Friday, October 9, 2009

உங்களுக்கு என்ன பெயர்?

உடைக்காய்
உணவுக்காய்
உறவுக்காய்
உள்ளம் கொன்று உடல் விற்றாளாம்!

கைது செய்கையில் கதறினாளாம்!
பெற்றவளும் அவள் பெற்றதும்
பேசாமல் நின்றார்களாம்!
எத்தனை வக்கிரம் எழுத்துக்குள்

கறுப்புத் துணி கொண்டு
கண் மறைத்தாளாம்
கண்டனம் தெரிவிக்கும்
கனவான்கள்..

சீருடை அணிந்த சிங்கள நாய்கள்
கருவறுத்து உடை கிழித்து
சீரழித்த போது எங்கே போனதடா
உங்கள் பத்திரிகை தர்மம்.

சுதந்திரத்தின் குரல்
நெறிக்கப் படுகிறதாம்!
இப்படித்தானே கதறினார்கள்?
என்ன செய்தாய் நீ?

எச்சில் இலைக்கு நீ
ஏங்கித் தவித்து
இனம் விற்றதை விடவா
அவள் உடல் விற்றது அவலம்?

அவளுக்குப் பெயர் விலைமகள்.
காசு செலவின்றி
காமம் விற்று கஜானா நிரப்பும்
உங்களுக்கு என்ன பெயர்?

______

38 comments:

மணிஜி said...

விகடன்,குமுதம்,தினமலர் இத்யாதிகளுக்கு பெயர் இல்லை....புவனேஸ்வரி கைதில் அரசியல் இருக்கிறது..இன்று நம் தமிழினத்தலைவனுக்கு ஒரு விருது தரப்போகிறார்கள்.அதில் அவுத்து போட்டு ஆடும் ஆட்டமும் உண்டு..அவர்களை யாரும் கைது செய்ய மாட்டார்கள்..இடுகையிலிருந்து சற்று விலகி கருத்து இருந்தால் விட்டு விடுங்கள்..

vasu balaji said...

தண்டோரா ......

/இன்று நம் தமிழினத்தலைவனுக்கு ஒரு விருது தரப்போகிறார்கள்.அதில் அவுத்து போட்டு ஆடும் ஆட்டமும் உண்டு..அவர்களை யாரும் கைது செய்ய மாட்டார்கள்./

உண்மை.

அது அவர்கள் பாடு. அதைக் காசாக்கும் ஒரு ஊடகம் தடுக்கப் படும்போது மட்டும் உரிமைக்கு அலறுவது நியாயம் இல்லை என்பது என் கருத்து.

பிரபாகர் said...

//காசு செலவின்றி
காமம் விற்று கஜானா நிரப்பும்
உங்களுக்கு என்ன பெயர்?//

பத்திரிக்கை விபச்சாரம்.

நன்றாக சாடியிருக்கிறீர்கள்.

சற்று வேறு வகையில் சிந்திக்கும் போதும் வேதனையாய் இருக்கிறது. பத்திரிக்கைக்கு மேல் ஆள்பவர்கள் இருக்கிறார்களே சொரணையின்றி...

மற்றுமோர் கோணத்தில் நடிகைகள் நாங்களெல்லாம் கண்ணகிகள் என சொல்வதும் நகைப்பாய் இருக்கிறது.

பிரபாகர்.

தமிழ் அமுதன் said...

///அவளுக்குப் பெயர் விலைமகள்.
காசு செலவின்றி
காமம் விற்று கஜானா நிரப்பும்
உங்களுக்கு என்ன பெயர்?///

என்ன செய்வது பெண்ணாய் பிறந்திருந்தால் இவர்கள் புவனேஸ்வரி ஆகி இருப்பார்கள்..!
ஆணாய் (??) பிறந்து விட்டார்கள் இப்படித்தான் பிழைக்க வேண்டும்...!!!!

பிரபாகர் said...

இன்று நான் 3/3....

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

செருப்படி...


//சீரழித்த போது எங்கே போனதடா
உங்கள் பத்திரிகை தர்மம்.//
என்னவோ ஆண்மைனு சொல்வாங்களே.... அது... சிங்களன் வீட்டு அந்தபுறத்தில் இருந்திருக்குமோ

ப்ரியமுடன் வசந்த் said...

//சீருடை அணிந்த சிங்கள நாய்கள்
கருவறுத்து உடை கிழித்து
சீரழித்த போது எங்கே போனதடா
உங்கள் பத்திரிகை தர்மம்.//

காறித்துப்பிட்டீங்க...

கொள்கையில மட்டும் இந்துத்வா இருந்தா பத்தாதுடி மாப்ளைகளா

நடத்தையிலும் செய்கைகளிலும் இந்துத்வாவ கொண்டுவாங்க அப்பத்தான் நாடு மதிக்கும் இல்லாட்டி மிதிக்கும்...

கவிதையில் காரம் கூட பாலா சார்...

க.பாலாசி said...

//சீருடை அணிந்த சிங்கள நாய்கள்
கருவறுத்து உடை கிழித்து
சீரழித்த போது எங்கே போனதடா
உங்கள் பத்திரிகை தர்மம்.//

ஒவ்வொரு பத்திரிக்கையாளனின் மனதில் அறையும் வரிகள் வாசகனுக்கும் சேர்த்துதான்.

நடிகைகளின் தொப்புளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஈழத்தமிழனின் தொப்புள்கொடி அறுபடுவதற்கும் கொடுக்காத நமது ஊடகங்கள். வெட்கப்படவேண்டிய விஷயம்.

கவிதை நெஞ்சில் தைக்கும் வரிகளுடன்.

அப்பாவி முரு said...

கட்டுப்படுகள் இல்லாத சுகந்திரத்தின் விளைவுகள் இவை.

கட்சிக்கொரு கொள்கை.,
காட்சிக்கொரு கொள்கை.,
நன்பகலுக்கொரு கொள்கை.,
நடுநிசிக்கொரு கொள்கை.,
கூட்டணிக்கொரு கொள்கை.,
கூட்டத்திர்க்கொரு கொள்கை...

வாழ்க அண்ணா நாமம்...
வளர்க தலைவன் நாமம்...

vasu balaji said...

பிரபாகர்
/மற்றுமோர் கோணத்தில் நடிகைகள் நாங்களெல்லாம் கண்ணகிகள் என சொல்வதும் நகைப்பாய் இருக்கிறது. /

கண்ணகி: விளக்க முடியுமா?

நகைப்பா? தப்பு பிரபாகர்.

vasu balaji said...

ஜீவன்
/என்ன செய்வது பெண்ணாய் பிறந்திருந்தால் இவர்கள் புவனேஸ்வரி ஆகி இருப்பார்கள்..!/

யார் காரணம்?

/ஆணாய் (??) பிறந்து விட்டார்கள் இப்படித்தான் பிழைக்க வேண்டும்...!!!!/

எப்படி?

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/செருப்படி.../

இல்லைங்க அருவெருப்பு.

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/என்னவோ ஆண்மைனு சொல்வாங்களே.... அது... சிங்களன் வீட்டு அந்தபுறத்தில் இருந்திருக்குமோ/

அப்புடி ஒண்ணு இருக்கா?

கார்த்திகைப் பாண்டியன் said...

நெத்தியடி.. நியாயமான கேள்விகள்.. ஆனால் இதைப் பத்திரிக்கைகள் உணரப் போவதுமில்லை.. நாடு திருந்தப் போவதுமில்லை..:-(((

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
/கவிதையில் காரம் கூட பாலா சார்.../

இயலாமைதான் கூட

vasu balaji said...

க.பாலாஜி
/கவிதை நெஞ்சில் தைக்கும் வரிகளுடன்./

நன்றி பாலாஜி

vasu balaji said...

அப்பாவி முரு
/கட்டுப்படுகள் இல்லாத சுகந்திரத்தின் விளைவுகள் இவை. /

சுதந்திரமோ கட்டுப்பாடோ நமக்குள் நாம் இருக்குமளவுதான்.

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன்
/நெத்தியடி.. நியாயமான கேள்விகள்.. ஆனால் இதைப் பத்திரிக்கைகள் உணரப் போவதுமில்லை.. நாடு திருந்தப் போவதுமில்லை..:-(((/

நாம் புறக்கணித்தாலே உணருவார்கள். நன்றிங்க

பழமைபேசி said...

ப்ச்

vasu balaji said...

பழமைபேசி
/ப்ச்/

இதுக்கு அர்த்தம் நான் எங்க போய் தேடுறது. ஒன்னுஞ்சொல்றதுக்கில்லைன்னு அர்த்தமா?

தமிழ் நாடன் said...

///எச்சில் இலைக்கு நீ
ஏங்கித் தவித்து
இனம் விற்றதை விடவா
அவள் உடல் விற்றது அவலம்?

அவளுக்குப் பெயர் விலைமகள்.
காசு செலவின்றி
காமம் விற்று கஜானா நிரப்பும்
உங்களுக்கு என்ன பெயர்?///

நெத்தியடி அண்ணே! இவனுங்களை எல்லாம் கிழி கிழின்னு கிழிக்கனும்!
வாழ்க நீ எம்மான்!

vasu balaji said...

தமிழ் நாடன்
/நெத்தியடி அண்ணே! இவனுங்களை எல்லாம் கிழி கிழின்னு கிழிக்கனும்!
வாழ்க நீ எம்மான்!/

அய்யோ! பெரிய வார்த்தைங்க. நன்றி.

இராகவன் நைஜிரியா said...

வேதனைகள் நமக்கு மட்டும்தான். பத்திரிக்கை முதளாலிக்கு வேதனைகளும் இல்லை.. வலிகளும் இல்லை... மானமும் இல்லை.. காசு மட்டுமே குறி. பத்திரிக்கை தர்மம் அப்படின்னா கிலோ என்ன விலை என்று கேட்கும் காலம் ஐயா காலம்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா

/பத்திரிக்கை தர்மம் அப்படின்னா கிலோ என்ன விலை என்று கேட்கும் காலம் ஐயா காலம்./

மத்தவங்களுக்கு வரும்போது மட்டும். இப்போ தனக்கு வந்ததும் கவனம் வந்துடுச்சி. ஆமாம். பதிவர் கூடல் ஒருங்கிணைப்பாளர எங்க நேத்து காணோம். அறிவிப்பு போட வெச்சிட்டீங்களேண்ணே.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாலாண்ணே,

நான் அண்மையில் வாசித்த படைப்புகளில் இதுவே சிறந்தது. சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது. இந்தக் கேள்வியும் அந்த வகையையே சேரும்.

ஆரூரன் விசுவநாதன் said...

செருப்பாலடித்துச் சொன்னாலும் இவர்களுக்கு புரியாது.....

அவள் உடலை விற்கிறாள்...இவர்கள் செய்தியை விற்கிறார்கள்

...........யா பசங்க

Unknown said...

இரண்டு பகிடிப் பதிவுகளின் பின் பாலா திரும்ப ஃபோர்முக்கு வந்திட்டார்... அருமை பாலா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//அவளுக்குப் பெயர் விலைமகள்.
காசு செலவின்றி
காமம் விற்று கஜானா நிரப்பும்
உங்களுக்கு என்ன பெயர்?//

சரியான கேள்வி.

அது சரி(18185106603874041862) said...

//
சீருடை அணிந்த சிங்கள நாய்கள்
கருவறுத்து உடை கிழித்து
சீரழித்த போது எங்கே போனதடா
உங்கள் பத்திரிகை தர்மம்.
//

அதை இறையாண்மையை காப்பதாய் வியந்தோதி பாராட்டிக் கொண்டிருந்த விபச்சாரிகள் தான் இன்றைக்கு அலறுகிறார்கள்!

பத்திரிக்கை தர்மமா?? அது ஒரு முரண் தொடை...அல்லது இல்பொருள்...

geethappriyan said...

சார் அற்புதமான கவிதை,பகிர்வுக்கு நன்றி
உங்க எழுத்துக்கள் நன்றாக இருக்கிறது,தொடர்ந்து படிக்கிறேன்

vasu balaji said...

@@நன்றி ஆரூரன்
@@நன்றி கிருத்திகன்
@@நன்றி ஸ்ரீ

vasu balaji said...

அது சரி
/பத்திரிக்கை தர்மமா?? அது ஒரு முரண் தொடை...அல்லது இல்பொருள்.../

ஆமாங்க. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

vasu balaji said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
/சார் அற்புதமான கவிதை,பகிர்வுக்கு நன்றி
உங்க எழுத்துக்கள் நன்றாக இருக்கிறது,தொடர்ந்து படிக்கிறேன்/

நன்றிங்க.மகிழ்ச்சி.

Unknown said...

ஈழக் கொலைகள், உத்தபுரம் சுவர், தேக்கடி படகு விபத்து, தொடரும் சிவகாசி வெடி விபத்துகள், முல்லைப் பெரியாறு என்று எதுவும் இப்போது பிரச்சினை இல்லையாம். விலைப் பட்டியலில் எகிறிக் கொண்டிருந்த துவரம் பருப்பின் இடத்தை நடிகைகளின் விலை போட்டு மறக்கடித்து விட்டார்கள். நீங்கள் சூடு போடுவது பூனைகளுக்கு அல்ல. தோல் மரத்துப்போன எருமைகளுக்கு.

துபாய் ராஜா said...

நியாயமான அறச்சீற்றம் அய்யா.

இந்த மாதிரி பத்திரிக்கைகளுக்கு வேண்டியது பரபரப்பு படுக்கை செய்திகளும், அதன் மூலம் கிடைக்கும் பணமும் மட்டுமே.... :((

vasu balaji said...

செந்தில்வேலன்(09021262991581433028)
/நான் அண்மையில் வாசித்த படைப்புகளில் இதுவே சிறந்தது. சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது. இந்தக் கேள்வியும் அந்த வகையையே சேரும்./

நன்றிங்க

vasu balaji said...

rajesh

நன்றிங்க

vasu balaji said...

துபாய் ராஜா
/நியாயமான அறச்சீற்றம் அய்யா.

இந்த மாதிரி பத்திரிக்கைகளுக்கு வேண்டியது பரபரப்பு படுக்கை செய்திகளும், அதன் மூலம் கிடைக்கும் பணமும் மட்டுமே.... :((/

ஆமாங்க. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.