதங்களைப் பயன் படுத்துவதில்லை என்ற நிலையில் போர் இடை நிறுத்தப் படவேண்டும் எனக் கூறி இருந்தால் அப்பாவி மக்கள் எத்தனை பேர் பிழைத்திருப்பார்கள்? இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்கப்பட்டு நடை முறைப் படுத்தப் படும் என இப்போது அறிவிக்கிறான் பக்ஸே. அப்படியானால் கைஎழுத்தான போது நடைமுறைப் படுத்தப் படவில்லை என்று தானே அர்த்தம். அப்படி எனில் ஒரு சாரார் மட்டும் பொறுப்பு என்று பொய்ச் சாக்கில் இன அழிப்பும் அதற்கு துணை போனதும் என்ன விதத்தில் சரியாகும்? இவர்களின் தலையீடில்லாமல் ஓர் ஒப்பந்தம் சாத்தியமானால் சரி. இல்லை எனில் தனித் தமிழ் ஈழம் மட்டுமே சரியான தீர்வாய் அமையும்.

இந்தத் தருணத்தில் இந்த குள்ள நரிகளின் தலையீடு இருக்குமானால் ஈழத் தமிழருக்கு ஒரு மண்ணும் கிடைக்காது. தமிழகத் தலைவர்களூம், தமிழுணர்வாளர்களும் ஒன்றாய் குரலெழுப்பி சொக்குவைச் சில கேள்விகள் கேட்டாக வேண்டும்:
1. முள்ளிவாய்க்காலில் மிகுந்திருந்தவர்கள் எல்லாருமே போராளிகளா? அவர்கள் என்ன ஆனார்கள்?
2. வெள்ளைக் கொடி ஏந்தி வந்த போராளிகளுக்கு என்ன நடந்தது?
3. சமாதானம் நாடிய போது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது?
4. உலக நாடுகளெல்லாம் எழுப்பும் கேள்விகூட ஏன் எழுப்பப் படவில்லை? இலங்கையின் கடைசி கட்ட நடவடிக்கைக்கு காங்கிரச் ஆட்சியின் ஆதரவு இருந்ததா/இருக்கிறதா?
5.தூக்கி எறியப்பட்ட ஓர் ஒப்பந்தம் இவ்வளவு இழப்புக்களுக்குப் பிறகும் எந்த மாற்றமும் இல்லாமல் நடைமுறைப்பட எப்படிச் சாத்தியம்?

இதெல்லாம் நமக்கெதற்கு? எங்களுக்கு மந்திரிப் பதவி, எதிர் கட்சிகளுக்கு எப்படிக் கவிழ்க்கலாம் என்ற குறிக்கோள் என்றிருப்போமேயானால், நான் என்ன செய்வது? அடிமைகள் நாம் என்று மிருகமாய்த் தான் வாழவேண்டும். தமிழன், மறவன், புறநானூறு, தொப்புள் கொடி என்றெல்லாம் அலட்டாமல் கால் நக்கிக் கொண்டு ஈனத் தமிழனாய் வாழலாம்.

Friday, May 22, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 59

தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார்: விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறை

அதுக்குதான் அவசர அவசரமா மரணச் சான்றிதழ், எரியூட்டல் எல்லாமா?
_____________________________________________
ராஜிவ் காந்தியை கொன்ற பிரபாகரனை கொன்றபிறகு தான், அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவேன் என உறுதி எடுத்தேன்: சு.சுவாமி

இப்போவாவது ஜெயின் கமிஷனுக்கு விசாரணைக்கு போவீரா?
_____________________________________________
ஐநா பான் கீ மூன் 24 மணி நேரப் பயணமாக கொழும்பு வருகிறார்.

கண்துடைப்புக்கு இவ்வளவு போதும். தின்னு, தூங்கி, பேசினது போக பறந்தபடி பார்த்து பாராட்டிட்டு போறது தானே!
_____________________________________________
இலங்கைக்கு எல்லா வகையிலும் அமெரிக்கா உதவ தயாராக இருக்கிறது’’என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.

முதல்ல அவனுக்குதான் உதவணும். ஆளு படை அனுப்பி வெச்சா மாட்டிக்காம புளுக வசதி. செத்ததை எல்லாம் மறைக்க வசதி. பண்ணுங்க சாமிகளா.
_____________________________________________
சிங்கள அரசின் போர்க்குற்றங்கள்:ஆராய்கின்றது அமெரிக்கா

கையும் களவுமா பிடிக்காம படம் புடிச்சி ஆவப்போறதென்ன. இதான் பொய்னு சொல்லிட்டு போய்ட்டே இருப்பான்.
_____________________________________________
பிரபாகரன் மனைவி, மகள் இறக்கவில்லை:சிங்கள ராணுவம்

கொஞ்சம் கூட சுரணையில்லாம நாளுக்கு ஒண்ணு புளுகறான். இந்த நாய்ங்க குடுக்கிற வாக்குறுதிக்கெல்லாம் பாராட்டு வேற.
_____________________________________________
தமிழ்நாட்டில் 75 ஆயிரம் இலங்கை அகதிகள் தஞ்சம்

இப்போ ஏன் இந்த கணக்கெடுக்கறானுவ.
_____________________________________________
இழப்புகளை ஈடு செய்வதன் வழியாகவும் அவர்களை அவசரமாக நல்ல நிலைக்கு கொண்டுவருவதன் மூலமாகவும்தான் தீர்வுக்கு கொண்டுவரமுடியும். இலங்கை அரசாங்கம் அப்படி செய்யத்தவறினால்: –ஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னன்

இன்னாளுக்கே தண்ணி காட்டுறான். முன்னாளுக்கெல்லாம் பதில் கூட சொல்ல மாட்டான்.
_____________________________________________
அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டது: 19 அமைச்சர்கள் பதவி ஏற்பு

சாதனையாளருக்கு வேதனை.
_____________________________________________
அடுத்த கட்ட நடவடிக்கை:கலைஞர் பேட்டி

ஈழப் பிரச்சனைல எடுத்தா மாதிரி இல்லாம உறைக்கிறா மாதிரி இப்போவாவது எடுப்பிங்களா?
_____________________________________________
‘’காங்கிரஸ் கட்சி - திமுக நட்பு கட்சிதான்’’:டி.ஆர்.பாலு

பின்ன! அவசரப்பட்டு வாய விட்ற முடியுமா. பதவி ஒரு பக்கம், இன்னும் 2 வருஷம் தள்ளணுமே.
_____________________________________________
காங். சமரச முயற்சி: கலைஞரை சந்திக்க குலாம்நபி ஆசாத் சென்னை வருகிறார்

ஏன்? சிதம்பரம் சொன்னா இனிமே கேக்க மாட்டேன்னு சொல்லிட்டாரா?
_____________________________________________
இலங்கை அகதி முகாம்களில் பெண்களை கற்பழிக்கின்றனர்; இங்கிலாந்து டி.வி. தகவல்

ஆளாளுக்கு வந்து பார்த்து அகில உலக தரத்தில இருக்குன்னு சொல்றாங்களாம். நம்பியாரும் சொன்னாராம். அப்போ இதெல்லாம் சகஜமப்பாவா?
_____________________________________________
இலங்கை போரில் 6200 சிங்கள வீரர்கள் பலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஒரு நாள்ளயா இருக்கும். இவனுங்க அதிகார பூர்வ அறிவிப்ப எவன் நம்புறான்.
_____________________________________________
விடுதலை புலிகள் மீண்டும் துளிர் விட முடியாது; மந்திரி ஆவேச பேச்சு

ரொம்பதாம்பா சீன் போடுறானுவ. அவனவனுக்கும் அஸ்தில ஜூரம். இதில சலம்பல் வேற.
_____________________________________________
முல்லைத்தீவு நந்திக் கடல் பகுதியில் பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: சிங்கள ராணுவம் சொல்கிறது

என்னாடா அவசரம். உங்க ஊர்ல மார்சுவரி இல்லையா? பாவம் எந்த அப்பாவியோ இவனுங்க கிட்ட இப்படி நாறுது.
_____________________________________________
அவசியமற்ற நேரத்தில் பாதுகாப்புச் சபையில் இலங்கை நிலவரம் குறித்து விவாதம் நடத்த முனைப்பு காட்டப்படுகிறது: மஹிந்த சமரசிங்க

ஆமாம்டா. இப்பவாவது அவனுங்களுக்கு உறைக்குமா தெரியல. எல்லாம் முடிச்சப்புறம் விவாதம் பண்ணி என்ன பண்ணப் போறாங்க.
_____________________________________________
இந்திய அரசாங்கமே இலங்கை தமிழரின் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டும்: சுப்பிரமணிய சுவாமி

ஆமாம். அதுக்கு தலைமைக்கு இவரைப் போட்டு அனுப்பி வைக்கணும் அங்க. அழுகின முட்டைதானே! அப்பப்போ அடிச்சா வாய தொறக்காம இருப்பானில்ல இந்தாளு. பண்ணுங்கப்பு.
_____________________________________________
பிரபாகரனின் மரண சான்றிதழை இந்தியா கோருகிறது

2125 கோடி விலை குடுத்து ஒரு போலி சர்டிபிகேட். கின்னஸ்ல வருமா?
_____________________________________________
ஜனாதிபதி மஹிந்தவுக்கு ராஜீவ்காந்தி ஞாபகார்த்த விருது

இவனுக்குத்தான் குடுக்கணும். அக்கிறமமா அங்க கிடைச்ச இடத்தில வைத்தியம் பண்ணவங்களுக்கெல்லாம் குடுத்தா விருதுக்கு கேடு வந்துடும். போங்கய்யா.
_____________________________________________

Thursday, May 21, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 58 (Updated)

தி.மு.கவுக்கு 3 காபினெட் மந்திரிகளும், 4 ராஜாங்க மந்திரி பதவியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பட்ட பாட்டுக்கு பலன். சும்மாவா சொன்னோம் சொக்கத் தங்கம்னு.
______________________________________________
திமுகவின் கோரிக்கைகளை ஏற்க முடியாது:காங்.

அய்யகோ! நம்பினவங்கள கவிழ்க்கிற வலி இவ்வளவு சீக்கிரமாவா அனுபவிக்கணும்.
_____________________________________________
பிரதமர் பதவியேற்பு விழா: கலைஞர் புறக்கணிப்பு?

இந்த கொடுமைய வேற பார்க்கணுமா. திடீர்னு முதுகு வலிச்சிருக்கும்.
_____________________________________________
காங். கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்போம்: திமுக திடீர் அறிவிப்பு

மிச்சம் மீதி இருந்தா போடுவாங்கன்னா?
_____________________________________________
ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சோனியாகாந்தி, கலைஞரை சந்திக்க வேண்டும்:கருணா

அட! என்னா திடீர்னு. ஒட்டப்பாலத்துக்கிட்ட ஒரு வார்த்த சொன்னா உறவுப் பாலம் அமைப்பாங்க போடா!
______________________________________________
இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக மத்திய அரசிடம் கருணாநிதி குரல் கொடுக்க வேண்டும்: ஜெயலலிதா

அதுக்காகத் தான் 4 பேருக்கு மந்திரி பதவி வாங்கி இருக்காரு. கடிதம் எழுதுவாருங்க.
______________________________________________
ஈழ‌த் த‌மிழ‌ர்களை பாதுகா‌க்க வ‌லியுறு‌த்‌தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் எழு‌ச்‌சி பேர‌ணி

இங்கதான் வில்லங்கமே. அப்போ இலங்கைத் தமிழர்னு தனியா இருக்காங்களா?
______________________________________________
பெ.தி.க. ராமகிருஷ்ணன் மீது தே.பா.சட்டம் பாய்ந்தது

பாயுறதும் அப்புறம் நீதி மன்றத்துல குட்டு பட்டு வரதும் தெரிஞ்ச கதை தானே!
______________________________________________
இந்திய பிரதமரின் சிறப்பு தூதர்கள் இன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து பேசினர்.

இறையாண்மை கோவணத்துல கட்டி வெச்சிட்டானா? பரதேசிங்க. இழவு வீட்டில கலியாணம் பேசப் போனதாம்.
______________________________________________
இலங்கையை உன்னிப்பாக கவனிக்கிறோம்: ஐ.நா.

கவனிச்சி கிழிச்சதெல்லாம் போதும். மண்ணுக்குள்ள ஆளத் தள்ளி மூடினப்புறம் போய் அழகான கடற்கரைன்னு வரப்போரீங்களா?
______________________________________________
மன்மோகன் ஆற்றல் மிகு தலைவர்: ஒபாமா பாராட்டு

சொன்னத செய்வார்னு நக்கலா?
______________________________________________
காங்கிரசார் எங்களை புண்படுத்துகின்றனர்: அமர்சிங்

பாஜக மருந்து போடுவாங்க போங்க.
______________________________________________
“மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்’ கருணா.

இவன் நாறப் போறான். அடுத்த ஆப்பு இவனுக்குத்தான்.
______________________________________________
பிரபாகரன் 2 முறை தப்ப முயன்றார் சிங்கள ராணுவம் தகவல்

அப்போ துப்பாக்கில தோட்டா இல்லையா? வெத்து வேட்டுகளா.
______________________________________________
விடுதலைப் புலிக் கைதிகளை சட்ட ரீதியான முறையில் நடத்த வேண்டும்: ஜப்பான்

வந்தானையா எடுபிடி. புதுசா சட்டம் போட்டு அந்த ரீதியில நடத்திருவானுவ.
______________________________________________
இலங்கையில் சீனாவின் செல்வாக்கை முறியடிக்க தயார்ப்படுத்துகிறது இந்தியா

நீ குடுத்த காசுக்கு உனக்கொரு குத்து அவன் குடுத்த காசுக்கு அவனுக்கு ஒரு குத்துன்னு ரெண்டு பக்கமும் ஏத்திவிட்டு பைத்தியக்காரனாக்குறான். பரதேசிங்களுக்கு உறைக்குதா?
______________________________________________
சிறிலங்கா இராணுவத்திற்கு மேலும் 40,000 பேரை இணைக்க முடிவு

இருக்கிற ராணுவத்தான சுய பாதுகாப்புக்கு வச்சிட்டானுவளா?
______________________________________________
இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் நேரடி உதவிகளை இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது

ஏன் பிரிட்டன், ஐரோப்பிய கூட்டமைப்பு, ஐநா, அமெரிக்கா எல்லாம் வேணாமா. டாலர் மட்டும் கொடுத்துட்டு பொத்திட்டு போயிடணும்.
______________________________________________
யாழ்.குடாநாட்டில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் 48 மணி நேரத்தில் இராணுவத்திடம் சரணடைய வேண்டும்:

அங்க இருக்கிறவங்களுக்கு பிடிச்சது சனி. எல்லாரையும் புலி உறுப்பினர்னு சொல்லுவான்.
______________________________________________
பாதுகாப்பு வலயத்தில் என்ன நடந்தது என்பது சர்வதேச சமூகத்திற்கு தெரியும் :செய்தி

தெரிஞ்சிதான் என்னா பண்ணப்போறன்னு தானே பண்ணிட்டிருக்கான்.
______________________________________________

Wednesday, May 20, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 57

நன்றி: paristamil.com
தத்ரூபமா இருக்கு. எப்போ போடுவாங்க?
___________________________________________
இலங்கை முழுவதும் ஊடுருவல்; 3 ஆயிரம் பேர் கொண்ட கொரில்லா படை தயார்; மரணத்துக்கு முன் பிரபாகரன் செய்த ஏற்பாடு: செய்தி

ஆரம்பிச்சிட்டானுங்க. எப்படியாவது பத்திரிகை வித்தாவணும். இத வெச்சி இருக்கிற ஜனங்கள சாவடிக்கவா.
___________________________________________

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு பிரபாகரன் உயிர் துறந்தார்: கடைசி வரை தனியாக நின்று போராடினார் :செய்தி

இனிமே கவர் வராது. இப்படி கதை எழுதி தான் வியாபாரம் பண்ணனும். பத்திரிகைக்கு இருக்கிற மரியாதை எல்லாம் வித்துட்டானுவ.
___________________________________________
பாமக தோற்றது ஆறுதல் அளிக்கிறது: இல.கணேசன்

இதெல்லாம் ஒரு தேசியக் கட்சி. கொஞ்சம் கதை மாறினா ஆளே மாறிடுவீங்க.
___________________________________________
மக்கள் மனதில் இருந்து பா.ம.க.வை அழித்துவிட முடியாது: மருத்துவர்

மரமிருக்கிற வரை குரங்கிருக்கிறவரை உங்களை மறக்க முடியுமா ஐயா?
___________________________________________
பணம் கொடுத்தது 20 சதவீதமும், 80 சதவீதம் மின்னணு இயந்திரத்தின் மூலம் சதி செய்து பா.ம.க.வை தோல்வி அடையச்செய்துள்ளனர்: ராமதாஸ்

விஜயகாந்த் மாதிரி புள்ளிவிவரமெல்லாம் இருக்கே. வழக்கு போடலாமே?
___________________________________________
ராஜீவ் காந்திக்கு மலரஞ்சலி செலுத்துவோம்: தங்கபாலு

இதுக்கென்ன அலட்டல். எல்லாரும் பண்றது தானே? இனி இப்படி ஏதாவது சொன்னாதான் பத்திரிகைல பேரு வரும். அவன புடி இவன கைது பண்ணுன்னா யாரு கண்டுக்கறாங்க?
___________________________________________
பதவி கொடுக்காதது பற்றி கவலைப்படபோவதில்லை: லாலு

அச்சோ பாவம். பட்டாலும் குடுத்துட மாட்டாங்க. நாம பீகார்ல குடைச்சல் குடுப்பம் வாங்க.
___________________________________________
பிரபாகரன் மரணம் உறுதிசெய்யப்படவில்லை: கலைஞர்

இது வருத்தமா? சந்தோஷமா?
___________________________________________
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!

எப்பவாவது ஆரம்பப் போர், நடுப் போர், ரெஸ்ட் எடுக்கப் போறேன்னு போன கதையே கிடையாதே.
___________________________________________
இலங்கைக்கு ரூ.500 கோடி நிவாரண உதவி: பிரணாப்

அழிக்கிறதுக்கு 1500 கோடி நிவாரணம் 500 கோடியா. நிவாரணம் யாருக்கு, பக்சேக்கு இல்லையே?
___________________________________________
இலங்கை: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்-கலைஞர் ஆலோசனை

ஆலோசகருக்கே ஆலோசனையா? ரெண்டும் டேஞ்சர் பார்ட்டி. என்னாகுதோ?
___________________________________________
ஐ.நா. பொதுசெயலாளர் பான்.கி.மூன் இலங்கை பயணம்

நேரா பார்த்து பாராட்டவோ? எஸ்டேட் ஏதாச்சும் வாங்கிப் போடுங்கய்யா. அத பார்க்கவாவது வந்து போவிங்களாம்.
___________________________________________
சிங்களர்களை போல தமிழர்களுக்கும் அதிகாரம் பகிர்ந்து அளிக்க வேண்டும்: அமெரிக்கா வற்புறுத்தல்

அப்படியே குடுத்துடுவான். ஆரம்பிச்சிட்டானுங்க அழிச்சாட்டியத்த. இவரு வற்பு உருத்தராராம்.
___________________________________________
இலங்கை தமிழர்களுக்கு தேவையான நிவாரண உதவி வழங்கப்படும்: கருணாநிதியிடம் பிரதமர் உறுதி

தேவை கூட ராஜீவ்‍ஜெயவர்த்தனா ஒப்பந்ததில இருந்தா தானே? இல்ல தேவையும் நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா?
___________________________________________
எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராமல் நிமிர்ந்து நிற்போம்: விடுதலைப்புலிகள்

அதனால தானே அகிலமெல்லாம் எதிர்ப்பு. உங்களுக்கு நீங்கதான்.
___________________________________________
முகாம்களில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்: இலங்கை அரசிம் யுனிசெஃப் கோரிக்கை

மிருக வதை பண்ணா கைது பண்ணி மிருகத்த காப்பாத்தலாம்னு சொல்றாங்க. குழந்தைங்கள பாது காக்க கெஞ்சணுமா? முடியாதுன்னா, அப்பாடா கேட்டாச்சி அவன் முடியாதுன்னுட்டான். நாம என்ன பண்ணன்னு தட்டிகிட்டு போய்டுவீங்களா?
___________________________________________
கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்: புதிய தமிழகம், தே.மு.தி.க.

இதிலயும் போட்டியா? என்னா அவசரம் பாரு.
___________________________________________
இலங்கை தமிழ் மக்களுக்கு புதுவாழ்வு: மன்மோகன்சிங், சோனியா உறுதி: கலைஞர் பேட்டி

அதும் பொழப்ப பார்த்துட்டு அழகா இருந்ததுங்கள அழிச்சி நாசம் பண்ணி புது வாழ்வு தராங்களாம். போன சொந்தம், கை காலு எல்லாம் தருவாங்களாமா? உங்கள யாராவது கேட்டாங்களா? பகையாளி குடியை உறவாடிக் கெடுனு அதையும் பண்ணிடுங்க.
___________________________________________
இந்திய வெளியுறவுச் செயலரும், பாதுகாப்பு ஆலோசகரும் இன்று இலங்கை வருகை.

அவிங்க இல்லாம கொண்டாட்டமா? குளிப்பாட்டுவான் போங்க.
___________________________________________
தமிழர்கள் இராணுவத்தின் பிடியில் சிறைப்பட்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: ஐ.நா.மனித உரிமைகள் சபை

வீடியோ புடிச்சி போடு! என்ன இப்போ? வந்துட்டுதுய்யா வீரம். தினம் கோரிக்கை விடுவானுவ.
___________________________________________
இத்தனை ஆண்டுகாலமாக இருந்த ரணத்தை ஆற்றுவதற்கு வழிபார்க்க வேண்டும்: ஜோன் ஹோல்ம்ஸ் செவ்வி

ரணமே இல்லையேன்னு சொல்லுவான். சொக்கு சொன்னாதான் கேப்பேன்னு நிக்கிறான்? ஏங்க இப்படி ஆளாளுக்கு கதைக்கிறீங்க?
___________________________________________
தமிழருக்கு சுயாட்சி வழங்கத் தவறினால் போராட்டம் வேறு வழியில் தொடரலாம்: எரிக் சொல்ஹெய்ம் எச்சரிக்கை

இந்த சோசீயம் பாக்கிறதெல்லாம் விட்டுட்டு உருப்படியா ஏதாவது பண்ணுவீங்களா?
___________________________________________
மோதல் வேளை மனித உரிமை மீறல் விசாரணை நடத்த ஐ.நா. ஆதரவளிப்போம்: பான் கீ மூன்

இப்போ என்ன மீறினாலும் ஆதரிப்பீங்களா?
___________________________________________
பிரபாகரன் உயிரிழக்கவில்லையென்று சர்வதேச மட்டத்தில் சிலர் பிரசாரம் - அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும் என்கிறார் அமைச்சர் யாப்பா

சிரிக்கிறதா அழுவரதா தெரியல. உன் கதிய பாரு ஆப்பா.
___________________________________________
புலிகளின் தலைவரின் சடலத்தை கருணா, தயா மாஸ்டர் அடையாளம் காட்டினர்

ஆள்காட்டி ஆள்காட்டின்னு சொன்னது தப்பே இல்லை. இவிங்கள விட்டா தகுதியான நாயீ எதுவுமில்ல.
___________________________________________
தமிழ் மக்கள்ஏற்கக் கூடிய தீர்வை மிக விரைவில் அரச முன்வைக்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை நாடு திரும்ப அழைப்பு

யப்பா! தாங்கலடா சாமி. மாட்ட தண்ணிக்குள்ள வெச்சி வியாபாரங்கறது இதானோ? இரண்டாம் கட்ட மனிதாபிமானப் போர்னு மொத்தத்தையும் தீத்துடலாமுன்னா? முதல்ல சிங்களவன கூப்புடு. வரட்டும்.
___________________________________________
ஆனால், சுகாதார அமைச்சின் கீழ் வராத வைத்தியர்கள் என யாராவது செயற்பட்டிருந்தால் அது பற்றி எமக்கு தெரியாது" :கெஹெலிய ரம்புக்வெல

அவங்க தலை விதி முடிஞ்சு போச்சா. புலின்னு சொல்லிடுவான்.
___________________________________________
ஐ.நா, செஞ்சிலுவைச் சங்கத்தைத் தடுத்துவிட்டு, சிறிலங்காவானது ஆதாரங்களை அழிக்கிறது: பேராசிரியர் போய்ல்

அதுக்காகத் தானே இழுபறி. இல்லைன்னா ஈராக் மாதிரி பண்ண முடியாதா? பான் ‍கி மூன் போய்ட்டு வந்து பக்சே புத்தரோட அவதாரம்னு சொன்னாலும் ஆச்சரியமில்லை.
___________________________________________

வெண்ணையாக்கப் பார்க்குறான் வெண்ணை

சிறிலங்கா ராணுவ இணைய தளத்திலிருந்தது.

1. அறை வேக்காடு வெண்ணை ஒன்னு:

People fleeing an artillery or similar attack with smoke rising in the distance. Terrorists have resorted to such cowardly tactics triggering large explosions within the CSZ for international consumption.

the complete picture shows a smiling girl photographing the "fleeing" women using what appears to be a Nikon D Series camera.

All of this, when take in full context shows that this was a well staged event, with camera at the ready.

பின்னால இருந்து ஃபோடோ பிடிச்சா முன்னாடி தெரியுதாம். பின்னாடி புகை குப்பை எரிச்சதா? அங்க நடக்கறதெல்லாம் இவனா ஃபோடோ தரான். சண்டை நடக்கிரப்பவே வீடியோ ஃபோடோ எடுக்கிறது எல்லாருக்கும் தெரியும்.

2. அரை வேக்காடு வெண்ணை ரெண்டு:

Above photo was posted on the BBC website. It clearly shows that there are no damages to trees or permanent buildings. No signs of aerial attack or artillery fire. The right side image clearly shows signs of a mass evacuation of the makeshift shelters, probably temporary camps of the hostages who were dragged by the terrorist on the retreat as a human shield. If SLAF continued bombarding or SLA fired artillery, how could only the permanent buildings be left intact.

அங்க ஒரு மரம் இங்க ஒரு கட்டிடம் தவிர மிச்சமெல்லாம் கரிஞ்சி மண்ணா நின்னாலும் இப்படியா புளுகுவான்.

இவன் வெண்ணையா நம்மள வெண்ணைன்னு சொல்றானா?

Tuesday, May 19, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 56

பிரபாகரனது போல் தென்படும் சடலத்தை இலங்கை தொலைக்காட்சி காண்பித்தது.மரபணுச் சோததனைகள், அது பிரபாகரன்தான் என்பதை உறுதி செய்ததாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

ஒரே நாளில் மரபணு சோதனையா? உலக சாதனையாச்சே. பரதேசி நாய்ங்க. புளுகாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்னு படிச்சிருப்பானுங்க போல.
_______________________________________________
சமாதானம் பேசச்சென்றவர்களை சாகடித்துவிட்டனர்: விடுதலைப்புலிகள்

அவன் எதுதான் மரபுப்படி செய்தான். பாதுகாப்பு வலையம்னு சொல்லி வரவெச்சி அடிச்சவன் இது பண்ணமாட்டானா?
_______________________________________________
ராஜபக்சேயை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். திருமாவளவன்

தோடா? தெரிஞ்சே துணை போன உங்களை எல்லாம் துணைக்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
_______________________________________________
பிரபாகரன் மரண செய்தி: வெளிநாடுகளில் தமிழர்கள் கொந்தளிப்பு

இத சாக்கு வெச்சி காலிப்பய கருணா குழு எதயாச்சும் பண்ணி மக்கள் போராட்டத்தையும் ஒழிக்க பார்க்கும் மக்கா. உசாரு.
_______________________________________________
பிரபாகரன் செய்தி: பிரணாப்புடன் ராஜபக்சே பேசியது?

என்னான்னு? தல! மேட்டர முடிச்சிட்டம்ல? மேடம் சந்தோசமான்னா?
_______________________________________________
இலங்கை உரிமைப் போராட்டம் முடிவுக்கு வந்தவிதம் வேதனை தருகிறது:இல.கணேசன்

உக்காந்து பேசுன்னு ஆளாளுக்கு அலறினீங்கள்ள? வர விட்டானா? அவனுக்கு இரையாண்மை தான் இருக்கு. இறையாண்மை தெரியாதுன்னா கேட்டீங்களா?
_______________________________________________
பிரபாகரன் செய்தி :மதிமுக தொண்டர் தீக்குளிப்பு

கடவுளே! இருக்கும்போது பண்ணவங்களையே செத்தவங்கள விட ஓட்டுதான் பெருசாப்போச்சுன்னு போனாங்க . இப்போ எதுக்கு இதெல்லாம்?
_______________________________________________
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்:விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நேர வந்து நான் பிரபாகரன்னு சொன்னாலும் இல்ல நாங்க சாவடிச்சிட்டோம்னு சத்தியம் பண்ணுவானுவ.
_______________________________________________
இலங்கைநிலை:டெல்லிபோலீஸ் சென்னைக்கு விரைவு

ஏன் சென்னை போலீஸ் வக்கீல அடிக்கதான் லாயக்குன்னா? ஆந்திரா, கேரளால்லம் யாரு போறது?
_______________________________________________
இலங்கை தமிழர்களுக்கு மருத்துவ பொருட்கள்: இந்தியா

அடிக்கிற கைதான் அணைக்குமா? அதையும் காசா குடு. இன்னும் ரெண்டு ஆயுதம் வாங்குவேன்னு கேக்கலையா?
_______________________________________________
ராஜீவ் கொலை கைதிகள்: பலத்த பாதுகாப்பு

தென்ன மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெறி கட்டுது!
_______________________________________________
பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் 90 கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

சீமான் சொன்னது சரி. உள்ள இருக்க வேண்டியவங்கல்லாம் வெளியில. வெளிய இருக்க வேண்டியவங்கல்லாம் உள்ள.
_______________________________________________
காங்.எம்.பி.க்கள் கூட்டம்:பிரதமர் தேர்வு

தேர்தலுக்கு முன்னாடியே இத சொல்லிதானே கேட்டிங்க ஓட்டு? யார் பிரதமர்னு எங்கள மாதிரி சொல்ல முடியுமான்னு?
_______________________________________________
காங். தலைவராக சோனியா மீண்டும் தேர்வு

இது அடுத்த கூத்து. காங்கிரசும் இந்தியாவும் நேரு வாரிசுக்குதான் சொந்தம்னு தெரியுமே. இல்லாம வியாபாரம் படுத்துடுமே.
_______________________________________________
காங்.கூட்டணிக்கு ஆதரவு : மாயாவதி

லீவ் நாள்ள பிரதமர் நாற்காலில உக்காந்துக்க அனுமதிச்சாங்களா?
_______________________________________________
டெல்லி புறப்பட்டார் முதல்வர் கருணாநிதி

முதுகு வலியெல்லாம் பார்த்தா முடியுமா? கூவின கூவுக்கு கூலி வாங்கறதெப்படி?
_______________________________________________
சிங்களர்களின் குடியேற்றம் அங்கே நடைபெறுமானால் அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய கடமை இங்கே வாழ்கிற தமிழர்களுக்கு உண்டு. இங்கே இருக்கிற அரசுக்கு உண்டு. கட்சிகளுக்கு உண்டு: கலைஞர்

அடேங்கப்பா! இறையாண்மைக்கு அப்போ லீவா? சிதம்பரம் தொலை பேசியில் சொன்னார். ராஜ பக்சே உறுதி கூறியிருக்கிறார். தமிழ் தெரிந்த சிங்களவர் மட்டுமே குடியேறினார்கள். அதனால் சரியாப் போச்சின்னு அடுத்த கதை ரெடி..
_______________________________________________
மே 15 இரவு 2.30 மணிக்கு சோனியாவுக்கும் பிரதமருக்கும் தந்தி அனுப்பியதோடு வாக்குகள் எண்ணப் பட்டுக் கொண்டிருந்த நிலமையிலும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி....:கலைஞர்.

அந்த நேரம் செத்தவங்களை எண்ணக் கூட இல்லை. ஏன் வாழ்த்து சொல்ல தொலைபேசி வேலை செய்யும் அப்போ வேலை நிறுத்தம் பண்ணிச்சா?
_______________________________________________
16ஆயிரம் ஓட்டு எப்படி வந்தது? திருவள்ளூர் திமுக வேட்பாளர் மனு.

சிதம்பரதுக்கு 3000+ ஒட்டு வந்தா மாதிரிதான்.
_______________________________________________
மத்திய மந்திரி சபையில் எத்தனை திமுக மந்திரிகள் என்று சோனியாவைச் சந்தித்த பின்னரே முடிவு: கலைஞர்

ஆமாம் பின்ன! விசுவாசத்துக்கு, நாடகத்துக்கு, பல்டிக்கு , 12 போனதுக்குன்னு என்னா கணக்கு வழக்கெல்லாம் இருக்கு. டக்னு சொல்லிட முடியுமா? மருத்துவருக்கு ஆப்பு வைக்கிற இலாகா வேற கேட்டாவணும்.
_______________________________________________

இனியாகிலும்...

தொப்புள் கொடியறுக்க துவளாமல் உழைச்சவரே
தமிழினக் காவலரே தரம் கெட்டுப் போவீரோ?
பதவி சுகம் பெரிதென்றே பாசாங்கு செய்திட்டீர்
தமிழினத்தை அடகு வைத்தே தலைவராய் நிலைத்திட்டீர்!

ஆறே மணிநேரம் ஆரவாரமில்லாமல்
ஆங்கோர் போர் நிறுத்தம் அழகாய்த்தான் செய்திட்டீர்
கருவறுக்க கயவனுக்கு கடனாய் ஆயுதத்தை
தயங்காமல் அளித்தவரை தாயென்று அழைத்திட்டீர்!

குந்தக் குடிசையின்றி குழந்தைக்குப் பாலின்றி
கும்பிக்கு சோறின்றி குடும்பங்கள் அழிந்ததங்கே
ஒட்டு மொத்த தமிழ்க் குடியை ஓட்டாண்டியாக்கிவிட்ட‌
திமிர்பிடித்த பெண்ணுமக்கு தியாகச் சுடர்விளக்கு!

தேர்தல் முடிஞ்சாச்சி தேவையெல்லாம் முடிவாச்சி
அமைச்சர் பதவியெல்லாம் அசராம தேத்திடுங்க!
போர் நிறுத்தச் சொன்னால்தான் போயிடுமே இறையாண்மை
போரும் முடிஞ்சாச்சாம் பொழுதும் விடிஞ்சாச்சாம்!

இனியாகிலும் உம் இதயம் திறக்கட்டும்
இருப்போர் வாழ்ந்திடவே இனி வழி பிறக்கட்டும்.
ஆவாய் அடைக்காமல் ஆலாய்ப் பறக்காமல்
அவரவர் குடும்பத்தார் அன்பாய் சேரவிடும்!

கட்டத் துணி வேண்டி கவளச் சோற்றுக்காய்
காத்துக் கிடக்கவில்லை காப்பாற்று என வேண்டி!
அங்கம் இழந்தபடி அழக்கூட மறந்த படி
ஆதரவு யாருமின்றி ஆயிரம் பிஞ்சங்கே!

மருந்துக்கு வழியின்றி மன நிலையும் குலைந்தபடி
மரணம் வரமென்றே மனமுடைந்து நிற்கின்றார்!
எத்தனை மரணங்கள் எத்தனை தியாகங்கள்
எல்லாம் மண்ணாச்சு எத்தர்கள் வென்றாச்சு

இனமழிக்க தனித்தனியாய் ஏதேதோ செய்திட்டோம்
இனம் காக்க வழிதேடி ஒன்றாவோம் இப்போது
மாற்றுக் கருத்தின்றி மமதைப் பேச்சின்றி
மக்கள் நலம் கருதி மாற்று வழி கண்டிடுவோம்.

போன உயிர் போகட்டும் பொழைச்ச உயிர் வாழட்டும்
சுதந்திரமாய் அவர் வாழ வழியொன்று பிறக்கட்டும்
சொக்குவைக் கேப்பீரோ சொந்தமாய்ச் சொல்வீரோ
சொந்தங்கள் வாழ்ந்திடவே செய்யுமைய்யா ஓர் வழிதான்!

Monday, May 18, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 55

தியாகத்திருவிளக்கு சோனியா: கலைஞர் புகழாரம்

ஆமாம். எவ்ளோ உயிர எரிய வெச்சிருக்கு. 12 சீட் போனதுக்கு இப்படியெல்லாம் காக்கா புடிச்சாதான் கேட்ட மந்திரி பதவி கிடைக்கும். நடத்துங்கய்யா.
____________________________________________
உறவுக்கு கை கொடுப்போம்;உரிமைக்கு குரல் கொடுப்போம்: முதல்வர் கருணாநிதி

உறவுக்கு கை கொடுத்தீங்களே! பார்த்தோமே. உரிமையும் கிடையாது அடிமைன்னு சொன்னீங்க. குரல் கொடுப்பாராம்.
____________________________________________
தங்கபாலு தோல்வி:பாதி மீசையை எடுத்து பாதி மொட்டை அடித்த தொண்டர்

எதுன்னாலும் சூதாடணுமா?
____________________________________________
டெல்லி செல்கிறார் கலைஞர்: சோனியாவுடன் ஆலோசனை

இதென்னா ஜனங்க உசிரா தந்தி, தபால், ஃபோன்ல முடிக்க. பதவியாச்சே. நேர போனா தான் பேரம் படியும்.
____________________________________________
பிஜேபி தோல்வி: லாலு மகிழ்ச்சி

அட அட. என்னல்லாம் பண்றாங்கய்யா. பதவி படுத்துற பாடு.
____________________________________________
ஜனாதிபதியிடம் அனுமதி கேட்கும் மன்மோகன்சிங்

எல்லாத்துக்கும் கேட்டா பண்ணாங்க.
____________________________________________
மம்தா மந்திரியானால்-: பிரதமரின் சகோதரி

அவரென்னா டி. ராஜேந்தரா. சகோதரி கேட்டுச்சின்னு போஸ்ட் குடுக்க. அதெல்லாம் அம்மா சொல்லணும்.
____________________________________________
பாஜக தோல்விக்குகாரணம் வருண், மோடி:சரத் யாதவ்

ஏதோ ஒரு காரணம். இவருக்கென்ன குறையோ பாவம்.
____________________________________________
புதிய எம்.பிக்களில் 150 பேர்மீது கிரிமினல் வழக்குகள்!

அப்போ மத்தபேரெல்லாம் தகுதியே இல்லையா?
____________________________________________
போராளிகள் சயனைடு குப்பிகளை கடித்து தற்கொலை செய்து கொள்ளும் கொடூரம் நிகழாமல் காப்பாற்றுங்கள்:வைகோ

அதுக்குதான் வழியே இல்லாம என்னல்லாம் உண்டோ விட்டடிக்கிறானே?
____________________________________________
உடனே போர்நிறுத்தம்:திமுக தீர்மானம்

அப்போ நிறுத்தின போர் எப்போ ஆரம்பிச்சிதாம். ஆறு மணி சாதனை அய்யகோவா?
____________________________________________
பிரபாகரன் பற்றிய செய்தி:முன்னெச்சரிக்கையாக சென்னையில் 300 பேர் கைது

யாரை எச்சரிக்க?
____________________________________________
தமிழர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்; வேறுவிதமான போராட்டங்களில் ஈடுபடுவார்கள்: தா.பாண்டியன்

எவன் சட்டை பண்றான்?
____________________________________________
இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியிடுவதை கண்டித்து, நெல்லை வக்கீல்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதில ஒரு அற்ப சந்தோஷம். போகட்டும் விடுங்க.
____________________________________________
வாழவந்தான் கோட்டை இலங்கை அகதிகள்:கியூ பிராஞ்ச் போலீசார் கண்காணிப்பு

எதுக்கு? வாழுறாங்களா சாவுறாங்களான்னு கண்காணிப்பா?
____________________________________________
போர் கைதிகளாக இருந்த 7படையினர் விடுதலைப்புலிகளினால் விடுவிப்பு

அதனால தான் தீவிரவாதின்னு சொல்லுறது. இல்லாம சாவடிச்சிருந்தா அதுக்கு பேரு ராணுவம்.
____________________________________________

போரினால் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 10 பில்லியன் அமெ.டொலர்கள் தேவை: இலங்கை அரசாங்கம்

யாருடைய‌ பொருளாதாராம். ம‌ந்திரிக‌ளுக்கா? நிவார‌ண‌த்துல‌ சுருட்டுங்க‌ ராசா. உங்க‌ளுக்கு தெரியாதா?
____________________________________________
யுத்தத்தில் வெற்றி பெற்ற படையினருக்கு ரணில் விக்ரமசிங்க பாராட்டு

ஐரோப்பா போய்ட்டு வந்து அடிச்சாருய்யா அந்தர் பல்டி. சபாசு.
____________________________________________
"ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்கத் தயார்": செ.பத்மநாதன் தகவல்

இத‌க் கேட்ட‌வ‌ங்க‌ள்ளாம் வாயே தொற‌க்க‌லையே?
____________________________________________
கொழும்புப் பயணம் தோல்வியடைந்த நிலையில் இன்று நியூயோர்க் திரும்புகின்றார் விஜய் நம்பியார்

எதுக்கு வ‌ந்தாரு என்ன‌ தோல்வின்னு சொல்ல‌வா போறாரு அந்தாளு.
____________________________________________

Sunday, May 17, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 54

சந்தர்ப்பவாத அரசியல்வாதி ராமதாஸ், வைகோவுக்கு தகுந்த பாடம்: சுதர்சனம்

சந்தர்ப்ப வாதமில்லாத அரசியல் வாதின்னு யாராவது இருக்காங்களா. இதில எல்லாருக்கும் வழிகாட்டி நீங்க தானுங்களே.
______________________________________________
7 தொகுதிகளிலும் பா.ம.க.வுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்துவிட்டார்கள்: மு.க.ஸ்டாலின்

அவிங்க மருந்து போட்டுக்குவாய்ங்க. நீங்க வாங்கின 4 சவுக்கடிக்கு பதில் சொல்லுங்க முதல்ல.
______________________________________________
தோல்வி நாளை வெற்றிக்கு வழி: ராமதாஸ்

அப்போ வெற்றி நாளைக்கு தோல்விக்கு வழியா? பாடம் படிச்சா சரி.
______________________________________________
விளம்பரம் போட்டுத்தான் பாமகவை தேடவேண்டும்: துரைமுருகன்

மறப்போம் மன்னிப்போம்னு ஒரு வசனம் வெச்சிருபீங்களே. விட்டு பாருங்க. தானே வந்துடுவாங்க.
______________________________________________
தமிழ் இனத்தை அழிக்க சிங்கள அரசு திட்டம்:தேமுதிக

ஓட்ட பிரிச்சி நீங்க போட்ட திட்டத்த விடவா? எவன் காசோ எனக்கென்னா போச்சின்னு 40 தொகுதில குத்தாட்டம். இப்போ பேச்சு வேற.
______________________________________________
ஈழப்பிரச்சினையை அரசியலாக்க முயற்சி: திருமா

ஆரம்பிச்சி வெச்ச புண்ணியவானே நீங்க தானுங்களே.
______________________________________________
ஐ.மு.கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட்டவர் கலைஞர்: ப.சிதம்பரம்

கொஞ்ச பாடா குறைஞ்ச பாடா? உங்க பங்களிப்பில பிரமாதமால்ல பாடு பட்டாரு.
______________________________________________
திமுக-காங். சாதனைகளே வெற்றிக்குகாரணம்:தங்கபாலு

வாய்க் கொழுப்பே என் தோல்விக்கு காரணம்னு சொல்லுங்க பார்க்கலாம். எங்க தலைவர் பதவிக்கு ஆப்பு வருமோன்னு சோப்பு?
______________________________________________
மக்கள் பிரச்சினையை தீர்த்ததால் வெற்றி: மு.க. ஸ்டாலினுக்கு முக்கிய இடம் கிடைக்கும்: கலைஞர்

மக்களுக்கு பிரச்சனையே இல்லையே. ஆனா பாருங்க மக்கள்னா பசங்களையும் சொல்லுவாய்ங்கள்ள? அதான் முக்கிய இடம்னு சொல்லிட்டீங்களோ? மத்த அய்யா பிரச்சன பண்ணப்போறாரு.
______________________________________________
நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை

என்னான்னு. நீங்கள்ளாம் வாக்களிச்சி தான் கூட்டணி மாறுனது. என் தப்பில்லைன்னு சொல்லவா?
______________________________________________
காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது

சாவடிச்சவங்களுக்கு காரியம்கூட இல்ல. பண்ண யாரும் மிஞ்சப்போரதுமில்ல. இவிங்களுக்கு கமிட்டி வேற.
______________________________________________
காங்கிரசுடன் கூட்டணி வைக்காதது தவறு:லாலுபிரசாத்

தொலைபேசில இதான் சொன்னிங்களா? காமெடியன் இமேஜ்ல இது ஒரு வசதி. சாரி சொன்னா மந்திரி பதவி தந்துடுவாங்களா?
______________________________________________
லாலுபிரசாத்துடன் சோனியா தொலைபேசியில் பேச்சு

3 சீட் தருவேன்னு சொன்ன திமிருக்கு 3 சீட் தானே கிடைச்சதுன்னு வெறுப்பேத்தினாங்களா?
______________________________________________
எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டாம்: அத்வானி

அப்படி எல்லாம் அடம் பிடிச்சா ஆளும் கட்சி தலைவராய்ட முடியாதுங்க.
______________________________________________
பிரதமராகும் தகுதி ராகுலுக்கு உள்ளது: சிந்தியா

அதென்னாங்க தகுதி. அதையும் சொன்னா நாங்களே தெரிஞ்சுக்குவமில்ல?
______________________________________________
3வது அணி தலைவர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

தோத்தப்புறம் கூட என்ன 3வது அணி.
______________________________________________
என் தோல்விக்கு கட்சி பூசலே காரணம்: தங்கபாலு

தலைவரா இருக்கத் தகுதி இல்லை? கட்சியை கட்டுப்பாட்டில வைக்க முடியலன்னு அர்த்தம் தானே? விடு ஜூட்.
______________________________________________

Saturday, May 16, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 53

மன்மோகன் தான் மீண்டும் பிரதமர்:சோனியா பேட்டி

அட‌ இவ‌ர‌ விட‌ த‌ங்க‌மான‌ த‌லையாட்டி வேற‌ கிடைக்குமா?
_____________________________________________
ராகுல்காந்தியும் அமைச்சரவையில் இடம்பெறுவார்:மன்மோகன்சிங்

அம்மா பேச்ச‌ கேட்டு ந‌ட‌க்க‌ ப‌யிற்சி குடுக்க‌ வேண்டாமா? எவ்ளோ நாள்தான் த‌ள்ளி போடுற‌து!
_____________________________________________
காங்கிரசுக்கு ஆதரவு இல்லை: பிஜூ ஜனதா தளம்

கூப்பிடாம‌லே நான் க‌லியாண‌த்துக்கு வ‌ர‌மாட்டேன்னு அல‌ட்டுனா மாதிரில்ல இருக்கு.
_____________________________________________
எதிர்க்கட்சி வரிசையில் அமருவோம்:பிரகாஷ் கரத்

அதான் பண்ண‌ணும். பேச‌ விட‌மாட்டாங்க‌. வெளிந‌ட‌ப்பு ப‌ண்ண‌ வைப்பாங்க‌.
_____________________________________________
பிரதமர் போட்டியில் தான் இல்லை என்பதை வெளிப்படுத்திய சரத்பவார்

நல்ல கூத்துடா சாமி! நினைப்பு பொழப்புன்னு எதோ சொல்லுவாங்களே!
_____________________________________________
தேர்தலில் தி.மு.க., பெற்ற வெற்றி ஜனநாயக ரீதியிலான வெற்றி அல்ல என்றும் பணபலத்தை கொண்டு பெறப்பட்ட வெற்றி’’ : ஜெ

நீங்க‌ வென்ற‌ இட‌மும் இந்த‌ மாதிரி தானா? தேவையா இப்ப‌டி?
_____________________________________________
எமது கடைசி வேண்டுகோள்-------:விடுதலைப்புலிகள்

வார‌க் க‌டைசி விடுமுறைன்னு ஐ.நா. மூடிட்டு போயிருப்பாங்க‌. திங்க‌க்கிழ‌மை வ‌ந்து கோரிக்கை வைப்பாங்க‌. அவ்வ‌ள‌வுதான் ந‌ட‌க்கும்.
_____________________________________________
ரஷ்யாவிடம் சிங்களஅரசு போட்டுள்ள ஆயுதஒப்பந்தம்

அதான் 48 ம‌ணி நேர‌த்துல‌ முடிச்சிடுவேன்னு ச‌ப‌த‌மாச்சே. அப்புற‌ம் எதுக்கு க‌ட‌ன்ல‌ இதெல்லாம்?
_____________________________________________
சிங்கள அரசு மீது போர்க்குற்ற வழக்கு தொடர்வோம்: பிரிட்டன் கடும் எச்சரிக்கை

ஆமாம். எல்லாம் செத்த‌ப்புற‌ம் நான் இந்த‌ வ‌ழ‌க்கை வாப‌ஸ் வாங்க‌றேன், நீ நான் சுர‌ண்டினேன்னு போட்ட‌ வ‌ழ‌க்கை வாப‌ஸ் வாங்குன்னு ஒப்ப‌ந்த‌ம் ப‌ண்ண‌லாம். இதுக்கெல்லாம் ப‌ய‌ந்தா ப‌ண்றான்? பூச்சாண்டி காட்றாய்ங்க‌.
_____________________________________________
இலங்கை தமிழர்களுக்கு 7 கோடி நிவாரணப்பொருட்கள்: தமிழக அரசு

ஆமாம். அப்டியே விள‌ங்கிடும். ம‌ன‌சாட்சி இருந்தா ச‌ரி.
_____________________________________________
விடுதலைப்புலிகளின் வான்படை அழிக்கப்பட்டதாக ராணுவம் சொல்கிறது

அதான் அப்போவே சொன்னாங்க‌ளே. இப்போ என்ன‌ புதுசா?
_____________________________________________
சிங்கள அரசுக்கு துணை நிற்கும் இந்திய அதிகார வர்க்கம்: திருமாவளவன் ஆவேசம்

தோடா! அதிகாரிங்க அரசியல் வாதி தலையாட்டாம பண்ண முடியுமா அண்ணாச்சி. சொக்கு வந்ததும் அன்னையால்தான் முடியும்னு அலட்டினிங்கள்ள, முடிங்க சாமி. அய்யோ ஆளுங்கள இல்ல! பிரச்சனையை!
_____________________________________________
ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டதையே இந்த தேர்தல் உணர்த்துகிறது:ஜெ

பணநாயகம் வெற்றி பெறாதுன்னு மருத்துவர் சொன்னாரே? இப்போ இப்படி சொன்னா எப்படி?
_____________________________________________
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்: ஜெ.

இத நேத்தே சொல்லி இருக்கலாம்லம்மா! இப்போ சொன்னா நல்லாவா இருக்கு?
_____________________________________________
தமிழக அரசின் சாதனைத் திட்டங்களே திமுக கூட்டணியின் வெற்றிக்கு காரணம்: தயாநிதி

ஆமாம்! ஆமாம்! அய்யகோ சாதனையும் சேர்த்தேதான். ஜஸ்ட் எச்கேப்புக்கு அலட்டல பாரு!
_____________________________________________
முதல்வர் கருணாநிதி டெல்லி பயணம்

இப்போதும் மத நல்லிணக்கத்தை தெரிவிக்கிற அந்த மூன்று பேரும் வராங்களா தல?
_____________________________________________

Friday, May 15, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 52

48 மணித்தியாலத்தில் மக்களை விடுதலைசெய்யவேண்டும்: மகிந்தா

படையினர் தமது முழுப்படைக்கல சூட்டாதரவைப் பயன்படுத்தி இன்று காலை முதல் மிகக்கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். ஒரே அடியாக விடுதலை.
_____________________________________________
ரிச்சர்ட் பவுச்சர், ‘தாங்கள் அளித்த வாக்குறுதிகளை அவர்களே மதித்து நடக்காதது ஏமாற்றம் அளிக்கிறது’ என்றார்.’

இதனால தானே இந்த போராட்டமே! எப்பவும் இதே கதைதானே? இதில உக்காந்து பேசி அரசியல் தீர்வுன்னு கதைச்சா என்ன நடந்துடும்? அதையும் கிடாசுவான்.
_____________________________________________
இலங்கைக்கு நிதியுதவி அளிக்கக் கூடாது: அமெரிக்கா

அவனுக்கு குடுக்க ஆளா இல்லை? நிதி இல்லாட்டி என்ன ஆயுதமா வாங்கிக்க தயார்னு சொல்லமாட்டானா?
_____________________________________________
பான் கி மூன், மீண்டும் தனது சிறப்புத் தூதர் விஜய் நம்பியாரை கொழும்புக்கு அனுப்புகிறார்.

போன முறை போய்ட்டு வந்து வாய தொறக்க மாட்டேன்னு அடம் புடிச்சவருதானே? இவர விட்டா வேற ஆளுங்களே இல்லையா?
_____________________________________________
இலங்கை அரசுமீது போர் குற்ற விசாரணை:இங்கிலாந்து

நீ யாரு விசாரிக்கன்னு கேப்பான்? விசாரிச்சி தண்டிக்கிறதுக்கு நேரமா நடவடிக்கை எடுத்தா நாலு ஜீவன் பிழைக்குமா இல்லையா?
_____________________________________________
இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்: திருமா

என்னான்னு. ஐ. நா. வரதுக்குள்ள முடிச்சிடுன்னா? போங்க சார். ஓட்டு முடிஞ்சது. ஜெயிச்சா எங்க ஒட்டலாம்னு பாருங்க.
_____________________________________________
ஈழத்தமிழர்களுக்கு உதவ தயார்: அமெரிக்க கடற்படை

இல‌ங்கை அர‌சுட‌ன் இணைந்தாம். இது ப‌ண்ண‌தான் ஆளில்ல‌ன்னு அழுதாங்க‌ளா? சாப்பாடு, ம‌ருந்து குடுங்கையா முத‌ல்ல‌. ந‌ட‌க்க‌ முடிய‌ட்டும். அப்புற‌ம் வ‌ரீங்க‌ளா என்னான்னு கேளுங்க‌.
_____________________________________________
பதுங்குகுழிகுள் மருத்துவர்கள்:மயான பூமியான மருத்துவமனை

இத விட கொடுமை இருக்குமா? உயிருடன் இருக்கிறவங்க குழிக்குள்ள.
சடலங்கள் வெளியில. இதுக்கு பேரு மனிதாபிமான நடவடிக்கை.
_____________________________________________
தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களை இடைத்தங்கல் முகாம்களில் கடமையில் ஈடுபடுத்த வேண்டும் - ஐ.நா

ஒரு நாளாவ‌து ந‌ட‌க்கிற‌ விஷ‌ய‌மே பேச‌ மாட்டிங்க‌ளா? க‌ருணா ஆளுங்க‌ள‌ அனுப்புவான்.
_____________________________________________
வடக்கு அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதிக் குழுவில் ஒரு தமிழர் கூட அங்கம் வகிக்கவில்லை

இதென்னங்க அநியாயம். வடக்கை அபிவிருத்தி பண்றது தமிழனுக்குன்னு நீங்களா நினைக்கிறதா?
_____________________________________________
இலங்கை: மனிதாபிமானப் பிரச்சனையை தீர்க்காவிட்டால் பேரழிவைத் தவிர்க்கமுடியாது:ஒபாமா

அவ‌ன்தான் போரை ம‌னிதாபிமான‌ ந‌ட‌வ‌டிக்கைங்கிறான். தீர்த்து க‌ட்டிட்டு நீங்க‌ சொன்னீங்க‌ன்னு சொல்ல‌ப் போறான்.
_____________________________________________
தமிழ் மக்கள் மீது அமெரிக்காவுக்கு அக்கறை இருக்குமாயின் ஒபாமா விடுதலை புலிகளை ஆயுதங்களைக் களைந்து சரணடையுமாறு அழுத்தம் கொடுக்கவேண்டும்: மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க

இவனுக்கு அக்கறையில்லையாம். அதனால தான் அடிக்கிறாராம். இத விட எப்படி தெளிவா விளங்க வைக்கிறது. இவன் மனித எருமை அமைச்சர்.
_____________________________________________
ஒலிம்பிக் வீரர் அபினவ் பிந்திராவின் தந்தை மோசடி வழக்கில் கைது: செய்தி
பிள்ளை சுட்டா பதக்கம். அப்பா சுட்டா கைதா? சுடுறது ரத்ததில ஊறி இருக்கு போல.
_____________________________________________

Thursday, May 14, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 51

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, தமிழக காவல்துறையினர், சமூக விரோதிகள் மற்றும் குற்ற பின்னணி உடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுத்ததால் மாநிலத்தில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது: டி.ஜி.பி.

வேட்பாளர்களில் சிலரைத் தவிரன்னு சொல்லாம விட்டார். அவங்க மேலயும் நடவடிக்கை எடுத்திருந்தால்?
___________________________________________________
நரேஷ் குப்தா ஓட்டு போடவில்லை ,வேலைப் பளு காரணமாக அவர் ஓட்டு போட முடியவில்லை:செய்தி

நல்ல உதாரணம். இதே காரணத்தால தான் தலைமை கமிசனருக்கும் ஓட்டு இல்லை. கடமை வீரர்கள்.
___________________________________________________
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

பிரச்சனைன்னு வந்தா அது வாக்களிக்கிற நேரத்துல தானே வருது. அப்புறம் பாதுகாத்து என்ன பண்ண?
___________________________________________________
இரவு 11 மணிக்கு வாக்களித்த 90 விவசாயிகள்

அவங்க என்ன தேர்தல் அதிகாரியா. வேலை இருந்திச்சின்னு போடாம போக. குடிமகன்களாச்சே!
___________________________________________________
100அதிமுகவினர் காங்கிரசில் இணைந்தனர்

ஆரம்பிச்சிட்டாங்கப்பா.
___________________________________________________
இலங்கை: மனிதாபிமானப் பிரச்சனையை தீர்க்காவிட்டால் பேரழிவைத் தவிர்க்கமுடியாது:ஒபாமா

அதுக்குத்தானேண்ணே இத்தனை போராட்டம். யாரு தீர்க்கறது? அது தானே தெரியலை.
___________________________________________________
இலங்கை தமிழர்கள் தொடர் படுகொலை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவலை

அட வாங்க! எவ்ளோ நாள்தான் கவலைப் படுவீங்க. கட்டி புடிச்சி அழவாவது செய்யலாம்.
___________________________________________________
தமிழர்களுக்கு குரல் தந்த ஒபாமாவுக்கு நன்றி: விடுதலைப்புலிகள்

தமிழர்களுக்கு எதிராக ஆயுதம் தந்த நாடுகளுக்கெல்லாம் நன்றின்னு பக்சே சொல்லுவாரு.
___________________________________________________
ஈழத்தமிழருக்காக 19ல் ஆர்ப்பாட்டம்:கி. வீரமணி

அய்யோ எதுக்குங்க? போரைத்தான் நிறுத்தியாச்சே. இப்போ காலைல டிபன், மதியம் ராத்திரி சாப்பாடு, மாத்திக்கட்ட துணி. அதுக்குதான் ஏங்கி நிக்கிறாங்க. போங்கய்யா.
___________________________________________________
வருண்காந்தி மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து

வரிசையா ரத்தாகிறத பார்க்கும்போது பாதுகாப்புச் சட்டத்துக்கெதிரா ஒரு பாது காப்புச் சட்டம் வேணும் போல.
___________________________________________________
பா.ஜ ஆட்சி அமைக்க விடமாட்டோம்: பிரகாஷ்கரத்

அப்படியே வேற கட்சிய அமைக்க விட்டாலும் தொடர விடமாட்டீங்க. இப்படியே தானே உங்க பிழைப்பு.
___________________________________________________
மனித உரிமைக் கண்காணிப்பகம் முள்ளிவாய்காலை செயற்கைக் கோள் மூலம் படம் எடுத்துள்ளது

பத்திரமா வைங்க. நாள பின்ன என்னல்லாம் போச்சுன்னு பார்த்துக்கலாம்.
___________________________________________________
போரை நிறுத்த சர்வதேசம் அழுத்தம் கொடுத்தாலும் அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: ஊடக அமைச்சர்

சர்வதேச நிலைப்பாட்டிலும் மாற்றமில்லை. அவங்க கேட்டுகிட்டே இருப்பாங்க. நீங்க சாவடிச்சிகிட்டே இருப்பீங்க.
___________________________________________________
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஜோர்தானுக்கு விஜயம்

லிபியா பிச்சை அதுக்குள்ள பங்கு போட்டாச்சா? ஜோர்டான் பிச்சைக்கு கிளம்பிட்டாரு.
___________________________________________________
எந்த நேரத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆளும் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும்: ஜனாதிபதி எச்சரிக்கை

மக்கா! சாக்கிரத. ஏதோ உள்குத்து இருக்கும்போல. ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சின்னு ஆக போகுது.
___________________________________________________
இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபையும் கவலை; பொதுமக்கள் அவலநிலை குறித்து ரஷ்ய தூதரும் கவலை

எந்த பய புள்ளையும் காப்பாத்தப் போறதில்லை, விதி விட்ட வழின்னு அங்க சனங்க கவலையே இல்லாம செத்துகிட்டிருக்காங்க.
___________________________________________________
தமிழர்களை கொன்று கண்கள் சிறுநீரகம், ஈரலை திருடுகிறார்கள் : பாதிரியார் பரபரப்பு தகவல்

நகையெல்லாம் திருடியாச்சி. இதமட்டும் விட்டு வைக்கிறாங்களா? ஆகக் கூடி செத்தாலும் இவனுங்க விடுறாங்க இல்லை.
___________________________________________________
சிறீலங்கா விவகாரம் பாதுகாப்புச் சபை உத்தியோகபூர்வ ஒன்றுகூடலை நடத்தியுள்ளது :செய்தி

இனியாவது செயல் படுங்க சாமிகளா. திரும்பவும் கோரிக்கைன்னு இழுபடாம.
___________________________________________________
இராணுவத் தேவைகளுக்காக சிறீலங்காவில் அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை - சீனா

ஆமாம். ஆடு நனயுதேன்னு ஓநாய் அழுத பழமொழி சீனால இல்லையோ?
___________________________________________________
‘வடக்கின் வசந்தம்’ பசில் ராஜபக்ஷ தலைமையில் விசேட குழு நியமனம்

ஆகா! ஆகா! நிவாரணம் பங்கு போட இவரா?
___________________________________________________

Wednesday, May 13, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 50

இவ்வளவும் செய்து இனியும் செய்யவிருக்கின்ற இந்தப் பேனாதான் -உதய சூரியன் -கை -நட்சத்திரம் சின்னங்களில் உங்களின் பொன்னான வாக்குகளை அளித்திட வேண்டுகிறது.

அதுதாங்க வருத்தமே. பேனாவை பிடிச்சிருக்கிற 'கை' தான் சரி இல்லை. மை போட்டு எழுதுங்க. பொய் போட்டு எழுத வேணாம்.
***
திடீர் மின்தடை: கலைஞர் குற்றச்சாட்டு /மின்வெட்டிற்கான உண்மையான காரணம்:ஜெ.கேள்வி

உங்களுக்குத் தான் வெளிச்சம்.
***
எனது வெற்றி பிரகாசமாக உள்ளது: அழகிரி

மதுரைல மின் தடை இல்லையா?
***
மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கலைஞர்

அதில தி.மு.க இருக்குமா?
***
காங்கிரஸ் கூட்டணி அரசு மீண்டும் மலரப்போகிறது: மு.க.ஸ்டாலின்

நீங்க மலருங்கய்யா. ஜனங்க கருகாம இருந்தா சரி

***
ரேஷன் கார்டு அடையாள அட்டை கிடையாது: நரேஷ் குப்தா

எல்லாத்துக்கும் அததான கேக்குறாங்க. இப்போ இப்படி சொன்னா எப்படி?
***
எனக்கே இந்த கதியா?: இயக்குநர் அமீர்

அவதானமா இருக்க வேணாமா?
***
எனவே மத்திய அரசு இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் சட்டம் 51வது பிரிவுக்கு எதிராக நடந்து வருகிறது.

நம்ம இறையாண்மைதானே. அதனால தான் மீறிட்டாங்க.
***
வாக்காளர் பட்டியலில் கமல் இல்லை

தசாவதாரத்தில் எந்த அவதாரத்துக்கு கொடுப்பதுன்னு விட்டுட்டாங்களோ

Tuesday, May 12, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 49

முழு சொத்து விவரத்தை தாக்கல் செய்யாததால் தா.பாண்டியன் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்: திமுக வழக்கு

நீங்கள்ளாம் ஒரு பைசா விடாம, சொந்தத்தில குடிசை கூட இல்லைன்னு புளுகாம முழுழுழுழு விவரம் குடுத்திங்களோ?
__________________________________________
பிரச்சாரத்தில் வாக்குவாதம்:மூதாட்டி மீது விஜயகாந்த் ஆத்திரம்

நறுக்குன்னு நாலு வார்த்த கேட்டாங்களோ? :p
__________________________________________
சந்தர்ப்பவாதகூட்டணிக்கு முற்றுப்புள்ளி: ஜி.கே.வாசன்

ஆமாம். நாளைக்கு வெச்சிடுவாங்க மக்கள்.
__________________________________________
வன்முறையில் ஈடுபட்டால் மறுதேர்தல்: நரேஷ்குப்தா

அப்பவும் ஈடுபட்டால் தினம் தேர்தல்.
__________________________________________
6 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கித் தந்த தலைவர் கலைஞர் என்பதை மறுக்க முடியாது. மு.க.ஸ்டாலின்

ஐ.நா, அமெரிக்காக்கு இருக்கிற உணர்வு கூட இல்லையா பாவிகளா? இப்படியா புளுகுவீங்க. இதில வேற ஓட்டுக்காகவா? தேர்தலுக்காகவான்னு கேட்டு மக்களைக் காக்கனு ஏமாத்துறாரு. மவனே. இதுக்கும் மேல ஜெயிச்சி கியிச்சி புட்டிங்க, தமிழன்னா ஓரமா போற நாயீ கூட ஒன்னுக்கடிச்சுட்டு போவும்.
__________________________________________
மக்களை நேரில் சந்திக்கக்கூடிய ஆற்றல் ஜெ.வுக்கு கிடையாது: மு.க.ஸ்டாலின்

ஹெலிகாப்டர்ல வந்தா இப்படி அர்த்தமாக்கும். கருப்புக் கொடிக்கு பயந்து வந்தவங்களையும் சேர்த்து தான சொல்றீங்கப்பு. நாள பின்ன யூசாகும். நோட் இட் தொங்கு.
__________________________________________
கூட்டணி கட்சி தலைவர்களை நம்பாத ஜெ.:கனிமொழி

அட அட. கருவேப்பிலை கொழுந்து மாதிரி ஒரே ஒரு திருமா. அந்தாளுக்கு நீங்க வெச்ச ஆப்பு போறாதா?
__________________________________________
ஜெயலலிதா மீது தயாநிதிமாறன் கிரிமினல் வழக்கு தாக்கல் செய்தார்

வில்லங்கமா இருக்கே! யார சொல்றாங்க கிரிமினல்னு.
__________________________________________
வன்முறையை தூண்ட சதி: டி.சுதர்சனம்

யார சொல்றாரு இவரு? பண்ணிட்டீங்களா?
__________________________________________
ஆமை பார்த்திருக்கிறேன்;இறையாண்மை பார்க்கவில்லை: சீமான் பேச்சு

அது காங்கிரஸ் கூட்டணி கண்ணுலதான் தெரியும் போல.
__________________________________________
மருத்துவமனை மீது இலங்கை ராணுவம் தாக்குதல்

ஆமாங்க. ரெண்டு பேரு அடிச்சிகிட்டா தான் சண்ட. கை போய் கால் போய் கிடக்கிறது மேல குண்டு போட்டா மனிதாபிமானம். கலைஞருக்கும் காங்கிரசுக்கும் மட்டும் கண்ண கட்டுதே? ஏன்?
__________________________________________
இலங்கை படுகொலைக்கு அமெரிக்கா கண்டனம்

இவரு பிட்ட இவரு போட்டாச்சி. ரை ரை போய்க்கே இருங்கப்பு
__________________________________________
உலகை ஏமாற்றுவதில் இலங்கை அரசு வெற்றி: விடுதலைப்புலிகள்

மக்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் கூட்டணி வெல்லாம இருக்கணும்.
__________________________________________
இலங்கையில் தமிழினப்படுகொலைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: இங்கிலாந்து

அய்யகோ. ஆறு மணி நேரம் உண்ணாவிரதமிருந்து சாதித்த போர் நிறுத்த சாதனையை முறியடிக்க அயல் நாட்டு சதி. போர் போர் னு உலகமே சொன்னாலும் IPL போட்டில அடிச்ச ஃபோர்னு சொல்லுவமப்பு.
__________________________________________

Monday, May 11, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 48

இலங்கை: அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப் படுவார்கள் என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறேன்: சோனியா

அப்பாவி யாரு பாவி யாருன்னு யாரு முடிவு பண்ணுவீங்க?
________________________________________________
போலீசார் தங்கள் கடமையை முறையாக செய்ய வேண்டும்: ஜெயலலிதா

கட்டளைக்கு கீழ்ப்படிதல் கடமையாகாதான்னு கேப்பாங்களே?
________________________________________________
தமிழகத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது

பொய்ப் பிரசாரம் ஓய்கிறது. தேர்தல் முடிவு வர வரைக்கும் ஈழத்த மறந்துடுவாங்க.
________________________________________________
பணநாயகமா ? அல்லது சனநாயகமா ? -ராமதாஸ்

அதான் இது இதான் அது. பதவி இல்லாம அரசியலா? அரசியலில்லாம பதவியா? அது சொல்லுங்க.
________________________________________________
ஐந்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை: தேர்தல் அதிகாரி

அப்போ மாநிலத் தேர்தலுக்கு வெளிய வந்துடலாமா?
________________________________________________
ஒரே நாளில் 2,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை: செய்தி

போரெல்லாம் நின்ன பிறகும் இப்படி செத்தா என்ன பண்ணுவாங்க?
________________________________________________
இங்கிலாந்து செய்தியாளர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றம்

அட இலங்கைக்குள்ள போனதே பெரிய சாதனையாச்சே?
________________________________________________
விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க ஜெ. குரல் கொடுக்கவேண்டும்: சீமான்

பார்த்துங்க. குரல் தானேன்னு டப்பிங் கலைஞர பேச விட போறாங்க.
________________________________________________
புல்மோட்டை மருத்துவமனை வவுனியாவுக்கு மாற்றம்

ஏன்? சிங்களவனுக்கு சரியான அடியோ?
________________________________________________
சீமானும், பாரதிராஜாவும் அ.தி.மு.க. கலைக்குழுவாக மாறிவிட்டார்கள்: வாகை சந்திரசேகர்

நீங்களும் நெப்போலியனும் திமுக கலைக்குழுவா? வேலயப்பாருங்கையா.
________________________________________________
இலங்கை பிரச்சனையில் மற்ற நாடுகள் தலையிடலாம். - ராமதாஸ்

தலையிட்டதால வந்த அனர்த்தம் போதாதா? மனிதாபிமானம் உள்ள நாடுகள்னு சொல்லுங்க.
________________________________________________
முல்லைத்தீவில் 2,000 தமிழர்கள் பலி: ஐ.நா. கண்டனம்

அப்பாடா. கடமை முடிஞ்சது. ஒரு நாள் அங்க யாரும் சாகாமலே கண்டனம் விட்டு மாட்டிக்கப் போறான் சப்ப.
________________________________________________
எங்களிடம் வாக்கு இல்லை;வாக்கரிசிதான் இருக்கிறது:சீமான் ஆவேசப்பேச்சு

ஒரு ரூபாய் அரிசி கடத்திட்டீங்கன்னு வழக்கு போட்டுடுவாங்க. உசாரு.
________________________________________________
தனி ஈழம் அமைக்க ராணுவத்தை அனுப்ப வேண்டாம்: ஜெ.வுக்கு சீமான் வேண்டுகோள்

அதும் சரிதான். கன்பீசன் ஆனா கஷ்டம்.
________________________________________________
நடிகையிடம் சில்மிஷம் வழக்கு: கேரள முன்னாள் அமைச்சர் விடுதலை

நடிகையிடமிருந்தா வழக்கிலிருந்தா?
________________________________________________
பா.ஜ ஆட்சி அமைக்க ஜெ. ஆதரவுஅளிப்பார்:உமாபாரதி

ஜெ பிரதமாராக பா.ஜ. ஆதரவளிக்குமா?
________________________________________________
தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரம்

பதவி இருக்குமா போய்டுமான்னு இருக்கறதால தானே இறுதி கட்டம்னு சொன்னது. வேற இல்லையே?
________________________________________________

Sunday, May 10, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 47

சோனியா வருகை: சென்னையில் விமானங்கள் பறக்க தடை:செய்தி

காக்கா குருவி பறக்கலாமா?
________________________________________________
40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது: திருமா

உங்கள கூடதான் நம்பினோம். நடந்துச்சா?
________________________________________________
தமிழக மக்கள் தருகிற அன்பும், இந்திரா காந்தி, ராஜீவ்காந்திக்கு தந்த அன்பை எனக்கு தருகிறார்கள்.:சோனியா

நீங்கள் பதிலுக்கு கொடுத்ததெல்லாம்?.......
________________________________________________
இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.:சோனியா

ஆமாம் இளம்பெண்கள் சிங்களவனுக்கு, இளைஞர்களெல்லாம் கொட்டடிக்குள், குழந்தைகளெல்லாம் தனியாக, ஒரு வேளை கஞ்சிக்கு கதி இல்லை. இத விட உதவ முடியுமா?
________________________________________________
எங்களுடைய அரசு தமிழகத்தில் பெரிய முதலீடு செய்துள்ளது.:சோனியா

தமிழ்நாடும் இந்தியால தானே இருக்கு. நாங்களும் வரி கட்டுறோம்ல. உங்க சொந்த முதலீடு இல்லை தானே?
________________________________________________
முதல்வராக இருந்தபோது தனி ஈழம் பற்றி பேசாதது ஏன்?: ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி

முதல்வரா இருந்து கொண்டே இன்றைக்கு 1000 கு மேலயும் சாவடிச்சும் போர் நிறுத்தம்னு புளுகுறது ஏன்?
________________________________________________
இலங்கையில் போர் நிறுத்தம்தான் தேவை: சரத்குமார்

ஆமாம். இவர்ட்ட சொன்னாங்க.
________________________________________________
இலங்கை பிரச்சினையில் தமிழக கட்சிகள் குழம்பி போய் உள்ளன: அசோக்சிங்கல்

ஆமாம். போதலைன்னுதான் இந்துப் பிரச்சினைன்னு குழப்ப நீங்க வரமாட்டிங்களான்னு இருக்கோம்.
________________________________________________
இலங்கை போரில் சிக்கித் தவிக்கும் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றுங்கள். உங்களால்தான் முடியும்.:திருமா

அட அட. என்னா கரிசனை.
________________________________________________
இந்தியாவிற்கு சீனா, வங்காள தேசத்தின் அச்சுறுத்தலை தடுக்க காங்கிரசால் தான் முடியும்: திருமா

ஏன் ? வேற கட்சி இருந்தா ராணுவம் வாங்கையான்னு விட்டுடுவாங்களா?
________________________________________________
வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது இது இந்தக் காலம்:கலைஞர்

வெக்கக் கேடு. தருமமா போடுறாங்க? வடக்குல எவ்வளவு பேரு வருமான வரி ஏய்க்கிறான். இங்க எத்தனை பேரு கட்டுறாங்க சொல்லலாமே.
________________________________________________
அவரை பிரதமராக பொறுப்பேற்க வருக வருக என்று ராஷ்டீரிய பவன் அழைத்தபோது, நான் வரமறுக்கிறேன் என்று அந்த பதவியை தியாகம் செய்தவர் நம்முடைய சோனியா அவர்கள்:கலைஞர்

நாங்களும் இந்தியாலதாங்க இருக்கோம். என்ன நடந்துச்சின்னு தெரியும். வெக்கமா இல்லை?
________________________________________________
மக்களுக்கு சேவை செய்கிறேன் என் கட்சியின் மூலமாக என்று தேர்ந்தெடுத்துக்கொண்ட அந்த சொக்கத் தங்கத்தை வரவேற்று மகிழ்கிறேன்.: கலைஞர்

நேராவே சொக்கிட்டாருப்பா.
________________________________________________
தமிழ்ச்செல்வன் மறைவிற்கு இரங்கல் பா எழுதியதற்காக கருணாநிதி முதலமைச்சராக ஒரு நிமிடம் கூட நீடிக்க தகுதியில்லை என்று சொன்னவர்தான் எதிர்கட்சித் தலைவர்: கலைஞர்

அலறி அடிச்சி அடுத்த நாள் பல்டி அடிச்சவர்தான் ஆளும்கட்சித் தலைவர்னு தெரியும் ஐயா.
________________________________________________
தனி ஈழம் பெற்று தருவேன் என்று ஜெ. சொல்லுவது வேடிக்கையாக உள்ளது: கலைஞர்

ஈழம்னாலே உங்களுக்கு வேடிக்கை தானுங்கையா. வேதனை யாருக்கோ தானே.
________________________________________________
ராஜீவ்-ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி ஈழப் பிரச்சினைக்கு தீர்வு: சோனியா

உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? இது மட்டும் பண்ண முடியும்? அதென்னா துருத்திக்கிட்டு இதையே நீட்டுறது. அவங்க விருப்பம்னு ஒண்ணு கிடையாதா?
________________________________________________
யுத்த சூன்ய வலயத்தில் மாவீரர் மற்றும் போராளிக் குடும்பங்களே எஞ்சியுள்ளன: கருணா தெரிவிப்பு

எச்ச நாயீ. அதுக்கென்னா. இத சொல்லி எல்லாத்தையும் போட்டுத் தள்ளவா?
________________________________________________

ஒத்தைப் பாலமும் ஓட்டுப் பொறுக்கிகளும்.

  • இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையுடன் செயல்படுகிறது.
  • இலங்கை போரில் கனரக ஆயதங்கள் பயன்படுத்தப்படவில்லை .
  • தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை சென்ற போது அவர்கள் போர்நிறுத்தம் செய்வதாக உறுதி அளித்தார்கள். அந்த உறுதியை மதித்துநடப்பதாகவும் அவர்கள் சொல்லி உள்ளார்கள்
  • இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தர காங்., தன்னால் முடிந்ததை செய்யும்.
இதெல்லாம் ஓட்டு பொறுக்க வந்த மன்மோகன் சொன்னவை. பிரதமர் இந்திரா வங்கப் பிரச்சனைக்கு பிற நாடுகளுடன் பேசி ராணுவ நடவடிக்கை எடுத்தது மிகப்பெரிய விடயம். அதெல்லாம் மனிதர்கள் செய்வது. ஆனால் இங்கிலாந்திலிருந்து டேஸ் பிரவுன் இது விடயமாக பேச வரும்போது ஒத்தப்பால புரம்போக்குகளுடன் தான் பேச வேண்டுமா? முடிந்ததை செய்வோம் என அளக்கும் பரதேசிகளுக்கு போய் பேசிவிட்டால் கவுரவம் போய் விடுமா? சனங்களின் உயிரை விட ப்ரோடோகாலும், ஓட்டுப் பொறுக்குவதும் தான் முக்கியமா?

இத்தனை அப்பட்ட புழுகுகளுக்கும் வைத்தான் ஆப்பு சிங்களவன்.
நேற்றிரவு (சனி) 1,000 ற்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை: நாசகார பீரங்கி குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம். இதெல்லாம் தெரியாதது போலவே அதே பல்லவி பாடுவார்கள்.

இலங்கையில் இருக்கும் அல்ல இறக்கும் தமிழருக்கு கூட சம உரிமையாக ஒரு சமாதி கூட அமைக்க முடியாது. நாய்களா

ஓட்டு பொறுக்க வந்தால் முடிந்தால் செருப்பால் அடிப்போம். இல்லை என்றால் முகத்தில் அறைந்து சாத்துவோம்.

வெள்ளைச்சாமிகளா. வகை வகையா வெச்சிருப்பீங்களே அதைப் போட்டு மொத்தத் தமிழினத்தையும் துடைத்து விடுங்கள். புண்ணியமாப் போகும். அப்புறம் நிதானமா என்ன எது என்று ஒத்தைப்பாலம் சொல்லும் கதை கேட்டு மூடிவிட்டு போங்கள்.

Saturday, May 9, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 46

இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்: ராகுல்

எடுத்த நடவடிக்கைல அழிஞ்சது போறாதா. ஒதுங்கி நின்னா எப்பவோ விடிஞ்சிருக்கும். பாவிகளா.
______________________________________________________
தமிழகத்தில் திமுக-காங் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும்: ராகுல் காந்தி

அப்புறம் ஏன் அலைபாயணும். போய் படுங்க சாமிகளா. எரிச்சலாவது மிஞ்சும்.
______________________________________________________
காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் வேறுபாடில்லை: ராஜா

தாவறதுக்கு வசதின்னா?
______________________________________________________
ஐக்கிய சமஷ்டி முறைமை கட்டமைப்பின் ஊடாகவே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியும்: மன்மோகன் சிங்

இத்தனை அழிவிற்குப் பின்னும் இது சாத்தியமான்னே யோசிக்க மாட்டிங்களா? நீங்க என்ன அவன் குரலா ?
______________________________________________________
தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு:சோனியா தரைவழி பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு

இப்போவாவது உறைக்குமா?
______________________________________________________
ஈழம் : மனித உரிமை கவுன்சிலுக்கு ஐ.நா. உத்தரவு

சாட்சி சொல்லவாவது ஆளுங்க இருக்கிறதுக்குள்ள ஆரம்பிங்க வெள்ளைச் சாமிகளா.
______________________________________________________
சோனியா- கலைஞர் ஒரே மேடையில் பிரச்சாரம்

அவங்க கட்சி ஒட்டு கூட விழாம பூடும்.
______________________________________________________
நான் அரசியலுக்கு வரும்போது பிறக்காத ராமதாஸ்-----: அமைச்சர் அன்பழகன் கடும் தாக்கு

ஸ்டாலின், அழகிரி எல்லாம் பிறந்துட்டாங்களா?
______________________________________________________
ஈழத்தமிழர்களை கொன்றுகுவிப்பதை துன்புறுத்தல் இல்லை என்கிறாரா மன்மோகன்சிங்: ஜெ.கேள்வி

அப்படித்தான் அர்த்தம்.
______________________________________________________
ஆயுள்ரேகை இல்லாத ’கை’:ஆர்.சுந்தர்ராஜன் கமெண்ட்

கை இவங்களது தான். ஆயுள்தான் யாருக்கோ இல்லாம போகுது. அல்லக்கை போல.
______________________________________________________
20கிலோ மீட்டர்- 4கிலோமீட்டர் ஆனது:பாதுகாப்பு வளையத்தை குறுக்கிய ராணுவம்!

பாதுகாப்பே இல்லைங்கும்போது 20 ஆனா என்ன 2 ஆனா என்ன.
______________________________________________________
தமிழ் ஈழம் அமைப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது: விசுவ இந்து பரிசத்லைவர்

யார் விவகாரத்துக்கு யாரு உடன்படுறது. நீங்கள்ளாம் ஒதுங்கி நின்னா அது பாட்டுக்கு நடக்கும். உதவ வக்கில்லன்னா இப்படி பேச மட்டும் என்ன உரிமை? புறம்போக்கு பரதேசிங்களா.
______________________________________________________
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத்தருவோம் : பிரதமர்

உன் பாட்டன் பூட்டன்லாம் வாங்கி குடுத்துட்டாங்க. இவரு வாங்கி தரப் போறாரு. வாங்கற புத்தி போகுதா?
______________________________________________________
கலைஞர் - பிரதமர் சந்திப்பு:ஈழம் குறித்த பேச்சு!

ஆமாம். என்னான்னு மட்டும் உண்மை வராது.
______________________________________________________
ஈழம்-சோனியா கருத்து தெரிவிக்கவேண்டும்:பிஜேபி

அதில்லாமதான் எல்லாம் நிக்குது. போங்கையா.
______________________________________________________
சிங்கள ராணுவத்தளபதிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்: அமெரிக்க அமைப்பு

முதல்ல அண்ணந்தம்பிகளை அமுக்க பாருங்கையா. சந்தேகம்னா ஃபெயினக்க கேளுங்க. என்ன பண்ணலாம்னு.
______________________________________________________

மன்னித்து விடு தேவதையே - 2

எட்டு வயதிருக்குமா உனக்கு?
உன் கண்ணில்
எண்பது வயதின்
வலிகள் உணர்கிறேன்!

குழந்தையின் வலிகளல்ல இவை
பசி மீறி தாகம் மீறி
மனம் காட்டும்
கண்ணாடியாய் முகம்!

வேதனை மீறி
விரக்தியும் தாண்டிய‌
புருவச் சுருக்கில்
மானுடம் நெறிகிறது!

என்னம்மா கேட்கிறது
உன் பாவம்?
என்னைக் குழந்தையாய்
இருக்க விட மாட்டீர்களா என்றா?

உணவு கொடுக்கலாம்
உடை கொடுக்கலாம்
இழந்த எல்லாமும் தரக்கூடும்
குழந்தைத் தனம் எப்படித் தருவோம்?

வலி தேக்கி வலி தேக்கி
உனக்கும் மானுடம்
மரத்துப் போனால்
வையம் தாங்காதம்மா.

வெறுக்காதே எங்களை
நாங்களும் கைதிகள்
நாங்களே அமைத்த‌
இறையாண்மைச் சிறை!

தேவைக்கு மட்டும்
திறக்குமிச்சிறை
அழிக்க இருக்கும் தாக்கோல்
ஆக்க மட்டும் காணாமல் போகும்.

உன் குடில் பறித்து
நிழல் பறித்து
சுற்றம் பறித்த‌
சுதந்திரப் பேய்கள் நாங்கள்!

எல்லாமிருந்த உந்தன்
எல்லாமும் பறித்தபின்
ஏதிலி என உனை அழைக்கும்
எத்தர்கள் நாங்கள்!

வலிகள் உன்
வைராக்கியமாகட்டும்
கஷ்டங்கள் உன் மனதில்
கருணை விதைக்கட்டும்.

அழிவுகள் உங்களை
அன்னை தெரசாவாக்கட்டும்
ஆம்! ஓர் நாள் நாங்கள்
உன் அன்பு வேண்டி நிற்போம்.

அது வரை எங்களை
மன்னித்து விடு தேவதையே!

Friday, May 8, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 45

காக்கா பறக்கல. போரை நிறுத்தி மக்களெல்லாம் ஓரளவுக்கு அமைதியா இருக்காங்கன்னு சந்தோஷ படுறவங்க பார்க்கட்டும். அத்தனையும் குண்டு.
_______________________________________________
சோனியா-கலைஞர் 10ஆம் தேதி பிரச்சாரம்:செய்தி

ஹி ஹி..அன்னைக்கே தெரியும். செட்டப்புன்னு.
________________________________________________
சென்னை வரும் பிரதமர் பிரச்சாரத்தில் பங்கேற்கமாட்டார்: காங்.

நெல்லு குத்தைல சொல்லுவாங்கள்ள. எகிரி எகிரி குத்தினாலும் ஒரே கூலிதான். எகிறாம குத்தினாலும் ஒரே கூலிதான்னு. பிரசாரம் பண்ணா மட்டும் என்னா நடந்துடும்?
________________________________________________
அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை: தங்கபாலு

இப்போ யாரு கூப்டாங்க. கெத்து வேறயா. அந்தம்மா கூப்பிட்டப்பவே போய் இருந்தா என்னல்லாமோ ஆயிருக்கும்.
________________________________________________
3வது அணி ஒரு மாயை: தங்கபாலு

முதல் அணி மப்பா?
________________________________________________
திமுக-காங் 40 இடங்களிலும்வெல்லும்:ஜெயந்திநடராஜன்

குடுத்த காசுக்கு மேலயே கூவறது இதான்!
________________________________________________
40கோடி பணம்-3கோடி மதுபானம்:அதிகாரிகள் குழப்பம்

தெளிஞ்சா சரி ஆயிடும்.
________________________________________________
இலங்கையில் நடப்பது தமிழர்கள் பிரச்சினை அல்ல: இந்துக்கள் பிரச்சனை: விசுவ இந்து பரிசத்

இருக்கிற குழப்பம் போதாது. இவனுங்க வேற. சாமிகளா உங்க வியாவாரம் அங்க பலிக்காது. அங்க தமிழ் ஜாதி ஒண்ணுதான்.
________________________________________________
ஈழத்தமிழர்களுக்காக ஜெ. என்ன தியாகம் செய்தார்: அன்பழகன்

கெடாசினதெல்லாம் தியாகம்னு சொல்லிட்டா சரிங்களா? என்னாமோ 5 வருஷம் ஒப்பந்தம். பாதில போனதில இவ்வளவு நட்டம்னு சொல்றாமாதிரியே சொல்றாங்கப்பு!
________________________________________________
போரை நிறுத்துவது பலனளிக்காது: ராஜபக்சே

ஆமாம் பின்ன! பலன் தான் என்னான்னு தெரிய மாட்டங்குது.
________________________________________________
மாறாக இந்த ஐந்தாண்டு காலத்தில் தான் சிங்கள ராணுவத்தின் 60 சதவீத அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

அப்பவே கூவக்கூடாதா? எவ்வளவு நாசம் பண்ணிட்டிங்கையா எல்லாருமா?
________________________________________________
புலிகளின் மண் அணைகளை தடுக்க எந்தத் தடையும் இல்லை: கோத்தபாய ராஜபக்சே

உங்களுக்கு எது தான் தடை? என்னமோ மண் மேடுன்னு பார்த்து அடிக்கிறா மாதிரில்ல அளப்பு
________________________________________________
தனி ஈழம் வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை அல்ல:இ.கம்யூ.

உங்க கோரிக்கைய யாரு கேட்டா? கோர்ரவங்கள ஆதரிக்கிறீங்களா இல்ல குறுக்குசால் ஓட்டப் போறீங்களா?
________________________________________________
சிங்கள ராணுவத்தை தமிழர்கள் நம்ப வேண்டும்; ராஜபக்சே தம்பி சொல்கிறார்

அடிங்கோய்யாலே . நம்பினதெல்லாம் அம்போன்னு நிக்குது கொழுப்ப பாரு.
________________________________________________
பிரபாகரனை சுற்றிலும் பாதுகாப்பாக 1,000 தற்கொலை படை வீரர்கள்; இலங்கை ராணுவம் தகவல்

அன்னைக்கு தானடா 400 சொன்னிங்க.
________________________________________________