Sunday, November 15, 2009

மனுஷி!

கிராமமுமின்றி நகரமுமின்றி டவுன் என்றழைக்கத்தகுந்த ஊர் அது. பிரதானமாக ஒரு கோவில். ஓரளவு கூட்டம் வரும். அந்த ஊரின் பெரும்பாலான திருமணங்கள் அங்கு நடைபெறும். நுழைவாயில் ஓரம் இரு புறமும் பிச்சைக்காரகள். எப்பொழுதும் முதலில் அமர்ந்திருக்கும் பூவாயிக் கிழவி.

இனி சுருக்கம் விழ இடமில்லை எனும்படி கச்சலான தேகம். வெள்ளிக் கம்பி முடியை திருத்தமாகக் கட்டியிருப்பாள். வெடுக் வெடுகென ஆடிய தலையும், சற்றே கூன் விழுந்த உடலும், பூவிழுந்த கண்ணும் பாவமாய் இருக்கும். தருமம் பண்ணுங்க என்று கேட்க மாட்டாள். எதிரில் ஒரு நசுங்கிய அலுமினிய தட்டு. அதில் சில்லறையும் கொஞ்சம் இருக்கும்.

கோவிலின் காவலாளி சரவணன். ஆட்கள் வரும்போது, ஓரமா உக்காரு, வழியடைக்காத என்று குரல் விடுவதும், வரிசையில போங்க என்று அதட்டுவதுமாயிருப்பான்.

அன்றைக்கு ஒரு கலியாணம். பூவாயிக் கிழவி மேள சத்தம் கேட்டு, ஏம்பா சரவணா! யாரு கண்ணாலம் இன்னைக்கு என்றாள்.பொட்டிக் கட மாணிக்கம் பொண்ணுக்கு ஆத்தா. அவன் அக்கா பையனுக்கு குடுக்குறான் என்றான். யாருடா செல்வி பொண்ணா? எனக்கு சொல்லலப்பா அவன். நல்ல பொண்ணுப்பா அது. கோவிலுக்கு வரசொல்ல எல்லாம், என் கிட்ட பேசாம, நாலணா குடுக்காம போவாது என்றாள்.

ம்கும். துட்டு குடுக்கிற பார்ட்டி மட்டும் கவனமிருக்கும் உனக்கு. உங்கூட பேச நேரமில்ல நீ கெட என்றபடி, ஓரமா உக்காரு, வழிய அடைக்காத, வரிசையா போங்க என்று தன் வேலையைத் தொடர்ந்தான். திடீரென மேள சப்தம் நிற்க கச முசவென்று ஆரம்பித்து அழுகையும், வசவுமாய் கேட்கத் தொடங்கியது.

இன்னாடி நடக்குது. சண்டையா என்றபடி, ஏப்பா சரவணா என்னா பாருப்பா என்றாள் கிழவி. பதிலில்லாமல் போகவே பேசாமலிருந்தாள். சிறிது நேரத்தில் திரும்பவும் ஓரமா உட்காரு என்று குரல் வர, சரவணா, என்னாவாம் என்றாள். போ கிழவி, மாணிக்கம் கெடந்து அழுவுறான். கடன உடன வாங்கி கலியாணம் பண்றான். தங்கம் விலை எங்கயோ போயிடிச்சி. 2 சவரன் குறையுதாம். அவன் மாமன் கலியாணத்த நிறுத்திட்டு காசு வந்தப்புறம் வெய்யின்னு பேசுறான் புறம்போக்கு.

யாரு சொல்றதும் கேக்க மாட்டங்குறான். மாமா அக்காவ குடுத்துருக்கேன். பொண்ணையும் உன் வீட்டுக்குதான் அனுப்புறேன். கொஞ்சம் பொறுத்துக்க மாமா. ஊருக்குள்ள மானம் போய்டும்னு அழுறான். அவன் கேக்கமாட்டன்னு அடம் புடிக்கிறான். மனுசனா இவன்லாம் என்றபடி ஓரம், வரிசை என தன் வேலையைப் பார்த்தான்.

தட்டுத் தடுமாறி எழுந்தாள் கிழவி. காலடியில் கிடக்கும் அழுக்குப் பையைத் தூக்கிக் கொண்டாள். சரவணா என்ன இட்டுனு போ அவனாண்ட என்றாள். தோ! கம்னு கெட. ஊரு பெருசுங்க சொன்னாலே கேக்க மாட்றான்! நீ போயி என்னா பண்ணப் போற? என்றான். அப்பிடி சொல்லாதப்பா, கண்ணு தெரிலன்னு தானே கேக்குறேன், இட்டுனு போப்பா என்றாள்.

மணியக்கார் பார்த்தா என் வேலைக்கு ஓலை கிழவி. கிட்ட கொண்டு போய் விட்டுட்டு வந்துடுவேன். அங்க போய் பிச்ச கேட்டு எனக்கு வேட்டு வெச்சிடாத என்றபடி பம்மி பம்மி கொண்டு போய் விட்டான். என்னாப்பாஅங்க கூச்சலு, எங்க மாணிக்கம் என்றபடி வந்த கிழவியை ஏளனமாக பார்த்தது கும்பல்.

மாணிக்கம் பேச முடியாமல் விம்மி வெடித்து அழுதான். மாணிக்கம் அழுவாத. எங்க உம்மாமன்? கூப்பிடு என்றது கிழவி. ஏ கிழவி. பிச்சைக்காரி சொல்லி கேக்குற அளவுக்கு இங்க யாருமில்ல. உன் லிமிட்ல ஒழுங்கா போயிடு. இது எங்கூட்டு பிரச்சினை என்றான் மாமன்காரன்.

கோவப்படாதப்பா. மாணிக்கம் ஏமாத்தமாட்டான். சிறுசுங்களைப் பிரிக்காத என்றபடி இருக்க, கும்பலில் ஒரு இளவட்டம், ஏன் நீ குடுப்பியா? அவருக்கா கேக்குறாரு. நாளைக்கு நாலு இடம் போக வர ஒரு மருவாதி வேணாம். ஒரு செயினுக்கு கதியில்லைன்னா கலியாணம் பண்ண ஏமாளிங்களா நாங்க என்றான்.

எங்கிருந்துதான் வ‌ந்ததோ கிழவிக்கு ஆவேச‌ம். நிறுத்துடா நாயே. ப‌த்து ச‌வ‌ர‌ன் போட்டுனு வ‌ரேன். என்ன‌ க‌ட்டிக்கிறியாடா. பேமானி. வ‌ய‌த்துக்கு இல்லாம‌ இருட்டில‌ நின்னு உட‌ம்ப‌ விக்கிற‌வ‌ளுக்கு பேரு விப‌ச்சாரி.அவ பண்றது விபச்சாரம்.  பட்ட பகல்ல ஊரைக்கூட்டி உன் புள்ள‌ சுக‌த்துக்கு ஒருத்திய‌ க‌ட்ற‌துக்கு அவ‌ ந‌கை கொண்டு வ‌ர‌து போற‌லைன்னு க‌லியாண‌த்த‌ நிறுத்துன்றியே, நீ ப‌ண்ற‌துக்கு பேரு என்ன‌டா?

இந்தாடா இதைப் பிடி என்று ந‌சுங்கிய‌ த‌ட்டை நீட்டினாள். மிர‌ண்டு போய் வாங்கிய‌வ‌னின் த‌ட்டில் அழுக்குப் பையிலிருந்து நூறும் ஐந்நூறுமாய் நோட்டுக்க‌ளைக் கொட்டினாள். எடுத்துக்கடா! எதுக்குன்னே தெரியாம சேர்த்து வச்சது. பிச்சை எடுத்த‌ காசுன்னு பொன்னு குடுக்காம‌ போயிட‌ மாட்டான். எவ்வ‌ள‌வு வ‌ருதோ வாங்கிக்க‌. மிச்ச‌ம் மீதி இருந்தா என் செல்விக்கு மொய்யின்னு எழுதிக்க‌.

முகூர்த்த‌ம் தாண்ட‌ முன்ன‌ க‌லியாண‌த்த‌ ந‌ட‌க்க‌ விடு. மாணிக்க‌ம்! என்ன‌ வாச‌ல் வ‌ரைக்கும் கொண்டு போய் விடுப்பா. ப‌ஞ்சாய‌த்து ப‌ண்ணிகினு இருந்தா ம‌த்யான‌ம் பூவாவுக்கு நீ என்னா க‌லியாண‌ சாப்பாடா குடுக்க‌ போற‌ என்ற‌வ‌ளின் காலைக் க‌ட்டிக்கொண்டு க‌த‌றினான் மாணிக்க‌ம்.

68 comments:

கலகலப்ரியா said...

//பேமானி. வ‌ய‌த்துக்கு இல்லாம‌ இருட்டில‌ நின்னு உட‌ம்ப‌ விக்கிற‌வ‌ளுக்கு பேரு விப‌ச்சாரி.அவ பண்றது விபச்சாரம். பட்ட பகல்ல ஊரைக்கூட்டி உன் புள்ள‌ சுக‌த்துக்கு ஒருத்திய‌ க‌ட்ற‌துக்கு அவ‌ ந‌கை கொண்டு வ‌ர‌து போற‌லைன்னு க‌லியாண‌த்த‌ நிறுத்துன்றியே, நீ ப‌ண்ற‌துக்கு பேரு என்ன‌டா?//

அருமை சார்..!

கலகலப்ரியா said...

//நீ ப‌ண்ற‌துக்கு பேரு என்ன‌டா?///

ம்ம்... இதுக்கு பதில் அருமைன்னு சொல்லல... =)

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! அருமையான கதையண்ணே! நல்லாயிருக்கு.

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! தமிழ் மணத்தில ஓட்டு விழமாட்டுதே!

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! தமிழ் மணத்தில ஓட்டு விழமாட்டுதே!/

சில நேரம் அப்படி ஆகும். அப்புறம் போடலாம். நன்றி நிஜாம்.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/அருமை சார்..!/

நன்றியம்மா.

/ம்ம்... இதுக்கு பதில் அருமைன்னு சொல்லல... =)/

=)) கலகலா

ஈரோடு கதிர் said...

//இப்படிக்கு நிஜாம்..,
அண்ணே! தமிழ் மணத்தில ஓட்டு விழமாட்டுதே!
//

அண்ணாச்சி ஓட்டுக்கு பணம் கொடுக்கலையோ.. பாத்துக் கொடுங்க பாலாண்ணே

என்னோட ஓட்டு ஒழுங்கா விழுந்திடுச்சு

cheena (சீனா) said...

அன்பின் பாலா

இயல்பான கதை - இயல்பான நடை - நல்ல கருத்து - நல்வாழ்த்துகள் பாலா

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/அண்ணாச்சி ஓட்டுக்கு பணம் கொடுக்கலையோ.. பாத்துக் கொடுங்க பாலாண்ணே

என்னோட ஓட்டு ஒழுங்கா விழுந்திடுச்சு/

குக்கீ சுத்தம் பண்ணா சில நேரம் வராது. அப்புறம் வரும்=))

வானம்பாடிகள் said...

cheena (சீனா) said...

/அன்பின் பாலா

இயல்பான கதை - இயல்பான நடை - நல்ல கருத்து - நல்வாழ்த்துகள் பாலா/

நன்றிங்க

Barari said...

REALY SUPER. CONGRATULATION.

வானம்பாடிகள் said...

Barari said...

/REALY SUPER. CONGRATULATION./

Thank you sir.

ஈரோடு கதிர் said...

//நிறுத்துடா நாயே. ப‌த்து ச‌வ‌ர‌ன் போட்டுனு வ‌ரேன். என்ன‌ க‌ட்டிக்கிறியாடா.//

அடடா... சாதாரண வரியா இது?

//ம‌த்யான‌ம் பூவாவுக்கு நீ என்னா க‌லியாண‌ சாப்பாடா குடுக்க‌ போற‌//

எதார்த்தம்

மனதை பிசைந்தது கிழவியின் பேச்சு

அருமையான கதை...

T.V.Radhakrishnan said...

அருமையான கதை!

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...
/அடடா... சாதாரண வரியா இது?/

/எதார்த்தம்

மனதை பிசைந்தது கிழவியின் பேச்சு

அருமையான கதை.../

:D, நன்றி கதிர்.

வானம்பாடிகள் said...

T.V.Radhakrishnan said...

/அருமையான கதை!/

நன்றிங்க அய்யா.

S.A. நவாஸுதீன் said...

//நிறுத்துடா நாயே. ப‌த்து ச‌வ‌ர‌ன் போட்டுனு வ‌ரேன். என்ன‌ க‌ட்டிக்கிறியாடா. பேமானி.//

//உன் புள்ள‌ சுக‌த்துக்கு ஒருத்திய‌ க‌ட்ற‌துக்கு அவ‌ ந‌கை கொண்டு வ‌ர‌து போற‌லைன்னு க‌லியாண‌த்த‌ நிறுத்துன்றியே, நீ ப‌ண்ற‌துக்கு பேரு என்ன‌டா?//

செமையா இருக்கு சார்.

அன்புடன் மலிக்கா said...

கதை கேட்டேன்,, நல்லாயிருக்கு...

இராகவன் நைஜிரியா said...

அண்ணே பின்னி பெடல் எடுக்கிறீங்க அண்ணே...

நான் உங்களை அஷ்டாவதானின்னு சொன்னது தப்பேயில்லே என்பதை மறுபடியும் ஒரு முறை நிருபீச்சீட்டீங்க..

கதை அருமை
சொல்லிய முறை அருமை
இடங்களை பற்றி சொல்லியது அருமை
வசனங்கள் அதை விட அருமை.

உங்கள் தம்பி என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமை.

இராகவன் நைஜிரியா said...

எனக்கு தமிழ் மணம், தமிழிஷில் சரியா ஓட்டு போட முடியுதே..

இராகவன் நைஜிரியா said...

// கிராமமுமின்றி நகரமுமின்றி டவுன் என்றழைக்கத்தகுந்த ஊர் அது. //

அப்ப இரண்டாங்கெட்டான் ஊர் அப்படின்னு சொல்லலாமாண்ணே?

இராகவன் நைஜிரியா said...

// பிரதானமாக ஒரு கோவில். ஓரளவு கூட்டம் வரும். //

கோயில் வியாபாரம் நல்லா நடக்கின்ற ஊர் என்றுச் சொல்லுங்க..

இராகவன் நைஜிரியா said...

// தங்கம் விலை எங்கயோ போயிடிச்சி. //

தங்கம் விலை பல குடும்பத் தலைவர்களின் வயிறு இப்பவே கலங்க ஆரம்பிச்சுடுச்சுங்க..

இராகவன் நைஜிரியா said...

// நிறுத்துடா நாயே. ப‌த்து ச‌வ‌ர‌ன் போட்டுனு வ‌ரேன். என்ன‌ க‌ட்டிக்கிறியாடா. பேமானி. வ‌ய‌த்துக்கு இல்லாம‌ இருட்டில‌ நின்னு உட‌ம்ப‌ விக்கிற‌வ‌ளுக்கு பேரு விப‌ச்சாரி.அவ பண்றது விபச்சாரம். பட்ட பகல்ல ஊரைக்கூட்டி உன் புள்ள‌ சுக‌த்துக்கு ஒருத்திய‌ க‌ட்ற‌துக்கு அவ‌ ந‌கை கொண்டு வ‌ர‌து போற‌லைன்னு க‌லியாண‌த்த‌ நிறுத்துன்றியே, நீ ப‌ண்ற‌துக்கு பேரு என்ன‌டா? //

இது கேள்வி... சரியா நெத்தியடி கேள்வி கேட்டீங்க

இராகவன் நைஜிரியா said...

ஹை மீ த 25

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஹை மீ த 25/

வாங்கண்ணே.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/இது கேள்வி... சரியா நெத்தியடி கேள்வி கேட்டீங்க/

நானில்ல=))பூவாயி

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/தங்கம் விலை பல குடும்பத் தலைவர்களின் வயிறு இப்பவே கலங்க ஆரம்பிச்சுடுச்சுங்க../

தோஹால இன்னும் கொஞ்சம் வாங்கியிருக்கலாம்லண்ணே=))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/கோயில் வியாபாரம் நல்லா நடக்கின்ற ஊர் என்றுச் சொல்லுங்க../

ஆளு வந்து போக இருந்தா பூவாயிக்கு வருமானம்ல. அதான்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அப்ப இரண்டாங்கெட்டான் ஊர் அப்படின்னு சொல்லலாமாண்ணே?/

ரெண்டும் கெடாத ஊர்னு சொல்லலாம்ணே.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...
/
உங்கள் தம்பி என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமை./

பாராட்டுக்கு நன்றிண்ணே. ஆனா பெருமை எனக்குதான்.

வானம்பாடிகள் said...

அன்புடன் மலிக்கா said...

/கதை கேட்டேன்,, நல்லாயிருக்கு.../

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

S.A. நவாஸுதீன் said...

/செமையா இருக்கு சார்./

நன்றிங்க.

பழமைபேசி said...

//கிராமமுமின்றி நகரமுமின்றி டவுன் என்றழைக்கத்தகுந்த ஊர் அது.//

????

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

/ ???? /

?=))

துபாய் ராஜா said...

அருமையான கதை. அழகான கருத்து.

இயல்பான எழுத்துநடையில் காட்சிகள் அனைத்தும் கண்முன்.

வாழ்த்துக்கள் சார்.

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா said...

/அருமையான கதை. அழகான கருத்து.

இயல்பான எழுத்துநடையில் காட்சிகள் அனைத்தும் கண்முன்.

வாழ்த்துக்கள் சார்./

:). நன்றி ராஜா.

பிரசன்ன குமார் said...

//நாளைக்கு நாலு இடம் போக வர ஒரு மருவாதி வேணாம்//
\\எங்கிருந்துதான் வ‌ந்ததோ கிழவிக்கு ஆவேச‌ம்.\\

எங்களுக்கும் தான்.. எளிமையில் அருமை :)

பிரியமுடன்...வசந்த் said...

ம்ம்...

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/ ம்ம்.../

என்னா அவ்வளவு சிக்கனம்?

வானம்பாடிகள் said...

பிரசன்ன குமார் said...

/எங்களுக்கும் தான்.. எளிமையில் அருமை :)/

முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பிரசன்ன குமார்.

Mrs.Menagasathia said...

மிகவும் அருமை!!

வானம்பாடிகள் said...

Mrs.Menagasathia said...

/மிகவும் அருமை!!/

முதல் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.

பா.ராஜாராம் said...

செருப்பால் அடித்தது போல் ஒரு கதை.கண்கள் கலங்க வைத்த கதை சார்.

வானம்பாடிகள் said...

பா.ராஜாராம் said...

/செருப்பால் அடித்தது போல் ஒரு கதை.கண்கள் கலங்க வைத்த கதை சார்./

பா.ரா.ட்டுக்கு நன்றி:)

velji said...

/ ப‌த்து ச‌வ‌ர‌ன் போட்டுனு வ‌ரேன். என்ன‌ க‌ட்டிக்கிறியாடா. பேமானி./
அடி!

அருமையான கதை.

வானம்பாடிகள் said...

velji said...

/ அடி!

அருமையான கதை./

முதல் வரவுக்கும் ஊக்கத்துக்கும் நன்றிங்க வேல்ஜி.

முனைவர்.இரா.குணசீலன் said...

எங்கிருந்துதான் வ‌ந்ததோ கிழவிக்கு ஆவேச‌ம். நிறுத்துடா நாயே. ப‌த்து ச‌வ‌ர‌ன் போட்டுனு வ‌ரேன். என்ன‌ க‌ட்டிக்கிறியாடா. பேமானி. வ‌ய‌த்துக்கு இல்லாம‌ இருட்டில‌ நின்னு உட‌ம்ப‌ விக்கிற‌வ‌ளுக்கு பேரு விப‌ச்சாரி.அவ பண்றது விபச்சாரம். பட்ட பகல்ல ஊரைக்கூட்டி உன் புள்ள‌ சுக‌த்துக்கு ஒருத்திய‌ க‌ட்ற‌துக்கு அவ‌ ந‌கை கொண்டு வ‌ர‌து போற‌லைன்னு க‌லியாண‌த்த‌ நிறுத்துன்றியே, நீ ப‌ண்ற‌துக்கு பேரு என்ன‌டா?சிந்திக்க வைக்கும் வினா..
சமூக எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் படைப்பு..
அருமை.

முனைவர்.இரா.குணசீலன் said...

முகூர்த்த‌ம் தாண்ட‌ முன்ன‌ க‌லியாண‌த்த‌ ந‌ட‌க்க‌ விடு. மாணிக்க‌ம்! என்ன‌ வாச‌ல் வ‌ரைக்கும் கொண்டு போய் விடுப்பா. ப‌ஞ்சாய‌த்து ப‌ண்ணிகினு இருந்தா ம‌த்யான‌ம் பூவாவுக்கு நீ என்னா க‌லியாண‌ சாப்பாடா குடுக்க‌ போற‌?

நறுக்குன்னு இருக்குதய்யா..

Suresh Kumar said...

அருமை அய்யா

வானம்பாடிகள் said...

முனைவர்.இரா.குணசீலன் said...

/சிந்திக்க வைக்கும் வினா..
சமூக எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் படைப்பு..அருமை./

/நறுக்குன்னு இருக்குதய்யா../

உங்கள் ஊக்கத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா

வானம்பாடிகள் said...

Suresh Kumar said...

/அருமை அய்யா/

நன்றி சுரேஷ் குமார்.:)

புலவன் புலிகேசி said...

நெகிழ வைத்த கதை ஐயா..மெய் சிலிர்த்தது...இது போன்றவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் விபசாரத்திற்கு காசு கேட்பவர்கள்..

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி
/நெகிழ வைத்த கதை ஐயா..மெய் சிலிர்த்தது...இது போன்றவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் விபசாரத்திற்கு காசு கேட்பவர்கள்../

நன்றிங்க. ஆமாமுங்க

ஊடகன் said...

சமூகத்திற்கு தேவையான கதை..............

ராஜ நடராஜன் said...

அமைதியாக உட்கார்ந்து படிக்க வேண்டிய இடுகைகள் பல இருப்பதால் அனைத்துக்கும் வந்தேன் சொல்ல இயலுவதில்லை.நறுக் மட்டும் அவ்வப்போது மனதில் பட்டதை சொல்லி விட்டுப் போகிறேன்.

மீண்டும் வருகிறேன்.

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

/அமைதியாக உட்கார்ந்து படிக்க வேண்டிய இடுகைகள் பல இருப்பதால் அனைத்துக்கும் வந்தேன் சொல்ல இயலுவதில்லை.நறுக் மட்டும் அவ்வப்போது மனதில் பட்டதை சொல்லி விட்டுப் போகிறேன்.

மீண்டும் வருகிறேன்./

நன்றி நடராஜன்.

வானம்பாடிகள் said...

ஊடகன் said...

/சமூகத்திற்கு தேவையான கதை............../

நன்றி ஊடகன்.

வெண்ணிற இரவுகள்....! said...

வானம்படிகளே அருமை கதை //இனி சுருக்கம் விழ இடமில்லை எனும்படி கச்சலான தேகம். வெள்ளிக் கம்பி முடியை திருத்தமாகக் கட்டியிருப்பாள். வெடுக் வெடுகென ஆடிய தலையும், சற்றே கூன் விழுந்த உடலும், பூவிழுந்த கண்ணும் பாவமாய் இருக்கும். தருமம் பண்ணுங்க என்று கேட்க மாட்டாள். எதிரில் ஒரு நசுங்கிய அலுமினிய தட்டு. அதில் சில்லறையும் கொஞ்சம் இருக்கும்//
நீங்கள் நாவல் எழுதலாம் தல ..............

நான் பார்ப்பதற்கு முன்னால் என்னை விகடனில் பார்த்து சொன்னதுக்கு நன்றி.
உங்கள் ஆசிர்வாதம் தலைவரே

வானம்பாடிகள் said...

வெண்ணிற இரவுகள்....! said...

/நீங்கள் நாவல் எழுதலாம் தல ..............

யாரு படிக்கிறது=))

/நான் பார்ப்பதற்கு முன்னால் என்னை விகடனில் பார்த்து சொன்னதுக்கு நன்றி.
உங்கள் ஆசிர்வாதம் தலைவரே/

ம்ம்ம். நல்லா எழுதுறீங்க. நிறைய எழுதுங்க.

தமிழ் நாடன் said...

நல்லாருக்கண்ணே கதை! நல்லா நறுக்குன்னு கேட்டது பாட்டி! இவனுங்களுக்கு உறைக்கும் நினைக்கறீங்க!

வானம்பாடிகள் said...

தமிழ் நாடன் said...

/நல்லாருக்கண்ணே கதை! நல்லா நறுக்குன்னு கேட்டது பாட்டி! இவனுங்களுக்கு உறைக்கும் நினைக்கறீங்க!/

நன்றிங்க.

ராமலக்ஷ்மி said...

கதை அருமை. வாழ்த்துக்கள்.

வானம்பாடிகள் said...

ராமலக்ஷ்மி said...

/கதை அருமை. வாழ்த்துக்கள்./

நன்றிங்க.

பிரேம்குமார் அசோகன் said...

எந்த மிகைப்படுத்தலும் இல்லாத, யதார்த்த நிகழ்வையே திருப்புமுனையாக்கி கதையை முடிக்கும் உத்தி..வாழ்த்துக்கள்!!

சில ஆண்டுகளுக்கு முன் தினமணி கதிர் இதழில் படுதலம் சுகுமாரன் எழுதிய 'குருவம்மா'(தலைப்பு சரியாக நினைவில்லை) சிறுகதையின் முதன்மை கதாபாத்திரமும் ஒரு கிழவி தான். நெஞ்சுரம், தீர்க்கம், வைராக்கியத்தைக் கொண்ட கிழவியைப் பற்றிய கதை அது. முடிவு கண்ணீர் துளியை வரவழைக்கும். உங்கள் கதையிலும் அதே சுவாரஸிய நடை, கதையோட்டம், கண்களில் கண்ணீர் துளி வரவழைக்கும் மிகைப்படுத்தாத முடிவு. அருமை...!! பாராட்டுக்கள்...இதுபோன்ற படைப்புகளை தொடர்ந்து அளிக்க வாழ்த்துக்கள்!

வானம்பாடிகள் said...

பிரேம்குமார் அசோகன் said..

/பாராட்டுக்கள்...இதுபோன்ற படைப்புகளை தொடர்ந்து அளிக்க வாழ்த்துக்கள்!/

மிக்க நன்றிங்க.

ஈ ரா said...

//ப‌த்து ச‌வ‌ர‌ன் போட்டுனு வ‌ரேன். என்ன‌ க‌ட்டிக்கிறியாடா//


இப்போதான் இந்த கதையைப் பார்த்தேன்...

பாட்டி காசை தூக்கி வீசப்போகிறாள் என்பது தெரிந்திருந்தும், உங்கள் வசனங்கள் ரசிக்க வைத்தது பால சார்

வானம்பாடிகள் said...

ஈ ரா said...


/இப்போதான் இந்த கதையைப் பார்த்தேன்...

பாட்டி காசை தூக்கி வீசப்போகிறாள் என்பது தெரிந்திருந்தும், உங்கள் வசனங்கள் ரசிக்க வைத்தது பால சார்//

நன்றி ஈ.ரா.