Wednesday, May 13, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 50

இவ்வளவும் செய்து இனியும் செய்யவிருக்கின்ற இந்தப் பேனாதான் -உதய சூரியன் -கை -நட்சத்திரம் சின்னங்களில் உங்களின் பொன்னான வாக்குகளை அளித்திட வேண்டுகிறது.

அதுதாங்க வருத்தமே. பேனாவை பிடிச்சிருக்கிற 'கை' தான் சரி இல்லை. மை போட்டு எழுதுங்க. பொய் போட்டு எழுத வேணாம்.
***
திடீர் மின்தடை: கலைஞர் குற்றச்சாட்டு /மின்வெட்டிற்கான உண்மையான காரணம்:ஜெ.கேள்வி

உங்களுக்குத் தான் வெளிச்சம்.
***
எனது வெற்றி பிரகாசமாக உள்ளது: அழகிரி

மதுரைல மின் தடை இல்லையா?
***
மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கலைஞர்

அதில தி.மு.க இருக்குமா?
***
காங்கிரஸ் கூட்டணி அரசு மீண்டும் மலரப்போகிறது: மு.க.ஸ்டாலின்

நீங்க மலருங்கய்யா. ஜனங்க கருகாம இருந்தா சரி

***
ரேஷன் கார்டு அடையாள அட்டை கிடையாது: நரேஷ் குப்தா

எல்லாத்துக்கும் அததான கேக்குறாங்க. இப்போ இப்படி சொன்னா எப்படி?
***
எனக்கே இந்த கதியா?: இயக்குநர் அமீர்

அவதானமா இருக்க வேணாமா?
***
எனவே மத்திய அரசு இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் சட்டம் 51வது பிரிவுக்கு எதிராக நடந்து வருகிறது.

நம்ம இறையாண்மைதானே. அதனால தான் மீறிட்டாங்க.
***
வாக்காளர் பட்டியலில் கமல் இல்லை

தசாவதாரத்தில் எந்த அவதாரத்துக்கு கொடுப்பதுன்னு விட்டுட்டாங்களோ


10 comments:

கிரி said...

உங்கள் 50 க்கு வாழ்த்துக்கள்

(இதில் எதோ குறைவது போல இருக்கிறதே)

பாலா... said...

நறுக்குதான்.

பாலா... said...

வாழ்த்துக்கு நன்றி

கலகலப்ரியா said...

ம்ம்.. கத்தரிக்கோல் கொஞ்சம் தீட்டி இருக்கீங்க.. பரவால்ல.. கொஞ்சம் ஜாஸ்தியா நறுக்கிட்டீங்களோ.. நறுக்ஸ..?!

பாலா... said...

/கொஞ்சம் ஜாஸ்தியா நறுக்கிட்டீங்களோ.. நறுக்ஸ..?!/


இல்லிங். அவுங்க வாய தொறந்தா தானே நாம கேக்கறதுக்கு. அது அது தேர்தல் ஜுரத்தில இருக்கு. நாளைக்குதான் பினாத்த ஆரம்பிக்கும்.

sakthi said...

அதுதாங்க வருத்தமே. பேனாவை பிடிச்சிருக்கிற 'கை' தான் சரி இல்லை. மை போட்டு எழுதுங்க. பொய் போட்டு எழுத

சூப்பர்

ஜுர்கேன் க்ருகேர்..... said...

நறுக்கி ...வறுத்து ...தாளிச்சு கீச்சிட்டீங்க பாஸ்!!
நறுக் கமெண்ட்ஸ் எல்லாம் பச்ச மொளகா கணக்கா காரம்.

savuccu said...

///மை போட்டு எழுதுங்க. பொய் போட்டு எழுத வேணாம்.///

அருமை!

நல்ல தமிழும் எழுதத் தொடங்கி விட்டீர்கள்!

பாலா... said...

நன்றி, சக்தி, ஜூர்கேன் மற்றும் சவுக்கு

SUBBU said...

:))))))))))