Saturday, May 9, 2009

மன்னித்து விடு தேவதையே - 2

எட்டு வயதிருக்குமா உனக்கு?
உன் கண்ணில்
எண்பது வயதின்
வலிகள் உணர்கிறேன்!

குழந்தையின் வலிகளல்ல இவை
பசி மீறி தாகம் மீறி
மனம் காட்டும்
கண்ணாடியாய் முகம்!

வேதனை மீறி
விரக்தியும் தாண்டிய‌
புருவச் சுருக்கில்
மானுடம் நெறிகிறது!

என்னம்மா கேட்கிறது
உன் பாவம்?
என்னைக் குழந்தையாய்
இருக்க விட மாட்டீர்களா என்றா?

உணவு கொடுக்கலாம்
உடை கொடுக்கலாம்
இழந்த எல்லாமும் தரக்கூடும்
குழந்தைத் தனம் எப்படித் தருவோம்?

வலி தேக்கி வலி தேக்கி
உனக்கும் மானுடம்
மரத்துப் போனால்
வையம் தாங்காதம்மா.

வெறுக்காதே எங்களை
நாங்களும் கைதிகள்
நாங்களே அமைத்த‌
இறையாண்மைச் சிறை!

தேவைக்கு மட்டும்
திறக்குமிச்சிறை
அழிக்க இருக்கும் தாக்கோல்
ஆக்க மட்டும் காணாமல் போகும்.

உன் குடில் பறித்து
நிழல் பறித்து
சுற்றம் பறித்த‌
சுதந்திரப் பேய்கள் நாங்கள்!

எல்லாமிருந்த உந்தன்
எல்லாமும் பறித்தபின்
ஏதிலி என உனை அழைக்கும்
எத்தர்கள் நாங்கள்!

வலிகள் உன்
வைராக்கியமாகட்டும்
கஷ்டங்கள் உன் மனதில்
கருணை விதைக்கட்டும்.

அழிவுகள் உங்களை
அன்னை தெரசாவாக்கட்டும்
ஆம்! ஓர் நாள் நாங்கள்
உன் அன்பு வேண்டி நிற்போம்.

அது வரை எங்களை
மன்னித்து விடு தேவதையே!

11 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை மனதில்
வலியை
ஏற்படுத்தியது

காயம் ஆற
நெடு நாளாகும்.

vasu balaji said...

வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் வலி பகிர்ந்தமைக்கும் நன்றி ஐயா.

ஊர்சுற்றி said...

/உன் குடில் பறித்து
நிழல் பறித்து
சுற்றம் பறித்த‌
சுதந்திரப் பேய்கள் நாங்கள்!//

ஆம். ஈழத்துத் தேவதையே,
எங்களை
மன்னித்து விடு...

Tech Shankar said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

கலகலப்ரியா said...

என்ன சொல்றதுன்னு தெரியலீங்க..

vasu balaji said...

/ கலகலப்ரியா said...

என்ன சொல்றதுன்னு தெரியலீங்க../

ஆமாம்.ம்ம்ம்

வலசு - வேலணை said...

வலியைப் பிழிந்து வடித்த கவிதை.
மன்னிப்புக் கேட்பதிலும் பிராயச்சித்தம் செய்வது சாலச் சிறந்தது.

sakthi said...

valiyudan kudiya kavithai

vasu balaji said...

/மன்னிப்புக் கேட்பதிலும் பிராயச்சித்தம் செய்வது சாலச் சிறந்தது./

வழிதெரியா தவிப்பின் வெளிப்பாடு இது.

vasu balaji said...

/valiyudan kudiya kavithai/

ஆம். வருகைக்கு நன்றி

வா(வ)ரம் said...

யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!