Tuesday, October 27, 2009

வடிவேலு! த ஒன் மேன் ஜூரி!

(பொறுப்பி: நறுக்கெல்லாம் எழுதியும் தீராத கோவத்த தணிக்க தமாஷா சொறிஞ்சிகிட்டது. நோ பர்சனல் எபெக்ட். ஒன்லி டமாஸ்)

வடிவேலு: அல்ல்லோவ். யாரு பேசுறது?

நான்: நீதாய்யா பேசுற!

வடிவேலு: ஹேஏஏஏய்! ஹூ ஆர் யூஊஊஊ மேன்?

நான்: நீ யாருன்னு சொல்றியா நான் ஃபோன கட் பண்ணவா?

வ‌டிவேலு:அட இருப்பா இருப்பா. நாந்தாம்பா அண்ணம் பேசறேன் வானம்பாடி. சோமா இருக்கியாப்பா.

நான்: அட நீங்களாண்ணே. சொல்லுங்க. என்ன விஷயம்.

வடிவேலு: அதெல்லாம் கான்பிடென்ஸ்ணே. போன்ல எல்லாம் சொல்ல முடியாது. கார் வந்துக்கிருக்கு. உடனே கிளம்பி வாரீய.

நான்: யோவ். எனக்கு வேல இருக்கு. அதெல்லாம் முடியாது.

வடிவேலு: யோவ் சொல்றேன்லயா என் வெண்ட்று, கான்பிடன்ஸ்னு. நீ வார அம்புட்டுதான்.தல போற விசியம். அந்தா கார் வந்துடிச்சி பாரு. ட்ரைவர் போன் பண்ணாரு. நீ சட்டுபுட்டுன்னு கிளம்பி வாற.

நான்:சரி வந்து தொலையுறேன். (போய் தொலைஞ்சாச்சி)

வ‌டிவேலு: வாண்ணே வாண்ணே. என்ன‌ அண்ண‌ங்கூப்டா ச‌ல‌ம்புற‌. வா வா. உள்ள‌ போய் உக்காந்து பேசுவோம்டி செல்ல‌ம்.

நான்: என்னா? ஒரு மாதிரியாதான் இருக்கு இன்னைக்கு?

வ‌டிவேலு: ஹெ ஹெஹ‌ஹே. அண்ண‌ன் யாரு தெரியும்ல‌. வ‌டிவேலு. த‌ ஒன் மேன் ஜூரி.

நான்:(என்னா எழ‌வுடா. தெளிய‌லையோ?) என்ன‌ண்ணே சொல்றீங்க‌. ஒரு ம‌ண்ணும் புரிய‌ல‌. இங்க‌ ஜூரியெல்லாம் போய் எவ்ளோ கால‌மாச்சு. எதுனா சூட்டிங் நினைப்பா?

வ‌டிவேலு: நோஓஓஓஓ. நோ. யெஸ்ட‌ர்டே ஒபாமா டாக் மீ. ஹீஈ வாண்ட் மீ த‌ ஜூரி.

நான்: இங்க‌ பாருண்ணே. என‌க்கு வேலைக்கு போணும். உன் அல‌ப்ப‌ற‌ தாங்க‌ல‌. ஒழுங்கா விச‌ய‌த்த‌ சொல்ற‌துன்னா சொல்லு. இல்லாட்டி விடு.

வ‌டிவேலு: அட‌ இருப்பா இருப்பா. பேப்ப‌ர் பார்த்த‌ல்ல. அமெரிக்கா போர் குற்ற‌ப் ப‌ட்டிய‌ல் வெளியிட்டிருக்கு. அத‌ விசாரிக்க‌ ந‌ம்ம‌ள‌ ஜூரியா இருக்க‌ச் சொல்லி ஒரே அழுவாச்சி.

நான்:அண்ணே. இப்ப‌டியெல்லாம் ஊத்தாத‌. நான் ஏதாவ‌து த‌ப்பா பேசி இருந்தா ம‌ன்னிச்சிக்க‌. நாம்போறேன்.

வ‌டிவேலு:ந்ந்ந்நோஓஓ மேன். யூ நோ கோ. அய் அப்பாயின் யூ செக்ர‌ட்ரி.

நான்: இன்னாது? ம‌ப்பா? விளையாடாத‌. அப்புற‌ம் அண்ண‌ன்னு கூட‌ பாக்காம‌ வ‌ஞ்சிருவேன்.

வ‌டிவேலு: ச‌ரி ச‌ரி. நோ ப்ளே. ஒன்லி மேட்ட‌ர். ந‌ல்லா தூங்கிக்கிருக்க‌ ஓபாமா அண்ண‌ன்ட‌ இருந்து போனு. வ‌டிவேலு இந்த‌ போர்குத்த‌ம்லாம் லிஸ்டு ப‌ண்ணிட்டானுவ‌ ந‌ம்ம‌ ப‌ச‌ங்க‌. நீதான் சாரிச்சி ச‌ரியா இல்லையான்னு சொல்ல‌ணும்னு சொல்லிட்டாரு

நானே ந‌ம்ப‌ல‌ண்ணே. என்ன‌ எப்புடி தெரியும். எதிரூட்டு ஆளுதான் ரொம்ப‌ நாளாச்சே கொட‌ச்ச‌ல் குடுத்துன்னு ராவைக்கு தூங்க‌வுடாம‌ ப‌ண்றானான்னே ட‌வுட்டு. உன‌க்கு தெரியும்ல‌ அந்தாளு ந‌ம்ம‌ ஆஞ்சனேய‌ ப‌க்த‌ரு. எப்ப‌வும் ஒரு சின்ன‌ ஆஞ்ச‌நேய‌ர் கைல‌யே வ‌ச்சிருக்குமாம்.

நேத்து ராத்திரி தூங்க‌ போகுற‌ப்ப லிஸ்ட‌ ப‌டிச்சிகிட்டே ஒன்னும் புரியாம‌, ஆஞ்ச‌னேயா நீதாப்பா ஒரு வ‌ழி சொல்ல‌ணும்னு வேண்டிகிட்டு...

நான்: ஏண்ணே! உன‌க்கு என்ன பார்த்தா எப்புடி தெரியுது. சிவ‌னேன்னு வேலைக்கு போற‌வ‌ன புடிச்சாந்து இதெல்லாம் சொல்லிக்கிருக்க‌.

வ‌டிவேலு: ஹேஏஏய். மீ டாக். யூ லிச‌ன். யூ நோ டாக். அப்புற‌ம் அப்புடியே தூங்கி போச்சாம். க‌ன‌வுல‌ ஆஞ்ச‌னேய‌ர் வ‌ந்து, மை டிய‌ர் ஓபாமா. சுவிச் ஆன் த‌ டிவின்னிச்சாம்.

ந‌ம்மாளும் டிவி ஆன் பண்ணி இருக்காரு. பார்த்தா ஆதித்யா சேன‌ல்ல‌ ந‌ம்ம‌ வெடிமுத்து. அதான் நானு.  இவ‌ன்தான் ச‌ரியான‌ ஆளுன்னு சொல்லிட்டு ம‌றைஞ்சிடிச்சாம். உட‌னே சி.ஐ.ஏவ‌ கூப்டு, அவ‌ன் சுவாமி கிட்ட‌ பேசி ந‌ம்ம‌ள‌ புடிச்சி ஒரே கெஞ்சுறான், நீதான் ப‌ண்ண‌னும்னு.

நான்:இதெல்லாம் ந‌ம்ப‌றா மாதிரியா இருக்கு. ஏண்ணே. நான் உன‌க்கு என்னா கெடுத‌ல் ப‌ண்ணேன்? என்னிய‌ ஏன் இப்புடி பைத்திய‌மாக்குற‌.

வ‌டிவேலு: ஐ சீ யூ நோடாக். நானே கேட்டேன் இந்த‌ கேள்விய. அதுக்கு அந்தாளு என்னா சொல்லிச்சி தெரியுமா? சீ வ‌டிவேலு. ஒன் சீதா? ஒன் ராவ‌ணா? ப‌ட் ஒன்லி ஒன் அனுமான். ஸ்ரீல‌ங்கா ப‌ய‌ர். ராமா ஃபைட் அன்ட் ராவ‌ணா கில்.

ந‌வ் ராமா அன்ட் ராவ‌ணா ப்ர‌ண்ட்ஸ். ஸோ மெனி சீதாஸ். ப‌ட் அனுமான்? த‌ஸ் யூஊஊ மேன்.

ஒன்லி யூ ஃபைன்ட‌வுட் ராவ‌ணா அக்கிஸ்ட். அண்ண‌ன் மேக்கொண்டு பாத்துக்க‌றேன்னு சொல்லிட்டாரு. ஐ அப்பாயின் யூ ஜூரின்னுட்டாரு.

இதுக்கு மேல‌யும்...(தொண்டை அடைக்குது). அண்ண‌ன் ச‌ரின்னுட்டேம்பா உன்னிய‌ ந‌ம்பி. நீதான் ந‌றுக்க‌றேன் கிளிக்கிறேன்னு எளுதிதான் என்னா க‌ண்டே. ந‌வ் ஆக்ஸ‌ன். போ. போய் துணிம‌ணி எடுத்துகிட்டு வ‌ந்துரு. எலிகாப்ட‌ர் வ‌ரும். போய்க்கிற‌லாம்.

நான்: ஏண்ணே. அவ‌னுங்க‌ளுக்கு த‌மிழ் தெரியாது. அவ‌னுங்க‌ இங்கிலீசு உன‌க்கு புரிய‌ணுமே. ஒபாமா பேசினா என‌க்கே புரியாது. நீ என்ன‌ல்லாமோ சொல்ற‌. ஆண்ட‌வா!

வ‌டிவேலு:நாங்க‌ எலிஜ‌பெத்துக்கே இங்கிலீசு சொல்லி குடுக்குற‌ ப‌ர‌ம்ப‌ரைடி. நீ பொத்திகிட்டு வ‌ந்து சேரு.

(எப்படியோ கொழும்பு போய் ந‌டுங்கிகிட்டே போய்ட்ட‌ம்ல‌. அய்யாக்கு த‌னி ஆபீசு. வெளிய‌ அமெரிக்க‌ன் செக்யூரிட்டி. அய்யா வரவும் அடிச்சான் பாருங்க சல்யூட்டு ஆடிப்போய்ட்டேன்)

வடிவேலு: நவ் யு சீ (ரெண்டு மூணு வாட்டி உள்ள போறதும் வெளிய வாரதும்னு அலம்பல்)

நான்: என்னா பண்றீங்க.

வடிவேலு: அட சும்மா இருப்பா. இப்புடி ஒரு சல்யூட்டு நம்மளுக்கு எவன் அடிக்க போறான். சூனா பானா நீ கில்லாடிடா.

(அய்யா போய் தன் இடத்துல உக்கார்ராரு. கீழ நானு)

வடிவேலு: மொத ஆள கூப்டு. எவன் அவன்.

நான்: வேற‌ யாரு. ராஜ‌ பிச்ச‌தான்

வ‌டிவேலு: கால் ராஜ‌ பிச்ச‌.

அந்தாளு: ஆயு போவான். நோ பிச்ச‌. ப‌க்சே.

வ‌டிவேலு:(கோப‌மாக‌) நோ ஆய். ஒன்லி யூரின்.

நான்: யோவ். ஆயு போவான்னு வ‌ண‌க்க‌ம் சொல்றாரு.

வ‌டிவேலு: அப்புடியா? நான் ந‌ம்ம‌ள‌த்தான் கிண்ட‌ல் ப‌ண்றாருன்னு சொல்லிட்ட‌ன‌ப்பா. ஓக்க்க்கே ஓக்கேஏஏ. ஆயு ஆயு

அந்தாளு: ஆயு போவான்

வடிவேலு: யோவ் பிச்ச. அவன் வந்தா போவான். யூ டெல் டெல்.

அந்தாளு: (கை விரிச்சிகிட்டு கிட்ட‌ வ‌ந்து) ஐ ல‌வ் ட‌மில்ஸ். வீ ப்ர‌த‌ர்ஸ். யூ புட் சால்வா. த‌ட் இஸ் ட்ரெடிஷ‌னல் ரெஸ்பெக்ட்.

வ‌டிவேலு: கோவ‌மாக‌. கிவ் ர‌ஸ்பெக்ட் அன்ட் டேக் ரெஸ்ப‌க்ட். மீ ஜூரி, யூ அக்கிஸ்ட். சால்வ‌ வேணுமா சால்வ‌. என் கோவண‌ம் கூட போத்த‌மாட்ட‌ன்டா நானு. ப‌க்கிப் ப‌ய‌லே. ப‌ர‌தேசிப் ப‌ய‌லே. பன்னாடப் பயலே.

அந்தாளு: வாட் கோவணம்? (கோபமாகிறார்)

நான்: நாட் கோவணம். கோவளம். அடுத்த வாட்டி சனீஸ்வரன் கோவிலுக்கு வரப்ப கோவளம் பீச்ச பார்க்க சொல்றாரு. (வடிவேலுவிடம், யோவ் இவன் வெறிபுடிச்சவன். அமைதிப் போர்னு போட்டு தள்ளிட்டு புத்தருக்கு பாலபிசேகம் பண்ணுவான். பொத்திகிட்டு வேலய பாரு ஹி ஹி)

வடிவேலு: ச்சேரி ச்சேரி. ஒக்க்கேஏஏஏ. யூ ஸ்டேன்டப் ஆன் தி பெஞ்ச்.

அந்தாளு: வாட்? நோ ஸ்டேன்டப் ஆன் தி பெஞ்ச்.

வடிவேலு: அப்புடின்னா ஸ்டேன்ட் டவுன் இன் தி பெஞ்ச். ஹ ஹாஆ எப்புடீ.

அந்தாளு: (முகம் கடுக்க கூண்டில் நிற்கிறார்.) நவ் யூ ஆஸ்க் குயிக்லி. அய் ஹேவ மீட்டிங்

வடிவேலு: யூ ஷட் அப். ஒன்லி ஐ ஆஸ்க். யூ ஆன்சர். ஆமாம். நீ என்னா தார் போட்டு தலை வாருவியா. ச்ச்சும்மா பள பளன்னு பறக்காம கொள்ளாம வரைஞ்சி விட்டா மாதிரியே இருக்கே? அதென்னா எப்போ பாரு மப்ளரு. ஆஸ்மாவா உனக்கு.

அந்தாளு: நோஓஓ. இட்ஸ் அவர் ட்ரெடிஷினல் டை.

வடிவேலு: ஹே ஹே. டையீ. ய்ங். நாங்கூடத்தான் பேன்டுக்குள்ள இன்டியன் டை கட்டியிருக்கேன். உன்ன மாதிரி ஷோ காட்றனா? யூ அக்கிஸ்ட். ரிமூவ் மேன்.

(என் பக்கம் திரும்பி ஏப்பா ஓவராதான் போய்க்கிருக்கனோ. சேரி சேரி. நீ சமாளிச்சுக்குவடா சூனா பானா)

நவ் யூ டெல். ஒய் யூ கில் சோ மெனி சில்ரன், உமன், ஓல்ட் மேன் அன் லேடீஸ்.ஒய் ஒய்?

அந்தாளு:ஐ ஹேவ் நாட். ஒன்லி ஃபொன்சேகா அன்ட் மை ப்ரதர் ரெஸ்பான்சிபிள்.  நவ் ஐ ஹேவ் டு அர்ஜென்ட்லி அட்டண்ட் எ மீட்டிங்க் ஃபார் பிச்ச (சை) ரிலீஃப்.

வடிவேலு: ச்சேரி ச்சேரி. அப்புறம் வெச்சிக்கிறேன் உன்னிய. நவ் யூ கோ. நேஏஏஏக்ஸ்ட்.

நான்: யோவ். இதுக்கு மேல‌ வ‌ள‌ர்த்தா இராக‌வ‌ன் அண்ண‌னே சொல்லிட்டாரு. இடுகை பெருசானா ப‌டிக்க‌ க‌ஷ்ட‌ம்னு.நாளைக்கு பார்த்துக்க‌லாம்.


78 comments:

இது நம்ம ஆளு said...

அல்ல்லோவ்
:)
அல்ல்லோவ்
:)
அருமை!

சூர்யா ௧ண்ணன் said...

//யூ ஷட் அப். ஒன்லி ஐ ஆஸ்க். யூ ஆன்சர். ஆமாம். நீ என்னா தார் போட்டு தலை வாருவியா. ச்ச்சும்மா பள பளன்னு பறக்காம கொள்ளாம வரைஞ்சி விட்டா மாதிரியே இருக்கே? அதென்னா எப்போ பாரு மப்ளரு. ஆஸ்மாவா உனக்கு.//

எப்படி தலைவா இப்படியெல்லாம்.. சூப்பர் தலைவா!!

கதிர் - ஈரோடு said...

கொழும்புல அடிக்கற கூத்து தாங்கல...

அட சாமி

//வ‌டிவேலு:(கோப‌மாக‌) நோ ஆய். ஒன்லி யூரின்.//

இஃகிஃகி

//சால்வ‌ வேணுமா சால்வ‌. என் கோவண‌ம் கூட போத்த‌மாட்ட‌ன்டா நானு. ப‌க்கிப் ப‌ய‌லே. ப‌ர‌தேசிப் ப‌ய‌லே. பன்னாடப் பயலே.//
அடி தூளு


//யூ ஸ்டேன்டப் ஆன் தி பெஞ்ச்.//
எத்தன நாள் ஆசை

//அதென்னா எப்போ பாரு மப்ளரு. ஆஸ்மாவா உனக்கு.//

அது செத்தவங்களோட ரத்தம் நனைஞ்ச துணி


//யூ அக்கிஸ்ட். ரிமூவ் மேன்.//
ஆஹா...ஆஹா

எப்போவது இப்படி ஒன்னு நடக்கனுமேனு மனசு நினைக்குது

பிரபாகர் said...

ம்... அய்யா ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போலிருக்கு. கதிரோட பதிவ படிச்சுட்டு அய்யான்னு சொல்ல பயமா இருக்கு, ஆனாலும் நீங்கள் என் ஆசான் என்பதால்....

வடிவேலுகிட்ட இருந்து uNmaiyilayE அழைப்பு வரும், பாருங்களேன்...

அருமை அய்யா....

பிரபாகர்.

சத்ரியன் said...

//ஹே ஹே. டையீ. ய்ங். நாங்கூடத்தான் பேன்டுக்குள்ள இன்டியன் டை கட்டியிருக்கேன். உன்ன மாதிரி ஷோ காட்றனா? யூ அக்கிஸ்ட். ரிமூவ் மேன். //

ஓ....வானம்பாடி,

யப்பா. யமகாதகனா இருக்கியே சாமி நீயி. என்னா கற்பனை...என்னா கற்பனை...! வழக்கமா அழுதாத்தானேய்யா கண்ணீர் வரும். உன் இடுகைய படிச்சி சிரிச்சாலும் கண்ணீர் வருதேப்பு...!

முடியல.. ! பக்கத்து டேபிள்ல உள்ளவன் ஒருமாதிரியாப் பாத்துட்டுப் போறான். வெளியில போயி என்னியப்பத்தி என்னென்ன பத்தவெப்பானோ...?

னான் கடைய கட்டுறேன்.

தியாவின் பேனா said...

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி.....

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒஹ்.. இதுதான் சின்ன இடுகையா/ ரைட்டு.. :-)))))))

கலகலப்ரியா said...

=))... இன்னைக்குதான் உருப்படியா நகைச்சுவைன்ன பேருல.. நம்ம வடிவால வச்சு கலக்கி இருக்கீங்க.. யூ மேன்டேன் திஸ் மெதட் மேன்...

வந்து இன்னொரு வாட்டி படிச்சுக்கறேன்..

பழமைபேசி said...

நவ் நானு கோயிங்...எகெய்ன் சாயங்காலம் கம்மிங்...

வானம்பாடிகள் said...

/ இது நம்ம ஆளு said...

அல்ல்லோவ்
:)
அல்ல்லோவ்
:)
அருமை!/

நன்றி

வானம்பாடிகள் said...

சூர்யா ௧ண்ணன் said...

/எப்படி தலைவா இப்படியெல்லாம்.. சூப்பர் தலைவா!!/

நன்றி தலைவா.

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

/கொழும்புல அடிக்கற கூத்து தாங்கல.../

இஃகி

/அடி தூளு/

போறாஆஆஆது போறாஆஆது.

/எப்போவது இப்படி ஒன்னு நடக்கனுமேனு மனசு நினைக்குது/

நடக்கற நாள் எனக்கு தீபாவளி.

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...
/அருமை அய்யா./

நன்றி பிரபாகர்

வானம்பாடிகள் said...

சத்ரியன் said...
/யப்பா. யமகாதகனா இருக்கியே சாமி நீயி. என்னா கற்பனை...என்னா கற்பனை...! வழக்கமா அழுதாத்தானேய்யா கண்ணீர் வரும். உன் இடுகைய படிச்சி சிரிச்சாலும் கண்ணீர் வருதேப்பு...!/

அய்ங். அம்புட்டு நல்லாவா இருக்கு. டாங்க்ஸ் தம்பி. உங்கூரு வயல் கலர்ல கேக்கோணும்னு வருது இவனுங்கள. இவ்ளோதான் முடியும். இஃகி

வானம்பாடிகள் said...

தியாவின் பேனா said...

/ ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி...../

நன்றி தியா.

வானம்பாடிகள் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/ஒஹ்.. இதுதான் சின்ன இடுகையா/ ரைட்டு.. :-)))))))/

ணே. அதான் உசாரா இதுக்கும் மேலன்னு சொல்லிடம்லண்ணே. :)))

இராகவன் நைஜிரியா said...

// வ‌டிவேலு:அட இருப்பா இருப்பா. நாந்தாம்பா அண்ணம் பேசறேன் வானம்பாடி. //

அண்ணம் ? புரியலையே..

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

/நவ் நானு கோயிங்...எகெய்ன் சாயங்காலம் கம்மிங்.../

இஃகி இஃகி. கண்டிப்பா.

இராகவன் நைஜிரியா said...

// தல போற விசியம். //

நடுவுல அஜித்த பத்தி எதுக்கு பேசியிருக்காரு?

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ =))... இன்னைக்குதான் உருப்படியா நகைச்சுவைன்ன பேருல.. நம்ம வடிவால வச்சு கலக்கி இருக்கீங்க.. யூ மேன்டேன் திஸ் மெதட் மேன்...

வந்து இன்னொரு வாட்டி படிச்சுக்கறேன்..//

ஆஹா. இப்போதான் கான்ஃபிடன்ஸ் வருது. வானா பானா போஓஓஓ போஓஓஒய்க்கிட்டே இரு போஓஓஒ

இராகவன் நைஜிரியா said...

// உள்ள‌ போய் உக்காந்து பேசுவோம்டி செல்ல‌ம். //

பலி ஆட்டை கூப்பிட்டுகிட்டு போற மாதிரி போனார் போலிருக்கு..

இராகவன் நைஜிரியா said...

// (போய் தொலைஞ்சாச்சி) //

போனீங்க சரி.. ஏன் தொலைஞ்சு போனீங்க..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said.

/நடுவுல அஜித்த பத்தி எதுக்கு பேசியிருக்காரு?/

அண்ணே வாங்க. வந்த கையோட வம்பாண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// யெஸ்ட‌ர்டே ஒபாமா டாக் மீ. ஹீஈ வாண்ட் மீ த‌ ஜூரி. //

ஐயோ பாவம் ஒபாமா..

இராகவன் நைஜிரியா said...

மீ த 25

இராகவன் நைஜிரியா said...

// உட‌னே சி.ஐ.ஏவ‌ கூப்டு, அவ‌ன் சுவாமி கிட்ட‌ பேசி //

இங்க ஆஞ்சனேய சுவாமியைப் பற்றித்தானே சொல்லியிருக்கீங்க.. :-)

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...
/அண்ணம் ? புரியலையே../

சேர்த்து படிக்கணும்னே.

/பலி ஆட்டை கூப்பிட்டுகிட்டு போற மாதிரி போனார் போலிருக்கு../

=))

/போனீங்க சரி.. ஏன் தொலைஞ்சு போனீங்க../

அம்புட்டு கண்ணகட்டி விட்டா மாதிரி ஆகிப்போச்சுண்ணே.=))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said.

/ஐயோ பாவம் ஒபாமா../

நோ பாவம் நோ பாவம்.

ஈ ரா said...

அண்ணே
கொஞ்சம் பெரிசுன்னே...
நான் பதிவ சொன்னேன்..

இராகவன் நைஜிரியா said...

// அந்தாளு: (கை விரிச்சிகிட்டு கிட்ட‌ வ‌ந்து) ஐ ல‌வ் ட‌மில்ஸ். வீ ப்ர‌த‌ர்ஸ். யூ புட் சால்வா. த‌ட் இஸ் ட்ரெடிஷ‌னல் ரெஸ்பெக்ட். //

இது வேறவா...

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/இங்க ஆஞ்சனேய சுவாமியைப் பற்றித்தானே சொல்லியிருக்கீங்க.. :-)/

ஆஞ்சநேயர் எத வேணும்னாலும் பொறுத்துக்குவாரு. இவனப் போய் அவருன்னு சொன்னா நடக்கறதே வேற.=))

வானம்பாடிகள் said...

ஈ ரா said...

/அண்ணே
கொஞ்சம் பெரிசுன்னே...
நான் பதிவ சொன்னேன்../

அவ்வ்வ். சினிமா விமரிசனம்லாம் சினிமாவ விட பெருசா வருது. நான் 2 நாளைக்குள்ள அத்தனை பேரையும் என்கொயரி பண்ண வேணாமா?

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said.

/இது வேறவா.../

இஃகி. இதில்லாமயா?

இராகவன் நைஜிரியா said...

// சிவ‌னேன்னு வேலைக்கு போற‌வ‌ன புடிச்சாந்து இதெல்லாம் சொல்லிக்கிருக்க‌.
//

சக்தியில்லாம சிவனேன்னு போனீங்க இல்ல அதனாலத்தான் பிடிச்சுகிட்டு வந்துட்டாரு

இராகவன் நைஜிரியா said...

// யோவ். இதுக்கு மேல‌ வ‌ள‌ர்த்தா இராக‌வ‌ன் அண்ண‌னே சொல்லிட்டாரு. இடுகை பெருசானா ப‌டிக்க‌ க‌ஷ்ட‌ம்னு.நாளைக்கு பார்த்துக்க‌லாம். //

ஆஹா நாம் சொல்ற கேட்க கூட ஆள் இருக்குதுப்பா... வெரி குட் வெரி குட்..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/சக்தியில்லாம சிவனேன்னு போனீங்க இல்ல அதனாலத்தான் பிடிச்சுகிட்டு வந்துட்டாரு/

ஆஹா ஒரு தீர்மானமாதான் வந்திருக்காரு அண்ணன்

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said

/ஆஹா நாம் சொல்ற கேட்க கூட ஆள் இருக்குதுப்பா... வெரி குட் வெரி குட்../

யாராவது ஒருத்தர் தட்டுவாங்களாண்ணே.

கதிர் - ஈரோடு said...

அடுத்த வாட்டி போறபோது...

இராகவன் நைஜிரியா வையும் கூட்டிட்டுப் போங்க

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

/அடுத்த வாட்டி போறபோது...

இராகவன் நைஜிரியா வையும் கூட்டிட்டுப் போங்க/

நல்ல ஐடியா. ஆனா அண்ணன் இருக்கிற இடத்துல சிரிப்பு வந்துடுமே. அவனும் கூட கும்மி அடிச்சிட்டு மி த எஸ்கேப்னு போய்டுவானே.

Anonymous said...

really very good. u can write commedy track for vadivelu

write more .

தண்டோரா ...... said...

தலைவரே..வடிவேலுக்கு காமெட் ஸ்கிரிப்ட் நீங்க எழுதலாம்.அசத்தல்

வானம்பாடிகள் said...

தண்டோரா ...... said...

/தலைவரே..வடிவேலுக்கு காமெட் ஸ்கிரிப்ட் நீங்க எழுதலாம்.அசத்தல்/

ஹெ ஹெ . நன்றிண்ணே.

சத்ரியன் said...

/அய்ங். அம்புட்டு நல்லாவா இருக்கு. டாங்க்ஸ் தம்பி. உங்கூரு வயல் கலர்ல கேக்கோணும்னு வருது இவனுங்கள. இவ்ளோதான் முடியும். இஃகி//

பச்சையா இருந்தாத்தான் அவிய்ங்களுக்கு புடிக்காதேப்பா. "பச்சையா" வஞ்சாலும் "பச்சை" மேல கொத்து குண்டுகளா இல்ல போடுவானுக. அதுக்கு "பு....கு" தூக்குற பயலுக வேற இங்கிருந்து போயி விசிட் பண்ணிட்டு வந்து அதென்னமோ அறிக்கையெல்லாம் வேற சமர்ப்பிக்கறாய்ங்களாமே?

வானம்பாடிகள் said...

சத்ரியன் said...

/விசிட் பண்ணிட்டு வந்து அதென்னமோ அறிக்கையெல்லாம் வேற சமர்ப்பிக்கறாய்ங்களாமே?/

அவன் சொல்லாத பிட்டெல்லாம் சேர்த்து வெற இல்ல போடுறானுங்க. சமயத்துல நாம சென்னையா கொழும்பான்னே டவுட் வருது அவ்வ்வ்

அகல் விளக்கு said...

//யூ ஷட் அப். ஒன்லி ஐ ஆஸ்க். யூ ஆன்சர். ஆமாம். நீ என்னா தார் போட்டு தலை வாருவியா. ச்ச்சும்மா பள பளன்னு பறக்காம கொள்ளாம வரைஞ்சி விட்டா மாதிரியே இருக்கே? அதென்னா எப்போ பாரு மப்ளரு. ஆஸ்மாவா உனக்கு//

முடியலண்ணா.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.

அகல் விளக்கு said...

//அவ்வ்வ். சினிமா விமரிசனம்லாம் சினிமாவ விட பெருசா வருது. நான் 2 நாளைக்குள்ள அத்தனை பேரையும் என்கொயரி பண்ண வேணாமா?//

ஸ்டாப்பு.

இதுல எதுனா உள் குத்து இருக்கா?...

ஏற்கனவே போன் போட்டு திட்றாங்க சார்.

வானம்பாடிகள் said...

அகல் விளக்கு said...

/முடியலண்ணா.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது./

ஆல் ஸ்டமக் டோடல் டேமேஜ்?

வானம்பாடிகள் said...

அகல் விளக்கு said...

/இதுல எதுனா உள் குத்து இருக்கா?...

ஏற்கனவே போன் போட்டு திட்றாங்க சார்./

சே சே இல்லைங்க டமாசு=))

Maheswaran Nallasamy said...

கொழும்புல குறும்பா? .. வெள்ளை வான் வசதி சென்னை-ல உண்டா ..தெரியல? .. வடிவேலுக்கும் சேர்த்து ஆப்பு.

க.பாலாசி said...

ஆமா இந்த விசயம் ராஜபிச்சைக்கு தெரிஞ்சிதுன்னா என்ன ஆகும்னு தெரியுமில்ல.

பேசாம நீங்க வடிவேலுவுக்கு ஸ்கிரிப்ட் எழுதலாம்னு நினைக்கிறேன். நாங்க ஒரு இருபது, முப்பது பேர் சிரிக்கிறதோட மட்டுமில்லாம தமிழ்நாடே சிரிக்கும்...

எங்கத்தான் வச்சிருக்கீங்களோ தெரியல...

கதிர் - ஈரோடு said...

//க.பாலாசி Says:
எங்கத்தான் வச்சிருக்கீங்களோ தெரியல...
//

இது டூ...மச்

இல்லணே

கதிர் - ஈரோடு said...

எல்லாம் தலைக்குள்ளேதான்

பாலாஜி மாதிரி
பக்சே மாதிரி
தலைக்கு மேலே ச்ச்சும்மா பள பளன்னு பறக்காம கொள்ளாம வரைஞ்சி விட்டா மாதிரி வச்சிக்கிறதில்லை

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

//க.பாலாசி Says:
எங்கத்தான் வச்சிருக்கீங்களோ தெரியல...
//

இது டூ...மச்

இல்லணே


அதான

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...

/எல்லாம் தலைக்குள்ளேதான்

பாலாஜி மாதிரி
பக்சே மாதிரி
தலைக்கு மேலே ச்ச்சும்மா பள பளன்னு பறக்காம கொள்ளாம வரைஞ்சி விட்டா மாதிரி வச்சிக்கிறதில்லை/

அது அது.

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/ஆமா இந்த விசயம் ராஜபிச்சைக்கு தெரிஞ்சிதுன்னா என்ன ஆகும்னு தெரியுமில்ல.

பேசாம நீங்க வடிவேலுவுக்கு ஸ்கிரிப்ட் எழுதலாம்னு நினைக்கிறேன். நாங்க ஒரு இருபது, முப்பது பேர் சிரிக்கிறதோட மட்டுமில்லாம தமிழ்நாடே சிரிக்கும்...

எங்கத்தான் வச்சிருக்கீங்களோ தெரியல.../

தெரிஞ்சிடுது. எப்புடி எஸ்கேப் ஆறம்னு தூரத்துல நின்னு பாருங்க நாளைக்கு

வானம்பாடிகள் said...

Maheswaran Nallasamy said...

/கொழும்புல குறும்பா? .. வெள்ளை வான் வசதி சென்னை-ல உண்டா ..தெரியல? .. வடிவேலுக்கும் சேர்த்து ஆப்பு./

ஆமாங்க ஒரு அப்பல்லோ ஆசுபத்திரி வேன் விளம்பரத்துக்கு ஒய்ங் ஒய்ங்னு சுத்திகிட்டே திர்ரான்.

Anonymous said...

""வடிவேலு: மொத ஆள கூப்டு. எவன் அவன்.

நான்: வேற‌ யாரு. ராஜ‌ பிச்ச‌தான்

வ‌டிவேலு: கால் ராஜ‌ பிச்ச‌.""


அப்படி போடு இத இதை தான் உங்களிடம் எதிர்பார்கின்றோம்

வானம்பாடிகள் said...

tamilmoviecenter said...
/அப்படி போடு இத இதை தான் உங்களிடம் எதிர்பார்கின்றோம்/

ஹெ ஹெ நன்றி.

பிரியமுடன்...வசந்த் said...

இ..

ஈ..

ஹி..

ஹீ..

ம்..

ஒ..

ஓ..

அ..

மகனே நடத்துடி இந்த எழுத்துக்கெல்லாம் என்ன அர்த்தம்ன்னு யோசிக்காத...

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/மகனே நடத்துடி இந்த எழுத்துக்கெல்லாம் என்ன அர்த்தம்ன்னு யோசிக்காத.../

சரி நைனா=))

நாஞ்சில் பிரதாப் said...

//வடிவேலு: ஹேஏஏஏய்! ஹூ ஆர் யூஊஊஊ மேன்? //

ஆரம்பமே கலக்கல்...அப்படியே வடிவேலு சொல்றமாதிரியே இருக்கு... கலக்கல் சார்...பின்றீங்க..

வானம்பாடிகள் said...

நாஞ்சில் பிரதாப் said...

/ஆரம்பமே கலக்கல்...அப்படியே வடிவேலு சொல்றமாதிரியே இருக்கு... கலக்கல் சார்...பின்றீங்க../

நன்றிங்க ப்ரதாப்.

அது சரி said...

வழக்கம் போல...காமெடி கலக்கல்....:0))))))

தமிழ் நாடன் said...

கலக்கல் அண்ணே!

அந்த கொலைகாரன இப்படியாவது கலாய்க்க முடிஞ்சதேன்னு சந்தோஷம்!

புலவன் புலிகேசி said...

//நாங்க‌ எலிஜ‌பெத்துக்கே இங்கிலீசு சொல்லி குடுக்குற‌ ப‌ர‌ம்ப‌ரைடி. நீ பொத்திகிட்டு வ‌ந்து சேரு.//

sing in the rain. i am soing in thrain. i want more un the rain.....நல்லா இருக்குதுங்கோ....

வானம்பாடிகள் said...

அது சரி said...

/வழக்கம் போல...காமெடி கலக்கல்....:0))))))/

நன்றி ஸார்.:)))

வானம்பாடிகள் said...

தமிழ் நாடன் said...

/கலக்கல் அண்ணே!

அந்த கொலைகாரன இப்படியாவது கலாய்க்க முடிஞ்சதேன்னு சந்தோஷம்!/

அதான்.நன்றி

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...

/sing in the rain. i am soing in thrain. i want more un the rain.....நல்லா இருக்குதுங்கோ..../

ஹி ஹி நன்றிங்கோ.

துபாய் ராஜா said...

அருமை சார். அப்படியே அந்த கருநாகத்தையும் ரெண்டு போடுங்க...

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா said...

/அருமை சார். அப்படியே அந்த கருநாகத்தையும் ரெண்டு போடுங்க.../

நன்றி ராஜா. எங்க காணோம். பணி அழுத்தமோ?

ராஜ நடராஜன் said...

//வடிவேலு: அல்ல்லோவ். யாரு பேசுறது?

நான்: நீதாய்யா பேசுற!//

துவக்கமே கலக்கும் போல தெரியுதே:)

ராஜ நடராஜன் said...

//வ‌டிவேலு:ந்ந்ந்நோஓஓ மேன். யூ நோ கோ. அய் அப்பாயின் யூ செக்ர‌ட்ரி.//

அது சரி:)

ராஜ நடராஜன் said...

//வடிவேலு: ஹே ஹே. டையீ. ய்ங். நாங்கூடத்தான் பேன்டுக்குள்ள இன்டியன் டை கட்டியிருக்கேன். உன்ன மாதிரி ஷோ காட்றனா? யூ அக்கிஸ்ட். ரிமூவ் மேன்.//

அண்ணே!(நான் வடிவேலண்ணனைச் சொன்னேன்)போட்டுத் தாக்குறீங்க போங்க:)

(தமிழ்ப் பாதுகாவலருக்கு கோபம் வந்துடப் போகுது!இப்படியெல்லாம் சொன்னா பட்சிக்கு கோபம் வந்துரும்ன்னு)

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

/அது சரி:)/

/அண்ணே!(நான் வடிவேலண்ணனைச் சொன்னேன்)போட்டுத் தாக்குறீங்க போங்க:)

/(தமிழ்ப் பாதுகாவலருக்கு கோபம் வந்துடப் போகுது!இப்படியெல்லாம் சொன்னா பட்சிக்கு கோபம் வந்துரும்ன்னு)/

அய்யோ அப்புடி வேற இருக்கா?:))

ராஜ நடராஜன் said...

உண்மைகள் இணையத்துக்குள்ளே மட்டும் ஒளிந்து கிடக்கிறதோ என்ற கவலை எழுவதுண்டு சில சமயம்.

ஒன் மேன் ஜூரி பரவலாகட்டும்.

(ஆனால் இதில் உள்ள பிரச்சினை நம்ம ஆளுக தும்ப விட்டு வாலைப் பிடிக்கும் சாத்தியங்களும் உண்டு.முன் உதாரணம் என்.எஸ்.கே மற்றும் விவேக் நகைச்சுவை)

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...
/ஒன் மேன் ஜூரி பரவலாகட்டும்.

(ஆனால் இதில் உள்ள பிரச்சினை நம்ம ஆளுக தும்ப விட்டு வாலைப் பிடிக்கும் சாத்தியங்களும் உண்டு.முன் உதாரணம் என்.எஸ்.கே மற்றும் விவேக் நகைச்சுவை)/

ஆமாங்க.

ராஜ நடராஜன் said...

பதிவர் வட்ட ஹீரோவாகப் போகிறீங்க.அன்பான வாழ்த்துக்கள்.

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

/பதிவர் வட்ட ஹீரோவாகப் போகிறீங்க.அன்பான வாழ்த்துக்கள்./

நன்றிங்க. ஆனா ஒன்னும் புரியல. என்னாது? அவ்வ்வ்.