Friday, May 1, 2009

ஏமாறலாம் வாங்க

எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..இந்த பாட்டு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் எமாந்துகிட்டு தான் இருக்கோம். இதில யாரு புத்திசாலித்தனமா எமாந்ததுன்னு பட்டி மன்றம் தான் வைக்கலை. தலைவர்கள் ஏமாத்துறது ஒரு பக்கம்னா சனங்க ஒன்னுக்கு ஒன்னு போட்டி போட்டுக்கிட்டு ஏமாத்துற கொடுமை தாங்கலை. தேர்தல் வரைக்குமாவது இந்த செல் ஃபோன் காரங்க இலவச எஸ். எம். எஸ். ரத்து பண்ணா புண்ணியமா போகும். படிச்ச புண்ணாக்கு, படிக்காத மேதைன்னு வகை தொகை இல்லாம இதுங்க அடிக்கிற கூத்து தாங்கலைடா சாமி.

ஏமாத்து 1: "... கட்சிக்கு வாக்களிக்கவும்" . இந்த தகவலை 16 பேருக்கு அனுப்புங்கள். Rs.274. 49 பைசா உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். இந்த வாய்ப்பை அலட்சியம் செய்ய வேண்டாம். இதற்கான பணத்தை அண்ணன் ....... செலுத்தி விட்டார். எனக்கு உடனே நிலுவைத் தொகை ஏற்றப்பட்டது.

ஒரு பயலும் எந்த கேனயாவது இப்படி பண்ண முடியுமா? நான் ஓட்டு போட சொல்லி தகவல் அனுப்புறனா. ஓணான் பிடிக்க சொல்னான்னு எப்படி தெரியும். 16 தகவல் அனுப்பிட்டேன்னு எப்படி தெரியும். இதெல்லாம் யாரும் யோசிக்கிறதில்லை. சாமி வந்த கணக்கா உடனே தகவல் அனுப்பிட்டு, எட்டு ரூபாய் போச்சுன்னு சொன்னா அசிங்கமேன்னு, ஆமாம் எனக்கும் கணக்கில ஏறிச்சின்னு ஏமாத்துறது. இதுல கூத்து என்னன்னா பின்னால் கட்டணம் செலுத்தும் ஆட்களும் என் கணக்கில கழிச்சிடுவான்னு அனுப்பறது.

ஏமாத்து 2: விடிய விடிய உக்காந்து இந்த பாவிப்பய பக்சே என்ன பண்ணித் தொலையிரானோன்னு அங்க இங்க மேய்ஞ்சி போய் படுத்தா பைத்தியம் புடிச்ச பரதேசிங்க " தமிழருக்கு இன்று ஒரு சோகமான நாள். நச்சு குண்டு போட்டு இத்தனை ஆயிரம் பேரு சாவு. இவர் ஏமாத்திட்டார். இவர் தகவல் சொன்னார். இதுக்கெல்லாம் முடிவே கிடையாதான்னு" புலம்பல். ஐயோ போச்சேன்னு அலறி அடிச்சி, தொலைக்காட்சி (அதில வராதுன்னு தெரிஞ்சும்) கணினின்னு அல்லாடி அப்பாடா அவ்வளவு விபரீதம் நடக்கலன்னு அணைச்சிட்டு போய் படுத்தாலும் என்னாகுமோன்னு ஒரு தவிப்பு.

ஏமாத்து 3: இது நம்மள எமாத்தன்னே பிறப்பெடுத்த கூட்டம். வேற யாரு? தலைவர்களும் பத்திரிகையும்தான். முதல் பக்கத்தில போராட்டம் வெற்றி. இலங்கை பணிந்தது. ஆகான்னு படிச்சி, அப்படியே போனா பதிமூணாம் பக்கத்துல யாருடா அப்படி சொன்னான்னு பக்சே நக்கலடிக்கறது இருக்கும். இப்போல்லாம் அட கேனைங்களான்னு ஆசிரியர் நினைக்கிறது அப்பட்டமா தெரியுது. மேல் பத்தில கேள்வி: இலங்கையில் போர் நின்று விட்டது உண்மையா? பதில்: ஆம். உண்மைதான். கேள்வி: நீங்க நம்பறிங்களா? பதில்: நிச்சயமாக நம்புகிறேன். அது கீழேயே யார் சொன்னாலும் போர் நிறுத்தப்பட மாட்டாது. ராஜ பக்சே உறுதி. புலிகளை ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை அவன் தம்பி அங்கதன் கொக்கரிப்புன்னு. சொல்லுறத சொல்லிப்புட்டேன். என் வேல முடிஞ்சதுன்னு போறாங்க.

ஏமாத்து 4: இது ஏமாத்தா? இல்ல நிஜமான்னு தெரியல. செய்தி தான். சென்னைல 20 இடத்தில தீவிர வாதிகள் தாக்கலாம். எச்சரிக்கைன்னு. அதென்னா சென்னை மட்டும் அவ்வளவு புண்ணியம் பண்ணிச்சி. 20 இடம்னு தெரியும்னா எந்த இடம்னு தெரியாதா. இல்லாம இப்படி சொன்னா அது நம்ம இடமா கூட இருக்கலாம்னு ஜனங்க போகாம இருக்கலாம். இதனால சாமானியனோட வாக்கு ஏற்படுத்தும் தாக்கம் போய்டும். கட்சி ஓட்டும் கள்ள ஓட்டும் ( யாராவது இயந்திரம் முடியாதுன்னு வக்காலத்து வந்தா கிழி படுவிங்க) கதைய மாத்திடும். சென்னை தான் கொஞ்ச பேரு கூவிட்டிருக்கான். அவனுக்கு வையி ஆப்புன்னு பண்ணுறாங்களா தெரியல மக்கா.

ஏமாறுறது நம்ம பிறப்புரிமை! ஏமாத்தாம இருப்பமா? முதல் ரெண்டும் பண்ணாதீங்க நண்பர்காள்.

2 comments:

சூர்யா ௧ண்ணன் said...

//அப்பாடா அவ்வளவு விபரீதம் நடக்கலன்னு அணைச்சிட்டு போய் படுத்தாலும் என்னாகுமோன்னு ஒரு தவிப்பு.// 100% உண்மைதான் தலைவா

பாலா... said...

வாங்க. நன்றி சூர்யா!